Print this page
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:54

குதிரைச் சேவக வடிவம் இரண்டு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

செம்பொன் மேனிச் செம்மால் போற்றி!
உம்பர் போற்றும் உம்பல் போற்றி!
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ போற்றி!
எண்ணிய எண்ணியாங் கிசைப்பாய் போற்றி!
அப்பமும் அவலும் கப்புவாய் போற்றி!
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி!

குதிரைச் சேவக வடிவம் இரண்டு!

1.சுந்தரசாமந்தனுக்கு அருளல்: குலபூஷண பாண்டிய மன்னன் சேனாபதி சுந்தரசாமந்தன் சிறந்த சிவபக்தன். சேதிராயன் என்ற குறுநில மன்னன் பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க பொக்கிஷசாலையிலிருந்து தேவையான பொன்னும் மணியும் எடுத்து புதிய சேனைகளைத் திரட்டுமாறு உத்தரவிட அச்செல்வத்தை சைவத் திருப்பணிகளுக்கு சேனாபதி செலவிட்டான். ஒருநாள் புதிய படை வீர்ர்களை அழைத்து வருமாறு பாண்டியன் கேட்க சேனாபதி கலக்கமடைந்தான். அவன் கலக்கத்தை தீர்க்க எண்ணிய பெருமான் தம் பூத கணங்களை வில் வீர்ர்களாக உருமாற்றி தானும் ஒரு குதிரை வீரனாக மாறி தன் காளையை குதிரையாக்கி நந்தி, மாகாளர், பிருங்கி, நிகும்பரன், கும்போதரன் ஆகியோர் குதிரை வீரகளாக புடைசூழ மதுரை வந்து மன்னனுக்கு அறிமுகப்படுத்தினார். இது சுந்தரசாமந்தனுக்காக குதிரைச் சேவகனாக வடிவம் கொண்டு அருள் புரிந்தமை ஆகும்.

2.மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கி குதிரைச் சேவகனாக அருளல்: அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்த திருவாதாவூரிடம் கடல் துறையில் வந்திருக்கும் நல்ல உயர்ந்த குதிரைகளை வாங்கி வர பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்ப, அச்செல்வத்தை திருவாதாவூரார் திருப்பெருந்துறை ஆலயப் பணிக்கு செலவிட்டார். செய்தி ஏதும் கிடைக்காததால் திருவாதாவூராருக்கு மன்னன் ஓலை அனுப்ப அதை சிவபெருமானிடம் முறையிட, அவர் ஆணைப்படி குதிரைகள் வந்து கொண்டிருப்பதாக தகவல் அனுப்பினார். குதிரைகள் வராததால் வாதாவூரார் சிறையில் அடைக்கப் பட்டார். சிரையில் இருந்தபடியே சிவனிடம் முறையிட பெருமான் குதிரைச் சேவகனாக உருக்கொண்டு நரிகளைப் பரிகளாக்கி, சிவகணங்களை வீர்ர்களாக்கி மதுரை அடைந்து மன்னனிடம் ஒப்படைத்து திருவாதாவூராரை சிறையிலிருந்து விடுவித்தார்.

#####

Read 17014 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:29
Login to post comments