gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சுந்தரமூர்த்திநாயனார்

Written by

35. சுந்தரமூர்த்திநாயனார்

திருக்கையிலையில் சிவனுக்கு சூட்ட மாலையும் திருநீறும் எடுத்து தரும் தூய ஆன்மாவாக இருந்தவர் ஆலால சுந்தரர். ஈசன் மண்ணுலக மாந்தர் எல்லாம் அடியவர்கள், தொண்டர்கள் பெருமையை மக்கள் உணர, சுந்தரரை மண்ணுலகுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார். எப்போதும் போல் நந்தவனத்திற்கு மலர் கொய்யச் சென்ற சுந்தரர், உமையின் சேடியர்களான கமலினி, அனிந்தை இருவரும் பூக்கொய்ய வந்து திருப்பும்போது சுந்தரர் காட்சியில் வந்தனர். மனத்தைப் போக்கிய சிவனே மாதர்மேல் மனம் வைத்தனை என்று கூறி அந்த பெண்களுடன் காதல் இன்பம் களித்துவர பணிந்தார். இறைவனைப் பிரிய மனமின்றி வேறு வழியில்லாததாலும் இறைவா, உன் ஆணைப்படி மண்ணுலகில் பிறக்கின்றேன், உலகம் மாய அறிவு கொண்டது. உலக மயக்கத்தில் நான் இருக்கும்போது எனைத் தடுத்து ஆட் கொள்ளவேண்டும் என வேண்டி சிவனின் அருள் பெற்றார்.

மழை இடைவிடாமல் பெய்துகொண்டிருக்க ஒரு பெரியவர் வீட்டில் படுத்திருந்தார். அப்போது ஒரு குரல் மழை அதிகமாக இருக்கின்றது உள்ளே வரலாமா என்றது. அந்தப் பெரியவர். ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம், உள்ளே வாருங்கள் என்றார், அந்தச் சமயம் இன்னொரு குரல் உள்ளே வரலாமா என்றது. அவ்விருவரும் ஒருவர் படுக்கலாம், இருவர் உட்காரலாம், மூவர் நிற்கலாம் வாருங்கள் என்றனர். என்னே அன்பு. மனித நேயம். அப்போது நான்காவதாக ஒருவர் தோன்றி மூவரையும் நெருக்கினாராம். மூவரில் ஒருவர் விளக்கேற்றிப் பார்க்க நாராயணன் சங்கு சக்ரதாரியாக அங்கு இருக்க கண்டனர். இவர்கள் வழிபாடு நடத்திய மண்டலம், நாடு நடுநாடு.

அந்த நடுநாட்டில் திருநாவலூரில் வாழ்ந்த ஆதிசைவக் குடும்பத்தின் சடையனார் – இசைஞானியார் ஆகிய இருவரின் மகப்பேறு வேண்டிய தவத்தினால் சிவன் அருளால் திரு அவதாரம் செய்தார் ஆலால சுந்தரர். சேடியர்களில் கமலினி திருவாரூரில் பதியிலார் குலத்தில் பிறந்தார். அனிந்தை ஞாயிறு என்ற ஊரில் வேளாள குலத்தில் பிறந்தார்.

சடையானாரும் இசைஞானியாரும் தம் குழந்தைக்கு நம்பியாரூரர் எனப் பெயர் வைத்து அன்பைக் கொட்டி வளர்க்க நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை பேரழகு உடையவனாக வளர்ந்தது. ஒருநாள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவ்வழி சென்ற மன்னன் குழந்தையின் அழகில் மயங்கி தனக்கு அக்குழந்தையை மகனாகக் கொடுக்க வேண்டினார். அந்த வேண்டுகோள் சடையனாரின் மனத்தைக் கரைத்துவிட நம்பியாரூரர் சுவீகாரம் மூலம் மன்னர்மகன் ஆனார், பெறாமல் அன்பினால் மகமை கொண்டார் நரசிங்கமுனையர் என்ற அந்த மன்னன்.

அரண்மனையில் வளர்ந்தாலும் அந்தனர்குரிய முறைகளையும் பயின்றார் நம்பியாரூரர். அந்தக்கால முறைப்படி 16 வயதினில் அவருக்கு அந்தனர் வழியிலே பெண் பார்த்து குணநலன் மிக்க சடங்கவி என்ற அந்தணன் இல்ல மகளை பேசி மணம் முடிக்க முடிவாயிற்று. ஆயிரம் பேரைப் போய் விசாரித்துப் பேசி திருமணம் செய் என்ற பழமொழிக்கு ஏற்ப விசாரனை முடிந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.

ஆரூரருக்கு மங்கல நீராட்டு நடைபெற்று குதிரை ஏறி வலம் வந்து மணமேடையில் அமர்ந்ததும் வேத மந்திரங்கள் முழங்க அக்னி வளர்த்தனர். மணப் பெண் மேடைக்கு வரும் வேளையதில் ஒரு பெரியவர் நெற்றியிலே திருநீற்றுடன் கழுத்திலே உருத்திராசமாலையுடன் கைத்தடியூன்றி மேடையருகினில் வந்தார். அக்கூடத்தில் இருந்தவர்கள் அனைவரின் பர்வையையும் அவர் கவர்ந்தார். அவர்கள் இதுவரை இளமைதான் அழகு என எண்ணியவர்கள். இப்போது ஒரு முதியவர் தோற்றம் அதைவிட அழகாக இருக்க கண்டு வியந்தனர். முதுமையே பேரழகு என்றனர்.

அப்போது அந்தப் பெரியவர் மேடை அருகே நின்று நான் சொல்லுவதைக் கேளுங்கள் என்றார். மேளதாள ஓசை முதல் அனைத்தும் நின்றது. எல்லோரும் அவரையே பார்த்தனர். அவர், மணமகனைப் பார்த்து ஆரூரா, உனக்கும் எனக்கும் ஒரு வழக்கு ஒப்பந்த அடிப்படையில் உள்ளது. அதனை முடித்துவிட்டு திருமண வேள்வியைச் செய் என்றார். மேலும் ‘’திருநாவல்நகர் ஆரூரர் என் அடிமை” என்பதுதான் என் வழக்கு என்றார். உலகத்தில் இல்லாத செய்தியாக, குற்றமற்ற அந்தணர்கள் வேறு ஒரு அந்தணருக்கு அடிமை என்று சொல்லும் முதல் ஆள் நீ, இதனை நம்ப மாட்டேன் என ஆரூரர் தெரிவிக்க பெரியவர் அதற்கான அத்தாட்சி இதோ அடிமைச்சீட்டு என காண்பிக்க, அதைக் கைப்பற்ற ஆரூரர் பெரியவரை மணவறையைச் சுற்றி துரத்தி அதைப் பற்றி கிழித்துவிடுகிறார்.

ஒருவரிடம் உள்ள ஓலையை வாங்கி அதை மற்றவர்கள் படிக்குமுன் கிழிப்பது தர்மமா. என்றும் ஓலையைக் கிழித்ததனால் அடிமை என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்றார் பெரியவர். ஊர் பெரியோர்கள் பெரியவரின் சொந்த ஊரான வெண்ணெய் நல்லூருக்குச் சென்று அங்கு அவையில் பேசலாம் என முடிவெடுத்தனர்.

வெண்ணெய் நல்லூர் நீதிமன்றத்தில் ஆரூரரின் உறவினரும் இரண்டு ஊர் பெரியவர்களும் வந்திருந்தனர். நாவலூர் ஆரூரன் என் அடிமை என்று நான் காட்டிய ஓலையை கிழித்து விட்டான். இதுதான் என் வழக்கு என்றார் பெரியவர். அந்த மன்ற நடுவர் அந்தணரே, அந்தணர் அடிமை என்பது இம்மாநிலத்திலேயே இல்லாத ஒன்று நீர் கூறுவது புதுமையாக இருக்கின்றது என்றார். ஆரூரன் என் மனத்திற்கு எட்டாத மாயையாக இருக்கின்றது இவர் கூற்று என்றார். நடுவர், பெரியவரே நீங்கள் சொல்வதற்கு எந்த சாட்சியும் இல்லை, ஆதாரமும் இல்லை, எப்படி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவது என்றனர்.

பெரியவர் இவன் கிழித்தது படி ஓலை. மூலம் மடியில் வைத்துள்ளேன். எனக்கு பதுகாப்பு தருவதாக இருந்தால் அதைக் காண்பிக்கின்றேன் என்றார். அவையோர் உறுதியளிக்க அவர் காட்டிய ஒலையைப் படித்து அப்போது அதில் சாட்சியிட்டிருந்தோர் அது தம் கையெழுத்து என ஒப்புதல் அளிக்க. ஆரூரர் அது தன் பாட்டனார் கையெழுத்து என ஒப்பு நோக்கிச் சொல்ல நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.

நம்பியாரூராரே நீர் தோற்றீர். அவர் இடும் பணியை ஏற்று அவர் சொல்வழி செயல்படுவது உன் கடன் என்று தீர்ப்பு வழங்கினர். அப்போது கூட்டத்திலிருந்த சிலர் பெரியவரே நீங்கள் இந்த ஊர் என்கிறீர்கள் உங்களை நாங்கள் பார்த்தது கிடையாது யாது உங்கள் வீடு என்றனர். அப்பெரியவர் என்னை யாரும் அறியவில்லையெனில் என்பின்னே வாருங்கள் என் வீட்டை காட்டுகிறேன் என முன்னே செல்ல அனைவரும் பின்னே சென்றனர்.

திருவெண்ணெய் நல்லூரில் உள்ளே திருக்கோவிலான திருவருட்துறை கோவிலை அடைந்தார் பெரியவர். உள்ளே சென்று மறைந்தார். ஆரூரர் உட்பட பின் தொடர்ந்து வந்தவர்கள் திகைத்தனர். வான்வழி ஓர் ஓசை எழுந்தது.

மற்று நீ வன்மை பேசி வந்தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை நமக்கும் அன்பிற்பெருகிய சிறப்பின் மிகக்

அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்

செந்தமிழ் பாடு என்றார் தூமறை பாடும் வாயார்.

வேதங்களை எந்த வாயால் பாடினாரோ அந்தத் திருவாயால் ஆரூராரைப் பார்த்து ‘எமக்கு விருப்பமான வழிபாடு அர்ச்சனைப் பாட்டேயாகும்’. எனவே நம் செந்தமிழால் பாடு. என்னிடம் வன்மை பேசி வந்த நீ வந்தொண்டன் என்னும் நாமம் பெற்றாய் என்றது அவ்வோசை. என்ன சொல்லிப் பாடுவேன் என்ற ஆரூராருக்கு பித்தன் என்று சொல்லிபாட அருள் பிறந்தது. முதல் பாடல்

பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா

எத்தா மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

வைத்தாய்ப் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்

அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

என்னைக் கோவில் தோறும் சென்று பாடுக என்ற அருள் வாக்கிற்கேற்ப பல தலங்களையும் வழிபட்டு அதிகை வீரட்டானம் சேர்ந்தார்.

அது அப்பரடிகள் சூலைநோய் தீர்த்த தலம். அப்பரடிகள் உழவாரப்பணி செய்து பல காலம் இருந்த தலம். இதை தாம் மிதிக்கலாகாது என்று ஊர் எல்லையில் உள்ள சித்தவட மடத்தில் மற்ற அடியார்களுடன் தங்கினார்.  நள்ளிரவு 2 மணியளவில் நம்பியாரூரார் தலைமேல் ஒரு பெரியவர் கால் நீட்டி உதைத்தார். அய்யா பெரியவரே என் தலைமீது தாங்கள் கால் நீட்டுவது ஏன் என்றார். வயது முதிர்ந்துவிட்டது எந்த திசையில் கால்வைப்பது எனத் தெரியவில்லை எனது மூப்பினால் என்றார். ஆரூரர் வேறு இடத்தில் படுத்தார். சிறிது நேரத்தில் அதே பெரியவர் மீண்டும் காலால் எட்டி உதைத்தார். ஆரூரார் பெரியவரே என் முடிமீது கால் வைக்கின்றீரே என்றார். பெரியவர் பழைய பதிலான திசையறியா வகை செய்தது மூப்பு என்றார். இது அதிகாலை நாலரைமணி வரை நடைபெற்றது. ஆரூரர் சலிப்புற்று என்னை பலகாலும் மிதித்தனை நீர் யார் எனக் கேட்க என்னை அறிந்திலையோ என்று மறைந்தார் பெரியவர். அப்போதுதான் அது சிவன் என உணர்ந்தார். அடியார் திருக்கூட்டச் சாதியைச் சார்ந்த நான் அதன் தலைவனாகிய இறைவனை உணாரவில்லையே என மனம் நொந்து ‘தம்மானையறியாத சாதியர் உளரோ’ எனப்பாடினார்.

தில்லையில் கண், தாது, மூக்கு, செவி, வாய் ஆகிய ஐந்து பொறிகளும் கண்ணிலே நிலைத்து நிற்க வழிபட்டார் ஆரூரர். அந்தக் கராணங்களாகிய மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகிய நான்கும் சிந்தையிலே லயிக்க வழிபட்டார். தில்லையிலிருந்து புறப்பட்டு சீர்காழி சென்றார். ஞான சம்பந்தம்பிள்ளை திரு அவதாரம் செய்த ஊர்மண்ணை காலால் மிதிக்கக்கூடாது என எண்ணி ஊர் எல்லையில் தங்கியிருந்து சிவனை வழிபட்ட ஆரூரருக்கு வழியிலே கயிலைக் காட்சியைத் தந்தார் இறைவன். பின் திருவாரூரை நோக்கி சென்றார். அன்றிரவு அடியார்கள் கனவில் பெருமான் தோன்றி ஆரூரன் நாம் அழைக்க இங்கு வருகிறான். அவனுக்கு வரவேற்பு செய்யுங்கள் எனப் பணித்தார். ஊர் எல்லையில் அடியார்கள் பெரும் கூட்டமாக சென்று வரவேற்றனர். அங்கு சில நாட்கள் தங்கி காலையும் மாலையும் வழிபாடு செய்தார்.

ஆரூர் பெருமான் தோழமையாக தம்மை ஆரூரருக்குத் தந்தோம் என்று சொன்ன செய்தி அறிந்த அடியார்கள் நம்பியாரூரரை ‘தம்பிரான் தோழர்’ எனப் புகழ்ந்தனர். அம்பிகையின் சேடியான கமலினி திருவாரூரில் பதியிலார் குலத்தில் தோன்றியவருக்கு இப்போது பரவையார் எனப் பெயர். அவர் இறைவனுக்கு மலர்மாலையை கொண்டுவரும்போது ஆரூரரைப் பார்த்தார். ஆரூரர் அன்று இரவு பரவையரை நினைத்திருந்தார். அதேபோல் பரவையரும் ஆரூரரை நினைத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு அடியவர்கள் கனவில் தோன்றிய இறைவன் பரவையை நாம் ஆரூரனுக்குத் தந்தோம். அவர்களுடைய திருமணத்தை நடத்துங்கள் என்றார். திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இன்பத்தில் திளைத்தனர்.

எப்போதும்போல் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கச் சொல்லும் போது மண்டபத்தில் அடியார்கள் கூடி பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தொண்டு செய்வது எப்போது என்று சிந்தித்துக் கொண்டு சுற்றி வரும் ஆரூரைக் கண்ட விறன்மிண்டர் அடியார் கூட்டத்தை மதியாமல் செல்லும் அவர் யார் என்றார். ஓலைகாட்டி அடிமையானவர் என்றனர். அடியவர் கூட்டத்தை மதியாமல் செல்லும் அவரை திருக்கூட்டத்திலிருந்து விலக்கி வைக்கின்றேன் என்றார். அருகிலிருந்தவர்கள் அவர் புற்றிடம் கொண்டவருக்கு மிகவும் வேண்டியவர் என்றனர். அப்படியானால் அவரையும் விலக்கி வைக்கின்றேன் என்றார்.

அதைக் கேட்ட சிவன் ஆரூரர் உள் நுழைவதற்கு முன்பே வெளிவந்து அடியவர்கள் புறக்கணித்தபின் என்னால் நிலை கொள்ள முடியவில்லை, அடியவர்களின் பெருமையை நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக ஆரூரா என்றார். அடியவர்களுடைய பெருமைக்கு நிகர் அவர்களேதான். அவர்கள் பெருமைக்கு முன் என் பெருமை சற்று குறைவுதான். அன்பினாலே என்னை அவர்கள் பெற்றவர்கள். உள்ளத்து ஒருமையால் உலகையே வெல்லக் கூடியவர்கள். குறையேது மில்லாதவர்கள். உலகில் துன்பம் வராதிருக்க வேள்வி செய்பவர்கள். திருநீற்றின் செல்வமே பற்று என்றும் சிவனின் அன்பே பேறு என்றும் நினைப்பவர்கள். வீடு பேற்றை கூட வேண்டாம் என்று பலன் கருதாது பக்தி செலுத்துகின்ற தொண்டர்கள். அவர்களை நீ சென்றடைவாய். குற்றமற்ற அந்த அடியவர்களை நீ சென்று பாடு எனப் பணித்து ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என முதல் அடியை எடுத்துக் கொடுத்தார். தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகின்ற அத்தனை பேரையும் சேர்த்தே ‘”தில்லைவாழ் அந்தணர்” என்றார்.ஆரூரர் குறிக்கோள் ‘யாவர் சிவனடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்’ என்பதே.

அந்தணர் ஒரு சாதியில் தோன்றியவர் என்று யவரும் இல்லை. அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர்- அறத்தன்மை பூண்டு எவ்வுயிரும் ஈசன் கோயில் என்று எண்ணி வாழ்வோரே அந்தணர். சத்திய வாழ்வைக் கடைப்பிடிப்பதே அந்தணத் தண்மை.

நம்பி ஆரூரர் அரனையும் அரனடியாரையும் வழிபட்டு பரவையாரோடு இல்லறம் இனிது நடத்திவந்தார். ஆரூர் அருகில் உள்ள குண்டையூரின் குண்டையூர்கிழார் ஆரூரர் பால் கொண்ட அன்பினால் அவருக்கு வேண்டிய நெல்லை அளித்துவந்தார். வறட்சியால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ஆரூரருக்கு எப்படி நெல் அனுப்புவது என வேதனைப்பட்டார். உணவு உண்ணாது இருந்தார். அவர் கனவில் இறைவன் தோன்றி ஆரூரான் பொருட்டு நெல் கொடுத்தோம் என அருள் பாலித்தார். காலயில் எழுந்து பார்த்தபோது இருந்த நெல்மலையை எப்படி ஆரூருக்கு எடுத்துச் செல்வது என் குழம்பி ஆரூர் சென்று நடந்ததை ஆரூரரிடம் சென்னார். ஆரூரர் நெல் மலையைப் பார்த்து இது மனித முயற்சியால் கொண்டு செல்ல முடியாது என்று அருகில் உள்ள கோளிலி இறைவனிடம் ஆள் வேண்டி பாட இறைவனும் அன்று இரவு பரவையார் மாளிகை இருந்த வீதிக்கு தம் பூதகணங்களின் மூலம் எல்லா நெல்லையும் கொண்டு சேர்த்தார்.

நெல் மலையைக்கண்டு அதிசயத்து பரவையார் அடியவர்களிடம் உங்கள் மனை எல்லைக்கு உட்பட்ட நெல் குன்றெல்லாம் அவரவர் வீட்டிற்கு எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவிப்பை செய்தார். சில நாட்களிந்து ஆரூரர் திருநாட்டியத்தான் குடி என்ற ஊருக்குச் சென்றவரை கோட்புலி என்ற அடியவர் எதிர்கொண்டு அழைத்து கோவிலில் வழிபாடு நடத்தினார். கோட்புலியார் ஆரூரரை வணங்கிய சிங்கடி, வனப்பகை என்ற தம் இரு பெண்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டினார். நம்பிஆரூரர் கோட்புலியாரே அவர் இருவரையும் என் மக்களாக ஏற்றுக் கொண்டோம் என்றார். அங்கிருந்து திருவையாற்றுப் பெருமானை வணங்கி திருஆலம்பொழில் சென்று இரவு தங்கினார். இரண்டு தலங்களுக்கிடையில் உள்ள வயிரத்திருமேனிகொண்ட திருமழப்பாடி இறைவன் கனவில் என்னைப் பாட மறந்தனையே என்றார். திடுக்கிட்டு விழித்தவர் மெய்யுருகிப் பதிகம் பாடினார்.

வலிவலம் சென்று பதிகம் பாடுமுன் ‘நான் பாடுகிற பாடல் எதுவானாலும் நானாக சொன்னதில்லை, எனக்குமுன் வாழ்ந்த நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் சொல்லியதே’ எனச் சொல்லி பதிகம் பாடினார். அங்கிருந்து திருவாரூர் வந்து உத்திரத் திருவிழாவிற்கு பொருள் வேண்டி திருப்புகலூர் சென்று வழிபாடு செய்து கண் அயர்வில் அங்கிருந்த செங்கல்லை தலைக்கு அனையாக வைத்து படுத்தார், எழும்போது அச்செங்கல் தங்கமாக மாறியிருந்தது,

சிலநாட்கள் சென்றபின் திருச்சி நகர் வந்தார். திரு ஆனைக்கா சிவனை வழிபட்டார். சோழமன்னன் காவிரியில் குளிக்க மூழ்கியபோது அவனுடைய இரத்தின மலை நீரிலே காணாமற்போனது. கவலைப்படாமல் அது சிவனுக்குரியது என்றார். அப்போது சிவனை காவிரியில் இருந்து கொணர்ந்த நீரால் குளிப்பாட்ட மன்னன் சிவனுக்குரியது என்றமாலை சிவன் கழுத்தில் இருந்தது. அது பற்றி பதிகம் பாடினார். அங்கிருந்து விருத்தாச்சலம் சென்று கோவிலில் பெருமானை பாடி வழிபட்டார். உத்திரப் பெருவிழாவில் அடியார்க்கு அமுது படைக்க பொருள் தேவை என வேண்ட இறைவன் பதினாறாயிரம் பொற்காசுகளைத் தர அவற்றை என்னாலே எடுத்துக் கொண்டு போகமுடியாது நீங்களே அங்கே கொடுங்கள் என்றார் ஆரூரர். பெருமான் திருமுத்தாற்றிலே போட்டு திருவாரூர் குளத்திலே எடுத்துக் கொள் என்றார்.

பெருமான் கொடுத்ததில் மச்சம் பார்க்க கொஞ்சம் வைத்துக் கொண்டு மீதியை ஆற்றில் போட்டார். திருவாரூர் சென்றார். பரவையார் கேட்டார். பணம் காலையில் வரும் என்றார். காலை வந்தது. குளித்தார். வழிபாடு முடித்து குளக்கரைக்கு பரவையருடன் வந்தார். குளத்தில் மூழ்கி தேடினார். தேடிக்கொண்டே இருந்தார். மாலையாயிற்று, பரைவையார் இன்னும் என்ன குளத்தில் தேடுகின்றீர்கள் என்றதற்கு திருமுத்தாற்றில் போட்டேன் திருவாரூர் குளத்தில் எடுப்பேன் என்றார். பரவையார் ஆற்றில் போட்டு குளத்தில் எடுப்பது என்பதையா என்றார். அதை வைத்தே பதிகம் பாடினார், தான் மச்சம் பார்க்க எடுத்துவைத்தது தவறு என்றாலும் நீ இவ்வாறு செய்யக்கூடாது என்று பாட அருள் பெற்று காசு எடுத்து திருவிழாவில் அடியவர்க்கு அமுது படைத்து இன்புற்றார்.

பெருவிழா முடிந்ததும் தம் தல பயணத்தை அன்பர்களுடன் துவக்கி திருக்கருகாவூர் சென்றார். காலை முதல் உண்ணாமையால் மிகவும் களைபடைந்தனர். வழியில் ஒரு பெரியவர் என் பின்னால் வாருங்கள் என அழைத்து அவர்கொடுத்த கட்டமுதையும் நீரையும் சுவைத்து தங்கள் பசியையும் தாகத்தையும் போக்கினர். அனைவரும் கண்ணயர்ந்தனர். திடிரென்று வெயில் பட்டதும் விழித்தால் சோலையும் தெரியவில்லை பந்தலையும் காணோம் பெரியவரையும் காணோம். இத்தனை மாற்றம் நடந்தும் தெரியாமல் போனேனே என ஒரு பதிகம் பாடினார். பலதலங்களை வழிபட்டு திருக்கச்சூர் மலைக்கோவில் உள்ள மருந்தீசரை வணங்கி வெளியில் அமர்ந்திருந்தார். உணவு சமைப்பவர் வராததால் பசியுடன் இருந்தவர் முன்னால் பெரியவர் ஒருவர் இந்த ஊரில் பல இல்லங்களில் இரந்து வந்திருக்கின்றேன் என அமுது ஊட்டினார். அங்கிருந்து காஞ்சி சென்று வழிபட்டு திருவொற்றியூர் சென்றார்.

மாந்தாதா என்ற சிவபக்தர் இமயம் முதல் குமரிவரை பல அறநிறுவனங்களை நிறுவியதன் விளைவாக அவரின் வாழ்நாள்கூட அவரின் வாரிசுகள் இறந்தும் இவர் பன்னெடு நாள் வாழ்ந்தார். அது சலிப்பை ஏற்படுத்த அறிஞர்களை வரவழைத்து ஆலோசனை புரிய அவர்கள் மாந்தாதா செய்த அறங்களையெல்லாம் ரத்து செய்து பத்திரம் எழுதிக்கொடுத்தால் இறந்து விடுவீர்கள் என்றனர். பத்திரம் எழுதியாயிற்று. அன்று இரவு இறந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் படுக்கச் சென்றார். எதுவும் நடக்கவில்லை. பத்திரத்தை பெரியோர்கள் எடுத்து பார்த்தபோது அவர் செய்த அறங்கள் எல்லாம் திருவொற்றியூர் நீங்கலாக என எழுதியிருந்தது கண்டனர். எழுதும்போது திருவொற்றியூர் நீங்கலாக என எழுதவில்லை. அப்படியானால் திருவொற்றியூர் பெருமான் அதைச் சேர்த்துள்ளார். மாந்தாதா இறப்பை அப்போதைக்கு இறைவன் விரும்பவில்லை எனத் தெரிந்தது. இறவன் எழுத்து அறியும் பெருமான் ஆனார்.

அருகில் உள்ள ஞாயிறு என்ற தலத்தில் ஞாயிறுகிழார் என்பவரின் மகள் சங்கிலியார் பருவமடைந்தார். கயிலையில் உமாதேவியரின் சேடிகளில் ஒருவரான அனிந்ததான் இவர். பெற்றோர் அவருக்கு மணமுடிக்க விரும்பினர். அவரை மணம்பேச வந்தவர் இறந்ததால் அந்தச்செய்தி ஊரெங்கும் பரவியது. இறையருள் பெற்ற ஓர் அடியாரைத்தான் மணப்பேன் என்ற சங்கிலியார் விருப்பத்திற்கேற்ப கோவில் அருகே ஒர்வீடு அமைத்துக் கொடுத்தனர். அங்கிருந்து காலையும் மாலையும் வழிபட்டு இறைவனுக்கு மலர் தொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அங்கு வந்த நம்பி ஆரூரர் சங்கிலியரைப்பார்க்க அவரும் ஆரூரரைப் பார்த்தார்.

பண்டைவினை தொடர அவரை மணம் செய்ய விரும்பிய ஆரூரர் இறைவனிடம் சென்று வேண்டினர். இறவன் உறுதியளித்தார். சங்கிலியர் கனவிலே வேதியராகச் என்று ஆரூரான் உன்னை மணக்க விரும்புகிறான். நீ உன் சம்மதத்தை கொடு என்றார். சங்கிலியார் அவர் திருவாரூரில் வசிப்பவர் என்றார். இறைவன் ஆரூரா உன்னை விட்டு பிரியேன் என்று ஓர் சத்தியம் செய்வாயானால் நீ அவளை மணந்து கொள்ளலாம் என்றார். ஆரூரர் தலயாத்திரை செய்யும்போது இந்த ஆணை இடையூறாக இருக்கும் என்பதால் பெருமானிடம் சங்கிலியாருக்கு நான் உறுதி செய்யும்போது கருவரையில் உன்திருமேனி இருக்காமல் கோவிலின் புறத்தே உள்ள மகிழமரத்தடியில் இருங்கள் என்றார். அங்கிருந்து புறப்பட்டு சங்கிலியார் கனவில் தோன்றி சங்கிலியாரே நீர் கேட்டவண்ணம் என்நண்பன் ஆரூரர் தரும் ஆணையை நீ என்முன் திருக்கோவிலில் பெறவேண்டாம். மகிழமரத்தடியில் பெற்றுக்கொள் எனக்கூறி மறைந்தார்.

காலையில் எழுந்து சங்கிலி நாச்சியார் இரவு நடந்ததை தன் தோழியரிடம் கூறி கோவில் பணிக்குத் தயாரானார். சுந்தரர் கோவிலுக்கு வந்தார். சிவனின் அருளால் தான் உறுதி செய்து தறுவதைக்கூற தோழியர்கள் ஆணையை மகிழமரத்தடியில் செய்யுங்கள் என்றனர். அப்போதுதான் ஆரூரரருக்கு இறைவன் செய்த சூழ்ச்சி புரிந்தது. வேறுவழியில்லாமல் மகிழமரத்தடியில் உறுதி செய்தார். அடியவர்கள் கனவில் தோன்றி சங்கிலியருக்கும் சுந்தரருக்கும் மணமுடிக்க கட்டளையிட்டிருந்ததால் மணம் சிறப்பாக நடைபெற்றது. இல்லறம் இனிது நடந்தது.

வேனிற்காலம் தொடங்கியது. ஆரூரரருக்கு திருவாரூரின் உத்திரப்பெருவிழா நினைவு வந்து அந்த நினைவாக பதிகம் பாடினார். அங்கிருந்து திருவாருரை நோக்கிப் புறப்பட்டார். திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் சுந்தரரின் கண்பார்வைபோனது. கண்ணுக்கு மருந்து கொடு என திருவொற்றியூர் பெருமானிடம் பதிகம் பாடினார். அடியவர்களின் துணையோடு திருவாரூர் செல்லும் வழியில் திருமுல்லைவாயிலில் பதிகம் பாடி திருவெண்பாக்கம் சென்று பதிகம் பாடினார். அங்கு கருவரயிலிருந்து அவருக்கு ஓர் கைத்தடி வந்தது. அங்கிருந்து திருஆலங்காடு, திருவூரல் தலங்களை வழிபட்டு காஞ்சி ஏகாம்பரை வழிபட்டார். ஏகம்பத்து ஈசன் அவருக்கு இடதுகண் பார்வை கொடுத்தார். திருஆமத்தூர் தலத்தில் வழிபாடு செய்தார். அங்கிருந்து திருஅறத்துறை திருஆவடுதுறை திருத்துருத்தி தலங்களுக்குச் சென்று பதிகம்பாடி வழிபட்டார். அப்போது கோடைக்காலம். வெப்பமிகுதியால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. திருத்துருத்தி இறைவனிடம் பிணிநீக்க பதிகம் பாட குணமாகியது.

திருவாரூரை நோக்கி பயணப்பட்டார். நாரைகளை திருவாரூர் பெருமானுக்கு தூது அனுபினார். பூங்கோவிலில் சென்று பதிகம் பாடினார். மற்றொறு கண்ணைத்தர வேண்டினார். ஆரூர் பெருமான் வலக்கண்ணைத் தந்தார். பரவையார் ஆரூரரை பற்றிய செய்திகளெல்லாம் அறிந்து என்னிடத்தில் சங்கிலியா, இனி இவர் உறவே வேண்டாம் என முடிவு எடுத்தார். அடியார்கள் மூலம் இதை அறிந்த ஆரூரர் புற்றிடங்கொண்ட பெருமானிடம் முறையிடுகின்றார். இறைவன் பாதி இரவில் அந்தணர் வேடம் கொண்டு பரவையார் இல்லக்கதவைத் தட்ட, நடு இரவில் வந்த காரணம் கேட்டு அப்போதும் பரவையர் பிடிவாதமாக இருக்க, அந்தணர் ஆரூராரிடம் சென்று பரவையர் மறுப்பை தெரிவிக்க ஆருரர் இறப்பேன் என்றார். அந்தணர் வடிவிலிருந்த பெருமான் மீண்டும் ஒருமுறை செல்கின்றேன் எனக் கூறி தன் சொந்த வடிவில் பூதகணங்களுடன் பரவையர் இல்லம் சென்று நண்பன் நிலையைச் சொல்ல அவர் இசைவுதந்தார்.

ஆரூரர் மேல்கொண்ட நட்பால் அன்பால் இறைவன் இருமுறை தூது சென்றார். அதனால் அந்தவீதியே சிவமணம் கமழ்ந்தது.

திருப்பெருமங்கலம் என்ற ஊரில் பிறந்தார் ஏயர்கோன் கலிக்காமர். இறைவனிடத்தில் மாறாத அன்பும் அடிவர்கள்பால் அளவற்ற பக்தியும் கொண்டிருந்தார். சிவனை முழுமுதற் பொருளாக நினைத்திருந்தார். அவ்வாறு தான் வழிபடும் சிவனை நம்பி      ஆரூரர் தன் மனைவி பொருட்டு தூது விடுவதை அறிந்து கோபப்பட்டார். அதிசயப்பட்டார். எரிச்சலுற்றார். இவரெல்லாம் ஓர் தொண்டரா. என்னால் இதைக் காதால் கேட்கவும் முடியவில்லை. அந்த ஆரூரர் என் முன்னால் வந்தால் என்ன நடக்கும் என எனக்கே தெரியாது என சீற்றம் கொண்டார்.

இறைவன் ஆரூரர்மேல் அன்பு கொண்டவர். அவர்மேல் தனக்குள்ள நட்பை கலிக்காமருக்குப் புரியவைக்க முடியவில்லை. நண்பனா, தொண்டனா, இருவரும் வேண்டும், எனவே இறைவன் தன் நாடகத்தை நடத்த தொடங்கினார். கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக் கொடுத்தார். சொல்லவொன்னா துன்பத்துக்கு ஆளாகி துடிதுடித்தார். அப்போது பெருமான் தோன்றி உன்னை வருத்தும் சூலையை ஆரூரர் வந்து தீர்க்காவிடில் உம் சூலை தீராது என்றார். அதைக் கேட்ட கலிக்காமர் கொதித்தார். ஆரூரர் வந்து அந்த நோய் தீரும் என்றால் அந்த நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவன் ஆரூரர்பால் சென்று கலிக்காமர் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாய் என்றார். இறைவன் ஆணையை ஏற்று தான் வருவதை சொல்லி அனுப்ப, ஆரூரர் என் சூலையை தீர்க்க வருவதற்குள் நான்மாய்வேன். வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் எனக்கூறி குத்த உயிர் பிரிந்தது.

ஆரூரர் வந்தார். கலிக்காமரின் மனைவி உயர்ந்த அடியாரான அவரிடம் தம் உணர்சிகளைக் காட்டாமல் எதிர்கொண்டழைத்தார். தான் கலிக்கமருடைய நோயை தீர்க்க வந்துள்ளேன் என்றார், அவர் மனைவி அவருக்கு எந்த துன்பமுமில்லை. அவர் உறங்குகின்றார் எனக்கூற எப்படியாயினும் நான் அவரைப் பார்க்கவேண்டும் என வற்புறுத்த குடல் சரிந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த கலிக்காமரை காண்பித்தனர். தன்பால் கொண்ட கோபத்தினால் இந்த முடிவு என்றால் அவர் சென்ற இடத்துக்கே நானும் செல்வேன் என உடைவாளை எடுத்து குத்திக்கொள்ளப் போனார். இறைவன் அருளினாலே கலிக்காமர் விழிப்புற்று நம்பி ஆரூரர் கரத்தைப்பற்றி நண்பனாக இருந்து நான் கெட்டேன் என வருந்தினார். நோய் நீங்கி இருவரும் திருபுன்கூரில் வழிபட்டு சிலநாள் அங்கிருந்தனர். ஆரூரர் திருவாரூர் சென்றார். ஏயர்கோன் கலிக்காமர் இறைபணிதொடர்ந்து சிவனடி சேர்ந்தார்.

ஆரூரரை தில்லையில் காணத்திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார் சேரமான். கோவிலை அடைந்து புலனும் உளமும் ஒன்றுபெற வழிபட்டார். ‘பொன்வண்ணத்தந்தாதி’ என்ற நூலைப்பாடினார். வன்தொண்டர் திருவாரூர் சென்றார் என்பதை அறிந்து அங்கு சென்றார். வழியில் உள்ள தலங்களை வழிபட்டுச் சென்றார். சேரமான் வருவதை அறிந்த ஆரூரர் எதிர்கொண்டழைத்தார். ஆரூரரை வணங்கி வீழ்ந்தார் அடியில். வாரியெடுத்து தழுவினார் ஆரூரர். இருவரும் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கி ஆரூரர் முன் ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ என்ற பாசுரம் பாடினார். சேரமானை அழைத்துக் கொண்டு பரவையர் இல்லம் வந்தார் ஆரூரர். நிறைகுடமும் பூமாலையும் கொண்டு வரவேற்றார் பரவையார். தன் குருநாதருடன் சரிசமமாக அமர்ந்து உணவு உண்ண அஞ்சினார். ஆரூரர் கைப்பற்றி சென்றார்.

இருவரும் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டனர். சேரமானை பாண்டியன் வரவேற்றார். பாண்டியன் சோழன்மகளை மணந்திருக்க சோழனும் அங்கிருந்தான். மூவேந்தர் புடைசூழ ஆரூரர் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டார். வழியில் பல தலங்களை வழிபட்டு திருவாரூர் வந்தனர். சிலநாட்கள் கழித்து ஆரூரர் செரநாடுவர வேண்டுகோள் விடுத்தான் சேரமான். இருவரும் திருவாரூரிலிருந்து புறப்பட்டு பல தலங்களை வழிபட்டு கண்டியூர் சென்றனர். காவிரியில் வெள்ளம். எதிர்கரையில் ஐயாறப்பர். பெருமானை வழிபட நினைத்த ஆரூரர் பதிகம் பாட ஆற்றுநீரை விலக்கி வழிகாட்ட ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து ஐயாறப்பரை வழிபட்டனர்.

இருவரையும் வரவேற்ற சேரமக்கள் திரண்டு தோரணம் அமைத்து விழா செய்தனர். ஆரூரர் அஞ்சைக்களம் சென்று ‘முடிப்பது கங்கை’ என்று பதிகம் பாடினார். திருவாரூர் நினைவு வரவே சேரமானிடம் விடை பெற்றார். சேரமான் கொடுத்த பொன் பொருளோடு திருமுருகன் பூண்டி வந்தனர். எதிர்பாரவிதமாய் கொள்ளையர்கள் எல்லாவற்றையும் களவு செய்தனர். ஆரூரர், பெருமான் திருவருள் எப்படி இதற்கு அனுமதி தந்தது என்று வருந்தினார். திருமுருகன் பூண்டி இறைவனிடம் கோபமாக பதிகம் பாடி முடித்ததும் பூண்டி பெருமான் கொள்ளை அடித்த பொருளை எல்லாம் அவரிடம் கொடுத்தான்.

நேற்றுவரை நீவேண்டியது எல்லாம் நான் கொடுத்தேன். இன்று புதிய நட்பால் என்னை மறந்தாயோ. எனவே அதைக் கொள்ளையடித்து நான் தருவதாகவே இதனை தருகின்றேன் என்றார் இறைவன். ஆரூரர் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டாரை வழிபட்டு இருந்தார்.

சேரமான் நினைவு வர சேரநாடு புறப்பட ஏற்பாடுகள் செய்து ஆரூர் பெருமானிடம் விடைபெற்றார். சோழநாட்டின் பல தலங்களையும் வணங்கி கொங்கு நாட்டின் அவிநாசியை அடைந்தார். அன்பர்களோடு நடந்து செல்லும்போது இரு வேறு உணர்வுகளை கண்டார்

ஓருவீட்டில் வாழைமரம் கட்டி மங்கல ஓசையும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்டது. இதன் காரணம் என்ன என்றார். அங்கிருந்தோர் இது அந்தணர்கள் வாழுமிடம். எதிர் எதிர் வீட்டில் இருந்த சிறுவர்கள் இருவரும் நண்பர்கள், ஏரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒருவனை முதலை காலைக் கவ்வி உள்ளே இழுத்தது. கரையில் இருந்தவனின் மங்கல நிகழ்ச்சி நடைபெறுகிறது. தங்கள் மகனுமிருந்தால் நாமும் தம் மகனுக்கு இப்போது பூணூல் அணிவிக்கலாமே என ஆதங்கத்தில் அழுகிறார்கள்.

நம்பிஆரூரர் வந்து பாதையில் இருக்கின்றார் எனக் கேட்டவர்கள் தங்களின் அழுகையை நிறுத்தி அதன் சுவடே தெரியாமல் வந்து வணங்கினர். அவர்களைப் பார்த்து இன்ப மைந்தனை இழந்தவர் நீரோ என்று அதிசயித்தார். துன்பத்தின் சாயல் இல்லாமல் எப்படி உங்களால் இருக்க முடிகிறது என்றார். அவர்கள் ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்ட எங்கள் செல்வன் வரப்போவதில்லை. தாங்கள் என்று வருவீர்கள் தங்களை எப்போது காண்போம் என ஏங்கிய எங்களுக்கு வரவே வராத பிள்ளையைவிட வராது போலிருந்து வந்த தெய்வமாகிய உங்கள் வருகை எங்களுக்கு இன்பம் தருவதாகும் என்றனர்.

இவர்களின் பக்தியைக் கண்ட ஆரூரர் அன்பு செலுத்துகின்ற நல்லோருக்குரிய துன்பத்தை நீக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு ஏரிக்கரைச் சென்று பார்த்தால் அங்கு தண்ணீரும் இல்லை. முதலையும் இல்லை. அங்கேயிருந்து அவிநாசி பெருமானை மனமுருகிப் பாடினார். பாடல் முடிந்தவுடன் ஏரியில் நீர் வந்தது. நீரிலே முதலை வந்தது. முதலை வாயிலேயிருந்து பிள்ளையும் வந்தது. அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அடியார்கள் இறை நாமத்தை சொல்லினர். ஆரூரர் சிறுவனை அழைத்துக் கொண்டு அவிநாசியப்பர் கோவிலில் பூணூல் அணிவித்தார். அங்கிருந்து சேரநாடு சென்றார்.

சேரமான் எதிர் கொண்டழைத்து இல்லத்திற்குச் சென்று அமுதருந்தி நலம் விசாரித்து இருந்தனர். பல சிவத்தலங்களை வழிபட்டு இன்புற்றிருந்தனர். சுந்தரர் விரைந்து குளத்தில் குளித்து அஞ்சைக்களத்து பெருமானை வணங்க சென்றார். சேரமான் குளத்தில் நிதானமாக நீராடினார்.

இறைவன் முன் பதிகம் பாடப்பாட ஆரூரருக்கு வாழ்வில் வெறுப்பு தொன்றியது. இது கயிலை நாதனுக்கு எட்டியதும் அவர் நம்பி ஆரூரானை வெள்ளானையின் மேல் ஏற்றிக் கொண்டு இங்கு வாரும் என்றார். வெள்ளயானை பூதகணங்களுடன் சுந்தரர் முன் வந்து இறைவன் கட்டளையைத் தெரிவித்தார்கள். ஆரூரர் யானையின் மீதேறும்போது பரவையாரை நினைக்கவில்லை. சங்கிலியாரை நினைக்கவில்லை. நட்பின் உயரவால் சேரமானை நினைக்க அதே நினைவு சேரமான் சிந்தையிலும் சேர்ந்தது.

தோழர் செயலையறியாது குதிரைமீதேறி அதன் கதில் ஐந்தெழுத்தை ஓத அதுவானில் எறியது. வன்தொண்டர் செல்லும் யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றது, பின்னே சென்றார் ஆரூரர். அப்போது இறைவன் கருணையை எண்ணி பத்து பாடல்கள் பாடினார்.

அவரை வரவேற்க இந்திரன், திருமால், பிரமன் மற்றுமுள்ள தேவர்கள் எல்லாம் வந்தனராம். முனிவர்கள் பெருமான் உலா வரும் வெள்ளையானை ஐராவதத்தில் வருபவர் யார் எனக் கேட்க எம்பெருமான் ‘நந்தமர் ஊரன்’ நம் உறவினன் ஆரூரன் என்றார்.

இருவரும் கயிலைமால் மலையில் பெருமான் வீற்றிருக்கும் மணிவாயிலை அடைந்தனர். சேரமான் அழைப்பின்றி சென்றதால் தடுக்கப்பட்டார். உள்ளே சென்ற ஆரூரரை ஆரூரனே வந்தாயா என்றார், இறைவா அடியேன் செய்த பிழைதனை பொறுத்து என்னைத் தடுத்தாட்கொண்டு நின் திருவடிப் பேற்றை வழங்கினயே எனச்சொல்லி பலமுறை வீழ்ந்து வணங்கி என் நண்பன் சேரலர் திருமணிவாயிலின் புறத்தே உளன் எனச்சொல்ல இறைவனும் சரி அழையுங்கள் என்றார். உள்ளே வந்த சேரமான் இறைவனை வணங்கி நான் வாயிலில் இருந்தபோது பாடிய பாடலை தாங்கள் செவிசாய்க்க வேண்டி அங்கே அரங்கேற்றினர்.

சேரமானின் பாடல் சாத்தனாரகிய ஐயப்பன் திருப்பிடவூரில் வந்து வெளியிட்டார். ஆலால சுந்தரர் பாடிய நிறைவு பதிகம் கடல் அரசன் கொண்டுவந்து திருஅஞ்சைக்களத்தில் வெளியிட்டான். கமலினி, அனிந்திதை இருவரும் மீண்டும் பிராட்டியரின் சேடியர்களாயினர்.

மண்ணுலகில் தோன்றிய நாம் இறைவனை உண்மை அன்போடு வழிபட்டால் இறைவன் தன் பொன்னுலகை அளிப்பான். “ஓம் நம்சிவாய”

                           ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26944533
All
26944533
Your IP: 3.209.56.116
2024-03-29 13:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg