gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

ஐந்தாம் தந்திரம் (15)

ஞாயிற்றுக்கிழமை, 10 May 2020 11:07

சுத்த சைவம்! அசுத்த சைவம்!

Written by

ஓம்நமசிவய!

கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!

#####


ஐந்தாம் தந்திரம்

சுத்த சைவம்!

1419. உலகத்தையும் அதில் அடங்கும் ஊரையும் ஒருசேர படைக்கின்ற பேரறிவாளனான இறைவனின் பெருமை அளவிடமுடியாதது மேருமலையையும் மூன்று உலகங்களையும் ஆள்கின்ற இறைவனிடமிருந்து தோன்றிய மண்ணுலகையும் நான்கு வகை சைவமும் ஆகிய இவற்றின் பெருமைக்கு நிகராகும்.

1420. அழிவு இல்லாதது அழிவுடையது என்ற இரண்டு தன்மைகளும் உடையவை எவை என்று அறிந்து அறிவும் அறியாமையும் ஆகியவை சேராமல் விட்டும் சுத்தமாயை அசுத்த மாயை என்ற இரண்டிலும் பொருந்தாமல் நின்று அழிவற்ற மேலான பொருளான இறைவனை பார்த்திருப்பது சுத்த சைவத்திற்கு அழகாகும்.

1421. கற்க வேண்டியதைக் கற்று பதினாறு கலகளை உடைய சந்திர கலைகளை அறிந்து சிவயோகத்தைப் பயின்று முன்னல் இருக்கும் அ உ ம காரங்கள் விந்து நாதங்களின் அறிவை முறைப்படி அறிந்து பிரணவ பதத்தை புலப்படுத்தும் சாந்தீயாதீத கலையைப் பொருந்தி உயிரின் மாயை சார்பான குற்றத்தை விட்டு மேலான் சிவத்தில் வாழ்பவர் சைவ சிந்தாந்தர் ஆவர்.

1422. வேதாந்தம் என்பது சுத்த சைவ சித்தாந்தம். இந்நெறி நிற்பவர் நாத வடிவான சிவத்தை தரிசித்த சலனம் இல்லாதவர். தத்துவ முடிவை ஞான மயமாகப் பயன் படுத்த நாத முடிவில் நிறைவடைந்து இருக்கும் சிவம் அறியும்படி வேண்டிய பொருளாகும்.

#####

அசுத்த சைவம்!

1423. இறைவனின் இரண்டு திருவடிகளையும் புகழ்பவரின் பெருமை உடைய உடம்பில் இரண்டாகப் பொருந்திய இரண்டு காதணிகளும், திருநீறும், தலை மாலையுமான இரண்டு அடையாளங்களும் இரண்டு கண்ட மாலைகளும் சரியை கிரியை வழி நிற்பவர் அணியப்படுவதாகும்.

1424. காதில் பொன்னால் செய்யப்பட்ட இரண்டு கடுக்கண்களை அணிந்து சிவ வேடத்தில் இடையில் ஓர் ஆடையும் அதன்மேல் ஓர் ஆடையும் அணீந்தவரய் அத்துவா சோதனை செய்து உபதேசத்தைக் குருவிடம் பெற்று சைவ ஆகமங்களைச் சொல்லிக் கொண்டிருப்பவர் ஒருவகைச் சைவர்.

1425. பிரணவம், மண், நீர், தீ, காற்று, வான், சூரியன், சந்திரன், அக்கினி, விண்மீன் என்பவை உடலில் இருப்பதை அறிந்தவர் அறிய வேண்டியவற்றை அறிந்தவர். இவர் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவர், விந்து, நாதம், சத்தி, சிவன் என ஒன்பதாய் இருக்கும் அரிய பொருளான சிவத்தை அறிவர். ஒன்பது பொருளாய் உடம்பில் உள்ள சிவத்தை தம்முள் அறிந்தவர் பகுப்பை உடைய உலகங்களை எல்லாம் அறிந்தவர்.

1426. ஞானியர் என்பவர் உலக்த்தில் தோன்றும் ஞான நூல்கலுடன் மோன நிலையையும் முழுமையாக எண்ணப்பட்ட எண் பெருஞ் சித்திகளையும் மற்ற உலகங்கலின் அறிவையும் உபநிடத அறிவையும் சிவத்தையும் தன்னையும் அறிந்து நிற்கும் ஆற்றல் உடையவர் ஆவார்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27016955
All
27016955
Your IP: 18.219.112.111
2024-04-16 11:55

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg