Print this page
ஞாயிற்றுக்கிழமை, 03 May 2020 11:33

வயிரவி மந்திரம்!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி! !

#####

வயிரவி மந்திரம்!

1075. உயிர் எழுத்தான் பன்னிரண்டாம் எழுத்தான் ஐ என்பதால் உணர்த்தப்படுபவள் ஆதி பைரவி. பைரவி பீசத்தில் அ கரமாகிய பிரணவத்தையும் மாயையான ம என்பதையும் சேர்த்து ஓம் ஐம் என்று பதினான்கும் சொல் நிலையாய் விளங்கும் பதினாறு கலை முடிவு என செபித்தல் நலம்.

1076.. பதினான்கு எழுத்தாக உள்ள வயிர்வியே ஞானேந்திரிய அந்தகாரணங்கள் பதினான்கையும் சிவர்களுடன் பொருந்தி படைத்து காத்து துடைத்தல் முதலான செய்து சிந்தையான கமலத்தில் எழும் பெரிய சத்தி ஆகி முதலும் முடிவுமாக விளங்குபவள்.

1077. வயிரவியை வழிபடுவது நான்முகன், திருமால் உருத்திரன் ஆகிய மூவர் அழிகின்ற இயல்புடைய ஐம்பூதத்தால் ஆன உடலைப் பெற்ற அநாதியான ஆன்மாக்கள் அடையும் இன்பத்தை அடையாதரில்லை. ஆற்றல் பொருந்தியுள்ள திரிபுரையை வழிபட்ட நல்வினையை உடையவர் ஆவார்.

1078. புண்ணியனும் நந்தியும் தூய்மையானவனும் நாதத்திற்குத் தலைவனும் ஆன சிவன் விளாங்கும் முடியின் மீது வானராசி மண்டலச் சந்திரன் சுற்றும் வட்டத்தில் சூரியனும் சந்திடனும் சுற்றி வரும் வட்டம் முழுமையானால் அங்கு அக்கினி விளங்குவது அக்கினிகலை ஆகும், அக்கினி கலையை அறிந்து தியானிப்பவர் முழுமையான சிந்தையரான சிவம் ஆவர்.

1079. சிவபெருமானின் திருநந்தி சேவகனுடன் கயிலைமலையில் அனைத்துலகும் காப்பாற்றும் பெண் யானையைப்போல அம்மை வீற்றிருக்கின்றாள்.. திருவடிப் பேறு கருதி திருமுறைகளை நாளும் தொடர்ந்து சொல்பவர்க்கு அந்தம் ஆகிய இறைவனுடன் உறைந்து திரிபுரை அருள் செய்வாள்.

1080. குருமண்டலத்தில் நந்தி தியானித்திருப்பை அறிந்த பராசத்தி நாத வழியில் நேர்மையாக உயிர்களுக்கு உபதேசம் செய்து அருள்வாள். உபதேசிக்கப் பட்டவருக்கு சந்திர வட்டமான சோடச கலை பொருந்தி பேரொளி வடிவான் வயிரவியின் சூலம் வந்து உடம்பில் தோன்றி சோதியாய் மாறிடும்.

1081. துர்க்கை சூலத்தையும் மண்டை ஓட்டையும் கையிலே தாங்கியுள்ளாள். அவளுக்கு நான்கு கைகள். இரண்டு கைகளில் நாகபாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியிருப்பாள். திருமாலும் நான்முகனும் அறியாத வடிவுடைய சிவனுக்கு மேலான அங்கமாய் நிற்கும் மென்மையுடையவள் சூலினி துர்க்கை ஆவாள்.

1082. துர்க்கை மென்மையானவள். சிந்திற்கொடி போல் மேல் நோக்கியும் கிழ் நோக்கியும் படரும் தன்மையுள்ளவள். நெறி தவறுபவரை தண்டிப்பவள். கலைகளில் விளங்கும் அறிவை ஒன்றாகப் பெற்றவள். முருக்கம்பூ போன்ற சிவந்த நிறம் உடையவள். மணியின் ஒளி பொன்ற ஒளியை உடையவள். அவளது திருமேனி பலவகை மணிகளால் ஆன ஆடையை உடுப்பவள்.

1083. சந்திக்கும் பல கலைகள் இருக்கும் சந்திர மண்டலம் பல மணிகளால் இழைக்கப்பட்ட திருமுடியாகும். சொல்லப்படிகின்ற வானத்தை காதாக உடையவள். தோழியாய் இருப்பாள். ஒளியுடைய சூரியனையும் சந்திரனையும் விழிகளாய் உடையவள். பொன் போன்று ஒளிரும் ஒளியில் நிறைந்து விளங்குபவள்.

1084. சிரசில் விரிந்துள்ள எட்டு இதழ் தாமரையின் நடுவில் தெய்வத் தன்மையுடன் மனோன்மணியாக இருக்கின்றாள். அவளைச் சூழ்ந்து எட்டு கன்னியர் இருக்கின்றனர். ஒவ்வொரு சத்திக்கும் எட்டு எட்டு சத்திகள். அவர்கள் சத்தியைச் சூழ்ந்து தரிசித்து இருப்பர்.

1085. ஆராய்ந்து எடுத்த சிவப்பு வளை சங்கு சக்கரம் அணிகளை அணிந்து எட்டு திசைகளிலும் நிறைந்திருப்பவள். அண்டங்களையும் திசைகளையும் தாங்கி நிற்கும் திருவருட் செல்வி. தலையில் உள்ள சசிகர தளத்தில் பூசிக்க உரியவள்.

1086. வழிபாட்டிற்கு தேவையான நறுமணப் பொருள்களும் அழகிய மணமுள்ள மலர்களும் புதிய ஆடைகளும் நீண்ட தொலவிற்கு கேட்கும் இசை முழக்கமும் அரிய தலைவனின் திருவைந்தெழுத்தால் ஆன மந்திரமும் கூடிச் செய்யும் பூசையை ஏற்பவள் திரிபுரை ஆவாள்.

1087. காணும் பல தெய்வங்கள் அணியும் அணிகலன்கள் வெவ்வேறு அணிகளாய் இருக்கும் பொன்போல தேவியின் பேதமாய் தோன்றும் பல தெய்வங்கள் ஆகும். பெருமையாய் போற்றப்படும் சிவனும் நன்முகனும் திருமாலும் மற்ற தெய்வங்களாய் இருப்பது உஅலகத்திற்கு காரண்மான தேவியால்தான்

1088. எல்லா மந்திரங்களுக்கும் பொருப்பான சூட்சும ஓங்காரியை தியானிக்கும் சசிகரதளத்தில் வாயுவை வெளிப்படுத்துவதால் ஏற்படும் பூரண கும்பகத்தில் உள்ள காற்றை வெளியேற்றுவதால் அந்த பூரண கும்பகத்தில் இருக்கும் நாராயணி குருவானவர் நடுவே இருந்து சொல்லிய வேத உபநிடத்தின் முடிவாக இருக்கின்றாள்.

1089. மந்திரத்தைச் சொல்லுபவர் நடுவிரல் கீழ் உள்ள இறை இர்ண்டும் சிறு விரலில் உள்ள இறை நான்கும் சுட்டுவிரலில் உள்ள இறை நான்கும் ஆகியவற்றை சுற்றி பத்து எண்ணுவதை விட்டு மறையை மாற்றி நடுவிரலிருந்து சுட்டு விரல் எண்ணிப் பிறகு சிறுவிரல் இறை முடிய பத்து எண்ணுவது செந்தமிழ் முறையில் தேவியை வணங்குவதாகும் இது நந்தி எனக்கு உரைத்தது.

1090. சொல்லிய நவசத்திகளில் ஒன்றான மனோன்மணி முடியின்மேலும் மற்ற சத்திகளைத் தலையைச் சுற்றி பொருந்தும்படி எண்ணிப் உடலில் விளங்கும் எட்டு கலைகளை நந்தி மற்ற எட்டு கலைகளும் நிரம்பியதாய் உயிரில் விளங்கும்படி செய்தான்.

1091. உடலில் குழல் போல் இருக்கும் சுழுமுனையில் இருப்பவள் சத்தி. கருணைக் கண்ணுடன் உயிரில் மயக்கத்தைச் செய்யும் இருளை முற்றிலும் அகற்றும் குண்டலினியாக இருக்கின்றாள். மூலாதாரத்தின் மூலக்கனலில் ஏற்படும் மூல வாயுவுடன் சேர்ந்து ஒளி மண்டலத்தை உருவாக்கி திரும்புவளை நீ கண்டு கொள்வாய்.

1092. சொல்லப்படும் மந்திரத்தின் பொருளை உணர்ந்து சிரசின் மீது வீற்றிருக்கும் சத்திக்கு வணக்கம். மூங்கில் குழய் போன்றுள்ள சுழுமுனை வழி உச்சியில் பொருந்தி உயிர் அளிக்கும் ஆகுதியை ஏற்பாள். உச்சியின் நடுவே இருப்பது சிகா என்ற மந்திரம் என அறிவாய்.

1093. சிகையால் உணர்த்தப்பட்ட சசிகர தளத்தில் நிகழும் ஒளியை எல்ல இடத்திலும் பரவுவதாகக் கண்டு காமம் முதலிய எண்வகை இருள் பொருந்திய அங்கத்தை மாறும்படி செய்து மொத்தமாய் நின்ற சந்திரன் சூரியன் அக்கினி மண்டல் ஒளியாய் யோனி முதல் கபாலம் வரை இருப்பாள் என்பதை உணர்க.

1094. மனம் ஒளியைப் பெறுவதற்கு சிறுவிரலையும் அடுத்துள்ள மோதிர விரலையும் எதிர் வரிசையாய் மாற்றி மோதிர விரல் பொருந்தும்படி கட்டிப்பிடித்து கண்களை அமுக்கி நெரிப்பதில் நீண்ட நடுவிரல் பொருத்தத்தில் பார்வையைச் செலுத்தினால் ஒளியுண்டாகும் அதில் புகுவதற்கு முயல்க…

1095. பிராணன் வசப்படுவதற்கு சொல்லப்பட்ட மந்திரம் சொல்லவதற்கு அரிய ச காரத்தை முன்னிருத்தி அத்துடன் இ காரத்தைப் பிரித்துச் சேர்த்து மாத்திரையில் குறைந்த ம காரத்தை கூட்டிச் சொல்க.

1096. செபித்த சிவன் பிராணன்மேல் எழ சக்கரத்தால் சொன்ன சிவத்துடன் ய் ஆகிய ஆன்மாவும் உடன் உறையும்.. சுத்தமாயை இருக்கும்போது சங்கோசை தோன்றி விரிய அவ்வோசை நடுவில் திரிபுரை ஒளியுடன் விளங்குவாள்.

1097. நீல நிறம் உடையவள் வயிரவி. இரவில் இயங்கி இராசத, தாமத, சாத்வீகம் என்ற மூன்று குணங்கள் கொண்ட மனத்துள் வலியச் சென்று அருள் செய்பவள். தேவன் சிவபெருமானின் ஏவல் வழி நன்மை அருள்பவள் என்பதால் அவளை விரும்பி புகழுங்கள்.

1098. சிவன் அருளிய வேதம், இயங்குவன் நிற்பன ஆகிய உலகமிவற்றிற்கு முதலாகிய ஐம்பூதங்கள் நான்கு திசைகள் ஆலியன முன்று கண்களையுடைய தேவியின் வடிவமே. விரும்பும் இருள் வெளி தோன்றும் ஆன்மா ஆகிய ஒளிபிழம்பாய் இருந்து இவைகளுக்கு ஆற்றலை அளிப்பவள்.

1099 .குண்டலினி மூலாதாரத்தில் பொருந்தி அவளை சசிகர தளத்திற்கு கொண்டு வந்து ஞான சாத்திரங்களில் சொன்னவற்றை அனுபவமாய் பெற்றால் உடல் உயிர் சிவத் தன்மையை பெறும். அறியாமையுடைய உலகத்தில் பிறவிகள் ஏற்படா. சொற்களால் சொல்லமுடியா அழகுடைவளாகச் செய்வாள்.

1100 அழகான முடிமேல் இருப்பவள், விளங்கும் புருவத்தை உடையவள். கருங்குவளை ஒத்த கண்களை உடையவள். கண்களில் மகிழ்ச்சி ததும்ப ஒளியையுடைய ஆனந்த சுந்தரி. இவள மேன்மையான சிவத்தை வெளிப்படுத்தினாள்.

1101. சிவத்தை வெளிப்படச் செய்ததனால் உண்டாகும் பயனை உணர்த்த தெளிவை அளித்து மனத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தி கதிர்களுடன் கூடிய பேரொளிகொண்ட பெருமானை ஒளிமிகச் செய்து என்னை ஆட்கொண்டாள்

1102. சந்திர மண்டலத்தில் தலையின் உச்சியில் இருக்கும் திரிபுரையே பலகோடி சீவர்களிடம் பொருந்தி பலகோடி உயிர்களையும் தாங்கியவளே. பதினாறு கலைகளையும் தன்னிடம் வரிசையாக பொருந்தியவள் வானத்து சந்திரன், சூரியன் அக்கினி என மூன்றையும் படைத்தனள்.

1103. தையல் நாயகி சசிகர தளத்தில் துறவியர்க்கு அருள்பவள். அருள் பார்வையால் உலகத்தின் மயக்கத்தை அகற்றும் மனோன்மணி. அவளை செபித்து பணிந்து வழிபடுங்கள் உங்கள் பிறவிப்பிணி உங்களிவிட்டு நீங்கும்.

1104. சத்தியின் தோல்கள் மூங்கிலைப் போன்றவை. தேலுக்குமேல் இருக்கும் சந்திர மண்டலத்தில் பொருந்திய குழலைப் போன்ற சித்ரணி நாடியில் விளங்குபவள். இளம்பிறை என்ற காமக் கலையைத் தாஞ்கி இருப்பவள். தூய்மையான கதிர்களை சடைமுடிபோல் தந்த சூலினி என் உள்ளத்தின் இடப்பக்கம் இருக்கின்றாள்.

1105. இன்பத்தை அளிக்கும் மூலாதாரத்தில் வீற்றிருக்கும் வாலைப் பெண். ஒப்பில்லாத தலைவி. தன்னை இயக்குபவர் இல்லாதவள். என் மலச்சார்புகளை அகற்றி தனியன் ஆக்கினாள். மனம் அவள் மடியில் நன்றாக பாடும்படி செய்து என்னை விரும்பி நின்றாள்.

1106. இடைகலை பிங்களை சுழுமுனை என்ற மூன்றும் நடுவில் உள்ள நாளம் போன்ற சித்ரணி நாடியில் பொருந்திய வாலையான சத்தி பல சத்திகளுடன் விளங்குபவள். அவள் காலணியுடன் கூடிய திருவடி அசைவினால் உண்டாகும் ஒலியுடன் உள்ளத்தில் பொருந்தி அமைதியுடன் இருக்கின்றாள்.

1107. அவளுடன் உறங்கும் போது மனோன்மணி எழுந்துவந்து ஒலிக்கும் வளையலை அணிந்த கையால் என் கழுத்தை தழுவினாள். அவள் சத்தியை என் வாயில் இட்டாள். உறங்க வேண்டா என்ற உபாயத்தைச் சோல்லியருளினாள்.

1108. இப்படி உபாயத்தை எனக்கு அருளிய மனோன்மணி உள்ளத்தில் உண்டாகும் காமம் முதலிய பகைவர்களால் ஏற்படும் கேடுகளை நீக்கி இறைவனிடம் நீங்காத அனபு ஏற்படும்படி செய்தாள். நாய் போன்று அசையும் உள்ளத்தை நீக்கி சுழுமுனை நடுவில் ஆசையை அடக்கி வைத்து அஞ்சாதே என்று எனக்கு அபயம் உரைத்தாள்.

1109. அம் எனும் பிரண்வ ஒலியை எழச் செய்பவள். அரிய தவத்தால் அடையத் தக்கவள். செம்மையான் சொற்களைச் சொல்பவள். சிவந்த ஒளியில் விளங்குபவள். அவளை அடைக்கலமாக வழிபட்டவர்க்கு அஞ்சாதே எனும் பிரணவ நாதத்தை அளிக்கும் இறைவி மனோன்மணியே என்று இறைவன் உரைப்பார்.

1110. நல்விணை ஆற்றியவர்களால் ஆராயப் பெறும் பெண்மணி. கரிய நிறம் உடையவள். ஐந்தொழிலுக்கும் காரணமானவள், நாராயணின் தங்கை. உடல் உயிர் உலகு என்பனவற்றை ஒடுக்கும் கோரமானவள். மகிழ்வுடன் உள்ளத்தில் வீற்றிருக்கின்றாள்.

1111. அவள் நாதத்தை வெளிப்படுத்துவாள். என் மனத்தில் விளங்கியிருந்து நீண்டநாள் பொருந்தியிருந்தும் உச்சியிலே உலாவி உணர்ந்து கலந்து இருக்கும் சந்திர கலைகளைத் தலையில் உடையவள் ஆவாள்.

1112. நெற்றிகண் உள்ள அர்த்தசந்திர ஒளியில் சிறப்படையும் மதி மண்டலத்தில் இரு கொங்கைப் பகுதிக்குமேல் மங்கை தழுவியபடி இருப்பாள். மேருமலையில் உச்சியில் சிவத்துடன்கூட அசைந்தாடிக் கொண்டு படர்கின்ற கொடிபோல் அங்கு இருப்பாள்.

1113. சத்தி மனதில் இழை போன்ற வடிவினளாய் இருக்கின்றாள். உள்நாக்குப் பகுதிக்கு மேல் நான்கு விரல் அளவு பாதையில் புகுந்தால் அறிவான சிவத்துடன் கூடி ஒன்றாய் அருந்தக் கூத்தின் பயனை ஆதிசத்தி அடைந்தாள்.

1114. எல்லாவற்றிற்கும் காரணமான அவளுக்கு முறபட்டது இல்லை. அவளுக்கு என ஒரு காரணம் இல்லை. ஆனால் அவள் எல்லாவற்றிற்கும் காராணமானவள். சோதியாகவும் சோதியற்றும் உள்ள அவள் சுகம் பொருந்திய மேலான அழகுடையவள். இன்பத்தை அளிக்கும் மாது அவ/ள். சமாதியை அளிப்பவளும் அவள். அவளே மனோன்மணி. மங்கலத்தை அளித்து என் மனத்தில் பிரிவின்றி உள்ளாள்.

1115. பராசத்தி மனதில் பிரிவின்றி என்னை விரும்பி இருந்தாள். சிவ வடிவான தேவிக்கு வணக்கத்தைச் செலுத்தினேன். நான்முகன் படைப்பை ஆராய்ந்து உணரும் வல்லமை அளிக்கும் நிலை அதுவே. பற்றுகளை நீக்கி அருள்வாள் நூல் வாயிலாகப் பெற்ற அறிவால் சொல்லப்படும் பிதற்றல்களைப் போக்கினாள்.

1116. பேதை மனிதர்கள் உண்மையை அறிந்து கொள்ளாமல் வாதம் செய்து காலத்தை வீணாக்குகின்றனர். அவள் முயற்சியால் வீடு பே/ற்றைத் தரும் முழு முதல் தலைவி. மீன் போன்று இமையாது நாட்டம் உடைய அவள் ஒலியை உண்டாக்கும் செவ்வொளி. அருள்வழி நி/ற்கும் திருமுகம் உடையவள். மனத்துள் விளங்குபவள்.

1117. உள்ளம் இதயம் நெஞ்சம் என்ற முன்றினுள் அண்ணாக்குப் பகுதி தொடங்கி உச்சித் துளைக்குச் செல்லும் சிற்ய வழியில் நாதத்துடன் இருக்கும். எல்லாம் அளிக்க வல்ல அறிவான சிவத்தின் கருத்தின்படி தொழில் ஆற்றும் சுத்த மாயை மூலாதாரத்தில் அடங்கிய ஒளியாய் இருந்து படைத்தலில் கருத்துடன் இருக்கும் கன்னி ஆவாள்.

1118. சத்தி கன்னித்தன்மை கெடாதவள். காதலியாய் சிவத்துடன் பொருந்தி ஐவரைப் பெற்றாள். தூய சொல்லாகிய நாத வடிவுடையவள். வேதங்களால் புகழ்ந்து பேசப்படும் சிவனும் அங்கே உ:ள்ளான். இந்த மாயை இருளாகவும் இருந்தது வியப்பானதே.

1119. சத்தி இருள் மயமாய் இருப்பது ஞானவெளியில் இருப்பது சிவம். புண்ணியர்களுக்குப் பொருளாவது சிவத்துடன் கலந்த சிவபோகத்தில் விளையும் இன்பம். தெளிந்த சிந்தையால் நாதத்தை வணங்கினால் சிவம் நாதத்தை இடமாய் கொண்டு அருள் செய்யும்.

1120. பராசத்தி ஆதியாயும் அனாதியாயும் இருப்பவள். பாதி திருமேனியைக் கொண்டவள். எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக இருக்கின்ற நாத சத்தி அனைத்தையும் தன்னிடத்தே நிலைக்கச் செய்பவள், மனோன்மணி நித்திய சுமங்கலி. அவளை நினைக்கும் மனத்தில் நிறைந்து விரிந்து இருப்பாள்.

1121. சொல்லிய் வண்ணம் உயர்வான கலை பிரண்வமே என அறியாது மக்கள் உள்ளனர். சத்தி சாதியும் அவற்றால் விளையும் பேதமும் தத்துவங்களுமய் நிற்பவள்.. இதை ஆத்ம தலைவி எனக்கு கூறினாள்.

1122. உயிர்களின் தலைவி நல்ல முறையில் உயிர்களைப் பக்குவம் செய்யும் வீணாத் தண்டில் விருக்கும் வாகீசுவரி. நன்மைகளை அளீப்பவள் என அவளைத் தேவர்கள் புக்ழ்ந்து பேசும் தலைவி. சிவத்திற்குரிய சிவமங்கை. விரும்பி வழிபாடு செய்தால் வினைகள் போக்குபவள்.

1123. வினைப் பய்னைக் கொடுத்தவரது உள்ளத்தில் ஒளியாக எழுந்தருளி தன்னை அடைக்கலமாக அடைந்த வாக்கு உண்மைப் பொருளாக இருப்பவள். வழி வழியாக என்னை அடிமை ஆக்கியவள். ஈசனும் அவளுக்கு கணவணுமான சிவத்தை பார்க்கும்போது அநாதி ஆவான்.

1124. தனக்கு தேவி முதலாயும் பழமையாயும் ஒரு காரணம் இல்லாதவளாயும் எல்லாவற்றிற்கும் காரணமாயும் இருப்பவள். வாக்குக் கடவுளாய் இருந்து வேதியர்க்கு ஆரய்ச்சியைத் தந்தாள். நிலைத்து நின்ற பேரொளியாய் சிவத்திற்கு வடிவமாய் நிற்பவள். பாதிமேனியை அடைந்தவள். பன்னிரண்டு இராசிகளை உடைய சூரிய்ன்போல் ஒளியை உடையவள்.

#####

Read 2254 times
Login to post comments