gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

காலமும் சூழ்நிலையும் மாற்றத்திற்கு உள்ளானது! எறும்பைத் தின்னும் விலங்கு இறந்தால் எறும்பு அதை அரித்துவிடும்! இது நியதி!

எண் எட்டு (சனி)

Written by

8.எண் எட்டு (சனி)

பிறவிஎண்-8

ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 8, 17, 26 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-8

எண்ணின் அதிபதி-

சனீஸ்வரபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

1, 10, 19, 28

அதிர்ஷ்ட கிழமைகள்-

சனிக்கிழமை

ஒற்றுமையான எண்கள் –

எட்டு எண்ணுள்ளவர்களுக்கு 1, 4, 9, எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையான தேதிகள்

1,4,9 வரக்கூடிய 1,4,9,10,13,18,19,27,28,31 நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

30 வயதிலிருந்து 39 வரை வாழ்க்கை முன்னேற்றமடையும். வசதி வாய்ப்புகள் பெருகும். 50 – 59 பிறர்கண்டு பெருமைப் படத்தக்கதாக அமையும். பொருளாதார வசதிகள் மேம்படும். 25,26,33,35,41,49,50,53,55,77 வயது அதிர்ஷ்டமானது.

கூட்டு சேரஎண்-

நட்பு-1,5,6 பகை-4,7,9 சமம்-3 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்

பொது பலன்-

மன உறுதி, நேர்மை, தர்மத்திற்காகப் போராடும் ஆற்றல், துணிவு ஆகியவற்றைப் கொண்டவர்கள். தவறான பாதையில் செல்ல மாட்டார்கள். நடுநிலையிலிருந்து தவறாதவர்கள். நன்மையை சீர்தூக்கிப் பார்க்கும் சமத்துவமான அறிவுடையவர்கள். விதிப்படி வாழ்வின் ஏற்ற தாழ்வுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். பூர்வ ஜன்ம தற்கால புண்ய பாவங்களுக்கேற்ப பலன்களை அடைவர். எந்த ஒன்றையும் ஆராயமல் செய்யமாட்டார்கள். இவர்கள் செய்யும் காரியத்தால் நல்ல பலன்களே கிட்டும். மற்றவர் மகிழ்விற்காக எதைச் செய்தாலும் இவர்களுக்கும் அதில் ஆனந்தம் கிடைக்கும். 30 வயதிற்குமேல் யோகமடைவர். ஏழையானாலும் புகழும் செல்வாக்கும் மிக்கவராக இருப்பர். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

வயிற்றுவலி ஏற்படும். தலைவலி, கிறுகிறுப்பு இரத்தத்தில் விஷச்சேர்க்கை போன்ற நோய்கள் வரும்.

உடை-

மஞ்சள் நிறம் சிறப்பானது. ஆழ்ந்த பச்சையும், நீலமும் நன்மை தரும்

 

பெயர் எண் எட்டு- பலன்கள்

தனிப்பட்ட வாழ்க்கை வாழக்கூடியவர். திடீர் யோகம் வரும். திடீர் துன்பமும் வரும். வெற்றிமேல் வெற்றி அல்லது தோல்விமேல் தோல்வி என இருக்கும். தேர்ந்த வியாபாரிகள். ஒன்றை நினைத்தால் அதில் வெற்றி கிட்டும்வரை ஓயமாட்டார்கள். பிடிவாத குணம் உடையவர்கள். உன்னத நிலையில் இருப்பார்கள் அல்லது அடித் தளத்திற்கு சென்று விடுவார்கள். தாழ்ந்த நிலை விரைவில் மாறிவிடும். துணிவு, சேம்பல், பரபரப்பு இல்லா உழைப்பாளிகள். யாருக்கும் அடங்கிப் போகார். சிறந்த நிர்வாகி. இவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்கலாம். தன் அறிவு திறமையை உணரமாட்டார்கள். தாழ்வு மனப்பான்மையால் சங்கடப்படுவார்கள். அது தெளிந்து உணர்ந்தால் இவரை வெல்ல முடியாது. உடல் உழைப்பு இல்லாமல் நல்ல வருமானம் இவருக்கு கிடைக்கும். இந்த எண் நல்லதல்ல என்றாலும் இவர்கள் நல்ல காரியங்களைச் செய்வர். இவர்கள் மறைவிற்குப்பின் புகழப்படுவார்கள்.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-

மேலே உள்ள 1, 10, 19, 28 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். மற்ற தேதி, மாதம் வருடம் மூன்றையும் கூட்டினால் ஒன்று வரும் தினங்கள் நன்மை தரும். இந்த தேதிகள் சனிக் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்.

