Print this page
ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 10:55

நரசிம்ம அவதாரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

####

நரசிம்ம அவதாரம்!

தேவர்களின் துயரைத் துடைக்கவும் பக்தன் பிரகலாதனைக் காப்பாற்றவும் ஹிரண்யகசிபுவை வதம் செய்யவும் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம்.

பெருமாளை தரிசிக்க அனுமதி அளிக்காமல் தடுத்த துவார பாலகர்கள் ஜயன், விஜயன் இருவரையும் அரக்கர்களாக மூன்றுமுறை பிறந்து அழிச்சாட்டியம் பண்ணி இறுதியில் பகவானால் ஆட்கொள்ளப்படுவீர்கள் என சனகாதி முனிவர்கள் சாபம்.

அதன்படி முதல் பிறப்பில் இரண்யன் (எ) இரண்யகசிபு, இரண்யாட்சன் எனப் பிறந்தனர். இரண்யாட்சன் இறந்ததனால் சகோதரன் இரண்யன் என்கிற இரண்யகசிபு கோபம் கொண்டு பிரம்மாவை நோக்கித் தவமிருந்து தேவர்களாலோ, மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பஞ்சபூதங்களாலோ, மரணம் சம்பவிக்கக்கூடாது மேலும் இரவும் அல்லாத பகலும் அல்லாத வேளையில், மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு பிறவியினால், உலகத்தில் செய்யப்படாத ஆயுதத்தால், பூமியிலும் ஆகாயத்திலும் இல்லாத இடத்தில் தான் கொல்லப்படவேண்டும் என்ற வரத்தை பெற்றதனால் செருக்குற்று தானே சர்வேஸ்வரன் என்று செயலாக்கம் கொண்டான்.

இரண்யாட்சனை திருமால் கொன்றதால் அவர்மேல் கோபங்கொண்டு விஷ்ணுவை தன் எதிரியாக நினைத்தான். இரண்யகசிபு ஹிரண்யாய நமக என்றுதான் தன் ஆட்சியில் அனைவரும் சொல்ல வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தான்.

கருவுற்ற அவனின் மனைவியை நாரதர் தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு திருமாலின் புகழ் எப்போதும் பாடப்பட கருவிலிருந்த குழந்தை அதைக் கேட்டே நாராயணின்மேல் பக்தி கொண்டது. குழந்தை பிறந்து வளர்ந்து குருகுலத்தில் சேர்க்க மற்ற குழந்தைகள்போல் இல்லாமல் நாராயணாய நமஹ என்று சொல்லியது.

நாரயணின் திருநாமத்தைச் சொல்லும் தன் மகன் பிரகலாதனை இரண்யாய நம எனச் சொல்லப் பணிக்க மறுக்க அவனுக்கு விஷம் கொடுத்தும் ஒன்றும் செய்யவில்லை. பிரகலாதனை மலைமீதிருந்து உருட்டி விட்டும் மாற்ற முடியவில்லை.

ஹோலி: ஆதிநாரயணனைவிட தானே உயர்ந்தவன் என்று மகாவிஷ்ணுவை வணங்கியவர்களை கொடூரமாக தண்டித்தான் இரண்யன். அவன் மகன் பக்த பிரகலாதன் ஹரியே தெய்வம் என வாழ்ந்தான். விஷம் கொடுத்தும் கொல்ல முடிய வில்லையாதலால் இரண்யனின் சகோதரி ஹோலிகா நெருப்பு எரிக்காத துணியை தன் மந்திர சக்தியால் உருவாக்கி துணியைப் போர்த்திக் கொள்கிறேன். உன் மகனை என் மடியில் வைத்து தீயிடு. நான் எரியமாட்டேன். பிரகலாதன் எரிந்து சாம்பலாகி விடுவான். எனக்கூற இரணியனும் அதற்கு சம்மதித்து பிரகலாதனை அவள் மடியில் வைத்து தீ மூட்டினான்.

நாராயணன் நாமத்தில் மெய் மறந்து இருந்த பிரகலாதன் அத்தை மடியில் ஆனந்தமாய் அமர்ந்து ஹரி நாமத்தை உச்சரித்தான். நாராயணன் வாயுவை ஏவி காற்றை வீச நெருப்பு எரிக்காத துணி பறந்து பிரகலாதனை மூட ஹோலிகா தீயில் எரிந்து மாண்டாள். அவள் இறந்ததைக் கொண்டாடும் விதத்தில் வர்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்தனர். ஹோலிகா தகன் என்றது ஹோலி யானது

எதைச் செய்தும் மாற்ற முடியாததால் அரசவையில் சங்கிலியால் பினைக்கப்பட்ட பிரகலாதனிடம் தன்னை தெய்வம் என்று ஒப்புகொள்ள கேட்ட ஹிரண்யனிடம், மனிதர்கள் தெய்வமாக முடியாது. ஹரியே தெய்வம் என்று கூற கோபமடைந்த ஹிரண்யன் அருகிலிருந்த தூணைக் காட்டி இங்கே இருக்கின்றான உன் தெய்வம் என்று கேட்க தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று பிரகலாதன் கூற அந்த தூணை உடைக்க ஆரம்பித்தான் ஹிரண்யன்.

உடைத்த தூணிலிருந்து வெளிப்பட்ட சிம்மமுகம் மனித உடலுடன் கூடிய நரசிம்மருடன் இரண்யன் போரிட, நரசிம்மர் வாயிலில் அமர்ந்து தனது மடியில் இரண்யனின் உடலைக் கிடத்தி தன் கை நகங்களால் மார்பைக் கிழித்து அந்த நேரத்தில் அவன் பெற்ற வரத்திற்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் சம்ஹாரம் செய்து முடிந்த பின்னரும் கோபம் தீராமல் உக்ரமாக இருக்க தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவனார் யாளி, பஷி, மனித உருவம் என்று எல்லாம் இணைந்த சரபேசுவர உருவத்தில் போர்புரிந்து நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கினார்.-திருபுவனம்

விஷ்ணுவின் நரசிம்மாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் திரிபுரபைரவி

இந்த அவதாரம் நிகழ்ந்தது நான்காவது சதுர்யுகக் கிருத யுகத்தில் வைகாசி மாத சுக்லபட்ச சதுர்த்தசி நாளில் சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷவேளையில் என்பதால் சுவாதி நடசத்திர தினத்தில் செய்யும் நரசிம்மர் வழிபாடு சிறப்பானது.

இப்பெருமாளை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் நரசிம்மர் தலங்கள் 1.அஹோபிலம், 2.சோளிங்கர், 3.சிங்கப்பெருமாள்கோவில், 4.சிங்கிரிகுடி, 5.பூவரசன்குப்பம், 6.பரிக்கல், 7.நரசிங்கம்பேட்டை, 8.சிம்மாசலம், 9.மங்களகிரி, 10.மட்டப்பள்ளி, 11.வாடபள்ளி

உக்கிர குணம் கொண்ட அவதாரத்தை பிரகலாதன் தன் பக்தியாலும் ஆழமான பாடல்களாலும் சாந்தப்படுத்த லட்சுமியும் அவர்மடிமீது அமர மேலும் சாந்தமாகி லட்சுமி நரசிம்மராக அருள்.

#####

Read 16164 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 11:17
Login to post comments