gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

64 வடிவங்களைத்தவிர மற்றவை (21)

ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 11:55

காட்சி அருள்!-இரண்டு!

Written by

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் போற்றி!
குறிகுணங் கடந்த குன்றே போற்றி!
எட்டு வான் குணத்தெந்தாய் போற்றி!
கட்டறு களிற்று முகத்தோய் போற்றி!
மலரில் மணமாய் வளர்ந்தாய் போற்றி!
அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி! போற்றி!

காட்சி அருள்!-இரண்டு!

1.முன்பே ஒரு மார்க்கண்டேயன்! சுவேதன்!

சுவேதன் என்பான் தான் வாழப்போகும் காலம் குறுகியது எனப் புரிந்து எதிலும் பற்று பாசங்களைத் துறந்து பரம யோகியாக வாழ்ந்து வந்தாதால் அவனுக்கு ஞானமார்க்க வழி திறந்தது. தன் இல்லத்தில் சிவனுக்கு என சிறு சந்நதி அமைத்து சிவலிங்கப்பிரதிஷ்டை செய்தான். தினமும் நீராடி ஜபதபங்கள் முடித்து சிவ பூஜையில் ஈடுபட்டு அபிஷேக ஆராதனை செய்து அர்ச்சித்து வந்தான். உகந்த விரதங்களையும் அனுஷ்டிப்பான். பரமேஷ்வரனின் பஞ்சாட்சர மந்திரங்களை விடாமல் ஜெபித்து எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் என்றிருந்தான்.
உரிய காலத்தில் சுவேதன் உயிரைப் பறிக்க தன்னுடைய செயல்களைத் தவறாமல் செய்யும் தர்மராஜனான எமதர்மன் பூலோகம் வந்தான். சுவேதன் ஈசனின் திருச்சந்நதியில் அமர்ந்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டிருக்க எமன் வந்ததை அறிந்து சிறிதும் அச்சப்படாமல், தர்மராஜனே ஈசனின் தாளை வணங்கித் துதித்துச் சரணடைந்தோருக்கு மிருத்யுபயமோ துன்பமோ ஏற்படலாமா என்றான்.
பயமின்றி பேசும் சுவேதன் மீது தன் பாசக்கயிறை வீச, சுவேதன் பரமேஸ்வரா என்னைக் காப்பாய் எனக்கூறி லிங்கத்தை கட்டிக்கொண்டான். தன்னை இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டு கதறிய சுவேதனின் பாசக்குரலுக்கு கட்டுப்பட்டு யமனின் பாசக்கயிறிலிருந்து காப்பாற்ற ரிஷபரூடராய்காட்சி அருள். காலம் தாழ்த்தினால் கடமை தவறியவனாவேன். அதனால்தான் தங்கள் பக்தன் என்று அறிந்தும் பாசத்தை வீசினேன் என்னை மன்னித்து அருளவேண்டும் என யமன் வேண்ட ஈசன் அருள்.

2.அடியாருக்கு அபசாரம்!

தர்மசிவன் என்பவர் வேளாளர்- மிகுந்த செல்வந்தர்- சிறந்த சிவபக்தியுடையவர்- அக்னீஸ்வரர் திருவிளையாடலால் அவரின் செல்வங்கள் எல்லாம் அடியார்களுக்கு செலவழித்து முற்றிலுமாக தீர்ந்தன. வீட்டில் பயிராகும் சுரைக்காயை விற்று அதனால் கிடைக்கும் காசை வைத்து அடியவர்களை கவனித்துவந்தார்.
ஒரு சுரையை மட்டும் விதைக்கு என விட்டு வைத்திருந்தார். அவர் வெளியில் சென்றிருந்தபோது அடியார் ஒருவர் வந்தார். அவர் வீட்டிலிருந்த சுரையைப் பார்த்து இது மிகவும் சுவையாக இருக்கும் போலிருக்கின்றதே என்றார். அவர் மனைவி கணவர் வரும் வரை அடியவரை எப்படி பசியுடம் இருக்கவைப்பது என்பதால் அரை சுரைக்காயை அறுத்து அவருக்கு உணவு பரிமாற ஏற்பாடு செய்தாள். அப்போது அங்கே வந்த தர்ம சிவன் அடியார் விரும்பிய சுரையை முழுவதும் பயன்படுத்தாமல் அரை சுரைக்காயை அறிந்து அபசாரம் செய்து விட்டாய் எனக்கூறி அவர் கையை வெட்ட வந்தபோது ஒரு கரம் வான் வெளியில் தோன்றி தடுத்தது. ஈசன் உமையுடன் தோன்றி அருள். எனவே இன்றும் நெய்வேத்தியத்துடன் சுரைக்காய் உபயோகம். --அக்னீஸ்வரர்.—கஞ்சனூர்

#####

ஓம்நமசிவய!

பாலொடு தேனும் பருகுவோய் போற்றி!
மேலொடு கீழாய் மிளிர்வாய் போற்றி!
எய்ப்பில் வைப்பாய் இருந்தோய் போற்றி!
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் போற்றி!
நால்லார்க் கெட்டும் நாதா போற்றி!
பொல்லா மணியே புராதன போற்றி! போற்றி!

விறன்மிண்டருக்கு அருளிய அடியார்!

