Print this page
செவ்வாய்க்கிழமை, 12 May 2020 16:43

சற்புத்திர மார்க்கம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பாரதம் எழுதிய பரூஉக்கர மாரதம் அச்சொடி
மதவலி மாங்கனி அரன்பால் வாங்கினோய்
ஈங்கினி எம்பால் எழுந்தருள் கரும்பாயிரங்கொள்
கள்வா அரும்பொருளே எம் ஐயா போற்றி!

#####

சற்புத்திர மார்க்கம்!

1495. சற்புத்திர மர்க்கம் கிரியை வழி நின்று யோகத்தை அளிப்பது. சொன்ன இரு மார்க்கங்களூம் கடந்து யோக சக்தியுடன் பொருந்தியிருத்தல் சன்மார்க்கத்தால் பெறும் ஞான்ம் ஆகுன்.

1496. பூசை செய்தல், பாராயணம் செய்தல் இறைவன் புகழைக் கூறி வணங்குதல், குறிபிட்ட சில மந்திரங்களைச் சொல்லி சிந்தித்தல், குற்றம் இல்லாத தவ முழக்கங்களை மேற்கொள்ளல், உண்மை பேசுதல், காமக் குரோதம் கோபம், மோகம் மதம் மாற்சரியம் என்ற பகைகளை நீக்குதல், அன்புடன் ஹம்ச பாவனை செய்தல் என்ற எட்டும் குற்றம் இல்லாத சற்புத்திர மார்க்கத்தின் உறுப்புகள்.

1497. வண்டானது தேனைச் சேர்க்கப் பல மலர்களை நாடி அலையும்.. வெள்ளை அன்னமானது தாமரையை விட்டுக் கவர்ச்சியான நீல மலரை அடையாது. கிரியையாளர் மணம் மிக்க மலர்களைப் பறித்து சிவபெருமானை வழிபடுவதைப் பார்த்தும் மற்றையோர் சிறு பொழுது சிவனை வழிபடாது பிறவழிச் சென்று கெடுகின்றனரே.

1498. இறைவன் திருவடி நிழலே பிறவிப் பெருங்கடலுக்கு அரிய கரை. பெரிய கரையாவது அரன் ஆணையின் வண்ணம் அமைவதே. திருவடியான கரைக்குப் போகின்ற நிலையான உயிர்களுக்கு ஒரே அரசாய் ஏழ் உலகிலும் இருப்பவன் இறைவன் ஆவான்.

1499. உள்ளப் போக்கில் உய்ர்ந்தும் திருவடியை வழிபட்டும் இன்பத்தை அனுபவித்தும் தழுவி மகிழ்ச்சியைப் பெற்று சிவபெருமானின் திருவடிக்கே விண்ணப்பம் செய்தால் வர இருக்கும் பிறவிக்கு அஞ்சி எடுத்த பிறவியை பயனுடையதாக்கும். இழிந்த நிலைக்கு அஞ்சி அவனைத் தாங்குபவனாக நினைப்பவர்க்கு அவன் தாங்குபவானக அமைவான்.

1500. சிவனை நான நின்று தொழுவேன். அப்பெருமானை என்றும் கிடந்து தொழுவேன். நீங்களும் அழகிய பரஞ்சோதியான இறைவனைப் பொருந்திய மலர் கொண்டு தொழுது வழிபடுங்கள். தொழும்போது சிவபெருமான் தொழுபவரின் சிந்தனையில் வெளிப்பட்டு அருள்வான்.

1501. வீடுபேற்றை அளிக்கவல்ல சற்புத்திர மார்க்கத்திற்கு வாயிலான தொண்டு நெறி பற்றி வினையின் வழியே வடிவம் பெற்று வாழும் உலக உயிர்களே கேட்பீர். கருவில் செலுத்தும் வினைக் கூட்டங்கள் நீங்க இறைவனை வணங்கி நாள்தோறும் இன்பமாக நிலைபெற்று இருப்பீர்.

#####

Read 2244 times
Login to post comments