gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 13 July 2018 09:30

தாரா!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன்விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

#####

தாரா!

மிதக்கும் பொருள் / தாண்டும் சாதனம் என்று அர்த்தம். கடல் கடந்த பயணங்களில் பாதுகாப்பாக இருப்பவள். அமாவாசை இருளில் சந்திரன் இல்லாததால் வானில் நட்சத்திரம் மக்களுக்கு ஒளிதருவதுபோல் பாவம் எனும் கடலில் மூழ்காமல் கடக்க உதவும் ஓடமாக இருந்து வாழ்வில் பயணிப்போருக்கு உதவுபவள். வாழ்வின் துன்பங்களை எதிர்கொண்டு சம்சார சாகரத்தினை கடக்க உதவுபவள்.

கபாலம், ஞனவாள், நீலத்தாமரை, கத்தரிக்கோல் ஆகியவை தன் நான்கு கரங்களில் ஏந்தியவள். இடையில் புலித்தோலை ஆடையாக அணிந்தவள். தலையில் அக்ஷேப்யர் என்ற நாகத்தினை அணிந்தவள். விஷ்ணுவின் ராமாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் தாரா. எனவேதான் ராமருடைய மந்திரம் ‘தாரகா மந்திரம்’ எனப்பட்டது.

இவள் வானம்-ஆகாய திசையில் தோன்றியவள். வசிஷ்ட மாமுனிவர் அக்காலத்தில் மகாசீனம் என்று அழைக்கப்பட்ட திபெத்தில் தாராதேவியின் மகத்துவத்தை முறையாக அப்பியாசித்து காமபீடத்தில் தற்கால கௌஹாத்தியில் உக்ரதாரா என்ற பீடத்தை நிறுவியுள்ளார்.

ஆபத்துகளிலிருந்து பக்தர்களை மீட்பதால் உக்ரதாரா. வாக்கு வல்லமை அளிப்பதால் நீல சரஸ்வதி, ஆராதிப்பவர்களுக்கு அருளையும் ஆனந்தத்தையும் அளித்து மோட்சமடைய செய்வதால் ஏகஜடா. தாராவின் அருள் பெற்றவன் கற்பனை வளங்கள் பெருகி கவிதை இயற்றும் திறன் பெற்று எல்லா சாஸ்திரங்களிலும் அரிய ஆற்றல் பெற்று இறுதியில் சகல சித்திகளைப் பெற்று ஜீவன் முக்தியடைவான். தாரா மந்திரம் முதலில் புத்தியை தெளிவாக்கி பின் உச்ச நிலைக்கு கொண்டு செல்லும்.

ஆலயங்கள்:1. ஹிமாசலபிரதேஷ் வஜ்ரேஸ்வரி ஆலயம். 2. சக்தி பீடங்களில் தலைமை பீடமான காமாக்ய கோவில் இருக்கும் நீலாச்சலமலையில் உக்ரதார சன்னதி.

தாராதேவி நாமாக்கள் 30 ஐயும் உச்சாடனத்தில் தவறு இல்லாமல் ஆசாரத்துடன், பயபக்தியுடன் உச்சரித்து வந்தால் ஆற்றல்கள் பல வந்தடையும்.
ஓம் அனகாயை நம:
ஓம் ஆனந்தாயை நம:
ஓம் காலரூபாயை நம:
ஓம் காளிகாக்யாயை நம:
ஓம் கோர ரூபாயை நம:
ஓம் தரணி ரூபாயை நம:
ஓம் தரளாயை நம:
ஓம் தாராயை நம:
ஓம் தத்வஞான பராயை நம:
ஓம் தத்வஞான ப்ரதாயை நம:
ஓம் தாரணியை நம:
ஓம் தமோ ரூபாயை நம:
ஓம் த்ரிரூபாயை நம:
ஓம் பராயை நம:
ஓம் பயானகாயை நம:
ஓம் ப்ரஹ்மாணியை நம:
ஓம் பத்ரகாளியை நம:
ஓம் மகாசாத்வியை நம:
ஓம் மகாமாயாயை நம:
ஓம் மகாலயாயை நம:
ஓம் ரமணீயாயை நம:
ஓம் ரஜோ ரூபாயை நம:
ஓம் ரக்தாங்கியை நம:
ஓம் ரக்தவஸ்தராயை நம:
ஓம் ரக்தமாலா ப்ரோவிநாயை நம:
ஓம் ஸதவிரூபாயை நம:
ஓம் ஸர்வ ஸஜ்ஜன பாலிகாயை நம:
ஓம் சித்தி லக்ஷ்மீயை நம:
ஓம் ஜகத்வித்வம்ஸகாரிகாயை நம:
ஓம் ஜகத்வ்ருஷ்டி கரியை நம:

தாராதேவி மூலமந்திரத்தினால் முறைப்படி ஹோமம் செய்து வழிபட்டால் வாக்கு வன்மை, கவிதை எழுதும் ஆற்றல், போகயோகம், அரசு சன்மானம் ஆகியவை கிட்டும்.

#####

Read 15282 times Last modified on சனிக்கிழமை, 14 July 2018 15:58
More in this category: கமலாத்மிகா! »
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27046005
All
27046005
Your IP: 3.144.243.184
2024-04-20 04:57

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg