ஓம்நமசிவய!
ஓங்கார முகத்தொருத்தல் ஏங்கா துயிர்க்கருள்
இயற்கை எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய்
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் அருவே உருவே
அருவுருவே பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி!
#####
அறன் செய்யாதவன் இயல்பு!
260. பொருத்தமான நல்ல அறங்களைச் செய்யாதவர் செல்வம் எட்டி மரத்தில் பழுத்த பெரிய பழம் கீழே விழுந்து வீனாய் போவது போன்று போய்விடும். வட்டி வாங்கி சமபாதித்த பொருட்களைக் கவர்ந்து கொள்ளும் வஞ்சக எண்ணம் உடையவர் செல்வத்தின் பயனை அறியாதவர்.
261. காலங்கள் கழிந்து ஊழிகள் கடந்து, உள்ளத்துக் கற்பனைகள் கழிந்து வழ்நாளும் குறைந்து சத்து நீங்கி சக்கைபோல் ஆகி துன்பத்தை அடைந்த உடல்கள் பயனின்றி அழிந்து போயின. இதைப் பார்த்த உயிர்களும் அறத்தை அறியாமல் இருக்கின்ரனர்.
262. அறத்தினை அறியாமல் உயிர்கள் இருக்கின்றன, மேலான சிவன் பாதத்தை நினைத்து துதிக்கும் முறையையும் அறியார். சிவலோகத்தின் அருகிலிருக்கும் சுவர்கத்தினை அறியமாட்டர். உலக உயிர்கள் சொல்லும் பொய்யானவற்றைக் கேட்டு உலகப் பொருட்களையே விரும்பி பாவச் செயல்களைச் செய்வர். இதனால் பிறப்பு இறப்பு என்ற நிலையைப் பற்றியே இருப்பர்.
263. இருமலும், சோகையும், கோழையும், சுரமும் அறம் செய்யாதவர் அடைவர். மின்னலும் ,இடியும், பாம்பும், தொண்டை நோயும், வயிற்றுக் கட்டியும் அறம் செய்வார் அருகில் வராது.
264. உயிர்களின் போதனையால் தன் புகழை பெரிதாக எண்ணி இறைவனை வணங்க மாட்டார். தம்மிடம் வந்து இரந்தவர்க்கு ஒரு சிறிதேனும் கொடுகக மாட்டார். வழிப்போக்கர்களுக்கு நீர்பந்தல் அமைத்து உதவ மாட்டார். இத்தகைய நல்ல எண்ணம் கொண்டவர் நரகத்தில் நிலையாய் இருக்க விருப்பங் கொண்டுள்ளாரோ!
265. அருள் வழியில் நடக்காமல் தேவர் உலக இன்பங்கள் நீங்கும் வண்ணம் தீய நெறியில் நட்ப்பவர் இருளடைந்த நரகத்தில் நடப்பவர் ஆவர், .வினைகளால் உண்டாகும் குற்றங்களிருந்து நீங்கி நல்ல நெறியில் நிற்பவர் வினைக் கடலை கடந்தவர் ஆவார்.
266. உயிர்களிடத்து கருணைக் காட்டுவோர் இறைவனின் திருவடியைத் தரிசிப்பர். உலகப் பற்றை விட்டு துணிவுடன் தவம் செய்பவர் சாயுச்ச நிலையை அடைவர். உலக நிலையில் இருந்து அறம் அல்லாதவற்றைச் செய்பவருக்கு இறைவன் அருள் கிட்டாது மடிவர். காலனின் சினத்திற்கு ஆளாகி அச்சம் தரும் நரகில் வீழ்வர்.
267. இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் இப்பிறவியில் இருப்பதற்குகு காரணம் முன்பிறவியில் அவரவர் செய்த் அறச் செயலும் மறச் செயலும் ஆகும். அறம் செய்வதால் இன்பம் அடைவதைக் கண்டும் பிறர்க்கு கொடுப்பதை அறியாப் பேதைகள் சிந்தையில் அன்பு இல்லாதவராய் அறத்தை அறியமாட்டாதவர்கள்.
268. கேடு அடைவதும், ஆக்கம் அடைவதும் ஆகியவற்றை அளிப்பவன் இறைவன். அவன் நேர்மையற்ற செயல்களைச் செய்து இன்பங்களை அடைய அனுமதிக்க மாட்டான். தகுதியுடைய உயிர்கள் வறியவர்க்கு ஈதல் செய்தல் நன்று. பிறர் இன்பம் கெடுமாறு நடந்து கொள்வது விலங்கின் தன்மையாகும்.
269. சிலருக்கும் பலருக்கும் செல்வம் தருகின்றேன் என்று கூறும்ம் புல்லறிவாளரை அவருடைய் செல்வம் கருதி போற்றீப் புகழாமல் அழிவற்ற இன்பமான வீடுபேற்றை அளிக்கும் இறைவனை நினைந்து வாழ்த்துங்கள். வில்லிலிருந்து செல்லும் அம்பு இலக்கை தவறாது தாக்குவதுபோல் இறைவன் வறுமையை நீக்கி இன்பம் அளிப்பான்.
#####