Print this page
செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:55

அமுரிதாரணை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

#####

அமுரிதாரணை!

845. உடலினின்று நீங்காமல் உறுதியாய் உணர்வை அளிக்கும் நீர், கடலின் அருகில் மண் கிணறு தோண்டி ஏற்றமிட்டு இறைப்பது போல் இருக்கும். உடலில் வேறொறு வழியாய் கீழே செல்லாமல் மேலே போகும்படி செய்தால் உயிரை வருத்தமுறாது காக்கலாம்.

846. தெளிந்த இந்த சிவநீரைப் பருகினால் ஓராண்டுப் பயிற்சியில் ஒளியைக் காணலாம். இது கேடு இல்லாதது. காற்றுடன் கலந்து மேலே ஏறும் எட்டு ஆண்டுகளில் மனம் கீழ் நோக்குவதைக் கைவிட்டு மேலே நின்று மகிழ்ச்சியை விளைவிக்கும்.. அதனால் உடல் பொன் போன்று ஒளிரும்.

847. சிவ நீரானது கீழே உள்ள குறியை நெருக்குகின்றதாலும் பிழிதலாலும் உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிடச் சிறந்த மருந்தொன்று இல்லை. உயிர்கள் இந்த நுட்பத்தை அறிந்து தலையில் பாயச் செய்தால் நரைத்த மயிர் கருமையாகும் மாற்றத்தை அறியலாம்.

848. அறிவில்லா மக்கள் சிறுநீர் குழாய்க்கு அருகில் உள்ள சுக்கிலத்தை கழிக்க வேண்டும் என்பர். முதல் நிலையையும் முதிர்ந்த இலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு மயிர் கருத்தலும் தோல் சுருங்குதலும் ஆகிய மாற்றம் ஏற்படும். அவ்வாறு நீரை உடலில் அமைக்க வல்லார்க்கு யமபயம் இல்லை.

849. அழகிய கூந்தலையுடைய பெண்ணே. ஓர் அதிசயம் உள்ளது. உடலில் மறை முகமாய்ச் சென்று இந்நீர் சிரத்தை அடையும் காலத்து, மிளகு, நெல்லிப்பருப்பு, கத்தூரி மஞ்சள் வேப்பம் பருப்பு என்பனவற்றை அரைத்து தலையில் தேய்த்து முழுகி வந்தால் உடல் மென்மையாவதுடன் மயிரும் கருமை அடையும்.

850. வீரியத்தால் எற்பட்டதால் வீரமருந்து என்றும், வான் வெளியில் சோதியாய் இருப்பதால் தேவர் மருந்து என்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரி மருந்து என்றும் நந்தியெம்பெருமான் அருளினான். முதன்மையான மருந்து என்பதை யோகியர் அறிவர். பரந்த பேரொளிமயமான இதை சாதாரண உயிர்களுக்கு சொல்லக்கூடாது.

#####

Read 1495 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:20
Login to post comments