gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 11:48

கிருஷ்ண அவதாரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

####


கிருஷ்ண அவதாரம்!

ஆகாது எனச் சொல்லும் அஷ்டமி திதியை. நல்ல காரியத்திலிருந்து விலக்கிவிடுவர். இதனால் வருந்திய அந்த திதி தேவதையின் வேண்டுகோளுக்கிணங்கி கிருஷ்ணாவதாரம் அஷ்டமியில் நடக்க அது கோகுலாஷ்டமி என சிறப்புற்றது. இறை நம்பிக்கை கொண்டு வழிபட்டால் ஆகாதது என்றில்லை எதுவும் இப்பூமியில்.

கண்ணன் என்ற இந்த அவதாரமே பிறக்குமுன்னே தன்னை வெளிப்படுத்திய அவதாரம். எட்டாவது குழந்தையைக் கொல்லத் தயாராக இருக்கும் கம்சனைப் பற்றிக் கவலையுடன் இருக்கும் பெற்றோர்களுக்கு தன்னைக் பற்றியும் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை பிறக்குமுன் தன் மாயையால் உணர்த்தினார். வாசுதேவர் பயணிக்க சிறைக்கதவுகளை திறந்துவிட்டு யமுனையை வழிவிடச்செய்தார். அன்னை தேவகியாக இருந்தாலும் யசோதையிடம் வளர்ந்தார்.

நினைவே அடுத்த பிறப்பிற்கு அச்சாரம்!

ரத்னமாலா அசுரமன்னன் மகாபலியின் மகளாவாள். மகாவிஷ்ணு வாமனராக உருக்கொண்டு மகாபலியின் அவைக்குவர வாமனரைக்கண்ட ரத்னமாலாவிற்கு வாமனுருவிற்கு பாலூட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவள் கர்ம காரணப்படி அவள் பிறந்த அடுத்தபிறவி பூதகி. தன் முற்பிறவி எண்ணப்படி அவள் கிருஷ்ணருக்கு பாலூட்ட முற்பட்டு இறக்கின்றாள்.

காசியில் தவம் செய்துவந்த புலஸ்தியமுனிவர் துரோணாசலன் என்ற மலையரசனின் மகன் கோவர்த்தனை தன்னிடம் அளிக்குமாறு கேட்க மகனை பிரிய மனமில்லா நிலையில் தந்தையிருக்க மகனோ ஒரு நிபந்தனையுடன் புலஸ்திய முனிவருடன் செல்லத் தயாரானான். முதலில் எங்கே இறங்கி விடுகின்றாரோ அங்கேயே நான் தங்கி விடுவேன் என்றான். விரிஜா மண்டலத்தைக் கடந்த சென்று கொண்டிருந்தபோது ஓர் இடத்தில் கோவர்த்தனை வைத்துவிட்டு நீராடச் சென்றார். திரும்பி வந்து கோவர்த்தனைத் தூக்க அவரால் அவனை அசைக்கக்கூட முடியவில்லை. பெரும் மலையாக மாறினான் கோவர்த்தன். கோபம் கொண்ட புலஸ்தியர் ஒவ்வொரு நாளும் கடுகளவு பூமிக்குள் சென்று இறுதியில் மலை முழுவதும் பூமியில் புதைய சாபமிட்டார். சாபத்தின் பலனாக சிறிது சிறிதாக குறைந்து சிறிய மலையானது.

விரஜா மண்டலத்தைச் சேர்ந்த ஆயர்பாடி மக்கள் கிருஷ்ணனைக் கொண்டாடி மகிழ்வதில் காலத்தைக் கடத்தினர். அதனால் இந்திர விழாவைக் கொண்டாடவில்லை. இது இந்திரனுக்கு வருத்தத்தை அளித்தது. மழைக்கு அதிபதியாகிய இந்திரன் கோபத்தினால் பேய்மழை ஏழு நாட்கள் தொடர்ந்து பொழிய வைக்க ஆயர்பாடி மக்கள் வீடிழந்து பயிர் பச்சைகள் அழிய அடை மழையால் நிற்க இடமின்றி தவித்தனர். மக்கள் மழையால் அவதியுறுவதைக் கண்ட கிருஷ்ணன் அருகிலிருந்த கோவர்த்தன் மலையைத் தூக்கி தன் ஒற்றை விரலால் குடையாய் பிடிக்க மக்கள், பசுக்கள் மற்றும் சகல ஜீவன்களும் அதன் கீழ் பத்திரமாய் தங்கினர்.

