gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

ஏழாம் தந்திரம் (32)

சனிக்கிழமை, 20 June 2020 12:49

இதோப தேசம்!

Written by

ஓம்நமசிவய!

தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!

#####

இதோப தேசம்!

2102. இறைவனை மறக்கின்ற இவ்வுலக்த்தில் நிலையற்றது உடல். ஆதலால் இறக்கும் காலத்தும் இறைவனை வணங்குங்கள். வாழ்கின்றபோது அலைந்து நிலை கலங்கி அமையும் துன்பங்கள் எல்லாம் தீர்வதற்காக மேலான சிவ நெறியை மனத்தில் கொள்ளுங்கள்.

2103. முடிந்த அளாவு சிவபெருமானிடம் மனத்தைச் செலுத்துங்கள். முடிந்த அளவில் உண்மைப் பொருளான சிவத்தை எடுத்துக் கூறுங்கள். சிலர் இறைவன் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவன் எங்கும் இருக்கின்றான். ஆதலால் சிவநெறியைத் தேடி அடையுங்கள்.

2104. குலம் ஒன்றே இறைவ்ன் ஒருவன்தான். நல்லவனவற்றை நினையுங்கள் இய்மன் உங்களை நாடி வரமாட்டான். நீங்கள் வெட்கம் அடையாமல் போய்ப்புகும் கதி வேறில்லை. மனதில் இறைவன் எண்ணம் நின்று நிலைபெற அவனை நினைத்து உய்யுங்கள்.

2105. இறைவன் அனைவரும் வணங்கும் கயிலை மலையில் விளங்கும் பேரொளி வடிவானவன். தலையின் நாற்புறமும் விளங்கும் சத்தியோசதம், வாம தேவம், அகோரம், தத்புருடம் என்னும் நான்கு முகங்களுக்கும் நடுவேயுள்ள ஈசான முகத்தினன். நம்பத் தகுந்தவன். உள்ளே போகும் வெளியே வரும் மூச்சுகளை உடைய உடலைப் பற்றி நின்று கூற்றுவனைக் காய்ந்தவன். இத்தகைய சிவனைத் துதித்து நின்று உய்தி பெறுங்கள்.

2106. இந்த உடலை நீத்து இனி ஓர் உடலில் புகுந்து பிறவாதபடி உய்ந்து போகும் நெறியை விரும்புங்கள். எப்போது இவ்வுடல் நமக்கு வந்தது என்று அக்காலத்தை எண்ணி ஆராய்ந்தால் இறைவனின் அருளைப் பெறலாம்,

2107. சீவரின் விருப்பம் செல்கின்ற முறையில் உடனாகும் பொருளானவன் சிவன். அவன் சீவர் பக்குவம் ஆகின்ற காலத்தை அறிந்து இன்பம் அளிப்பவனாகவும் விளங்குகிறான். எனவே இறக்கும் காலத்தும் அவனையே நினையுங்கள் அப்போது அந்தப் பரம்பொருள் பிறவிக் கடலை நீந்தி அக்கரை சேர உதவியாயிருப்பான்.

2108. உடலை விட்டுப் பிரிய இருக்கின்ற இச்சீவனை இதனுள் வாழ்ந்த பயனை அடைய வேண்டின் சாகின்ற போதேனும் சிவனைத் துதியுங்கள். அதனால் சிறப்புடன் சிவநெறியும் தானே வந்து அடையும். பின் பிறப்பு இல்லாத பெரிய உலகத்தை அடையலாம். சாயுச்சியபதம் கிட்டும்.

2109. அடியவர் கூட்டத்துடன் கூடி நின்றும் தனித்து நின்றும் வணங்கி எம் இறைவனின் உடலான பாசறையுள் நின்று அவனது திருவடிகளை வணங்குங்கள். கண்ணாடி போன்ற முகத்தின் முன் உள்ள ஒளியில் நிலைபெற்று அறிவால் தொழுபவர்க்கு கன்றையுடைய பசுவானது பாலைச் சொரிவதுப் போல சிவ ஒளி உயிரிடம் பெருகி நிற்கும்.

2110. உடம்பை விட்டுச் சிவன் நிராதாரம் செல்லும் போது பிரமரந்திரத்தின் நடுவே நின்று சிவனின் விந்து நாதமாகிய திருவடியை வணங்குங்கள். வலிய வினைகள் யாவும் கெடும். அழியாப் புகழை உடைய இறைவன் தேடிவந்து உங்களை தேவர்களுடன் கூட்டி இறவாத பெரு நெறியை அடையும்படி செய்வான்.

2111. காளை ஊர்தியை உடையவனே. சிவஒளிக்கு ஒளியாய் விளங்குபவனே. எம்மை இய்க்கி நடத்துபவனே எனக் கூறி திருநீற்றை அணிந்த அடியார் தேவரைப் போன்றவர். கங்கை அணிந்த சிவந்த சடையை உடைய சிவபெருமானின் விந்து நாதமான திருவடிகளைத் தனியாய் இருந்து தியானிப்பவர்க்கு வினைகள் இல்லை.

2112. ஓயாமல் பிறவியில் பொருந்தி நின்று துன்பம் தரும் பாசத்தில் உழன்று இருப்பவரே. எமது இறைவனை நாடி இன்பத்தை அடையுங்கள். அன்பைச் செலுத்தி தவத்தைச் செய்யுங்கள். அதனால் உண்மை ஞானம் பெற்று இறைமைக் குணத்தை அடைவீர்.

2113. பிறவித் துன்பத்தை போக்கிக் கொள்ள நினைப்பவர்க்கு மேற்கொள்ளத் தக்க உண்மையான தவம் உள்ளது. அடையத் தக்க திருவடியும் உள்ளது. அதனால் கிட்டும் உண்மை நெறியும் ஒன்று உள்ளது.

2114. மூல வாயுவை மேலெழுப்பி அதனுடன் போய் மதி மண்டலத்தை அடைந்தவர்க்கு அக்கினி வடிவான சிவன் இன்பத்தை தரும். அவ்வாறு சேராமல் பிரிந்தவர்க்குத் துன்பம் தருவதான பிறவியைத் தந்துவிடும். மூலவாயுவுடன் மெலே போய் ஆழ்ந்தவர்க்கு அவர்களிடம் தனது சிலம்பு அணிந்த பொன்னடியைக் காட்டி நாதத்தை எழுப்பும். அவ்வாறு சேர்ந்தவர் நாத சம்மியம் செய்வதால் சிவத்தை உணர்ந்திருப்பர்.

2115.0 இறைவன் வீடுபேறாகவும் அதன் வழியான ஞானமாகவும் ஞானத்துக்கு துணை செய்யும் முத்தமிழ் ஓசையாகவும் இருப்பவன். அத்தகையவனை பலகாலம் புறத்தில் வணங்குவர். ஆனால் பாலில் கலந்திருக்கும் நெய்யைப்போல நின்மலச் சிவனும் அவருடன் மறைந்திருப்பான். அத்தகைய சோதிப் பிழம்பான அச்சிவனை உள்ளத்தில் கண்டு வழிபட அறியார்.

2116. தணு கரண புவன போகங்களை உயிர்களுக்கு நியமிப்பவன். இறைவன். அவன் அமைந்தருளிய காலம் எவ்வளவு என்று யாரும் உணர்வதில்லை. பிறப்பிலே வந்து படுவதை தவிர சிவமாகிய பரம்பொருளின் பெருமையை உணராமல் கெடுகின்றனர்.

2117. இங்குள்ள வாழ்வும் எவ்வளவு துன்பம் ஆயினும் இறப்பு வந்த காலத்தில் தூய செம்மணி போன்ற சிவபெருமானை விஞ்ஞானத்து உறையும் விகிர்தனே என்று நைந்து உருகி போற்றுங்கள். பற்றற்ற வரை அவன் அடையான். அங்ஙனம் இன்றேல் அவன் உம்மை அடைய இயலாது.

2118. வஞ்சம் உடையார் நற்குருவை நாடி அடைவராயின் இவ்வுலகத்தில் பஞ்சம் ஏற்படும். அன்னாரைக் கண்டு இறைவனே அச்சம கொள்வான். கொடிய நரகத்தில் அவர்களைச் சேர்ப்பான். வஞ்சம் இன்றி செம்மையான ஒழுக்கத்து நிற்பவரை காண்பதே அனைத்துச் சித்திகளையும் தரும்.

2119. அளவு இல்லாத தேவர்கள் சிவனைக் கிரியை நெறியில் நின்று வழிபட்டனர். அங்ஙனம் அவர்கள் அவனை வழிபட்டு ஆகும் பயன் ஏதுமில்லை. அவனை வழிபடும் நெறியான ஞான நெறியை உபதேசிக்கும் நல்ல குருவை வழிபட்டால சிவனைப் பெறலாம்.

2120. மக்களும் தேவரும் ஆகியவற்றின் பாசத்தை பொருத்தி வினைகளைச் செய்து அழிவதைப் பார்த்து குருவான ஞானி பாசம் நீங்கியவராய் இருப்பானாயின் நீ பரத்துடன் கூடிப் பரமாவாய் என உபதேசிப்பதன்றி மாணவனுக்குக் கூறக்கூடியது ஒன்றுமில்லை.

2121. குருவாக எழுந்தருளி வந்தவன் ஒப்பில்லாத சிவன் ஆவான். அவனிடம் அன்பு கொண்ட மாணவனின் வினைகள் நாள்தோறும் தேய்ந்து ஒழியும். நீரையுடைய நீண்ட சடையை உடைய் இறைவன் வடிவு கொண்டு வந்து ஆட்கொண்ட முறையே வருந்தி வினையைக் கெடும்படி செய்தான்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:47

கேடுகண்டிரங்கல்!

Written by

ஓம்நமசிவய!

கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!

#####

கேடுகண்டிரங்கல்!

2084. ஒவ்வொரு கணத்திலும் தம் வாழ்நாள் கழிவதை அறியாத பாவிகள் வினைகள் என்னும் விதைகளைச் சேமிப்பர். விதை போகத்தை அறுவடை செய்ய உடம்பான நாற்றங்காலில் அந்த விதையை முளைக்கும்படி செய்வர். தமக்குற்ற வினைப் போகத்தால் உண்டாகும் துன்பத்தைச் சற்றும் உணர மாட்டார்கள். அவர்கள் கொழுந்து விட்டு எரியும் தீயில் கெடுவதைப் போன்/றவர் ஆவர்.

2085. வாழ்நாள் திடீரென்று முடிவதைப் பார்த்தும் மக்கள் சாதனை இல்லாமல் வாயினால் பேசி வாதிட்டு என்ன பயனை அடைவது. நேர்மை பொருந்திய அகண்டமாகிய் மலம் அற்ற சிவத்தினது திருவடியை வணங்கி ஆதியான இறைவனிடம் அன்புடன் பொருந்தும் நெறியை அறியும் ஆற்றல் இல்லாதவராய் விளங்குவர்.

2086. அறிவற்ற மக்கள் உடலைப் பெற்றேனும் நெல்லைப் பெற்றுக் குத்தி உண்டு கயவராகிய பொறிகளைத் திருப்தி செய்து தம் உடலை வளர்த்து அந்த உடம்பே உயிர் என மதித்து திரிவர். அகன்ற மலைச்சரிவில் தீப்பொருந்திய முருட்டுக் கட்டையில் ஏறி இந்த உடம்பு கிடக்கும் என்பதை அறியார்.

2087. முன் காலத்தில் சனகர் முதலிய முனிவர் நால்வர்க்குக் கயிலாயப் பதியில் சேர்ந்து இருந்து கல்லாலின் மரத்தின் கீழ் இருந்து அறக் கடவுளான குருநாதன் விரைந்து உபதேசித்த சிவத்தை உணராமல் பழிச் சொற்களை பேசும் மக்கள் தம் உயிர் அறிவையே இயல்பாகக் கொண்டு ஒருப்பட்டு நின்றனர்.

2088. நிலையான புகழையும் நிறைந்த தவத்தின் பயனையும் எப்போதும் எம் சிவபெருமான் அடியவர்க்கு அருள்வான். அஃது அறிந்தும் உலகத்தவர் முதற் கடவுள் அது என்றுன் இது என்றும் பேசி நிலை கெடுதலால் குறைவடைந்தனர்.

2089. இன்ப நிலையில் பிறந்து இன்பச் சூழ்நிலையில் வளர்ந்து இன்பப் பொருளான சிவத்தை இன்பம் அனுபவிக்கும்போதே எண்ணுவதை விட்டுச் சிலர் இன்பத்தை விரும்பித் சோறு ஆடை என்னும் துன்பத்துள் நின்று துன்பத்தையே எண்ணிக் கொண்டு அறியாமையில் உழல்கின்றனர்.

2090. பெருவதற்கு அருமையான மனிதப் பிறவியை இறைவனது அருளால் பெற்றிருந்தும் பெறுதற்கு அரிய சிவனது திருவடியைப் போற்றாது இருக்கின்றனர். பெறுவதற்கு அரிய பிறவியைப் பெற்ற மக்கள் எல்லாம் பெறுவதற்கு அரிய இன்பப் பேற்றை இழந்தனர்.

2091. வேட்கை பொருந்திய உள்ளம் அளவில்லாத இளமை அன்பு என்ற இவை ந்ல்ல நிலையில் உள்ள காலத்தில் மாற்றம் தரும் ஓர் உடல் உறவு கொண்டு நிலை பெற்ற மாதவனான சிவனை எண்ணி இன்பம் பெறாமல் இவ்வுலக்த்தவர் கெடுகின்றனர்.

2092. மேல் பாடல் முறையில் இளங்கதிரவன் போன்ற வடிவம் வாய்க்கும். அவ்வாறு அக்கினி மண்டலத்துள் அயர்ந்த தலைவனும் இம் முறையில் சுவாதிட்டான முலாதாரங்களில் விளங்கும் ஈசனுமான இறைவனின் உண்மை இயல்பை இதுவரை விசாரனை செய்யாமல் இருந்தோம் என்னே அறியாமை.

2093. குருவானவர் காட்டிய குறியில் பொருந்திச் சீவனைக் கூடமாட்டார். சிவத்தை நாடி அடைய மாட்டாதவர் நூல்களில் தாம் கண்ட நயத்தைப் பேசித் திரிவர். இறைவன் செய்த உதவிகளை எண்ணி அவனது புகழைப் பாடமாட்டார். வீணாகக் களியாட்டம் ஆடுவதில் வல்ல இவர்கள் எய்தும் பயன் யாது.

2094. உள்ளத்தில் நிறைந்து எழுகின்ற சோதியை நம் செம்பொருளான சிவம் என்று நம் தலைவனை நாள் தோறும் உறங்கும்போதும் துதியுங்கள். அவ்வாறு தொழாவிட்டால் நம் ஐந்து பொறிகளூம் கட்டினை அறுத்துக் கொண்டு திரியும் யானை போல் ஆகும்.

2095. விலங்கு மனிதர் தேவர் பறவை என்பனவற்றால் இறைவனிடம் அன்பு கொள்ளாதவை இல்லை. ஞானத்துடன் பொருந்திய மாதவம் செய்த ஞானியர் சிவத்தை எண்ணுவதுடன் அமையாமல் சிவ அமுதத்தை உண்டு திளைப்பர். மகிழ்ச்சியால் ஓடுவர். இவ்வுலகில் பிறந்ததால் ஆகிய பயனை உறுவர்.

2096. நேர்மையில்லாதவர் தமக்குக் கிடைத்த பொன்னைப் போற்றார். அது போன்ற முறைப்படி இறைவனை பேரொளியாய் அறிந்து போற்றுபவர் இலர். ஆனால் நான் அவனை நாம் பெறுகின்ற முதல் பயன் என்றும் தேவர்க்கு மேலான தேவன் என்றும் அநதி காலம் தொடங்கி மனத்துள் வைத்து அவனையே விரும்புகின்றேன்.

2097. மிக்கத் தேனை உடைய மலரைப் பொருந்தி மகிழ் வதர்காக வண்டுகள் மிகுதியாய் தேனைச் சேர்ப்பதை மக்கள் அறியமாட்டார்கள். சுற்றி வரும் வண்டு நுகராமல் வாயில் வலிய வந்து சொட்டும் தேனும் எல்லாராலும் பெறுவதற்கு அரிய தேனும் போன்றவரான இறைவனை எவரும் உணரமாட்டார்.

2098. இறைவனை அறியும் நெறியை அறியாமல் இத்தனை காலம் வீணே கழிந்தது. வானவரின் தலைவனான அவன் அன்பினுள் இருக்கின்றான். அவன் ஒருவனே உயிர்கள் எல்லாவற்றிலும் உயிராய் உள்ளவன். அவ்வாறு இருந்தும் அறிவற்றவர் அவனைத் தங்கள் அனுபவத்தில் வருவித்துக் கொள்ளாமல் தவறி விடுகின்றனர்.

2099. வாழ்நாளைக் குதித்தோடச் செய்கின்ற கூற்றுவனுக்குச் சார்பாக வரையறுக்கப்பட்ட நாள்களும் பயன் இல்லாமல் கழிந்தன. அதற்கெண நடுக்கம் கொண்டிருந்து என்ன செய்யப் போகிறீர்கள். நீவிர் ஆறுதல் அடைய விரும்பினால் மூலாதாரத்தில் கொதிக்கின்ற கூழில் உள்ள அமுதத்தை பக்குவப்படுத்தி உண்ண அகப்பையை இடலாம்.

2100. இடைகலை பிங்கலையாகிய கரைபக்கம் சுக்கிலமாகிய வயல் விளைந்தது. சுக்கிலத்தின் வளமை சுருங்கிக் கெடுவதற்கு முன்பு அச்சத்தியைப் பயன்படுத்திப் பேரின்பத்தை அடையுங்க்ள். குண்டலினி சத்தி மேல் முகமாகத் தலையை அடைந்து இன்பம் ஊறுகின்ற தவத்தைச் செய்தால் மயிர் நரைத்து முதிர்ந்த பருவம் இல்லாமல் நீங்கும்.

2101. உயிர்க்ள் எல்லாம் உடலுடன் கூடித் தோன்றும் ஆதிப் படைப்பை அறிபவன் அறியாமை உடைய அவ்வுலகத்தில் அதன் தன்மையை அறிபவன், தானே எழுந்து விளங்கும் சோதி இத்தகைய இறைவனைக் குண்டலினி யோகம் பயின்றவர் முன் விளங்கும் ஒரு தெய்வம் என்?று அதை அடைய வகை அறியாமல் இருள் மிக்க உலகத்தில் ஆசை வைத்துக் கெடுகின்றனர்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:46

கூடாஒழுக்கம்!

Written by

ஓம்நமசிவய!

பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!

#####

கூடாஒழுக்கம்!

2067. உலகத்தவர் தாம் செய்வனவற்றை மேற்பார்வை பார்ப்பவர் இல்லை என்று பல வகையான வஞ்சகச் செய்ல்களைச் செய்வர். எல்லோரையும் மேற்பார்வை செய்யும் இறைவனான க்ண்காணி இல்லாத இடம் ஏதுமில்லை. உலகத்தார் செய்வனவற்றை மேற்பார்வை செய்து எங்கும் நிறைந்து விளங்கும் இறைவனைக் கண்ணை இடமாகக் கொண்டு பார்த்தவர் தாம் செய்யும் வஞ்சகச் செயலிலிருந்து நீங்குவர்.

2068. கரிய கண்டத்தையுடைய சிவன் செழுமையான கடல் சூழ்ந்த உலகில் பொய்யானவற்றையே பேசித் திரியும் மக்கள் உண்மைப் பேசுவராயின் தேவரும் வழிபடும் தன்மையை அளிப்பான். இவ்வுலகத்தைப் படைத்த அவ்விறைவன் பொய்யையும் மெய்யையும் நன்கு அறிவான்.

2069. பக்தியை விலை கூறி விற்றுப் பகல் பொழுதைக் கழிக்கின்ற மதம் கொண்டவர்க்கு மறுபிறப்பு அமைந்துள்ளது அன்றோ.. பிறப்பை உண்டு பண்ணும் காமம் முதலிய விதையை நசுக்கிக் கழுத்துக்குக் கீழே உள்ள பகுதியான வினை புல்த்தைக் கெடுத்து தரிசாக்கும் இறைப்பித்த்துக் கொண்டவர்க்கு என்றும் பிறவியான பயன் விளையாது.

2070. பௌராணிகர் வடக்கே உள்ள மூர்த்தி தலம் தீர்த்தம் என்பவை பெருமை உடையவை என்பர். வடக்கே உள்ளது ஏதுமில்லை. என்றாலும் அறிவற்றவர் மற்றவர் அங்குப் போகும்படி தூண்டுவார். வடக்கே உள்ள பதிகள் எல்லாம் ஞானியின் உள்ளத்தில் அடங்கியுள்ளன.

2071. இறைவன் உயிரை உடலுடன் சேர்த்து வைப்பவன். உடம்பையே தான் வாழும் நாடாய்க் கொண்டவன். உடலுக்குள் இருந்து வெளிப்படும் குரு மண்டலத் தலைவன். இத்தகைய இறைவனை நாட்டில் எங்கும் தேடி அலைவார்கள். அவன் அவரவர் உடலுலும் பொருந்தி விளங்குகின்றான். இதனை அறியவில்லையே.

2072. இறைவன் மேற்பார்வை செய்பவனாக மூலாதாரத்திலிருந்து எழுகின்ற தீயில் உள்ளான். மேற்பார்வை செய்பவனாக அவரவர் உடலிலும் உள்ளத்திலும் உள்லான். அவ்வாறு விளங்கி அவரவர் உடலிலும் உள்ளத்திலும் கலந்து நெறிப்படுத்துவான். சிவத்தின் பால் பக்திகொண்அ உயிர்களுக்கு அவர்களைக் கண்காணித்து நடத்தும் காதலன் ஆபவனும் அவனே.

2073. காமத்திற்கு காரணமான கன்னியர் வலையில் விழுபவர் ஒரு வகையில் சிறைப்பட்டவர். மறைகளை ஓதுபவர் ஒருவகையில் சிறைபட்டவர். உடம்பை வருத்தித் தவம் செய்பவர் ஒருவகையில் சிறைப்பட்டவர். தத்துவ விசாரனையால் அனுபவம் இன்றித் தன்னையும் தலைவனையும் உணர முற்படுவோர் ஒருவகையில் சிறைபட்டவர். இவ்வகையினரான நாலவரும் இறைவன் இயல்பை அறியாதவர்கள் ஆவார்கள்.

2074. மறையும் காண இயலாத படலத்தால் மூடப்பட்ட கண்ணுக்கு இருளே அதன் ஒளி. சிவ ஒளி எங்கும் பரவியிருந்தாலும் அந்த ஒளியானது சாதாரண மக்களால் காணப்படாததாகவே உள்ளது. காணாதவர்கட்கு அகக் கண்ணாய் இருந்து காட்டும் பெருங் கண்னொளியாகும். கடவுளை ஊனக் கண்ணால் காணாமல் ஞானக் கண்ணால் பார்த்தவர் தாம் செய்யும் களவு ஒழுக்கத்தினின்றும் உய்ந்து ஒழிந்தார்.

2075. பித்தம் கொண்டவன் மருத்துவன் கொடுத்த மருந்தால் பித்தம் நீங்கப் பெற்று தன் இயல்பான தன்மையைப் பெறுவான். படலத்தால் மறைக்கப்பட்ட கண் படலம் நீங்கப் பெற்றுக் காணும் தன்மையன் ஆவான். அவை போன்று சிவபெருமான் அருள் செய்ய உள்ளம் தெளிவு கொண்டேன். உயிரின் இயல்பான செயல்களை விட்டு நின்றேன்.

2076. சிவத்தின் உறுப்புகள் நிலம் நீர், தீ, காற்று, ஆகாயம், கதிரவ்ன், சந்திரன், ஆன்மா என்ற எட்டு ஆகும். இவை அவனுடைய சத்திகள் என்பதை எண்ணி அஞ்ஞானமான உறக்கத்திலினின்று விழித்திருத்தலைச் செய்யார். கள் முதலியவற்றின் மயமாய் ஆக எண்ணிய தீவினையாளர் இன்பமயமான இறைவனது நினைப்பை விட்டவர் ஆவார்.

2077. கலப்பால் ஒன்றாய் பொருளின் இயல்பால் சீவனும் சிவனும் என்று இரண்டாயும் நின்று உயிர்த் தன்மை கெட்டுச் சிவம் ஆனவர்க்கு ஒன்று இரண்டு என்னும் வேறுபாட்டு உணர்வு ஒரு போதும் வராது. அங்ஙனம் இன்றி ஒன்று இரண்டு என்னும் வேறுபட்ட அறிவு உடையவர் எல்லாருக்கும் அந்நியமாய் உள்ளது. ஒன்று என்றும் இரண்டு என்றும் வேறு பிரித்து எண்ணும் நிலையில் வேறாக விளங்கும்.

2078. மூச்சானது உடலில் நின்று விட்டால் உணர்வு எங்கு இருக்கும். அறிவு இல்லாமையாலே பரிச உணர்ச்சி நிறைந்த உடல் நீங்கிக் கீழே விழும். உயிரும் உடலும் ஆகிய இவற்றுடன் பொருந்தியிருக்கும் உணர்வாவன சிவப்பயிரும் அமைந்து கிடந்த உள்ளத்தின் தன்மையை உலகத்தார் அறியமாட்டார்.

2079. உயிர் எனப்படுவது உடலின் வேறாய் உணர்வாய் எங்கும் நிலைபெறும் இயல்பு உடையது. உயிர் எத்தன்மையுடையது என்று அறிந்தால் அதனால் ஆன உணர்வு அறியப்படும் உடலுக்குள் பரவியிருப்பது பிராணன் அன்று உணர்வே ஆகும். அந்த உணர்வில் மறைந்திருக்கும் சிவம் ஒன்று உள்ளது என்பதை யாரும் அறியமாட்டார்.

2080. இன்றைய உலகம் நிலைபெறுவதற்குரிய அச்சாணி போன்றவன் ஒளியுடைய மேலான அறிவு பொருந்தியவன். நிலம் முதலிய ஐந்து பூதங்களின் தன்மையாய் அவற்றுள் உள்ளும் புறமுமாய் காணப்படுவன். சில வாக்கு வடிவான் தேவர்களுக்குத் தலைவனை தலையில் வாக்கு வடிவமாக அறிவதே தன்னை அறியும் செயலாகும்

2081. இறைவன் உலகப் பொருள் யாவற்றுக்கும் ஒடுங்கும் இடமாக உள்ள ஒப்பில்லாத பேரொளி. உடல் உலகு எல்லாமாக நின்ற ஒளி பொருந்திய சுடர் இத்தகைய தலைவனின் எல்லையில்லாத அருளால் விளையும் பேறு உனக்கு உண்டாகும். அதனால் விருப்பையும் பின்பு முடிவில் சோர்வையும் அளிக்கும் சிற்றின்பத்தை நீ விட்டு விடுவாயாக.

2082. உனக்கு முதல்வனாய் உடம்பில் உயிர் நிலைபெறும்படி செய்த ஒளிமண்டலதில் விளங்கும் இறைவனின் கருத்தை அறிபவர் இலர். நல்ல முதல்வனாய் சிவம் மிக்குத் தோன்றத் தமக்கு எனப் பெயர் இல்லாது அப்பெருமானுடன் ஒன்றி நின்றால் தன்க்கு முதல்வனான சிவத்தினது பண்பு உண்டாகும்.

2083. ஐம்பொறிக்ளும் அந்தக்கரணங்களும் வந்தனவாகிய சூக்கும உடலும் உயிர் அன்று இவையெல்லாம் மகத் தத்துவத்தினின்று தோன்றியவை. புருடனும் கலை காலம் நியதி வித்தை அரகம் என்னும் ஐந்தின் கூட்டத்தால் பொருந்துவதாகும் . அனாதியாய் உள்ள ஆன்மாவானது முப்பத்தாறு தத்துவத்தின் முடிவில் நிலை பெற்றிருக்கும்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:44

சற்குரு நெறி!

Written by

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!

#####

சற்குரு நெறி!

2049. உத்தம குரு என்பவன் சிவத்தின் திருவடியான் சிவ உணர்வைச் சீடன் சிரசில் அமையுமாறு செய்யும் ஆற்றல் உடையவன் ஆவான். அத்தகையவனே சிவத்தின் திருவடியைப் பதிப்பித்துச் சிவனின் உண்மை வடிவத்தை அறியும்படி செய்ய வல்லவன். சிவத்தின் திருவடி பதிப்பதால் முப்பத்தாறு தத்துவங்களையும் கண்டு விளங்கும் சீவனின் பாசங்களை ஞானம் அளித்துத் தணிக்க வல்லன் அவனே சிறந்த குரு ஆவான்.

2050. சத்குருவானவன் தன்னிடம் உபதேசம்பெற்ற அடியவரின் வினை தீரும்படி திருவருள் செய்தான். வினையால் தீவினை நெருங்காதபடி மாணவனின் தலையில் திருவடி சூட்டியருள் செய்தான். இயமனும் அவனது தூதரும் மாணவ்ன்பால் அனுகாமல் திருவருள் செய்தான். அதனால் பிறவித் துன்பம் நீங்கச் செய்தான்.

2051. கரிய இரும்பு இரசவாத முறையால் பொன்னாகும். அது திரும்ப இரும்பு ஆகாது. அதுபோல் பக்குவம் வந்த போதே குருவினது அருளைப் பெற்றவன் மீளவும் பிறவிக்கு வாரான்.

2052. பாசத்தைக் கெடுத்துச் சிவத்துடன் தனக்குள்ள தொடர்பை ஆராய்ந்து பாசக் கூட்டங்களை முழுவதும் அகற்றும் அனுபவம் உடையவரே குற்றம் இல்லாத சற்குரு ஆவர். சிவ அனுபவம் இல்லாது வாய் வாதம் செய்பவர் சிவஞானமுடைய குரு ஆகார்.

2053. தெய்வப் பொருளான சிவத்துடன் பொருந்தியிருக்கும் மலம் அற்றவனே மலம் நீங்கப் பெற்ற நேயப் பொருளை அளிக்க வல்லவன். அவனே நிலையானவனும் தூய்மை உடையவனும் ஆவான். அவனே ஆராய்பவரின் குணத்தை அறிந்தபோது செருகுற்ற அன்பர்க்கு உப்தேசம் செய்பவன் ஆவான். அவனே சி/றந்த குரு ஆவான்.

2054. தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக மாற்றும் மருந்து பட்ட இடம் எல்லாம் மேன்மையைத் தருகின்ற பொன்தன்மை ஆவதைப் போன்று குருவின் திருவடிபட்ட உலகத்தவர் யாவரும் ஆணவம் கனமம் மாயை ஆகிய மூன்று மலங்களும் நீங்கிச் சிவகதி பெறுவர்.

2055. சிவமே தானாய் எழுந்தருளிய நல்ல குருவின் திருமுன்பு ஆன்மாவின் தன் உண்மை உணருமாயின் ஆன்மாவே சிவத்தை பெருமைபெற அறிவதாகும்.. அந்த அறிவே உடலுள் இருக்கும் சிவம் என்று அறிந்து கொள்வாயாக.

2056. பிறப்பு இறப்பு என்னும் இரண்டும் அற்ற இறவாத நெறியைக் கரு இடுவதையே செயலாக உடையார். காம விருப்புடையவர் காணாத வழியை சிவபெருமான் பெருந்துறையாகப் பேசும் வழியை அனுபவம் மிக்க குரு உபதேச வழியில் போய்ப் பொருந்தலாம்.

2057. சிவகுரு என்பவன் வேதாகமம் கூறும் பேரின்ப வடிவு உடையவன். அவ்வடிவுடையவனாகிச் சிவயோகத்தை உயிர்க்குச் சேர்ப்பித்து அருள்வான். அவ்வுயிர் திருவடியுணர்வு வரப் பெற்றமையால் வேறோர் எண்ணமும் உண்டாவதில்லை. அதனை உயரச் செய்து பாசத்தை அகற்றி அகத்தே தோன்றும் மேலான சிவத்திடம் வருவித்துச் சேர்ப்பவன் ஆவான்.

2058. சத்தான சிவமும் அசத்தான மாயையும் சத்துடன் கூடிச் சத்தாகவும், அசத்துடன் கூடி அசத்தாகவும் உள்ள ஆன்மாவும் ஆகிய முப்பொருளகளின் இயல்பை உணர்த்தி சித்தான ஆன்மாவையும் அசித்தாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் சிவத்துடன் சேர்த்துச் சுத்தமயையும் அசுத்த மாயையும் அகல இன்பவடிவான பிரணவ உபதேசம் அளிக்கின்ற தலைவனே அருட்குரு எனக் கூறப்படுவான்.

2059. உயிர்களிடம் உள்ள பாச உணர்வால் ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதயி என்ற ஐந்தும் பொருந்தும். சிவத்தின் திருவடியை வழிபடுவதால் அவா நீங்கும் சிவப் பற்றை ஆதாரமாய்க் கொண்டு ஆன்மாவைச் சுற்றியிருக்கும் பேத ஞானத்தைச் சீவ துரியம் சிவ துரியம் பரதுரியம் என்னும் மூன்றாலும் கெடுத்துத் தற்பரம் என்ற மேலான சிவத்தை சார்பவார் மேலானவர் ஆவார்,

2060. அனைத்து உயிர்களும் இன்பம் அனுபவித்தற்குரிய வன்மை மிக்க புலன் உணர்வுடன் பொருந்த வரும் காலத்து இறைவன் இறைவியுடன் உள்ளத்தில் தோன்றிடவே சொல்லாமலேயே ஐம்மலக் குறுபுகளும் அடங்கி உயிர் சிறந்து மீண்டும் வாரா நெறியை அடையச் செய்தல் இறைவனுக்கு விளையாட்டாகும்.

2061. இழிவான பிறப்பிலே செலுத்திப் பின்பு அதனின்று மீட்டு வினைப் போகத்தை அனுபவிக்கச் செய்து பதமுத்தியை அடையும்படிச் செய்து பதவிகளின் இன்பத்தைத் துய்க்கும்படிச் செய்து உயிர்களைப் பிறவிக் கடலில் ஆழ்த்துதலும் பின் சிவஞானத்தில் மீளும்படி செய்தலும் வீட்டை அடையச் செய்து மௌனம் என்ற பேசாப் பெருவாழ்வு அளித்தலும் ஆகியவை முத்தியினைத் தரும் சிவனின் செயலாகும்,.

2062. சிவன் ஐந்தொழில்கள் செய்து விளையாடும் இடம் உடலகும். அறிவு அறியாமையை நீக்கித் தெளிவித்த சீவனை அதன் மலத்தினைப் போக்கித் தூய்மை உடையவன் ஆக்கித் தன் வயமாக்கலே ஐந்தொழில் காரியமாகும்.

2063.. இறைத் தன்மையைப் பெறுவதைப் போல் பெரும் பேறு இல்லை என்று அப்பால் ஆகி நின்ற சதாசிவ மூர்த்தியை பாசத்தில் உள்ள போதே பற்றி நில்லுங்கள். பாசத்தில் சிவன் பொருந்தியிருப்பினும் அதிலே ஒட்டாத நின்மலன் ஆவான். அவன் பொருந்தியிருக்க பாசமயமான உலகங்களை ஒளிமயமாகச் செய்தான்.

2064. சிவந்த மாணிக்க மாலையைப் போல் ஒளிவிட்டு எழும் புருவ நடுவான மண்டலத்தில் மாற்று உயர்ந்த பொன் போன்ற சிவம் பொருந்திப் பேரின்பமான அமுதை விளையச் செய்தது. இதை அறிந்து விந்து வெற்றியால் அமுதத்தைப் பெருகும்படி செய்பவரே பிறவியற்ற நெறியை அறிந்து வாழ்பவர். இதை உணராதா விலங்கைப் போன்ற மற்றவர் சோற்றுக்குக் கேடாய் வாழ்பவர்.

2065. மலத்துடன் கூடிய ஆன்மா உயிர்த்தன்மை நீங்கவும் கூட்டப்பட்ட பாசப் பற்றுகள் அழிந்து ஒழியவும் சுத்தமாயை அசுத்த மாயை என்னும் இரு மாயைகளையும் நெகிழ்வித்து அணுவாகிய ஆன்மாவை அங்கே கூட்டியவனும் பிரண்வ உபதேசம் செய்பவனும் சிவன் ஆவான்.

2066. மூலாதாரத்தினின்று தலையை நோக்கி ஏறும் பாதையில் உயிரைப் பிணிக்கும் மல இயல்பைச் சுட்டெரித்து மேலே செலுத்தலாலும் முடிவில்லாத நாத ஒலியால் இருளை நீக்குதலாலும் பசுவின் இயல்பான பாசத்தன்மை கெடுமாறு வாடுவதாலும் முத்தியுலகை அடையும்படி உபதேசிக்கும் சிவமே குருவாகும்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:43

அசற்குரு நெறி!

Written by

ஓம்நமசிவய!

ஓங்கார முகத்தொருத்தல் ஏங்கா துயிர்க்கருள்
இயற்கை எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய்
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் அருவே உருவே
அருவுருவே பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி!

#####

அசற்குரு நெறி!

2044. சிவசிந்தனை இல்லாத மூடனும் உண்மைப் பொருளை ஆராயதவனும் சிக்கல் இல்லாமல் வேத நெறியைக் காணாதவனும் அடக்கம் இல்லாதவனும் மற்றவரைப் பழிப்பவனும் ஆன்ம பேதம் உடையவனும் சன்மார்க்கத்தை உபதேசிக்கும் நெறியற்றவர் ஆவர்.

2045. மந்திரம் தந்திரம் யோகம் ஞானமுடன் பாசம் முத்தி என்பவனவற்றைக் கண்டு உணர்ந்திருப்பவரை உள்ளத்தால் நினைத்தும் உண்மை ஞானம் பெற வேண்டுவன செய்யாமல் வயிற்றுப் பாட்டுக்காக் குருடராய் திரியும் குருமார்கள் அசற்குரு ஆவர்.

2046. பேரின்பத்தை அடைவதற்குரிய வழியை அறியாதவன் அறிவற்ற செயலைக் செய்பவன் காமம் முதலிய ஆறு பகைகளை நீங்கப் பெறாத கீழ் மகன் பாவிகளுக்கு மெய்யை உணர்த்தாது பொய்யை உணர்த்துபவன் ஆகிய இத்தன்மையை உடையவன் சிறந்த குரு ஆகமாட்ட்டார். அவன் அசற்குரு ஆவான்.

2047. உலகத்து வாழ்வைப் பற்றிய எண்னங்களை நீக்காமல் மந்திரத்தை உபதேசம் செய்தால் சிவசிந்தனை சிறந்து வெளிப்படாது சுருங்கி விடும். சிவத் தியானமும் உலக போகமும் ஒன்றுக்கு ஒன்று முரணானதால் தீமை விளையும். இத்தகைய குருமார்கள் வாழ்கின்ற நாட்டுக்கும் மன்னனுக்கும் தீமை யுண்டாகும் என்று முன்பே சிவபெருமான் மொழிந்துள்ளார்’

2048. கண்பார்வை அற்றவர்க்கு கோலைத் தந்து வழி காட்டிச் செல்லும் கண்பார்வை அற்றவர் வழியல்லாத வழியில் போய்ப் பழைய குழியில் விழுவர். அதன்பின்பு அவரைப் பின்பற்றி வந்த குருடரும் அந்தக் குழியிலே விழுவர். அதைப்போல் ஞானத்தை உணராத மாணவரும் அசற்குருவுடன்கூடி முன்பின் இல்லாமல் ஒரு சேர அஞ்ஞானத்தில் விழுவர்.

#####

ஓம்நமசிவய!

புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி! !

#####

ஐந்து இந்திரியம் அடங்கும் முறைமை!

2031. சந்திரமண்டலமான குளம் ஒரு முழம் அகலமும் அரை முழ ஆழமும் உடையது. வட்ட வடிவமாய் அமைந்த அந்தக் குளத்தில் விஷய வாசனைகளாக மீன்கள் வாழ்கின்றன. சிவபெருமானை வலைஞன் வலையைக் கொண்டு வீசினான். அந்த வகையில் மீன்கள் அகப்பட்டுக் கொண்டன. யாம் இனிமேல் பிறவித் துன்பத்தை நீங்கினோம்.

2032. அறிவு நீங்கப் பெற்றுக் கிடக்கும் உடலில் கிளர்ந்து எழும் பொறிகளை அடக்க வல்லவனே தேவன் ஆவான். உடம்பில் அருந்துதல் பொருந்துதல் என்னும் இரண்டு இன்பங்களிலும் மனம் பொருந்தி நிற்கும் வரையும் உடம்பில் மூச்சின் இயக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

2033. ஐந்து பொறிகளையும் அடக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்பவர்கள் அறிவற்றவர்கள். அங்ஙனம் ஐந்தையும் அடக்கிய தேவர்களும் இல்லை. ஐந்தையும் அடக்கிவிட்டால் அரிவற்ற சடப்பொருளாகும் என எண்ணி ஐந்தையும் அடக்காமல் இயங்கச் செய்யும் உபாயத்தை அறிந்து கொண்டேன்.

2034. ஐம்பொறிகளாகிய யானைகள் பிளிறிக் கொண்டு எழுகின்றன. அவற்றை அடக்க அறிவாகிய கோட்டையை வைத்தேன். ஆனால் அவை அந்தக் கோட்டையினின்று தப்பி ஓடி வெளியில் கேடு தரும் புலன்களில் மண்டி உடல் என்னும் கரும்பை அழித்துக் கொண்டு அலைகின்றன.

2035 .பிரணவமான ஐந்தில் ஒடுங்கினால் நாதந்தமான அகன்ற இடம் அமையும். இதுவே மேலான தவம் ஆகும். இதுவே சிவபதமும் ஆகும். இதில் ஒடுங்கி நின்றவரே அருள் உடையவர் ஆவார்.

2036. நிறையப் பேசுவதால் என்ன பயன். கானல் நீரைப் போன்று உலக்த்தை நினைத்தலால் என்ன பயன். பரவலாக விரிந்திருக்கும் பொருள்களுக்கெல்லாம் வித்தாக உள்ளம் இருக்கின்றது. உலகத்துப் பொருளை மிகுதியாய் நினைத்தால் உலகத்தைப் பற்றிய சிந்தனை பெருகி விடும். அவற்றை நினையாமல் சிவத்தை நினையில் உல்கப் பொருள் அங்கு சுருங்கி விடும். இதை ஆராய்ந்து தெரிபவர்க்கு இவ்வளவு தான் உண்மைப் பொருள் ஆகும்.

2037. பாசவழி நீங்கிப் பெருமை பெற்ற சீவன் பொறிவழிச் சென்று கெடுவதை அறிந்து இனிய உயிர்களுக்காக அடியார் கூட்டத்தை வைத்து அவரொடு பொருந்தியிருக்கும் இறைவனிடம் பாசத்தினின்று விடுபட்ட உள்ளத்தினது ஐவகைச் சேட்டைகளையும் ஒடுங்கி நிற்க ஐம்பொறியாகிய தொளை வழிச் சென்றது உச்சித் துளையின் இன்பத்தைப் பெற்று ஓயந்திருக்கும்.

2038. ஐம்பூதங்களின் தூலத்தன்மை மாறிச் சூக்குமமான ஐவகை ஒளியாய்ச் சார்ந்து விளங்கும் மேல் முகமான சகசிரதளமான தறியில் கட்டப்பெறும் பேற்றை அடைவாயாக. ஆனந்த சத்தி உன்னிடம் பதித்தால் இதுவே முடிவானது என்று தலையின்மேல் குடிக் கொள்வாயாக. இதுதான் பழமையான நெறியாகும்.

2039. எல்லா உயிர் வகையிலும் பொருந்தி இயக்கும் சிவத்தை நாள்தோறும் தியானைப்பதால் எல்லாப் பொருளிடத்தும் போய்ப் பற்றும் மனத்தை மிகவும் மெதுவாக அடக்கித் தலையில் உள்ள இடப்பாகமான வடக்கும் வலப்பாகமான தெற்கும் வளர்ந்து மனக் கோயிலாகப் பொருந்தும்.

2040. முன் சொன்ன சாதனையில் சில நாழிகைகள் சில நாள்கள் பின்பு பல நாள்கள் போயின். அதனால் உல்கப் பொருள் எல்லாம் நீரின் மீது எழுதப்பட்ட எழுத்தைப் போன்று அழியும் தன்மையவாய்த் தோன்றின. இவ்வகையே புலன்களின் வழிச் செல்லும் விருப்பத்தை விரைவாய் விட்டு விடுங்கள் பின் மலை போன்ற துன்பம் வந்தாலும் தாங்க இயலும்.

2041. சகசிர தளத்தில் விளங்குபவன் சிவன். அப்பெருமானின் திருமேனியை மனத்தில் பொருந்த்தி ஐம்புலன்கள் செல்வதினின்றும் அறிவால் மீட்டு வணங்குக. நான்கு பக்கங்களுக்குப் பின்பு எல்லாவற்றிற்கும் தலைவனை அமுதம்போல் சுரக்கும் உள்ளத்தில் ஒடுங்கி இன்பம் அடையலாம்.

2042. உடம்புள் பொருந்திய உள்ளத்தால் உடலை அரித்துத் தின்கின்ற ஐம்பொறிகளாகிய கள்வரை யாரும் அறியவில்லை. நகைக்கும்படி உலகச் செய்திகள் சிலவற்றை பேசிக் கொண்டிருந்தால் உய்ர்ந்து விளங்கும் அண்டகோசம் கடுமையான இருளால் சூழப்பட்டு எல்லையாகவேதான் விளங்கும்.

2043. ஐம்பொறிகள் அடங்கி விட்டால் விட்டு விட வேண்டியது எதுவும் இல்லை. உள்ளத்தில் பொருந்தியிருக்கும் இறைவனை இயல்பான முறையில் வணங்குங்கள். இல்லையானால் ஐம்பொறி விருப்பத்தில் உண்டான பொய்யையே பொருந்தும் புலன்கள் ஐந்து பக்கங்களிலும் வெளியில் கவர இருக்கின்றன.

#####

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#####

ஐந்திரியம் அடக்கும் அருமை!

2023. மிகுந்த மதம் பொருந்திய ஐந்து பொறிகளான யானைகள் உள்ளன. அவை உடலில் களிப்பைத் தரும் சந்திரமண்டலமான சுட்டுத் தறியில் அணைந்து பொருந்துவதில்லை. இவற்றை அடக்க முயலும் ஆன்மாவாகிய பாகனும் இளைத்து ஐம்பொறிகளின் வல்லமையும் குறைந்த பின்னர் யோக நெறியால் திருந்துவது என்பதை நான் அறியவில்லை.

2024. நல்ல கருத்துடைய நூல்களைப் பலகாலம் கற்றறிந்து பிராணனின் இயக்கத்தை ஆன்மா என்ற பாகன் மாற்றித் திருத்தினாலும் வேகமாகப் பாய்கின்ற பொறிகளாகிய குதிரைகள் திகைத்து நிற்குமே தவிர செலுத்தியவுடன் பாய்ந்து செல்ல பிடரியில் அமர்ந்து நன்கு பாகன் தூண்டினாலும் அக்குதிரைகள் முன்பு போன வழியில் செல்லாது.

2025. ஐந்து பூதங்களாகிய இடங்கள் ஐந்து ஞானேந்திரியங்களான பறவைகள் ஐந்து. அவை சென்று பற்றும் தன் மாத்திரைகாகிய புலன்கள் ஐந்து கன்மேந்திரியங்கள் ஐந்து அவற்றின் செயல்களும் ஐந்து மாயையான குலம் ஒன்று அறிவு என்னும் கோலைக் கொண்டு அவற்றை மேய்ப்பவன் ஒருவ்ன் உண்டு. அவன் வருந்திப்போகும் வழி உடம்புள் ஒன்பதாகும்.

2026. உடலான காட்டில் பொறிகளான சிங்கங்கள் ஐந்து உள்ளன. அந்த ஐந்தும் புறம் சென்று புறப் பொருளை பற்றி அகம் வந்து சேரும். விஷயங்களைப் பற்றி நிற்கும் மனத்தையும் விஷயங்களில் ஈடுபடும் கருவிகளையும் செல்ல ஒட்டாது அடக்கி நிறுத்திவிட்டால் தவறாமல் இறைவனை அடையவும் கூடும்.

2027. ஐந்து பொறிகளாகிய அமைச்சரும் அவர்களுக்குத் தொண்ணூற்றாறு தத்துவங்கள் ஆகிய எவலாளரும் இருக்கின்றனர்.. இந்த அமைச்சர் ஐவரும் அவர் வழி வந்த தத்துவக் கூட்டங்கள் ஆகிய பிள்ளைகளும் நம்மைக் ஆளக் கருதுவார்கள். அந்த ஐவரும் ஐவகையான உணர்வுடன் செயல்பட்டால் நம்மால் அந்த ஐவருக்கும் காணிக்கை தந்து சமாளிக்க முடியாது.

2028. நாள்தோறும் பேரொளியாய் ஒளிரும் சிவத்தைத் துதிக்கும் வல்லமை உடையவன் அல்லேன். திருவருள் அம்மையும் அங்கிருப்பதைச் சொல்ல வல்லேன் அல்லேன். ஐம்பொறிகளையும் அவற்ரின் வயப்பட்டு அலையும் உள்ளத்தையும் வெல்லும் ஆற்றல் உடையேன் அல்லேன். கொல்வதற்குக் கொண்டு போகும் குதிரைமேல் எறிய்வனைப் போல் ஆனேன்.

2029. இந்த உடல் அளவிடமுடியாத தொளைகளை உடையதாகும். மனம் எண்ணில்லாத தொளைகளையுடைய உடல் இன்பத்தைத் தேடி ஓடினால் குற்றம் உண்டாகும். உயிரானது மனவழிச் சென்று கணக்கற்ற தொளைகளையுடைய உடல் இன்பத்தை நாடாமல் இருக்குமானால் சிந்தனையற்ற் உள்ளத்தில் ஓர் இன்பம் ஏற்படும்.

2030. கடலால் சூழப்பட்ட உலகத்தில் உள்ள மக்களுக்கு அவரவர் புண்ணிய பாவத்துக்கு ஏற்ப வாழ்வானது அமையும். சிவத்தை துதித்துப் பெருமையுடைய வல்லமை பெற்றவர்க்குப் பழமையான வான் உலகம் அமையும். சந்திர மண்டல வல்லமைக்கு ஏற்ப மக்கள் வாழ்க்கை உள்ளது. எண் பெருஞ் சித்திகளை அடைவதே அழகான நிதியின் பெருவ்ன்மையகும்

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:39

போதன்!

Written by

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

#####

போதன்!

2017. சீவன் என்றும் சிவன் என்றும் இரு பொருள் இல்லை. சீவன் சீவத்தனமையில் உள்ளவரையில் சிவனை அறிய இயலாது. சீவன் சீவத்தன்மை மாறி அகண்ட ஞானம் பெற்ற பின்பு சீவன் என்ற பேரைப் பெறாமல் சிவன் என்ற பெயரைப் பெறும்.

2018. அறிவு ஒளியாய் விளங்கும் கூத்தப் பெருமானும் மனத்தை விளக்காகக் கொண்டு வாழும் உயிர்களுக்கு எல்லாம் பல த்லைகளையுடைய பாம்பின் படத்தலையில் உள்ள மணிகளைப் போன்று உயிர்க் கூட்டத்துக்கு விளக்கம் தரும் மேற்பார்வையாளர் ஆவர்.

2019. சிவத்தைக் கொண்டு தன் அறியாமை நீங்கியவனே ஐம்பொறிகளால் சுட்டியறியும் அறிவைப் விடுத்து எங்கெங்கும் உள்ளனவற்றை அங்கங்கு இருந்து காணும் ஆற்றலைப் பெற்றவன் ஆவான். அவனே அறிவு வடிவாய் எல்லா உயிர்களிடத்தும் அறிவாக நின்று அறிவன். அறிவில் பொருந்தி நின்ற சிவனும் ஆவான்.

2020. முப்பத்தாறு தத்துவங்களை அறியாதிருந்த எனக்கு அவற்றின் இய்ல்பை என் ஆசான் எனக்கு உணர்த்தினான். இறைவன் அருளால் அதனை அறிந்த பின்பு அவன் அத்தத்துவங்களைக் கடந்த பொருளாய்க் காட்சி தந்தான்.

2021. சிவத்துடன் பிரிவின்றி நிற்கும் திருவருளில் நின்று அறிந்து தெளிய மாட்டார். தீமையைச் செய்யும் ஐந்து மலங்களும் எவ்வறு நம்மிடம் பொருந்துகின்றன என்பதையும் அறிய மாட்டார். உடலை வருந்தித் தவங்கள் செய்து தம் அறிவைப் பாழாக்குகின்றனர். தோழமை நெறியில் விளங்கும் சிவத்தை அறிய மாட்டார். என்னே அவர் அறியாமை.

2022. நாளும் வினை செய்பவர் இறைவன் உயிர்களாகிய நமக்குச் செய்யும் அருட் செயலை எண்ண மாட்டார். நாள்தோறும் தம் வினைகளுக்கு ஏற்றப் பயன்களை நளினமாய் இறைவன் ஊட்டுவதையும் அறிய மாட்டார். இறைவன் நல்லவர்க்கே நாள்தோறும் வழங்குகின்றான் இதை வினை செய்பவர் எண்ணிப் பார்க்க மாட்டார்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:38

சிவன்! பசு!

Written by

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

#####

சிவன்!

2011. உடம்பில் பொருந்திய சிவனின் வடிவை அளவிட்டுக் கூரினால் பசுவின் மயிர் ஒன்றை நூறாகப் பிளந்து அதனுள் பொருந்திய ஒன்றை ஆயிரம் பகுதியாக்கினால் உயிரின் வடிவம் பசுமயிரை ஓர் இலட்சம் கூறிட்டதற்குச் சமம்.

2012 எம் பெருமான் மற்றத் தேவர்களைவிடப் பெருமையுடையவன். ஆயி9னும் தன் எளிவந்த கருணையால் உடலுள் உயிராய் கலந்து விளங்கும் தன்மை கொண்டவன். தேவர்களால் அளவிட்டு அறிய முடியாத தேவ தேவன். ஆயினும் ஆன்மா தான் செய்யும் தவத்தின் அளவாகத் தானே அறியும்.

2013. யோகத்தை மேற்கொண்டு தெளிந்த குரு உபதேசம் செய்ய யோகத்தில் பொருந்திப் பயில்வதற்குள்ள நல்ல பண்புகள் இல்லாதவராயினும் பழைய வாசனையால பயின்ற சீவன் பின்பு அனுபவத்தை தன்னுள் கொண்டு சிவ வடிவம் பெறுவர்.

2014. உயிர் மாயையின் காரணமான துன்பங்களில் தோய்ந்து தானும் அதன் வயமாகும். ஞாணமே வடிவாய் உள்ள குருவின் அருளால் சேதனத்தில் தூண்ட மாயா உபாத ஒன்றிலும் பொருந்தாது பயிற்சி வசத்தால் துரிய நிலையில் புகுந்து ஞானமே வடிவாக விளங்கும்.

#####

பசு!

2015. வேதம் ஆகமம் என்பனவற்றை நிரம்பக் கற்ற உயிர்கள் பொருள் அனுபவம் இன்றிப் புலம்பித் திரிந்தாலும் அரசு செல்வாக்கைப் பெற்ற உயிர்கள் தமக்குரிய விருதுகள் கட்டிக் கொண்ட தெரிந்தவர் போன்று திரிந்தாலும் முதிர்ந்த அனுபவம் உடையவரின் சிறு ஞானமே உலகத்துக்குப் பயன் அளிக்கும். மற்றையோரின் வாய் வேதாந்தமானது வறட்டுப் பசுவைப் போல உலகுக்குப் பயன்படாது.

2016. சுவாதிட்டானம் என்ற கொல்லையின் மனத்தை வைத்துக் காமச் செயலில் ஈடுபடும் உயிர்கள் என்ன செய்யக்கூடும். காம எல்லையைக் கடக்கச் செய்து அகண்டமான சிவபெருமானின் திருவடியில் சேர்த்துத் திருவருளைத் துய்க்கும் ஆற்றலை உண்டாக்கிச் சிவஞானியர் கூட்டத்தில் சேர்ந்து மதித்தபின் அன்றி அந்தப் பசுக்கள் கொல்லையில் வைத்த உள்ளத்திஅ மாற்றிக் கொள்ள மாட்டார்.

#####

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

#####

பசுவிலக்கணம்- பிராணன்.!

2005. துதித்த அளவிலே உணரப்படும் ஒருவனைப் பன்னிப் பன்னிப் பேசும் வேதங்கள் இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருக்கும் பரம் பொருளை என் மனத்தில் தூண்டா விளக்காய் உள்ளவனை அம்ச வடிவினன் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

2006. சீவனின் வாழ்வில் இரண்டு அன்னங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதவை. அவ்விரண்டுள் தன்னிலையில் நிற்கும் சிவமான அன்னம் தனக்கு வேறானது என்று எண்னினால் வேறுபட்ட அறியாமையுடன் கூடிய சீவனான அன்னத்துக்கு எப்பொதும் சிவப்பேறு கிட்டாதாகும்.

#####

புருடன்!

2007. வைகரி மத்திமை, பைசந்தி, சூக்குமை என்னும் வாக்குகளும் மாயை முதலிய மலங்களும் பொய்யான இன்பங்களை அனுபவிக்கச் செய்யும் புருடன் முதலான வித்தியா தத்துவமும் பிறப்பை ஒழிக்கும் ஞானமும் என்னும் இவற்றைச் சான்றாய் உள்ள ஈசன் உயிர்கள் உய்வு பெறும் பொருட்டு முன்பே அமைத்து வைத்தவையாகும்.

2008. அணுவுக்கும் அனுவாய் உள்ளதை ஆயிரம் கூறிட்டு அந்த ஆயிரத்தில் ஒரு கூற்றை நெருங்க வல்லர்க்கும் அணுவுக்கு அணுவானவனும் பழமை உடையவனும் மிகச் சூட்சமம் ஆனவனும் ஆகிய பரம் பொருளை அடையவும் கூடும்.

2009. எங்கும் பரவிப் படர்ந்து வளரும் தன்மையைத் தன்னிடம் கொண்ட ஆலம் விதையைப் போன்ற ஆன்மாவைத் திருவருள் கொண்டு தன்னெறிப்படுத்த அறியாமையை உண்டாக்கித் துன்பத்தைப் பெருக்கி நிற்கும் இருளை முற்றும் கெடுத்துச் சிவன் அமைத்து தந்த சிவகதியை விரும்பவும் கூடும்.

2010. ஆன்மாவுள் சிவனும் சிவத்துள் ஆன்மாவும் பிரிவு இல்லாது கலந்துள்ளதை உணரார். ஒப்பில்லாத இறைவன் எங்கும் நிறைந்து இடையில் பொருந்தி இயங்குபவை நிற்பவை ஆகிய அனைத்துப் பொருள்களிலும் வியாபித்திருக்கின்றனன்.

####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26953061
All
26953061
Your IP: 35.172.231.232
2024-03-29 21:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg