gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

ஏழாம் தந்திரம் (32)

சனிக்கிழமை, 20 June 2020 12:08

ஆத்துமலிங்கம்!

Written by

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

ஆத்துமலிங்கம்!

1753. அகாரமாகிய சிவம் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றுடன் கலந்தும் விளங்கும். உகாரமாகிய சத்தி யாவற்றுக்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இங்ஙனம் அகரம் சிவம் என்றும் உகரம் சத்தி என்றும் அறிந்தால் அகர உகரங்களே சிவலிங்கம் என்பது தெரிய வரும்.

1754. அண்ட கோளத்தில் வடிவமான படைப்புக் காரணமாயும் அதனுள் நிலைத்ததாயும் உள்ள விந்துவும் மேதை முதலிய சோடச கலைகள் ஆகிய நாதமும் அடுக்கு அடுக்காக விரிந்தன. ஆதாரமான விந்து உயர்ந்த இடமாகக் கொண்டு நிலை பெற்றுள்ளது. இவ்வகையாக உயர்ந்து செல்வதில் விந்து நாதங்களின் புணர்ச்சி உள்ளது.

1755. இயங்க இயலாத மலை, நிலம், செடி, முதலியவை சத்திசிவ சேர்க்கையாம். அசையும் இயல்புடைய உயிர்ப் பொருள்களும் சத்தி சிவ சேர்க்கையாம். அறிவான வான மண்டல நாதனான சதாசிவமும் சத்தி சிவப் புணர்ச்சியாம். திருக்கோவிலில் உள்ள தாவரங்களும் சத்தி சிவப் புணர்ச்சியாம்.

1756. சிவசத்தி வடிவான ஆத்தும லிங்கத்தில் அழகான பேரொளியைக் காணலாம். வான் கூற்றில் ஐம்பது எழுத்துக்களும் தோன்றும் இடம் அதுவே ஆகும். சகசிர தளத்தில் பொருந்தி விளங்கும் பேரொளியில் சத்தியுடன் அகர வாச்சியப் பொருளான சிவமும் அழகோடு கலந்து விளங்கும்.

1757. ஆத்மாவிடம் பொருந்திய விந்துவும் நாதமும் ஆன்மலிங்கம் ஆகும், இந்த விந்துவே நாதத்துக்கு இடமாய் இவ்விரண்டும் பொருந்தி ஆன்ம லிங்கமாகும். இந்த இரண்டையும் ஆதாராமாய்க் கொண்டே நான்முகன் முதலிய மூவரும் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்கின்றனர்.

1758. நல்ல ஆன்ம தத்துவமே சத்திக்குப் பீடம். வித்தியாதத்துவம் சத்திக்கு நல்ல கண்டம் பொருந்தும் சிவதத்துவம். சத்திக்கு நல்ல இலிங்கமாக விளங்கும். வானக் கூறான சதாசிவம் தத்துவமே நல்ல சத்தி மண்டலம்.

1759. சிவன் என் உள்ளத்துள் புகுந்து எனது உயிர் நிலை பெறும் வாழ்வில் மனத்துள் பேரின்பம் சுரக்கும் காலத்து நன்மை பெருக நான் என்னையும் நாதனையும் நாடும்போது என் தலையின் உச்சியில் விளங்கி அவன் ஆட்கொள்வான்.

1760. மேலானவற்றுள் மேலானவனும் என் தந்தை போன்றவனும் குளிர்ந்தபிறை சூடியவனும் அடியார் மனதில் கோவில் கொண்டு விளங்குபவனும் தேவர்கள் தலையினுள் ஒளீமயமாக விளங்கும் குண்டலியான தலைவனும் ஆன சிவம் என் உள்ளத்துள் நீங்காமல் எழுந்தருள்வான்.

1761. பசுவின் தன்மை கொண்ட் என் உள்ளத்தை கோயிலாய்க் கொண்டவன் பாம்பு அணிந்த சடையை உடையவன் அக்கினி நீர் பொருந்தப் பெற்றவன் செய்யும் புண்ணியம் அனைத்துமானவன் இத்தகைய இயல்புடைய இறைவன் தலைவன் அல்லன். நானே தலைவன் எனக் கூறுபவர் அறியாமை உடையவர்.

1762. தேவர்கள் சிவபெருமான் அங்கு நின்றான். இங்கு கிடந்தான் என்று எட்டு திக்குகளிலும் சென்று வணங்குவார்கள். அவன் என் உயிர்க்கு உயிராய் என் மனத்தில் பொருந்தி நின்றான். அத்தகைய எம் தலைவன் என்றும் வணங்கிக் கொண்டிருப்பேன்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:07

சதாசிவ லிங்கம்!

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

சதாசிவ லிங்கம்!

1730. திருவருளுடன் கூடிய இரு திருவடிகள் பூமிக்கு மேலாக புகழ்ந்து பேசப்படும் பத்துக் கைகள் திசைகள் எல்லாம் பரவி எழுவதாக எங்கும் பார்க்கும் முகங்கள் ஐந்தாக சிவந்த கண்கள் பதினைந்தாக நல்ல ஒளியையுடைய் முத்தின் நி’றத்துடன் குடிய சதாசிவத்தைத் துதிப்பீராக.

1731. நான்முகன் திருமால் உருத்திரன் இவர்கட்கு மேலான மகேசன் இவர்களுக்கு மேலான ஐந்து முகங்களையுடைய சதாசிவம் விந்து நாதம் ஆதார சத்தியான குண்டலினி முடிவாக உள்ள சிவன் என்னும் யாவும் பொதுவாக சதாசிவம் எனப்படும்.

1732. சதாசிவம் என்னும் சத்தியிடம் நிவிருத்தி பிரட்டை,, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை ஆகிய கலைகள் இடம் பெறும். இந்த ஐந்து கலைகள் சார்பாக சிவசூரியன் எழும். அதன் ஒளிக்கதிர் உள்ளும் புறமும் சூழ அண்ட கோசம் நிறைந்து விளங்கும். அந்த ஓளியில் எட்டுத் திக்குகளும் மேல் கீழ் என்ற இரு திசைகளும் பொருந்தி ஒரே ஒளிமயமாய் விளங்கும்.

1733. பத்துத் திக்குகளுடன் கூடியது அண்ட கோசம். அதில் சிட்சை, கற்பகம், வியாகரணம், சந்தோபிசிதம், நிருத்தம், சோதிடம் என்னும் ஆறு சாத்திர அறிவும் உளது. அங்கு இருக்கும் யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களீன் அறிவும் உண்டு. அங்குப் பொருந்திய சரியை முதலிய மார்க்கங்களுடன் சமய அறிவும் உண்டு.

1734. சமய்த்தில் கீழ் அவத்தைகள் ஐந்து மேல் அவத்தைகள் ஐந்து உண்டு. சமயத்தில் கதிரவனின் பன்னிரண்டு இராசிகளும் உண்டு. சமய்த்தில் பெருமை உடைய சந்திரகலை பதினாறும் சொல்லப்பட்டிருக்கின்றது. அதில் காண்ப்படும் உருவத்துக்கும் காண்ப்படாத அருவத்துக்கும் இடையே சதாசிவ நிலை இருக்கும்.

1735. சதாசிவப் பெருமானுக்கு உச்சி, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்குப் பக்கம் உள்ள முகங்கள், உச்சிமுதல் முறையே வெண்பளிங்கு போன்றும் செவ்வரத்த மலரைப் போன்றும் பால் போன்றும் உள்ள இவ்வைந்து முகங்களும் எனக்கு அருள் செய்தன.

1736. சதாசிவத்திற்கு ஈசானம் முதலிய் ஐந்து முகங்கள். கண்கள் பதினைந்து, கைகள் பத்து. அவற்றில் பத்து வகைப் படைகள். இத்தகைய சதாசிவம் என் மனத்துள் புகுந்து நிறைந்து விளங்குகின்றான்.

1737. சிவசத்தி பூமியாகும். சதாசிவம் வானக் கூறாய்ப் பூமிக்கு மேலும் கீழும் பரவியுள்ள அண்ட கோள்களாகும். சத்தியும் சிவமும் மிக்குள்ள நிலைப் பெருளும் இயங்கும் பொருள் யாவும் சத்தி வடிவம். சதாசிவம் அருவம் ஆகும். இவ்வா/று சத்தியும் சிவமும் பொருந்திய தத்துவங்கள் முப்பத்தாறு ஆகும்.

1738. தத்துவம் என்பது அருவம் ஆகும். அது சரம் அசரமாய் விரிந்து நிற்கும் போது உருவம் ஆகும். உருவமாய் விரிந்தபோது சுகத்தின் விளக்கம் ஆகும். இவை அனைத்தும் எல்லாமாக விளங்கும் தத்துவம் எனப்படுவது சதாசிவமே.

1739. உள்ளத்தில் பொருந்திய சதாசிவமானவனைத் துதியுங்கள். வேறு வகையாகக் கூறும் நூல்களால் அறியப்படாமல் கடந்து விளங்குவான். தாம் மேல் ஏறுவதற்காகப் புகழும் தேவருடன் மாறுபட்டு நிற்பான். அத்தகைய இயல்புடையவன் என் மனத்தில் புகுந்து விள்ங்கினான்.

1740. கரிய நிறக் கழுத்தும், வலக்கையில் கொண்ட மழு என்ற ஆயுதமும் சுருண்ட சடையில் ஒளிரும் பிறைச்சந்திரனும் அருள் பொழியும் சிந்தையுடைய எம் ஆதியாகிய சதாசிவத்தை தெளிவுடைய என் உள்ளத்தில் தெளிந்திருந்தேன்.

1741. சீவர்களுக்கு அருள் செய்வதற்காகச் சத்தி நிற்கும் ஐந்து முகங்களைப் பற்றிக் கூறினால் வடதிசை நோக்கிய வாமதேவ முகம் சிறந்தது. இது சொல் இல்லாதது. மௌனமாக விளங்கும். கிழக்கு நோக்கிய தத்புருடமுகம் உடலில் உள்ள தத்துவங்களை இயக்குவது. சிரத்தைப் போன்றது. தெற்கு நோக்கிய அகோரம் தலையின் முடியில் வடகீழ்த்திசை நோக்கி விளங்குவது ஈசான முகம்.

1742. நாண் போனற ஈசானத்தைத் தலையின் நடுவில் சுட்ட வேண்டும். நாணுவின் தற்புருடத்தை முகத்தில் சுட்ட வேண்டும். காணும் அகோரத்தை இதயத்தில் சுட்ட வேண்டும். மாட்சிமையுடைய வாமத்தைக் குறியில் பொருந்த்த வேண்டும். சத்தியோசத்தை நல்ல அடிகளில் பதிக்க வேண்டும்.

1743. இதயம். தலை, முடி, கவசம், கண் ஆகியவை அங்கங்களாகும். இவற்றைக் குறிக்கின்ற மந்திரங்கள் வஞ்சனையற்ற சீவர்களுக்கு அறிவு விளக்கம் தரும். சுத்த மாயை, இவற்றின் நிறம் பச்சை, உடல் எல்லாம் ஒளி மயமானபோது சிவந்த ஒளியில் குண்டலினி சத்தி மின் ஒளிபோன்று விளங்குவாள். சதாசிவத்திடம் உள்ள பத்துப் படைக்கருவிகளும் உதய் சூரியனைப் போன்று ஒளி மயமாய் விளங்கும்.,

1744. இருதய மந்திரம் இறைவனுக்கு ஞான சத்தியாகும். சிரசு மந்திரம் வானத்தில் விளங்கும் பராசக்தி யாகும்.. சிகா மந்திரம் ஆதி சத்தியாம். அழகுடைய கவச மந்திரம் பல நிறங்களையுடைய இச்சா சத்தியாகும். நேத்திரம் கிரியா சத்தியாம்.

1745. குண்டலினி சக்தி நாற்கோண்மான மூலாதாரத்தில் உள்ளபோது சலதாரையை நோக்கியதாக உள்ளது. குண்டலினி கழுத்தை அடைந்தபோது உறக்க நிலை ஏற்படும். அது நெற்றியை அடைந்தபோது நீரோட்டம் போன்ற உணர்வாய் விளங்கும். இப்படி ஓலி வடிவாய் விளங்கும் சத்தி வடிவே சதாசிவம்.

1746. பெருமையுடைய சதாசிவத்தை எவ்வ்வளவு நேரம் தொழுதாலும் அவர் பஞசப் பிரம்மாகவே விளங்குவார். அவர் மூலவாயுவாய் எழுந்து ஆதாரங்கலை எல்லாம் கடந்து ஊர்த்துவ சக்கர தளத்தின் மீது சென்றபோது ஒன்பது நிலைக்ளிலும் பொருந்தி விளங்குவார்.

1747. உடம்பின் உள்ளும் அதைக் கடந்தும் உயிருடன் உடனாய்ப் பொருந்தியிருப்பது எப்போதும் எம் இறைவனுக்கு இயல்பு ஆகும். அந்த உணர்வு உண்டான போது சிவனின் திருவடியான சூரிய சந்திர கலையில் திருந்தித் தலைக்குமேல் செல்ல என் உள்ளத்துள் தியானித்து நின்று தொழுதேன்.

1748. உலகு முழுவதும் ஒளிப் பொருளானாய் விளங்கும் பரசிவத்தை அவன் அருளால் உணர்ந்தேன். அப்பொருமானைச் சீவர்களாகிய நாம் உய்யும் படி பூமி தத்துவத்திற்கும் கொண்டு வந்தேன். எனது மனம் என்ற கோவிலில் புனிதனான இறைவனைக் கூடினேன். அத்தூயமையே உருவாய் உள்ளவன் நாத வடிவாய்க் காட்சி தந்தான். சிவக்கதிரவனைப் பாட்டால் நான் பணிய அவன் ஒளியால் என்னுடன் கூடியிருந்தான்.

1749. அக்கினி மண்டலம் கதிரவன் மண்டலம் திங்கள் மண்டலம் என்பனவற்றுள் அக்கினி ஒளியுண்டாக ஒன்பது பேதத்தில் நடுவில் உள்ள சதாசிவம் பதினான்கு உலகங்களையும் தாங்கி நிற்கும். அந்தச் சதாசிவமே ஆதியாகவும் அந்தமாகவும் உடலில் சந்திர மண்டலம் விளங்க உதவும்.

1750. இயங்கும் ஒளியின் உடம்பு சிவலிங்கமாய்த் திகழும். அந்த உடம்பே சதாசிவமாய் அமையும். அந்த உடம்பே சதாசிவம் பொருந்திய சிவானந்த நிலையாகும். அந்த உடம்பே எல்லாவற்றுக்கும் மேலான சிவமாகும்.

1751. மேதா கலையான அகரத்தை சிவம் என்று எவரும் அறியமாட்டார்.. உகாரத்தால் குறிக்கப்படும் சத்தி எல்லாப் பொருளிடத்தும் கலந்து நிற்கும். இத்தகைய சிவமும் சத்தியும் பொருந்தி உலகமாய் இச்சிவசத்தி தலையைத் தாண்டியபோது நாத ஒலி ஏற்படுமாறு செய்தது.

1752. சதாசிவ லிங்கத்துக்கு பீடம் ஓங்காரம். இலிங்கத்தின் நல்ல கண்டம் மகாரம்.. இலிங்கத்தின் வட்டமாகிய பகுதி உகாரம். சிவலிங்கத்தின் மேற்பகுதி அகாரம். விந்து, நாதம் ஆகும்.

#####

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

#####

அண்டலிங்கம்!

1712. உலகத்திற்கு காரணமான இலிங்கம் என்னும் பெயரை உடைய சிவத்தை யாரும் அறியார். எட்டுத்திக்கிலும் பரவியிருப்பது உலக லிங்கமே ஆகும். அறுபத்து நான்கு கலைகளையுடைய பிரண்வமும் இலிங்கமாகும். உலகம் முழுவதும் காரண நிலையில் சிவத்திடம் உள்ளதால் அதுவே சிவஇலிங்கம் என்ற வடிவம் ஆகும்.

1713. உலகத்தை படைக்க எண்ணிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சத்தியின் துணைக் கொண்டு இவ்வுலகத்தை தோற்றுவித்தான். குண்டலினி சத்தியின் ஆற்றலால் உலகு வடிவாய்க் காட்சி தருகின்றது. சிவசக்தியால் அவை உலகில் வேறு வேறு அறிவு பொருந்தியவாய் விளங்கும்.

1714. போகத்தையும் வீடு பேற்றையும் அதற்உரிய ஞானத்தையும் அதன் பயனான இன்பத்தையும் உடலையும் நிலம் முதலிய முப்பதாறு தத்துவங்களையும் கடந்து ஒன்றாக நிற்கும் நிலையையும் அருள்பவன் சதாசிவன். ஆகமங்க?ளால் உணர்த்தப் பெற்ற ஆறு அத்துவா மூர்த்தி சிவமே ஆகும்.

1715. எண்ணில்லாத தேவர்கள் என் இறைவனை வழிபட்டனர். நறுமணத்தை தாங்கி வரும் தென்றலைப் போன்ற வள்ளல் என்று வாழ்த்தினர். மகிழ்வுடன் ஆரவாரம் செய்தனர். ஆயினும் அவன் அண்டங்களைக் கடந்து நின்று காக்கின்/றான் என்ற உண்மையை அவர் அறியார்.

1716. ஒளிமிக்க சுடரான தீயும் நான்முகனும் திருமாலும் தேவகுருவும் ஒளிவடிவான கதிரவனுடன் இந்திரனும் ஆகிய இவர்களிடம் கண்ணின் ஒளிபோல் கலந்து நின்றும் மற்றத் தேவர்களிடம் உணர்வைப் பெருக்கும் சந்திர ஒளிபோலும் எல்லா இடங்களிலும் சிவம் நீக்கம் இல்லாது நிறைந்து விளங்கும்.

1717. சிவபெருமான் ஸ்தாபித்த இலிங்கத்துள் நின்றும் அருள் வல்லவன். அப்பெருமான் மேன்மையுடைய ஞானாகாயத்துடன் உள்ளவன் என்று எண்ணி வழிபடுபவர் இலர். ஞானாகாயத்துள் இருக்கின்றான் என்பதை அறிந்து வழிபடுபவர்க்கு ஆறு ஆதாரத்திலும் விளங்கும் குண்டலினியாய் அவன் விளங்குவான்.

1718. மிகவும் சிறந்த சிவாலாயத்தைப் பற்றி அறிந்து கொள்பவர்க்கு கருவறையின் மேல் விளங்கும் விமானமே பருலிங்கம். அதனுள் உள்ள சிவலிங்கம் நுண்மையுடைய லிங்கமாகும். இலிங்கத்திற்கு முன் உள்ள பலிபீடமே பத்திரலிங்கம்.

1719. முத்துடன், மாணிக்கமும், பவளமும் செதுக்கப்பட்ட மரக்கொம்பு கல் திருநீறு, மரகதம், சிவாகமம், சாதம், அரிசி என்பன்வையும், மலர், மணல் என்பவையும் சிவலிங்கம் அமைத்தற்குரியவையாகும்.

1720. இறுகிய தயிர், தூய நெய், பால், பசுஞ்சாணம், விளக்கிய செம்பு, அக்கினி, பாதரசம், சலம், நன்கு வெந்த செங்கல், அழகிய இலவம், பொன் என்பனவற்றால் அழகு விளங்கும் சிவலிங்கமாகக் கொள்க.

1721. வளமையுடைய படிகலிங்கம் அந்தணர் பூசை செய்யத் தக்கது. பொன்னால் ஆன் லிங்கம் மன்னர் பூசிக்கத் தக்கது. மரகதலிங்கம் குறைவற்ற வருவாயை உடைய வாணிகர் வழிபடுதற்குரியது. தொண்டு நெறியையுடைய வேளான் தொழில் உடையவர் வழிபடற்கு வாணலிங்கம் உரியது.

1722. சிவனை இலங்கத் திருமேனியில் உணர்ந்தவன் அப்பெருமானின் எங்கும் கலந்துள்ள தன்மையை ஆராய்ந்து எவ்வகையாலும் உணரமுடியாது நின்ற இறைவன், உண்மை அறிவால் மண், நீர், தீ, காற்று, வான், கதிரவன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் கலந்திருப்பதை உணர்ந்தபோது என் உடலைக் கோயிலாக கொண்டு விளங்கினான்.

1723. முன்பு ஈட்டிய பாவங்களை நீக்குபவன் அனைத்தும் ஒடுங்குவதற்கு இடமாய் நின்ற புண்னியன். இத்தகைய சிவமே அகன்ற பிரபஞ்சமாய் அவற்றுள் மற்றவர் அறியாமல் கலந்திருக்கும் அவனை நாடியவர்க்கு அழியும் உடலுள் ஒளி செய்யும் பொருட்டு இடமாக கொண்டிருப்பவன் ஆவான்.

1724. ஆறு ஆதாரமாலையை அணிந்திருக்கும் திருவடி நிலம் ஆகும். ஒளியுடைய கங்கையாற்றை அணிந்த திருமுடி வானம் ஆகும், இவன் யாவற்றுள்ளும் கலந்திருக்கும் முறையில் அவனது உடம்பு வானமானது. இதுதான் ஆதிபகவானான சிவம். அண்டத்தை திருமேனியாகக் கொண்டு விளங்கும் தன்மையாகும்.

1725. நிலமாய் உள்ள சத்தி பீடத்தின் மீது விளங்கும் இலிங்கம் வானை அலாவி நிற்கும். அலை வீசும் கடலே திருமஞ்சன சாலையாகும். மலைமீது விளங்கும் மேகமே திருமஞ்சன நீராகும். வானத்தின் சிறு ஒளியாய் ஒளிரும் விண்மீன்களே அண்டலிங்கத்துக்குரிய மாலையாகும். அளவிடுதற்கு அரிய சிவத்துக்கு ஆடை எட்டுத் திசைகள் ஆகும்.

####

பிண்டலிங்கம்!

1726. மக்கள் உடலின் வடிவமே சிவலிங்க, ஆகும். மனித உடலும் உடலைச் சூழ்ந்துள்ள பகுதியும் அறிவாலயம். மக்கள் உடல் சதாசிவத்தின் வடிவத் திருமேனி. மக்கள் உடலில் உள்ள அசைவு எல்லாம் கூத்தப் பிரானின் கூத்தே ஆகும்.

1727. ஒன்று கூடும் முறையில் நிலம், நீரிலும், நீர் தீயிலும், தீ காற்றிலும், காற்று வானத்திலும் ஒடுங்கித் தூயமை பெற அப்படியே பூதங்களுக்கு காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து தன் மாத்திரைகளும் ஒடுங்கும்படி வன்மையை அருளும் ஐம்பூதத் தலைவன் சிவத்தை வணங்குங்கள். அவ்வாறு செய்யின் உடல் அழிந்தாலும் அழியாது மேலும் நுண்ணுடலில் நிலைபெற்று விளங்கும்.

1728. உடம்பு உண்டான போதே உடலுள் குடி புகுந்த ஐபூதத் தலைவர்களும் அவரவர் தொழிற்படும் நுழைவாயில் நின்று உயிருக்கு வேண்டிய அறிவை அளித்தருள்வர். அன்னை வீட்டில் புகுவது போல் விருப்பமுடன் தலைவன் என் உள்ளத்தில் புகவும் அந்த வாயில்களைத் தன்னுடையதாக்கிக் கொண்டு சிவம் ஆண்டருளினான்.

1729. பெருமையுடைய இறைவன் இவ்வுடலை அவன் விளங்குவதற்கு ஏற்ற கோயிலாகக் கொண்டான்,. நான்கு இதழ்களையுடைய மூலாதாரச் சக்கரத்தை இடமாய்க் கொண்டான். இவ்வுடலின் பத்து நாடிகளின் செயல்களையும் தான் ஏற்றுக் கொண்டான். புலன்கள் செயல் படாதவாறு வென்று வாயில் கொண்டான்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 11:56

ஆறு ஆதாரம்!

Written by

ஏழாம் தந்திரம்!

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

####

ஆறு ஆதாரம்!

1704. நான்கு இதழ் தாமரை வடிவான மூலாதாரம், ஆறு இதழ் தாமரை வடிவான சுவதிட்டானம், பத்து இதழ் தாமரை வடிவமான மணிபூரகம், பன்னிரண்டு இதழ் தாமரை வடிவமான அநாதகம், இவற்றுக்குமேல் இருக்கும் பதினாறு இதழ்தாமரை வடிவான விசுத்தி என்ற இந்த ஐந்து ஆதாரங்களையும் தரிசித்தபின் இரண்டு இதழ் தாமரை வடிவான ஆஞ்ஞையில் பழம் பொருளாகிய சிவத்தின் திருவடியைக் காணலாம்.

1705. நாத தத்துவத்தில் பன்னிரு கலைகளுடன் கூடியது சூரிய மண்டலம். மேதை முதலிய பதினாறு கலைகளுடன் கூடியது சந்திரமண்டலம். மேதை முதலான கலைகளில் நாதாந்தத்திற்கு மேல் விளங்குபவள் பராசக்தி. அறிவான பிரசாத நெறியில் வேற்றுமை இல்லாத அறிவால் சென்றால் மேதை முதலான ஆதாரம் கடந்த நிலையில் சிவன் விளங்குவான்.

1706. பிரசாத நெறியில் நின்று மேல் கீழ் என்ற பாகுபாட்டைக் கடந்து ஒரே ஒளியாய் காணும்போது அவனே தான் ஆன இறைமைக் குணங்கள் ஆறும் எங்கும் பரவிய பரம்பொரூள் கார்மேகம் தங்கும் கற்பக மரத்தைப்போன்று அருள் பொழிவான்.

1707. ஆறு ஆதாரங்களைத் தூய்மை செய்வதால் நாடி தூய்மை அடையும். மேலும் மேதை முதலாக உள்ள பதினாறு கலைகளின் முடிவில் வானத்தின் ஒளி ஏற்படும். அறிவாலயமான சாதகனின் ஆன்மாவில் வெளி நோக்குடைய ஐம்பொறிகள் அந்தக்கரணங்கள், புத்தி என்பன அவற்றின் கீழே இழுக்கின்ற இயல்பை விட்டு நிற்கும். இவ்வாறு நிற்பது சகமார்க்கம்- தோழமை நெரீயாகும்.

1708. மேதை முதலிய பதினாறு கலைகளில் பிரணவ தியானத்தில் நின்று தூண்டினால் குண்டலினி சத்தி முறையே மூலாதாரம் முதலிய இடங்களிலிருந்து மேலே சென்று அத்துவாவை உண்டாக்கும்.. வீரியத்தை இடமாகக் கொண்ட கலையை மடை மாற்றி மேலே ஏறச் செய்யின் ஆறு ஆதாரங்களிலும் ஒளி பெருகும் உடலில் இன்பம் விளையும்.

1709. ஆறு ஆதாரங்களை உடைய உடம்பில் மேலே கூறிய வண்ணம் அந்த அறு ஆதாரங்களை அறிந்து தியானம் செய்து மேல் ஏறுங்கள். அந்த ஆதாரங்களில் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் ஐம்பதையும் கடந்தபோது பொருந்திய ஆதாரமாக உள்ள ஓர் எழுத்து நாதமயம்னான ஓம் என்ற பிரணவம்.

1710. பருமையான உடலும் பிரிகின்ற அவ்வுடலுடன் போகும் நுணுடலும் பொருந்துவது நுண்மையாய் நாதத்தில் ஒடுங்கி விரியும் ஐம்பது எழுத்துக்களாலும் தத்துவங்களாலும் ஆகும். பிறவிக்கு ஆகும் உடம்புக்கு ஆறு ஆதாரங்களும் அவற்றை எல்லாம் கடந்த பிரணவமும் பொருந்தி அமையும்.

1711. இதயத் தாமரை மேலாகப் பதினாறு இதழ்களுடன் கூடிய விசுக்தியான தாமரை கழுத்திடத்து உள்ளது. அங்குதான் தூய அறிவான ஆன்மா சிவானந்தமே தனது வடிவாகப் போய் எங்கும் பொருந்திய அறிவாய் நீக்கம் இல்லாது நிறையும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931175
All
26931175
Your IP: 44.200.230.43
2024-03-28 22:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg