Print this page
சனிக்கிழமை, 27 July 2019 08:50

அழகான உடம்பும், கவர்ந்திழுக்கும் ஆளுமையும்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#*#*#*#*#


2. அழகான உடம்பும், கவர்ந்திழுக்கும் ஆளுமையும!

உடல் உறுப்புக்களின் நேர்த்தியும்.38 வகையான பொருட்களும் வேண்டப்படுகின்றன

அழகான உடம்புறுப்புகளை வேண்டும் முதல் பகுதியிலிருந்து விலகி, வாழ்க்கையை மேம்படுத்தவும், செல்வத்தைப் பெறுக்கவும், விரும்பியதை அடையவும், இலக்கை நிர்ணயத்து அதை அடையவும் முற்படும் மனித வாழ்வு பற்றி இப்பகுதியில் சிந்திக்கப்படுகிறது. ஒழுங்கான உறுப்புகள் தனது உடம்பில் ஒருமனிதனுக்கு கிடைக்குமாயின், அடுத்தது அதிகாரத்தை நோக்கியும், ஆளும் திறனை நோக்கியுமே அவன் மனம் செல்லும். பரந்து விரிந்த நாட்டையும், நிலத்தையும் அடக்கி ஆளும் வேட்கையும் அவன் மனதில் கனல்போல் எறிவதற்கு அவனுக்கு சரியாக அமைந்த உடல் உறுப்புகளே காரணம். கோபப்படும் இடத்தில் கோபம் வரவேண்டுமென்று வேண்டப்படுவது இப்பகுதியின் சிறப்பு. ஹிந்துமதம் ஒருபோதும் முழுகொல்லாமையை கடைபிடிக்க அறிவுறுத்தியதில்லை. "சரியான நேரத்தில் சரியான காரணத்திற்கு கோபம் கொள்ளாதவன் கோழை" என்றார் தத்துவஞானி அரிஸ்டாட்டில். வால்மீகி ஸ்ரீ ராமரை அவர் கொண்ட "யுக்த க்ரோதத்திற்காக" பாராட்டுகிறார். கடலைத்தாண்ட வேண்டி, "கடல்கடவுளுக்கு" தன் உரிய வணக்கத்தையும், அர்ப்பணிப்புகளைச் செய்தும், சமுத்திரராசன் வராது போகவே, கோபம் கொண்டு கடலை அழித்துவிட துணிந்த இச்செயல் பாராட்டப்படுகின்றது. உலகவியலை விட்டு விலகிப்போகச் சொல்வதாக ஹிந்துமதம் ஒருபோதும் சொன்னதில்லை. "சம்ச மே, மயச்ச மே" என்று இவ்வுலகிலும், மேலுலகிலும் எது நன்மை பயக்குமோ அவைகள் உயிர்க்கு கிடைக்கட்டும் என்று வேண்டப்படுகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் விளயாட்டுக்களும், உன்னிப்பாக கவனத்தை செலுத்துதலும், கடந்து போன இனிமையான வாழ்வும், நடக்கவிருக்கும் ரம்மியமயமான நாட்களும், வேண்டப்படுவதை பார்க்கும்போது, சாதாரண விருப்பத்திலிருந்து படிப்படியாக உயர்ந்து சிந்தனையின் வளர்ச்சியை அடைந்துள்ளது புரியும்.

சம.ஸ்கிருதம்::

ஜ்யைஷ்ட்யஞ்ச ம ஆதிபத்யஞ்ச மே மன்யுச்சமே பாமச்ச மேமச்ச மேம்பச்ச மே ஜேமா ச மே மஹிமா ச மே வரிமாசமே ப்ரதிமா ச மே வர்ஷ்மா ச மே த்ராகுயா சமே வ்ருத்தஞ்ச மே வ்ருத்திச் சமே சத்யஞ்ச மே ஸ்ரத்தா ச ம ஜகச்ச மே தனஞ்ச மே த்விஷிச்ச மே க்ரீடா ச மே மோதச்ச மே ஜாதஞ்ச மே ஜநிஷ்யமாண்ஞ்ச மே சூக்தஞ்சமே ஸுக்ருதஞ்ச மே வித்தஞ்ச மே வேத்யஞ்ச மே பூதஞ்ச ம ருத்தஞ்ச ம ருத்திச்ச மே க்லுப்தஞ்ச மே க்லுப்திச்ச மே மதிச்ச மே சுமதிச்ச மே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

மனிதர்களில் மேன்மையாகப் போற்றப்படுவதும், தலைமையை ஒளிரச் செய்பவராயும், ஏற்கத்தகுந்த உட்பகைகளில் கோபமும், அளவிர்க்குட்பட்ட வெளிப்பகைகளின் கோபமும், ஆழங்காணமுடியாத மனமும், அதைச் சார்ந்த எண்ணமும், இனிமையான குளிர்ந்த தண்ணீரும், எதிரிகளை வெல்லும் திறமையும், தளராத ஆளுமையும் வெற்றியினால் கிட்டும் செல்வமும், பெருமையும், உள்ள பொருட்களிலேயே மிகவும் உயர்ந்த பொருளாக எல்லோராலும் மதிக்கப்பட்டதும், வீடு, நிலம் முதலிய செல்வமும், மேலும் கணக்கிடமுடியாத செல்வங்களும், உயர்ந்த படிப்பினால் ஏற்படும் எண்ணங்களும், ஆளுமையும், உண்மையும், "மறை" போன்ற உயர்ந்த "எழுதாக்கிளவி" நூலில் முழு ஈடுபாட்டுடன் கூடிய நாளைய வாழ்வும், அசையும் சொத்தும், அசையாச் சொத்தும், பலவித தங்கம் போன்ற சொத்தும், வெள்ளியும், மயக்கும் ஆளுமையும், சுண்டியிழுக்கும் ஆணத்தமும், உடம்பின் பெருமையும், எண்ணச் சிதறல்களை உண்டாக்கும் விளையாட்டுக்களும், அதனால் ஏற்படும் கேளிக்கையும், மக்கட்செல்வமும், பேரப்பிள்ளைகளினால் ஏற்படும் தலைமுறை பெருக்கமும், அழியாத தலைமுறையும், செல்வப் பெருக்கும், நன்னம்பிக்கையும், மரம், செடி போன்ற பொருட்களும், பணமும், உண்டானதும், உண்டாகப் போவதும், பலன்களும், சேமித்த பொருளும், இனி கிடைக்கக்கூடிய பொருளும், சேமித்த நிலம் முதலிய சொத்தும் எளிதில் சென்றடையக்கூடிய ஊரும், நல்ல வழியும், இறந்த பின் நான் கொண்டுபோகும் நற்பயனும், இனிமையான பொழுது போக்கிறக்கு தேவையான சொகுசு வீடுகளும், என் வாழ்வை துன்பமின்றி நடத்த தேவையான இயற்கை வளங்களும், சேமிப்பும், அவற்றைச் சரியாக பயன்படுத்தும் வழிமுறைகளும், கைகூடவிருக்கும் நற்பயனும், ஒழுங்காகத் திரட்டிய பொருளும், ஒரு செயலை திறமையாக செய்யக்கூடிய பண்பும், ஊகித்தறியும் திறமையும், நிர்வாகம் முதலியவற்றைப் பராமரிக்கக்கூடிய மனஉறுதியும், இக்கட்டான நிலையை கையாளும் திறனும், ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்.

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

#####

Read 3548 times Last modified on சனிக்கிழமை, 27 July 2019 10:18
Login to post comments