Print this page
செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:52

கேசரியோகம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

கேசரியோகம்!

799. மூச்சை கீழே இறங்கமல் அண்ணாக்கில் கட்டி, பின் அபானன் குதம் அல்லது குறி வழியாக போகாதபடி குதத்தை சுறுக்கி, இரு கண்பார்வையை ஒன்றாக்கி உள்ளத்தை சுழுமுனை வழியாகப் பாயும் மூச்சில் நிறுத்தியிருக்க உடலைத் தாண்டிய நிலைக்கு சென்றமையால் காலத்தைக் கடக்கலாம்.

800. சிவயோக நாதத்தினால் மோதி முன்பக்க மூளையில் இரண்டு கண் பார்வைகளையும் மாறி மாறிப் பார்ப்பதால் ஏற்படும் எல்லைக்குள் இரண்டு கரைகளின் இடையே வானத்தில் உண்டாகும் ஒளியைக் கொண்டு சகசிரதளத்தை நிரப்பினால் நெற்றிக்குமேல் நிமிர்ந்து பார்க்க சிவனின் குற்றம் நீங்கி இருளின்றி தூய்மையாகும்.

801. இடைகலை பிங்கலை வழி உயிர்ப்பு இயங்குவதை மாற்றிச் சுழுமுனை வழியாக உயிர்ப்பைச் செலுத்த வல்லவருக்கு தளர்ச்சி ஏற்படாது. உறங்கும் காலத்து விழித்து பயில வல்லார்க்கு இறப்பு இல்லை. நீண்டகாலம் வாழலாம்.

802. ஆராயந்து உணர்ந்து சொன்னால் சுழுமுனை தியான சாதனையில் அமிழ்து நிலையாக ஊறி நன்கு ஒலிக்கும். ஒலித்தலைச் செய்யின் சந்திர மண்ட்லமாய் விளங்கி ஒலித்து காக்கும்.

803 .ஆசனத்தில் அமர்ந்து அண்ணாக்கின்மேல் நாவின் நுனியை உரசியிருந்தால் சிவனும் சீவனும் அவ்விடத்தில் விளங்கித் தோன்றும். மூவருடன் முப்பத்தி மூவரும் தோன்றுவர். உடல் நூறு கோடி ஆண்டுகள் மரணம் இல்லாது வாழும்.

804. ஊணால் ஆன உடல் அறியும் அறிவெல்லாம் பொருந்த இருக்கும் இடமான சிரசின் உச்சிமேல் வான்மண்டலம் அமையும் இயலபை அறியார். வான் மண்டலத்தைப் பொருத்தி அறிபவர் அமுதத்தை உண்டு தெளிவை அடைவர்.

805. மேல் அண்ணாக்கில் பிராணன் அபானன் என்ற வாயுக்களை பொருந்தும்படி செய்தால் உடலுக்கு அழிவு இல்லை. உச்சித் தொளை வழி திறக்கும். உலகம் அறிய நரை திரை ஆகிய உடல் மாறுபாடுகள் மாறி இளையவர் ஆவார். சிவசக்தியின் ஆணை இதுவாகும்.

806. நந்தியெம்பெருமானை முன்னிருத்தி நாக்கை அண்ணாக்கில் ஏறும்படி செய்து நடுநாடியில் உச்சியில் சந்தித்திருந்தால் உலகை ஆள்வர். உடலுடன் பின்னி இருக்கும் அறிவு நீங்க சிவனை எண்ணியிருப்பவரே உண்மையான அக்னிச் செயல் செய்தவர் ஆவார்.

807. தீவினைகள் வருத்த அறிவு மயங்கி இருக்கும் உயிர்கள் நாவினால் செய்யும் சாதனையால் யமனுக்கு வேலையில்லை. பரந்த வினைகளை ஆராய்ந்து அதன் பயன் இன்மையை உணர்ந்து தெய்வப் பணியைச் செய்து அதன் இனிமையை உணர்ந்திருப்பர்.

808. இனிக்கும் கரும்பை போன்ற வினைகளைச் செய்பவர் சுழுமுனை நாடியான கரும்பைப் பெற நாக்கை மேலே ஏற்றி நடுநாடியின் கோணலை சீர் செய்து ஊன் உடலில் அமுதத்தை காண்பர்.

809. அண்ணாக்குப் பகுதிவழி உண்ணாக்கை மேலே ஏற்றி அதனால் ஊற்றெடுக்கும் அமுதத்தை பருகிச் சிவயநம என எண்ணியிருப்பவர்க்கு காப்பற்றுகின்ற ஒளி நீர் வெள்ளம்போல் முகத்தின்முன் பெருகும் அந்த வான கங்கையை அறிவீர்.

810. சிவனைப் பொருத்தி மனதில் வழிபாடு செய்தவர்க்கு மலத்தைச் சுட்டெரிக்கும் அருள் சக்தி ஒலி ஒளி வடிவில் வெளிப்படும்போது அதில் மனம் பதித்து கீழ் இறங்காமல் சாலந்த்ர பந்தனம் அமைத்து குவிந்து தியானித்தால் உடல் சிவாலயமாகும்.

811. அகக்கோயிலை இருப்பிடமாகக் கொண்டு வாழும் உயிர்கள் அனைத்து உலகிற்கும் தாயைவிட மிகுந்த அருள் உடையவர் ஆவர். இவரை யார் சினந்தாலும் நனமையே செய்வார். சினம் கொண்டவரில் தீவினை செய்தவர்க்குத் தீயைக் காட்டிலும் கொடியவராய் அழித்து விடுவர்.

812. சிவன் மூலாக்கினியை எழுப்பி யோகம் செய்பவர் சிரசில் இருப்பார். சகசரதளத்தில் உணர்பவர்க்கு பொன்னொளி மண்டலத்தில் விளங்குவான். தொடர்ந்து பாவனை செய்பவர்க்கு பாவகப் பொருளாக விளங்குவான். சிவ யோகம் செய்பவர்க்கு அவரது அறிவில் நிறைந்து விளங்குவான்.

813. சந்திரனிடமிருந்து எழும் கலைகளைப்போல் பதினாறு இதழ்களையுடைய விசுக்தி சக்ரத்திலிருந்து பொருந்தியுள்ள உடலில் இருந்து மூலாதாரம் முதல் அநாதகம் ஒளிபரப்பும் இருநூற்று இருபத்தி நான்கு கதிர்களைப் பரப்பித் தத்துவங்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபடாது சிவன் விளங்குவான்.

814. விசுக்தி சக்கரத்தில் கிரணங்கள் நடுவே பராசக்தி விளங்கி ஆன்ம தத்துவத்தில் சந்திரனாக விளங்கி அவளே தன் போகத்தில் பொருந்தி இன்பம் அளிக்கின்றாள்.

815. பராசக்தியால் சொரியப்பட்ட வெண்மையான சுக்கிலத்திலும் பொன் மயமான சுரோணிதத்திலும் பொருந்தி சுவதிட்டான சக்கரத்திலிருந்து செயல் படும் அவை ஆற்றல் கழியாது காக்கும் ஆற்றல் உடையவர்க்கு உடம்பைக் காக்கும் பச்சிலை யாகும்.

816. காம வெறியை ஏற்படுத்தும் கொடிபோன்ற குண்டலினி சக்தி வான் மண்டலத்தில் சிவத்துடன் சேர்ந்து மகிழ்ந்து விளங்கினால் எட்டுப் பெருஞ் சித்திகளை அளிக்கும் ஞானம் ஏற்படும். குண்டலியின் இனமான சிற்சக்தியுடன் அறிவு மய்மான சிவனும் விளங்குவான்.

817. விசுத்தி சக்கரத்தின் கீழ் ஓடும் உயிர்ப்பு மண்டலத்திலிருந்து உள்முகமாய் மேல் நோக்கிச் செல்லும் உடலைத் தாங்கிய வீணாத் தண்டை விட்டுத் தூண்டி வானத்தை அடைந்து கவிழ்ந்திருக்கும் சசிகரதளமாக இருக்குமாறு செய்தால் சந்திர மண்ட்லம் வளர்ந்து பூமண்டலத்தில் நீண்ட காலம் வாழலாம்.

818. சந்திர மண்டலத்தினுள் மனத்தை பிணிக்கும் சசிகர த/ளத்தைக் கண்டு மனத்தை கீழே போகாமல் அங்கே நிறுத்தி பழைய ஆனந்த மய கோசத்துள் கதிரவன் ஒளி விளங்கச் செய்தால் குண்டலத்தை அணிந்த கூத்தன் அசைவில்லாமல் இருப்பான்.

819. விசுத்தி என்ற சக்கரத்தின் கீழ் சென்று ஒழியும் வாயு அண்ணாக்கின் வழி மேலே போய்த் தங்கும். அதனால் ஒளியானது நிலைபெற்று வழிகின்ற காலத்தில் சசிகரதளத்தில் விளங்கும். திருவடியைப் புகழும்போது உடல் பற்றை விட்டு நீங்கி நில்லுங்கள்.

820. உடம்பின் மூலாதரக் கதவான குதத்தை இறுக்கமாக பிடித்தால் உடல் ஒளி விளங்கும். நாடியுள் அபானன் உக்கிரமாய் மேல் எழும்போது மலங்களுடன் கூடிய சிவன் ஒளி உடையதாய் விளங்கும்.

821. மூலாதாரப் பந்தத்தால் ஏற்பட்ட வாயு மேல் எழுவதை எண்ணிக் கசக்குதலால் சுருங்குகின்ற விசுக்தி சக்கரத்தின் மீது வழிபடத் தக்க சந்திர மண்டலங்கள் சுருங்கும் தன்மையை சொல்லவும் வேண்டுமா இல்லை.

822. வான் பூதத்தில் வாயு பூதம் உள்ளது. அக்கினி, நீர், நிலம் ஆகியவையும் அங்கு இருக்கும். வான் முதலாகிய ஐம்பூதங்களும் ஒளிமயமாக பொருந்தியிருப்பதைக் கண்டவர் தொலைப் பார்வையை உடையவர் ஆவர்.

823. தொலைப் பார்வை பற்றிச் சொல்வதை அனுபவத்தில் அறியலாம். மேகத்தைப் போன்ற அருள் வழங்கும் ஞானத்தை உள்ளே நிறுத்தி சிவத்திடம் உள்ளத்தை வைத்திருந்தால் புவி முதல் உலகங்கள் பகலில் இருப்பது போன்றே விளங்கும்..

824. முன்னால் இருக்கும் கொப்பூழ் தாமரைக்கு பன்னிரண்டு விரல் கடை கீழேயுள்ள மூலாதாரத்தில் பள்ளி எழும் வேதம் புருடனாகிய கதிரவன் அங்கு விளங்குவதாகச் சொல்லும். குண்டலினியைப் பந்தித்து மேலே செலுத்துவதில் நன்கு எழும் நாதமான அறிவில் பொருந்தியுள்ள ஆன்மாவிடம் எழுகின்ற கோவிலில் சிவன் விளங்குவான்.

#####

Read 1627 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:19
Login to post comments