குருஜி - வைரவாக்கியம்

பல பருக்கைகள் கொண்ட உணவை உட்கொள்ளும்போது ஒரு கல் இருந்தால் உணவில் கல் என்கின்றோம். ஆயிரம் இன்பங்களிடையே ஒரு துன்பம் வந்தாலும் அது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். வாழ்வே சலிப்பு என்கின்றோம்.

6-2.இறுதியானஉரை!

Written by

இறுதியானஉரை!                                                                                                   உலகியல் வாழ்வில் வெயில் மழை இரண்டும் வேண்டும். மழையை உள்வாங்கி மண் மலர்கின்றது. மரம், செடி, கொடிகள் உயிர்ப்பிக்கின்றன. அதே மண் வெப்பத்தையும் உள்வாங்கி அந்த மரம், செடி, கொடிகள் உயிர் வாழ உதவுகின்றது.
கனியைத் தரவும், உயிர்களுக்கு உலகத்தை காணவும், ரசிக்கவும் காரணமான வெய்யிலில்தான் மனிதன் நடமாடுகின்றான், மழைக்கு ஒதுங்குகின்றான். எப்படியிருந்தபோதும் ஒன்றுடன் ஒன்று இனைந்து செயல்படும் இரண்டின் சேர்க்கையில்தான் உலகின் உயிர்களுக்கு எல்லா நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
அழகாக இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விருப்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது- அவ்வளவுதான் எனக்கருதவேண்டும். வாழ்வில் பலவீனங்கள் இருக்கும். விருப்பு, வெறுப்புகளும் இருக்கும். எல்லாம் கலந்த கலவைதான் வாழ்வு.
உங்கள் வாழ்வு சிறக்க உங்களுக்கு வேண்டியதை இந்த உலகிலிருந்து நீங்கள்தான் உங்கள் தேவைக்கேற்ப எடுத்து கலந்து கலவையாக்கி உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் “உங்கள் எண்ணம், செயல்பாடுகள் அடங்கிய வாழ்க்கைப் பாதையின் வெற்றி இரகசியம்.”
இதைத்தான், “ஓர் கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதினனுக்குள்ள மனத்திடமும், இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இதயத்தன்மையும், தேவர்களே எனக்கு அருளுங்கள். என்றும் எப்போதும் நிலைத்திருக்கும்படிச் செய்யுங்கள்” என புரட்சிக்கவி பாரதியார் பிரார்த்தனை செய்துள்ளார்.
புயல் சின்னத்தால் மழை பெய்து சிறிது ஓய்ந்திருந்தகாலை- இப்பகுதியை நான் எழுதிக்கொண்டிருந்த வேளை- அப்போது ஜன்னல்வழி நான் கண்ட காட்சியின் களையிது: “எதிர்வீட்டில் ஜாதி முல்லை மழை, வெய்யில் ஆதிக்கத்தில் வளர்ந்து, மலர்ந்து, வீட்டின் வெளிப்புறச் சுவரைத்தாண்டி வெளியே நன்கு பரப்பி வளர்ந்து, பாதையில் செல்வோரை தன்மணத்தினால் கவர்ந்து கொண்டிருந்திருக்கின்றது. அவ்வழி சென்ற 60வயது மதிக்கத்தக்க வெண்மையாடை உடுத்திய ஓர் பெண் ஓர் நிமிடம் அவ்விடத்தில் நின்றாள். அப்பூக்களில் இரண்டைப் பறித்து முகர்ந்து ரசித்தாள். பின் சென்றாள். இந்த நிகழ்வைக்கண்ட நான் இயற்கையின் மகிழ்வு, வளர்ச்சி, வனப்பு, மணம் இவ்வுலக மக்களை எந்தளவுக்கு ஈர்க்கின்றது என வியந்தேன்.
அந்த ஒரு நிமிடங்கள் அந்த முதிர்ந்த பெண்ணின் எண்ணங்கள் எவ்வளவு சந்தோஷத்தை அடைந்திருக்கும். அவரின் இனிமை நிறைந்த, பசுமையாண எண்ணங்கள் எத்தனை எத்தனை அவரின் நினைவுக்குள் மலர்ந்திருக்கும். மனம் மகிழ்வுற்றிருக்கும். அந்த இளமையின் எண்ணத்தோடு அவர் சில அடிகள் நடந்ததாகக்கூட நினைக்கின்றேன்.
எப்போதும் இனிமையான எண்ணங்கள் உங்களுக்கு இளமை உணர்வை ஏற்படுத்தும் என புரிந்து கொள்ளுங்கள். வண்ண வண்ண பூச்சிகள்! வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டால் எல்லோருக்கும் ஆசைபிறக்கும். அவைகள் பறக்கும் போது தெரியும் அழகில் மனம் லயிக்கும். அந்த அழகு ஒரு நிமிடம் உலக நினைவுகளை மறக்கச்செய்யும்.
வண்ணத்துப் பூச்சிகளை சுதந்திரமாக அதன் போக்கில் உலவவிட்டால்தான் அந்த நிகழ்வு.  அது அமர்ந்திருந்தாலும், பறந்தாலும் நாம் ரசிக்கலாம். அதை விடுத்து அவைகளை கையில் பிடித்து அழகு பார்க்க நினைத்தால் அதன் வண்ணங்கள் சிதைந்துவிடும். அதன்பிறகு அது கலையிழந்துவிடும்.
நாம் ரசிக்கின்றோம் என்ற ஆவலில் இதை செய்யக்கூடாது எனத் தெரிந்திருந்தும் நம் மனம் அழகில் மயங்கி அதை விரலில் பிடிக்க முயலும் செயலை செய்கின்றது. கட்டுப்பாடில்லா செயல். அழகை ரசிக்கலாம். அதற்கு தடைபோடக்கூடாது. அவைகள் சுதந்திரமாக உலவுவது என்பது உலகை அழகு மயமாக்கும் ஓர் இயற்கையான செயல். நம் எண்ணங்களால் அந்த நிகழ்விற்கு பங்கம் விளைவிக்கக்கூடாது.
இதுபோன்றே நம்மோடு உறவாடும் உறவுகளையும் அதனதன் போக்கில் உலவவிட்டு அதன் அழகைகண்டு ரசிக்க தெரிந்த மனமாக இருத்தல் வேண்டும். அதன் செயல்களைப் பாராட்ட வேண்டும். பிடிக்கவில்லை எனில் விட்டு விடுங்கள். துன்புறுத்தாதீர்கள். நம் செயலை இவ்வாறு வரையறுத்திக்கொண்டால் உறவுகளிடையே நம் நினைவுகள் உறுதியாகி இறுதியாக நல்லெண்ணபாலம் அமையும். அன்பு தோன்றும்.
முளைவிட்ட அன்பு வளரும், மலரும், பூக்கும், காய்க்கும். நிச்சயம் அதன் பலன் உங்களுக்கு கிடைக்கும். அப்படி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் உங்கள் வாரிசுகளுக்கு, சந்ததியினருக்கு அதன் பலன் போய்ச்சேரும். கர்மபலன்கள் நன்மையாக மாறட்டும். எதிர்மறை எண்ணங்களைவிட்டு, அந்த எண்ணங்களை ஏற்படுத்தும் வார்த்தைகளை பேசவேண்டாம் என்பது வேதம் சொல்லும் அறிவுரை.
நான் நன்றாக இருக்கின்றேன். என் நல்ல எண்ணங்களால் மனம், ஆன்மா, உயிரின் உடல் அனைத்தும் நன்றாக நலமுடன் இருக்கின்றது. என் செயல்கள் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது. என்னால் எங்கும் ஆனந்தத்தை பூரணமாக உணரமுடிகிறது என்ற எண்ணங்களுக்கு தினமும் நினைவூட்டல் நடந்தால் உனக்குள் ஓர் ஒப்பற்ற மாற்றம் உருவாகி நீ மேனிலையடைவாய் என்கிறது வேதம்.
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இயற்கையும், உலகின் உயிர்களையும் சார்ந்தே நம் வாழ்வின் இயக்கம் உள்ளது. நம் உபயோகத்திறக்கு எல்லாம் கொடுத்த, கொடுக்கின்ற உயிரினங்களுக்கு, இயற்கைக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். முதன்மையாக அவைகளை அனுபவிக்க நல்ல ஆரோக்கிய உடலை கொடுத்த இறைக்கு நன்றி சொல்லுங்கள்.
வாழ்கையை வாழ்வை அனுபவி! அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் சரி! ஆன்மாவே நீ மனம்விட்டுச் சிரிக்கும்போது உன்னைப்பார்த்த உலகம் நீ சிரித்த காரணம் கண்டு ஆராய்ந்து பங்கு கொள்ளும்!
வாழ்க்கை ஆயிரம் காரணங்கள், நிகழ்வுகள் தரலாம், நீ அழுவதற்கு! நீ அழுதால் உலகம் அதில் பங்கு கொள்ளாது! நீ தனியாய்தான் அழவேண்டும்! ஆனால் நீ வாழப்பிறந்தவன்! வாழ்வை அனுபவிக்க பிறந்தவன்!
அழுவதற்கான காரணங்களை நீக்கிவிட்டு, இந்த உலகிற்கு ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும், உன் சந்தோஷத்திற்கு! உன் புன்னகைக்கு! உன் வாழ்விற்கு!
எனவே நீ எப்போதும் சந்தோஷத்தையே நினை! சந்தோஷமாகப் பேசு! சந்தோஷமாகச் செயல்படு! சந்தோஷத்தை விதை! சந்தோஷத்தை வளர்! சந்தோஷத்தை அறுவடை செய்து பயன்பெறு! ஆனந்தம்கொள்!
அதுவே உன் நோக்கமாக இருக்கட்டும்! உன் பயணத்தில் வண்ணமயமான “சந்தோஷப்பூக்களை” கண்ட நிம்மதி உன்னுள் தோன்றட்டும்-குருஜி

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

பொருளடக்கம்

4492201
All
4492201
Your IP: 162.158.78.200
2018-03-17 15:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

சந்தோஷப்பூக்கள்

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...