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் எட்டிற்கு உரிய திசை- மேற்கு. கிழமை- சனிக்கிழமை

அதிர்ஷ்ட நவரத்தினம்-

நீலம்- வாழ்க்கையை மேம்படையச் செய்யும் அல்லது அடியோடு நாசமாக்கிவிடும். சுத்தமானதாகவும் குற்றமில்லாததாகவும் இருக்க வேண்டும். பரிசோதித்து வாங்கவும். கெட்ட கண்பார்வையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். சபைகளில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். தனலாபம் ஏற்படும். கண்டங்கள் நீங்கி தீர்க்காயுள் கிட்டும். சனித்தோஷம் நீங்கும். இது அணிந்துகொண்டு தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடாது. நேர்மையான வழியில் சென்றால் உலகப் புகழ் அடையலாம்.

உடல் பாதிப்பு வயது-

தலைவலி, ரத்த சம்பந்தமான கோளாறுகள், மூட்டுப்பிடிப்பு, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம்.

உடலுக்குகந்த பொருள்கள்-

மாமிசத்தை விலக்கி காய்கறிகள் கீரைகள் ஆகியனவற்றை முடிந்தளவிற்கு அதிகமாக தினசரி சேர்க்கவும்.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் ஒன்று வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 1, 10, 19, 28, 37, 46, 55, 64, 73, 82, 91, 100 ஆக இருக்கலாம்.

துரதிர்ஷ்டம்

பிறவிஎண் அல்லது பெயர் எண் 8 உள்ளவர்கள் அதிக துன்பங்கள் அடைவார்கள் என்பது பொது விதி. எண் 8 உள்ளவர்களின் மனைவி, வீடு, அலுவலக தொழிற்சாலை, தொலைபேசி, முக்கிய நிகழ்வுகள் எண் 4 ஆக இருத்தல் நன்றன்று. எனவே அதைப் பார்த்துக்கொள்ளவும்.

பொதுவாக 8ல் பிறந்தவர் தன் பெயரை 1 அல்லது 5 க்கு மாற்றவும். பெயர் எண் 10,19,37,46, 23,32,41 என்றிருத்தல் நன்மை அதன்பின் பிறந்ததேதி 8ஐ எதற்கும் பயன்படுத்தக்கூடாது. குடியிருக்கும் வீட்டுஎண் 1, 10, 19, 28, 37, 46, 55, 64, 73, 82, 91, 100 அல்லது 5,14,23,32,41,50,68,95,104 ஆக இருக்கவேண்டும்.

திருமணம் துரதிர்ஷ்டநாளில் நடந்தால் கணவன் மனைவி இருவரும் வாழ்நாளில் துன்ப படவேண்டியிருக்கும். குறிப்பாக 8 எண் உள்ளவர்கள் 4,8 வரும் 4,13,22,31,8,17,26 தேதிகளில் திருமணம் செய்தவர்கள் வாழ்வில் மகிச்சியே இருக்காது. இருபாலரில் ஒருவருக்கு மரண கண்டம் ஏற்படும்.

மேலும் எட்டாம் எண்ணில் மேல்தளத்தில் உள்ளோர், கீழ் தளத்தில் உள்ளோர் என இருவகையுண்டு. கீழ்தளத்தில் உள்ளோரின் வீட்டுஎண், அவரின் மணநாள், வேலைக்குச் சென்றதேதி, அவருக்கு குழந்தை பிறந்தநாள், மனைவியின் பிறந்தநாள் மற்ற முக்கிய நிகழ்ச்சிகளெல்லாம் எட்டு அல்லது நான்கு எண் தேதிகளிலேயே நடைபெறும். கீழ்தளத்திலுள்ள 8 எண்ணுடையவர்களது வாழ்க்கை அவர் விதிப்படியே செலுத்தப்படுவார்கள். மதியின் முயற்சி பலிக்காது. நாட்டின் சட்ட திட்டங்களால் பெறுதும் பாதிக்கப்படுவார்கள். வாழ்வு துக்ககரமானதாகவே இருக்கும்.

எட்டாம் எண்ணில் மேல்தளத்தில் உள்ளோர் வாழ்வின் நிகழ்வுகள் எல்லாம் 1,3,6 எண்களிலே நடக்கும். பிறந்த தேதி 26 என்றால் தனி எண் 8, அவர் வீட்டு எண் 3, மணமான தேதி 10, வேலையில் சேர்ந்த நாள்15- தனி எண் 6. 8ம் எண்ணுடையவர் என்றாலும் 4,8 ம் குறுக்கிடாமல் 1,3,6 எண்களில் நடக்கும் இவர் சனியின் மேல்தளத்தைச் சேர்ந்தவர்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17155396
All
17155396
Your IP: 172.69.63.79
2020-06-02 12:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg