Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:38

சிவன்! பசு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

#####

சிவன்!

2011. உடம்பில் பொருந்திய சிவனின் வடிவை அளவிட்டுக் கூரினால் பசுவின் மயிர் ஒன்றை நூறாகப் பிளந்து அதனுள் பொருந்திய ஒன்றை ஆயிரம் பகுதியாக்கினால் உயிரின் வடிவம் பசுமயிரை ஓர் இலட்சம் கூறிட்டதற்குச் சமம்.

2012 எம் பெருமான் மற்றத் தேவர்களைவிடப் பெருமையுடையவன். ஆயி9னும் தன் எளிவந்த கருணையால் உடலுள் உயிராய் கலந்து விளங்கும் தன்மை கொண்டவன். தேவர்களால் அளவிட்டு அறிய முடியாத தேவ தேவன். ஆயினும் ஆன்மா தான் செய்யும் தவத்தின் அளவாகத் தானே அறியும்.

2013. யோகத்தை மேற்கொண்டு தெளிந்த குரு உபதேசம் செய்ய யோகத்தில் பொருந்திப் பயில்வதற்குள்ள நல்ல பண்புகள் இல்லாதவராயினும் பழைய வாசனையால பயின்ற சீவன் பின்பு அனுபவத்தை தன்னுள் கொண்டு சிவ வடிவம் பெறுவர்.

2014. உயிர் மாயையின் காரணமான துன்பங்களில் தோய்ந்து தானும் அதன் வயமாகும். ஞாணமே வடிவாய் உள்ள குருவின் அருளால் சேதனத்தில் தூண்ட மாயா உபாத ஒன்றிலும் பொருந்தாது பயிற்சி வசத்தால் துரிய நிலையில் புகுந்து ஞானமே வடிவாக விளங்கும்.

#####

பசு!

2015. வேதம் ஆகமம் என்பனவற்றை நிரம்பக் கற்ற உயிர்கள் பொருள் அனுபவம் இன்றிப் புலம்பித் திரிந்தாலும் அரசு செல்வாக்கைப் பெற்ற உயிர்கள் தமக்குரிய விருதுகள் கட்டிக் கொண்ட தெரிந்தவர் போன்று திரிந்தாலும் முதிர்ந்த அனுபவம் உடையவரின் சிறு ஞானமே உலகத்துக்குப் பயன் அளிக்கும். மற்றையோரின் வாய் வேதாந்தமானது வறட்டுப் பசுவைப் போல உலகுக்குப் பயன்படாது.

2016. சுவாதிட்டானம் என்ற கொல்லையின் மனத்தை வைத்துக் காமச் செயலில் ஈடுபடும் உயிர்கள் என்ன செய்யக்கூடும். காம எல்லையைக் கடக்கச் செய்து அகண்டமான சிவபெருமானின் திருவடியில் சேர்த்துத் திருவருளைத் துய்க்கும் ஆற்றலை உண்டாக்கிச் சிவஞானியர் கூட்டத்தில் சேர்ந்து மதித்தபின் அன்றி அந்தப் பசுக்கள் கொல்லையில் வைத்த உள்ளத்திஅ மாற்றிக் கொள்ள மாட்டார்.

#####

Read 1611 times
Login to post comments