gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
சனிக்கிழமை, 20 June 2020 12:49

இதோப தேசம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!

#####

இதோப தேசம்!

2102. இறைவனை மறக்கின்ற இவ்வுலக்த்தில் நிலையற்றது உடல். ஆதலால் இறக்கும் காலத்தும் இறைவனை வணங்குங்கள். வாழ்கின்றபோது அலைந்து நிலை கலங்கி அமையும் துன்பங்கள் எல்லாம் தீர்வதற்காக மேலான சிவ நெறியை மனத்தில் கொள்ளுங்கள்.

2103. முடிந்த அளாவு சிவபெருமானிடம் மனத்தைச் செலுத்துங்கள். முடிந்த அளவில் உண்மைப் பொருளான சிவத்தை எடுத்துக் கூறுங்கள். சிலர் இறைவன் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவன் எங்கும் இருக்கின்றான். ஆதலால் சிவநெறியைத் தேடி அடையுங்கள்.

2104. குலம் ஒன்றே இறைவ்ன் ஒருவன்தான். நல்லவனவற்றை நினையுங்கள் இய்மன் உங்களை நாடி வரமாட்டான். நீங்கள் வெட்கம் அடையாமல் போய்ப்புகும் கதி வேறில்லை. மனதில் இறைவன் எண்ணம் நின்று நிலைபெற அவனை நினைத்து உய்யுங்கள்.

2105. இறைவன் அனைவரும் வணங்கும் கயிலை மலையில் விளங்கும் பேரொளி வடிவானவன். தலையின் நாற்புறமும் விளங்கும் சத்தியோசதம், வாம தேவம், அகோரம், தத்புருடம் என்னும் நான்கு முகங்களுக்கும் நடுவேயுள்ள ஈசான முகத்தினன். நம்பத் தகுந்தவன். உள்ளே போகும் வெளியே வரும் மூச்சுகளை உடைய உடலைப் பற்றி நின்று கூற்றுவனைக் காய்ந்தவன். இத்தகைய சிவனைத் துதித்து நின்று உய்தி பெறுங்கள்.

2106. இந்த உடலை நீத்து இனி ஓர் உடலில் புகுந்து பிறவாதபடி உய்ந்து போகும் நெறியை விரும்புங்கள். எப்போது இவ்வுடல் நமக்கு வந்தது என்று அக்காலத்தை எண்ணி ஆராய்ந்தால் இறைவனின் அருளைப் பெறலாம்,

2107. சீவரின் விருப்பம் செல்கின்ற முறையில் உடனாகும் பொருளானவன் சிவன். அவன் சீவர் பக்குவம் ஆகின்ற காலத்தை அறிந்து இன்பம் அளிப்பவனாகவும் விளங்குகிறான். எனவே இறக்கும் காலத்தும் அவனையே நினையுங்கள் அப்போது அந்தப் பரம்பொருள் பிறவிக் கடலை நீந்தி அக்கரை சேர உதவியாயிருப்பான்.

2108. உடலை விட்டுப் பிரிய இருக்கின்ற இச்சீவனை இதனுள் வாழ்ந்த பயனை அடைய வேண்டின் சாகின்ற போதேனும் சிவனைத் துதியுங்கள். அதனால் சிறப்புடன் சிவநெறியும் தானே வந்து அடையும். பின் பிறப்பு இல்லாத பெரிய உலகத்தை அடையலாம். சாயுச்சியபதம் கிட்டும்.

2109. அடியவர் கூட்டத்துடன் கூடி நின்றும் தனித்து நின்றும் வணங்கி எம் இறைவனின் உடலான பாசறையுள் நின்று அவனது திருவடிகளை வணங்குங்கள். கண்ணாடி போன்ற முகத்தின் முன் உள்ள ஒளியில் நிலைபெற்று அறிவால் தொழுபவர்க்கு கன்றையுடைய பசுவானது பாலைச் சொரிவதுப் போல சிவ ஒளி உயிரிடம் பெருகி நிற்கும்.

2110. உடம்பை விட்டுச் சிவன் நிராதாரம் செல்லும் போது பிரமரந்திரத்தின் நடுவே நின்று சிவனின் விந்து நாதமாகிய திருவடியை வணங்குங்கள். வலிய வினைகள் யாவும் கெடும். அழியாப் புகழை உடைய இறைவன் தேடிவந்து உங்களை தேவர்களுடன் கூட்டி இறவாத பெரு நெறியை அடையும்படி செய்வான்.

2111. காளை ஊர்தியை உடையவனே. சிவஒளிக்கு ஒளியாய் விளங்குபவனே. எம்மை இய்க்கி நடத்துபவனே எனக் கூறி திருநீற்றை அணிந்த அடியார் தேவரைப் போன்றவர். கங்கை அணிந்த சிவந்த சடையை உடைய சிவபெருமானின் விந்து நாதமான திருவடிகளைத் தனியாய் இருந்து தியானிப்பவர்க்கு வினைகள் இல்லை.

2112. ஓயாமல் பிறவியில் பொருந்தி நின்று துன்பம் தரும் பாசத்தில் உழன்று இருப்பவரே. எமது இறைவனை நாடி இன்பத்தை அடையுங்கள். அன்பைச் செலுத்தி தவத்தைச் செய்யுங்கள். அதனால் உண்மை ஞானம் பெற்று இறைமைக் குணத்தை அடைவீர்.

2113. பிறவித் துன்பத்தை போக்கிக் கொள்ள நினைப்பவர்க்கு மேற்கொள்ளத் தக்க உண்மையான தவம் உள்ளது. அடையத் தக்க திருவடியும் உள்ளது. அதனால் கிட்டும் உண்மை நெறியும் ஒன்று உள்ளது.

2114. மூல வாயுவை மேலெழுப்பி அதனுடன் போய் மதி மண்டலத்தை அடைந்தவர்க்கு அக்கினி வடிவான சிவன் இன்பத்தை தரும். அவ்வாறு சேராமல் பிரிந்தவர்க்குத் துன்பம் தருவதான பிறவியைத் தந்துவிடும். மூலவாயுவுடன் மெலே போய் ஆழ்ந்தவர்க்கு அவர்களிடம் தனது சிலம்பு அணிந்த பொன்னடியைக் காட்டி நாதத்தை எழுப்பும். அவ்வாறு சேர்ந்தவர் நாத சம்மியம் செய்வதால் சிவத்தை உணர்ந்திருப்பர்.

2115.0 இறைவன் வீடுபேறாகவும் அதன் வழியான ஞானமாகவும் ஞானத்துக்கு துணை செய்யும் முத்தமிழ் ஓசையாகவும் இருப்பவன். அத்தகையவனை பலகாலம் புறத்தில் வணங்குவர். ஆனால் பாலில் கலந்திருக்கும் நெய்யைப்போல நின்மலச் சிவனும் அவருடன் மறைந்திருப்பான். அத்தகைய சோதிப் பிழம்பான அச்சிவனை உள்ளத்தில் கண்டு வழிபட அறியார்.

2116. தணு கரண புவன போகங்களை உயிர்களுக்கு நியமிப்பவன். இறைவன். அவன் அமைந்தருளிய காலம் எவ்வளவு என்று யாரும் உணர்வதில்லை. பிறப்பிலே வந்து படுவதை தவிர சிவமாகிய பரம்பொருளின் பெருமையை உணராமல் கெடுகின்றனர்.

2117. இங்குள்ள வாழ்வும் எவ்வளவு துன்பம் ஆயினும் இறப்பு வந்த காலத்தில் தூய செம்மணி போன்ற சிவபெருமானை விஞ்ஞானத்து உறையும் விகிர்தனே என்று நைந்து உருகி போற்றுங்கள். பற்றற்ற வரை அவன் அடையான். அங்ஙனம் இன்றேல் அவன் உம்மை அடைய இயலாது.

2118. வஞ்சம் உடையார் நற்குருவை நாடி அடைவராயின் இவ்வுலகத்தில் பஞ்சம் ஏற்படும். அன்னாரைக் கண்டு இறைவனே அச்சம கொள்வான். கொடிய நரகத்தில் அவர்களைச் சேர்ப்பான். வஞ்சம் இன்றி செம்மையான ஒழுக்கத்து நிற்பவரை காண்பதே அனைத்துச் சித்திகளையும் தரும்.

2119. அளவு இல்லாத தேவர்கள் சிவனைக் கிரியை நெறியில் நின்று வழிபட்டனர். அங்ஙனம் அவர்கள் அவனை வழிபட்டு ஆகும் பயன் ஏதுமில்லை. அவனை வழிபடும் நெறியான ஞான நெறியை உபதேசிக்கும் நல்ல குருவை வழிபட்டால சிவனைப் பெறலாம்.

2120. மக்களும் தேவரும் ஆகியவற்றின் பாசத்தை பொருத்தி வினைகளைச் செய்து அழிவதைப் பார்த்து குருவான ஞானி பாசம் நீங்கியவராய் இருப்பானாயின் நீ பரத்துடன் கூடிப் பரமாவாய் என உபதேசிப்பதன்றி மாணவனுக்குக் கூறக்கூடியது ஒன்றுமில்லை.

2121. குருவாக எழுந்தருளி வந்தவன் ஒப்பில்லாத சிவன் ஆவான். அவனிடம் அன்பு கொண்ட மாணவனின் வினைகள் நாள்தோறும் தேய்ந்து ஒழியும். நீரையுடைய நீண்ட சடையை உடைய் இறைவன் வடிவு கொண்டு வந்து ஆட்கொண்ட முறையே வருந்தி வினையைக் கெடும்படி செய்தான்.

#####

Read 757 times Last modified on சனிக்கிழமை, 20 June 2020 16:41
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

21594525
All
21594525
Your IP: 172.70.34.206
2021-06-14 20:21

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg