Print this page
சனிக்கிழமை, 27 July 2019 08:53

ஆசை, இச்சை, நிறைவேற வேண்டும்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

#*#*#*#*#

3. ஆசை, இச்சை, நிறைவேற வேண்டும்!

36 வகையான 'இன்பங்கள்' சிவனிடம் வேண்டப்படுகின்றன.

உலகவியலில் மனிதன் குறுகிய வாழ்வில், அவனுக்கு பலவகையான இன்பங்கள் தேவைப்படுகின்றது. இந்தப் பகுதியில், வார்த்தைகள் மிகவும் நுணுக்கமாக இரண்டு இரண்டாக கோர்க்கப்பட்டு போது மனிதனின் மனக்கண்ணாடியும், என்ன ஒட்டங்களும் தெளிவாகப்பட்டுள்ளன. முதலில் இன்பத்தை விரும்பிக் கேட்கும் மனித மனம், பின் நல்ல சந்ததியினரைக் கோரி, சுவையான வாழ்வைக் கொடுக்கச் சொல்லி, இவற்றையெல்லாம் அடையத் தேவையான செல்வச் செழிப்பை வேண்டி, ஆளும் திறனையும் கூட்டி, கடைசியாக மேலுலக இன்பத்தை நாடுவதாக கோரப்படுவது சிறப்பான சிகரமாக அமைந்துள்ளது. இவ்வுலக இன்பங்களையும் மேலுலக இன்பங்களையும் ஒருங்கே வேண்டும் மனிதனின் ஆசை இயல்பாக சித்தரிக்கப்பட்ட இப்பகுதி ஒரு 'வைர மகுடம்' எனலாம்.

சமஸ்கிருதம்::

சஞ்ச மே மயச்ச மே ப்ரியஞ்ச மேனுகாமச்ச மே காமச்ச மே காமச்ச மே ஸொமனஸச்ச மே பத்ரஞ்ச மே ஸ்ரேயச்ச மே வஸ்யச்ச மே யசச்ச மே பகச்ச மே த்ரவிணஞ்ச மே யந்தா ச மே தர்த்தா ச மே க்ஷேமச்ச ம த்ருதிச்ச மே விச்வஞ்ச மே மஹச்ச மே ஸம்விச்சமே ஜ்ஞாத்ரஞச மே ஸூச்ச ம ப்ரசஸூச்ச மே ஸீரஞ்ச மே லயச்சம ருதஞ்ச மேம்ருதஞ்ச மேயக்ஷ்மஞ்ச மேநாமயச்ச மே ஜீவாதுச்ச மே தீர்க்காயுத்வஞ்ச மேநமித்ரஞ்ச மேபயஞ்சமே ஸுகஞ்ச மே சயனாஞ்ச மே ஸூஷா ச மே ஸுதினஞ்சமே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

இவ்வுலக இன்பமும் மேலுலக இன்பமும் அன்பும் அதனால் ஏற்படும் ஆசையும் அவ்வாசையின் அனுபவமும் மனதிற்கினிய உற்றாரும், சீரான இவ்வுலக வாழ்வும், மங்களமும் உயர் நலமும் நல்ல இருப்பிடமும், புகழும், பொன்னும் செல்வமும், தவ வலிமையும், அதனால் கிடைக்கப்பெற்ற பலனை பாதுகாக்கும் திறனும், வழிகாட்டும் ஆசிரியரும், தந்தை போன்று தாங்குபவனும் -மேன்மை பொறுந்திய பெரியவர்களும், நல்லொழுக்கத்தை போதிப்பவனும் -என்னை சரியான பாதையில் வழிநடத்திச் செல்பவனும், மனஉறுதியும், எல்லோருடைய உதவியும், வெகுமானமும், வேள்வியும் வேள்வியின் பாதையில் செல்ல வழிகாட்டும் நூலும், அதன் அறிவும், நான் கற்றரிந்தவற்றை கற்றுக்கொடுக்கும் திறனும், மக்களை ஏவும் திறமையும், பணியாட்களையும் மற்றவர்களையும் நடத்தும் திறமையும், மேழிச் செல்வமும், பயிர்த்தொழிலில் ஏற்படும் இடையூறுகளின் ஒழிவும், வேள்வி முதலிய நற்கருமமும், அதன் பலனும், நீடித்த குடல் முதலிய நோயின்மையும் குறுகிய காய்ச்சல் முதலிய நோயின்மையும், நோயற்ற வாழ்வுக்குரிய மருந்தும், என்வாழ்வின் நாட்களை கூட்டும் மூலிகை மருந்துவகைகளும், நீண்ட ஆயுளுடன் கூடிய எதிர்பாராத மரணமின்மையும், நண்பர்களில்லாதமையும், அச்சமின்மையும், நன்னடத்தையும், நல்ல தூக்கமும், கடவுளின் திருவுள்ளத்துடன் கூடிய விடியற்காலையும், வேள்வி, மறைஒதுதல், வேள்வி பயிலுதல் முதலிய நல்ல செயல்களினால் ஒளிரும் பகற்பொழுதும், ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைககட்டும்.

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி !!

#####

Read 4071 times Last modified on சனிக்கிழமை, 27 July 2019 10:18
Login to post comments