Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:07

சதாசிவ லிங்கம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

சதாசிவ லிங்கம்!

1730. திருவருளுடன் கூடிய இரு திருவடிகள் பூமிக்கு மேலாக புகழ்ந்து பேசப்படும் பத்துக் கைகள் திசைகள் எல்லாம் பரவி எழுவதாக எங்கும் பார்க்கும் முகங்கள் ஐந்தாக சிவந்த கண்கள் பதினைந்தாக நல்ல ஒளியையுடைய் முத்தின் நி’றத்துடன் குடிய சதாசிவத்தைத் துதிப்பீராக.

1731. நான்முகன் திருமால் உருத்திரன் இவர்கட்கு மேலான மகேசன் இவர்களுக்கு மேலான ஐந்து முகங்களையுடைய சதாசிவம் விந்து நாதம் ஆதார சத்தியான குண்டலினி முடிவாக உள்ள சிவன் என்னும் யாவும் பொதுவாக சதாசிவம் எனப்படும்.

1732. சதாசிவம் என்னும் சத்தியிடம் நிவிருத்தி பிரட்டை,, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை ஆகிய கலைகள் இடம் பெறும். இந்த ஐந்து கலைகள் சார்பாக சிவசூரியன் எழும். அதன் ஒளிக்கதிர் உள்ளும் புறமும் சூழ அண்ட கோசம் நிறைந்து விளங்கும். அந்த ஓளியில் எட்டுத் திக்குகளும் மேல் கீழ் என்ற இரு திசைகளும் பொருந்தி ஒரே ஒளிமயமாய் விளங்கும்.

1733. பத்துத் திக்குகளுடன் கூடியது அண்ட கோசம். அதில் சிட்சை, கற்பகம், வியாகரணம், சந்தோபிசிதம், நிருத்தம், சோதிடம் என்னும் ஆறு சாத்திர அறிவும் உளது. அங்கு இருக்கும் யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களீன் அறிவும் உண்டு. அங்குப் பொருந்திய சரியை முதலிய மார்க்கங்களுடன் சமய அறிவும் உண்டு.

1734. சமய்த்தில் கீழ் அவத்தைகள் ஐந்து மேல் அவத்தைகள் ஐந்து உண்டு. சமயத்தில் கதிரவனின் பன்னிரண்டு இராசிகளும் உண்டு. சமய்த்தில் பெருமை உடைய சந்திரகலை பதினாறும் சொல்லப்பட்டிருக்கின்றது. அதில் காண்ப்படும் உருவத்துக்கும் காண்ப்படாத அருவத்துக்கும் இடையே சதாசிவ நிலை இருக்கும்.

1735. சதாசிவப் பெருமானுக்கு உச்சி, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்குப் பக்கம் உள்ள முகங்கள், உச்சிமுதல் முறையே வெண்பளிங்கு போன்றும் செவ்வரத்த மலரைப் போன்றும் பால் போன்றும் உள்ள இவ்வைந்து முகங்களும் எனக்கு அருள் செய்தன.

1736. சதாசிவத்திற்கு ஈசானம் முதலிய் ஐந்து முகங்கள். கண்கள் பதினைந்து, கைகள் பத்து. அவற்றில் பத்து வகைப் படைகள். இத்தகைய சதாசிவம் என் மனத்துள் புகுந்து நிறைந்து விளங்குகின்றான்.

1737. சிவசத்தி பூமியாகும். சதாசிவம் வானக் கூறாய்ப் பூமிக்கு மேலும் கீழும் பரவியுள்ள அண்ட கோள்களாகும். சத்தியும் சிவமும் மிக்குள்ள நிலைப் பெருளும் இயங்கும் பொருள் யாவும் சத்தி வடிவம். சதாசிவம் அருவம் ஆகும். இவ்வா/று சத்தியும் சிவமும் பொருந்திய தத்துவங்கள் முப்பத்தாறு ஆகும்.

1738. தத்துவம் என்பது அருவம் ஆகும். அது சரம் அசரமாய் விரிந்து நிற்கும் போது உருவம் ஆகும். உருவமாய் விரிந்தபோது சுகத்தின் விளக்கம் ஆகும். இவை அனைத்தும் எல்லாமாக விளங்கும் தத்துவம் எனப்படுவது சதாசிவமே.

1739. உள்ளத்தில் பொருந்திய சதாசிவமானவனைத் துதியுங்கள். வேறு வகையாகக் கூறும் நூல்களால் அறியப்படாமல் கடந்து விளங்குவான். தாம் மேல் ஏறுவதற்காகப் புகழும் தேவருடன் மாறுபட்டு நிற்பான். அத்தகைய இயல்புடையவன் என் மனத்தில் புகுந்து விள்ங்கினான்.

1740. கரிய நிறக் கழுத்தும், வலக்கையில் கொண்ட மழு என்ற ஆயுதமும் சுருண்ட சடையில் ஒளிரும் பிறைச்சந்திரனும் அருள் பொழியும் சிந்தையுடைய எம் ஆதியாகிய சதாசிவத்தை தெளிவுடைய என் உள்ளத்தில் தெளிந்திருந்தேன்.

1741. சீவர்களுக்கு அருள் செய்வதற்காகச் சத்தி நிற்கும் ஐந்து முகங்களைப் பற்றிக் கூறினால் வடதிசை நோக்கிய வாமதேவ முகம் சிறந்தது. இது சொல் இல்லாதது. மௌனமாக விளங்கும். கிழக்கு நோக்கிய தத்புருடமுகம் உடலில் உள்ள தத்துவங்களை இயக்குவது. சிரத்தைப் போன்றது. தெற்கு நோக்கிய அகோரம் தலையின் முடியில் வடகீழ்த்திசை நோக்கி விளங்குவது ஈசான முகம்.

1742. நாண் போனற ஈசானத்தைத் தலையின் நடுவில் சுட்ட வேண்டும். நாணுவின் தற்புருடத்தை முகத்தில் சுட்ட வேண்டும். காணும் அகோரத்தை இதயத்தில் சுட்ட வேண்டும். மாட்சிமையுடைய வாமத்தைக் குறியில் பொருந்த்த வேண்டும். சத்தியோசத்தை நல்ல அடிகளில் பதிக்க வேண்டும்.

1743. இதயம். தலை, முடி, கவசம், கண் ஆகியவை அங்கங்களாகும். இவற்றைக் குறிக்கின்ற மந்திரங்கள் வஞ்சனையற்ற சீவர்களுக்கு அறிவு விளக்கம் தரும். சுத்த மாயை, இவற்றின் நிறம் பச்சை, உடல் எல்லாம் ஒளி மயமானபோது சிவந்த ஒளியில் குண்டலினி சத்தி மின் ஒளிபோன்று விளங்குவாள். சதாசிவத்திடம் உள்ள பத்துப் படைக்கருவிகளும் உதய் சூரியனைப் போன்று ஒளி மயமாய் விளங்கும்.,

1744. இருதய மந்திரம் இறைவனுக்கு ஞான சத்தியாகும். சிரசு மந்திரம் வானத்தில் விளங்கும் பராசக்தி யாகும்.. சிகா மந்திரம் ஆதி சத்தியாம். அழகுடைய கவச மந்திரம் பல நிறங்களையுடைய இச்சா சத்தியாகும். நேத்திரம் கிரியா சத்தியாம்.

1745. குண்டலினி சக்தி நாற்கோண்மான மூலாதாரத்தில் உள்ளபோது சலதாரையை நோக்கியதாக உள்ளது. குண்டலினி கழுத்தை அடைந்தபோது உறக்க நிலை ஏற்படும். அது நெற்றியை அடைந்தபோது நீரோட்டம் போன்ற உணர்வாய் விளங்கும். இப்படி ஓலி வடிவாய் விளங்கும் சத்தி வடிவே சதாசிவம்.

1746. பெருமையுடைய சதாசிவத்தை எவ்வ்வளவு நேரம் தொழுதாலும் அவர் பஞசப் பிரம்மாகவே விளங்குவார். அவர் மூலவாயுவாய் எழுந்து ஆதாரங்கலை எல்லாம் கடந்து ஊர்த்துவ சக்கர தளத்தின் மீது சென்றபோது ஒன்பது நிலைக்ளிலும் பொருந்தி விளங்குவார்.

1747. உடம்பின் உள்ளும் அதைக் கடந்தும் உயிருடன் உடனாய்ப் பொருந்தியிருப்பது எப்போதும் எம் இறைவனுக்கு இயல்பு ஆகும். அந்த உணர்வு உண்டான போது சிவனின் திருவடியான சூரிய சந்திர கலையில் திருந்தித் தலைக்குமேல் செல்ல என் உள்ளத்துள் தியானித்து நின்று தொழுதேன்.

1748. உலகு முழுவதும் ஒளிப் பொருளானாய் விளங்கும் பரசிவத்தை அவன் அருளால் உணர்ந்தேன். அப்பொருமானைச் சீவர்களாகிய நாம் உய்யும் படி பூமி தத்துவத்திற்கும் கொண்டு வந்தேன். எனது மனம் என்ற கோவிலில் புனிதனான இறைவனைக் கூடினேன். அத்தூயமையே உருவாய் உள்ளவன் நாத வடிவாய்க் காட்சி தந்தான். சிவக்கதிரவனைப் பாட்டால் நான் பணிய அவன் ஒளியால் என்னுடன் கூடியிருந்தான்.

1749. அக்கினி மண்டலம் கதிரவன் மண்டலம் திங்கள் மண்டலம் என்பனவற்றுள் அக்கினி ஒளியுண்டாக ஒன்பது பேதத்தில் நடுவில் உள்ள சதாசிவம் பதினான்கு உலகங்களையும் தாங்கி நிற்கும். அந்தச் சதாசிவமே ஆதியாகவும் அந்தமாகவும் உடலில் சந்திர மண்டலம் விளங்க உதவும்.

1750. இயங்கும் ஒளியின் உடம்பு சிவலிங்கமாய்த் திகழும். அந்த உடம்பே சதாசிவமாய் அமையும். அந்த உடம்பே சதாசிவம் பொருந்திய சிவானந்த நிலையாகும். அந்த உடம்பே எல்லாவற்றுக்கும் மேலான சிவமாகும்.

1751. மேதா கலையான அகரத்தை சிவம் என்று எவரும் அறியமாட்டார்.. உகாரத்தால் குறிக்கப்படும் சத்தி எல்லாப் பொருளிடத்தும் கலந்து நிற்கும். இத்தகைய சிவமும் சத்தியும் பொருந்தி உலகமாய் இச்சிவசத்தி தலையைத் தாண்டியபோது நாத ஒலி ஏற்படுமாறு செய்தது.

1752. சதாசிவ லிங்கத்துக்கு பீடம் ஓங்காரம். இலிங்கத்தின் நல்ல கண்டம் மகாரம்.. இலிங்கத்தின் வட்டமாகிய பகுதி உகாரம். சிவலிங்கத்தின் மேற்பகுதி அகாரம். விந்து, நாதம் ஆகும்.

#####

Read 2564 times
Login to post comments