gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

பாயிரம்!. (8)

செவ்வாய்க்கிழமை, 10 December 2019 08:14

திருமூர்த்திகளின் வரலாறு!

Written by

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#####

திருமூர்த்திகளின் வரலாறு!

103. அளவில்லாத இளமைப் பருவமும், எல்லையில்லா அழகும், எல்லை இல்லாத இறுதியும், அளக்கும் காலம் எனும் நான்கையும் உணர்ந்து ஆராய்ந்தால் உயிர்களுக்கு நலம் செய்யும் சிவசங்கர் எந்த வகையிலும் குறைவு இல்லாதவன். அவன்தன் அடியவரால் சொல்லப் பெரும் எல்லையில்லா பெருமை எல்லாம் திருமாலுக்கும் பிரமனுக்கும் வருமோ. வராது.

104. மூலாரத்தில் உறையும் உருத்திரன், நீலமணி நிறமுடைய திருமால், சுவாதிட்டானத்தில் உள்ள படைக்கும் பிரமன் ஆகிய மூவரையும் ஆராய்ந்தால் தொடர்பில் மூன்றும் ஒன்றே என நினையாமல் வெவ்வேறானவர் எனக் கருதி முரண்பட்டவர்களாக நிற்பது அவர்களின் அறியாமை.

105. நல்வினை தீவினைகளுகு ஏற்ப உடலை படைத்துக் காத்து அழிக்கும் மூவர் ஆட்சிக்கும் அப்பால் உள்ளான் சிவன். மூவர் உருவாவதற்கு காரணமான மூலப் பொருள் சிவனே யாகும். அவரே பெருந்தெய்வம். குற்றமுடையவர் அது தெய்வம் இது தெய்வம் என மயங்குவர். மாசற்ற தூய்மை உடையோரே மூலமான பெருமானே மேலான கடவுள் என உணர்வர்.

106. நான்முகன், திருமால், ருத்திரன் என்ற மூவருடன் மகேசுவரன், சதாசிவம் இருவரையும் சேர்த்தால் ஐவராக சிற்றம்பல சபையில் விளங்குவான். ஆறு ஆதாரங்களும் மகேசுவர, சதாசிவம் பொருந்திய இரண்டும் ஒன்றொடு ஒன்றாகி ஜீவர்கள் உலக நோக்கில் உள்ளபோது சகஸ்ரதளம் கவிழ்ந்தும், சிவமுகமாக உள்ளபோது சகஸ்ரதளம் நிமிர்ந்தும் இருக்கும். அப்போது விந்து-ஒளியாக நாதம்-ஒலியாக அந்தச் சபையில் இருப்பவருக்கு சங்கரன் எனப்பெயர்.

107. ஜீவன்கள் அடையும் பயன் தெரிந்து சிந்திக்கும் போது நான்முகனும் திருமாலும் வேறு வேறானவர் இல்லை. முன்று கண்களையுடைய சிவன் வழிநின்று படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களைச் செய்பவர் ஆவர். ஆதலின் அத் தேவர்களால் பயனடையலாம்..

108 அழியாத தன்மை கொண்ட தேவர்கள் நிறைந்த சபையில் வெண்ணிறப் பெருமானை நான் வணங்கவும், அவர் நீ திருமாலுக்கும் முதல் தொழிலாகிய படைப்பைச் செய்யும் பிரமனுக்கும் நிகராவாய். ஆதலால் மண்ணுலகில் திருவடி ஞானத்தை அளிக்கும் போதக ஆசிரியனாய் இருப்பாய் என அருளினன்.

109. தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையணிந்த சிவன் காத்தருளும் உடல் வேறு. அவர் பாடலால் வானவர் என்றும் மனிதர் என்றும் சொல்லப்படுகின்றனர். அதுதவிர வேறு ஒரு சிறப்பும் உயிர் வகையில் இல்லை. தனித் தெய்வம் என்பது எல்லோராலும் விரும்பும் ஒப்பற்ற சிவனே. உடல் விரும்பி வாழ்வோர் சிவபெருமானை அறிவதே பிறவிப் பேறாகும்.

110. பேரொளியாய் விளங்கும் சிவன் நான்முகன், திருமால், உருத்திரன் என மூவராகவும் மகேசுவரன் சதாசிவன் ஆகியோருடன் சேர்ந்து ஐவராகவும் விளங்குவதை அறியாத மூடர், முறமையாக ருத்திரன், திருமால், நான்முகன் என வேவ்வேறாகக் கருதி அவர்களைப் பற்றி பேசுகின்றார்களே அவர்களின் பேதமை என்னே!

111. உலகில் மேலான சிவமாய் எல்லாவற்றிலும் உள்ளும் புறமுமாய் விருப்பத்தை உண்டாக்குவதில் திருமாலாய், படைத்தலில் நான்முகனாய் தகுதிக்கு ஏற்ப ஒருவரே பலப் பல தேவராக விளங்காதவாறு மறைவாக உருத்திரனாக விளங்கிச் சம்காரத் தொழிலைச் செய்பவன் அவன்.

112. பரம் பொருளின் ஒரு கூறான சதாசிவமான நந்தியம் பெருமான் வான் கூற்றில் பொருந்தி எல்லாத் தத்துவங்களிலும் ஊடுருவி வேறாய் உள்ளான். அவனே உடலாகவும் பிராணவடிவுமாய் உள்ள தலைவன் மற்ற கூறு பரந்த வடிவாய் உள்ளது.

திருச்சிற்றம்பலம்

#####

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

திருமந்திரத் தொகை!

99. மூலன் என்ற நான் உரைத்த மூவாயிரம் தமிழ் மந்திரம் உடைய திருமந்திர மாலையை உலக உயிர்கள் உய்யும் பொருட்டே இறைவன் அருளால் செய்யப்பட்டது. உலக உயிர்கள் காலை எழுந்தவுடன் இதை ஓதி வந்தால் தலைவனை அடைந்து இன்பமெய்துவர்.

100. திருமந்திர நூலில் ஒன்பது தந்திர வகை மூவாயிரம் பாடலுடன் முத்தி நிலையைக் கூறுவது ஆகும். அறிவார்ந்த மூவாயிரம் பாடலும் பொதுவமாய் சிறப்புமாய் அமந்து ஒதுவார்க்கு நன்மை அளிப்பவை.

திருச்சிற்றம்பலம்

#####

குருமட வரலாறு!

101 கயிலாய பரம்பரையில் தோன்றி சன்மார்க்கத்தை போதிக்கும் மடங்கள் ஏழு. அவைகளுள் முன் தோன்றிய மூலன் மடத்தில் வந்த ஆசிரியர் வகைப் படுத்தப்பட்ட ஒன்பது தந்திரங்களையும் அவற்றில் சொல்லிய மூவாயிரம் மந்திரங்களையும் மேற்கொள்ள அழகிய ஆகமத்தில் கூறியவற்றை எடுத்துச் சொன்னார்.

102 சிவானந்தத்தில் திளைத்த காலாங்கர், அகோரர், நலந்தரும் நன்மை அளிக்கும் மாளிகைத்தேவர், நாதநாதர், அறிவுமயமான பரமானந்தர், போகதேவர், உலகில் இருக்கும் திருமூலர் ஆகிய எழுவரும் குற்றம் என்ற பிறவிப் பிணி இலாலாதவர்கள்.

திருச்சிற்றம்பலம்

#####

செவ்வாய்க்கிழமை, 10 December 2019 08:07

அவையடக்கம்!

Written by

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்டபாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####

அவையடக்கம்!

95. நந்தியம்பெருமானின் பெருமைதனை யார் அறிவார். நீளமும் அகலமும் கொண்ட அவரின் பரப்பை யார் அறிவார். தனக்கு என்று பெயரில்லாத பெருஞ்சுடரின் வேரையும் அறியாமல் அதைபற்றி பேசுகின்றேன்.

96. சிவனின் புகழைப் பாட வல்லவர் நெறியிலே சென்று பாட அறியேன், பக்தியால் ஆடவல்லார் நெறிகண்டு ஆடுவதற்கும் அறியேன். போகத்தை நாடவல்லார் நெறியினை நாட அறியேன், விசாரனை செய்து ஆராயவல்லார் நெறியில் போய் ஆராயவும் அறியேன்!

97. நிலையான வேதத்தின் மொழியால் ஓதுகின்றவர் சுவாசத்தினுள் நாத ரூபமாக எழும் ஈசனை நுண்மையாக பரு உலகைப் படைத்த பிரமனும் திருமாலும் உணர முடியுமோ!

98. தத்துவ ஞானத்தை குருவடிவில் உபதேசித்தது கயிலைமலை அடிவாரத்தில். வீடுபேற்றை விரும்பிய முனிவர்கள், தேவர்கள் இந்த ஞானத்தை வேறாக இருந்து துதிப்பதால் இதன் பயனை அறியமாட்டார்.

திருச்சிற்றம்பலம்

#####

செவ்வாய்க்கிழமை, 10 December 2019 08:02

திருமூலர் வரலாறு.!

Written by

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

திருமூலர் வரலாறு.!

73. பக்திநெறி ஞான நெறி ஆகிய இரண்டின் மூலம் என் குருவான நந்தியின் திருவடிகளை தலைமேல் கொண்டு அறிவின் வழி சென்று வழிபட்டு புருவ மத்திக்குமேல் உள்ள அந்தியில் நாள்தோறும் நினைவு கொண்டு தியானித்து திருமந்திரம் எனும் இந்நூலை செய்யத் தொடங்குகின்றேன்.

74. சிவாகமம் சொல்ல வல்லவன் என்னும் தகுதியைப் பெற்றும் அத்தகுதியை எனக்கு அளித்த குருவின் திருவடியைப் பெற்று தலைமேல் பெருவெளியில் ஒப்பில்லா ஒளியை தரிசித்த பின் ஒப்பில்லா ஏழு ஆதாரங்களையும் ஒளியால் பற்றி உள்ளும் புறமுமாய் ஒளிமயமாய் நெடுங்காலம் இருந்தேன்.

75. சித்தாந்தத்தின் முதன்மை மாணாக்கணான இந்திரனே இப்படி ஏழு ஆதாரங்களிலும் ஒளி பொருந்தி இருப்பதற்கு காரணம் என்னவென்றால் அங்கு பொருந்தியுள்ள புவனங்களின் தலைவியை அப்பெருவெளியில் தரிசித்து பின் அத்தரிசனத்தின் அருளுடன் திரும்பினேன்.

76. சதாசிவத் தத்துவத்தையும் முத்தமிழ் வேதத்தையும் பெரிதும் அனுபவித்த காலத்தில் உடலுக்கு நன்மை தரும் உணவையும் உண்ணாமல் அளவாக இருந்ததால் மனம் தெளிந்து இதமான உணவு இல்லாமையால் விருப்பு வெறுப்பின்றி சதாசிவம், தத்துவம், முத்தமிழ் வேதம் மூன்றையும் ஆரய்ந்து இருந்து உண்மைப் பொருளைக் கண்டேன்.

77. மாலாங்கு என்ற மாணவரே! தென் திசைக்கு நான் வந்த காரணம் உலகப் படைப்பிற்குத் தேவையான நீலநிறமான ஒளியில் உள்ள ஆற்றலோடு ஒளிரும் அம்மையுடன் மூலாதாரத்தை இடமாகக் கொண்டு சிவம் நடிக்கும் திருக்கூத்தின் இயல்பை உயிர்களுக்கு சொல்லவே வந்தேன் நான்.

78. சிவானந்தவல்லி என்றப் பெயருடன் உள்ள சக்தி என் பிறப்பை நீக்கி ஆட்கொண்டாள். சிவன் ஜீவர்களை பக்குவம் செய்வதற்காக எழுந்தருளியுள்ள வீணாத்தண்டில் பொருந்தியுள்ள அவள் எல்லையற்ற சிறப்புடன் இருக்கும் அவளின் திருவடியைச் சேர்ந்திருந்தேன்.

79. உமையொரு பாகராய் இருக்கும் சிவபெருமானைச் சேர்ந்து வழிபட்டேன். ஜீவர்களை பக்குவம் செய்யும் வீணாத்தண்டின் முடிவில் உள்ள சகஸ்ரதளத்தில் சேர்ந்து சிவம் என்ற அறிவின் நிழலில் அமர்ந்து சிவனின் திருப்பெயர்களை நினைந்திருதேன்.

80. இந்த உடலில் எண்ணில்லாத காலம் தங்கியிருந்தேன். இரவும் பகலும் அற்ற பிரகாச வெளியில் இருந்தேன். தேவர்கள் துதிக்கும் இடத்தில் இருந்தேன். அப்போதெல்லாம் என்குரு நந்தியின் திருவடியில் என்னைப் பொருத்தியிருந்தேன்.

81. பின்னால் தயங்கி தயங்கி நின்று ஏன் பிறவியைப் பெறவேண்டும். முற்பிறவிகளில் முயன்று நல் தவத்தை செய்யாதவர்களே அவர்கள். நான் நல்ல தவம் செய்திருந்தமையால் என்னைப் பற்றித் தமிழில் நல்ல நூல் ஆகமம் செய்யும் பொருட்டு ஞானத்தை அளித்து பிறவி தந்துள்ளான். இறைவன்.

82. ஞானத் தலைவியுடன் உள்ள நந்தியின் நகரில் ஊனம் இல்லா ஒன்பது முடிவுகொண்ட சந்திப்பில் ஞானப் பாலாட்டி பெருமானை அர்ச்சனை செய்து நான் நல்ல அறிவுமயமாய் இருக்கும் திருவடியின் கீழே இருந்தேன்!

83. திருக்கயிலையிலிருந்து வரும் வழியில் சிவனை நினைத்து காமனை வெல்லும் ஞானம் மிக்க முனிவர் பல்கி நின்ற தேவர்கள், அசுரர்கள், மானிடர் ஆகியவர்களைக் கடந்து சூட்சுமமாய் வான் வழியில் வந்தேன்.

84. சிந்தையில் சிறந்து விளங்கும் நூல்களில் உத்தமமாகக் கருதப்படும் வேதத்தின் உடலான சொற்களையும் அதனுள் உரைந்திருக்கும் பொருளையும் இறைவன் தன் கருணையால் எனக்கு உணர்த்தியருளினான்.

85. சிவபெருமானாகிய இறைவனை நினைத்து நான் பெற்ற இன்பத்தை இந்த உலக உயிர்கள் அடையட்டும். வான் வரை நிலைத்து நிற்கும் சிவ அறிவைப் பற்றிச் சொல்லப்போனால் அது உடலைப் பற்றிய உணர்வாய் இருக்கும் மந்திரமாகும். உயிர்களே நீங்கள் அத்தகைய உணர்வை அடிக்கடி பற்றிக் கொண்டால் சிவம் உங்களிடமே பொருந்திவிடும்.

86. பிறத்தலும் இறத்தலும் இல்லா நந்தி என்ற சிவபெருமானை சிறப்பாக ஆகாய வாசிகள் கைக்கூப்பி தொழுது உள்ளத்துல் மறவாமல் மந்திரமாலையால் உள்ளத் தூய்மையான பக்தியுடன் பொருந்தி ஓதுவர்.

87. உடலை அளித்து அவ்வுடலில் அக்னி மிகாமல் வைத்த எம்பெருமான் பூவுலகம் முழுவதும் அழியாமல் தீயை வைத்தான். குழப்பம் ஏற்படாமலிருக்க தமிழ் மறையாக திருமந்திரத்தைச் செய்து அதில் அனைத்துப் பொருட்களும் அதனுள் அடங்குமாறு வைத்தனன்.

88. பெருமானின் அடியையும் முடியையும் காண விழைந்த திருமாலும் பிரம்மனும் இறைவனின் அடிமுடி காணாது பூமியில் சந்தித்தனர். நான் அடி கண்டிலேன் என்று திருமால் உண்மை சொல்ல நான் முடிகண்டேன் என்று பிரம்மன் பொய் உரைத்தான்.

89. காளை, மான், மழு ஆகியவற்றை அணிந்திருக்கும் பிரிவு அற்ற பரம் பொருளான சிவபெருமான் கட்டளையில் அமைந்தது இந்த உலகம்.. இதில் என் குருநாதன் நந்தி நற்பதமாகியா பெருமானின் திருவடியை அடியேன் தலைமீது பொருத்தினான்.

90. அறியப்படும் பொருள், அறிவு, அறியும் அறிவையும் அறிபவனையும மாயையின் செய்திகளையும், சுத்த மாயையில் வரும் பரை, ஆதி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்ற சக்தியின் கூட்டத்தையும் அச்சக்திகளில் இருக்கும் சிவத்தையும் கண்ணுக்குத் தெரியாமல் விதை போன்ற பொருள் அனைத்தையும் திருமந்திரமாகிய இதில் விளக்கியுள்ளேன்.

91. பரமென்ற அறிவு மயமான ஜோதியே மேலே கூறப்பட்டதை விளக்கியது. அது இறைவனாகும். அளவில்லா பெருமை உடையவன் ஆனந்த நந்தியாகும். அசைவில்லாமல் இருக்கும் ஆனந்தக்கூத்தன் நடராசனின் சொற்படி வளமான கயிலை மலையிலிருந்து இங்கு வந்தேன்.

92. சிவகுரு நந்தி அருளாலே மூலாதரத்தில் உள்ள ருத்திரனை நாடி பின் குருவின் திருஅருளால் சதாசிவ மூர்த்தி ஆனேன். சிவகுருநாதன் அருளாலே உண்மையான ஞான அறிவைப் பெற்றேன். அந்த சிவகுரு நந்தியின் அருளாலே நான் நிலைபெற்று இருந்தேன்.

93. இருக்கு வடிவான வேதத்தில் உள்ள அளவற்ற மந்திரங்கள் நுண்மையான பிரணவத்தில் முடிவான உச்சியில் சூரியனும் சந்திரனும் தங்கள் ஒளிக்கதிர்களை ஆன்ம பேரொளியில் வெளிப்படுத்துவதே பொன்னொளி போன்ற கிரணங்கள் அங்கு ஒளிவீசக் காரணம்.

94. நந்தி என்ற இறைவனின் பெயர் புகழை எப்போதும் புகழ்ந்து கொண்டிருக்கின்றேன். இரவு பகல் எனப் பாராமல் அப்பெருமானை என் உள்ளத்தில் வைத்து தியானித்து சுய ஒளிஉடையவனும் அடியேனின் தலைவனும் இயல்பாகவே ஒளிவடிவினாய் இருக்கின்ற இறைவனை அடைய முய்ற்சிப்பேன்.

திருச்சிற்றம்பலம்

#####

செவ்வாய்க்கிழமை, 10 December 2019 08:00

குரு மரபு!

Written by

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

#####

குரு மரபு!

67. நந்தியின் அருள்பெற்ற குருமார்களை கணக்கிட்டால் தட்சிணாமூர்த்தியிடம் ஞானம்பெற்ற சன்காதி முனிவர்களான சனகர், சனந்தர், சனாதனர், சனற்குமாரர் ஆகியோருடன் சிவயோக முனிவர், தில்லையில் கூத்தை கண்டுதரிசித்த பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் என்னுடன் சேர்த்து எண்மர் ஆகின்றோம்.

68. சிவபெருமான் திருஅருள் எங்களை குருநாதராக்கியது. அவ்வருளால் மூலதாரச் சக்கரத்தில் உள்ள ருத்திரனை நாடினோம். சிவன் அருள் உலகில் எல்லாவற்றையும் செய்ய வல்லது. சிவன் வழிகாட்டுதலின்படி மூலாதாரத்திலிருந்து தலைமேல் ஏறி நிலைபெற்று இருக்கலானேன்.

69. திருமந்திரத்தை என் மணாக்கர்களாய் பெற்றவர் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கட்டுத்தறிபோன்ற காலங்கி, கஞ்சமலையான் ஆகிய ஏழுபேர் ஆகும்.

70. சனகாதி முனிவர்கள் நால்வரும் ஒரு திசைக்கொருவராக நான்கு திசைக்கும் சென்று தாங்கள் பெற்ற பல்வேறு வகையான அனுபவங்களை உபதேசங்களாக எடுத்துரைத்து நால்வரும் தேவர்களாய் மேன்மையுடன் குருநாதர்கள் ஆனார்கள்.

71. சிவயோக முனிவர், பதஞ்சலி, முனிவர், வியாக்ரபாதர் முனிவர் ஆகிய மூவருக்கும், சனகர், சனந்தர், சதானந்தர், சனத்குமரர் ஆகிய நால்வருக்கும் இறப்பையும் பிறப்பையும் நீங்கும்படி செய்யும் பெருமை பொருந்திய நெறியை உபதேசம் செய்தான். செழுமையான திங்கள், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சுடர்களை உடைய சிவபெருமான் குறைந்த பெருமையை அளிப்பவன் அல்லன்.

72. பெரிய மழையாக எட்டு திசைகளில் பெய்தாலும் வளர்ச்சியை தரும் கடமைகளைத் தவறாமல் செய்யுங்கள் என்று சிவபெருமான் யோகியர் தலையில் விளங்கும் செவ்வொளியில் அழுந்தியிருந்து அன்புகொண்ட சனகாதி முனிவர் நால்வருக்கும் அருளுரை செய்தார் அண்ணாலகிய எம்பெருமான்.

திருச்சிற்றம்பலம்

#####

செவ்வாய்க்கிழமை, 10 December 2019 07:58

ஆகமத்தின் பெருமை!

Written by

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

ஆகமத்தின் பெருமை!

57. கருமை நிறமுடைய அம்மையை ஓர் பக்கம் இருத்தியுள்ள சிவபெருமான் இருபத்தெட்டு ஆகமங்களை அருளியுளான். ஈசன் திருவடியை மறவாத அடியவர் அந்த ஆகமங்களை கேட்டு மகிழ்ந்தனர். அந்த ஆகமங்களை ஒப்பில்லாத ஐந்தாவது திருமுகத்தால் அருளியதே அரும் பொருள் கூறப்படுவதே ஆகும்.

58. இறைவன் ஆன்மாக்களின் மீது கொண்ட கருணையால் உரைத்தருளிய ஆகமங்கள் இருபதெட்டு கோடியே நூறாயிரம். அந்த ஆகமங்கள் வழி தேவர்கள் இறைவனின் பெருமையைக் கூறினர். யானும் அவ்வழியைப் பின்பற்றி பெருமைமிக்க இருபதெட்டு ஆகமங்களை வணங்குவேன்.

59. பதினெட்டு மொழிகளையும் அறிந்தவரே அறிஞர். அவர் ஆகமம் கூறும் பொருளை நன்கு உணர்ந்தவர். அந்த பண்டிதர் அறிந்த பதினெட்டு மொழிகளும் அண்டங்களுக்கு முதல்வனான சிவபெருமான் வெளிப்படுத்திய அறத்தையே கூறுவனவாகும்.

60. பெருமானால் அருளப்பட்ட சிவ ஆகமங்கள் விண்ணுலகத்தோர் எனப்படும் தேவர் உலகத்தினரின் பயன் பாட்டிற்கு வராதவை. எழுபது கோடியே நாலாயிரமான அவற்றை அவர்கள் அறிந்தாலும் அனுபவம் இல்லையானால் நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்தைப்போல் பயன்படாமல் மறைந்து போகுமே.

61. பரஞானம் அபரஞானம் இரண்டையும் மேன்மையுற தெரிவித்து உலகத்தை தாங்குபவனாய் சிவ தன்மையை தானே அருள் செய்பவனை அரனாய் தேவர்கள் அர்ச்சனை செய்து வழிபடும் பெருமான் ஆகமத்திலே உறைந்து நிற்பவன்.

62. பரம் பொருளான சிவனிடமிருந்து சக்தியும் சதாசிவமும் மனதிற்கு உகந்த மகேசன் உருத்திரர் தவம் செய்யும் திருமால், பிரம்மன் ஆகியோர் அவரவர் அறிவில் பொருந்திய ஒன்பது ஆகமங்களும் எங்கள் நந்தியாகிய எம்பெருமானிடமிருந்து பெற்றவையே!.

63. நந்தியம் பெருமானிடம் இருந்து பெற்றவை. காரணம், காமிகம், வீரம், சிந்தியம், வாதுளம், யாமளம், காலோத்தரம், சுப்பிரம் மகிடம் ஆகிய ஒன்பது ஆகமங்களாகும்,

64. சிவ பெருமான் அருளால் உணர்த்தப்பட்ட ஆகமங்கள் கோடிக்கணக்கில் சொல்லப்பட்டிருந்தாலும் இறைவன் கூறிய உண்மைப் பொருள்தனை உணர முற்பட்டு அப்பெருமான் அளித்த அறிவுதனை அறியாவிடில் அது நீரின்மேல் எழுதப்பட்டது போல் விரைவாக அழிந்துபடும்

65. மழைக்காலம் கோடைக்காலம் இரண்டிற்கும் இடைப்பட்ட குளிர்பனிக் காலத்தில் வடமொழியையும் தமிழையும் ஒரே காலத்தில் உபதேசித்து படைப்புக்கு முன்னரே சிவபெருமான் பராசக்திக்கு அருளியுள்ளான்.

66. ஜீவன்கள் பந்தத்தில் வீழும் முறைகளையும் அதனின்று நீக்கும் முறையையும் கண்மூடி உயிர் நீங்குகின்ற முறையையும் தமிழ், வட மொழி ஆகிய இரண்டிலும் உணர்த்தும் சிவபெருமானை உணர்தல் முடியுமோ முடியாது!

திருச்சிற்றம்பலம்

#####

செவ்வாய்க்கிழமை, 10 December 2019 07:55

வேதத்தின் பெருமை

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

வேதத்தின் பெருமை

51. உலக உயிர்களுக்கு வேதத்தை விடச் சிறந்த அறமென்று ஒன்று இல்லை. உயிர்களுக்கு வேண்டிய நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளது. தர்க்க வாதம் செய்தோர்கள் எல்லாம் தங்கள் வாதத்தை விட்டு மிகுந்த வளமுள்ள வேதத்தை ஓதியே முத்தி அடைந்தார்கள்.

52. தமிழ்மறையான வேதத்தை ஓசையளவில் ஓதுபவன் அதை அறிந்த வேதியன் அல்ல, யோகம் செய்தற் பொருட்டு வேதத்தின் உண்மைப் பொருளை உணராமல் ஓதுபவர் வேதியர் ஆகார். வேதத்தை உறைத்த இறைவன் பிரமப்பொருள் உயிர்களுக்கு விளங்கவும், வேள்விகள் செய்தற் பொருட்டு உண்மைப் பொருளை உணர்த்தவும் வேதத்தை உரைத்தருளினார்.

53. மந்திர வடிவான அழகிய வேதத்தில் உள்ளத்தை உருக்கும் மந்திரங்களும், எதிரிகளை அச்சுருத்தும் கம்பீர ஒலியுடைய மந்திரங்களும் இருக்கின்றது. அந்த வேத மந்திரங்களாய் நுண்ணிய நிலையில் இருப்பவன் மூன்று கண்களை உடைய சிவபெருமானே!

54. தெய்வீக நெறி என சிறப்பித்துக் கூறுவது அறிவு ,அறியாமை இல்லா வீடுபேறாய் உள்ள இறைவன் குருவினால் உணர்த்தப்படும். சன்மார்க்க நெறியாய் அது சிவத்தை பொருத்தி நின்ற ஒப்பில்லா நெறியாகும். இந்த நெறியையே சிறப்பான வேதமுடிவான உபநிடதங்கள் விளக்கும்.

55. தமிழ் மறையான வேதத்தை ஆறு அங்கமாய அருளிச் செய்தவன் இறைவன். அந்த இறைவனை உடலின் ஒரு பகுதியாக நினைந்து அவன் இயல்பை அறிந்து உணர்பவர் இலர். அவனை தம்மின் வேறு பகுதியாய் எண்ணி வழிபட்டுப் பின்னர் தங்கள் விருப்பங்களால் கெட்டுப் போகின்றார்கள்.

56. பாட்டும் அவற்றிற்கான இசையான ஒலியையும் கேட்டு ஆடும் மகளிரின் ஆட்டமும் நீங்கப் பெறாத உலகத்தில் மறை நெறியைக் காட்டும் உண்மை நெறியைப் பின்பற்றாதவர் விரதம் இல்லமல் வேள்விகளை செய்ய விருப்பங்கொண்டவர் ஆவார் அவர்கள் மாறுபாட்டை அடைந்து புறத்தே அழிந்து படுவர்.

திருச்சிற்றம்பலம்

######

செவ்வாய்க்கிழமை, 10 December 2019 07:48

கடவுள் வாழ்த்து!

Written by

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

கடவுள் வாழ்த்து!

1. ஒன்றாய் இருப்பவன் சிவன். இனிய சக்தியுடன் இரண்டானவன். நான்முகன், திருமால், உருத்திரன் என மூன்றானவன் அறம், பொருள், ,இன்பம், வீடு என நான்காவும், மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐந்தாகவும்,, மூலதாரம், சுவதிட்டானம், மணிபூரகம், அநாதகம், விசுக்தி, ஆக்ஞை என் ஆறு ஆதாரமாகவும், ஏழாவது ஆதாரமான சகஸ்ரதளத்தில் நிற்பவனாகவும் நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், கதிரவன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் கலந்து விளங்குபவனே!

2. இனிமையான உயிரிலே தூயவனாகப் பொருந்தி, நான்கு திசைக்கும் சக்திக்கும் தலைவனாக இருந்து தென்திசை இயமனை உதைத்த அந்த இறைவனை நான் பாடுகின்றேன்.

3. உயிர்களுடன் சமமாய் நிற்பவனும் அழிவற்ற தேவர்கள் அருக்கன் சிவன் என கூறி தினமும் வணங்கிடும் தலைவன் பக்கதில் நிற்கும் திருமால் மற்றும் முக்தி பெற்றவர்களும் அறியாத பரமனை அருகில் நின்று நாள்தோறும் வழிபடுவேன்.

4. ஜீவன்களின் மெய்ப்பொருள் ஆனவனே! வாணுலகத்தின் வித்தானவனே! நான் அடைக்கலமான இடத்திற்கு என்னைச் செல்ல விட்டானே! அந்த இறைவனை பகல் இரவு எனப் பாராமல் வணங்கித் துதித்து எதிரிடையாக இகலும் உலகத்தே என் மன இருள நீங்கி நிற்க வைத்தானே!

5.. எங்கு தேடினும் உலகில் சிவபெருமானைவிட சிறப்பான தெய்வமில்லை. உலகில் அவருக்கு ஒப்பானவரும் இல்லை. அண்டத்தை கடந்து நின்று அக்னி போன்ற பொன்நிற ஒளியால் ஒளிர்ந்து விளங்கும் செந்நிறமான மேல்நோக்கிய சகஸ்ரத் தாமரையில் இருப்பவனே!

6. சிவனைவிட மேன்மையுடைய தேவரெவரும் இல்லை அவரில்லாமல் செய்யும் தவமும் சிறப்பானதல்ல. அவரன்றி நான்முகன், திருமால், ருத்திரன் ஆகிய மூவரால் ஆவது ஒன்றுமில்லை. சிவனே முத்தி அடைவதகுரிய ஊரின் வழியைச் சொல்பவன்!

7. பொன் போன்று பிரகாசிக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், பிரமன், திருமால், ருத்திரன் ஆகிய மூவருக்கும் மேலானவன் மூத்தவன், தலைமகன், அவனை அப்பா என அழைத்தால் தந்தையாய் வந்து நின்று உயிர்களைக் காப்பவன் பெருமானே!

8. தாழ்ந்த சடையை உடையோனே, சிவபெருமானே! தீயைவிட வெம்மை உடையவனே! அவனை வணங்கும் அடியவர்க்கு நீரைவிடக் குளிர்ந்தவன். குழந்தையைப்போல் நல்லவன், நல் அன்பர் அடியவர்க்கு அருகில் இருப்பவன், தாயைப்போல் அருள் செய்பவன் அருள் புரியும் அந்த ஈசனை அறியாதார் இல்லை.

9. பொன்னால் செய்யப்பட்ட பொற்சடை என சொல்லும்படியாக பின்னால் அழகிய சடையை உடையவன். அவன் திருநாமம் நந்தி. என்பதாகும். அடியேனால் தொழப்படும் என் இறைவன் அவனால் வணங்கத்தக்கவர் யாரும் இல்லை என்பதுதானே உண்மை!

10. சிவபெருமான் தானே இந்த பெரிய உலகத்தை தாங்கி எங்கும் நீக்கமற நிறைந்து விண்னாய் விளங்குகின்றார்! பெருமானே சுடும் தீயாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் விளங்குவதோடு மட்டுமல்லாமல் அருள் மழை பெய்யும் சக்தியாய் இருந்து பெரிய மலையாகவும், குளிர்ச்சியான கடலாகவும் காட்சியளிக்கின்றார்.

11. அருகிலும் தூரத்திலும் எல்லாவற்றிற்கும் முன்னைய ஆதி இறைவனின் பெருமையை காணின் அவருக்கு ஒப்பான பெரிய தெய்வம் வேறு ஒன்றுமில்லை. முயற்சியும் முயற்சியின் முடிவும் மழைபெய்கின்ற மேகமும் நந்தி என்கிற அப்பெருமானே!

12. நெற்றியில் கண்னுடைய சிவபெருமான் ஒப்பில்லா அன்புடன் அழியாதிருக்க, எண்ணில்லாத தேவர்கள் இறந்துபட்டனர். மண் உலகத்தில் வாழ்பவரும் விண்-தேவ உலகத்தில் வாழ்பவரும் இப்பெருமானே உலகில் அழியாதிருக்க அருள் செய்பவன் என்பதை அறியாமலிருக்கின்றனர்.

13. மண் உலகை அளந்த பெருமாள், அவன் கொப்பூழில் தோன்றிய நான்முக ஆகிய தேவர்களும் தங்களது எண்ணத்தில் சிவனை நிறுத்தி நினையாமலிருப்பதற்கு அவர்கள் இன்பத்தில் திளைத்திருப்பதுவே காரணமாகும். விரிந்த வானத்தில் பரந்து இருக்கும் பெருமானைக் கடந்துபோய் அவர்களால் அறியமுடியவில்லை. அப்பெருமான் எல்லவற்றிலும் கலந்தும் கடந்தும் விளங்குபவன்.

14. சுவாதிட்டம் எனும் ஆதாரத்தில் வீற்றிருக்கும் பிரம்மனையும் மணிபூரகத்தில் வீற்றிருக்கும் திருமாலையும் கடந்து அநாகத்தில் வீற்றிருக்கும் ருத்திரனையும் கடந்து சிரசின்மேல் உள்ள சகஸ்ரத்தில் நின்று எல்லாவற்ரையும் காண்பவன் சிவபெருமானே!

15. பெருமான் உலகைப் படைப்பவன், அழிப்பவன், உடலைக் காத்து மாற்றங்கள் செய்பவன், எல்லாவற்றையும் கடந்து நிற்பவன். பேரருள் ஜோதியாய் ஓரிடத்தில் குவியாத இயல்புடன் ஊழிக்கூத்தை இயக்குபவனாகவும் நிலையான நீதியுடன் அழியாத தன்மை கொண்டு இருப்பவன்.

16. நரம்புகள் கொண்ட கொன்றை மலரை தனது சுருண்ட சடையில் தரித்தவன். முகத்தில் ஒளியையும் அகன்ற அழகான நெற்றியையும் உடைய உமையை தனது இடது பாகத்தில் வைத்திருப்பவன். அவனை மூவரும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தியுள்ள தன்மையுடன் இருக்கும்போது என்ன எனப் பாராட்டி குணத்தை பாராட்டி நாடுவர், நாடமாட்டார்கள்.

17. ஸ்தூல சூக்ம உடல்கள் இரண்டும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயையின் தொடர்புடைய சூக்ம உடம்பில் பொதிந்திருக்கும் கானம் வழி மனம் பொருந்தி ஆன்மா தன்னை ஒளிவடிவமாக்கி கண்டாலும் வான் வடிவமான சிவனுடன ஏற்படும் தொடர்புக்கு எதிரும் இல்லை, ஒப்புமில்லையே!

18. அளகாபுரி மன்னன் குபேரனை வடக்குத் திசைக்கு தலைவனாகவும் செல்வத்திற்கு அதிபதியாகவும் செய்து குறையாத தவத்தின் பயனைக் கருத்தில் கொண்டு அந்த வடதிசையை வணங்கி போற்றினால் அத்திசைக்கு நீயும் தலைவனாய் ஆகமுடியும் எனச் சொல்பவன் எம் பெருமானே!

19. வடக்குத் திசைக்குத் தலைவன். விஷய பற்றான விட வாசனைக்கு ஆதாரமான ஏழு ஆதாரங்களையும் அழித்து பாழான நிலமான சுடுகாடு ஆக்கியவன். முன்னதாகவே அனைத்தும் அறிபவன். பாவங்களை நிவர்த்தி செய்யும் வடக்கு திசையை இடமாக்கிக் கொண்ட ஜீவன்களின் உண்மைத்தவம் கண்டு அது செய்தவரை இடமாக்கி எழுநது அருள் செய்பவன்!

20. பிறப்பும் இறப்பும் கருவில் உதிக்குமுன்னே திட்டமிட்டவன் சிவபெருமான். அவன் ஏற்படுத்திய அந்த நியதியை அறிந்தால் பஞ்ச பூதங்களில் ஆகாய பூதராக உள்ள சதாசிவ வடிவம் கண்மலருக்குமேல் உள்ள சிரசில் தியானத்தில் மேகம் ஒலிப்பதுபோல் ஒளியும் ஒலியாகவும் தெரியும்.

21. வானில் உள்ள பெரும் மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட திருமால், பிரமன், தேவர்கள் ஆகியோரின் குற்றம் நிறைந்த பிறவியை நீக்குபவனாகிய சிவன் ஒப்பற்றவன். காட்டுயாணை கதறும்படி சிவகோடிகளின் ஆணவமான படலத்தைப் பிளந்த எம்பெருமானைப் போற்றி புகழ்ந்து ஒன்றி நிற்றலே உய்வு அடைய வழி.

22. மாயையில் தோன்றிய உடம்பிற்கு உரிய மாய நாடன் சிவபெருமான், தியானப் பொருளாக மனதில் தோன்றி உயிர்கள் மனதில் நினைப்பதை அறிந்து கொள்வான் என்றபோதும் உயிர்கள் அவரை நினையாமல் இருக்கின்றன். அவர்கள் இறைவனுக்கு என்மேல் அருள் இல்லை எனச் சொல்வர். தன் அருள் எல்லையைத் தாண்டி நிற்பவர்க்கும் கருணை வழங்குபவர் சிவபெருமான். என்னே அவர் கருணை!

23. அக்னிக் கடவுளை கடலின் நடுவே நிலைக்கச் செய்த நீதியை உடைய எல்லாம் வல்ல ஆற்றல் உடைய பெருமானே! அவரை இல்லை எனச் சொல்ல வேண்டாம்! படைத்தல் முதலியவற்றைச் செய்யும் கடவுளுக்கும் தலைவனாய் பகலும் இரவும் உயிர்களுக்கு அருள் செய்து கொண்டிருப்பவன்!

24. எந்தக் குற்றமும் அற்ற சிவ திருவடியை விடாப்பிடியாக பற்றி தெளிந்து அவ்வடிக்கே உயிர்களின் செல்வம் அனைத்தும் உரியனவாகும் எனக் கருதிப் புறப்பொருள்களான இன்பம், ஐஸ்வர்யம், கல்வி, மனத்திறமை, ஒழுங்கு, செம்மை, பாக்கியம், செல்வம் ஆகியவற்றில் மயங்கியுள்ள மனதை மாற்றி உறுதியாய் நிற்பவரிடத்தில் சிவன் இருப்பன்.

25. பிறவி அற்றவன், உயிர்களை ஒடுக்குபவன், அருள் உடையவன், அழிவு இல்லாதவன், எல்லோருக்கும் இன்பம் அருள்பவன், ஈடு இல்லாதவன், அவனை வழிபடுங்கள் அவன் திருவடி மறவாமல் தொழுதால் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேற்றை அடையலாம்.

26. ஆன்மாவினுள் எப்போதும் இருக்கும் சிவனை வழிபடுங்கள். எங்கும் நிறைந்துள்ளவனும் உலகம் முழுவதும் கடந்தவனும் சகஸ்ரதளத்தில் இருப்பவனும் ஆகிய சிவன் திருவடி பேறு அப்படி வணங்குவோறுக்கு கிட்டும்.

27. சேர்க்கைக்குரிய இடமான சுவாதிட்டான மலரின் கீழ் ஒளிபொருந்திய முகத்தை உடைய முடிவு என்றில்லாத இறையின் இறையருள் நமக்கும் உரியது என்று சிவனை வழிபடும் உயிர்களின் அறிவுக்குள் புகுந்து நீங்காமல் நிலைத்து நிற்பான் சிவன்.

58. எல்லா இடங்களிளும் நீக்கமறப் பரவிநிற்கும் சிவன் ஆன்மாக்களுடன் பொருந்தி என்றும் நிற்பவன். எல்லா காலங்களிலும் இருக்கும் அவன் பழமைக்கு பழமையாகவும் புதுமைக்கு புதுமையாகவும் இருப்பவன் தேவர் உலகமாகிய அமராபதி தேவர்களை ஆளும் அப்பெருமான் தனக்கு என ஒரு செயல் செய்யாமல் இருப்பான். தன்னை வழிபடும் அடியார்க்கு எப்போதும் வழித்துணையாய் நிற்பான்.

29. பெருமானே அடியேன் காணும்படி அருள்வாய். அடியேனுக்கு உன்னைத்தவிர உறவு என்று சொல்ல யார் இருக்கின்றார். நீ வெளிப்பட்டால் அடியேன் அகத்தில் தழுவியிருப்பதுபோல் புறத்திலும் வெட்கப்படாமல் தழுவியிருப்பேன். மனதில் குறையில்லாத அருட்பண்பு நிறைந்த மனத்தில் ஆணிவேர் போன்று எழுந்தருளியிருப்பவனே!

30. திடிரென்று வானத்திலிருந்து தானே மழை பொய்வதுபோல் இறைவனின் அருட் கருணை வெள்ளம் மழைபோல் தானே வலிய வந்து அருள் பொழியட்டும் என்று நினைப்பவர்கள் பலர். ஆண் கன்று தன் தாய்ப் பசுவை அழைப்பது போன்று என் நந்தியம் பெருமானை அடியேன் ஞானம் பெறுவதற்காக இன்று அழைக்கின்றேன்.

31. மண்ணுலகில் வாழ்வோருக்கு மனித வடிவிலும், புவர் உலகத்தோருக்கு ஒளிவடிவிலும், சுவர் உலகத்தோருக்கு தேவ வடிவிலும், வெளிப்பட்டு அருளும் சிவன் சித்திகளை விரும்புவர்களுக்கு சித்தானாக வெளிப்பட்டு அருளும் அப்பெருமான்மீது அறிவின் இடமாய் நின்றபடி அடியேன் அன்பு கொண்டிருப்பேன்.

32. தேவர்கட்குத் தலைவன், அடியவர்களாகிய நமக்கு தலைவன், மேல்கீழ் எனப் பத்து திசைகளிலும் நிறைந்திருந்து நீரால் சூழ்ப்பட்ட ஏழு உலகங்களையும் கடந்தவன். அந்த தன்மையை அறிந்தவர் இல்லை. இத்தகைய எங்கும் பரவியுள்ள இறைவனின் அருள்கிட்ட பாடல் பாடி வழிபடுவோமே!

33. பழங்கால முதலே இருந்த பல கடவுள்களை வழிபட விதிகள் ஏற்பட்டிருந்தும் உயிர்கள் உண்மையை உணராதவர் ஆகினர். துதி பாடல்களைப் பாட வல்லவரும் சிவனுடன் கலந்து இருந்து உண்மையான அறிவைப் பெறாதவர் ஆகினர். அவர்கள் உள்ளத்தில் அமைதி இல்லாது வாடுகின்றவர் ஆகினர்.

34 தேவர்களுக்கு அருளிய் நெறிமுறைகளின் கலவை சாந்தில் கலந்து வீசும் கத்தூரியின் மணம்போல் சிவமணம் கமழும் அத்தகைய உண்மையான நெறியில் நடக்க, அரிய சுடர்போல் ஒளியைத் தரும் பெருமானின் ஆயிரம் நாமங்களை அடியேன் நடக்கும்போதும் நிற்கும்போதும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

35. வேறு எவறும் படைக்காத செம்மையான நெறியில் விளங்கும் சிவபெருமானைப் போற்றிப் புகழ்ந்து இருந்தால் ஜீவனது அட்டதள கமலம் கவிழ்ந்த நிலையில் இருந்து அவரது எண்ணங்களை கீழ் முகமாக உலக முகமாக விளங்க வைக்கும் அதிலிருந்து மாற்றி அட்ட கமலத்தை மேல் முகமாக மாற்றி நிமிறும்படி செய்வான் அப்போது உயிர்களின் முகம் மேல்முகமாக ஊர்த்துவமுகமாகி ஈசான ஒளிமயமாக விளங்கும்.

36. உயிர்கள் அனைவற்றிற்கும் தந்தையான நந்தியை, தெவிட்டாத அமுதம் போன்றவனை, தனக்கு ஒப்பிலாதவனை, வேண்டியவர்க்கு வேண்டியதை அளிக்கும் வள்ளல் பெருமானை உரிய காலத்தில் ஊழியை நடத்தும் முதல்வனை எந்த வகையாக இருந்தாலும் தொழுங்கள். அப்படி வழிபட்டால் அவனின் கருணையைப் பெறலாம்.

37. உறுதியாய் நானும் தினந்தோறும் இறைவனை வழிபடுவேன். அதனால் தழல் போன்ற மேனியுடைய இறைவனும் வெளிபட்டு நிற்பது வானத்தில் கலைகள் நிறைந்த சந்திரன் போல் உடலில் அண்டாகாயத்தில் சந்திர ஒளி சகஸ்ர தளத்தில் சிரசின்மேல் தோன்றி ஒளிர்ந்து நிற்பது போலிருக்கும்.

38. பெரியான், அரியான் அந்த சிவனை வழிபடுவதைக் கைவிடமாடேன். ஒருதாயின் வயிற்றில் பிறவாதவனும் ஆகிய சிவனை உருவம் உள்ள ஜீவனாகிய அடியேன் வழிபடுவதைக் கைவிடமாட்டேன். நந்தி என்ற இறைவனை வழிபடுவதை ஒருநாளும் கைவிடேன். எப்போதும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கும் அடியேனே பெரிய தவம் செய்தவன் ஆவேன்.

39. ஐந்தெழுத்தால் வணங்கும் அடியவரின் உள்ளத்தில் மிக்க அறிவுப் பேரொளியாய்த் தோன்றுவான். பாசங்களிலிருந்து விலகி நிற்பவன். உயிர்களிடத்து மகிழ்ந்து திளைக்கும் இறைவனைப் பலவகையாய் துதித்து வணங்கினால் உரிமையுடைய நண்பனாகும் நிலையை அடைந்தால் அவனது திருஅருள் பெறுவது எளிதாகும்.

40. சிவன் திருவடியில் மிக்க விருப்பம்கொண்டு கழலணிந்த அவன் திருவடியை வணங்கி அத்திருவடியை அடைய விரும்புவர் அடியார். செம்பொன் ஒளியைப்போல் நிறைந்த ஒளியை உடைய சிவன். வஞ்சனைகளால் மறைத்து குறும்பு செய்யாமல் வழிபடும் மெய் அன்பர்களின் உடலை புறக்கணியாது அவ்வுடலில் புகுந்து நிற்பான்.

41. பாற்கடலில் எழுந்துவந்த ஆலகால நஞ்சை உண்டு அருளிய தேவர்களின் தலைவன் சிவபெருமானை, திருத்தப்பட்ட விளைநிலம் போன்ற மனதில் கொண்டு வணங்க வல்லாருக்கு நாத ஒலியைக் காட்டிய உமையொருபாகன் அடியார் மனதில் பெண்மானைக் கண்ட ஆண்மான் போல் கூடி நிற்பவன்.

42. அரன் சிவனை புகழ்ந்து வழிபாடு செய்பவர் பெறுவது, நான்கு தலைகளையுடைய நான்முகன் படைத்த வண்ணம் இறந்து பிறக்கும் மாயையுடன் கூடிய இல்லற பந்தத்தில் உழழும் உயிர்கள் உடலில் திரண்ட தோள்களுடைய உமையின் கணவன் வந்து பெருந்துவது இயற்கைதானே.

43. திருஐந்தெழுத்தை நல்ல தூய்மையான மனத்துடன் தொடர்ந்து துதித்து ஆற்றல் பெற்று அவன் தாழினையே நினைவாய் கொண்டு வீடுபேற்றைத் தரும் அத்திருவடியில் அடங்கி ஒடுங்குபவர்க்கு சிவன் தன் திருவடியை நல்கி அந்த அடியவருடன் வேறுபாடின்றி நிலைத்து நிறைந்து நிற்பான்.

44. தேவர்கள் சுழுமுனையில் இருக்கும் இறைவனை வாழ்க என்றும், அசுரர்கள் பெருமானை வாழ்க என்றும் மனிதர்கள் அவன் திருவடி வாழ்க என்றும் வாழ்த்துவர். அடியேன் அப்பெருமானை வணங்கி என் அன்பினுள எப்போதும் நிலைப்பெற்று இருக்குமாறு செய்வேன்.

45. ஆழிகடல் சூழ் இவ்வுலகம் இறைவன் விதிமுறைக்கு உட்பட்டு நடப்பதல்லாமல் வேறு முறையில் இயங்கக் கூடாது. இவ்விதி முறையால் உயிர்கள் அடையும் இன்பம் மாறுபாடு அடையாது. ஒளிவடிவான இறைவன் தினமும் துதிகள் வழியாய் வீட்டு நெறிகளை அருளும் கதிரவன் ஆவான்.

46. மனம் திருந்தி எப்போதும் சிந்தனையில் சிவபெருமானை எண்ணிக் கொண்டிருக்கும் அடியார்கள் செம்மேனியனே, மங்கல வடிவினனே எப்பொருளுக்கும் இறைவா என்று வழிபட அந்திவண்ணன், அரன், சிவன் என்பதெல்லாம் உருவமானதால் படைப்புக்கு முந்தியகாலத்தில் ஐந்து நிறக்கதிர்களாகத் தோன்றிய் முந்திவண்ணன், முதல்வனே, யாவர்க்கும் மேலான பரனே என்று அடியேன் வழிபட சிவன் ஞானவடிவினனாய் அடியேன் மனதில் எழுந்தருளியுள்ளான்.

47. பெரும் தவத்தை உடையவர் உயிர்களின் உள்ளத்தில் சிவன் கோவில் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்ந்து உடலை பாதுகாப்பர். அப்பெருமான் நெஞ்சத்து எழுந்தருளியிருக்கும் தன்மையினாலே சிவன் அடிமேல் அன்பு கொண்டு இயங்கும் நேயத்தவர் ஆவர். அப்படி நினையாதவர்க்கு பனை மரத்தின்மேல் இருக்கும் கழுகு மரத்தில் இருக்கும் பனம் பழத்தின் சுவையை அறியாமல் நிலத்திற்கு வந்து உணவை உணுவதுபோல் திருவடி பேரின்பம் கிடைப்பது அரிது. இல்லற விவகரத்தில் உலகத்திலும் மற்ற நேரங்களில் சிவ சிந்தனையிலும் இருக்கும் உயிர்களுக்கு இல்லற வாழ்வின் பாதிப்புகள் துன்புறுத்தாது.

48. அடியவர்கள் வழிபடும் தேவர்களின் தலைவன் சிவபெருமானை அடியேன் தலை முடியால் வணங்கி வழிபட்டு அவனை உளமாற நினைத்து உலக உயிர்களுக்கு அருளும் மேலான பெருந்தகையான எம் தலைவன் அவனை இரவு பகல் என்ற நிலையில்லமல் ஒளிரும் அணையாத விளக்கு என நினைத்து மகிழ்ந்திருந்தேன்.

49. பழமையான உயிர்கள் பாசம் ஆகியவற்றிற்கு தலைவனாகிய பெருமானை நினைத்து உயிர் மற்றும் தளை என்று சொல்லப்படும் பாசம் ஆகியவற்றின் இயல்பை அறிந்து சிவனோடு ஒன்றாய் கலக்க வல்லமையுடையோர் திரை கடலில் வரும் அலைபோல் பசுக்கள் செய்த பாவத் தளைகளை தாண்டி நீந்தி பசு பாசங்களைக் கடந்து முத்தி என்ற கரையை அடையலாம்.

50. இறைவனின் திருவடியை அடியவனின் தலையில் சூடிக் கொள்வேன். உள்ளத்தில் வைத்து போற்றுவேன். தலைவன் எனப் பாடி பல மலர்களால் அர்ச்சனை செய்து கூத்தாடி வணங்கி வழிபடுவேன். அவனே தேவர்க்கு எல்லாம் தேவன் என நம்புவேன். அடியேன் அவனைப் பற்றி முற்றிலும் அறிந்து கொண்டதன் விளைவே இதுவாகும்.

திருச்சிற்றம்பலம்

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27036559
All
27036559
Your IP: 3.135.219.166
2024-04-18 22:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg