Print this page
ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 10:07

மச்ச அவதாரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#####

மச்ச அவதாரம்!

பிரளயம் முடிந்து உலகம் சகஜ நிலைக்கு வந்து பூபாக மண்டலம் நீரின் பாதிப்பிலிருந்து மேலெழுந்து சூரியன் தோன்ற பிரம்மன் தனது படைப்புத் தொழிலைச் செய்ய ஆரம்பித்தார். சோமுகாசுரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து வரம் பெற்றதனால் அகந்தைக் கொண்டு பிரம்மன் முன் தோன்ற, அசுரனைக் கண்ட பிரம்மன் அஞ்சி நிற்க உன் வலிமை இவ்வளவுதானா எனக்கேட்டு அவர் கையிலிருந்த நான்மறைகள் நான்கினையும் பறித்துக்கொண்டு கடலிற் சென்று மறைந்தான்.

வேதங்கள் இல்லாமையால் சிருஷ்டிக்கான ஆற்றலும் சமர்த்தியங்களும் அவரிடம் இல்லாமல் போயின. வேதங்கள் இல்லாமல் என்னால் சிருஷ்டி காரியங்களைச் செய்ய இயலவில்லை. தாங்கள்தான் வேதங்களை மீட்டு எனக்கு உதவி புரிந்திட வேண்டும் என்று பிரம்மன் விஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டார். சோமகன் பசியினால் வேதங்களை விழுங்கி விட்டான். கோபங்கொண்ட திருமால் மச்ச வடிவமெடுத்து கடலினுள் புக, பசி அதிகமெடுத்ததால் மச்ச வடிவமெடுத்த விஷ்ணுவையும் விழுங்க வந்த சோமுகாசுரனைக் கண்டு அவனுடன் சண்டையிட்டு அவனுடைய ரத்தத்தைக் குடித்து அவன் வயிற்றைக் கிழித்து நான் மறைகளையும் தக்ஷாவர்த்த சங்கையும் மீட்டு பிரம்மனிடம் அவைகளை ஒப்படைத்தார்.

விஷ்ணுவின் மச்சாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் கமலாத்மிகா.

ஆனால் அதன் பின்னரும் விஷ்ணுவின் ஆவேசம் அடங்காமல் ஏழு கடலையும் ஒன்றுகூட்டி கலக்கினார். இதனால் உலக உயிர்கள் துன்பமடைந்தன. தேவர்கள் இதனை சிவபெருமானிடம் கூற மீன்பிடி வலைஞராக உருவெடுத்து ஏழு கடலையும் மறைக்கத்தக்கவாறு வலை வீச அந்த மீன் அகப்பட்டது. அதன் விழிகளைப் பறித்து அதன் வலிமையைக் குன்றச் செய்தார். தேவர்கள் விருப்பப்படி அந்த மீனின் கண்களை திருமேணியில் கையில் மோதிரமாக அணிந்தார். கண்ணிழந்த மீன் வடிவம் பெற்ற திருமால் தன் உணர்வு அடைந்தார்

அசுரன் வயிற்றில் இருந்து எடுத்தமையால் வேதங்களின் சில பகுதிகள் காணவில்லை. அவற்றை நினைவில் கொண்டு பூர்த்தி செய்க என்று பிரம்மனுக்கு அருள் புரிந்தார் விஷ்ணு.

மச்சாவதாரப் பெருமாளை வணங்கினால் கேது தோஷம் நீங்கும்-மத்ஸ்ய பெருமாள்- புத்தூர் அருகில்- நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள், வேதவல்லி.

#####

Read 15849 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 10:11
Login to post comments