gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 13 July 2018 18:50

மாதங்கி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

#####


மாதங்கி!

சியமளா, ராஜசியாமளா, ராஜமாதங்கி, மீனாட்சி, சரஸ்வதி, கதம்பவனவாஸினி, மந்திரினி எனப்படுபவள். காமாட்சியின் மந்திரினியாக இருப்பவள். வீணையும் கிளியும் கொண்டவள். வாக்தேவி வடிவான இவள் ஞானமும் கல்வியும் தருபவள். உபாசகர்கள் உள்ளத்தில் பசுமையையும், குளிர்ச்சியையும் பெருக்கெடுத்து ஓடச் செய்பவள். இவளை கலை அரசி, கலைச் செல்வி, சங்கீத வினோதினி எனலாம்.

பிரளயகாலத்தில் உதித்த மாதங்க முனிவர் எங்கும் நீராய் நிறைந்திருப்பதால் நாரத மகரிஷி ஆலோசனை பேரில் திருவெண்காட்டில் மதங்கேசர் ஈசனை நோக்கி தவம் புரிய இருதயத்தில் ஸ்ரீமகாகணபதி தோன்றி அஷ்டாங்க யோக சித்திகளை அருள பரமேஸ்வரன் அம்பிகையுடன் காட்சி தர, அம்பிகை தனக்கு மகளாகப் பிறக்க வேண்ட, தான் சித்ஸ்வரூபிணி, உன் மகளாகப் பிறக்க முடியாது. என் ஸ்வரூபமான ஸ்ரீமந்திரிணீதேவி- மாதங்கி என மகளாகப் பிறந்து ஈஸ்வரை அடைவாள் என அருளினார். மாதங்கி முனிவரின் புத்திரியாக அவதாரம் எடுத்ததால் மாதங்கி என அழைக்கப்பட்டாள். மதங்க முனிவர் வேண்டுகோளுக்கிணங்க சித்திரை சுக்லபட்ச ஸப்தமி திதியில் ஸ்ரீமாதங்க தேவி பரமேஸ்வரன் திருமணம் நடைபெற்றது

விஷ்ணுவின் பரசுராமாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் மாதங்கி. இவள் வடமேற்கு திசையில் தோன்றியவள்.

சாரதா, சரஸ்வதி இவர்கள் மாதங்கியின் வேற்றுருவங்கள். மீனாட்சியின் இரத்தினமாக கருதப் படும் நல்ல மரகதக் கற்களை கையில் வைத்துக் கொண்டு ஒரு பௌர்ணமியில் ஆரம்பித்து மூன்றாவது பௌர்ணமி முடிய எல்லா இரவுகளிலும் அவளுடைய மந்திரத்தை ஜபித்து அந்த ரத்தினக் கல்லால் ஊமையின் நாக்கில் தடவினால் ஊமை பேசமுடியும். தொண்ணூறுக்கும் மேற்பட்ட அட்சரங்கள் கொண்ட அந்த மந்திரத்தை குறுக்கி ’ஓம் ஐம் மீனாட்சியை நம! சர்வலோக வசங்கர்யை நம! ஸ்வாஹா!” என ஜபிக்கலாம்.

மதுரை மீனாட்சி கோவில் ஸ்ரீசக்ர வடிவில் இருக்கின்றது அதன் நடிவில் பிந்துவில் மீனாட்சி அமர்ந்திருப்பதால் சிறந்த சியாமளா பீடம். சியாமளா வர்ணம் கருநீலம். ச்யாம்- பச்சை. மீனாட்சியை மனோன்மணி என தசமகாவித்தை கூறுவதால்-மணேன்மணி பீடம். முப்பெருஞ் சக்தி பீடங்களில் ஒன்று.

வரம்புக்குள் குறுகியிருக்கும் மனத்திற்கு நிர்க்குணம் ஆனந்தமளிக்காது. அப்படி தவறிப் போகும் ஆனந்தத்தை அளிக்கவே உருவ வர்ணனைகள் தோன்றியது. பிரம்மம் வரம்பற்றது. மனதாலும் உடலாலும் சொற்களினாலும் எழும் விவாதங்கள் எட்டமுடியாத உருவம் அடையக் கூடியது. பிரம்மம் எல்லாவற்றிலும் இருப்பதால் எல்லாவற்றிலும் என்பதில் உருவமும் அடங்கும். பிரமத்தின் எந்த பாவமும் பாகமும் பிரம்மமே. அதனால் பிரமத்தை உருவத்தில் இங்கு மீனாட்சியாக வழிபட்டால் மனதிற்கு இனிமையான வழியில் அவளின் சாயுஜ்ய நிலையை அடைவது எளிது.

தை அமாவாசையின் மறுநாளான பிரதமை முதல் நவமி வரை உள்ள ஒன்பது புனித தினங்களே சியாமளா நவராத்திரி (நான்கு நவராத்திரிகளில் ஒன்று). இந்தக் காலத்தில் இசை விழா நடத்தப்படும்.

ஸ்ரீராஜமாதங்கியை .தியானிப்பதால் எல்லாம் பெறக்கூடிய வாக்கு வல்லமை, பிறரை தன்வயமாக்கிக் கொள்ளும் சக்தி, பயமற்ற நிலை, பதட்டமில்லா செயல்படும் தன்மை, ஆராய்ந்து செயல்படும் குணம், தவறுகளை சரிசெய்யும் ஆற்றல், எதிரியை மடக்கி தன்னை முன்னிருத்தல் போன்ற நன்மைகள் ஏற்படும். ருது ஆகாத பெண்கள் ருது ஆவார்கள், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர். சோம்பல் துக்கம் பயம் மூன்றும் இல்லா நிலை ஏற்படும். இன்ப, நுண் மற்றும் இன்னிசைக் கலைகளில் வெற்றி எளிதில் கிட்டும்.

ஓம் ஐம் சுகப்ரியாயை வித்மஹே
க்லீம் காமேச்வர்யை தீமஹி
தன்னோ ச்யாமா ப்ரசோதயாத்.

மாதங்கியின் மூலமந்திரத்தை ஜபித்து யாகம் செபவருக்கு, மோட்சம், எதிலும் முதன்மையான இடம், உலக வசீகரணம், சாஸ்திர ஞானம், செல்வம், புகழ், ஆகியன கிடைக்கும்.

#####

Read 15810 times Last modified on சனிக்கிழமை, 14 July 2018 16:03
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27065968
All
27065968
Your IP: 18.191.211.66
2024-04-24 02:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg