gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 10 December 2019 07:48

கடவுள் வாழ்த்து!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

கடவுள் வாழ்த்து!

1. ஒன்றாய் இருப்பவன் சிவன். இனிய சக்தியுடன் இரண்டானவன். நான்முகன், திருமால், உருத்திரன் என மூன்றானவன் அறம், பொருள், ,இன்பம், வீடு என நான்காவும், மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐந்தாகவும்,, மூலதாரம், சுவதிட்டானம், மணிபூரகம், அநாதகம், விசுக்தி, ஆக்ஞை என் ஆறு ஆதாரமாகவும், ஏழாவது ஆதாரமான சகஸ்ரதளத்தில் நிற்பவனாகவும் நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், கதிரவன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் கலந்து விளங்குபவனே!

2. இனிமையான உயிரிலே தூயவனாகப் பொருந்தி, நான்கு திசைக்கும் சக்திக்கும் தலைவனாக இருந்து தென்திசை இயமனை உதைத்த அந்த இறைவனை நான் பாடுகின்றேன்.

3. உயிர்களுடன் சமமாய் நிற்பவனும் அழிவற்ற தேவர்கள் அருக்கன் சிவன் என கூறி தினமும் வணங்கிடும் தலைவன் பக்கதில் நிற்கும் திருமால் மற்றும் முக்தி பெற்றவர்களும் அறியாத பரமனை அருகில் நின்று நாள்தோறும் வழிபடுவேன்.

4. ஜீவன்களின் மெய்ப்பொருள் ஆனவனே! வாணுலகத்தின் வித்தானவனே! நான் அடைக்கலமான இடத்திற்கு என்னைச் செல்ல விட்டானே! அந்த இறைவனை பகல் இரவு எனப் பாராமல் வணங்கித் துதித்து எதிரிடையாக இகலும் உலகத்தே என் மன இருள நீங்கி நிற்க வைத்தானே!

5.. எங்கு தேடினும் உலகில் சிவபெருமானைவிட சிறப்பான தெய்வமில்லை. உலகில் அவருக்கு ஒப்பானவரும் இல்லை. அண்டத்தை கடந்து நின்று அக்னி போன்ற பொன்நிற ஒளியால் ஒளிர்ந்து விளங்கும் செந்நிறமான மேல்நோக்கிய சகஸ்ரத் தாமரையில் இருப்பவனே!

6. சிவனைவிட மேன்மையுடைய தேவரெவரும் இல்லை அவரில்லாமல் செய்யும் தவமும் சிறப்பானதல்ல. அவரன்றி நான்முகன், திருமால், ருத்திரன் ஆகிய மூவரால் ஆவது ஒன்றுமில்லை. சிவனே முத்தி அடைவதகுரிய ஊரின் வழியைச் சொல்பவன்!

7. பொன் போன்று பிரகாசிக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், பிரமன், திருமால், ருத்திரன் ஆகிய மூவருக்கும் மேலானவன் மூத்தவன், தலைமகன், அவனை அப்பா என அழைத்தால் தந்தையாய் வந்து நின்று உயிர்களைக் காப்பவன் பெருமானே!

8. தாழ்ந்த சடையை உடையோனே, சிவபெருமானே! தீயைவிட வெம்மை உடையவனே! அவனை வணங்கும் அடியவர்க்கு நீரைவிடக் குளிர்ந்தவன். குழந்தையைப்போல் நல்லவன், நல் அன்பர் அடியவர்க்கு அருகில் இருப்பவன், தாயைப்போல் அருள் செய்பவன் அருள் புரியும் அந்த ஈசனை அறியாதார் இல்லை.

9. பொன்னால் செய்யப்பட்ட பொற்சடை என சொல்லும்படியாக பின்னால் அழகிய சடையை உடையவன். அவன் திருநாமம் நந்தி. என்பதாகும். அடியேனால் தொழப்படும் என் இறைவன் அவனால் வணங்கத்தக்கவர் யாரும் இல்லை என்பதுதானே உண்மை!

10. சிவபெருமான் தானே இந்த பெரிய உலகத்தை தாங்கி எங்கும் நீக்கமற நிறைந்து விண்னாய் விளங்குகின்றார்! பெருமானே சுடும் தீயாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் விளங்குவதோடு மட்டுமல்லாமல் அருள் மழை பெய்யும் சக்தியாய் இருந்து பெரிய மலையாகவும், குளிர்ச்சியான கடலாகவும் காட்சியளிக்கின்றார்.

11. அருகிலும் தூரத்திலும் எல்லாவற்றிற்கும் முன்னைய ஆதி இறைவனின் பெருமையை காணின் அவருக்கு ஒப்பான பெரிய தெய்வம் வேறு ஒன்றுமில்லை. முயற்சியும் முயற்சியின் முடிவும் மழைபெய்கின்ற மேகமும் நந்தி என்கிற அப்பெருமானே!

12. நெற்றியில் கண்னுடைய சிவபெருமான் ஒப்பில்லா அன்புடன் அழியாதிருக்க, எண்ணில்லாத தேவர்கள் இறந்துபட்டனர். மண் உலகத்தில் வாழ்பவரும் விண்-தேவ உலகத்தில் வாழ்பவரும் இப்பெருமானே உலகில் அழியாதிருக்க அருள் செய்பவன் என்பதை அறியாமலிருக்கின்றனர்.

13. மண் உலகை அளந்த பெருமாள், அவன் கொப்பூழில் தோன்றிய நான்முக ஆகிய தேவர்களும் தங்களது எண்ணத்தில் சிவனை நிறுத்தி நினையாமலிருப்பதற்கு அவர்கள் இன்பத்தில் திளைத்திருப்பதுவே காரணமாகும். விரிந்த வானத்தில் பரந்து இருக்கும் பெருமானைக் கடந்துபோய் அவர்களால் அறியமுடியவில்லை. அப்பெருமான் எல்லவற்றிலும் கலந்தும் கடந்தும் விளங்குபவன்.

14. சுவாதிட்டம் எனும் ஆதாரத்தில் வீற்றிருக்கும் பிரம்மனையும் மணிபூரகத்தில் வீற்றிருக்கும் திருமாலையும் கடந்து அநாகத்தில் வீற்றிருக்கும் ருத்திரனையும் கடந்து சிரசின்மேல் உள்ள சகஸ்ரத்தில் நின்று எல்லாவற்ரையும் காண்பவன் சிவபெருமானே!

15. பெருமான் உலகைப் படைப்பவன், அழிப்பவன், உடலைக் காத்து மாற்றங்கள் செய்பவன், எல்லாவற்றையும் கடந்து நிற்பவன். பேரருள் ஜோதியாய் ஓரிடத்தில் குவியாத இயல்புடன் ஊழிக்கூத்தை இயக்குபவனாகவும் நிலையான நீதியுடன் அழியாத தன்மை கொண்டு இருப்பவன்.

16. நரம்புகள் கொண்ட கொன்றை மலரை தனது சுருண்ட சடையில் தரித்தவன். முகத்தில் ஒளியையும் அகன்ற அழகான நெற்றியையும் உடைய உமையை தனது இடது பாகத்தில் வைத்திருப்பவன். அவனை மூவரும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தியுள்ள தன்மையுடன் இருக்கும்போது என்ன எனப் பாராட்டி குணத்தை பாராட்டி நாடுவர், நாடமாட்டார்கள்.

17. ஸ்தூல சூக்ம உடல்கள் இரண்டும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயையின் தொடர்புடைய சூக்ம உடம்பில் பொதிந்திருக்கும் கானம் வழி மனம் பொருந்தி ஆன்மா தன்னை ஒளிவடிவமாக்கி கண்டாலும் வான் வடிவமான சிவனுடன ஏற்படும் தொடர்புக்கு எதிரும் இல்லை, ஒப்புமில்லையே!

18. அளகாபுரி மன்னன் குபேரனை வடக்குத் திசைக்கு தலைவனாகவும் செல்வத்திற்கு அதிபதியாகவும் செய்து குறையாத தவத்தின் பயனைக் கருத்தில் கொண்டு அந்த வடதிசையை வணங்கி போற்றினால் அத்திசைக்கு நீயும் தலைவனாய் ஆகமுடியும் எனச் சொல்பவன் எம் பெருமானே!

19. வடக்குத் திசைக்குத் தலைவன். விஷய பற்றான விட வாசனைக்கு ஆதாரமான ஏழு ஆதாரங்களையும் அழித்து பாழான நிலமான சுடுகாடு ஆக்கியவன். முன்னதாகவே அனைத்தும் அறிபவன். பாவங்களை நிவர்த்தி செய்யும் வடக்கு திசையை இடமாக்கிக் கொண்ட ஜீவன்களின் உண்மைத்தவம் கண்டு அது செய்தவரை இடமாக்கி எழுநது அருள் செய்பவன்!

20. பிறப்பும் இறப்பும் கருவில் உதிக்குமுன்னே திட்டமிட்டவன் சிவபெருமான். அவன் ஏற்படுத்திய அந்த நியதியை அறிந்தால் பஞ்ச பூதங்களில் ஆகாய பூதராக உள்ள சதாசிவ வடிவம் கண்மலருக்குமேல் உள்ள சிரசில் தியானத்தில் மேகம் ஒலிப்பதுபோல் ஒளியும் ஒலியாகவும் தெரியும்.

21. வானில் உள்ள பெரும் மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட திருமால், பிரமன், தேவர்கள் ஆகியோரின் குற்றம் நிறைந்த பிறவியை நீக்குபவனாகிய சிவன் ஒப்பற்றவன். காட்டுயாணை கதறும்படி சிவகோடிகளின் ஆணவமான படலத்தைப் பிளந்த எம்பெருமானைப் போற்றி புகழ்ந்து ஒன்றி நிற்றலே உய்வு அடைய வழி.

22. மாயையில் தோன்றிய உடம்பிற்கு உரிய மாய நாடன் சிவபெருமான், தியானப் பொருளாக மனதில் தோன்றி உயிர்கள் மனதில் நினைப்பதை அறிந்து கொள்வான் என்றபோதும் உயிர்கள் அவரை நினையாமல் இருக்கின்றன். அவர்கள் இறைவனுக்கு என்மேல் அருள் இல்லை எனச் சொல்வர். தன் அருள் எல்லையைத் தாண்டி நிற்பவர்க்கும் கருணை வழங்குபவர் சிவபெருமான். என்னே அவர் கருணை!

23. அக்னிக் கடவுளை கடலின் நடுவே நிலைக்கச் செய்த நீதியை உடைய எல்லாம் வல்ல ஆற்றல் உடைய பெருமானே! அவரை இல்லை எனச் சொல்ல வேண்டாம்! படைத்தல் முதலியவற்றைச் செய்யும் கடவுளுக்கும் தலைவனாய் பகலும் இரவும் உயிர்களுக்கு அருள் செய்து கொண்டிருப்பவன்!

24. எந்தக் குற்றமும் அற்ற சிவ திருவடியை விடாப்பிடியாக பற்றி தெளிந்து அவ்வடிக்கே உயிர்களின் செல்வம் அனைத்தும் உரியனவாகும் எனக் கருதிப் புறப்பொருள்களான இன்பம், ஐஸ்வர்யம், கல்வி, மனத்திறமை, ஒழுங்கு, செம்மை, பாக்கியம், செல்வம் ஆகியவற்றில் மயங்கியுள்ள மனதை மாற்றி உறுதியாய் நிற்பவரிடத்தில் சிவன் இருப்பன்.

25. பிறவி அற்றவன், உயிர்களை ஒடுக்குபவன், அருள் உடையவன், அழிவு இல்லாதவன், எல்லோருக்கும் இன்பம் அருள்பவன், ஈடு இல்லாதவன், அவனை வழிபடுங்கள் அவன் திருவடி மறவாமல் தொழுதால் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேற்றை அடையலாம்.

26. ஆன்மாவினுள் எப்போதும் இருக்கும் சிவனை வழிபடுங்கள். எங்கும் நிறைந்துள்ளவனும் உலகம் முழுவதும் கடந்தவனும் சகஸ்ரதளத்தில் இருப்பவனும் ஆகிய சிவன் திருவடி பேறு அப்படி வணங்குவோறுக்கு கிட்டும்.

27. சேர்க்கைக்குரிய இடமான சுவாதிட்டான மலரின் கீழ் ஒளிபொருந்திய முகத்தை உடைய முடிவு என்றில்லாத இறையின் இறையருள் நமக்கும் உரியது என்று சிவனை வழிபடும் உயிர்களின் அறிவுக்குள் புகுந்து நீங்காமல் நிலைத்து நிற்பான் சிவன்.

58. எல்லா இடங்களிளும் நீக்கமறப் பரவிநிற்கும் சிவன் ஆன்மாக்களுடன் பொருந்தி என்றும் நிற்பவன். எல்லா காலங்களிலும் இருக்கும் அவன் பழமைக்கு பழமையாகவும் புதுமைக்கு புதுமையாகவும் இருப்பவன் தேவர் உலகமாகிய அமராபதி தேவர்களை ஆளும் அப்பெருமான் தனக்கு என ஒரு செயல் செய்யாமல் இருப்பான். தன்னை வழிபடும் அடியார்க்கு எப்போதும் வழித்துணையாய் நிற்பான்.

29. பெருமானே அடியேன் காணும்படி அருள்வாய். அடியேனுக்கு உன்னைத்தவிர உறவு என்று சொல்ல யார் இருக்கின்றார். நீ வெளிப்பட்டால் அடியேன் அகத்தில் தழுவியிருப்பதுபோல் புறத்திலும் வெட்கப்படாமல் தழுவியிருப்பேன். மனதில் குறையில்லாத அருட்பண்பு நிறைந்த மனத்தில் ஆணிவேர் போன்று எழுந்தருளியிருப்பவனே!

30. திடிரென்று வானத்திலிருந்து தானே மழை பொய்வதுபோல் இறைவனின் அருட் கருணை வெள்ளம் மழைபோல் தானே வலிய வந்து அருள் பொழியட்டும் என்று நினைப்பவர்கள் பலர். ஆண் கன்று தன் தாய்ப் பசுவை அழைப்பது போன்று என் நந்தியம் பெருமானை அடியேன் ஞானம் பெறுவதற்காக இன்று அழைக்கின்றேன்.

31. மண்ணுலகில் வாழ்வோருக்கு மனித வடிவிலும், புவர் உலகத்தோருக்கு ஒளிவடிவிலும், சுவர் உலகத்தோருக்கு தேவ வடிவிலும், வெளிப்பட்டு அருளும் சிவன் சித்திகளை விரும்புவர்களுக்கு சித்தானாக வெளிப்பட்டு அருளும் அப்பெருமான்மீது அறிவின் இடமாய் நின்றபடி அடியேன் அன்பு கொண்டிருப்பேன்.

32. தேவர்கட்குத் தலைவன், அடியவர்களாகிய நமக்கு தலைவன், மேல்கீழ் எனப் பத்து திசைகளிலும் நிறைந்திருந்து நீரால் சூழ்ப்பட்ட ஏழு உலகங்களையும் கடந்தவன். அந்த தன்மையை அறிந்தவர் இல்லை. இத்தகைய எங்கும் பரவியுள்ள இறைவனின் அருள்கிட்ட பாடல் பாடி வழிபடுவோமே!

33. பழங்கால முதலே இருந்த பல கடவுள்களை வழிபட விதிகள் ஏற்பட்டிருந்தும் உயிர்கள் உண்மையை உணராதவர் ஆகினர். துதி பாடல்களைப் பாட வல்லவரும் சிவனுடன் கலந்து இருந்து உண்மையான அறிவைப் பெறாதவர் ஆகினர். அவர்கள் உள்ளத்தில் அமைதி இல்லாது வாடுகின்றவர் ஆகினர்.

34 தேவர்களுக்கு அருளிய் நெறிமுறைகளின் கலவை சாந்தில் கலந்து வீசும் கத்தூரியின் மணம்போல் சிவமணம் கமழும் அத்தகைய உண்மையான நெறியில் நடக்க, அரிய சுடர்போல் ஒளியைத் தரும் பெருமானின் ஆயிரம் நாமங்களை அடியேன் நடக்கும்போதும் நிற்கும்போதும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

35. வேறு எவறும் படைக்காத செம்மையான நெறியில் விளங்கும் சிவபெருமானைப் போற்றிப் புகழ்ந்து இருந்தால் ஜீவனது அட்டதள கமலம் கவிழ்ந்த நிலையில் இருந்து அவரது எண்ணங்களை கீழ் முகமாக உலக முகமாக விளங்க வைக்கும் அதிலிருந்து மாற்றி அட்ட கமலத்தை மேல் முகமாக மாற்றி நிமிறும்படி செய்வான் அப்போது உயிர்களின் முகம் மேல்முகமாக ஊர்த்துவமுகமாகி ஈசான ஒளிமயமாக விளங்கும்.

36. உயிர்கள் அனைவற்றிற்கும் தந்தையான நந்தியை, தெவிட்டாத அமுதம் போன்றவனை, தனக்கு ஒப்பிலாதவனை, வேண்டியவர்க்கு வேண்டியதை அளிக்கும் வள்ளல் பெருமானை உரிய காலத்தில் ஊழியை நடத்தும் முதல்வனை எந்த வகையாக இருந்தாலும் தொழுங்கள். அப்படி வழிபட்டால் அவனின் கருணையைப் பெறலாம்.

37. உறுதியாய் நானும் தினந்தோறும் இறைவனை வழிபடுவேன். அதனால் தழல் போன்ற மேனியுடைய இறைவனும் வெளிபட்டு நிற்பது வானத்தில் கலைகள் நிறைந்த சந்திரன் போல் உடலில் அண்டாகாயத்தில் சந்திர ஒளி சகஸ்ர தளத்தில் சிரசின்மேல் தோன்றி ஒளிர்ந்து நிற்பது போலிருக்கும்.

38. பெரியான், அரியான் அந்த சிவனை வழிபடுவதைக் கைவிடமாடேன். ஒருதாயின் வயிற்றில் பிறவாதவனும் ஆகிய சிவனை உருவம் உள்ள ஜீவனாகிய அடியேன் வழிபடுவதைக் கைவிடமாட்டேன். நந்தி என்ற இறைவனை வழிபடுவதை ஒருநாளும் கைவிடேன். எப்போதும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கும் அடியேனே பெரிய தவம் செய்தவன் ஆவேன்.

39. ஐந்தெழுத்தால் வணங்கும் அடியவரின் உள்ளத்தில் மிக்க அறிவுப் பேரொளியாய்த் தோன்றுவான். பாசங்களிலிருந்து விலகி நிற்பவன். உயிர்களிடத்து மகிழ்ந்து திளைக்கும் இறைவனைப் பலவகையாய் துதித்து வணங்கினால் உரிமையுடைய நண்பனாகும் நிலையை அடைந்தால் அவனது திருஅருள் பெறுவது எளிதாகும்.

40. சிவன் திருவடியில் மிக்க விருப்பம்கொண்டு கழலணிந்த அவன் திருவடியை வணங்கி அத்திருவடியை அடைய விரும்புவர் அடியார். செம்பொன் ஒளியைப்போல் நிறைந்த ஒளியை உடைய சிவன். வஞ்சனைகளால் மறைத்து குறும்பு செய்யாமல் வழிபடும் மெய் அன்பர்களின் உடலை புறக்கணியாது அவ்வுடலில் புகுந்து நிற்பான்.

41. பாற்கடலில் எழுந்துவந்த ஆலகால நஞ்சை உண்டு அருளிய தேவர்களின் தலைவன் சிவபெருமானை, திருத்தப்பட்ட விளைநிலம் போன்ற மனதில் கொண்டு வணங்க வல்லாருக்கு நாத ஒலியைக் காட்டிய உமையொருபாகன் அடியார் மனதில் பெண்மானைக் கண்ட ஆண்மான் போல் கூடி நிற்பவன்.

42. அரன் சிவனை புகழ்ந்து வழிபாடு செய்பவர் பெறுவது, நான்கு தலைகளையுடைய நான்முகன் படைத்த வண்ணம் இறந்து பிறக்கும் மாயையுடன் கூடிய இல்லற பந்தத்தில் உழழும் உயிர்கள் உடலில் திரண்ட தோள்களுடைய உமையின் கணவன் வந்து பெருந்துவது இயற்கைதானே.

43. திருஐந்தெழுத்தை நல்ல தூய்மையான மனத்துடன் தொடர்ந்து துதித்து ஆற்றல் பெற்று அவன் தாழினையே நினைவாய் கொண்டு வீடுபேற்றைத் தரும் அத்திருவடியில் அடங்கி ஒடுங்குபவர்க்கு சிவன் தன் திருவடியை நல்கி அந்த அடியவருடன் வேறுபாடின்றி நிலைத்து நிறைந்து நிற்பான்.

44. தேவர்கள் சுழுமுனையில் இருக்கும் இறைவனை வாழ்க என்றும், அசுரர்கள் பெருமானை வாழ்க என்றும் மனிதர்கள் அவன் திருவடி வாழ்க என்றும் வாழ்த்துவர். அடியேன் அப்பெருமானை வணங்கி என் அன்பினுள எப்போதும் நிலைப்பெற்று இருக்குமாறு செய்வேன்.

45. ஆழிகடல் சூழ் இவ்வுலகம் இறைவன் விதிமுறைக்கு உட்பட்டு நடப்பதல்லாமல் வேறு முறையில் இயங்கக் கூடாது. இவ்விதி முறையால் உயிர்கள் அடையும் இன்பம் மாறுபாடு அடையாது. ஒளிவடிவான இறைவன் தினமும் துதிகள் வழியாய் வீட்டு நெறிகளை அருளும் கதிரவன் ஆவான்.

46. மனம் திருந்தி எப்போதும் சிந்தனையில் சிவபெருமானை எண்ணிக் கொண்டிருக்கும் அடியார்கள் செம்மேனியனே, மங்கல வடிவினனே எப்பொருளுக்கும் இறைவா என்று வழிபட அந்திவண்ணன், அரன், சிவன் என்பதெல்லாம் உருவமானதால் படைப்புக்கு முந்தியகாலத்தில் ஐந்து நிறக்கதிர்களாகத் தோன்றிய் முந்திவண்ணன், முதல்வனே, யாவர்க்கும் மேலான பரனே என்று அடியேன் வழிபட சிவன் ஞானவடிவினனாய் அடியேன் மனதில் எழுந்தருளியுள்ளான்.

47. பெரும் தவத்தை உடையவர் உயிர்களின் உள்ளத்தில் சிவன் கோவில் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்ந்து உடலை பாதுகாப்பர். அப்பெருமான் நெஞ்சத்து எழுந்தருளியிருக்கும் தன்மையினாலே சிவன் அடிமேல் அன்பு கொண்டு இயங்கும் நேயத்தவர் ஆவர். அப்படி நினையாதவர்க்கு பனை மரத்தின்மேல் இருக்கும் கழுகு மரத்தில் இருக்கும் பனம் பழத்தின் சுவையை அறியாமல் நிலத்திற்கு வந்து உணவை உணுவதுபோல் திருவடி பேரின்பம் கிடைப்பது அரிது. இல்லற விவகரத்தில் உலகத்திலும் மற்ற நேரங்களில் சிவ சிந்தனையிலும் இருக்கும் உயிர்களுக்கு இல்லற வாழ்வின் பாதிப்புகள் துன்புறுத்தாது.

48. அடியவர்கள் வழிபடும் தேவர்களின் தலைவன் சிவபெருமானை அடியேன் தலை முடியால் வணங்கி வழிபட்டு அவனை உளமாற நினைத்து உலக உயிர்களுக்கு அருளும் மேலான பெருந்தகையான எம் தலைவன் அவனை இரவு பகல் என்ற நிலையில்லமல் ஒளிரும் அணையாத விளக்கு என நினைத்து மகிழ்ந்திருந்தேன்.

49. பழமையான உயிர்கள் பாசம் ஆகியவற்றிற்கு தலைவனாகிய பெருமானை நினைத்து உயிர் மற்றும் தளை என்று சொல்லப்படும் பாசம் ஆகியவற்றின் இயல்பை அறிந்து சிவனோடு ஒன்றாய் கலக்க வல்லமையுடையோர் திரை கடலில் வரும் அலைபோல் பசுக்கள் செய்த பாவத் தளைகளை தாண்டி நீந்தி பசு பாசங்களைக் கடந்து முத்தி என்ற கரையை அடையலாம்.

50. இறைவனின் திருவடியை அடியவனின் தலையில் சூடிக் கொள்வேன். உள்ளத்தில் வைத்து போற்றுவேன். தலைவன் எனப் பாடி பல மலர்களால் அர்ச்சனை செய்து கூத்தாடி வணங்கி வழிபடுவேன். அவனே தேவர்க்கு எல்லாம் தேவன் என நம்புவேன். அடியேன் அவனைப் பற்றி முற்றிலும் அறிந்து கொண்டதன் விளைவே இதுவாகும்.

திருச்சிற்றம்பலம்

#####

Read 2875 times Last modified on செவ்வாய்க்கிழமை, 03 October 2023 06:37
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26928207
All
26928207
Your IP: 52.90.50.252
2024-03-28 15:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg