Print this page
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:37

சித்தர் வேடம் மூன்று!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் போற்றி!
பூமெனும் பொருள் தொறும் பொலிவாய் போற்றி
அகரம் முதலென ஆனாய் போற்றி!
அகர உகர ஆதி போற்றி!
மகரமாய் நின்ற வானவ போற்றி!
பகர்முன்னவாம் பரமே போற்றி! போற்றி!

சித்தர் வேடம் மூன்று!

1.எல்லாம் வல்ல சித்தர் வடிவம்: அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்து வந்த காலத்தில் எல்லம் வல்ல சித்தராக சோமசுந்தரக் கடவுள் மதுரை வீதிகளில் உலா வந்தார். கடைவீதி, சித்திரச் சாலை, நாற்சந்தி, முச்சந்தி என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் தோன்றி அற்புதங்களை நிகழ்த்தினார். அப்போது கல்யானை ஒன்றிற்கு உயிரூட்டி கரும்பைக் கடித்து சுவைத்து தின்னவைத்த நிகழ்வு சிறப்பாகும்.

2.வைகையை வற்றச் செய்தமை: சிவபக்தனான காடுவெட்டிச் சோழன் மதுரை சொக்கநாதப் பெருமானை தரிசிக்க பேரவா கொண்டான். இறைவனிடம் தன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டினான். சிவபெருமான் சித்தராக உருவெடுத்து வைகை ஆற்றை வற்றிப்போக வைத்து, மதுரைக் கோட்டை வாயிலைத் திறந்து சோழனை சொக்கநாதரையும் மீனாட்சியையும் தரிசிக்கச் செய்து திரும்பவும் வைகை ஆற்றின் வடகரையில் சேர்த்தார். பின்னர் திரும்பி வந்து கோட்டை வாயிலை மூடி தன் விடை இலச்சினையை வைத்து மறைந் தருளினார்.

3.பொன்னையாள் இல்லத்தில் இரசவாதம் செய்தல்: திருப்பூவனத்தில் தோன்றிய சிவபக்தையான பொன்னையாளின் மனத்தில் திருப்பூவனநாதரின் திருப்படிமத்தை நிறுவ ஆசைகொண்டார். திருக்கோவிலில் இசைபாடி நடனமாடுவதால் கிடைக்கும் அனைத்தையும் சிவபூஜைக்கே செழவழித்து வந்தாள். அவள் எண்னத்தை நிறைவேற்ற சித்தர் வேடங்கொண்டு பெருமான் பொன்னையாள் இல்லம் சென்று இரசவாதத்தால் அவள் வீட்டிலிருந்த இரும்பு, செம்பு, பித்தளை பாத்திரங்களை பசும் பொன்னாக்கி மறைந்தார். பொன்னைக் கண்ட பொன்னையாள் இறைவனின் திருவிளையாடல் என்றெண்ணி பூவனநாதரின் திருவுருவை பொன்னால் செய்வித்து நிறுவி விழா எடுத்தாள்.

#####

Read 16102 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:25
Login to post comments