சேரநாட்டில் செங்குன்றூர் என்ற ஊரின் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கியவர் விறன்மிண்டர். சிறந்த சிவபக்தர். அடியவர்பால் அளவிறந்த பற்றுடையவர். அடியவருக்கு என்று எதையும் செய்யும் அன்பர். பற்றுகளைத் துறந்து வாழ்பவர். அவர் தன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டுக் கோவில்களில் வழிபாடு செய்து திருவாரூரை அடைந்தார். தியாகேசப் பெருமானின் திருவடியை விட்டு நீங்கா மனம் கொண்டார். பெருமானை வழிபட்டு அடியார்களோடு தேவாசிறிய மண்டபத்தில் கூடி சிவ நெறி தழைக்க பணிபுரிந்து வந்தார். ஒருநாள் மண்டபத்தில் எல்லோரும் பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆரூரர் இவர்களைத் தொந்திரவு பண்ணக்கூடாது என ஒதுங்கி இறைவனை வழிபடச் சென்றார். இந்த அடியவர்களுக்கு சேவை செய்யும் நாள் என்றோ என நினைத்தார். ஒரு அடியார் சபை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிப் போவதைக் கண்ட விறன் மிண்டர் அவர் யார் என்றார். இறைவன் ஒலையைக்காட்டி அடிமை கொண்ட ஆரூரர் என்றனர். யாரானல் என்ன. அடியார் திருக்கூட்டத்தை மதியாரை இக்கூட்டத்திலிருந்து விலக்கி வைக்கின்றேன் என்றார். உடனே மற்றவர்கள் என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். அவர் புற்றிடம் கொண்டாருக்கு வேண்டியவர். அவர் தம்பிரான் தோழர் என்றனர். அப்படியானால் அந்த ஆண்டவரையும் இக்கூட்டத்திலிருந்து விலக்குகின்றேன் என முழக்க மிட்டார். ஆண்டனையே ஒதுக்கி வைத்த வீரத்திருத்தொண்டர் விறன்மிண்டர். அதைக் கேட்ட சிவன் ஆரூரர் உள்ளே நுழைவதற்கு முன்பே வெளிவந்து அடியவர்கள் புறக்கணித்தபின் என்னால் நிலை கொள்ள முடியவில்லை, அடியவர்களின் பெருமையை நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக ஆரூரா என்றார். அடியவர்களுடைய பெருமைக்கு நிகர் அவர்களேதான். அவர்கள் பெருமைக்கு முன் என் பெருமை சற்று குறைவுதான். அன்பினாலே என்னை அவர்கள் பெற்றவர்கள். உள்ளத்து ஒருமையால் உலகையே வெல்லக் கூடியவர்கள். குறையேது மில்லாதவர்கள். உலகில் துன்பம் வராதிருக்க வேள்வி செய்பவர்கள். திருநீற்றின் செல்வமே பற்று என்றும் சிவனின் அன்பே பேறு என்றும் நினைப்பவர்கள். வீடு பேற்றை கூட வேண்டாம் என்று பலன் கருதாது பக்தி செலுத்துகின்ற தொண்டர்கள். அவர்களை நீ சென்றடைவாய். குற்றமற்ற அந்த அடியவர்களை நீ சென்று பாடு எனப் பணித்து ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என முதல் அடியை எடுத்துக் கொடுத்தார். தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகின்ற அத்தனை பேரையும் சேர்த்தே ‘”தில்லைவாழ் அந்தணர்” என்றார். ஆரூரர் திருவொற்றியூரில் தொண்டு செய்து கொண்டிருந்தபோது அங்கு இருந்த சங்கிலியரை மணம் முடிக்க சிவன் தூது சென்றது விறன்மிண்டருக்கு மிகுந்த வெறுப்பை ஆரூரர்மேல் ஏற்பட வைத்தது. அது இறைவனின் திருவிளையாடல் என்பதை அறியவில்லை. ஆனால் ஆரூரர் திருவாரூரில் இருப்பதால் அவருக்கு திருவாரூர் என்றாலே ஒருவித கசப்புணர்வு கொண்டிருந்ததால் ஆரூரர் இருக்கும்வரை இம்மண்ணை மிதிக்கமாட்டேன் என சபதம் செய்து விறன்மிண்டர் சிறிதுகாலம் கலிக்காமர் விருந்தினராக பெருமங்கலத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே சிவத்தொண்டு செய்து வந்தார். திருவாரூரைச் சேர்ந்த எந்த ஒரு சிவனடியாரோ தம்மிடம் அருளோ பொருளோ கேட்க வந்தால் அவரை பரசாயுதம் கொண்டு கொன்றுவிடுவது என்று முடிவு கொண்டிருந்தார். சிவனடியார்களுக்கு உதவி செய்யும்போது வலது பக்கம் பரசாயுதமும் இடது பக்கம் விபூதியையும் இருக்க அமர்ந்து சிவனடியார்களை வரவேற்பார். பரசாயுதத்தையும் விபூதியையும் அவர் மனைவிதான் கொண்டுவந்து வைப்பார். விறன்மிண்டரின் தணியாத கோபத்தை நீக்க சிவபெருமான் முடிவு செய்தார். சிவபெருமான் அடியாரைப்போல் வேடம் கொண்டு விறன்மிண்டரின் வீடு சென்றார். அவர் துணைவியார் அடியாரைப் பார்ந்து நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகின்றீர்கள் எனக் கேட்க அடியவர் திருவாரூர் என்றார். அதைக்கேட்டதும் என் கணவருக்கு திருவாரூர் அடியார்களை பிடிக்காது. அவர்களை கொன்றுவிட பரசாயுதத்தை வலது பக்கத்திலும் விபூதியை இடது பக்கத்திலும் வைத்திருக்கின்றார். நீங்கள் ஊரை மாற்றிச் சொல்லுங்கள் என்றார். அன்னையே சிவனடியாராக இருந்து பொய் உரைப்பது இறைத்தொண்டிற்கு ஏற்றது அல்ல. நீங்கள் ஒரு புண்ணியம் செய்யுங்கள். பரசாயுதத்தை இடது பக்கமும் விபூதியை வலது பக்கமும் மாற்றி வையுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அந்த அம்மையாரும் அவ்வண்ணமே செய்தார். விறன்மிண்டரிடம் அடியார்வேடம் கொண்ட சிவன் வந்தபோது நீர் எந்த ஊரிலிருந்து வந்திருக்கின்றீர் எனக் கேட்டபோது திருவாரூர் என்றதும் விறன்மிண்டருக்கு அளவில்லா கோபம் வந்தது. அவர் பரசாயுதத்தை வலதுபக்கம் எடுக்க முயற்சித்தார். அது கையில் கிடைக்காமல் போகவே குனிந்து அது எங்கே எனப் பார்த்தார். இதைப் பயன் படுத்தி இறைவன் ஒடத் தொடங்கினார். அதற்குள் இடப்பக்கமிருந்த பரசாயுதத்தை எடுத்துக் கொண்டு அடியவரை துரத்தத் தொடங்கினார். இருவரும் திருவாரூர் எல்லையைத் தாண்டியிருந்தனர். விறன்மிண்டர் திருவாரூர் எல்லை மண்ணை மிதித்ததும் ஓடிக்கொண்டிருந்த அடியவர் நின்றார். திரும்பிய அவர் விறன்மிண்டரைப் பார்த்து இது திருவாரூர் மண் என்று கூற திகைத்த மிண்டர் தவறு செய்த காலை வெட்டிக்கொண்டார். இறைவன் வெளிப்பட்டு அவரை ஆட்கொண்டு அருள் புரிந்தார்.

#####

ஓம்நமசிவய!

கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றி!
மயலறும் இன்ப வாழ்வே போற்றி!
ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் போற்றி!
பானை வயிற்றுப் பரமே போற்றி!
கடம்பொழி யானைக் கன்றே போற்றி!
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!

சிறுத்தொண்ட நாயனாருக்காக பைரவர் வடிவம்!

திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் பரஞ்சோதியார் பிறந்தார். அவர் சிறந்த போர் வீரர். வடமொழி நூல்களையும் மருத்துவ நூல்களையும் கற்று விளங்கினார். யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வாட்போர் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். சிவனை நாளும் வணங்கி வந்தார். அவர் சோழநாட்டை ஆண்ட பல்லவ மன்னனிடம் போர்த்தளபதியாய் இருந்தார். இரண்டாம் புலிகேசியை வாதாபியில் வென்று அங்கிருந்து பொன்னும் மணியும், யானைகளையும் குதிரைகளையும் கொணர்ந்தார். நரசிங்கவர்மனின் அன்பிற்கு உகந்தவரானார். அவர் வீரர் மட்டுமல்லாமல் சிறந்த சிவபக்தராகவும் இருப்பதால் அவரை யாராலும் வெல்ல முடியாது என்று அனைவரும் கூறியதைக் கேட்ட மன்னன் அவருடைய பெருமை எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. சிவனடியாரை போர்முனைக்கு அனுப்பினேனே என வருத்தமுற்று இனி நீங்கள் என்னிடம் பணி செய்யலாகாது. நிறைந்த நிலங்களையும் நிதிகளையும் பொன்னும் நவமணியும் கொடுத்து தங்கள் ஊர் சென்று விரும்பிய வண்ணம் தொண்டு செய்யுங்கள் என அனுப்பினார். பரஞ்சோதியார் திருச்செங்காட்டாங்குடி வந்தார். வாதாபியில் புகழ்பெற்ற பிள்ளையார் வழிபாட்டை தன் வெற்றிச்சின்னமாக விநாயகரைப் தமிழகத்திற்கு கொண்டுவந்து கணபதி ஈச்சுவரம் என்று தலம் நிறுவி விநாயகரை நிறுவினார். திருவெண்காட்டு நங்கை எனும் பெண்ணை மணம் புரிந்தார். இல்லறம் இனிது நடந்தது. அடியவர்களிடம் மிகவும் அடக்கமாய் வழிபடும் பண்பினர், அதனால் அவரை சிறுத்தொண்டர் என அழைத்தனர். அடியவர்களை அழைத்துவந்து அவருக்கு திருஅமுது அழித்து பின்னேதான் உண்ணும் பழக்கம் மேற்கொண்டார். அவர்க்கு சீராளன் என்ற மகன் பிறந்தான். ஞானசம்பந்தர் திருச்செங்காட்டங்குடி வந்து சிறுத்தொண்டர் வீட்டில் சிலநாள் தங்கியிருந்தார். சிறுதொண்டருடைய அன்பை நுகர்வதற்கு சிவன் பைரவர் கோலத்தில் வந்தார். அன்று அடியார் யாரும் இல்லத்திற்கு வராததால் சிருத்தொண்டர் அடியாரைத்தேடி வெளியில் சென்றார். அப்போது பைரவர் அவர் வீட்டிற்கு வந்தார். அவரது துணைவியார் என்ன சொல்லியும் கேளாமல் பெண்கள் தனித்து இருக்கும் இடத்தில் இருக்க மாட்டேன். நான் வடநாட்டிலிருந்து அவர் பெயர் கேட்டு வந்தேன். கணபதி ஈச்சுவரத்தில் உள்ள ஆத்திமரத்தின் கீழ் இருகின்றோம். அவர் வந்தால் கூறுவீர் என்றார். அடியவர் யாரும் காணமல் வீடு வந்த சிறுத்தொண்டர் விபரம் அறிந்து கணபதி ஈச்சுவரம் அடைந்து பைரவர் காலில் வீழ்ந்து வணங்கினார். வீட்டில் அமுது உண்ண அழைத்தார். பைரவர் எனக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை தான் பசு உண்ணுவது. அந்த நாள் இன்றுதான். நான் உண்ணும் பசு ஐந்து வயதிற்கு உட்பட்ட மனிதப்பசு என்றார். அதுவும் ஒரு குடும்பத்திற்கு ஒரே புதல்வனாய் இருக்க வேண்டும். தாய் பிடிக்க தந்தை அறிய வேண்டும். இருவரும் மனம் உவந்த கறியைத்தான் நாம் உன்பது என்றார். அடியார் அமுது உண்ண இசைந்தாரே என்ற மகிழ்வில் எதுவும் அரியது இல்லை என்றார். இல்லம் வந்தார். பைரவர் என்ன சொன்னார் எனக்கேட்டார் துனைவியார். அனைத்தும் சொல்லி சிறுதொண்டர் தம் மகனை அழைத்தார். அணிகலன் அணிவித்து முத்தம் இடப்போனாள் துனைவி.. தடுத்தார் தொண்டர். அடியவருக்கு அமுதாகப் போகின்ற சீராள தேவரை முத்தமிட்டு எச்சில் செய்வதா என்றார். தாதியர் கறியைப் பலவேறாக சமைத்தனர். பைரவரிடம் சென்று அவர் விருப்பப்படியே பசு தாயாரக இருக்கின்றது என்றார். பைரவரை ஆசனத்தில் இருத்தி மலர் சார்த்தி பாதப்பூசை செய்தார். பின் அமுது உண்ண அழைத்தார். பைரவர் சிறுதொண்டரே நான் சொன்ன முறையால் உறுப்பெல்லாம் சுவையாக கறிசமைத்தீரா என்று கேட்டார். நங்கையார் தலக்கறி அமுதுக்காகாது என கழித்தோம் என்றார். பைரவர் அதுவும் நாம் உண்பேம் என்றார். சிறுத்தொண்டரும் மனைவியாரும் சிந்தை கலங்கி திகைத்து அயர்ந்தனர். தாதியர் அதையும் தாம் சமைத்தோம் என கொண்டு வந்தார். அப்போது தனியாக சாப்பிடமுடியாது யாரேனும் அடியார் இருந்தால் கூப்பிடுங்கள் என்றார். அடியார் கிடைக்காமல் வருத்தப்பட்டவருக்கு இன்று என்னதான் சோதனையோ. நானும் ஓர் அடியார் எனக்கூற, சரி அப்படியானல் இவருக்கும் ஓர் இலைபோடச் சொன்னார். வந்த பைரவர் இன்னும் ஏதாவது ஒன்றைச் சொல்லிவிடக்கூடாதே என்ற எண்ணத்தால் சிறுத்தொண்டர் விரைவாக சாப்பிட உட்கார்ந்தார். சிறுத்தொண்டரே ஆறு மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடும் எனக்கு முன் நீர் உன்பது முறையோ என்றார். நாம் தனியாக எப்படி உண்பது. முன்பு நான் பார்த்த உம் மைந்தனை அழையுங்கள் உடன் வைத்து உண்ணலாம் என்றார். சிறுதொண்டர் மிகவும் தளர்ந்தார். பிள்ளையைத்தான் கறி சமைத்தேன் என்றால் அடியவர் அமுது செய்வாரோ மாட்டாரோ புரியவில்லை. ஏதாவது பொய் சொல்லவும் மனமில்லை. எனவே அவன் இப்போது உதவான் என்றார். பைரவர் தாம் இங்கு உணவு உண்பது அவன் வந்தால்தான் போய்க்கூப்பிடும் என்றார். கணவன் மனைவி இருவரும் வாயிற்புறத்தே சென்று என் செய்வது என்று புரியாமல் மகனே சீராளா வருவாய் என்று அழைத்தனர். அடியவர் அமுது உண்ண அழைகின்றோம் வா என்றனர். எம்பெருமான் அருளாளே பள்ளியிலிருந்து ஓடிவருபவன்போல் வந்த சீராளதேவரை தூக்கி கணவரிடம் கொடுத்தார். மகனைக் கூட்டிக்கொண்டு வேகமாக உள்ளே வந்தவர் பைரவரைக் காணாமல் திகைத்தார். கலத்தில் இருந்த கறியமுதம் ஒன்றுமில்லை. அப்போது விடைமீது எம்பெருமாட்டியோடும் முருகப் பெருமானோடும் காட்சி கொடுத்து அருள் புரிந்தார்.

#####

ஓம்நமசிவய!

தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி!
முந்திய பொருட்கும் முந்தியோய் போற்றி!
ஐந்துகையுடைய ஐய போற்றி!
ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி!
அருளாய் அருள்வாய் ஆண்டவ போற்றி!
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!

திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்காக அருந்தவ வடிவம்!

காஞ்சிமாநகரில் தோன்றியவர் திருக்குறிப்புத்தொண்டர். தொண்டர்களின் குறிப்பறிந்து பணி செய்வதால் அவரை திருக்குறிப்புத் தொண்டர் என்றனர். சிவநெறி ஒழுகும் சான்றோர். சீலமிக்கவர். அடியவர்களின் ஆடைகளை பெற்றுத் துவைத்து தூய்மை செய்து கொடுப்பவர். உடலும் பற்களும் நடுங்கும் குளிர்காலம். வறுமையில் வாடும் அடியவர்போல் அழுக்காண ஆடையணிந்து சிவன் திருக்குறிப்புத்தொண்டர் வீட்டிற்குச் சென்றார். அவரைக் கண்டவர் அவர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தார். தாங்கள் இளைத்திருக்கின்றீர்கள். உடம்பை உருக்கி உள்ளொளி பெற்றுள்ளீர். தங்கள் முகம் வாடியுள்ளதே எனக்கூறி தங்கள் ஆடை அழுக்காக உள்ளது அதை கொடுங்கள் தூய்மைசெய்து தருகிறேன் என்றார். அன்பரே இவ்வாடை மிகவும் அழுக்கடைந்து விட்டது. குளிரின் கொடுமையால் இதை விட முடிய வில்லை. சூரியன் மறையும் முன்பு தருவதானல் நான் தருகின்றேன் என்றார், அதற்கு சம்மதம் தந்து ஆடையைப் பெற்று குளத்து நீரில் தோய்த்து சுத்தப்படுத்த முயன்றார். அன்று சோதனையாக மழை பெய்யத் தொடங்கியது. மழை தொடர்ந்து பெது கொண்டிருந்தது. திருக்குறிப்புத்தொண்டரால் ஆடையை சுத்தம் செய்து தர முடியவில்லை. மழை நின்றபாடில்லை. ஆடை கொடுத்தவர் உடம்பு குளிரால் நடுங்குமே. நான் அவருக்கு உதவி செய்கிறேன் என்று தொல்லையல்லவா கொடுத்துவிட்டேன் என்று மீளாத்துயரம் கொண்டு என் தொண்டு இன்றுடன் முடிவுறும்போல் இருக்கின்றது. இனிநான் வாழ்ந்து என்ன பயன், துணி துவைக்கும் எனக்கு என் தொண்டுக்குத் துணை நின்ற கல்லிலே என் தலை மோதி இறப்பேன் எனக் கூறி வேகமாக அக்கல்லிலே மோதினார். அங்கிருந்து எம்பெருமான் கரம் தடுத்து விடைமீது தோன்றினார். திருக்குறிப்புத் தொண்டரே ‘நும் தொண்டினைக் கண்டு மகிழ்ந்தோம் நீர் சிவலோகம் வந்து இன்புறுவாய்’ என் அருள் புரிந்தார்.

#####

ஓம்நமசிவய!

ஆங்காரம்முளை அறுப்பாய் போற்றி!
பாங்கார் இன்பப் பராபர போற்றி!
கற்றவர் விழுங்கும் கனியே போற்றி!
மற்றவர் காணாமலையே போற்றி!
சொல்லொடு பொருளின் தொடர்பே போற்றி!
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!

மானக்கஞ்சாற நாயனாருக்காக மாவிரதியர் வடிவம்!

காஞ்சாறு என்ற ஊரில் பிறந்தார் மானக்கஞ்சாறனார். மன்னரின் படைத்தளபதி. சிறந்த சிவபக்தர். சிவமே மெய்ப்பொருள் என்று அறிந்தார். அதுவே எல்லாமென உணர்ந்தார். சிவனடியார்கள் என்ன நினைப்பார்களோ அவர்களின் குறிப்பறிந்து தொண்டு செய்து அவர்தம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தன்மை யுடையவர். அவருக்கு ஒரே ஒரு குறை. அது மகவு இல்லை என்பதாகும். தவம் மேற்கொண்டு பெருமான் கருணையினால் பெண் குழந்தையை அடைந்தார். அப்பெண் வளர்ந்து பருவமடைந்தார். நீலகண்ட பெருமான்மேல் அளவு கடந்த பக்திகொண்ட ஏயர்கோன் கலிக்காமர் என்பவருக்கு பெரியோர்களால் மணம் பேசி முடிக்கப்பட்டது. மகிழ்ச்சி வெள்ளம் கரைபுறண்டு ஓடியது. மணமகள் வீடு திருமணக்கோலம் பூண்டது. மானக்கஞ்சாறனார் தன் ஒரே செல்ல மகளின் மணத்தை ஊர் போற்ற சிறப்புற நடத்த ஏற்பாடுகளைச் செய்தார். பெருமான் தொண்டர்கள் விருப்பம் எதுவாயினும் குறிப்பறிந்து கொடுத்து மகிழும் மானக்கஞ்சாறனார் பண்பை உலகறியச் செய்ய முடிவு செய்தார். மாவிரதியர் கோலத்தில் கஞ்சாறு நோக்கிப் புறப்பட்டார். அடியாரை மானக்கஞ்சாறனார் வரவேற்று உபசரித்தார். மானக்கஞ்சாறனார் இல்லத்தில் உள்ள அனைவரையும் அடியாரை வணங்கி ஆசி பெறச் சொன்னார். மணப்பெண்ணையும் வணங்கச் சொன்னார். அவரும் வணங்கினார். தவமா விரதியர் கோலம் கொண்ட அடியவர் மணப்பெண்ணின் மயில் போன்ற சாயலும் மேகம் போன்ற கருத்த அடர்ந்த நீண்ட கூந்தல் பஞ்சவடிக்கு ஆகும் என்றார். அடியவர் தம் குறிப்பறிந்து கொடுக்கும் தன்மையுடைய மானக்கஞ்சாறனார் மகளின் திருமணநாள் என்றும் பாராமல், மணமகன் வீட்டார் என்ன சொல்வார் என்றும் பாராமல், மணமகன் என்ன நினைப்பார் என்றும் பாராமல், அடியவர் குறிப்பறிந்து ஈயும் பண்பு தலைதூக்க ஒரு கத்தியை எடுத்து வந்து மணமகளின் அலங்கரிக்கப்பட்ட கூந்தலை அடியுடன் அறுத்து அடியவரின் கையில் கொடுத்து வணங்கினார். அதை வாங்குவதுபோல் நின்ற அடியவர் அம்பிகையுடன் விடைமேல் தோன்றிக் காட்சி கொடுத்தார். மணமகள் கூந்தல் பெருமான் கருணையினால் வளர்ந்தது. அன்பனே ‘நம்பாலும் நம் அடியர்பாலும் நீர் கொண்ட மெய்யன்பை அறிந்து மகிழ்ந்தோம். உமக்கு நம் புவனத்தில் இடம் கொடுத்தோம்” என அருள் செய்தார், மணக்கோலத்தில் ஏயர்கோன் கலிக்காமர் வந்தார். நிகழ்வுகளைக் கேட்டு மாவிரதியாய் வந்த எம்பெருமானை வணங்கும் பேறு இழந்தோமே என வருந்தினார்.

#####

ஓம்நமசிவய!

பெருச்சாளியூரும் பிரானே போற்றி!
நரிச்செயலார் பால் நண்ணாய் போற்றி!
செந்தாமரைத்தாள் தேவா போற்றி!
நந்தா மணியே நாயக போற்றி!
இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி!
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!

அமர்நீது நாயனாரை ஆட்கொண்ட பிரமச்சாரி!

கும்பகோணத்தின் ஒரு பகுதியாகிய தாராசூரம் அருகில் உள்ள பழையாறை என்ற ஊரில் பிறந்த அமர்நீதியார் வணிகம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்திருந்தார். அவர் சித்தத்தில் கொண்டிருந்த கொள்கைகள் இரண்டு. ஒன்று சிவன் சிந்தனையை சித்தத்தில் பதித்து வழிபாடு செய்வது. மற்றது சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து கீழுடை மற்றும் கோவணம் விரும்பியதை அளித்து வணங்கி மகிழ்வது. பக்கத்தில் உள்ள நல்லூரில் கோவில் விழாவிற்கு குடும்பத்துடன் சென்று மடம் அமைத்து அன்பர்களுக்கு அமுது படைத்து அளித்து வந்தார். அப்படிக் கோவணமும் சீருடையும் அன்பர்களுக்குத் தந்து தொண்டு செய்துவரும் அமர் நீதியாருக்கு கோவணத்தின் பெருமைகாட்டி அருள்கொடுக்க எம்பெருமாண் மறையவர் குலத்து பிரம்மச்சாரி வேடம் தாங்கி வந்தார். அவரை மனத்திலும் முகமிக மலர்ந்து வரவேற்றார் அமர்நீதியார். ஐயா, நான் தெய்வத்தன்மை மிகுந்த காவிரியில் நீராடி வருகின்றேன். மழைவரினும் வரும் தண்டிலே உள்ள இந்த உலர்ந்த கோவணம் ஒன்றினை உம்மிடம் கொடுக்கின்றேன். கோவணம் என அலட்சியமாக இருக்க வேண்டாம். நான் குளித்துவரும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்ட அமர்நீதியாரும் ஒப்புக்கொண்டார். அமர்நீதியார் அடியவர் முக்கியத்துவம் கொடுத்த கோவணத்தை மற்றவைகளிடையே வைக்காமல் தனியாக பத்திரமாக வைத்தார். இறைவன் கோவணத்தை போக்கிவிட்டு மழையையும் பொழிய வைத்தார். அடியவர் மழையில் நனைந்து வந்து, என் கோவணம் நீரில் மூழ்கியதாலும், தண்டில் இருந்த கோவணம் மழையாலும் நனைந்து விட்டது, நான் கொடுத்த கோவணத்தை தாருங்கள் எனக் கேட்டார். அமர்நீதியார் உள்ளே சென்று பார்த்தபோது வைத்த இடத்தில் அந்த கோவணம் இல்லை. பதறிவிட்டார். இந்த அதிசயம் என் வாழ்நாளில் கண்டதில்லை. தங்களுக்கு வேறு ஒரு கோவணம் புதியதாகத் தருகின்றேன் என்றார். அமர்நீதியாரே. உமது செயல் நன்றாக இருக்கின்றது. நல்ல கோவணம் தருகின்றேன் என்று பல நாளும் பலரைச் சொல்ல வைத்தது என்னுடையதை வைத்துக்கொள்ள நாடகமா. பழையதாக இருந்தாலும் பரவாயில்லை. என்னுடையதுதான் வேணும் என்றார். அமர்நீதியார் அடியவரே அதற்குப் பதிலாக பொன்னும் மணியும் தருகிறேன் என்றதையும் மறுத்து கோவணமே வேண்டும் என்றார் அடியவர். என்னிடம் காணாமற் மறைந்த கோவணத்தைக் கேட்டால் எப்படி. அதற்கு மாற்று சொல்லுங்கள் என்றார் அமர்நீதியார். நான் உடுத்தியிருக்கின்ற கோவணம் தவிர, உம்மிடத்திலே கொடுத்து நீர் தொலைத்த கோவணம் தவிர அதற்கு நிகரான தண்டிலே உள்ள இந்தக் கோவனத்திற்கு சமமான கோவணம் வேண்டும் என்றார். அதற்கு சம்மதித்த அமர்நீதியார் தன்னிடமிருந்த எல்லா கோவணத்தையும் வைத்தும் தராசு சமநிலை அடையவில்லை. அதிசயப்பட்ட நீதியார் தன்னிடமிருந்த பொன் பொருள் அனைத்தையும் வைத்தார். அப்போதும் தராசு சமநிலைக்கு வரவில்லை. வேறுவழி தெரியாமல் அமர்நீதியார் அந்த தராசை மனைவி மகனுடன் வலம் வந்து ‘நாங்கள் அடியவர்களுக்குச் செய்த அன்பில் இறைவனுடைய திருநீற்று மெய்யடியில் தவறு செய்ய வில்லை என்றால், தராசே நீ நேர் நிற்க’’ எனச் சொல்லி நல்லூர் இறைவனை வணங்கி ஐந்தெழுத்து ஓதி தராசில் ஏறி நின்றார். தராசு துலை நேர் நின்றது. இறைவன் உமையோடு காட்சிதந்து தம்முன் எப்போதும் தொழுதிருக்கக்கூடிய இன்ப பேற்றினை அருளினார்

#####

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா போற்றி!
ஆவா எங்களுக்கு அருள்வாய் போற்றி!
தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய் போற்றி!
அமிழ்தாய் எம் அகத்தானாய் போற்றி!
மழவிளங்களிறே மணியே போற்றி!
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

இளையான்குடி மாற நாயனாரை உய்வித்த அடியார்!

இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் மைல் தொலைவில் உள்ள இளையான்குடி. ஊரில் பிறந்து விவசாயம் மேற்கொண்டு வந்தார் மாறனார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். இறைவன் மேலும் அவரின் அடியார்கள் பாலும் அளவிலாத அன்பு கொண்டவர். அன்னம் பாலிப்பு செய்வதை தன் பெருந்தொண்டாக கருதினார். ஆண்டவன் வழிபாடு ஆராதனை. அடியவர் வழிபாடு சமாராதனை என்பர். விட்டை விட்டு வெளியில் வந்து பாதையில் நடப்பவர் யாராயினும் அடியவராக கருதி வழிபட்டு அமுது படைப்பார். அறுசுவை உணவு தயாரித்து அடியார் விரும்பும் உணவை பரிமாறி மகிழ்ந்து மகேசுவர வழிபாடு செய்து வந்தார். சிவபெருமான் தம் அடியவர்கள் செல்வம் போய் தான் உண்ணாது வாழ்ந்தாலும் தங்கள் கொள்கையை விடமால் அடியவர்க்கு அமுது படைப்பார்கள் என்பதனை உலகுக்கு மாற நாயனார் மூலம் எடுத்துரைக்க விரும்பினார். மாறன் வறுமையுற்றார். செல்வ வளம் சுருங்கியது. அவரின் மனம் சுருங்கவில்லை. கடன் பெற்றும் சொத்துக்ளை அடமானம் வைத்தும் தொண்டு செய்துவந்தார். தில்லையிலிருந்து அந்தணர் வடிவில் புறப்பட்ட சிவபெருமான் மாரிக்காலத்து இரவில் மாறன் வீடு வந்து சேர்ந்தார். அங்கு மாறனும் அவர் துணைவியரும் உணவு உண்ணாமல் படுத்திருந்தார்கள். மழையில் நனைந்தபடியே வந்த அடியாரை வரவேற்று ஈரமேனியைப் போக்க உதவினர். மாறன் நெஞ்சிலே ஈரம் கசிந்தது. மனைவியிடம் அடியவரின் பசியைப் போக்க என்ன செய்யலாம் என ஆலோசித்தார். அவர் மனைவி, கணவரிடம் இன்று நம் சிறுவயலில் விடுத்த செந்நெல்லை எடுத்து வந்தால் அதைக் கொண்டு அமுது படைக்கலாம் என்றார், நாயனார் வயல் வெளிக்குச் சென்று அன்று விதைத்த முளை நெல் மழையினால் மிதப்பதை ஒன்று சேர்த்து கொண்டுவந்து மனைவியிடம் கொடுக்க அதை அவர் சமைக்க மழையினால் விறகு ஈரமாக இருப்பதை கணவருக்கு உணர்த்த அவர் வீட்டின் விட்டத்தை எடுத்து ஒடித்து கொடுத்தார். வீட்டின் பின்புறம் உள்ள குழி நிரம்பாத குறும் பயிரான கீரையைக் கொணர்ந்தார் மழையில் நனைந்தவாறே. இவற்றையெல்லாம் வந்த அடியரின் பசியைப் போக்க சுவை உணவாக மாற்றிய அம்மையார் தம் கணவரிடம் அடியவரை அமுது உண்ண அழைத்தார். அடியவர் மறைந்தார் அங்கு ஓர் சோதி தெரிய இருவரும் திகைத்து நின்றனர். அப்போது ‘நீயும் நின் துணைவியும் என் பெரும் பதத்தை எய்திக் குபேரன் உம் ஏவல்வழிச் செயல்பட ஆணை பிறப்பித்தோம்’ என அருள் செய்தார்.

#####

ஓம்நமசிவய!

உருகுவோருள்ளத் தொளியே போற்றி!
பெருமருள் சுரக்கும் பெருமான் போற்றி!
தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி!
உம்பர்கட்கரசே ஒருவ போற்றி!
பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய் போற்றி!
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

இயற்பகை நாயனாரை சோதித்த தூர்த்தர்!

பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம் என்ற இடத்தில் பிறந்தவர் இயற்பகையார். உலக இயற்கைக்குப் பகையானவர். நமக்கு உரிமை இல்லாதவற்றை எல்லாம் என்னுடையது என நினைப்பது உலக இயல்பு. ஆனால் இவர் தன்னுடையதை என்னுடையது என எண்ணாதவர். அடியார்பால் அன்பும் நேசமும் கொண்டவர். அடியார் எது கேட்டாலும் வேண்டுவனவற்றை இல்லை என்று சொல்லாமல் வழங்குபவர். உலக இயலுக்கு பகையானவர். இவ்வடியவரின் திறத்தை உலகுக்கு அறியச் செய்ய நினைத்து சிவபெருமான் காமுகன் வேடம் பூண்டு புறப்பட்டார். இயற்பகை இல்லம் வந்தார். இயற்பகையாரே நீர் அம்பலவர் அடியார்கள் யாது கேட்கினும் இல்லை எனக் கூறாது வழங்கும் உம் வள்ளல் தன்மை பற்றித் தெரிந்தபின் உன்னிடம் ஒன்று வேண்டி வந்தேன் என்றார். அடியவரே என்ன தயக்கம். யாதாயிருந்தாலும் என்பக்கம் இருந்தால் அது எம்பிரான் அடியவர் உடமை. வேண்டியது கேள் என்றார். அடியவர் நீங்கள் தரலாம் என்றால் நான் கேட்கலாம் என்றவரிடம் கேளுங்கள் என்றார். ‘உன் காதல் மனைவியைத் தா’ என்றார் அடியவர். தன்னிடம் இருப்பதைக் கேட்டார் என மகிழ்வுற்று நான் தந்தேன் என்ற இயற்பகை, மனையிடம் சென்று ‘இன்று உன்னை இம்மெய்த்தவர்க்கு கொடுத்தனம்’ என்றார். செய்தி கேட்ட மங்கை கலங்கினார். கணவரின் மனநிலை அறிந்து தெளிந்தார். அம்மையார் கணவன் சொல்லைக் காக்க முனைந்து தன் கணவரை வணங்கினார். அடியார் இவளை அழைத்துபோக பயமாயிருக்கின்றது ஊர் எல்லைவரை வழித்துணையாக வர இயற்பகையாரிடம் வேண்டு கோள் விடுத்தார். அவ்வறே வருகிறேன் என உடைவாளை எடுத்துக் கொண்டு துணைக்குச் சென்றார். இச்செயலை அறிந்த சுற்றத்தாரும் ஊர் மக்களும் அதை தடுக்க முடிவு கொண்டனர். தன் முடிவை சொன்ன இயற்பகையார் ஏற்றுக் கொள்ளாமல் தடுத்த அனைவரையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் அடியவரிடம் நீங்கள் புறப்படுங்கள் என்றார். அடியவரும் அம்மையாரும் ஒரு திசையிலும் இயற்பகையார் ஒருதிசையிலும் சென்றனர். எந்தவிதக் கவலையோ துன்பமோ இன்றிப் போகின்ற இயற்பகையாரைக் கண்ட அடியவர் வியந்து சொன்னார். ‘பொய்தரும் உள்ளம் இல்லான், பார்க்கிலன் போனான், என அவரின் பற்றற்ற உள்ளத்தை பாராட்டுகின்றார். இயற்பகை முனிவா நீ வா என குரல் கேட்டுத் திரும்பினார் இயற்பகையார். பெருமான் வானில் வெள்ளிவிடைமீது தோன்றி உம் துனைவியோடு நம்முடன் வா என அருள் புரிந்தார்.

#####

ஓம்நமசிவய!

திருநீற்றொளிசேர் செம்மால் போற்றி!
இருவேறுருவ ஈசா போற்றி!
உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி!
கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி!
நம்பியாண்டார்க்கருள் நல்லாய் போற்றி!
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!

திரு நீலகண்ட நாயனார்க்கு அருளிய சிவயோகியர்!

சிதம்பரத்தில் பிறந்த நீலகண்டர் சிவனடியார்களுக்கு சிறப்பாக திருவோடுகள் செய்து தொண்டாற்றினார். இளமையான அழகான மனைவியுடன் இல்லறம் இனிது நடத்தி வந்தார். ஒருநாள் சிற்றின்பத்தில் ஆவல் கொண்டு விலைமகளோடு கூடி மகிழ்ந்திருந்து வீட்டிற்கு வந்தார். அவர் மனைவி விலை மகளைக் கட்டியணைத்த கைகளால் குலமகளானத் தன்னைத் தொட வேண்டாம் இது நீலகண்டத்தின்மேல் ஆணை என்றாள். அன்று முதல் அவளைத் தொடாமல் அயலார் பெண்போலவே பார்த்து உடலுறவில்லாமலே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். எந்த மாதரையும் தொடாமல் நல்லொழுக்கம் தவறாமல் இருந்து வரும் நீலகண்டரின் ஒழுக்கத்தை உலகறியச் செய்ய ஆவல் கொண்ட பெருமான் சிவயோகியோர் வடிவில் வந்தார். தன்னிடமிருந்த திருவோட்டினைக் கொடுத்து தான் மீண்டு வந்து கேட்கும்போது தரும்படி கூறிச் சென்றார். பின்னர் அதை மறையவும் செய்தார். நீலகண்டர் திருவோடு காணாமல் கலங்க வேறு ஒரு திருவோடு செய்து தருவதாகச் சொல்லியும் சிவயோகியர் ஏற்கவில்லை. நீ திருவோட்டை உண்மையாக தொலைத்து விட்டாய் என்றால் உன் மனைவியின் கையைப் பிடித்து தாமரைத் தடாகத்தில் மூழ்கிச் சத்தியம் செய் என்று தில்லைவாழ் அந்தணர்களின் திருச்சபையில் வழக்காடினார் சிவயோகியார். நீலகண்டரை மனைவியுடன் சத்தியம் செய்ய தீர்ப்பளித்தனர். அனைவரும் தில்லை அருகில் உள்ள புலீச்சுரம் கோவில் முன் உள்ள குளக்கரையில் கூடினர். ஒரு தண்டினை எடுத்து ஒரு புறம் மனைவி பிடிக்க மறுபுறம்தான் பிடிக்க மூழ்க நினைக்கும் போது அனைவரும் மனைவியின் கரம்பற்றி மூழ்க என கூச்சலிட்டனர். தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்ட பழைய வரலாற்றை கூறி மீண்டும் தண்டினைப் பற்றி மூழ்கி எழும்போது இளமைப் பொலிவோடும் அழகோடும் இருவரும் எழுந்தனர். ‘எம்பெருமான் பிராட்டியோடு விடைமேல் தோன்றி இந்த இளமை நீங்காது எம்மோடு சிவலோகத்தில் இருப்பீர்’ என அருள் புரிந்தார். நான் ஒரு அடியார். இளமையில் நடந்த செயல் யாரும் அறியாதது. அதை இப்போது சொன்னால் என் புகழ் கெடும் என பரத்தையர் விவகாரத்தால் மனைவியுடன் முரன்பாடு கொண்டதையும் வெளியில் தெரிய வேண்டாம் என்ற நீலகண்டர் மனத்திலிருந்த மாசினை நீக்க இறைவன் பார் அறிய சொல்ல வைத்தார்.

#####

ஓம்நமசிவய!

திணைபால் கடந்த தேவே போற்றி!
புனையாய் இடர்க்கடல் போக்குவோய் போற்றி!
பேழை வயிற்றுப் பெம்மன் போற்றி!
ஏழைக்கிரங்கும் எம்மிறை போற்றி!
அடியவர் உள்ளம் அமர்ந்தாய் போற்றி!
அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி! போற்றி!

திருநாவுக்கரசருக்கு அருளிய வடிவங்கள்-இரண்டு!

1.திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறளித்த அந்தணர்: சைவத் தலங்கள்தோறும் சென்/று இறைவனைத் துதித்து இனிய பாடல்களைப் பாடிவந்தார் திருநாவுக்கரசர். திருவானைக்கா, திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, திருகற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களை வணங்கி திருப்பைஞ்ஞீலியைச் சேரும்போது பசியாலும் நீர் வேட்கையாலும் வாடினார். பெருமான் வழியில் சோலையும் குளமும் அமைத்து வழிப்போக்கர் போல் பொதி சேற்றுடன் அந்தணர் கோலத்தில் உணவு அளித்து சற்று தூரம் வந்ததும் மறைய பெருமானின் கருணையை நாவுக்கரசர் உணர்ந்தார்.

2.பனிபடர்ந்த மலையில் அப்பருக்கு அருளிய முனிவர்: திருநாவுக்கரசர் காளத்தியில் காளத்திநாதரைக் கண்டு வணங்கி திருப்பருப்பதத்தை எண்ணி மலைப்பாதைகளும் வனங்களும் கடந்து கங்கையையும் கடந்து காசியில் விஸ்வநாதரை தரிசனம் செய்தார். திருக்கயிலையைக் காண வேண்டும் என்ற வேட்கையில் கைகளும் மார்பும் தேய உடல் வருந்தும் தன்மையில் தொடர்ந்து சென்றார். பெருமான் முனிவர் வேடத்தில் தோன்றி கயிலை காண்பதற்கு அரியது. அதைக் கைவிடுக என்றார். அதை ஏற்றுக்கொள்ளாத அப்பரடிகளிடம் காட்சியளித்து இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் கையிலைக் காட்சி காண்பாயாக என அருளினார். அவ்வாறே பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் திருக்கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879055
All
26879055
Your IP: 100.25.40.11
2024-03-19 07:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg