ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#####
வேதத்தின் பெருமை
51. உலக உயிர்களுக்கு வேதத்தை விடச் சிறந்த அறமென்று ஒன்று இல்லை. உயிர்களுக்கு வேண்டிய நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளது. தர்க்க வாதம் செய்தோர்கள் எல்லாம் தங்கள் வாதத்தை விட்டு மிகுந்த வளமுள்ள வேதத்தை ஓதியே முத்தி அடைந்தார்கள்.
52. தமிழ்மறையான வேதத்தை ஓசையளவில் ஓதுபவன் அதை அறிந்த வேதியன் அல்ல, யோகம் செய்தற் பொருட்டு வேதத்தின் உண்மைப் பொருளை உணராமல் ஓதுபவர் வேதியர் ஆகார். வேதத்தை உறைத்த இறைவன் பிரமப்பொருள் உயிர்களுக்கு விளங்கவும், வேள்விகள் செய்தற் பொருட்டு உண்மைப் பொருளை உணர்த்தவும் வேதத்தை உரைத்தருளினார்.
53. மந்திர வடிவான அழகிய வேதத்தில் உள்ளத்தை உருக்கும் மந்திரங்களும், எதிரிகளை அச்சுருத்தும் கம்பீர ஒலியுடைய மந்திரங்களும் இருக்கின்ற்து. அந்த வேத மந்திரங்களாய் நுண்ணிய நிலையில் இருப்பவன் மூன்று கண்களை உடைய சிவபெருமானே!
54. தெய்வீக நெறி என சிறப்பித்துக் கூறுவது அறிவு ,அறியாமை இல்லா வீடுபேறாய் உள்ள இறைவன் குருவினால் உணர்த்தப்படும். சன்மார்க்க நெறியாய் அது சிவத்தை பொருத்தின்ற ஒப்பில்லா நெறியாகும். இந்த நெறியையே சிறப்பான வேதமுடிவான உபநிடதங்கள் விளக்கும்.
55. தமிழ் மறையான வேதத்தை ஆறு அங்கமாய அருளிச் செய்தவன் இறைவன். அந்த இறைவனை உடலின் ஒரு பகுதியாக நினைந்து அவன் இயல்பை அறிந்து உணர்பவர் இலர். அவனை தம்மின் வேறு பகுதியாய் எண்ணி வழிபட்டுப் பின்னர் தங்கள் விருப்பங்களால் கெட்டுப் போகின்றார்கள்.
56. பாட்டும் அவற்றிற்கான இசையான ஒலியையும் கேட்டு ஆடும் மகளிரின் ஆட்டமும் நீங்கப் பெறாத உலகத்தில் மறை நெறியைக் காட்டும் உண்மை நெறியைப் பின்பற்றாதவர் விரதம் இல்லமல் வேள்விகளை செய்ய விருப்பங்கொண்டவர் ஆவார் அவர்கள் மாறுபாட்டை அடைந்து புறத்தே அழிந்து படுவர்.
######