Print this page
வெள்ளிக்கிழமை, 08 May 2020 09:45

புவனாபதி சக்கரம்!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!

#####

புவனாபதி சக்கரம்!

1307. க கரம் முதலிய ஐந்தெழுத்துக்களும் பொன் நிறமுடையவை. ஹ முதலிய ஆறு எழுத்துக்களும் செந்நிறம். ச காரம் நான்கு எழுத்துக்களும் வெண்ணிறம். சு காரத்தை ஆதியாக மூன்று பகுதியாக் உடைய் இம்மந்திரம் இம்மை மறுமைப் பய்ன் இரண்டையும் அளிக்கும்.

1308. ஆராய்ந்து நான் சொல்லுவது இம்மந்திர வடிவான புவனையைத் தவிர வேறு தெய்வம் இல்லை. ஒன்று சொல்வேன் கேட்பாயா. மேகம் போன்ற முக்கோணத்தில் மனம் நித்தியானந்த்தையும் அண்டத்தையும் அகண்டத்தையும் விரும்பின் அது சிவன் வடிவம் என்பதை அறிக.

1309. பராசத்தியே இறைவனுக்கு திருமேனி. அந்த திருமேனி வித்தையாகும். சித்தியையும் முத்தியையும் அளிப்பது. பராசத்தி. ஒருத்தியாய் இருந்தபோது சிவகுருவோடு பொருந்தி நிற்பதில் எட்டு சத்தியாய் திகழ்வாள்.

1310. எட்டு சத்திகளும் எட்டு அங்கங்களையுடைய யோகத்திற்கு அங்கமாகும்.. நாதாந்தம் கூடப்பெற்றவர்க்கு இந்த எட்டும் கலபித்தில் அமையும். விருப்பை விளைவித்து போகத்தில் செலுத்தும் வீரியமும் அற்று நீங்கியது பெண் இன்பத்தில் நாட்டம் உடைய கீழான உயிர்களுக்கு அடைய முடியாததாயிற்று.

1311. பயன் எல்லாம் தருவது இயந்திரத் தலைவன் புவனாபதி சக்கரத்தின் திருவடியாகும். அதை அறிந்து குருவிடமிருந்து மந்திரத்தை பெற்று உடம்பில் நிறுத்தி பயின்றால் ஆன்மா உடலின் மந்திர தத்துவமக நிலைக்க உறுப்புக்கள் சிவனின் அங்கங்களாக கருதி பிறவி வேர் நீங்குமாறு செப்புத் தகட்டில் அறுகோணம் அமைக்கவும்.

1312. அறுகோணத்தில் ஸ்ரீம் ஹரீம் என்ற பீஜங்களை எழுது. அந்தக் கோணம் ஆறின் உச்சியில் ஹிரீங்காரம் இட்டு எல்லாக் கோணங்களையும் சூழ அழகிய வட்டம் எழுதி பின்னர் அதன்மேல் பதினாறு உயிர் எழுத்துக்களை அ முதற் கொண்டு எழுது.

1313. செல்லப்பட்டபடி எழுதப்பட்ட இதழ்களில் நடுவில் உள்ள வெளியில் எட்டு ஹ எனும் எழுத்தையும் உ எனும் எழுத்தையும் சேர்த்து ஸ்ரீ எழுதுக. இதழ்களின் மேலே கிரோம் சிரோம் என்பவன வற்றை எழுதி அதன் இடப்பக்கத்தில் ஆம் கிரோம் என எழுதுக.

1314. சக்கரத்தின் மீது வலப்பக்கத்தின் மீது மாலையைப்போல் கிரோம் சிரோம் என எழுதி. குற்றம் இல்லாத ஹிரீம் என்ற பீசத்தை சக்கரத்தைச் சூழ்ந்து புவனாபதி சத்தியை பூசை செய்க.

1315. வழிபடும்போது புவனாபதியைக் காமம் முதலான குற்றங்கள் நீங்கிய உள்ளத்துடன் இருக்க வேண்டும். என வேண்டி அதற்குரிய மந்திரங்களை சிந்தித்து உயிர் கொடுத்து அங்கு நிறுத்தி ஒளி விளங்குமாறு தியானம் செய்யவும்.

1216. சிவந்த மேனியை உடைய செந்நிறப் பட்டிடை உடுத்தி கையில் அங்குசம் பாசம் அபய வரதத்தையும் கொண்டு திருமேனியில் அணிகலன்களையும் மணி அணிகளையும் அணிந்து தூய முடியுடைய வடிவுடன் இருப்பாள்.

1217. உடம்பைக் கடந்து ஓளி மண்டலத்தில் நின்று துதித்து முறைப்படி பூசை செய்து பால் சோற்றை மந்திரத்தால் செபித்து நான்கு திசைகளிலும் நாரதாய சுவாகா எனச் சொல்லி நிவேதித்து பிரசாதத்தை உண்க.

1218. படைக்கப்பட்ட படையலை உண்பதற்கு முன் தேவி உன்னுள் கலந்திருப்பதாகக் கண்டு இதய் கமலத்தில் பொருத்தி யாவராலும் கண்டறிய முடியாத புவனாபதியை மனத்துள் கொண்டு வழிபடுக. அவள் நீ நினைத்ததை அளிப்பாள்.

#####

Read 1958 times
Login to post comments