gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குங்குலிக்கலயநாயனார்

Written by

24. குங்குலிக்கலயநாயனார்

திருக்கடவூரில் கலயர் பிறந்தார். கடவூர் திருக்கோவிலில் குடியிருக்கும் பெருமான் மீது அளவுகடந்த அன்பைக் கொண்டார் கலயர். காலையும் மாலையும் பெருமானுக்கு குங்குலியம் என்ற மணப்பொருளை நெருப்பில் இட்டு தூப பணியாற்றினார். கோவில் முழுக்க சிவமணமும் குங்குலிய மணமும் நிறைந்திருந்தது.

செல்வமிக்க அந்தணர் குடியில் பிறந்தவர். சிவபெருமான் இவ்வடியவரின் திருத்தொண்டினை உலகறியச் செய்ய நினைத்தார், அதன் விளவாக கலயர் நிலங்களை விற்பனை செய்தார். வீடு மனை இவற்றின்மீது கடன் பெற்று தன் குங்குலியப் பணியை தவறாமல் செய்து வந்தார். வறுமை வாட்டியது. சுற்றமும் மனைவியும் செய்வது அறியாது திகைத்தனர். அனைவரும் பட்டினியாய் கிடந்து துன்பமுற்றனர். அதைக் காணச் சகியாத அவர் மனைவி தன் கழுத்தில் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டு தாலியைக் கழற்றி கொடுத்து அதில் நெல் வாங்கிவரச் சொன்னாள்.

கலயரும் நெல் வாங்கி வரப் புறப்பட்டார். நெல் வாங்கச் செல்லும்பொது வழியில் குங்குலிய மூட்டையுடன் வணிகன் ஒருவனைப் பார்த்தார். குங்குலியத்தைப் பார்த்தவுடன் குழைந்தைகள் மனைவி நெல் எல்லாம் மறந்தார். அருமையான குங்குலியம் இதனைப் புகைத்தால் கோவில் எப்படியிருக்கும் என எண்ணினார். வணிகரே என்னிடம் பணமில்லை அதற்குப் பதில் தங்கம் தருகிறேன் எனக்கூறியதற்கு அவ்வணிகன் சம்மதித்தான். அவ்வளவுதான் குங்குலியம் கலயரின் கைக்கு வந்தது. அப்படியே வேகமாக எடுத்துச் சென்று கோவில் பண்டாரத்தில் வைத்தார். கொஞ்சம் எடுத்து தூபம் போட்டார். பின் பசி மயக்கத்தில் மயங்கினார்.

அவ்வேளை எம்பெருமான் ஆணையினால் குபேரன் கலயர் வீட்டில் செல்வச் செழிப்பினை உருவாக்கினார். அனைவரும் பசியாறி கலயர் வருகைக்கு காத்திருந்தனர். மயங்கிய கலயர் செவியில், ‘கலயரே நீர் பசியில் இருக்கின்றீர் உம் வீடு சென்று அன்னம் உண்டு மகிழ்ந்து பின் வருக’ என்ற குரல் கேட்டு நனவிற்கு வந்தபிந்தான் தான் செய்தது நினைவிற்கு வந்தது. குழைந்தைகளின் பட்டினி நினைவுக்கு வந்தது. இருப்பினும் பெருமானின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தளர் நடையுடன் வீடு வந்து சேர்ந்தார்.

வீடு தான் விட்டு வந்த நிலையிலிருந்து மாறி செல்வ செழிப்புடன் இருப்பதக் கண்ட கலயர் வியப்புடன் மனைவியைக் கேட்க அவர் எல்லாம் இறைவன் செயல் என்றார். மேலும் அளவுகடந்த பக்தியுடன் தன் தொண்டினை செய்து வந்தார்.

அப்போது அருகில் உள்ள திருப்பனந்தாள் என்ற ஊரில் தடாகை என்ற சிவபக்தை இருந்தார். அவர் தினமும் பெருமானுக்கு குடநீர் கொண்டுவந்து உற்றி மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தார். ஒருநாள் தாடகை மலர்சூட்ட முனையும்பொழுது அவருடைய சேலை நெகிழ்ந்தது. மாலையை கீழேவைக்கவும் முடியாமல், சேலையையும் விடவும் முடியாமல் சேலையை தன் இரு முழங்கையினாலும் பிடித்துக் கொண்டு மாலை சூட்ட அம்மையார் அவஸ்திபடுவதைக் கண்ட பெருமான் அம்மையின் அன்பிற்கு இரங்கி குனிந்து மலர் மாலையை ஏற்றுக் கொண்டார். அதைக் கவனியாமல் தடாகை அம்மையார் வழிபாடு முடித்துச் சென்றுவிட்டார்.

பின்னர் வழிபாடு செய்ய வந்த அந்தணர்களும் மற்றவரும் பெருமான் சாய்ந்திருப்பதக் கண்டு பதைத்தனர். என்ன கேடு நிகழுமோ என வருத்தமுற்று மக்கள் கூடி பெருமானை நிமிர்த்த முடிவு செய்தனர். மன்னரிடம் சொன்னார்கள். அனைவரும் சேர்ந்து இரும்பு சங்கிலி, குதிரை, யானை என்று இழுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் அயர்ச்சியடைந்தனர். இதனைக் கேள்விப்பட்ட கலயரும் திருப்பனந்தாள் சென்றார்,

இறைவனை நிமிர்த்தும் பணியில் மன்னனும் மக்களும் ஈடுபட்டு துன்புறுவதால் அப்பணியில் தானும் ஈடுபட்டு அத்துன்பத்தை அடைய நினைத்தார். பெருமான் மீது இருந்த இரும்பு சங்கிலிகளை அகற்றச் சொன்னார். ஒரு வாழை நாறினை எடுத்தார். பெருமான் மீதும் தன் கழுத்தின் மூதும் இனைத்து பூட்டி இழுத்தார். கலயரின் கழுத்து அறுபடும் என்று பெருமான் நேரே நின்றார். பெருமான் பலத்திற்கு மசியவில்லை, அன்பிற்கு கட்டுப்பட்டார்.

கலயர் மீண்டும் கடவூர் வந்து பெருமானுக்குத் தூபத்தொண்டு பலகாலம் செய்து சிவபதம் அடைந்தார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27044986
All
27044986
Your IP: 3.135.213.214
2024-04-20 02:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg