Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:19

பதி பசு பாசம் வேறின்மை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#####

பதி பசு பாசம் வேறின்மை!

2405. அறிவு அறிவு என்று கூறப்படும் உயிர் மிகவும் பழமையானது. உயிர்க்குத் தலைவனான சிவமும் ஆன்மாவைப் போன்று மிகவும் பழமை வாய்ந்தது. உயிரைப் பிணித்துள்ள பாசம் பழமையானது. பேரறிவுப் பொருளான சிவம் உயிரிடம் விளங்குமானால் பாசமானது நீங்கிப் பிறவி இராது.

2406. நான்முகன் திருமால் உருத்திரன் மகேசன் சதாசிவன் முதலிய் பெருந் தேவர்கள் முதலாக உயிர்கள் பல கோடியாகும். பசுக்களைப் பிணித்துள்ள ஆணவம் கன்மம் மாயை என்ற மலங்கள் மூன்று. உயிர்கள் தம் அறிவை விட்டு மலங்களை அகற்றினால் பதியினைப் பற்றி விடாமல் நிற்கும்.

2407. பாசத்தில் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள் காமியத்தோடு செய்த சரியை கிரியை யோகத்தால் அடையும் சாலோக சாமீப சாருபம் ஆகிய பயன்கள் மூன்று. அவற்றின் முடிவான ஞானத்தைப்பெற நாள்தோறும் தியானம் செய்து தொடர்பு சிறிதும் பற்றாமல் விருப்பம் இன்றி வணங்குங்கள், அங்ஙனம் வணங்கினால் குடத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த விளக்கைக் குன்றின்மீது வைத்ததைப் போல் ஒளிபெற்று விளங்குவீர்கள்.

2408. சிவன் ஆன்மாக்களின் ஆணவமல வலிமை கெடக் கன்மத்தையும் மாயையும் பொருந்தியவன். பரந்த கதிர்களையுடையவன். இத்தகையவனைப் பற்றுள்ளம் கொண்டு ஞானியர் எண்ணுவர். அங்ஙனம் நினைக்கும் தியான பலத்தால் மனம் கூசும் பாசத்தை நினைப்பது எப்படி. பழமையாகவே தொடர்ந்து வந்துள்ள பாசத்தில் மீண்டும் சீவனை விடுவது எப்படி.

2409. மந்திர ஆற்றலால் நீங்கிய விடம் தீண்டியவனை மீண்டும் பொருந்தாது. அது போன்று ஞானத்தின் பசுத்தன்மையும் பாசத்தன்மையும் விட்டு மெய்மையைக் கண்டான் மீண்டும் அவற்றை பொருந்தான். தன்னைக் கேவலாவத்தையிலும் சகலாவத்தையிலும் பிணைந்திருந்த பாசத்தை சுட்டழித்து நின்மல் துரியாதீதத்தில் விழிப்பு நிலையில் அந்த உண்மையான ஞானியர் காண்பர்.

2410. ஆராயப்படும் பதியுடன் நன்மை பெறும் பசுவும் பாசமும் எக்காலத்தும் நிலையாய் இருப்பவையாம். எனினும் நித்தியப் பொருளான சிவத்தின் தன்மை இன்னவாறு என்று அறிபவர் ஒருவரும் இல்லை. பசு பாசங்களின் நித்தியத் தன்மையும் அவற்றின் நீக்கமும் அருட்கண்ணால் நாடிய சைவர்க்கு விளங்குமாறு சிவன் அருள் செய்வான்.

2411. கோயிலுள் மூலத்தானத்தில் உள்ள சிவலிங்கம் அருளுடன் கூடிய சிவலிங்கம் ஆகும். அங்குள்ள வலிய காளை பசுவாகும். அங்கு இடபத்துக்குப் பின்னே உள்ள பலிபீடமே பாசமாகும். இவ்வுண்மை சிவாலயத்தின் அமைப்பை ஆராய்ந்து பார்க்க விளங்கும்.

2412. பதி, பசு, பாசம், என்பனவற்றை உணர்த்தும் ஞான நூல்களை நாள்தோறும் ஆராய்ந்து உணர்பவர்க்கு நெறியைக் காட்டி பதிப் பொருளானது பசு ஞானத்தையும், பாச ஞானத்தையும் பற்று நீங்கக் கெடுக்கும். பதி, பசு, பாசம் என்பனவற்றைக் குறியீடாகக் கொண்டு தியானித்தால் பசு ஞானம் பாச ஞானம் நிலைபெறமாட்டா.

2413. பதிப் பொருளான சிவத்தையும் பசுவான உயிரையும் பாசமான மலத்தையும் முத்தி நிலையையும் பசு பாசம் நீங்கும் வகையையும் காட்டி சந்திர கலையில் விளங்கும் சிவம் அறியும்படி துதிக்கும் நூல்களையும் தூய சைவத்தில் வைத்துள்ளான்.

2414. அறிவு வயப்பட்ட விஞ்ஞானகலர், பிரளயகலர், சகலர் என்று மூன்றுவகைப் பட்டவர்கள் எங்கும் உள்ளனர். இத்தகைய உயிர்கள் எங்கும் இருக்க எல்லாம் அறிந்த சிவன் அவற்றில் நிறைந்துள்ளான். ஆன்மாக்களின் தகுதியை அறீந்த சிவம் அவ்வற்றின் பக்குவத்துக்கு ஏற்பப் படைகின்றான்.

2415. படைப்பில் தொடக்கம் என்பது பரம் சிவம் சத்தி என்பவற்றை இறைவன் உயிர்க் கூட்டங்களிடையே பொருந்தி உறக்கத்தில் வைப்பதாகும். பின்பு படைப்புக்குரிய தற்பொருளான சிவம் சங்கற்பத்தினால் செய்யப் படைப்பில் முதல் நிலை சுத்த மாயையிலே அந்த பரத்தில் ஆகும்.

2416. இத்தகைய தூய்மையான உடலை விந்து நாதம் சத்தி சிவம் பரம் ஆகிய அருவுருவத்தில் உள்ள ஐந்தினால் சூக்குமமாகிய ஐந்து தொழிலைச் செய்பவன் சதசிவ முகத்திலான தூய ஈசான மூர்த்தியாகும்..

2417. பொருந்தும் பரசிவம் சத்தி நாதமும் மேலும் பரவிந்து சதாசிவன் மகேசனும் இன்னும் உருத்திரன் திருமால் நான்முகன் ஆகிய ஒன்பது நிலைகளும் உலகத்தில் விளங்கும்படி படைப்பவன் அரன் என்னும் சிவமே.

2418. படைத்தலும் காத்தலும் இளைப்பாற்றும் பொருட்டுச் செய்யும் அழிப்பும் மறைப்பும் வாழ்கின்ற போது விளங்க அருளாலும் உட்லை விட்டபின்பு நிகழும் அருளாலும் எனச் சிவபெருமான் சகலர்க்கு இணைந்த அநாதியான தொழிலை ஐந்து எனக் கூறலாம்.

2419. முப்பத்தாறு தத்துவங்களையும் குண்டலினி சத்தியில் தொடர்பாக்கி மேலான மாயையில் சிவ தத்துவம் வித்தியாத் தத்துவம் ஆன்ம தத்துவம் என மூன்று பகுதியாக்கி இறுதியாய் ஆனம தத்துவத்தில் உயிர்களுக்கு கருவிகளையும் வகுத்து தன்மையால் வேறான பதிப் பொருளால் பசு பாசத்தினின்று மீளும்.

2420. பதியானது பசுவிடம் பாச பந்தங்களில் விருப்பம் உண்டாகச் செய்யும். அதனால் இரு வினைகளைச் செய்யும் படி ஆழ்த்தும் அங்குச் செய்யும் வினையின் பயன்களாகிய பாவபுண்னியங்களான நரகம் சொர்க்கம் ஆகியவற்றில் அனுபவிக்கும்படி செலுத்தும் நாள் ஆக் ஆக நான் என்னும் ஆணவம் மட்டும் பொருந்தி நிற்கும்.

2421. பொருந்திய பாசமான மாயையில் தனுகரணங்களுடன் கூடி அவற்றையே தான் என்று எண்ணியிருப்பது ஆணவம் அத்தகைய மயக்கம் கெடவே இறைவன் உயிர்களை மாயையுடன் பொருந்தி வைத்தான். ஆணவ வலி குன்றிட அறிவுடைய ஆன்மாவின் புலப்பட்ட நாதசத்தியே சிவபொருமானின் திருவடிகளை அடைவதற்கு உரிய வழிகளாகும்.

2422. நாத வழிபாடு உயிர்களுக்கு வினைகளை ஊட்டிக் கழித்துச் சிவபோகத்தை அனுபவிக்கும் உபாயம் அல்லாமல் ஆணவ மலமான உயிர்குற்றம் நீங்கி அவா நீங்கித் தூய்மையன ஆவதற்கும் இதுவே மூலமாகும். அழுக்குத் துணியை மேலும் அழுக்காகவுள்ள உவர் மண் முதலியவை தூய்மை செய்வது போல் இறைவன் உயிர்களுக்குப் பாசத்தைச் சேர்ப்பதெல்லாம் பாசத்தைப் போக்குவதற்கே ஆகும்.

2423. பாசத்திலே உள்ள உயிர் கூட்டமே பரம் முதலாகும். பாசத்தில் கட்டுப்பட்டிருக்கும் உயிரே பசு எனச் சொல்வர். பாசத்தைப் பயிலும் போது சிவமே தற்பரமாகிய நாதமாக விளங்குவதால் அந்த வழிபாட்டால் பசு பதியாக ஆகும்.

2424. சனகர் முதலிய முனிவர் நால்வரும் வேதப் பொருளின் உண்மைக் குறித்து தட்சிணாமூர்த்தியை வினவினர். அவர்க்கு அருள் மேனியை உடைய பெருமான் சுட்டுவிரலைப் பெருவிரலோடு சேர்த்துக் காட்டி அவர் கேட்டவற்றின் பொருளை ஞான முத்திரைகளால் உணர்த்தினர். சின் முத்திரையின் நுண்பொருளை அம்முனிவர்கள் உணரவில்லை. ஆதலால் அவரது தலையைத் தீண்டி தீட்சை செய்தாய். அவர்கள் அம்முத்திரையை உணர்ந்து தம் உண்மையான ஒளிவடிவில் நிலை பெற்றுத் திகழ்ந்தனர்.

#####

Read 1901 times
Login to post comments