இந்திரன் கிருஷ்ணரின் பெருமையறிந்து மன்னிப்பு வேண்டினான். மக்கள் தங்களை காத்திட்ட கிருஷ்ணனையும் கோவர்த்தன் மலையையும் வணங்கினார்கள். விரஜா வாசிகள் கோவர்த்தன் மலைக்கு நைவேத்தியம் ஆரத்தி எடுத்து விமரிசையான பூஜை-அன்னகூடபூஜை செய்தனர். கிருஷ்ணருக்கு ‘கோவர்த்தன கிரிதன்’ என்றும் கிரிதரகோபலன் என்றும் பெயர் ஏற்பட்டது. பர்ஸானாவிலிருந்து 21 கி.மி. கோவர்த்தன் மலையை வழிபடும் கோவில்- கிரிராஜ்தான்கடி

இருக்கும் நீர் நிலையை மக்கள் பயன்படுத்த முடியாவகையில் செயல்பட்ட காளிந்தி பாம்பின் மீது தன் கால்பதித்து அதன் அகந்தை அகற்றியதால் ஞானம் பிறந்த காளிந்திக்கு அவன் நஞ்சை நீக்கி அபயம் அளித்து மக்கள் நீரை உபயோக்க உதவி செய்தார்.

வஞ்சகமாக தன்னை அழிக்க நினைத்த அரக்கர்களான சகடாசூரனையும், பூதகியையும் கொன்றார்.

வேதங்கள், சாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயம், பண்பாடு எல்லாம் ஆத்மவின் உடல் உள்ளம் இரண்டையும் தூய்மையாக்கும் நல்லுரைகளை வழங்குபவை. எத்தனை உயிர்கள் அவற்றை சரியாகப் பின்பற்றுகின்றோம். கலியுகத்தில் உயிர்கள் அவைகளை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்தால் ஆடம்பர வாழ்கை முறைகளை தன் வாழ்க்கையில் புகுத்திக் கொண்டாலும் துன்பம் நேரிடும்போது ஆத்மா வேதங்களின் பாதையில் செல்ல விழைகின்றது.

குளம், குட்டை, ஆறுகளில் சிறுநீர் மலம் கழித்தல் தவறு, ஆடையில்லாமல் நீர் நிலைகளில் நீராடாதே. இது வேதம் சொல்வது.

ஊனக் கண்களினால் ஊனத்தை பார்க்கும் நாம் அறிவுக் கண்ணால் ஞானத்தைப் பார்க்க வேண்டும்.

நீர் வாழ் இனங்கள் நச்சுப் பிராணிகள் நமது உடல் உறுப்புகளை தீண்ட வாய்ப்புண்டு. அது அந்த உயிர்க்கு ஊறு விளைவிக்கும். இதை உணர்த்தவே ஆடைகளின்றி நீரில் குளித்துக் கொண்டிருந்த கோபியர்களின் ஆடையை ஒளித்து வைத்து கண்ணன் நடத்திய நிகழ்வு. தலைக்குமேல் கைகூப்பி வணங்க வேண்டி நிலை ஏற்பட்டதை கோபியர்கள் மறக்கமாட்டார்கள். இன்னொரு முறை ஆடைகளை களைந்து நீராட மனம் விரும்பாது. தண்டனையாக வேதத்தை போதித்தார் கண்ணன். ஆனால் அது கண்ணனின் லீலையாக கருதப்பட்டு விட்டது.

கம்சனை அழிக்கும் காலம் வரும்வரை கோகுலத்தில் கண்ணனாக வாழ்ந்தவர் மதுராவில் மக்களின் துயர் தீர்க்க தந்தையைச் சிறையிட்டு தானே முடிசூடிக்கொண்ட கம்சனைக் கொன்று உக்கிரசேன மகாராஜாவை சிறையிலிருந்து விடுவித்து அவர் ஆசியுடன் மதுரா மன்னனார்.

போரில் மக்களின் உயிர்கள் அழிவதால் ஏற்படும் இன்னல்களைத் தடுக்க கடலின் நடுவில் துவாரகையை அமைத்து ஜராசந்தனுடன் போரிடும் முறையை மாற்றினார். சமயம் வரும்போது விவேகமாக இருப்பதும் வீரம் என்பதை தன் செயலால் உணர்த்தியவர்.

ருக்மணியை சிசுபாலனுக்கு மணமுடிக்க இருந்த நிலையில் தன்மனதில் குடியிருந்த கண்ணனை, குலதெய்வம் கோயிலுக்கு தான் வரும்பேது கடத்திசென்று மணம்புரிய காதல் கடிதம் எழுத அவ்வாறே கண்ணன் மணமுடித்து துவாரகையின் மாடவீதிகளில் செல்ல அனைவரும் வணங்க உலகாளும் மன்னனை அடைந்தோம் என ஆணவம் கொண்டாள் ருக்மணி. அப்போது துர்வாசமகரிஷி அங்குவர தான் அமர்ந்த தேரை கண்ணனும் ருக்மணியும் இழுக்க விரும்ப, உடல் உழைத்திராத ருக்மணி நாவரண்டு சிரமப்பட கண்ணன் நிலத்தை கீர கங்கை தோன்ற தாகம் தீர்த்த ருக்மணியை, அதிதியான என்னை கவனியாமல் உன் கணவன் இறைவன் என்ற இருமாப்பில் என்னை அவமதித்தாய் என்று கோபமடைந்து கணவனுடன் 12 ஆண்டுகள் இனைந்துவாழ இயலாது என சாபம். கண்ணன் ருக்மணியிடம் அகங்காரம் கொள்ளாதே ஆடம்பரத்திற்கு அடிபணியாதே என ஆறுதல்

ருக்மணியிட்ம் மறுகரையில் இருக்கும் துர்வாசமுனிவரிடம் நிவேதனப் பொருளை கொடுத்துவரச் சொன்னார் கிருஷ்ணர். வெள்ளம் அதிகமாக இருக்க திகைத்த ருக்மணியிடம் ‘கண்ணன் நித்யபிரம்மச்சாரி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக் கண்ணன் கூறிவாறு சொல்லி ஆற்றைக் கடந்தாள். துர்வாசரிடம் நிவேதனப் பொருளைக் கொடுத்து திரும்பும்போது நதியைக் கடக்க துர்வாசர் கூறியபடி, ‘துர்வாசர் நித்ய உபவாசி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக்கூறி நதியைக் கடந்தாள்.

திரும்பி வந்தவள் கண்ணனைப் பார்த்து, என்னுடன் குடும்பம் நடத்தும் நீங்கள் நித்ய பிரம்மச்சாரி என்கிறீர்கள், நான் கொடுத்ததை உண்டுவிட்டு துர்வாசர் நித்ய உபவாசி என்கிறார் இது எப்படி சரி என்று கேட்க, கண்ணன், ‘எங்கள் இருவருக்கும் எதன் மீதும் பற்று இல்லை. அதனால் இல்லறத்தில் இருந்தாலும் நான் பிரம்மச்சாரி, நீ அளித்ததை உண்டாலும் துர்வாசர் உபவாசி என்றார். பற்று இன்றி, அனைத்தும் இறைவனது என எண்ணி வாழ்ந்தால், வாழ்க்கை பயணம் ஆனந்தமும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும் என்பதை ருக்மணிக்கு புரிய வைத்தார்.

நாட்டில் தர்மம் நிலைக்க பாண்டவர்கள் வெற்றி அவசியம் என்பதற்காக பல செயல்கள் நடைபெற்றது. அந்த செயல்கள் எல்லாம் நடைபெறவில்லையாயின் பாண்டவர்களுக்கு வெற்றி என்பது நிச்சயமாக கிடையாது. அந்த வெற்றிக்காக முன்கூட்டியே நடந்த செயல்கள் ஒவ்வொன்றிற்கும் இறையின் ஆலோசனை, அரவனைப்பு இருந்து கொண்டிருந்ததுதான் நிதர்சனம். சதுரங்கத்தில் வெற்றி பெற சதுரங்க காய்கள் எப்படி நகர்த்தப் படுகின்றதோ அதைப் போன்றே பாண்டவர்கள் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிட்ட பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. எதிரி எவ்வளவு பல சாலியாகவும் சக்தி மிக்கவராக இருப்பினும் தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக விஷ்ணுவாகிய பெருமாள் கிருஷ்ண அவதாரமெடுத்து தர்மத்தை நிலைநாட்ட பல நிகழ்வுகளை தர்மத்துக்கு சாதகமாக்கி பாண்டவர்கள் வெற்றிபெற உதவியாகயிருந்த அந்த நிகழ்வுகளை அனைவரும் அறிவோம்!

பண்டவர்கள் இறையருள் நிறைந்தவர்கள். அடக்கம், வாய்மை பண்புகளைக் கொண்டிருந்த வீரர்களான அவர்களுக்கு இறுதிவரை எல்லா நிலைகளிலும் உதவி செய்தார் கிருஷ்ணர். காண்டவ பிரஸ்தமாக இருந்த முள்வனத்தை மனம் தளராமல் உழைக்க வைத்து அழகிய இந்திரபிரஸ்தமாக மாற்ற உதவினார்.

சூதாட்டம் கண்ணனுக்கு தெரியக்கூடாது என தர்மர் நினைத்ததால் கிருஷ்ணர் அங்கு வரவில்லை. தர்மரின் அந்த நினைவே பாண்டவர்கள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து பாஞ்சாலியையும் இழந்தனர். அவையில் பாஞ்சாலி துகிலுரியப்படும்போது பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார் ஆகியோர் தம் கண்களைத்தான் மூடிக் கொண்டார்களேயன்றி முழுவதுமாக அந்த அநியாயத்தை எதிர்க்கவில்லை.

கண்ணா அபயம் என்று பாஞ்சாலி சரணடைந்ததும் சேலையை அனந்தம்- (அளவின்மை, அளவில்லாதவை) என்ற எல்லையில்லாமல் வளரச் செய்து திரௌபதியான பாஞ்சாலிக்கு கருணை காட்டினார். காட்டில் பாண்டவர்களின் பசியைப் போக்க அட்சயப்பாத்திரத்தை சூரியனிடமிருந்து பெற உதவினார். வனத்தில் கோபத்திற்குரியவரான துர்வாசரால் பாண்டவர்களுக்கு துன்பம் விளைவிக்க சகுனி முயற்சித்தபோது அட்சயப் பாத்திரத்தில் ஒட்டியிருந்த ஒர் பருக்கையை உண்டு துர்வாசரின் பசிபோக்கி பாண்டவர்களைக் காப்பாற்றினார்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்திற்காக கூகூர்-திருச்சேறை அருகில் வந்தபோது ஒரு மாமரத்தில் மாங்கனி இருப்பதைக் கண்ட பாஞ்சாலி அதைக் கேட்க ஒவ்வொருவராக முயற்சித்தும் மரம் அசையவில்லை. பின் ஐவரும் ஒன்று சேர்ந்து உலுக்க பழம் கீழே விழ அதை பாஞ்சாலியிடம் கொடுக்க அப்போது அங்கே வந்த முனிவர், இந்த மரத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு மாங்கனி காய்க்கும். துர்வாசர் வந்துகேட்டால் மாங்கனி அவர் மடியில் விழும். அதனால் இந்தப் பழத்தை மரத்திலேயே வைத்துவிடு என்று கூறிச் சென்றார். இப்படிச் சிறப்பு வாய்ந்த மாங்கனியை எப்படி மீண்டும் மரத்தில் சேர்ப்பது என நினைத்து கிருஷ்ணரிடம் வேண்ட அவர் கணியை மரத்தின் கீழ் வைத்து விட்டு அவரவர் மனதில் இருக்கும் உண்மையான தகவலைக் கூறக் கூற கனி சிறிது சிறிதாக உயர்ந்து மேலே சொல்லும் தவறாக தகவல் கொடுத்தால் அப்படியே நின்று விடும் என்றார். அதன்படி ஒவ்வொருவரும் ஒரு உண்மைத் தகவலைச் சொல்ல கணி உயர்ந்து மரத்தில் ஒட்டிக் கொண்டது. ஆம்பரம்-மாமரங்கள் நிறைந்த இடம்-ஆம்பரவனேஸ்வரர். பண்டவர்கள் வழிபட்டது. ஆதித்த சோழனால் கட்டப்பட்டது- ஆதித்தேசுவரம்- இறைவன் ஆதித்தேசுவரர். துர்க்கையின் கரத்தில் கிளி.-கூகூர்-திருச்சேறை அருகில்

இருபத்தெட்டாவது சதுர்யுக துவாபரயுகத்தில் நரநாராயணர்களே கிருஷ்ணனும் அர்ஜுனனும் எனப் பிறந்தார்கள் என்கிறது பாகவதம். அர்ஜுனன் எல்லா நிலையிலும் கிருஷ்ணரின் ஆலோசனையின் பேரிலேயே செயல் பட்டு வெற்றிகளைப் பெற்றான். பாசுபத அஸ்திரம்பெற வழிவகைகளைச் சொல்லி அர்ஜுனன் அதை அடைவதற்கும் சுபத்திரை திருமணம் முதல் அனைத்தும் கிருஷ்ணரின் உதவியுடன்தான் நடந்தேறீயது.

ஆயுதம் தாங்காமல் யுத்தத்தின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக அமர்ந்து நாகாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை காப்பாறினார். பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் தங்கள் கடமையை எப்படி செய்ய வேண்டும் என்பதை வழிகாட்ட வேண்டியதுதான் இறைபணி என்பதை உணார்த்தவே கிருஷ்ணர் சாரதியாக தேரோட்டியாக செயல் பட்டார்.

ஒவ்வொரு உயிரும் எந்த நல்ல தர்ம செயல்களாக இருந்தாலும் தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டு இனி எல்லாம் உன் செயல் என்று சொல்லும் பக்குவத்தை அடையவேண்டும். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே, என்னிடம் விட்டுவிடு என்பதை உணர்த்தவே பாரதபோரின்போது உலகப் புகழ் பெற்ற கீதா உபதேசம் நடைபெற்றது.

சத்யபாமாவிற்கு தான் அழகு என்பதில் கர்வம்! விஷ்ணுவின் சக்ரத்திற்கு இந்திரனின் வஜ்ராயுதத்தை துளாக்கியதால் தானே பலசாலி என்று கர்வம்! தன்னைவிட வேகமாகப் பறக்க யாராலும் முடியாது என்று கருடனுக்கு கர்வம்! இவர்களின் கர்வத்தை நீக்க நினைத்த கிருஷ்ணர்,

துவாரகா எல்லையில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அனுமனை வரச் சொன்னார். கருடனிடம் சிறுபடை ஒன்றை கொண்டு நகரின் எல்லையில் உள்ள தோட்டத்தில் அட்டகாசம் செய்யும் அந்த வானரத்தை பிடித்துவரச் சொன்னார். வனரத்தைப் பிடிக்க படையா என்று நினைத்து தனியே சென்ற கருடன் எவ்வளவு முயன்றும் வானரத்தை பிடிக்க முடியவில்லை. கிருஷ்ணரிடம் சென்று சொல்ல, ஸ்ரீராமன் அழைப்பதாகச் சொல், வருவார் என்றார்.

ஸ்ரீராமர் அழைக்கின்றார் என்று சொன்னவுடன் பரவசமான அனுமன் கருடனை முன்னே போகச் சொல்ல, கருடன் நான் உன்னை விரைவாக தூக்கிச் சென்று விடுகின்றேன் என்று சொன்னதை வானரம் மறுக்க, கருடன் பறந்து கிருஷ்ணர் இருக்குமிடம் செல்ல ஆரம்பித்தார். தனது சக்கரத்திடம் யாரும் துவரகா எல்லைக்குள் வரமால் பார்த்துக்கொள் என்று சொல்ல வானரம் வருவதை அறிந்த சக்கரம் வானரத்தைத் தடுக்க அந்தச் சக்கரத்தை தனது கையால் பிடித்து வாயில் போட்டுக் கொண்டார் அனுமன்.

சத்யபாமாவை சீதைபோல் உருவம்தாங்கி அலங்காரத்துடன் வரச் சொன்னார். அனுமனின் வருகையை எதிர்பார்த்து இராமர் கோலத்தில் கிருஷ்ணர் இருக்க அருகில் அலங்காரமாய் பாமா இருக்க அனுமன் ஸ்ரீராமரை வணங்கிவிட்டு சீதைபோலிருக்கும் அருகிலிருந்த பாமாவை வணங்கப் போனவன் பாமாவைக் கண்டு கோபம் கொண்டான். என் அன்னை எங்கே! அலங்கோலமாக இருக்கும் இந்தப் பெண் யார்! என்று அனுமன் கேட்க, கிருஷ்ணர் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்க, குனிந்த தலை நிமிராமல் இருந்த பாமாவின் தான் அழகு என்ற கர்வம் தூளாகி உடைந்தது. சீதையை அழகியா என நினைத்த தம்மை இந்த வானரம்கூட தான் அழகை அறியவில்லை என்றால், கணவனே தெய்வம் என்று வாழ்ந்த சீதையின் அழகைவிட தான் அழகில்லை என்று நினைத்தாள். அவளின் கர்வம் அடங்கியது.

ஸ்ரீராமர் உருவில் இருந்த கிருஷ்ணர் அனுமனை நோக்கி உன்னை யாரும் தடுக்க வில்லையா என்று கேட்டபோது தன் வாயிலிருந்து சக்ரத்தை எடுத்து வெளியேவிட்டார். ஒளி இழந்து மங்கிய நிலையடைந்திருந்த சக்ரம் தன் நிலை உணர்ந்து கர்வத்தை விட்டது.

வேகமாக வந்த கருடன் தனக்குமுன் அங்கு வானரம் இருக்கக் கண்டவுடன் தன்னை விட வேகமாக பறக்க ஒருவரால் முடியும் என்று அறிந்ததும் கருடன் கர்வம் அடங்கியது.

கிருஷ்ணரின் மனைவியரில் சத்யபாமாவிற்கு ருக்மணியைவிட தனக்குத்தான் அளவு கடந்த அன்பு உள்ளது என்று கர்வத்துடன் நினைத்திருந்தாள். கர்வம் கலந்த அன்பு தன் உயர் நிலையை இழந்து விடுகின்றது என்பதை சத்யபாமாவிற்கு புரிய வைக்க இருவருக்கும் ஒரு போட்டியை வைத்தார்.

துலாபாரத்தில் ஒரு தட்டில் அமர்ந்து கொண்டார். துலாபாரத்தை வைத்து அன்பை எடைபோடுவது என்றானதும் சத்யபாமா தன்னிடம் உள்ள பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம் என்று விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் சத்யபாமா கொண்டுவந்து வைத்தாள். எவ்வளவு வைத்தும் தட்டு சிறிதளவுகூட உயரவில்லை.

அடுத்ததாக அவற்றையெல்லாம் எடுத்துவிட்டு ருக்மணியின் முறை வந்தபோது அவள் தன்னைவிட உயர்ந்த பொருட்கள் எதை வைக்கின்றாள் என்று சத்யபாமாவும் மற்றவர்களும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க ருக்மணி கிருஷ்ணரை வணங்கி தோட்டத்திற்குச் சொன்று சிறிது துளசி இலைகளைக் கொண்டுவந்து வைத்தாள். உடன் துலாபாரம் உயர்ந்தது. சத்யபாமா அப்போது தன் அன்பில் கர்வம் குடியிருப்பதை உணர்ந்தாள். தூய அன்பு மற்றும் துளசியின் பெருமை இதனால் உணரப்பட்டது.

கிருஷ்ணபக்தி யாரிடம் அதிகமாக இருக்கின்றது என்பதை அறிய எண்ணிய கிருஷ்ணன் தனக்கு தலைவலி எனச் சொன்னார். அந்த தலைவலி போகவே இல்லை. அங்கு வந்த ரிஷி நாரதர் உண்மையை உணர்ந்து கிருஷ்ணரிடம் உண்மையான பக்தி கொண்டவrகளின் பாத தூளியை கொண்டுவந்து தடவினால் வலி நீங்கும் என்றார். ருக்மணி சாத்யபாமா இருவரும் பாத தூளியினை பகவான் நெற்றியில் தடவுவதா என மறுத்துவிட்டனர். நாரதர் பிருந்தாவனத்திற்கு ஆட்களை அனுப்ப அங்கிருந்த கோபியர்கள் அனைவரும் வருத்தமுற்று தங்களின் கால்களில் உள்ள தூளியை சேர்த்து மூட்டையாகக் கட்டி இங்கு அனுப்பினர். அதை தடவியதும் அவர் தலைவலி நின்றது. கோபியரின் மேன்மை அப்போது புரிந்தது.

பூமாதேவியைக் கடத்திகொண்டுச் சென்று ஆழ்கடலில் ஒளித்துவைத்தான் இரண்யாட்சன் என்ற அசுரன். திருமால் வராக அவதாரமெடுத்து பாதாளாலோகம் சென்று இரண்யாட்சனுடன் போர் புரிந்து அவனைத் தன் கோரப்பற்களால் குத்தி கிழித்து வதம் செய்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார் திருமால் அசுர சம்ஹாரத்தினால் ஏற்பட்ட கோபம் தீராத வராக மூர்த்தியினால் கடல்வாழ் உயிரினங்கள் துன்பமடைந்தன. முனிவர்கள் கயிலைநாதனிடம் சொல்ல சிவன் தன் கைகளினால் வராகத்தின் கொம்புகளை உடைக்க அதன் ஆவேசம் அடங்கி ஸ்ரீ விஷ்ணுவாக மாறினார்.

அப்போது திருமாலுக்கும் பூமாதேவிக்கும் ஏற்பட்ட உறவால் பிறந்தவன் நரகாசுரன். தன் பிள்ளைக்கு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று சாகாவரம் கேட்டாள் பூமாதேவி. சாகாவரம் நேரிடையாக தரக்கூடாது என்பதால் தாய் தவிர வேறு எவராலும் மரணம் ஏற்படாது என வரமளித்தார். நீ விரும்பும்போது உன்னாலன்றி அவனுக்கு மரணம் வராது என்றார். வளர்ந்த நரகாசுரன் இந்த வரத்தால் அசுர பலம்பெற்று தனக்கென்று ஒர் நாட்டை உருவாக்கிக் கொண்டு மற்ற நாடுகளையும் ஆக்கிரமித்தான். தேவர்களையும் தவம் செய்யும் முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்திய நரகாசுரன் பற்றிய செய்திகளை அவர்கள் விஷ்ணுவிடம் கூறி தங்களை அவனிடமிருந்து காப்பாற்ற வேண்டினர்.

பூமாதேவி சத்யபாமாவாகப் பிறந்து கிருஷ்ணனின் மனைவியாக இருந்தாள். நரகாசூரனுடன் போர் புரிய கிருஷ்ணன் தன் தேரோட்டியாக சத்யபாமாவையே அழைத்துச் சென்றார். நரகாசூரன் விட்ட அம்பு தன்மேல் படும்படி செய்து அதனால் மயக்கமடைந்தவர் போலிருந்தார். இதைக்கண்டு கோபமடைந்த சத்யபாமா வில்லை எடுத்து நாணேற்றி நரகாசூரன்மீது அம்பை எய்தினாள். அம்மா என்று அலறியபடி நரகாசூரன் விழா அதைக்கேட்டு எழுந்தார் கிருஷ்ணன். நரகாசூரன் அவ்வாறு அலறியதற்கு காரணம் என்ன என்று சத்யபாமா கேட்க, நீ முந்தைய அவதாரத்தில் பூமாதேவியாக இருந்தாய். அப்போது நமக்குப் பிறந்தவன் இந்த நரகாசூரன். அவன் அட்டூழியங்கள் அதிமாகிவிட்டன. தாயைத் தவிர வேறு யாராலும் மரணமில்லை என்று வரம் பெற்றதால் உன்னை வைத்து அவன் அட்டூழியங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தேன் என்றார். தாய்பாசம் பொங்கி இருக்கும் சத்யபாமாவிடம் நரகாசூரன் நான் மோட்சத்தைப் பெறும் இந்நாளை உலக மக்கள் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் எனவேண்ட அவள் கிருஷ்ணரைப் பார்க்க அவரும் அவ்வாறே வரம் தந்தார். தீபாவளி- ஐப்பசி சதுர்தசி நாளான அன்று மக்களுக்கு கங்காஸ்நானம் செய்த பலன் கிட்ட அருள் புரிந்தார்.

பிண்டாரக் சேத்திரம் என்ற இடத்திற்கு வந்த விஸ்வாமித்திரர், கண்வர், நாரதர் ஆகிய முனிவர்களை யாதவ குமாரர்கள் கிண்டல் செய்ய ஜாம்பவதியின் மகனான சாம்பனுக்கு பெண்வேடமிட்டு முனிவர்கள் முன் நிறுத்தி இவள் கர்ப்பவதி இவளுக்கு ஆண் குழைந்தையா, பெண் குழைந்தையா எனக் கேட்க உண்மை உணர்ந்த முனிவர்கள் ஓர் உலக்கைப் பிறக்கும். அது உங்கள் குலத்தையே அழிக்கும் என்றனர்.

அப்படியே நடக்க- உலக்கைப் பிறந்தது. பயந்த யாதவர்கள் அந்த இரும்பு உலக்கையை பொடிபொடியாக்கி கடலில் கரைத்தனர். இரும்புத் தூள்கள் கடற்கரையில் வந்து படிந்து நாணல் புதராக வளர்ந்தது. மீதி இருந்த இரும்புத் துண்டை மீன் விழுங்க அந்த மீன் மீனவன் வலையில் அகப்பட அதைக் கொன்றவன் அந்த இரும்புத் துண்டை வீசி எறிய அது ஜரா வேடனின் கையில் கிடைக்க கூர்மையாக இருந்த அந்த இரும்புத்துண்டை அவன் தன் அம்பில் பொருத்திக் கொண்டான்.

விதியின் வேலை சரியாக நடக்க யாதவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு தங்களிடமிருந்த ஆயுதங்கள் எல்லாம் தீர்ந்ததால் கடற்கரையில் உள்ள நாணல் புற்களைப் பிடுங்கி சண்டையிட உலக்கை துகள்கள் பட்டு அனைவரும் இறக்க கடல் வெள்ளம் துவாரகா நகரில் புகுந்து நகரை மூழ்கடித்தது.

கிருஷ்ணர் தான் பூஜித்து வந்த விக்ரகங்களை கடலில் விட்டு தியானத்தில் அமர்ந்தார். கடல் தண்ணீரில் வேடன் ஜரா விட்ட கூரிய அம்பு மிதந்து வந்த கிருஷ்ணரைக் குத்த மானிட சரீரத்தை துறந்து பிரம்ம சொரூபத்தில் ஐக்கியமாகி வைகுண்டம் சென்றார்.

கிருஷ்ணரைப் பிரிந்த துக்கம் தாளாமல் கோபியர்கள் பதினாறாயிரம் பேரும் துவாரகை அருகில் இருந்த குளத்தில் விழுந்து உயிர் துறந்தனர். அவர்கள் உயிர் தியாகம் செய்த குளம் கோபிதலாவ். குளத்தின் பக்கப் பாறைகள் சந்தன மணம் தருகின்றன. உயிரை மாய்த்த கோபியர்கள் சந்தனமாக மாறினர். இந்தக் குளத்தின் மண்ணிலிருந்துதான் கோபி சந்தனம் தயாரிக்கப்படுகின்றது. துவாரகை-கோபிதலாவ்

பலகாலங்கழித்து கேரளக் கடற்கரையில் வலை வீசிய மீனவன் கையில் ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்கணன், ஆகிய நான்கு விக்ரகங்களும் கிடைத்தன. சிற்றரசன் வாய்க்கல்கைமள் என்பவனிடம் ஒப்படைக்கபட்ட விக்கரகங்கள் ஒவ்வோர் இடத்தில் பிரதிஷ்டை. இராமர் விக்ரகம் திருப்பரையாரில் பிரதிஷ்டை. லட்சுமணன்- திருமூழிக்களம், பரதன்- கூடல் மாணிக்கத்தில், சத்ருக்கனன்-பாயமேயில் எனப் பிரதிஷ்டை. திருப்பரையார்-கேரளா

விஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் காளி.

ஸ்ரீ கிருஷ்ணனை வழிபட்டால் சந்திர தோஷம் நீங்கும் எண்ணற்ற கோவில்கள் உள்ளன

#####

Read 20467 times Last modified on சனிக்கிழமை, 20 October 2018 06:04
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26948194
All
26948194
Your IP: 44.197.195.36
2024-03-29 15:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg