Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:18

தத்துவமசி வாக்கியம்!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

தத்துவமசி வாக்கியம்!

2568. உயிர் சீவ துரியத்தில் பொருந்தித் தத்துவங்களை விட்ட நிலை தொம்பதம். அதன் மேலான பரதுரியத்தில் பரத்தொடு பொருந்திய நிலை தத்பதமாகும். இது சிவதுரியத்தில் பொருந்தியிருப்பது அசிபதமான உண்மை நிலையாகும். உயிர் இதில் எல்லாத் தத்துவங்களும் நீங்கித் தத்துவமசியால் பெறும் உண்மையான பேற்றை அடையும்.

2569. முப்பத்தாறு தத்துவங்களையும் நீங்கிய ஆன்மா பொருந்தும் தொம்பதம் தூய நிலையாகும். அஃது உபாசாந்த நிலையில் மேலுள்ள தற்பத நிலையை அடையும். பேற்றுக்குரிய சீவன் இந்த நிலையைக் கடந்து அசிபதமான சிவகதி இறுதியான தொந்தத்தசி தத்துவமசிப் பொருளாகும்.

2570. அவனே இவன் என்று தேவதத்தனிடத்துச் சொல்லப்பெறுவதான விட்டு விடாத இலக்கணை தொந்தத்தசி என்ற மூன்று பதங்களிலும் உண்மையான சாந்தம் பெற்ற சீவனுக்கும் ஆகும். அங்ஙனமாகிய சீவன் பரனாய்ச் சிவனாக ஆகும்.

2571. துவம் தத் அசி என்பதே தொந்தத்தசி ஆகும் அவை இரண்டும் இயைல்பு காரணமாகப் பொருந்தி ஒன்றேயாம். தவப்பயனான தத்துவமசி வேதாந்த மரபாகும். வேத முடிவாம் சித்தாந்தம் நீ சிவம் ஆகிறாய் என்பதே ஆகும்.

2572. சிவ துரியத்தில் அடங்கிய சொல்வதற்கு இயலாத சீவப்பாழை மேலான பரம் எனப் புகல்வர். அதன் உண்மை இய்ல்பை அறியாதவர் இது பர நிலை அன்று என்பததை உணர மாட்டாதார். பரத்துக்கு மேலான பரமாகிய சிவம் உதிக்கின்றது அஃது அரிய இடம் என்பதை யாரோ அறியவல்லார்.

2573. தொம்பதம் தற்பதம் அசிபதம் ஆகிய மூன்றும் பொருந்திய முத்துரியத்திற்கு மேல் சீவன் சிவத்தை விரும்பிவதில் உம்முடைய பதமான தொம்பதம் பக்குவம் ஆகும். அப்போது சீவன் பரனாக விளங்கிச் சிவம் ஆகும்.

2574. உயிருக்கு அமைந்த துரியத்தில் பொருந்தும் ஆனந்தத்தில் நாதத்தை தோன்றச் செய்த பிரணவ உப்தேசத்தை உண்மையான இதயத்தில் எண்ணியிருங்கள். இருந்தால் அந்த மெய்யுணர்வு பொருந்தியிருக்கும் போது சிவன் தோன்றுவான்.

2575. நனவு, கனவு, உறக்கம், பேர் உறக்கம், உயிர்படக்கம் என்ற ஐந்தையும் முன் வைத்து அதனின் பின்னமான மலத்தை வைத்து உயர்ந்து சென்றால்பின் தூய தான் சொல்லும் சிவகதியில் சத்தை ஆதியாகவுடைய உபசாந்தம் உண்டாகும். அங்கு மனத்தையும் சொல்லையும் கடந்து விளங்கும் மன்னனான சிவத்தை நாடுவாய்.

2576. இறைவனின் எல்லையைக் கடந்து வேறு ஒரு பொருள் இல்லை. ஆதலால் அஃது அகண்டமாய் என்றும் ஒரு தன்மையாய் உள்ளது. அது வாக்கு கடந்து குணம் குறி ஒன்றும் இல்லையாதலால் பெயர் இல்லாதது. அதற்கு ஒரு செயலும் இல்லை. ஆதலால் கருத்தாலும் நெருங்க முடியாதது. உலகத்துக் காட்சிக்கு வேண்டப்படும் காரணம் இல்லாமலே தன்னை விளக்கும் இயல்பு வாய்ந்தது.

2577. நீ அது ஆவாய் என்று குரு உபதேசப்படி அமைந்த பெருவாக்கியம் நாடிய அது நான் ஆனேன் என்று மாணவன் பாவிக்கின், பாசம் முதலியவை நீங்கும். நீங்கிச் சிறப்புடைய நந்தியின் அருளால் சேய்மையாய் எண்ணப்பட்ட சிவமாக ஆக்கும். அப்படியாகி அதுவாய் அழிவை அடையாத ஆனந்த வடிவாகும்.

2578. உயிர் பரமாகவும் உயர்வுடைய பர நிலையை அடைந்து சீவன் அறிவதற்கு அரிய சிவமான அந்தச் சிவன் மூன்று வேதங்களிலும் புகழ்ந்து பேசப்பட்ட பராபரனாகச் சீவர்களுக்கு உரியவாய் வரத்தினால் உணர்த்த முடியாத பிரணவ வடிவம் ஆகும்.

2579. பிரணவம் வாய் நாசி புருவ நடு உச்சி என்பனவற்றில் ஆகி நாசி முதல் உச்சி வரை விளங்கும். தாய் நாடியான சுழுமுனையில் விளங்கும் நாதம் முதலாகச் சகல நிலையில் விளங்கும் தத்துவங்களும் சீவன் நாடும் ஒளியாய் முன் சொன்ன ஐந்து இடங்களிலும் பாய்ந்து சிவகதி அடையும்.

2580. சுட்டி அறியும் அறிவும் அறியாமை ஆகிய இரண்டையும் அகற்றி அறிவு வடிவாய் எங்கும் நிறைந்து விளங்கும் சிவனை அவனை விட்டு நீங்காது எம் தலைவன் என்று விரும்பிப் போற்றும் குறியை அறியாதார் சிவனைத் தம்மிடம் பொருத்திக் கொள்ள அறியாதவர் ஆவர்.

2581. உலகியல் அறிவு வாய்க்கப் பெற்றவர் காண்பன சுக நிலையைத் தரும் அப்புத் தத்துவம் அக்கினித் தத்துவம் என்னும் இரண்டையுமாகும். ஆனால் தத்துவ ஞானியர் சுகத்தை தரும் அப்புத் தத்துவம் எங்ஙனம் உடலில் உள்ளது என்பதை அறிவர். எல்லாவற்றையும் அறியும் சிவன் அங்குக் கலந்திருந்து புலப்படுத்தினால் அல்லது சீவரின் சிற்றறிவால் பேர் அறிவுப் பொருளை அறிய இயலாது.

2582. நந்திய்ம் பெருமான் யாவற்றையும் சுட்டி அறியும் அறிவைக் கடந்து எல்லாவற்றையும் ஒரு சேர அறியும் ஆற்றல் உடையவன். சுட்டியறியும் கருவிகளை இழந்தபோது ஒன்றையும் அறிய மாட்டாத அஞ்ஞான நிலையில் உள்ளவன் ஆன்மா. நிராதாரத்தில் உள்ள சந்திர மண்டலம் விளங்கப் பெற்று அ?ஞ்ஞான இருளை விட்ட பெருமை பெற்ற உயிர் இறைவனுடன் ஒன்றாம் சிவநிலையில் அமையும். அவ்வளவில் அந்த உயிர் பரம் என்று பெயரை பெற்று விளங்கும்.

2583. சிவபெருமானின் திருவடியைத் தொழ வேண்டி அவனது திரு முன்பு நின்று தலையால் வணங்க அப்பெருமானும் என் முன்பு வெளிப்பட்டருளினான். என் அடியை முறையாய்த் தொழ வேண்டி நீ பழமையில் நான் அது ஆனேன் என்று நீ எண்ணியது எல்லாம் சிறப்பாக இப்போது அமைவதை நீ பார்ப்பாயாக என்று அருளினான். நெற்றிக் கண்ணையுடையவன். அவன் கருணை இருந்தவாறு என்னே.

2584. இறைவன் ஒளியே மேனியாக உடையவ்ன். இய்ல்பாகவே பாசங்களின்று நீங்கியவன். பிறப்பில்லாதவன். இத்தகையவனான அவன் என் மனத்தகத்தே வீற்றிருந்து என்னைத் தன் அடியவனாக்கிக் கொண்டான். பொன் ஒளி வண்ணமுடைய புகழ் உடைய பெருமான் என்னை நோக்கி நீ மலமற்று விளங்குவாய் என்று கூ”றி என் மலங்களை நீக்கியருள் செய்தான்.

2585. இறைவன் எனக்கு அருளிய பின்பு நான் எனது பாசக் கூட்டமான தத்துவங்களை விட்டேன். ஒண்மையான சோதியைக் கண்டேன். என் உள்ளமானது உடலை விட்டு வேறாக எங்கும் செல்லும் ஆற்றல் பெற்றதாய் ஆயிற்று. எனினும் பணிவுடன் அவனை மறவாதிருந்த என்னை அவன் நிலவுலகத்திலேயே மரணம் இல்லாமல் நீண்ட காலம் வாழ வைத்தான்.

2586. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் உடலில் பொருந்திய ஞானேந்திரியங்க்ள ஐந்தும் அவற்றின் வழியாக அந்தக் கராணம் நான்கும் மற்றத் தத்துவங்களும் எல்லாவகைப்பட்ட உயிர் இனமும் இறைவனின் அருளால் இயங்குவன். ஆதலால் அவன் இவற்றை இயகுவதற்குரிய கையும் சொல்வதற்குரிய வாயும் இன்றி எங்கும் உடலாகவும் அறிவாகவும் நிறைந்த பூரணப் பொருள் என்பதுபட விள்க்குகிறான்.

#####

Read 1695 times
Login to post comments