Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:42

ஐந்து இந்திரியம் அடங்கும் முறைமை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி! !

#####

ஐந்து இந்திரியம் அடங்கும் முறைமை!

2031. சந்திரமண்டலமான குளம் ஒரு முழம் அகலமும் அரை முழ ஆழமும் உடையது. வட்ட வடிவமாய் அமைந்த அந்தக் குளத்தில் விஷய வாசனைகளாக மீன்கள் வாழ்கின்றன. சிவபெருமானை வலைஞன் வலையைக் கொண்டு வீசினான். அந்த வகையில் மீன்கள் அகப்பட்டுக் கொண்டன. யாம் இனிமேல் பிறவித் துன்பத்தை நீங்கினோம்.

2032. அறிவு நீங்கப் பெற்றுக் கிடக்கும் உடலில் கிளர்ந்து எழும் பொறிகளை அடக்க வல்லவனே தேவன் ஆவான். உடம்பில் அருந்துதல் பொருந்துதல் என்னும் இரண்டு இன்பங்களிலும் மனம் பொருந்தி நிற்கும் வரையும் உடம்பில் மூச்சின் இயக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

2033. ஐந்து பொறிகளையும் அடக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்பவர்கள் அறிவற்றவர்கள். அங்ஙனம் ஐந்தையும் அடக்கிய தேவர்களும் இல்லை. ஐந்தையும் அடக்கிவிட்டால் அரிவற்ற சடப்பொருளாகும் என எண்ணி ஐந்தையும் அடக்காமல் இயங்கச் செய்யும் உபாயத்தை அறிந்து கொண்டேன்.

2034. ஐம்பொறிகளாகிய யானைகள் பிளிறிக் கொண்டு எழுகின்றன. அவற்றை அடக்க அறிவாகிய கோட்டையை வைத்தேன். ஆனால் அவை அந்தக் கோட்டையினின்று தப்பி ஓடி வெளியில் கேடு தரும் புலன்களில் மண்டி உடல் என்னும் கரும்பை அழித்துக் கொண்டு அலைகின்றன.

2035 .பிரணவமான ஐந்தில் ஒடுங்கினால் நாதந்தமான அகன்ற இடம் அமையும். இதுவே மேலான தவம் ஆகும். இதுவே சிவபதமும் ஆகும். இதில் ஒடுங்கி நின்றவரே அருள் உடையவர் ஆவார்.

2036. நிறையப் பேசுவதால் என்ன பயன். கானல் நீரைப் போன்று உலக்த்தை நினைத்தலால் என்ன பயன். பரவலாக விரிந்திருக்கும் பொருள்களுக்கெல்லாம் வித்தாக உள்ளம் இருக்கின்றது. உலகத்துப் பொருளை மிகுதியாய் நினைத்தால் உலகத்தைப் பற்றிய சிந்தனை பெருகி விடும். அவற்றை நினையாமல் சிவத்தை நினையில் உல்கப் பொருள் அங்கு சுருங்கி விடும். இதை ஆராய்ந்து தெரிபவர்க்கு இவ்வளவு தான் உண்மைப் பொருள் ஆகும்.

2037. பாசவழி நீங்கிப் பெருமை பெற்ற சீவன் பொறிவழிச் சென்று கெடுவதை அறிந்து இனிய உயிர்களுக்காக அடியார் கூட்டத்தை வைத்து அவரொடு பொருந்தியிருக்கும் இறைவனிடம் பாசத்தினின்று விடுபட்ட உள்ளத்தினது ஐவகைச் சேட்டைகளையும் ஒடுங்கி நிற்க ஐம்பொறியாகிய தொளை வழிச் சென்றது உச்சித் துளையின் இன்பத்தைப் பெற்று ஓயந்திருக்கும்.

2038. ஐம்பூதங்களின் தூலத்தன்மை மாறிச் சூக்குமமான ஐவகை ஒளியாய்ச் சார்ந்து விளங்கும் மேல் முகமான சகசிரதளமான தறியில் கட்டப்பெறும் பேற்றை அடைவாயாக. ஆனந்த சத்தி உன்னிடம் பதித்தால் இதுவே முடிவானது என்று தலையின்மேல் குடிக் கொள்வாயாக. இதுதான் பழமையான நெறியாகும்.

2039. எல்லா உயிர் வகையிலும் பொருந்தி இயக்கும் சிவத்தை நாள்தோறும் தியானைப்பதால் எல்லாப் பொருளிடத்தும் போய்ப் பற்றும் மனத்தை மிகவும் மெதுவாக அடக்கித் தலையில் உள்ள இடப்பாகமான வடக்கும் வலப்பாகமான தெற்கும் வளர்ந்து மனக் கோயிலாகப் பொருந்தும்.

2040. முன் சொன்ன சாதனையில் சில நாழிகைகள் சில நாள்கள் பின்பு பல நாள்கள் போயின். அதனால் உல்கப் பொருள் எல்லாம் நீரின் மீது எழுதப்பட்ட எழுத்தைப் போன்று அழியும் தன்மையவாய்த் தோன்றின. இவ்வகையே புலன்களின் வழிச் செல்லும் விருப்பத்தை விரைவாய் விட்டு விடுங்கள் பின் மலை போன்ற துன்பம் வந்தாலும் தாங்க இயலும்.

2041. சகசிர தளத்தில் விளங்குபவன் சிவன். அப்பெருமானின் திருமேனியை மனத்தில் பொருந்த்தி ஐம்புலன்கள் செல்வதினின்றும் அறிவால் மீட்டு வணங்குக. நான்கு பக்கங்களுக்குப் பின்பு எல்லாவற்றிற்கும் தலைவனை அமுதம்போல் சுரக்கும் உள்ளத்தில் ஒடுங்கி இன்பம் அடையலாம்.

2042. உடம்புள் பொருந்திய உள்ளத்தால் உடலை அரித்துத் தின்கின்ற ஐம்பொறிகளாகிய கள்வரை யாரும் அறியவில்லை. நகைக்கும்படி உலகச் செய்திகள் சிலவற்றை பேசிக் கொண்டிருந்தால் உய்ர்ந்து விளங்கும் அண்டகோசம் கடுமையான இருளால் சூழப்பட்டு எல்லையாகவேதான் விளங்கும்.

2043. ஐம்பொறிகள் அடங்கி விட்டால் விட்டு விட வேண்டியது எதுவும் இல்லை. உள்ளத்தில் பொருந்தியிருக்கும் இறைவனை இயல்பான முறையில் வணங்குங்கள். இல்லையானால் ஐம்பொறி விருப்பத்தில் உண்டான பொய்யையே பொருந்தும் புலன்கள் ஐந்து பக்கங்களிலும் வெளியில் கவர இருக்கின்றன.

#####

Read 1648 times
Login to post comments