gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7

மந்திரங்கள்! (6)

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 10:00

தாந்திர மந்திரங்கள்!

Written by

ஓம்நமசிவய!

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

######

 

தாந்திர மந்திரங்கள்!
(மஹா கணபதி, கணபதி, உடல் கட்டுதல்,
காலனில்லை! கல்தேகம்-பிராணாயாமம் செய்ய,
சக்தி, பைரவர், சரஸ்வதி, வீரபத்ரகாளி,
சிவ அடைப்பு- திறப்பு, மந்திர பீஜாக்ஷரங்கள்
நாக பாம்பு தீண்டாதிருக்க, வித்யை- தாராதேவி)

######

  முறையான தீட்சை, சரியான பயிற்சி பெறாமல்
நானும் செய்கிறேன், சொல்கின்றேன் என இந்த
தாந்திரத்தின் வித்தை
பகுதியில் உள்ள மந்திரங்களை உபயோகித்தல்
மிக மிகத் தவறாகும். மீறி செயல்பட்டு மந்திரங்களை
முறையின்றி உபயோகிப்பதன் பலனை அனுபவிக்கும்போது
யாரும் உதவ முடியா நிலையில் இருப்பீர்கள். அது கர்ம வினைகளின்
தொகுப்பாக மாறி ஜன்ம ஜன்மங்களுக்குத் தொடரும்!
சிரத்தையான கவனம் தேவை!

#####

1.மஹா கணபதி மந்திரம்!
2.கணபதி மந்திரம்!
3. உடல் கட்டுதல்! 
4. காலனில்லை! கல்தேகம்! பிராணாயாமம் செய்ய!
5. சக்தி மந்திரம்!
6. பைரவர் மந்திரம்!
7. சரஸ்வதி மந்திரம்!
8. வீரபத்ரகாளி மந்திரம்!
9. சிவ அடைப்பு, திறப்பு மந்திரம்!
10.“மந்திர பீஜாக்ஷரங்கள்”
11. நாக பாம்பு தீண்டாதிருக்க மந்திரம்!
12. வித்யை- தாராதேவி மந்திரங்கள்

######

வியாழக்கிழமை, 30 November 2017 12:36

காயத்திரி மந்திரங்கள்!

Written by

ஓம்நமசிவய!

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!

######

காயத்திரி மந்திரங்கள்!

(விநாயகர், மகாகாயத்திரி, சிவன், பைரவர்,
முருகன், விஷ்ணு, அம்மன், சப்த மாதா,
நவகிரக, இறை வாகன, லட்சுமி குபேரர்,
ப்ரம்மா, மன்மதன், ஆதிசேஷன், சுதர்சனமூர்த்தி,
ஆஞ்சநேயர், நாகராஜன், ராகவேந்திரர், கார்த்த வீர்யார்ஜுனர்,
தத்தாத்ரேயர், வாஸ்து பகவான், துளசி,)

######

பிரகிருதி சரஸ்வதி ஸ்வரூபம் புருஷனுடன் கூடிட
பிரம்மனின் முகத்திலிருந்து
காயத்ரீ மந்திரமாகிய இருபத்திநான்கு எழுத்துகள்
உண்டாயின. இதன் அடிப்படையிலே மற்ற தெய்வங்களுக்கான
மந்திரங்கள் சொல்லப்பட்டு அவைகள் அந்த தெய்வங்களின்
காயத்திரி என அழைக்கப்பட்டன.

#####

தனது காயத்தை-உடலை திரியாகவைத்து
இருகைகள், இரு கால்கள், தலை என
ஐந்து உறுப்புகளை குத்து விளக்கின்
ஐந்து திரிகளாக போட்டு அதில்
சுடரினை ஏற்றி தவம் செய்தார் கௌசிகன்.
அதன் பலனாக கௌசிகன் ஒளிக்கடவுளுக்குரிய
காயத்திரி மந்திரத்தை அறிந்தார்.
அது மஹா காயத்திரி எனப்படும்.
உலக உயிர்களுக்கு நன்மை தரும்
இந்த மந்திரத்தை கண்டறிந்ததால்
கௌசிகன் என்ற அவர் பெயர்
விஸ்வாமித்திரன் என்றானது.
விஸ்வம்-உலகம், மித்திரன்-நண்பன்.
இதன் பிறகு ஒவ்வொரு தெய்வத்திற்குரிய
காயத்திரி மந்திரங்கள் வெவ்வேறு
முனிவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

#####

1.விநாயகர் காயத்திரி மந்திரங்கள்!

(விநாயகர், விக்ன விநயகர், கணபதி, வல்லப கணபதி,)

2.மகாகாயத்திரி மந்திரம்!

3.சிவன் காயத்திரி மந்திரங்கள்!

(சிவன், சங்கரன், ருத்ரன், ம்ருத்யுஞ்ஜய,
தட்சிணாமூர்த்தி, வீரபத்திரர், சரபேஸ்வரர்)

4.பைரவர் காயத்திரி மந்திரங்கள்!
(பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர், ஸ்வர்ண பைரவர், கபால பைரவர்,
சண்ட பைரவர், உன்மத்த பைரவர், அஸிதாங்க பைரவர், குரு பைரவர்,
குரோதன பைரவர், ஸம்ஹார பைரவர், பீஷண பைரவர்)

5.முருகன் காயத்திரி மந்திரங்கள்!
(முருகன், குகன், சிங்காரவேலன், சரவணன்,
ஸ்கந்த, குமரன், ஷண்முகன், வேல்)

6.விஷ்ணு காயத்திரி மந்திரங்கள்!
(மகாவிஷ்ணு, ஸ்ரீநிவாசன், திருமால், கிருஷ்ண,
நரசிம்மர், பூவராஹர், ராமர், பரசுராமர், கோதண்டராமர்,
ஹயக்ரீவர், கூர்மம், கோபாலன், வாமனர், தன்வந்த்ரி)

7.அம்மன் காயத்திரி மந்திரங்கள்!
(சரஸ்வதி, கலைவாணி, அன்னபூரணி, மாரியம்மன்,
சரதா தேவி, சந்தோஷிமாதா, மகிஷாசுரமர்த்தினி, மகாலட்சுமி,
மகாமேரு,பாலா த்ரிபுரசுந்தரி, மீனாட்சி, ராதா, ஸாகம்பரி, காமதேனு)

8.சப்த மாதா காயத்திரி மந்திரங்கள்!
(ப்ராஹ்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி,
வராஹி, இந்த்ராணி, பத்ரகாளி/ சாமுண்டா, துர்கை, பகவதி)

9.நவகிரக காயத்திரி மந்திரங்கள்!
(சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,
குரு/வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது)

10.இறை வாகன காயத்திரி மந்திரங்கள்!
(மயில், நந்தி, கருடன்,)

11.ஸ்ரீ லட்சுமி குபேரர் காயத்திரீ!
(செல்வ வளம் பெருக)

12.ஸ்ரீ ப்ரம்மா காயத்திரீ!
(விதிகளின் பாதிப்பு குறைந்திட)

13.ஸ்ரீ மன்மதன் காயத்திரீ
(மனவிருப்பப்படி மணமாலை அமைய)

14.ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரீ
(பயம், அச்சம் நீங்க)

15.ஸ்ரீ சுதர்சனமூர்த்தி காயத்திரீ
(விபத்துக்கள், எதிரிகளிடமிருந்து காப்பாற்ற)

16.ஸ்ரீ ஆஞ்சநேயர் காயத்திரீ
(சகல காரியங்களும் சித்தியாக)

17.ஸ்ரீ நாகராஜன் காயத்ரீ
(சர்ப்ப தோஷங்கள் விலகிட, சந்தான பாக்யம் பெற)

18.ஸ்ரீ ராகவேந்திரர் காயத்திரீ
(அருள் கிடைத்திட)

19.ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனர் காயத்ரீ
(காணாமல் போன பொருள் கிடைத்திட)

20.ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்திரீ
(மகிழ்வான வாழ்விற்கு)

21.ஸ்ரீ வாஸ்து பகவான் காயத்திரீ
(வீடு மனைகள் கட்ட)

22.ஸ்ரீ துளசி காயத்திரீ
(அறியாமல் செய்த பாவங்கள் நீங்க)

23.ஸ்ரீ சாஸ்தா காயத்திரீ
( பயங்கள் நீங்க)

 

#####

செவ்வாய்க்கிழமை, 28 November 2017 12:43

மூலமந்திரமங்கள்!

Written by

ஓம்நமசிவய!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

######

மூலமந்திரமங்கள்!
(சூரியன், விஷ்ணு, முருகன், ஷடாட்சார, மகாலட்சுமி, துர்க்கை, துளசி,
ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிஸ்வர்ணாகர்ஷண பைரவர், குபேர சிந்தாமணி, நவக்கிர)

 

விஷ்ணு அஷ்டாட்சார மூலமந்திரம்

”ஓம் நமோநாராயணாயைய”

#####

 

முருகன் ஷடாட்சார மூலமந்திரம்

”ஓம் சரவணபவ”

#####

 

ஸ்ரீ முருகன் மூலமந்திரம்

”ஓம் ஸௌம் சரவணபவ
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ”!

#####

 

ஸ்ரீ மகாலட்சுமி மூலமந்திரம்

”ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம”

#####

 

ஸ்ரீ துர்க்கை மூலமந்திரம்

”ஓம் நமோ தேவ்யை 

மஹா தேவ்யை
துர்க்காயை ஸததம் நமஹ!
புத்ர சௌக்யாம் தேஹி
தேஹி கர்ப்பரக்ஷம் குருஷ்வன
மஹாகாளி, மஹாலக்ஷ்மி,
மஹாசரஸ்வதி ரூபாயை
நவகோடி மூர்த்யை
துர்க்காயை நமஹ”

#####

 

ஸ்ரீ துளசி மந்திரம்

”பிருந்தா, பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா,
விஸ்வபாவதி, புஷ்பஸாரா,
நந்தினி, துளஸீ, கிருஷ்ண ஜீவனி,
ஏதந் நாமஷ்டகஞ் சைவ ஸ்தோத்ரம்
நாமார்த்த ஸம்யுதம்ய படேத் தாஞ்சஸம்
பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத்”

#####

ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி மந்திரம்

”அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்த நுதே
கிரிவர விந்தய சிரோதி நிவாஸினி,
விஷ்ணு விலாசவி ஜிஷ்ணு நுதே
பகவதி ஹேசிதி கண்ட குடும்பினி,
பூரி குடும்பினி, பூரிக்குதே
ஜயஜயஹே மகிஷாஸுர மர்த்தனி
ரம்ய கபர்த்தினி சைல ஸூதே!

#####

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்

ஒம் ஐம் க்லாம்
க்லீம் க்லூம் ஹ்ராம்
ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸ்ஹ
ஆபதோ தாரணாய
அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷ்ண பைரவாய
மம தாரித்தரிய வித்வேஷணாய
ஆம் ஸ்ரீம் மகா பைரவாய ஸ்வாஹ”

#####

 

சூரியனின் மூல மந்திரம்

ஏழு எழுத்துக்கள் - சப்தாக்ஷர மந்திரம்
காலையில் கிழக்கு முகமாகவும்,
மாலையில் மேற்கு முகமாகவும்,
இரவில் வடக்கு முகமாகவும்,
ஆறுதள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து
மனம் ஒன்றி ஒரு வருடம் தியானிக்க வேண்டும்.

‘ஓம் ககோல்காய ஸ்வாஹா’

#####

 

குபேர சிந்தாமணி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம்
உபைதுமாம் தேவ ஹை
கீர்த்திஸ்ச மணிதா ஸக:
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட் ரேஸ்மினி
கீர்த்திம் வ்ருத்திம் ததா துமே.
ஓம் குபேராய, ஐஸ்வர்யாய
தனதான்யாதி பதயே தனவ்ருத்திம்
குரு குரு ஸ்வாஹா:
(சிவபெருமானின் தோழனே!
சகல லோக செல்வங்களை பரிபாலனம் செய்பவரே!
ரத்னசபையில் வாசம் செய்பவரே!
பூத கணங்களாலும் அசுரர்களாலும் நேசிக்கப்படுபவரே!
புகழ், செல்வவிருத்தி என யாவும் தரவல்லவனே!
குபேரனே உன்னை வணங்குகின்றேன்!.
எனது இல்லத்தில் செல்வ வளம் குன்றாது செழித்திட அருள் புரிவாய்!)

#####
 

நவக்கிர ஸ்லோகம்

”ஓம் ஸ்ரீ ஆதித்யாய சோமாய
மங்களாய புதாய ச
குரு சுக்ர சனியச்ச
ராகுவே கேதுவே நம”

#####

செவ்வாய்க்கிழமை, 28 November 2017 12:27

ஓங்கார மந்திரம்!

Written by

ஓம்நமசிவய!

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

######

ஓங்கார மந்திரம்!
(பிரபஞ்ச, சிவ, பஞ்சாட்சார, சிவ, சிவகுரு, ம்ருத்யுஞ்ஜய)

 

ஓங்கார பிரபஞ்ச மந்திரம்

”ஓம்”

#####

 

சிவ. பஞ்சாட்சார மூலமந்திரம்

”ஓம் நமசிவய”

#####

 

சிவ மந்திரம்

'ஓம் நமஸ்தேஸ்து பகவன்
விஸ்வேஸ்வராய, மஹாதேவாய,
திரியம்பகாயா, திரிபுரந்தகாய, திரிகலாக்னிகாலாய,
காலாக்நிருத்ராய, நீலகண்டாய, ம்ருதியுஞ்ஜாயாய,
ஸர்வேஸ்வராய, சதாசிவாய, சங்கராய
ஸ்ரீமத் மஹாதேவாய நமோ நம!"

#####

 

சிவ குரு மூலமந்திரம்

”ஓம் குருர் ப்ரம்மா
குருர் விஷ்ணு
குருதேவா மஹேஸ்வரா!
குருஸ் ஸாக்ஷாத் பரப் பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம!”

#####

 

ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

”ஓம் த்ரியம் பகம் யஜா மஹே
ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்,
உருவாகு கமிவ பந்தானான்
ம்ருதயோர் முக்ஷி யமாம் க்ருதாத்.”

#####

செவ்வாய்க்கிழமை, 28 November 2017 12:10

சூர்ய நமஸ்காரம்!

Written by

ஓம்நமசிவய!

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!

###### 

சூர்ய நமஸ்காரம்!
(ஆரோக்கியமும் ஆனந்தமும் பெற)

”ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹத் விதிகராய தீமஹி
தன்னோ சூர்யப் பிரசோதயாத்”

(உலகிற்கு ஒளியூட்டும் பாஸ்கரனே,
கோள்களையெல்லாம் கட்டுக்கோப்பாக
வைத்திருப்பவனே, சூரிய பகவனே,
எல்லா வளங்களும், பெற அருள்வாய்!)

#####

செவ்வாய்க்கிழமை, 28 November 2017 12:02

மந்திரங்கள்!

Written by

ஓம்நமசிவய!

கரியாதியெலாம் விகடர் காக்க! என்றிவ்வாறிது
தனை முக்காலுமும் ஓதிடின், நும்பால்
இடையூறென்றும் ஒன்றுறா, முனிவரர்காள், அறிமின்கள்,
யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர் தேகம்
பிணியற வச்சிர தேகமாகி மின்னும்!

ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்!
ஓம் நமசிவய! சிவயநம! சிவநம! ஓம்
#########

பிறவித் தன்மையை ஒழிக்கும்
தெய்வத் தன்மை பொருந்திய மந்திரங்கள்!

இந்தப் பகுதியில் காணப்படும் மந்திரங்கள் அரியன.
மந்- நினைப்பவரை என்றும், திர-காப்பது என்றும் பொருள்.
எனவே மந்திரம் என்பது மறை பொருளாக இருந்து அதை
நினைப்பவரைக் காப்பது எனப் பொருள் கொள்ளவேண்டும்.
குரு மந்திர தீட்சை பெற்று குரு ஆலோசனையின் பேரில்
எதற்கு ஏன் எனத் தெரிந்து கொண்டு மனனம் செய்து
உருயேற்றி நல்லன நினைத்து
உச்சாடனம் செய்தால் உரிய பலன் கிட்டும்.
மனதில் தியானிப்பதை மானஸம் என்றும்,
தான் மட்டும் கேட்கும்படியாக
மூலமந்திரத்தை ஜபிப்பது வாசிகம் என்றும்,
விக்ரஹ, யந்திர வடிவமாக பூஜிப்பது காயிகம் எனப்படும்.
ஆலோசனை பெறவிரும்பும் ஆத்மாக்கள்
குருஸ்ரீ பகோராயை தொடர்புகொண்டு
காலத்தையும் இடத்தையும் நிர்ணயம் செய்து
நேரில் தொடர்பு கொள்ளவும்.

######

தீட்சை பெற தகுதியான மாணாக்கன்/ சீடன் நிலை:
உத்தம ஜென்மம்,
வித்யையை கற்பவன்,
சாந்த சற்குணம்,
பற்றில்லாதவன்,
காம சங்கற்பம் இல்லாதவன்,
கோபத்தை வென்றவன்,
சத்திய தருமத்தை விரும்புவன்,
குரு பணியில் விருப்பம்,
மாதா பிதாக்களை உபசரிப்பவன்,
கிருகத்தில் இருப்பவன்,
நல்ல ஒழுக்கம் உடையவன்,
மனப் பக்குவம் அடைந்தவன்
ஆகிய இந்நிலைகளைக் கொண்டவனே
மந்திரங்கள் மனனம் செய்து பியோகிக்க தகுதியுடையவன்.
தகுதியில்லாமலும் குரு தீட்சை பெறாமலும்
மந்திரங்கள் பிரயோகம் பலனுக்குப் பதில் பாதகம் விளைவிக்கும்.
வீண் முயற்சி விபரீத விளைவுகளை
ஏற்படுத்தும் என்பதனை அறிக!

#####

 

ஸ்ரீ கணபதி துதி

'சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயோத் ஸர்வ விக்னோப சாந்தயே!"

(பிரகாசமான வெண்மை நிறத்தில் நான்கு கரங்களுடன் புன்முருவல் பூத்து
முழு நிலவினைப் போல் அமைதி தவழும் முகத்துடன் ஆனந்தமாய்
பிரகாசிப்பவனே அடியேனது அனைத்து முயற்சிகளும்
வெற்றியாக அருள் புரிவாய்!)

"மூசிஸ வாகன வேதக ஹஸ்த ஸாமர கர்ண விளம்பர சூத்ர
வாமண ரூப மகேஸ்வர புத்ர விக்ன விநாயகா பாதம் நமஸ்துதே!"

(மூசிகனை வாகனமாகக் கொண்டவனே வேதங்களை அறிந்தவனே,
வாமண ரூபனே, மகேஸ்வரரின் புத்திரனே, விக்னங்களைக் களையும்
விநாயகப் பெருமானே உன் பாதம் பணிந்து வணங்கினேன் அருள் புரிவாய்.)

#####

 

1.சூர்ய நமஸ்காரம்!
(ஆரோக்கியமும் ஆனந்தமும் பெற)

2.ஓங்கார மந்திரம்!
(பிரபஞ்ச, சிவ, பஞ்சாட்சார, சிவ, சிவகுரு, ம்ருத்யுஞ்ஜய)

3.மூலமந்திரமங்கள்!
(சூரியன், விஷ்ணு, முருகன், ஷடாட்சார, மகாலட்சுமி, துர்க்கை, துளசி,
ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிஸ்வர்ணாகர்ஷண பைரவர், குபேர சிந்தாமணி, நவக்கிர)

4.காயத்திரி மந்திரங்கள்!
(விநாயகர், மகாகாயத்திரி, சிவன், பைரவர், முருகன்,
விஷ்ணு, அம்மன், சப்த மாதா, நவகிரக, இறை வாகன,
லட்சுமி குபேரர், ப்ரம்மா, மன்மதன், ஆதிசேஷன், சுதர்சனமூர்த்தி,
ஆஞ்சநேயர், நாகராஜன், ராகவேந்திரர், கார்த்த வீர்யார்ஜுனர்,
தத்தாத்ரேயர், வாஸ்து பகவான், துளசி, ஸ்ரீசாஸ்தா.)  

5.தாந்திர மந்திரங்கள்!
(மஹா கணபதி, கணபதி, உடல் கட்டுதல்,
காலனில்லை! கல்தேகம்-பிராணாயாமம் செய்ய,

சக்தி, பைரவர், சரஸ்வதி, வீரபத்ரகாளி,
சிவ அடைப்பு- திறப்பு, “மந்திர பீஜாக்ஷரங்கள்”,

நாக பாம்பு தீண்டாதிருக்க, வித்யை- தாராதேவி)

######

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

20063032
All
20063032
Your IP: 162.158.78.62
2021-01-20 05:00

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg