ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#####
செல்வம் நிலையாமை!
168. அருளைச் செய்யும் அரச பதவியும், யானைப் படையும், தேர்ப்படையும், பொருட் குவியலும் பிறர் கவர்ந்து கொண்டு போவதற்கு முன்பு அரிவு நிறைந்த உயிருடன் நிலையான செல்வத்தை உடைய இறைவன் திருவடிகளை அடைந்து விடின் மயங்கும் உயிர்க்கு பினையாக மாதவம் செய்பவன் இருப்பான்.
169. ஒளியுடைய வானத்து சந்திரன் ஒளிகுன்றி இருளாய் ஆவதைப்போல் தளர்ச்சி யடைந்து குறைந்து போகும் செல்வத்தை யாரும் கூறிக்கொண்டிருக்காமல் பொருள் மயக்கம் நீங்கி நாடுங்கள் தேவர் தலைவனான சிவபெருமானை அவ்ர் மழை மேகம்போல் பெருஞ்செல்வத்தை உண்டாக்குவார்.
170. ஒருவருடைய நிழல் யாருக்கும் பய்ன்படுவதில்லை. இதை அறிந்தும் அறிவற்றவர்கள் தம்மிடம் உளள செல்வம் அயலானது என்/று நினையாமல் தமக்கு உதவும் என நினைக்கின்ரனர். உடலுடன் ஒன்றாய் பிறந்த உயிர் உயிர் போதும்போது உடலைவிட்டு செல்கின்றது. அகக்கண்ணில் உள்ள நிலையான ஒளியை உடல் இருக்கும்போதே கண்டுகொள்வாய்!
171. மலரின் மணத்தைக் கண்டு தேனை சேகரிக்கும் வண்டு அதை பாதுகாப்பாக மரக்கிளையில் ஓர் அடையில் காக்கும், அந்த வண்டிற்கு கொடுதல் செய்து ஓட்டிவிட்டு அந்த தேனை அபகரிப்பர் வேடர். அதுபோல் செல்வத்தைக் கவர்ந்து செல்பவர் செல்வம் உடையவனுக்கு தீமை செய்வர்.
172. நிலையற்றது செல்வம் என நன்றாக அறிந்து தெளியுங்கள். அதனால் அச்சம் கொள்ளாதீர். ஆற்றின் வெள்ளம்போல் பெருகி வளரும் செல்வத்தை கண்டு மயங்காது செல்வப்பற்றை நீக்கி மேன்மையான அருள் செல்வத்தை பெறுங்கள். உயிரை உடலினின்று பிரிக்கும் இய்மன் வரும்போது அச்செல்வத்தை விட்டு நீங்கமுடியும்.
173. மகிழ்வுடன் அடைகின்ற பரம்பரைச் செல்வமும் தானே முயன்று ஈட்டிய் செல்வமும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்று கவிழும் படகைப் போன்றவை.. அழியும் நிலை கொண்ட உடலுக்கு ஒரு பேறாகச் சேர்த்து வைத்துள்ளதை நினைத்து அதனை பெருக்கிக்கொள்ள அருள் நிறைந்தார் எண்ணமாட்டார்.
174. மனைவியும் மக்களும் உயிர்க்குதவாத பொருளை எமக்கு எவ்வளவு எனக்கேட்பர். இதை தவிர்த்து உற்ற இடத்தில் உதவும் ஒளிப்பொருளான சிவத்தை நினைவில் கொண்டு அதைப் பெருக்கிக் கொள்பவர் கூவி அழைக்கும் துணையை பெறுவர்.
175. உலக வாழ்வில் ஆசை விருப்பமுடன் அதிகமானது. உண்மைப் பொருளை அறிவார் யாருமில்லை. உடலின் இயக்கத்தை நிறுத்தும் தறியான சுழுமுனை செல்லும் வழிகள் ஒன்பது உள்ளன. உறவு முறைச் சொன்ன தாயாரும், உறவினரும் வந்து வணங்கியபின் சுடுகாட்டை காட்டிக் கொடுத்து விட்டு சென்றுவிடுவரே!
176. உயிர் உடலை விட்டுச் செல்லும்போது வெல்வதற்கு வேறு எதுவும் இல்லையாதலால் அண்ணல் சிவபெருமானை நினையுங்கள். உயிரை உடலிலிருந்து வேறுபடுத்த எமதூதர்கள் மரண வேதனை படுத்துதல் இயல்பு. அந்த மரண வேதனையை தடுப்பது இறைவனின் எண்ணமே!
#####