Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:40

ஐந்திரியம் அடக்கும் அருமை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#####

ஐந்திரியம் அடக்கும் அருமை!

2023. மிகுந்த மதம் பொருந்திய ஐந்து பொறிகளான யானைகள் உள்ளன. அவை உடலில் களிப்பைத் தரும் சந்திரமண்டலமான சுட்டுத் தறியில் அணைந்து பொருந்துவதில்லை. இவற்றை அடக்க முயலும் ஆன்மாவாகிய பாகனும் இளைத்து ஐம்பொறிகளின் வல்லமையும் குறைந்த பின்னர் யோக நெறியால் திருந்துவது என்பதை நான் அறியவில்லை.

2024. நல்ல கருத்துடைய நூல்களைப் பலகாலம் கற்றறிந்து பிராணனின் இயக்கத்தை ஆன்மா என்ற பாகன் மாற்றித் திருத்தினாலும் வேகமாகப் பாய்கின்ற பொறிகளாகிய குதிரைகள் திகைத்து நிற்குமே தவிர செலுத்தியவுடன் பாய்ந்து செல்ல பிடரியில் அமர்ந்து நன்கு பாகன் தூண்டினாலும் அக்குதிரைகள் முன்பு போன வழியில் செல்லாது.

2025. ஐந்து பூதங்களாகிய இடங்கள் ஐந்து ஞானேந்திரியங்களான பறவைகள் ஐந்து. அவை சென்று பற்றும் தன் மாத்திரைகாகிய புலன்கள் ஐந்து கன்மேந்திரியங்கள் ஐந்து அவற்றின் செயல்களும் ஐந்து மாயையான குலம் ஒன்று அறிவு என்னும் கோலைக் கொண்டு அவற்றை மேய்ப்பவன் ஒருவ்ன் உண்டு. அவன் வருந்திப்போகும் வழி உடம்புள் ஒன்பதாகும்.

2026. உடலான காட்டில் பொறிகளான சிங்கங்கள் ஐந்து உள்ளன. அந்த ஐந்தும் புறம் சென்று புறப் பொருளை பற்றி அகம் வந்து சேரும். விஷயங்களைப் பற்றி நிற்கும் மனத்தையும் விஷயங்களில் ஈடுபடும் கருவிகளையும் செல்ல ஒட்டாது அடக்கி நிறுத்திவிட்டால் தவறாமல் இறைவனை அடையவும் கூடும்.

2027. ஐந்து பொறிகளாகிய அமைச்சரும் அவர்களுக்குத் தொண்ணூற்றாறு தத்துவங்கள் ஆகிய எவலாளரும் இருக்கின்றனர்.. இந்த அமைச்சர் ஐவரும் அவர் வழி வந்த தத்துவக் கூட்டங்கள் ஆகிய பிள்ளைகளும் நம்மைக் ஆளக் கருதுவார்கள். அந்த ஐவரும் ஐவகையான உணர்வுடன் செயல்பட்டால் நம்மால் அந்த ஐவருக்கும் காணிக்கை தந்து சமாளிக்க முடியாது.

2028. நாள்தோறும் பேரொளியாய் ஒளிரும் சிவத்தைத் துதிக்கும் வல்லமை உடையவன் அல்லேன். திருவருள் அம்மையும் அங்கிருப்பதைச் சொல்ல வல்லேன் அல்லேன். ஐம்பொறிகளையும் அவற்ரின் வயப்பட்டு அலையும் உள்ளத்தையும் வெல்லும் ஆற்றல் உடையேன் அல்லேன். கொல்வதற்குக் கொண்டு போகும் குதிரைமேல் எறிய்வனைப் போல் ஆனேன்.

2029. இந்த உடல் அளவிடமுடியாத தொளைகளை உடையதாகும். மனம் எண்ணில்லாத தொளைகளையுடைய உடல் இன்பத்தைத் தேடி ஓடினால் குற்றம் உண்டாகும். உயிரானது மனவழிச் சென்று கணக்கற்ற தொளைகளையுடைய உடல் இன்பத்தை நாடாமல் இருக்குமானால் சிந்தனையற்ற் உள்ளத்தில் ஓர் இன்பம் ஏற்படும்.

2030. கடலால் சூழப்பட்ட உலகத்தில் உள்ள மக்களுக்கு அவரவர் புண்ணிய பாவத்துக்கு ஏற்ப வாழ்வானது அமையும். சிவத்தை துதித்துப் பெருமையுடைய வல்லமை பெற்றவர்க்குப் பழமையான வான் உலகம் அமையும். சந்திர மண்டல வல்லமைக்கு ஏற்ப மக்கள் வாழ்க்கை உள்ளது. எண் பெருஞ் சித்திகளை அடைவதே அழகான நிதியின் பெருவ்ன்மையகும்

#####

Read 1646 times Last modified on சனிக்கிழமை, 20 June 2020 15:24
Login to post comments