Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:20

அடிதலை அறியும் நிறம் கூறுதல்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

அடிதலை அறியும் நிறம் கூறுதல்!

2425. கால் எது தலை எது என்பதை வீணர்கள் உணர்ந்து கொள்வதில்லை. கால் என்பது குண்டலினி சத்தி. மூலாதாரத்தில் குண்டலினி விளங்குவதற்குக் காரணம் அருள் என்பர். ஒளிவிளங்கும் ஞானமே பண்பு நிறைந்த தலையாகும். சத்தியானது அந்த ஞானமான சிவத்தைக் காட்ட உயிர் வீடுபேறு அடையும்.

2426. உடலில் அடியானது தலையில் வந்து பொருந்துவதை வீணர்கள் அறியவில்லை. தலை உச்சியிலும் அடி மூலாதாரத்திலும் இருக்கின்றன. மூலாதாரத்தில் உள்ள குண்டலினி தலையை அடைந்து பொருந்தும் அறிவை அறிந்த ஞானியர் சிற்றறிவு நீங்கிப் பேரறிவு உடையவராக இருப்பர்.

2427. நிலத்திலும் வானத்திலுமாய் உள்ளும் புறமுமாய்க் கலந்து நின்றவன் எம்பெருமான். அவன் அவ்வவ்வண்டங்களின் வாழும் வன்மை மிக்க அசுரரும் தேவரும் உய்யும்படிதான் பின்னே உலகத்தைப் படைத்தான். அவனது பெயர் நந்தி என்பது. அவன் தன் இரு திருவடிகளையும் என் தலையில்மீது சூட்டினான்.

2428. என் மனத்துள்ளே சிவத்தின் திருவடியுள்ளது. என் உள்ளமும் தன் செயல் அற்று அவனது திருவடியை வணங்கிக் கொண்டிருக்கின்றது. மனத்தின் உள்ளும் வெளியிலும் பரவியிருக்கும் சிவன் என்னை அறிந்து உணர்த்தா விட்டால் என் தந்தையை நானும் உணராதவன் ஆவேன்.

2429 .சொல்ல அரிய ஆறு ஆதார ஒளிக்குமேல் பரமாகாயத்தில் என் தலைவனான சிவன் விரும்பி அங்கு எழுந்தருளியுள்ளான். உள்ளத்தினாலே எண்ணிக் காண் முடியாத பிரணவத் தெளிவையும் எனக்கு உணர்த்தினான். பின் நான் அவன் திருவடிகளான விந்து நாதங்களை என் தலையில் அணிந்து நின்றேன்.

2430. பதியின் பொருள் விளங்கும் தலையின்மேல் உள்ளத்தை வையுங்கள். திங்கள் கலை விளங்குமாறு செய்து அந்த திருவடியை எண்ணித் துதி செய்யுங்கள். கங்கையாற்றைச் சடையில் அணிந்த உமையொரு பாகன் முத்தியை அளிப்பான். அப்பெருமானை வழிபடுகின்ற காலங்களில் கண்டு வழுபடுங்கள்.

2431 .சிவனது திருவடிக்கமலங்களை இடைவிடாமல் நினைப்பவரின் உள்ளத்தில் அப்பெருமான் விளங்கித் தன்னை நினையாதவரின் மனத்தில் அவனும் வெறுப்பு அடைந்து ஒளிந்திருந்தான். அங்ஙனம் பக்குவம் செய்பவனே ஆன்மாக்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவன்.

2432. உடலில் சிவன் விளங்கும் சகசிரதள்மான தாமரை மலர் ஒன்று இருக்கின்றது. அங்கு வழிபடத் திங்கள் கதிரவன் அக்கினியான மூன்று கண்மலர்க்ள் உண்டு. அவ்வழிபாட்டால் இறைவன் திருவடியாகிய விந்து நாதம் விளங்குவன். அங்கு நிலைத்து நின்று திருவடிகளை வணங்கும் திறம் உடையவர்க்கு இப்பொழுது சிவப்பே/று அடைவர்.

2433. விந்து நாதன் என்ற திருவடியை என் தலையின் மீது வைத்தவனும் ஆணவ மலக்கட்டு நீங்கவே உலகப் பொருளை விரும்பும் மயக்கம் பொருந்திய ஊள்ளத்தில் தளர்ச்சி கெடப் பால்போன்ற வெண்மையான ஓலியைப் பற்றிக் கொண்ட என்னைச் சிவபெருமான் அடிமையாய்க் கொள்ள எண்ணினான். அதன்மேல் அடையும் மேலான பலனகளை என்னால் சொல்ல முடியாது.

2434. தாங்கள் பெற்று வளர்த்த மக்களிடம் கொண்ட சம்பந்தத்தையும் அவர் செய்யும் குற்றத்தையும் உணர்ந்து அவரது குற்றத்தைப் பாராட்டாமல் குணத்தைக் கொள்ளும் பெற்றோரைப் போல் இறைவனும் உயிரின் தன்மைக்கு ஏற்ப வெறுப்பற்ற செயலுக்குப் பொருந்தும்படி ஏற்றுக் கொண்டு தக்கபடி அருள் செய்வான்.

#####

Read 1553 times Last modified on செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:40
Login to post comments