Print this page
செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:48

ஆயுள்பரிட்சை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

#####


ஆயுள்பரிட்சை!

770. தலையில் வைத்த கையானது பருத்தும் சிறுத்தும் இல்லாமல் அளவாய் தோன்றினால் நனமை. பெருத்து தோன்றினால் ஆறு மாதங்களில் இறப்பு.. அது இரண்டு மடங்கு பருத்து தோன்றினால் ஒரு மாதத்திற்குள் இறப்பு ஏற்படும்.

771 .மனதில் உண்டாகும் சூக்குமம் ஈசனுக்கு நிகரானவை. நாதத்தைக் கடந்தவர் ஈசனை நினைத்து நாதாந்தத்தில் இருப்பர். நாதாந்தத்தில் இருப்பவர் மனதில் ஈசனும் ஓசையால் உணர்ந்து உணர்வாய் இருப்பான்.

772. அழிகின்ற நிலையை உடைய நான்கு அங்குல வாயுவைக் கண்டு அதை அழியாமல் பொருந்தச் செய்தால் மேல் உண்ணாக்கு மேல் அமையும் சகசிரதளம் விரிந்து நன்மை தரும். சகசிரதளாத்தில் ஞானம் நிலைபெறும். அந்த ஞானம் உலகத் தலைவராக்கும்.

773. தலைவன் எழும் இடக்கண் பார்வையை வலக்கண் பார்வையுடம்ன் பொருந்தும் செயல் அறிபவர் இல்லை. இடக்கண் வலக்கண்ணுடன் பொருந்தினால் சக்தி தோன்றும். இவருக்கு ஞானேந்திரியங்கள் ஐந்தும் தன் வயப்பட்டமையால் அவரின் வயது நூறாகும்.

774. ஆறு விரற்கடை அளவு மூச்சு வெளியேறினால் எண்பது ஆண்டுகள் வாழலாம். ஏழு விரல் அளவு மூச்சு வெளிப்பட்டால் அவரின் வாழ்நாள் அறுபத்திரண்டாகும் என்பதை தெளிந்து நின்று அறிவாய்.

775. எட்டு விரல்கடை அளவு மூச்சு நீண்டால் அவரின் ஆயுள் ஐம்பது ஆண்டுகள். சிறப்பாக ஒன்பது விரற்கடை அளவு இயங்கினால் காலம் முப்பத்தி மூன்று ஆண்டுகளாகும்.

776. பத்து விரல்கடை அளவு மூச்சு நீடித்தால் இருபத்தெட்டு ஆண்டுகள் வாழ்வு. பதினைந்து விரற்கடை அளவு மூச்சு நீண்டால் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்வு.

777. கதிரவன் இல்லாத பகல் முப்பது நாழிகையும் திங்கள் பகுதியில் சேர்ந்து நின்றால் தலையின் ஈசான திசையில் உணர்வை உதிக்கச் செய்து சுழுமுனையில் மூச்சு போதலை செய்யலாம்.. இப்படிச் செய்தால் அகர உகர நாடிகள் செம்மையாகி பத்தான அக்னிக் கலையில் விளங்குவதை பார்க்கவும் முடியும்.

778. இரு நாள்களிலும் சுழுமுனையில் மூச்சு இயக்கங்களை கீழ் நோக்குடைய அபானனும் வியாபாகமான திங்களும் சிவனுக்கு பகையாகாமல் உதவுவர். இப்படி கீழ் நோக்கும் சக்தியை குறைத்து மூன்று நாட்கள் நிலை பெற்றால் வாழ்நாள் நீடிக்கும்.

779. அளக்கும் வகையால் நான்கு நாட்கள் சுழுமுனையின் வழியே மூச்சு இயங்கினால் சிவம், சக்தி, விந்து, நாதம் காணலாம்.. செம்மையாக ஐந்து நாட்கள் இவ்வழியில் இயங்கினால் சிவம், சக்தி ஆன்மா என்ற மூன்றையும் காணலாம்.

780. பத்து நாட்கள் சுழுமுனையில் அறிவு பொருந்தியவர்களுக்கு தன்னுள் பொருந்திய சிவம் சக்தியைக் காணலாம். இப்படியே காலதன்மையில் பதினைந்து நாட்கள் சுழுமுனையில் பொருந்தி இருந்தவர்க்கு உள்ளத்தில் சிவம் ஒன்றை மட்டும் காணலாம்.

781. இருமுனைகள் சுழுமுனையில் நிலை பெற்றால் வானக் கூறிலிருந்து ஆறு ஆதாரங்கள் அறியலாம். இருபத்து ஐந்து நாட்கள் இயங்கினால் தேயு, வாயு, வானம் மூன்றும் விளங்கும். இன்னும் இருபது நாட்கள் இயங்கினால் தேயும் வானமும் சிறப்பாக விளங்கும்.

782. சுழுமுனையில் இருபத்தேழு நாட்கள் இருந்தால் சோதி வடிவான சிவத்தை பிறர்க்கு உணர்த்தலாம். இருபதெட்டு நாட்கள் இருந்தால் பத்தாம் நிலையான மேல் நோக்கிய சகசிரதளத்தில் இருக்கும் ஆன்மாவை மற்றவர்க்கு உணர்த்த முடியும்.

783. பத்து ஐந்து ஆறு எட்டு ஆகிய இருபத்து ஒன்பது நாள்களும் உலகத்தார் அஞ்சும் பகையான இந்நாட்கள் யோகியர்க்கு பத்து நாள்கள் போல் விளங்கும். அன்பை பெருக்கும் வகையில் இறையுடன் கலந்திருக்கும் முப்பது நாட்களும் ஏழு நாட்கள் கழிதல் போல தோன்றும்.

784. இறைவனுடன் இருக்கும் நாட்கள் முப்பதொன்றானால் சிறுமைதரும் நாட்கள் மூன்று நாட்களாய் தோன்றும். முப்பத்திரண்டு நாட்கள் பொருந்தியிருந்தால் உலக நடையினர்க்குரிய இரண்டு நாட்கள் செல்வதுபோல் தோன்றும்.

785. மூன்று மாதங்கள் சிவமும் ஆன்மாவும் ஒன்றியிருந்தால் சகசிரதளாத்தில் சூக்குமவாக்கு விளங்கும்படி நந்தியெம்பெருமான் செய்வான். எந்தவொரு செயலும் இன்றி பரமாகாயத்தில் நிற்பவர் தன்னுடன் பொருந்தி நின்ற சிவமே ஆகுவர்.

786. பரவெளியில் எங்கும் பரவி சூக்கும நிலையில் இருக்கும் தீயான பூதத்தை அறியார். கலந்துள்ள காற்று பூதத்தையும் யாரும் அறியார். எல்லாவற்றையும் ஒடுக்கியுள்ள சிவத்தையும் அறியார். இப்படி மற்றவர் அறிந்து கொள்ளாத அறிவை சிவத்துடன் சேர்ந்து அறிந்தேன்.

787. காற்றுடன் கூடி ஐந்து தன்மாத்திரைகளை அறியும் அறிவாகிய சிவம் உலகுயிர் எல்லாவற்றின் அறிவாகும். சிவத்தை பிரித்து அதனை வேறாகக் காணாமல் ஒன்றாய் காணின் சிவம் உயிருடன்கூடி நின்று எல்லாப் பொருளையும் விளக்கித் தானும் விளங்கும்.

788. சிவம் அருளிய உலகம் ஞானியர்க்கு மயக்கம் தரும். நாள்தோறும் பொது அறிவைத் தரும். இன்பத்தைச் தரும் சக்சிரதளத்தில் விளங்கும் பராசக்தி இந்த பேற்றை ஞானியர்க்கு சேர்த்து வைப்பதால் ஞானியர் சிவமே ஆவர்.

789. படைப்ப்ச் செயலை எண்ணிய பெருந்தகை நந்தியெம்பெருமானுக்கு பிறப்பு இல்லாமல் கண்பவரின் அழகிய உடல் பழமையான இடம். என்ற உண்மையை அறிந்தவர்க்குப் பற்று விலகும். ஆசைக்கு காரணமான பாசங்களை வருந்துமாறு செய்பவர்க்கு அகன்ற அறிவு உண்டாகும்.

#####

Read 1484 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:17
Login to post comments