gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

ஒன்பதாம் தந்திரம் (18)

வியாழக்கிழமை, 16 July 2020 12:35

சர்வ வியாபி!

Written by

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#####

சர்வ வியாபி!

3026. ஞானப் பயிற்சியால் சிவானுபவம் பொருந்தும். இதுவன்றி ஆன்மா ஆராய்ச்சியால் பெறும் அறிவையும் மாயையின் சேர்க்கையால் பொருந்திய பெரிய உடம்பையும் தன் வயமாய் அடையும்படி செய்யும். அப்போது தன் விடய வாசனைகள் கெடும். பின் ஆன்மாவின் நிறைவுத் தன்மை பொருந்தும்.

3027. யான் அறிந்துள்ள சிவபெருமான் எங்கும் நீக்கம் இன்றி நிறைந்திருத்தலால் சென்று அடைய வேண்டிய இடம் இல்லை. தலையின் மீதுள்ள வான் மண்டலத்தை அறிந்து வழிபடில் அது சிறந்து விளங்கும். அப்போது உடலின் தன்மையை அறிந்து அங்கு விளங்கும் ஒளிமிக்க சுடரையும் தன் உண்மை நிலையை அறிந்தவர் எங்கும் போய் மீண்டு வரும் ஆற்றலைப் பேறுவர்.

3028. கடலில் உண்டாகும் அலை பொன்ற ஓயாத துன்பம் வரும் தன்மை கொண்டது உலக வாழ்வு. இதில் உடலில் வாழும்போது சீவர்களின் உள்ளத்தில் விளங்கும் ஒளியை நாடி அங்கு ஒளிக்குள் விளங்கும் சிவத்தைக் கடலினது அலை போல வரும் துன்பத்திலும் கண்டு கரை சேர முடியும்.

3029. தேவ தேவனான இறைவன் சந்திரன் சூரியன் அக்கினி ஆகிய மூன்று சுடர்களுக்கும் ஒளி தருவனவாய் அவற்றுக்கு உடலாய் விளங்குபவன். முன் சொன்ன சந்திரன் சூரியன் அக்கினியைக் கடந்த பேரொளியாக மாறுபாடுடைய உலகம் எல்லாம் அவன் பரிவுடன் சீவர்களைத் தொடர்ந்து செல்லும் நுண்மையன் ஆவான்.

3030. உலகம் இன்பம் தருவது என்ற உறுதியால் பெற்ற வினையில் அழுந்தித் துன்பப்பட்டு முடிவாகத் தன் அடியவரை இறைவன் காப்பான் ஆவான். சிறுதிசையில் ஒன்றான ஈசான திக்கில் உள் ஒலியாய் விளங்கும் அற்புதக் கடவுளை அடையப் பெற்றால் தலையின் மீது விளங்கும் பெரும் பேரொளியாக அவன் விளங்குவான்.

3031. பற்றப்படும் பொருளகளும் மிகவும் மேலானது சிவமே. அது எங்கும் நிறைந்த சந்திரன் சூரியன் அக்கினி என்ற மூன்று ஒளியாய் நெற்றி நடுவில் நினைப்பவர்க்குத் தன் இருப்பை உணர்த்தி நிலை கொள்ளும். பின்பு நினைப்பவர் வண்ணமாய் அவன் விளங்குவான்.

3032. சிவமான சீவன் ஒளி உருவம் உடைய தேவன். அவன் மேம்பாடு உடைய பத்துத் திசைகளிலும் உள்ளாவரை ஏவல் செய்யும் ஆற்றல் உடையவன். விரிந்த நீரால் சூழப்பெற்ற ஏழ் உலகங்களிலும் நிறைந்திருக்கும் ஆற்றலை அவன் பெறுவான். மேலும் அவன் உலகம் எங்கும் அறிந்து கூறவல்ல நாவன்மை கொண்டவன் ஆவான்.

3033. கூரிய பார்வையுடைய கருடனைப் போல் ஏழ் உலகத்தையும் கூர்ந்து பார்த்துக் காக்கின்ற உலக நாதனும் அங்கே அடியார் படும் துன்பத்தைப் போக்கும் மலமில்லாதவனும் பிறப்பு இல்லதவனும் ஆகிய எம் தலைவன் எங்கும் போவதும் வருவதும் எல்லாவற்றோடு புணர்தலிலும் வல்லவன்.

3034. சிவ ஞானியரிடம் விளங்கும் சிவன் ஒளிக்கதிர்களை உடையவன். அவனது உடல் செம்பொன் போல் மிளிரும் அவன் உலகத் தொடர்பு இல்லாதவனாயும் எல்லா உலகங்களிலும் தொடர்பு கொண்டும் விளங்குவான். அவன் எங்கும் விலகி நிற்பவன் அல்லன். பிறப்பிலாத சிவன் ஏழுலகங்களிலிருந்து நீங்கினவனாயும் கலந்தவனாயும் விளங்கினான்.

3035. சிவ ஞானியரிடம் பொருந்திய உணர்வும் உயிரும் சிவனே ஆகும். பொருளகளுடன் கூடி அறிகின்ற அறிவும் அதனால் அறியப்படும் பொருள்களும் சிவனே ஆவான். அங்ஙனம் தொடர்ந்து வரும் அவனை எண்ணத்தில் அகப்படுத்த முடியாது. அவன் கொத்தாயுள்ள மலர்களின் நறுமணம்போல் எவனிடத்தும் பரவி அருள்பவன் ஆவான்.

3036. எம் தந்தையான சிவபெருமான் கல்வியைக் கற்று அடைய வேண்டிய எதையும் வேண்டாதவன். அவன் உயிர்களுக்கு அளிக்க வேண்டிய நல்ல ஞானத்தை முழுவதும் உடையவன். விலை மதிக்க இயலாத அந்தணர் கூறும் வேதத்தில் உள்ள பல பொருளகளிலும் நிறைந்து நிற்கின்றான்.

3037. சிவன் வான்மயமாய் ஏழு உலகங்களுக்கும் அப்பால் உள்ளவன். அவன் பூமி மயனாய் அதைச் சூழ்ந்துள்ள ஏழ் கடல்களுக்கும் குளிர்ச்சியைத் தருபவனாய் அக்கடலைப் போன்ற தன்மையுடைய வலக்க்ண்ணின்மேல் விளங்குபவனாய் உயிருடன் கலந்துள்ளான்.

3038. சிவபெருமான் நான்முகன் திருமால் ஆகியவருடன் தானே நிலைபெற்று நின்றான். அவனே நிலத்தின் இயல்பால் கீழும் வானத்தின் இயல்பால் மேலுமாய் நின்றவன். அவனே உய்ர்ந்த மேருமலையாகவும் ஏழு கடலாகவும் உள்ளான். அவனே சாதனையாளர்க்கு வலமான கனியைப் போல் பயன் அளிப்பவனாயும் இருக்கின்றான்.

3039. எம் இறைவன் எல்லா உலகங்களுக்கும் தலைவனாகிய் புண்ணிய மூர்த்தியாவான். அவனே எங்கும் உள்ள உயிர் வர்க்கத்தைச் செலுத்துபவன். அவனே எண்ணரிய உயிர்க் கூட்டமாகவும் உள்ளான். இத்தகைய இயல்புடைய சிவனையே தலைவன் என்று சிவஞானையர் விரும்பி நின்றனர்.

3040. சீவரின் உடம்பின் உள்ளே உள்ள கெடாத உயிரும் அண்டகாயத்தில் விளங்கும் பிராணனும் விரிந்த கதிர்களை உடைய சந்திரனும் பூமித் தானத்தில் பொருந்தியிருக்கும் அபானனுமாய் ஆகி நிற்பவன். கண்ணின் பார்வையில் விளங்கும் சிவமே ஆவான்.

3041. தியானத்துக்குரிய பிரணவ்த்தைக் குருகாட்டிய வழியே சாதனையும் அச்சாதனையின் வழியே செல்லும் வகையும் தோற்றுவித்ததருளிய பரமசிவனை அகக்கண் கொண்டு காண்கின்ற தன்மையில் அப்பொருள் சீவனது உடம்பில் பொருந்தி அதன் இயலபை மாற்றி ஒப்பில்லாத ஊதியப் பொருளும் ஆவான்.

3042. சுற்றிலும் இருக்கின்ற எட்டுத் திக்கும் அண்டமும் பாதலமும் தோன்றித் தன்னிடம் ஓங்க மஞ்சள் ஒளியிலே அறிவின் வடிவாக விளங்கும் சிவபெருமான் இத்தன்மையுடன் நுண்மையாய் எல்லாத் தத்துவங்களிலும் கலந்து விளங்குகின்றான்.

3043. பலவகைப்பட்ட தத்துவங்களாய்ப் புவியில் உள்ளவர்க்கு விளங்கும் இறைவனின் உண்மை இயலபை அறிபவர் இல்லை. தொலைவில் உள்ளவனாகவும் அண்மையில் இருப்பவனாகவும் மாறுபாடு அற்றவனாகவும் உயிர்களுக்கு இன்பம் செய்பவனாகவும் உள்ள அநாதியானவன் எம் சிவன். அவன் பல தத்துவங்களாக இருப்பதல்லாமல் யாவற்றையும் கடந்தும் உள்ளான்.

3044. சிவன் எல்லா உயிர்களின் அறிவுக்கு அறிவானவன். மிகவும் சிவனே தொன்மையானவன். அங்ஙனமாயினும் அவன் நிற்கும் நிலையைச் சீவர்களால் எவ்விதத்தாலும் அறியப்படாதவன். பொதுவாக எட்டு உலகங்களிலும் எம் தலைவனான நந்தியம் பெருமான் ஒவ்வொரு சீவனையும் அறிய வல்லவன்.

3045. நிலம் நீர் நெருப்பு வாயு விண் ஆகிய ஐந்து பூதங்களாகவும் அவற்றைத் தாங்கி நிற்கும் ஆதாரமாகவும் உடலில் பொருந்தும் ஒளியாகவும் உள்ளான். அவனது பெயரும் பராபரன். அணுவடிவான எம் தலைவன் சகல தத்துவங்களுடன் கூடியவனாய் உள்ளவன் அழிவு இல்லாதவன்.

3046. திருமூலர் அருளிய இம்மூவாயிரம் பாடல்களும் அவர் அருளிச் செய்த முந்நூறு மந்திரப் பாடல்களும் அவர் அருளிய முப்பது உபதேசப் பாடல்களும் அவர் அருளிச் செய்த இம்மூன்று வகைப் பாடல்களும் ஒரு பொருளையே விளக்குவனவாம்.

3047. சிவ குருநாதனான நந்தியின் திருவடி வாழ்க. மலக்கட்டினைப் போக்கியருளிய அவனது திருவடி வாழ்க. மலம் அறுத்தலோடு உண்மையான ஞானத்தை அருளிய திருவடி வாழ்க. மலமற்றவன் திருவடி வாழ்க.


திருச்சிற்றம்பலம்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:34

தோத்திரம்!

Written by

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

#####

தோத்திரம்!

2982. ஊனக் கண்ணுக்குப் புலப்படாத இறைவன் என்ற கள்வனை அடைய மனம் என்ற தேரில் ஏறி அலைந்த நாட்டின் இயல்பை அல்லது கணக்கைச் சொல்ல முடியாது. புலம்புவர் யானும் அப்படியே பல இடங்களுக்கும் போய் அலைந்தேன். காணாமல் வருந்தினேன். இத்தகைய என் இறைவனை மின்னல் போல் தோன்றி அழியும் இந்த உடலான நாட்டில் விளங்குவதைக் கண்டேன்.

2983. நிலையான தலையின் மீது சாத்துவீக அகங்காரத்தின் உச்சியில் நாத கீதத்தில் விளங்கியிருந்தவர் எவர் என்றால் பல காலமாக முதல்வனான சிவனின் திருப்பெயரை வணங்கி வழிபட்டவர்கள் அவரது பெருமையை உணர்வீராக.

2984. சிறந்த ஆணி முத்தைப் போன்றவனும் தோன்றும் இளங்கதிரவனைப் போன்றவனும் பல வான மண்டல வாழ்நர் வழிபடும் இறைவனும் ஆகிய் என் தந்தையைக் காணாமல் புலம்பும் என்னை ஒரு பித்தன் என்று உலகத்தார் கூருகின்றனர்.

2985. புண்ணியம் செய்தவரால் உணரப்படும் சிவக்கதிரவன் என்னிடம் போந்து திகழ்ந்தான். அங்ஙனம் புகுந்து நின்றவன் எம் பேரறிவாளன். அப்பொருமான் அடியார்கள் உள்ளத்தில் விளங்கிக் கொண்டிருந்தான். அவ்விதம் என்னிடம் புகுந்து நிற்கின்ற இறைனை நான் போற்றி வழிபடுகின்றேன்.

2986. சிவக்கதிரவன் ஊனக் கண்ணினால் காணக் கூடாதவன். தலையில் உள்ள சகசிரதளத்தில் விளங்குபவன். ஞானக் கண்ணால் சிந்தை நாடினால் வெளிப்பட்டுத் தோன்றுவான். அற ஒழுக்கத்தில் நின்றவர் மன மண்டலத்தில் எழுந்தருளியிருப்பவன். நானோ அவனை நாதமயமாக உணர்ந்து வழிபடுகின்றேன்.

2987. சிவபெருமானை அவனுடைய ஆயிரம் திருப்பெயர்களால் பரவி வழிபாடு செய்யுங்கள். ஒராயிர வகையான சுகத்தை அடைவீர்கள். தலையின்மீது மனத்தை வைத்து ஞான சாதனையைச் செய்பவர். ஆயிரக்கணக்கான ஆசைகளினின்று நீங்குவர்.

2988. நான் சிவபெருமானை ஞானத்தால் புகழ்ந்து போற்றுகின்றேன். தலையின்மீது விளங்கும் விந்து நாதங்களே அப்பெருமானின் திருவடிகள் என்?று தெளிந்தேன். ஆகவே சிவயோகத்தை யாவரும் அறியுமாறு பறையறைகின்றேன். அத்திருவடிகளே எம் தலைவன் என்று போற்றி வணங்குகின்றேன்.

2989. பலவகைப்பட்ட தொண்டுகள் செய்து சிவனை நாடுங்கள். உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களின் வழியே நடு நாடி வழிபோய் வான் மண்டலத்தார் வணங்கி வழிபட ஒளிநிலை பெறலாம். பெற்ற பின்பு சிவானந்தத்தை வேண்டும் அளவு இலயம் அடையலாம்.

2990. சிவஞானியர்களின் உள்ளத்தில் அவர் வேண்டி நிற்கும் அரிய பொருளான சிவன் போந்து நிலை கொள்வான். ஆனால் இந்திரர் முதலிய அடியார் விரும்பி வேண்டினாலும் அவர்களுக்கு அழகிய தேவ மங்கையரின் தேவகானம் கிட்டுமே அல்லாமல் தெவர் உலகத்துக்கு அ[ப்பாற்பட்ட சிவகதி கிடைக்குமோ கிடைக்காது.

2991. சேற்றில் கலங்கியுள்ள நீரின் தன்மை தெரியாதவாறு போன்று மக்கள் உடல் மயமான எண்ணத்தால் கலக்கம் அடைந்து இறைவன் இன்ன இய்ல்புடையவன் என்று அறியார். குடித்தற்குரிய நீரைக் குளத்தினின்றும் முகந்து ஒரு குடத்தில் வைத்துத் தெளியச் சொல்வதைப் போல் சிந்தையை சிவத்தில் வைத்துத் தெளிவுபடுத்தின் சீவன் சிவம் ஆவான்.

2992. உண்மைத் தவத்தில் விளங்கும் சிவபெருமானை விரும்பும் ஒருவர்க்கு உள்ளங்கையில் பொருந்திய நெல்லிக்கனி போல் அவன் விளங்குவான். ஆதலால் தூய்மையானவனும் துய நெறியாயும் விளங்கும் தேவதேவனை விரும்பினேன். அவனிடம் பொருந்தினேன். உலகைக் கடந்து நின்றேன்.

2993. அளவு படுத்திக் கூற இயலாத புகழை உடைய ஞானத்தைப் பெற்றுத் தத்துவக் கூட்டங்களைக் கடந்து நின்றேன்.. ஐயப்பாட்டு எண்ணம் என்னிடம் இல்லாததால் சிவ வடிவம் பெற்றேன். இருளான மலங்களினின்றும் நீங்கி நின்றேன். அப்போது மூலாதாரத்தில் உள்ள அக்கினி தலையின்மீது ஒளிமயமான புண்ணிய மூர்த்தி பொருந்தி உடல் வேறு உடலையுடையவன் வேறு என்று வகைப்படுத்தி உண்ர்த்திய வள்ளாகவும் உள்ளான்.

2994. வள்ளல் தனமை உடையவர்க்கு எல்லாம் மேலானவனும் ஒளி மண்டலத் தலைவனும் ஒளிக்கதிர்க் கற்றையான சடையையுடைய நாத தத்துவ முதல்வனும் ஆகிய சிவனை வஞசத் தன்மையுடைய உலகினர் கண்டு விடுவார் என்று அவன் அவர் உள்ளத்தில் மறைந்திருந்து ஆட்கொள்வான்.

2995. திருவடியை அளித்து ஆண்டு கொண்ட இறைவனை நாள்தோறும் வழிபாடு செய்து சன்மார்க்கத்தில் நின்றவாறு தீய குணத்தையும் தீய செயலையும் ஒழிக்கும் சிவனிடம் நானும் ஒளியுடைய நோக்குடன் உள்ளத்தையும் வைத்து இவ்வுலகப் பற்றை விட்டு நின்றேன்.

2996. மனம் பொருந்திச் சிவத்தின் திருவடியை வணங்க வல்லார்க்கு உலகப் பற்றை விட்டு அவர்கள் விரும்பினால் அவனுடைய அடிகளே வீரர்கள் போய்ச் சேரும் சொர்க்க உலகமாகும். திருவடிப் பேற்றை அடைவதே புண்ணிய உலக்த்தை அடைவதாகும். திருவடி உணர்வால் திருந்தியவர்க்குத் தலையின் மீது விளங்கும் பரவிந்து மண்டலமே பெருமையுடைய தீர்த்தம்.

2997. இந்த உடலைச் சூழ்ந்துள்ள மன மண்டல இருளைப் போக்கியருள் செய்தான். தனக்கு ஓர் உடல் இல்லாமல் தனித்து நிற்கும் அறிவொளிமயமான சிவகுருநாதன் சீவரிடம் பொருந்திய அஞ்ஞானமான கனியைச் சுவைத்து ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். சிவானந்தத்தை அருளும் சோதியைப் பற்றி நின்றேன்.

2998. அறிவாகாய ஒளியே உயிர்களின் தலையெழுத்து வண்ணமாய் ஆவது. அதுவே தேவர் வாழும் தலம். அங்குப் பரவி ஓடும் வான் கங்கையும் உள்ளது. வணங்குவதற்குரியது அதுவே. பழைய வினைக் கூட்டங்களை அழிக்கும் இடமாகும். அதுவே அருட் சத்தியைத் தாண்டிய இடமாகும். உலகைக் கடந்து நிற்கும் முடிவு நிலையும் அதுவே ஆகும்.

2999. அறிவாகாய ஒளியில் மேல் உள்ள இடம் தேவர் இனத்தவர் உள்ளது. அதன் கீழ் உள்ள இடம் மாட்சிமையுடைய தவத்தினர் நிலையாகும். துன்பத்தை அனுபவிக்கும் மனிதரின் நிலை அதன் கீழதாகும். அறிவானந்த சத்தியானது வில்வமாலையால் அலங்கரிக்கப்பட்ட சடையுடைய சிவத்துடன் அங்குப் பொருந்திய அரிய உயிர்க்கு வேண்டிய போக போக்கிய நியதிகளைச் செய்யும்.

3000. சூழ்ந்திருக்கும் கருங்கடல் நஞ்ஸை உண்டு கழுத்தில் அடக்கியவன். ப்தினான்கு உலகுக்கும் கருவாய்ப் பிறப்பில்லாதவன் ஆவான். அவன் ஆழ்ந்துள்ள சுனையும் காடும் உடைய கயிலை மலையில் வீற்றிருப்பவன். அவனே வாழ்வை நல்கும் ஐந்தெழுத்தில் விளங்குபவன்.

3001. உலகத்து உயிராகவும் மண்ணாகவும் உயர்ந்த காற்றாகவும் கதிரவனாகவும் திங்களாகவும் அக்கினியாகவும் ஆதியாகவும் உள்ள பெருமான் பெரிய மேகம் பொருந்தும் வானமாகவும் நீராகவும் ஆகி விளங்குகின்றான். பின் அவற்றை அழிப்பவனாகவும் திக்குப் பாலர்க்குத் தலைவனாகவும் உள்ளான்.

3002. அக்கினி கதிரவன் என்பவற்றின் தனமை அறிந்து இறைவன் அவற்றுள் பொருந்தியிருப்பவன். அது போன்று பெருமையுள்ள காற்றிலும் பொருந்தியுள்ளான். சந்திர மண்டலத்தின் தன்மை அறிந்து அதனுள்ளே விளங்குவான். அச்சந்திர மண்டல அறிவு விளங்க அதைப் பெருகச் செய்வான்.

3003. பூதங்களின் பகுதியை கட்ந்து முடிவை அடைந்தாலும் அவை நுட்பத்தில் ஒளீ அணுக்களாய் சிவ சோதியில் நிற்கும். பதப்படுத்தும் உலகத்தில் அவனை அடைக்கலமாய்க் கொண்டவர்க்குத் தாங்கும் பெரும் பொருளாகவும் விளங்குகின்றான். தன்னால் படைக்கப்பட்ட உலகம் அனைத்துக்கும் தான் முழுமுதற் பொருள் ஆவான். பக்குவ ஆன்மாக்களுக்கு தானே சிவ குருவாய் எழுந்தருளி ஆட்கொள்வான்.

3004. வீடு பேற்றுக்கு நிலைக்களமாக உள்ள சிவவுலகமே சிவபெருமனின் திருமுடியாகும். ஆயினும் உலகம் ஏழும் அப்பொருமானுடைய வடிவம் ஆகும் அத்தனின் திருவடி பாதலம் ஏழுக்கும் கீழ் ஊடுறுவி நிற்பது. ஆனால் அறிவில்லாதவர் அவ்வியலபை உணர மாட்டார்.

3005. மேலே சிவமே நம்மை எல்லாம் நடத்தும் தலைவன் ஆவான். அப்பொருமான் முத்தி உலகத்தில் பேரொளியாய் விளங்குவான். அவனே திங்கள் கதிரவன் அக்கினி என மூன்று சுடர்களாய் விளங்குபவன். அவனே மேல் உலகங்களுக்கு மேலாகவும் கீழ் உலகங்களுக்கு கீழாகவும் இருப்பவன். இவ்வுலகங்களுக்கு நடுவாய் இருந்து இவற்றை இயக்குபவனும் அவனே ஆவான்.

3006. உலகம் ஏழினையும் கடந்து மேலும் உய்ர்ந்துள்ள பெருமை கொண்டவன். உருவம் பொருந்தும் நிலைகளை இயல்பாகவே கடந்தவன். மிக நுட்பமானவன். அடியார் விரும்பி அடைந்த ஒலிக்கின்ற திருவடியை காணும் போது அவர்கள் செல்லும் நெறியில் நின்று அழைத்துக் கொண்டு செல்பவனாக உள்ளான்.

3007. நான்கு பக்கங்களிலும் உலவும் நோக்கத்துடன் பெருங்கடல் சூழ்ந்த நிலவுலகம் எல்லாம் இறைவன் நிறைந்து விளங்குகின்றான். அந்த உலகத்தில் வாழ்பவர்க்குப் பயன் தரக்கூடியவை யாவும் முன்னமே படைத்தான். உலகில் உள்ள உயிர்கலையெல்லாம் காக்கும் பொருட்டுப் பொன் ஒளியில் விளங்கி நின்றான்.

3008. சிவன் பரனாகவும் அபரனாகவும் பொருந்திப் பல ஊழிகளிலும் நுண்மையாகவும் பருமையாகவும் விளங்கி அகன்ற உலகங்களைத் தாங்கி அவற்றைக் காத்து வருகின்றான் என்ற உண்மையை உலகத்தார் அறியவில்லை. அவன் பரவியிருக்கும் எல்லையைக் கடந்தும் ஆன்மாவினூடும் நிறைந்து விளங்குகின்றான்.

3009. பருமை நுண்மை ஆகியவற்றிலும் சிவமே நிறைந்து விளங்கும். அதனால் வேறே பெரிய வணங்கக்கூடிய தெய்வம் ஒன்று இல்லை. ஆதரமான உடம்பும் ஆதாரம் கடந்த நாதமும் நாதாந்தமும் உயிர்க்கு வேறாக விளங்கும். அகண்ட வடிவமும் ஆகிய அவனே பெரிய தெய்வம் ஆகும். அவனே பருமை நுட்பம் ஆகியவற்றை இனைக்கும் பிராணனாகவும் விளங்குகின்றான்.

3010. சுற்றியிருக்கும் திசைகளில் எல்லாம் சிவனே அவ்வாறு ஆன போது அவனுக்கு அப்பால் ஒரு கடவுள் உண்டு என்று மனிதரே நீங்கள் சொல்ல வேண்டா. புகையானது மேல் தோன்றிக் காணப்பட்டாலும் அது தீயின்றே தோன்ரறியது.. அது போல் உண்டானவை எல்லாம் எங்கள் ஆதிபெருமானான சிவத்தினிடமிருந்தே தோன்றின என்று அறிவீர்.

3011. சிவன் கீழ் மேல் என்று கூறப்படும் எல்லாப் புவனங்களாகவும் அவற்றின் வேறாகவும் நிறைந்துள்ளான். இப்பெருமான் எல்லாமாகி நிற்பினும் உலகத்தவரால் காணப்படத் தோன்றுபவன் அல்லன். சிவனே பல வகையான உயிர் இனங்களில் உயிர்ச் சத்தியாய் இருந்து இயக்குபவனாய் உலக நிலையில் பொருந்தி உலகத்தவரால் நம்புதற்குப் பாத்திரமாகவும் உள்ளான்.

3012. சிவன் தந்திரக்கலை மந்திரக்கலை உபதேசக்கலை என்னும் மூன்றையும் கடந்து அப்பால் நின்றவன். அவனை விரும்பி நில்லுங்கள். அவனே எல்லாத் தத்துவங்களுக்கும் தலைவன் ஆவான். அவன் விலை மதிக்க முடியாதவன். அவனைத் தேவர்களுள் ஒருவனாய் வைத்து எண்ண இயலாது. அத்தகைய அரியவன் நீங்கள் எண்ணியபோது சிறந்து உங்களிடம் விளங்குவான்.

3013. தலைமுறை தலைமுறையாக நான்முகன் செய்வதற்குக் காரணமான படைபுச் செயலை ஒழித்து திருமால் காக்கும் தொழிலால் விருப்பம் பெருகுவதற்குரிய பற்றை நீக்கி அடயோகம் முதலிய துன்பம் அளிக்கக் கூடிய செயல்களினின்றும் நீக்கி நான் உய்யும்படி என்னை அன்பால் அகப்படுத்திக் கொண்டான்.

3014. இறைவனின் திருவடியே எட்டுத் திக்குகளிலும் விளங்கி ஒளி தருவதாயிற்று. நாதமே வைகரி வாக்குக் காரணமாவதைப் போன்று அழியாது இருப்பவன் அவன் ஒருவனே. ஒளிமயமாகி நிலம் நீர் தீ காற்று வானம் சந்திரன் கதிரவன் அக்கினி ஆன்மா ஆகிய ஒன்பது பகுதிகளிலும் மலரில் மணம் போன்று விளங்குகின்றான்.

3015. எம்பெருமான் புறக்கண்னுக்குக் காணப்படாமல் அகக் கண்ணில் விளங்குபவன். ஆதலால் அவன் இல்லாதவன் அல்லன். கல் போன்ற நெஞ்சத்தை கசியச் செய்து நிற்பவரிடம் விளங்கித் தோன்றுபவன். பழைமையானவன். தூய்மையானவன். நடுக்கம் அற்றவன். குற்றம் இல்லாத மாணிக்கம் போன்ற ஒளியுடையவன். இவ்வாறு விளங்கும் சொல்வதற்கு அரிய பேரொளி ஒளியாகவும் இருளாகவும் சீவர்களைத் தொடர்ந்து நின்று அருளினான்.

3016. இறைவன் உள்ளம் என்ற மண்டலத்தில் ஒடுங்குபவனாய் உள்ளவன். உயிர்கள் உலக மயமான போது அவற்றின் உள்ளே நிலை பெற்றவன். அப்போது ஒளிமயமான சடையையுடைய நந்தியெம்பெருமான் பொறிகளை இயக்கும் கள்ளத் தலைவனாக உள்ளான். பல்வேறு வள்ளல் தன்மையை அறிந்து அவனைச் சிந்திக்கும் உயிரின் துன்பம் தருவதான பிறப்பை அறுத்து நிற்பவனாக உள்ளான்.

3017. ஒருவருக்கொருவர் மாறுபட்ட தேவரும் அசுரரும் நாள்தோறும் தோத்திரம் செய்து சிவபெருமானின் ஒலிக்கின்ற அடியை விரும்பி வணங்குவர், ஆனால் அடியார்கள் அகமும் புறமும் ஒத்து அவனது உதவும் தன்மையை நினைத்து உள்ளம் கசிந்து நிற்பர். அவ்வடியார்க்கு அவரது ஊனை நீக்கி உணர்வைப் பெருக்கிப் பேரொளியாய் விளங்குவான்.

3018. இறைவன் பூதாகாயத்தில் மட்டும் நிலைபெறுபவன் அல்லன். பெரிய கதிராகவும் அறிவாகாயம் என்ற ஆகாய வடிவில் உள்ளவன். அவன் புறக்கண்ணுக்குக் காட்சி தருபவன் அல்லன். ஆனால் அகக்கண்ணுக்குப் புலப்படுபவன் ஆவான். உள்ளப் பண்பின்றித் தோத்திரங்களால் மட்டும் அறியப் படுபவன் அல்லன். உள்ளப் பண்போடு அவன்பால் அன்பும் உடையவர்க்கு வெளிப்பட்டருள்வான். உயிர்கள் அடையும் எல்லா ஆனந்தத்துக்கும் காரணமாக உள்ளவனும் எம் சிவபெருமானே ஆவான்.

3019. எம் சிவபெருமான் எங்கும் உள்ளவரால் விரும்பப்படும் ஆனந்தக் கடல் போன்றவன் முத்தைப் போன்ற சடையுடையவன். நீல ஒளியை உடையவன், ஞானியர் ஒளியில் விளங்கும் இறைவனை இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பர். ஆனால் சித்தரும் தேவரும் அறிவு ஆராய்ச்சியால் தெளிந்து அறியமாட்டார்.

3020.முகத்தின் முன்பு எந்த நிறங்கள் காணப்படுமோ அந்த அந்த நிறங்க்ளின் தன்மைக்கேற்ப இறைவன் விளங்குவான். அறம் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இன்பம் அமையும். தீய ஒழுக்கம் எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப் படுகின்றதோ அந்த அளவு பாவம் அமையும். இத்தகைய உண்மை நிலையை அறிந்திருந்தாலும் மக்கள் ந்ன்மையை கடைபிடிக்கவில்லையே.

3021. அருள் மழை பொழிகின்ற இறைவன் இவ்வுலகில் பல் தலங்களில் உள்ளான். மேல் உலகில் இருக்கின்றான். எங்கும் இருக்கின்றான். எனவே அவன் எல்லாப் புவனங்களிலும் நிறைந்து விளங்கும் புண்ணிய மூர்த்தி. அப்பெருமானை சீவரின் அஞ்ஞான இருளில் உள்ளான். ஞான ஒளியில் கதிர் ஒளிபோன்று அவன் விளங்குவான்.

3022. உணர்வாகவும் மிக மேலானதாகவும் அறிவது சூக்குமமான எம்பெருமானையே ஆகும். அப்பெருமான் அணைப்பவனாகவும் நுட்பமானவனாகவும் உடல் உணர்வால் அண்டகாயத்தில் உயிர் ஒளியிலும் நிலைபெறுபவனாகவும் விளங்குகின்றான்.

3023. இறைவன் தன் ஆற்றலால் ஏழு உலகங்களையும் தாங்கியுள்ளான். தன் ஆற்றலால் தான் அணுவைக் காட்டிலும் நுட்பமாய் இருக்கும் தன்மை உடையவன். அவனது வலிமையை நோக்கில் எட்டுக் குலமலைகளும் ஒப்பாகச் சொல்லப்படா. அவனது ஆற்றலால் அகன்ற கடலிலும் பரவியுள்ளான்.

3024. என் தலைவனான சிவபெருமான் மண்ணவர் விண்ணவர் மற்றவர் யாவரினும் மேம்பட்ட பெருமையுடையவன். ஆயினும் அவன் சிறிய ஊன் உடலிலும் உணர்வாகக் கலந்து அங்கு உள்ளான். அவன் விண்ணுலகத்தவராலும் அறிய முடியாத பேரொளியுடையவன். மண்ணுலகத்தவர் செய்யும் தவத்தின் ஆற்றலுக்கேற்ப அறியப் படுபவனாக இருக்கின்றான்.

3025. பிண்டமான் உடலில் ஆல விதையைப் போன்று எழும் சீவசத்தி பெரிய ஆலமரம் போன்ற உடலில் மேற்சென்று பக்குவப்பட்டு ஒளியாய் விளங்கியது. அதை விளங்கச் செய்து அனுபவித்தவர் அதில் திளைத்திருந்தார். அந்த உணர்வைப் பெற்றிராத மூடர்கள் உடம்பைக் கடந்து ஒளியை அறியாது உடலே பெரிது என்று எண்ணி மயங்குகின்றனர் என்னே அறியாமை.

#####

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

#####

வரையுரை மாட்சி.!

2954. ஆன்மா சிவ எல்லையைக் கடந்து சிவமான பின்பு எவருடன் சேர்வது. அங்ஙனம் அகண்டமாகிய அந்நிலையில் எவரைப் பற்றி நினைப்பது. கவர்ச்சியான பிரகிருதியின் இச்சையையே வென்றவர்க்கு வேறு இந்தப்ப் பிரகிருதியில் என்ன கவர்ச்சி இருக்க முடியும். நீங்களே உங்கள் அறிவால் தேர்ந்து கூறுங்கள்.

2955. சொல்லால் சொல்ல முடியாத அகண்ட சிவத்தை அளவு படுத்திக் கூறமுயலும் அறிவற்றவர்களே! அகண்டமாகிய பொருளை இப்படி இவ்வுருவம் இப்பண்பு என்று சொல்ல முடியுமோ. ஆனால் அலை ஓய்ந்த ஆழமான கடல் போன்ற தெளிவான உள்ளம் உடையவர்கள் ஒளிக்கதிர்களை அடைய் சிவபெருமான் மறைவின்றி வெளிப்பட்டு விளங்குவான்.

2956. மன நினைவே மாயையாம். இதுவே மயக்கத்தை அளிக்கும் மனத்தால் படைக்கப்பட்ட கற்பனை கெடுவதைத் தவிர வேறொன்றும் இல்லை. இதற்கு மேல் கெடுவதற்கு ஏதுமில்லை. வீணாய்ப் பேசிக் காலத்தைக் கழிக்க வேண்டாம். ஆன்மா தன் உண்மை வடிவத்தை ஆராய்ந்து அடங்கியிருப்பதே மேன்மையாகும்.

#####

அணைந் தோர் தன்மை!

2957. சிவ குருநாதனை ஞானத்தால் உறுதியுடன் பொருந்தித் தன் அன்பினுள் அணைத்துக் கொள்பவர்க்கு உயிர்களை கட்டுப்படுத்தியிருக்கும் மலம் இல்லை. அவற்றால் வரும் குற்றம் இல்லை. உயிர்ப்பற்று பொருட்பற்று இனப்பற்று என்பவை கிடையா. தாமதம் இராசத்ம் சாத்துவீகம் என்னும் குணங்களும் இல்லை. அதலால் சுயநலமும் இல்லை.

2958. நன்மையை மட்டும் அளிக்கும் சிவனைக் கண்டேன். அதனால் பிறவி நீங்கப் பெற்றேன். பாரங்க்களை விட்டு நின்றேன். சிவத்துடன் பொருந்தி நின்றேன். சிவத்துடன் பொருந்தியதால் இறந்தபின் இனி மீளவும் பிறத்தலை விரும்பேன்.

2959. ஆலையில் பிழியப்பட்ட சாறும் பாலும் வெல்லமும் சோலையில் உல்ல பொய்கை நீரும் போன்ற இனிய சிவானந்தம் என் சிவபூமியில் இருக்கின்றது. மயில் தோகை போன்ற ஒளியை தந்து கொண்டிருப்பவனாகிய ஒப்பில்லாத அழகையுடைய சத்தியால் அந்த நாட்டில் உள்ளவர்க்கு ஒரு குறைவும் இல்லை.

2960. எல்லாத் தத்துவங்களையும் கடந்து விளங்கும் சிறப்புடிய சிவன் வந்து என் சிந்தையில் இடம் கொண்டனன். ஆதலால் இனி மேல் எந்தத் தத்துவத்தாலும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. அந்தச் சிவ பூமியில் இருப்பதே அல்லாமல் பிற தத்துவங்களுடன் கூடி அறிய வேண்டியது ஏதும் இல்லை.

2961. நான்முகனால் படைக்கப்பட்ட பிறவிப் பிணிப்பினின்று பிரிந்தேன். சிவகதி அடையும் நெறியை நான் தெரிந்து கொண்டேன். என் பழைய வினைகளை மனமான வாளால் அரிந்தேன். என் பரு நுண் காரண உடலான புரங்களைக் கெடுத்து என் குறிக்கோளை நோக்கி முன்னேறுகின்றேன்.

2962. இவ்வுலக இயக்கத்துக்குப் பேரொளிப் பிழம்பான ஒரு தெய்வம் உண்டு என்பதை அறிந்தீர். அஃது உலகத்தை உயிரைப் போன்று இயக்குதலையும் அறிந்தீர். இனி நமசிவய என்ற சிவக்கனி உயிர் கூட்டத்துக்கு நன்மை அளிப்பது என்பதையும் அறிந்தீர். அதனால் இந்தச் சுவையுள்ள கனியை உண்ட எனக்கு அதன் இனிமை நன்றாக விளங்கியது.

2963. ஒளியான சந்திரனையும் உமையாகிய குண்டலினியையும் அணிந்த சிவபெருமான் என்னிடம் வந்து ஆட்கொண்ட பேரொளிப் பிழம்பானவான். அங்ஙனம் முடிவும் முதலும் இல்லாத அரிய உண்மைப் பொருள என் உள்ளத்தில் பொருந்தி எனது மயக்கத்தைப் போக்கியருளினான்.

2964. பழமையான எங்கள் சிவன் திருமாலையும் நான்முகனையும் படைத்தான். அவர்களுடனே விளங்கியுள்ளான். இந்த வுண்மையை ஆராய்ந்து அறிபவர் எவரும் இல்லை. ஆனால் நான்முகன் திருமால் ஆகியவரின் செய்கையான உடல் அறத்தைக் கடந்து மேற் சென்று எண்ண்ம இல்லாத நிலையை அடைந்தால் பிரணவ வடிவமான சிவன் சீவர்களை ஆசனமாகக் கொண்டு திகழ்வான்.

2965. அம்மையும் அப்பனும் ஆக உள்ள சிவபெருமான் என்னிடம் அன்பு காட்டிப் பாதுகாக்கின்றான் அவ்வாறு அவன் செய்யாவிடில் என்னைப் பெற்ற தாயும் தந்தையும் என்னை அறிந்து எவ்வாறு பாதுகாக்க முடியும். எனவே தாய் தந்தையருடன் நானும் உடனாக இருந்து சத்தி சிவத்திடம் அன்பு கொண்டு வணங்கி நின்றேன்.

2966. சிவச் சேர்க்கையில் இருக்கும் என்னிடம் புவியைத் தன்னுள் கொண்ட கடலும் புவியைவிட உயர்ந்து நிற்கும் மலையின் உச்சியும் வான் மண்டலத் தலைவர்களான நான்முகன் திருமால் முதலியவருள் ஆதி சத்தியும் எட்டுத் திக்கில் உள்ளவரும் நான் பணிக்கும் பணியைக் கேட்டு நின்றனர். நான் இப்போது அவர் எல்லாரையும் கடந்து மேலானவனாய் விளங்குகின்றேன்.

2967. சிவத்துடன் பொருந்திய சீவர்களே எங்கும் நிறைந்த திசையுடன் தேவர் கூட்டமாயும் இருப்பர். அவ்வாறுள்ள அவர்களே மேருமலையாயும் எல்லாவற்றுக்கும் மேலே உள்ளதாயும் விளங்குவர். அவர்களே சீவ நிலையில் உடலாகவும் உயிராகவும் தத்துவமாகவும் விளங்குவர். சிவமே வடிவம் யாவற்றையும் கடந்து தலைவனாகவும் உள்ளது.

2968. உடல் பற்று நீங்கி வான் மயமானவன் என்ற உணர்வு வந்த போது இயமன் வரின் நான் ஞான வாளைக் கொண்டு அவனை வெல்வேன். சிவம் வருவானாயின் நான் எங்கும் நிறைந்த பொருளாக நிற்பது திண்ணம். பிறவியைத் தரும் பழைய வினைகளை முன்னமே அறுத்துவிட்டேன். தவத்தால் அடையப் பெறும் சிந்தைக்கு அஞ்ஞானமான இருளா வந்து எதிர் நிற்க முடியும்.

2969. எண்ணம் சிவமாய் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் வென்றவர் தூய சிவத்தின் ஆற்றலைப் பெற்று விளங்குவர். அவர்களைத் தளைப்படுத்தும் மலத்தில் கட்டுண்ணாது திகழ்வர். அந்த ஞானியர் சத்தம் எல்லாம் நுண்மை வாக்கு என்று உணர்ந்திருப்பவராதலால் வைகரி வாக்கால் செவி ஓசையால் வாதமும் பூசலும் பிதற்றலையும் செய்யும்.

2970. நினைத்தலும் மறப்பும் இல்லாது இடைவிடாமல் எண்ணியிருப்பவரது மனத்தில் வினை கூட்டங்களை ஒழிக்கும் சிவன் விளங்குவான். ஆனால் வினைகளைக் கடியும் சிவபொருமானைக் குறித்து விட்டு விட்டு எண்ணினால் அவன் நம்மைவிட்டு அகன்றவன் ஆவான்.

2971.. எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்த தலைவனைச் சிவபெருமானே என்று நான் அழைத்து வழிபட தவத்தில் விளங்கும் பொருமானான அவனும் இங்கு இருக்கின்றேன் என்று கூறியபடி என்னிடம் வந்து பொருந்தினான். பற்றுக்களைக் கெடுக்கும் தலைவனாயும் பின்பு அவற்றை நீக்குபவனாயும் உள்ள நித்தியப் பொருளான தலைவனை வணங்கி என் பிறவியைக் கடந்து நின்றேன்.

2972. மேன்மையுடைய ஆதியான தலைவனை நான் வணங்கி நின்றேன். அவனே பரம் பொருள் என்று துணிந்து நின்றேன். இனி அவனையன்றி மேலான தெய்வம் ஒன்று உண்டு என நான் நினைக்க மாட்டேன். என் உடம்பில் இடம் கொண்ட ஆதியான சிவனை நான் பொருந்தி நின்றேன். என் சிவபோகத்தை விட்டு அவனுடன் பொருந்தி அடங்கி நின்றபோது அப்பொருமானின் அகண்ட பரப்பை அறிந்தேன்.

2973. என் உள்ளத்தில் சிவன் உள்ளான் என்பதை உணர்ந்து அவனுடைய திருவடிகளைப் பொருந்தி முன்னிட்டு விளங்கும்படி பிறவியும் அதற்குரிய காரணங்களும் கெடும். தனக்கு என ஒரு மனம் இல்லாதவன். நான்முகன் எழுதிய எழுத்தை கெடுத்து நான் தத்துவங்களோடு போராடும் நிலையை எனக்குக் கொடுத்தருளினான்.

2974. சிவபெருமான் என் உள்ளத்தில் பொருந்தி என் மாறுபாட்டை போக்கினான். அப்பெருமான் நோயற்ற உடலைத் தந்து நரை திரை இல்லாமல் கால எல்லையைக் கடந்து வாழுமாறு செய்தனன். அதனால் என் மாறுபாடு நீங்கப் பெற்று என்னுடன் தொடர்ந்து வந்த துன்பத்தைக் கெடுத்தேன். அப்போது சிவம் பிரகாசத்துடன் விளங்கியது.

2975. சிவபெருமான் தன் ஒளிமயமான தேவர் கூட்டத்துடன் என் உள்ளத்தில் நிலை பெற்றான். நிலைப் பெறப் பிறவிக்குக் காரணமான பாசமாகிய இருளைப் போக்கி என்னை ஆட்கொண்ட முதல்வன் ஆவான். அவன் என் உள்ளத்தில் எழுந்தருளி ஆட்கொண்ட ,முறை இதுவாகும்.

2976. கருமபைப்போன்ற காமமும் தேனைப் போன்ற அதன் சுவையும் பொருந்தியுள்ள உடம்பில் அரும்புகின்ற மணமாகிய சிவானந்தத்தை நடி உடல் இயல்பைக் கடந்து உணர்வு மேலே சென்ற பின்பு உயிர்களுக்குக் கரும்பு போன்ற காமமும் திகட்டித் தேன் போன்ற அதன் சுவையும் புளித்துப் போகும்படி இன்பம் தருபாவனாய் உள்ளான்.

2977. முன்னைய பிறவிகளில் சரியை கிரியை முதலிய நெறிகளில் சார்ந்து அந்த நெறிகளினின்றும் மீட்டு என்னிடம் வள்ளலான சிவம் கருணை காட்டி அன்பு செய்த திறத்தைப் பாடி நான் செய்பவை எல்லாம் சிவன் என்னிடமிருந்து செய்விக்கின்றான் என்று உணர்வதால் பின் உண்டாகும் வினையில்லாது பிறவியை ஒழித்தேன்.

2978. உலக நிலையிலிருந்து மீண்டவரின் மூலாதாரத்தில் உள்ள தீ பொங்கி எழ சகசிரதளம் என்ற விளாக்கினில் உணர்வாகிய நெய் சேர்ந்ததும் சாந்தி விருந்தி பெருகி உலகங்களுக்கெல்லாம் தலைவியான சத்தி வந்து பொருந்தினாள். உயிர் அறிவு கெட்டுச் சிவ அனுபவம் கிட்டியது.

2979. ஆறு ஆதாரங்கள் வழியாய் உயிர்ச் சத்தி பாய்ந்து நிரம்பும் சகசிரதளம் என்னும் குளம் ஒன்று உள்ளது. அங்ஙனம் கீழ் இருக்கும் சத்திகளை மேல் ஏற்றும் சிவகதியின் தன்மை மிக நுட்பமானது. சிவகதியின் முடிவில் கதிரவன், திங்கள் என்பனவற்றையே தனங்களாக உடைய சத்தியுடன் உடலைக் க்டந்து மேலான சிவம் விளங்கும்.

2980. இறைவன் அருளிய உதவியை எண்ணி அன்பு கொண்டு அழுவேன். அவன் புகழ் மயமான தோத்திரத்தைப் பாடுவேன். என் எலும்பு உருக இரவு பகல் எனப் பாராமல் எப்போதும் வழிபடுவேன். எனது பொன்மணி போன்ற இறைவனும் ஈசனுமாகிய பொருமானை என்னிடம் பொருந்துமாறு ஞான சாதனை செய்து எனக்கு உரியவன் ஆக்கிக் கொள்வேன்.

2981. உள்மனமானது உலக முகமாக விரிந்து துன்பத்தை அடைந்து அடங்குவதே உண்மையான தவமாகும். அங்ஙனம் மனம் விரிந்து அடங்கப் பெற்றவர்க்குப் பிராணன் அடங்கும். கும்பகம் பொருந்தும். நிலைபெற்ற உயிரிடமாக பிரிந்து உள்ளம் ஒடுங்கி நின்றது. அப்போது பேச்சில்லாத பேரானந்த முத்தி உண்டாகும்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:31

மோன சமாதி!

Written by

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

#####

மோன சமாதி!

2936. பிரணவ யோகத்தில் நிற்கிறார். இருக்கிறார். கிடக்கிரார் என்பது இல்லை. நாதாந்த நிலையில் சித்தம் அடங்கி இருப்பதே ஒடுக்க நிலையாகும். தலையின் மீது அறிவாகாயப் பெருவெளியில் உயிர் அறிவுக்குப் புலப்படாத சிவம் இருக்கின்றது. நாத வழியில் போய் நதாந்தத்தை அடைந்தவர் சேரும் வழி இதுவேயாகும்.

2937. காட்டும் குறிகளையும் அடையாளங்களையும் கடந்தவன் மூலப் பொருளான சிவபெருமான், அப்பொருமானைப் பற்றி நூலில் எழுதி வைத்து என்ன பயன். உண்மையான ஞானத்தைக் கூட்டி வைக்கின்ற ஞான குருவான சிவன் உணர்த்தினால் அல்லாமல் ஆட்டின் கழுத்தில் பய்ன்படாமல் தொங்கும் சதைப் பிடிப்பைப் போன்று ஏட்டுப் படிப்புப் பயன் அற்றதாகும்.

2938. சிவவுணர்வு உடையவர்க்கு யாவற்றையும் இருந்த இடத்தில் இருந்தே அறியும் திறம் இருக்கும். அந்நன்மை வய்ந்தவர் எப்போதும் சிவத்திடம் தொடர்பு கொண்டிருந்தலால் அவர்கள் எதற்கும் கவலைப் பட மாட்டார்கள். முன்பே உணர்வைத் தன்பால் கொண்ட குருவானவர் மாணவனுக்கு உணர்த்த அவன் இருந்த போது உணர்வைப் பெற்ற மாணவர் தம் சுய அனுபவத்தில் சிவத்தை காணும்பேறு பெற்றவர்.

2939. தன் அறிவுக்கு உலகம் தோன்றாதபடி மிக நுட்பமாக நுண்மையான மண்டலத்தில் விளங்கிக் கொண்டிருப்பவன் மௌன யோகி. அவன் மீண்டும் பிறக்க வேண்டிய நியதியைக் கடந்து மற்றவர்க்கு அருளும் இயல்பினன. எல்லாச் சிறப்பும் உடையவன். சிவசத்தியும் தானும் பொருந்தி உலகை அறியாமலும் தன்னை அறிந்தும் இருப்பவன் ஆவான்.

2940. சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் மூன்றையும் கடந்து விளங்கும் பேரொளியில் அரிய துரிய நிலைக்கு மேல் உள்ள மூன்று நிலைக;ளிலும் பொருந்தி விரிந்தும் குவிந்தும் அனுபவித்தும் கடந்து வாயால் சொல்ல முடியாத அனுபவ நிலையில் இப்பயிற்சியாளன் இருக்கின்றான்.

2941. சிவபெருமான் மாயையின் காரியமான வடிவம் இல்லாதவன். ஊன் உடல் இல்லாதவன். ஒரு குறையும் இல்லாதவன். பராசத்தியை உடலாகக் கொண்டவன். தீமை ஏதும் செய்யாதவன். நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகிய ஐவருக்கும் தலைவன் ஆவான். ஒப்பு இல்லாதவன். பூதப்படையை உடையவன். தனக்கு ஓர் ஆதாரம் இல்லாதவன். இத்தகைய சிவன் என் உள்ளத்தை இடமாகக் கொண்டு அமர்ந்திருக்கின்றான்.

2942. எடுத்துள்ள உடலில் சிவத்தைக் கண்டு வழிபடுபவர் ஒருவரும் இல்லை. ஆனால் எட்டுத் திக்குகளில் உள்ளவரும் சிவன் எல்லா இடங்களிலும் உள்ளான் என்று ஏத்துவர். இந்த மண்ணுலகைக் கடந்த எல்லையில்லாத சிவானந்தத்தைக் சாதகர்கள் அனுபவித்து நிற்கும் முறையை நாம் அறியவில்லை.

2943. சிவன் ஒன்பது வகையான பேதம் உடைய பரமும் அல்லன். அருவமான சதாசிவன் அல்லன். அருவம் ஆனவன் அல்லன். உருவத்துடன் கூடியவனும் அல்லன். அதிசயமாய் அனுபவிக்கின்ற காம இன்பம் போல் ஆன்மாவில் கற்பனை இல்லாமல் உண்மையாகவே பொருந்தி இன்பத்தை தருபவன்.

2944. முகத்தில் பொருந்திய கண்களால் புறப் பொருளைக் கண்டு மகிழ்கின்ற மூடர்களே. அறிவுக் கண் கொண்டு அக வுணர்வைக் காண்பதே உண்மையான சிவானந்தம் ஆகும். ஒத்த உறுப்பும் நலமும் உடைய மகளுக்குத் தாயானவள் தன் கணவனுடன் கூடிப் பெற்ற இன்பத்தை வாயால் சொல்ல வேண்டும் என்று மகள் விரும்பினால் தாய் எப்படிச் சொல்ல முடியும்.

2945. நீரில் கரைந்த உப்பு நீராய் இருப்பது போல் அத்தனான சிவன் ஆன்மாவைப் பொருந்தி ஆன்மா பரமாகவும் சிவன் பராபரமாகவும் இருந்தாலும் இரு பொருளாய் விளங்குவதில்லை. தத்துவமசி என்னும் பெருவாக்கியத்தில் மூன்றாவது பதமான அசிபதம் அழிய தத் ஆன சிவம் துவம் ஆகிய ஆன்மாவை மூடிக்கொண்டு தன்னைப் போலவே ஆன்மாவைத் தகுதி உடையதாக்கிவிடும்.

2946. பார்ப்பவருக்கு எட்டிப்பழம் கவர்ச்சியாய் இருக்கும். அதுபோல் உலகம் மிகவும் கவர்ச்சி உடையது. ஆனால் அந்த எட்டிப்பழத்தை தின்றவர்க்குக் கசப்பைத் தருவதைப் போன்று உலக வாழ்க்கையும் அனுபவித்த பின்பு கசப்பைத் தரும் என்பது புலனாகும். பெண் என்பவள் பக்குவம் அடைந்து மடந்தை ஆவதுபோல் சீவன் உலக அனுபவத்தில் கசப்புத் தோன்றிப் பக்குவம் பெற்ற போது சிவன் சீவனிடத்தில் விளங்கி நிற்கும்.. நிற்க சீவனும் சிவபோகத்தில் இன்பம் அடையும்.


2947. தத்துவக் கூட்டத்தின் நடுவில் இருந்து எல்லாத் தத்துவங்களையும் நடத்திக் கொண்டிருக்கும் ஆன்மாவிடம் சிவம் விளங்கினான். அவன் விளங்கியதால் அவனை அடைவதற்குரிய சமாதிப் பயிற்சியும் தேவை அற்றதாயிற்று. மணிபூரகத்திலிருந்து தோன்றி எழுகின்ற சிவக்கதிரவனை எனது அறிவால் நான் கண்டு கொண்டேன். அவனுடன் ஒன்றானேன்.

2948. ஞான சாதனையில் தளர்ச்சி அடையாமல் தத்துவங்களுக்கு வேறாகச் சிவத்தை நினைந்து நடுக்கம் ஏதும் இல்லாத நாத சம்மியம் செய்து ஓட்டம் எடுக்கின்ற மாயையை விட்டு நீங்கிக் கற்பனையைக் கடந்த சோதியான சிவத்தில் ஒழுகினேன்.

2949. தேவர்கள் சகசிரதளத்தில் விளங்கும் சிவனது செம்மையன திருவடிகளைப் பொருந்தார்கள். அறநெறி நாள் தோறும் தழைக்கப் பெருமை பொருந்திய அக்கினி மண்டலத்தில் சென்று அமுதம் விளையும்படி விரும்பமட்டர். அவர்கள் அமுதத்தை அடைய விரும்பமாட்டார்.

2950. அந்த காம இன்பத்துக்கு என்று உள்ள காதலர் ஒருவர் பேச்சினை மற்றவர் கேட்டதும் விரைந்து காமம் தோன்றும் அது போன்ற அந்தக் கராண விருந்தியைக் கடந்து நிற்கும் குருவைப் பார்த்ததும். தேன் சிந்தும் கொன்றை மாலையைப் போன்ற மஞ்சள் ஒளியில் சிவமும் வந்து இன்பத்தை அளிப்பான்.

2951. சிவசிந்தனைக் கண் கூட்டில் உடல் பற்று அகன்றது. பொருள பற்று அகன்றது ஊனாலான உடலில் வேட்கையும் கெட்டது. உயிர் பற்றும் விட்டது. வெளியே செல்லும் மனமும் கெட்டது. பின்பு என் இச்சை என்பதும் கெட்டது. எப்படி இது நிகழ்ந்தது என்பதை நான் அறியேன்.

2952. இருள் மயமான தத்துவங்களை நோக்காமலும் ஒளிமயமான சிவத்தை சுட்டி அறியாமலும் சிவத்தோடு சேர்ந்த சீவனாய் வேறுபாடு அற்றுப் பொருந்த அருளால் தன் நிலைகெடும் அப்பொழுது சிவத்தின் திருவடிக்குச் சென்று தவறாமல் கல்போல் மனம் பொருந்துமாறு நின்றேன்.

2953. என் உள்ளத்தில் பொருந்தி பரமாகவும் அபரமாகவும் இருக்கும் இறைவனை அறிந்தேன். என் மனத்தினுள்ளே நிலைப் பெற்று சிவசத்தியை அறிந்தேன். சீவனும் சிவனும் புணரும் முறையை அறிந்தேன். எனக்குள் விளங்கும் இறைவனுடன் பொருந்தி நான் பல யுகங்களைக் கண்டேன்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:29

சூனிய சம்பாஷணை!

Written by

ஓம்நமசிவய!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

#####

சூனிய சம்பாஷணை!

2866. மனித உடல் சூது ஆடும் பலகை போன்றது. ஐம்பொறிகளும் சூதாடுவதற்குரிய கருவிகள் ஆகும். உயிரின் இச்சை, ஞானம், கிரியை ஆகிய மூன்று கண்களாய் விஷய சுகம் என்ற ஆகாயத்தை அடைய ஐம்பத்தோர் எழுத்துக்களையுடைய ஆதாரங்களில் சீவன் இருந்து செயல்படுகின்ற மாயத் தன்மை கொண்ட பொறிகளின் மறைப்பை அறியேன்.

2867. தூய சிவத்தை அடையும் நெறியான பயிர் முளைக்காதபடி ஆனவம் கன்மம் மாயை என்னும் களைச் செடிகள் பெருகிக் கிடந்தன. இத்தகைய களைகளை அகற்றிச் சிவநெறி என்ற பயிரை வளர்க்கும் வகையை அறிபவர் இல்லை. சிவநெறிப் பயிரை வளர்க்கும் வகையை அறிந்து அதற்கு மாறான ஆணவம் முதலிய களைகளை அகற்றி நிற்பவர்க்கு என் உள்ளத்தில் எழும் அன்பு பெருகி நிற்கின்றது..

2868. ஆறு ஆதாரங்களாகிய தெருவில் கீழ் உள்ள மூலாதாரம் என்ற சந்தியில் பக்குவம் அடையாதபோது இருள் முலமாகத் தொழிற்படும் நான்கு இதழ்களான பனைகள் உள்ளன. ஏறுவதற்கு அரிய சுழுமுனையான ஏணியை வைத்து அப்பனை மரத்தின் மீது ஏற முனைந்தேன். ஏறிச் சகசிரதளம் சென்றேன். மூலாதாரம் முதலிய எழு கமலங்களும் கூடி ஒன்றாகி ஒளிமயமாய் பொங்குவதைக் கண்டேன்.

2869. ஞான சாதனையான கத்தரி விதையை விதைக்க வைராக்கியம் என்ற பாகற் கொடி தோன்றியது. தத்துவ ஆராய்ச்சி என்ற புழுதியைத் தோண்டினேன். மஞ்சள் ஒளியையுடைய சகசிரதளமான பூசணிப் பூ பூத்தது. உடல் என்ற தோட்டத்தில் எழுத்துக்களான குடிகள் வணங்கி அகன்றார். வாழ்வில் தலைமை அளிக்கும் சிவமாகிய கனி கிட்டியது.

2870. நிலம் முதலிய ஐம் பூதம் கூட்டுறவினால் ஏற்படும் வீரியமான விதையில் ஆன்மாவை விளக்கிக் கொள்ளும் விந்து மண்டலம் இருக்கின்றது. இந்த விந்து மண்டலம் எப்படிச் செயல்படுகின்றது என்பதை அறிந்த ஞானம் உடையவர் எவரும் இலர். நீலகண்டப் பெருமானிடம் உள்ளம் பதித்தால் ஆன்மா விளங்கும் ஒளி மண்டலத்தைச் சந்தேகம் இல்லாமல் எளிதாய் அடைய முடியும்.

2871. பயன் அற்ற பள்ள நிலம் ஒன்று உள்ளது. பயிர் விளைவு அற்ற நனவு, கனவு ஆகிய ஆகிய இரண்டு நிலங்கள் உள்ளன காண்பதற்கு அரிய ஆன்மாவான கள்ளச் செய் தன் உண்மை உணராத நிலையில் பயனற்ரு இம்மூன்று அவத்தையிலும் கலந்து விளங்கியது. தன் உண்மையை உணர்ந்து உள்ளம் என்ற நிலத்தைப் பொருந்த்திச் சிவதொண்டு என்ற உழவைச் செய்பவர்க்குச் சிவானந்தமான வெள்ளம் பாய்ந்தி சீவன் முத்தி விலைச்சல் விலையும்.

2872. இடைகலை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று ஏரும் உழுவது மூலாதாரம் என்ற முக்காணி நிலம். உழவைச் செய்தபின் அவை முதுகுத்தண்டான கயிற்றில் கட்டப்பெற்று சுழுமுனை என்னும் தறியில் பொருந்திவிடும். ஞான சாதனை செய்யும் உழவர் சொல் வடிவான பிரமத்தை எழுப்பி உள் நாக்குமேல் பிரமப் புழையை அடைந்து அங்குள்ள சகசிரதளமான வயலை உழமாட்டார். அடயோகம் செய்து விலைச்சல் அற்ற நிலத்தில் பயிர்
செய்கின்றனர். என்னே பயன்.

2873. ஆதாரங்கள் என்ற ஏழு கிணறுகளும் அவற்றினின்றும் நீர் இறைப்பதற்கு இடைகலை பிங்கலை என்ற இரண்டு ஏற்றங்களும் உண்டு. சந்திர கலையான மூத்தவன் இறைக்கவும் சூரியக்கலையான இளையவன் பாய்ச்சிய வீரியமாகிய நீர் அக்கினிக் கலையான பாத்தியில் பாய்ந்து சகசிரதளமான வயலுக்குப் போகாமல் பயனின்றி வீணே கழிந்து விடின் விலைமகள் கூத்தி வளர்த்த கோழிக் குஞ்சு அழிவது போல் ஆகும்.

2874. மேய்ப்பவர் இல்லாமல் திரியும் ஆன்ம த்த்துவமகிய பசுக்கள் இருபத்து நான்கு உள்ளன. வித்தியாதத்துவம், சிவதத்துவம் என்ற குட்டிப் பசுக்கள் முறையே ஏழும் ஐந்தும் இருக்கின்/றன. இச் சிறிய பசுக்கள் குடம் நிறைய பால் கறந்தாலும் கறக்காத பட்டி மாடே ஆன்மா என்னும் பார்ப்பானுக்குக் கிடைத்தது.

2875. பாலைக் கறக்காத பசுக்களான இருபத்து நான்கு தத்துவங்கள் உள்ளன.. ஊற்றுபோல ஒளிவீசி நிற்கும் சிவதத்துவமான் பசுக்கள் கறக்கின்ற இன்பமான பால் ஒரு குடம் ஆன்மாவுக்குப் போதுமானது. இடைகலை பிங்கலையாகிய காற்றுப் பசுக்களை கறந்து உண்ணும் காலத்தில் அதனின் வேறான சுத்த தத்துவமான பசுக்கள் வருவதை அறிய இயலது.

2876. உயிரின் மன மண்டலத்தில் தலையின் மீது உள்ள ஊர்த்துவ சகசிரதளத்தில் அருமபைப் போன்று சிறிதாய்த் தோன்றிச் செம்மையான நாதம் படர்ந்தது. வானம் சிறந்து விளங்க மெய்ம்மைப் பொருளான சிவத்தை நிலைபெறச் செய்து சீவன் அப்பொருளைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டான்.

2877. துன்பம் அளிக்கும் வினையான பயிர் விளையும் உடம்பான வயலில் கீழ் முகமாகச் செல்லும் உயிர்வளியின் வழியை அடத்து மேல் முகமாக்கிக் கொள்ளத் தக்க நல்ல சிவ தத்துவம் ஆன பசுவைச் சேர்த்துக் கொண்டால் தலையின் மீது விளங்கும் விந்து மண்டலம் சிவப் பயிர் விளையும் விதையாகும்.

2878. இடைகலையான சந்திர கலையைத் தூண்டி சிவ சிந்தனையான எருவைத் தூவி உணர்வான விதையை விதைத்து இடைகலை பிங்கலை ஆன காளைகளை அங்குச் சேர்த்து மூச்சுக் கதியான முறையை மாற்றித் தொண்டைச் சக்கரமான மிடாவில் ஞான சாதனையான சோற்றைப் பதப்படுத்தி மென்மையாய் உண்ணார். இதுவே கிடாக்களைக் கொண்டு சிவபதமான செந்நெல்லைப் பெறும் முறையாகும்.

2879. சிவத்தை அடையும் வழியை அறிந்தவர்க்குச் சிவம் விளங்கும் விந்து மண்டலம் பெருகிக் கிடந்தது. அங்ஙனம் வானப் பேற்றின் நினைவாகவே இருப்பவர்க்கு அது மும்முறை பெருகி ஆனந்த மயமாக விளங்கும்.

2880. அடயோகம் ஒரு களர் நிலம். அதில் சாதனை என்ற உழவைச் செய்பவரின் எண்ணத்தை நாம் அறிய இயலவில்லை. களர் நிலத்தில் ஏன் உழுகின்றோம் என்பதை அவர்களும் உண்ரவில்லை. அங்ஙனம் சாதனை செய்பவர் மூலாதாரமான களர் பகுதியில் தோன்றிய இளநிலம் வாய்த்த குண்டலியான காஞ்சிக் கொடியின் ஆற்றலால் காமத்துக்கு இரையாவார். மாள்வார்,

2881. நாதத்தை விளங்க விடாத வஞ்சனையைச் செய்யும் காம வாயுவான சிறு நரி தங்கும் விந்துப் பை என்ற கொட்டிலில் பாசத்தைச் சிவாக்கினியில் இட்டு நாத உபாசனை செய்தால் ஒலியாகிய நன்மை பெருகிச் சித்து ரூபினியான சத்தி பதிய அத்தகைய உள்ளமான இல்லத்தில் சிவனும் உடன் இருந்தான்.

2882. தலையான மலையின் மீது ஒளிக்கதிரான மழை பரவ பிராணன் என்ற மான் குட்டி தலையின் மத்தியில் மோத ஊர்த்துவ சகசிரதளம் என்ற குலைமீது இருந்த சிவமாகிய செழித்த கனி உதிர கொல்லன் உலைக் களத்தில் இட்ட இரும்பைப் போல் அந்தச் சிவன் மர்பகத்துக்கு மேல் ஒளிமயமான அமிர்தத்தை வழங்குமாறு செய்தான்.

2883. ஆன்மா என்ற பார்ப்பானின் உடலில் பொறிகளான கறவைப் பசுக்கள் ஐந்து உள்ளன. அவை மேய்ப்பவர் இல்லாமல் விருப்பம் போல் திரிவன. ஆன்மாவைச் செலுத்தும் சிவமான மேய்ப்பாரும் உண்டாகில் புலன்களில் போகும் விருப்பத்தையும் விட்டால் ஆன்மாவிடம் பொருந்திய பொறிகள் என்ற பசுக்கள் பேரின்பம் என்ற பாலைத் தரும்.

2884. பிராணன் என்ற காட்டுப் பசுக்கள் ஐந்தும் ஆன்ம தத்துவம் புருடன் அற்ற வித்தியா தத்துவம் ஆகிய ஆண்சிங்கம் முப்பதும், இன்பதுன்பமான சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், சேவை, அருச்சனை, அடிமை, வந்தனம், சக்கியம், ஆன்மநிவேதனம், ஆகிய திப்பிலி ஒன்பதும் தமக்குரியவனாய் அடங்குமனால் தன் உள்ளத்தில் உல்ளவனான காமம் முதலியவை வளர்ச்சி அடையா. அம்முறையே செலுத்துபவர் ஞான ஒளியை வளர்ப்பவர்..

2885. ஏட்டில் எழுதாத மறைநூலில் நுட்ப வாக்கான பொருளை இளமை நலத்துடன் கூடிய குண்டலியான கன்னி தலையை அடைந்து எழுப்ப மேல் முகமான சகசிரதள மலரின் ஆனந்தம் உண்டாகும். நாதமாகிய தேனை உடலுடன் பொருந்தாத ஆன்மாவான வண்டு நாதமான தேனில் திளைத்து இன்பம் அடைந்தது.

2886. உடலினின்று வெளியே போகும் காற்றான அபானனும் புகும் காற்றான பிராணனும் கூடும் உடம்பான நாவல் மரத்தின் பயன் தரும் பழமாகிய போகத்தை அனுபவிக்கின்ற ஐம் பொறிகளான ஐவரும். வெந்து விடும் இயல்புடைய உடம்பு ஆன கூரையில் மகிழ்வுடன் திலைக்கின்றவரே. என்னே அவற்றின் இயல்பு.

2887. உள்ளம் என்ற மூங்கிலின் விதையினின்று தோன்றிய வைராக்கியம் என்ற வேப்பமரமானது உண்டு. அந்த வைராக்கியத்தைப் பொருந்திய முதுகுத் தண்டான பனை மரத்தில் குண்டலினி என்ற பாம்பு இருக்கின்றது. கீழே சுருண்டு கிடக்கும் பாம்பை மேலே செலுத்தி அமுதம் உண்பவர் இல்லாமல் வைராக்கியமான பாம்பு பயன் தாராமல் கெடும்.

2888. பத்து நாடிகள் ஏன்னும் பருத்த புலி பத்தும் ஐம்பூதங்கள் தன் மாத்திரைகள் புலன்கள் என்ற யானைகள் பதினைந்தும் ஜானேந்திரியங்களான வல்லவர் ஐவரும், பத்து வாயுக்களான வினோதகர் பத்தும், தாமத இராசத சாத்துவீகம் என்ற மூவரும் பிறத்தல் கற்றல் தேடல் கூடல் வாழ்வு தாழ்வு ஆகிய நலன்களை உயிர்க்குச் செய்யும் மருத்துவர் அறுவரும் இருக்கின்ற உடம்பில் பொருந்தி ஆன்மா நனவு கனவு சுழுத்தி துரியம் துரியாதீதம் ஆகிய ஐந்து நிலைகளையும் அடையும்.

2889. உடல் என்ற இந்த ஊர்க்குள் உழவைச் செய்யும் உசுவாச நிசுவாசமாகிய இரண்டு எருதுகள் உண்டு. இந்த இரண்டு எருதுகளையும் செலுத்தச் சீவனான தொழும்பன் ஒருவனே உள்ளான். சீவனின் நிலையை அறிந்து இந்த இரண்டு எருதுகளையும் செயல்படாமல் நிறுத்தி விட்டால் உசுவாச நிசுவாச இரண்டு எருதுகளும் போக்கும் வரவு இல்லாமல் சுழுமுனையான ஒரே எருதாய் ஆகிவிடும்..

2890. ஞானப் பயிற்சியாளர் உள்ள மண்டலத்தை விருப்பு வெறுப்பு இல்லாத சமத்துவ. அறிவால் ஒழுங்குபடுத்தி இறைவனிடம் மனம் பதியும் படி செய்து பருத்தி போன்ற வெண்ணிற ஒளியைத் தலையில் மீது விளங்கும்படி பாவித்தலால் அதுவே முத்திக்குச் செல்லும் நூல் ஏணியாகப் படைப்பு, காத்தல், துடைப்பு செய்யும் நன்முகன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரின் ஆட்சியில் உள்ள உடல் என்ற ஊரில் நாள்தோறும் சாதனை செய்து உயிரும் உடலும் சூழ்ந்த வானத்தையே தம் உடலாக்கிக் கொண்டு முழுமையுடன் விளங்கும்.

2891. அறியாமை என்னும் கோட்டானும் காமமான பாம்பும் தர்மமான கிளியுடன் அதர்மமான பூனையும் சிற்றறிவான நாகணப் பறவை அறியாமை என்னும் கோட்டான் நணுக முயலும் அப்போது அறியாமையான கோட்டானைப் பார்த்து சீவனாகிய எலி நாதமாகிய ஒலியை எழுப்பிச் சிற்றறிவையுடைய நாகணவாய்ப் பறவையைக் காக்கும்.

2892. குலையாய் உள்ள நல்ல எண்ணமான வாசனையைக் கலக்கி விட்டால் நிலைபெற வேண்டிய சீவனான வெள்ளை எலி தாமத இராசத சாத்துவீகம் ஆன என்ற முக்குணங்கள் வசப்பட்டு நிற்கும். அப்போது அதன் எண்ணம் உடலாகிய உலைக்குப் புறமாகிய மனமானது வெளியே போய்விடும். இல்லையெனில் அறிவிலே அடங்கியிருக்கும். உடல் பற்றுக் காரணமாகப் பிறந்த ஆசையால் அவ்வாறு மனம் அலையும்.

2893. அறியாமை மயமான தத்துவக் காட்டில் புகுந்தவர் சிவபூமியான வெட்ட வெளியைக் காண மாட்டார். உடல் என்ர கூட்டில் புகுந்த பஞ்சம் பிராணன் என்ற ஐந்து குதிரையும் உடலைச் சீழ இருக்கின்ற மன் மண்டலத்தைக் காமக் குரோதம் முதலிய ஆறு ஒட்டகமும் மறைப்பினைக் செய்யாவிட்டால் சீவன் சீவதுரியம் பரதுரியம், சிவதுரியம் என்ற மூன்றையும் கடந்து விளங்கும்.

2894. ஆடையும் நறுமணப் பொடியும் மினுக்கு எண்ணெயும் எழுத்தணியும் இடையணியும் கையணியும் என்பவனவற்றால் அலங்கரிகப்பட்ட பெண்களைக் கண்டு மோகம் கொண்டவர் பாறை மீது வைத்த ஆடை பறப்பதுபோல் காமம் முதலிய ஆறுவகையில் வருந்திக் கெடுவர்.

2895. துருத்தியைப் போன்ற உடலின் உச்சியுள் உள்ள மலை போன்ற தலையின் மீது மனத்தின் விருத்தியைக் கண்காணிக்க காலை நண்பகல் மாலை என்னும் மூன்று காலங்களிலும் அறிவுவானப் பெருவெளியை ஞான சாதனை செய்பவர் நாடுவர். அவரை வருத்திடும் மலை போன்ற தீய வினைகளைத் தவிர்ப்பவளாகிய பராசத்தியுள்ளாள். அவ்வாறுள்ள சத்தியின் துணையில்லாது சிவனது ஊரை அடைய முடியாது.

2896. அறம் என்கிற கிளியும் பாவமாகிய பருந்தும் இன்ப துன்மான மேளத்தைக் கொட்ட இன்பத்தில் பற்றும் துன்பத்தில் வெறுப்பும் இல்லாமல் திருந்திய சீவராகிய மங்கையர் சிவத்துடன் சேர்ந்தனர். அதனால் அவர்கள் தவத்தால் அடையும் வான் மயமான உடல் பெறுவர். அவ்வாறு இருக்கின்ற வானப் பேற்றில் சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பர்.

2897. பொறிகளாகிய பறவை சத்தம் முதலியவற்றை அனுபவித்துப் பின்பு அதனுள் அழுந்தி அவ்விடம் அனுபவமான உணவை அனுபவிப்பதால் என்ன ஆகும். வெம்மை உடைய மூலாக்கினியில் உணர்வாகிய நெய்யைச் சொரிந்து அதனைத் தூண்டிச் சூழ்ந்த அண்ட கோசத்தினது இருளைப் போக்கி ஒளிமயமாக்கும் தன்மையைப் போக்கும் தன்மையை அறிபவர்க்குச் சிவமாகிய பயனை அடைய இயலும்.

2898. நிர்க்குணப் பிரமத்திடம் சத்தம் பரிசம் ரசம் கந்தம் ஆகிய தளிர் இல்லை. ஒளிமயமான மலர் உண்டு .விடய வசனையாகிய வண்டு இங்கு இல்லை. நிர்க்குணப் பிரமத்தின் அறிவான தன்மையை எவரும் காண முடியாது. ஆனால் நிர்க்குண்மான பொருள் கீழேயுள்ள நற்குண்மான வேரிலும் கலந்துள்ளது. ஆனால் நிர்க்குணத்தின் இருப்பு சகுணமான நாளீல் இல்லை. உலகத்தில் காணப்படும் மலர்களாகிய கொத்துக்கள் அங்கே இல்லை. ஆனால் அனுபவிக்கப்படும் ஒளி என்னும் மலர் உண்டு, அந்த ஓலிக் கதிர்களை வேறாகப் பிரித்துச் சூடும் தலை இல்லை. கரும காண்ட அறிவகிய கிளையில் ஞானமான நிர்க்குணத்தைக் காண முடியாது.

2899. ந்ற்குணமான கரையைக் கடந்து நின்ற நிர்க்குண பிரமமாகிய ஆலமரம் கண்டு குணங்கள் அற்ற நிலத்தைப் பொருந்தி நிற்பர். மக்கள் இனத்தில் மேன்மை பெற்ற அவர் அஸ்மிதை, ராகம், துவேசம். அபினி வேசம் அன்னும் ஐந்து கிலேசங்களை அறிந்து நிர்க்குணப் பிரமத்திடம் தாழ்ந்து அதன் பயனை அடைபவர் ஆவார்.

2900. ஒலியுடைய இல்லறமாகிய வழியிலே அஞ்ஞானமாகிய காடு இரு காதம் உள்ளது. அந்தக் காட்டில் வழிச் செல்பவரைக் கட்டிப் போடக் கூடிய ஐம்புல வேடராகிய கள்வர் இருக்கின்றனர். அந்த ஐம்புலனாகிய வேடரைச் சிவ ஒளியாகிய வெள்ளர் நாதமாகிய ஒலியை எழுப்பி அழைக்க அக்கள்வரான வேடர் மீண்டு வந்து சகசிரதளமான கூரையில் நிலை பெற்றனர்.

2901. அறிவும் அறியாமையும் ஆகிய கொட்டியும் ஆம்பலும் பூத்துள்ள இல்லறமாகிய கடலில் நாம ரூபமான எட்டியும் வேம்பும் விட்டு சத்து சித்து ஆனந்தமான வாழையும் கற்கண்டும் தேனும் கலந்து அனுபவிக்காதவர் உலக போகமான எட்டிப் பழத்தை நாடிக் கெடலானார்.

2902. காரணம் அற்ற சிவம் பொருந்திய உயிர் பிருதுவியின் இயல்பான சீவ சஙகல்பத்துக்கு ஏற்பப் பொருந்தி மூடியுள்ள பாசத்தில் சீவன் உருவத்தால் ஆன பயனை உள்ளத்தில் வழி அனுபவிக்கும் வலக்கண்ணில் விளங்கும் உயிர் உள்ளத்தின் வழியாகத் துன்பத்தையும் அடைகின்/றது.

2903. சுட்டறிவான அற்ப வளம் பொருந்திய புன்செய்யில் மேய்கின்ற ஆன்மாக்களான பசுகளுக்கு உதவியவன். சிவன். அவன் அவற்றைச் சுட்டறிவின் எல்லையைக் கடக்கச் செய்து அகண்ட சொருபமாகிய தன்னை அடைந்து பொருத்தமான தகுதியை அளித்தபின் அல்லாமல் சுட்டறிவாகிய புன்செய் நிலத்தை நாடிச் செல்லும் மனம் அகண்ட ஞான வடிவை அடைய இயலாது.

2904. வலக்கண் ஆன அகன்ற இடத்தின் நீரில் சூரியக்கலையான செந்தாமரை மலர்ந்தது.. இடக்கண் என்ற நீர் நிலையில் சந்திரக்கலை என்ற கருங்குவளை மலர்ந்தது. ஞானப் பயிற்சியால் இரண்டையும் சேர்த்துச் சுழுமுனையான விட்டத்தில் விளங்க வல்லார்க்கு ஆழ்ந்த இடமான நீர் நிலையில் விளைந்த ஆனந்தம் என்னும் முலாம் பழம் கிடைக்கப் பெறும்.

2905. காமம் குரோதம் முதலிய ஆறு பறவைகள் ஐம்பூதமயமான உடலில் இருக்கின்?றன. இவை தலையின் மீதுள்ள நூறு நாடிகளான பறவைகளால் உண்டு செல்லப்படுபவன. ஆனால் உயிர் ஏழு ஆதாரங்களையும் ஏறிக் கடந்தால் பின்பு தவறாமல் சிவன் விளங்கும் பதியைச் சீவன் அடையக் கூடும்.

2906. குடைதல் முதலிய செய்கைகளைச் செய்து திளைக்கின்ற யோனி என்ற குளத்தில் வட்டத்தால் குறிக்கப்படும் ஆகாய சம்மியம் பொருந்தி இயல்பான ஊற்றுப் பெருகும். வீரியமான சத்தியை வெளியே விடாமல் நடுநாடியாகிய கயிற்றால் கட்டி உடலுள் நிலை பெறும்படி செய்த பின்பு இதனால் ஒளி யாவர்க்கும் உண்டாகும்.

2907. உலகத்தைச் சூழ்ந்துள்ள ஏழுகடல்களும் உலகில் உள்ள மேலான எட்டு மலைகளும் சூழ்ந்துள்ள வானத்தில் தீ காற்று நீர் தாழ்ந்துள்ள பெரிய நிலம் என்பவை இடம்பெற்ற தன்மையை உண்ர்ந்து நீண்ட காலம் வாழ விரும்புவர்க்கு அந்த வான் ஆலயமாகும்.

2908. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தழுவி வெப்பம் உண்டாகச் செய்து கருப்பையில் உடலை உருவாக்கிவிட்டுக் காமச் செயலின் தன்மையை விட்டனர். கருவை இப்படி அமைத்த பின்னர் உடம்பில் உள்ள பொறிகள் மயக்கத்தினின்று நீங்கி பொறியின் வழி போன மனம் முன்னதாக இவை பின்னாக நின்றன.

2909. திருமணச் சடங்கில் மேளமான கொட்டும் உரிமையான தாலியும் இரண்டே. இந்த இரண்டையும் விடக் களவு வழி விருப்பமான பாரை வலிமையானது. மற்றவர் அறியச் செய்த கொட்டுக்கும் தானே உரிமையாய் அணிந்த தாலிக்கும் இயல்பாய் உண்டான விருப்பத்துக்கும் இறைவன் அருளால் அமையும் விருப்பமே வன்னையுடையதாகும்..

2810. மாறிக் கொண்டே இருக்கும் கயல் மீனைக் கண்டவர் உலகில் பிறந்து இறந்து கொண்டே இருப்பர். சிவம் என்னும் முயலை அடைய வேண்டும் என்று சரியை கிரியை யோக நெறி நிற்பவர் சிறிது சிறிதாக ஞானத்தை அடைந்து உய்வர். இவற்றை விடுத்து தருக்க வாதத்தில் ஈடுபடுபவன் மறைகள் போற்றும் நிலைத்த பொருளான சிவமாய் ஆக முடியுமா முடியாது.

2811. ஆசை என்னும் கோரைப் புல் முளைத்த உள்ளம் என்ற குளத்தில் அதன் பாசமான ஆரை படர்ந்து நீண்டு விளங்கியது. ஆரையும் கோரையும் நிரம்பிய அக்குளத்தில் மீனைப் பிடிக்கும் நாரை போன்ற நீர் நிலையில் உயிராகிய மீனைப் பிடிப்பவன் ஆவான்.

2812. வளம் குறைந்த கொல்லை நிலமான அ உ ம என்ற முக்காதமும் அதன் காடு பொன்ற அர்த்த மாத்திரைப் பிரணவமும் இந்த இரண்டு உடம்பிலும் தலையிலும் ஆன்மாவைப் பிணித்திருக்கும் இரு நெறிகள் ஆகும். உடலும் தலையும் என்ற எல்லைக்குள் கட்டுப்படாமல் செயல்படுபவர்க்கு விரைவில் பிரண்வத்தைக் கடந்து ஓலி ஞானத்தைப் பெற்றுச் சிவ பூமியை அடைவது கூடும்.

2813. அகண்ட சிவத்தை அடையும் தவமான உழவைச் செய்து உள்ளம் ஒருமையடைந்த காலத்தில் எண்ணம் என்னும் மழை பெய்யாமல் சிவ பூமிக்குரிய சத்தி பொருந்தி மல பரிபாகம் உண்டாக்கி வினை போகத்தை கொடுக்காது. வளரும் ஒளிக்கதிர்கலையுடைய சிவன் பொருந்தி விளங்குவான்.

2814. சீவன் தொழிலில்லாமல் இருப்பினும் உயிரின் அதிபதியான சூரியனின் இயக்கம் பன்னிரண்டு இராசிகளிலும் சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் உடலைக் கடந்தபோது விளங்கிய சந்திர மண்டல ஒளி பெருகவே தேன் கசியும் சிவக்கனியின் இன்பம் காக்க இதுகாறும் வருந்திய ஐம்பொறி அறிவைச் செயல்படாதவாறு சிவன் அடக்கிக் கொண்டான்.

2815. பிரணவம் என்ற தோணி அதில் ஏறி அறிவு வானம் என்ற கடலில் போய் ஒளி பெறுவதும் இருள் விடுவதுமான வாணிகத்தைச் செய்து விருத்தியை அடைய விரும்பிய சீவன் மாயா காரியமான நீலியைப் பற்றுகின்ற உள்ளத்தின் தன்மையை சிறிது சிறிதாக விட்டுத் தேனைச் சிந்தும் கனியைப் போல் இன்பம் தரும் குளிர்ந்த சந்திர மண்டல ஒளியில் மகிழ்ந்து மூழ்கி இருப்பான்.

2916. தாமதம் இராசதம் சாத்துவீகம் ஆகிய ஆற்றிலே நனவு கனவு சுழுத்தி என்னும் மூன்று வாழைகல் உள்ளன. அங்குச் செந்நிறம் உடைய அக்கினி மண்டல விளைவாக ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலர் சேர்க்கை நிறைந்து கிடந்தன. ஆனால் சிவ அன்பு உடைய்வர் இவற்றினின்று நீங்கியவர் பொய்யை மெய் போல் பேசும் மங்கையரின் காமச் சுவையான மலரின் மணத்தை விரும்பித் தூய்த்துக் கொண்டே சுழுமுனையில் தம் மனத்தை நிறுத்தி நீடு வாழ்ந்தனர்.

2917. மூலாதாரம் என்ற அடியும் தலையாய முடியும் உடைய ஆத்தி போன்ற முதுகுத் தண்டு முடியும் உச்சியில் மூங்கிலின் முக்கண் போன்ற சந்திரன் சூரியன் அக்கினி அகிய மூன்?று கலைகள் இருக்கின்றன. முக்கலைகளும் சாதனையால் வளர்ச்சி பெற்று ஒன்றான போது கொடியும் படையும் போல் தீமையைத் தரும் ஞானேந்திரியம் கன்மேந்திரியங்கள் கெட்டு ஒழியும். அப்போது அங்கு சங்க நாதம் ஒலிக்கும்.

2918. தூயமையின்மையும் விருப்பமும் பகைமையில் சீற்றமும் தீமையில் அடக்கமும் நன்மையிலே எரிச்சலும் எங்கும் பொருந்திக் கிடந்த உள்ளத்தில் பொருந்தாமல் சிவத்துடன் பொருந்திச் சமம் செய்து நிறுத்திய பின்பு உயிரின் குறை சிறிது சிறிதாய்க் குறையும்.

2919. தாமரை அரும்பைப் போன்று எழும் சகசிரதளமாகிய மொட்டு தலையில் உண்டு. பாசத்தினின்றும் நீங்கியபோது அம்மொட்டு மேல் முகமான சகசிரதள மலராக விரிவதைக் காணலாம். உடல் பற்று நீங்கித் தத்துவக் கூட்டத்தால் ஆன உடல் கெடும்படி ஒளியாகக் கண்டு பற்று நீங்கியவர்க்கு அன்றிச் சகசிரதளமலர் விரிவதைக் காண முடியாது.

2920. நீர் இல்லாமல் உணர்வு பாயும் சகசிரதளமான நிலத்தில் மரகத ஒளி விளங்கும் ஞான சாதனையைச் செய்து இந்த உண்மையைக் காணவல்லவர் இலர். மிக்க மழையின்றிப் பெருகும் உணர்வாகிய நீரின் தன்மை பொறிகளின் வயப்பட்ட மனம் என்ற விலைச்சல் இல்லாத நிலத்தில் பொருந்தி நில்லாது என்பது புலப்படும்.

2921. அறியாமையில் மூழ்கிக் கிடந்த உயிர் என்ற கூகை குருவால் உணர்த்தப் பெற்று ஒளீயான குருந்தின் மீது ஏறி மூன்று குணம் கொண்ட மாயையே இந்த உலகத்துக்குக் காரணம் என்று அறிகின்ற போது பாம்பு போன்ற குண்டலினி சத்தி தலைவின் நடுவே உள்ள மேல் முகமான சகசிரதளத்தில் பொருந்தி நாதத்தை எழுப்பி விளங்கும். பொறிகள் வயப்பட்டு இறந்து பிறந்து கொண்டிருந்த உயிர் இறந்து ப்[றவாத சிவமே ஆகும்.

2922. வாழை போன்ற இன்பமும் சூரை போன்ற துனபமும் முன் செய்த இரு வினைகளுக்கு ஈடாக உயிர்களுக்கு வந்து பொருந்துகின்றன. இன்பத்தை விடத் துன்பம் வலியது என்று உரைப்பர். இன்பமும் துன்பமும் உடல் பற்றால் ஏற்பட்டவை என்று அறிந்து கடிய வேண்டும். கடிந்து நிலைத்த சிவத்தை இடமாய்க் கொண்டு வாழ்வதே முறையாம்.

2923. சுவாதிட்டானமான நிலத்தை தோண்டி நீண்ட உப்பு நீர் நிலையான உடலில் செலுத்தி அந்தக் கொல்லைக்குரிய சிவன் என்ற வேடன் புணர்ந்து கொண்டு வரும் வீரியம் என்ற கொழுந்து மீனை விடுவதை நீக்குங்கள். அப்போது யாம் ஒருவர் வேண்டினாலும் குறைவு படாத சிவமான செலவம் கிட்டுவதில்லாமல் சீவன் பக்குவப்பட்டு சிவமாகும்.

2924. தட்டிக் கொண்டிருக்கும் அசைவு உணர்வில் சீவன் உடல் விருத்தியை அடையும். அங்குக் கூப்பிட்டு அழைக்கும் சங்கின் நாதம் உண்டு. அந்த ஓசை வழியே போய்ச் சிவனை நாடுவதில் சிவனுக்கு மகிழ்வு உண்டாகும். அந்த நாட்டம் சந்திரனுக்கும் சூரியனுக்கும் சுழுமுனையான பதத்தைத் தரும் என்ற உண்மை ஆராய்பவர்க்குப் புலனாகும்.

2925. உடம்பான குடையை நீக்கிச் சித்தம் என்ற கோவில் உடையவன் நாத சம்மியத்தை நோக்கிச் சென்றது. ஆனால் விடயமான படையை எண்ணிய போது சித்தம் நாதத்தினின்றும் நீங்கி உடலை நோக்கியது. ஆன்மாவாகிய உடையவன் புத்தி என்ற அமைச்சருடன் உண்மையை உணர்ந்ததும் ஊர்வனப் போல் ஒன்பது துளை வழி போவது உடலைக் கடந்து விளங்கும்.

2926. வெளிப்படும் சந்திரக் கலையாலும் உள்ளே புகும் கதிரவக் கலையாலும் உடலில் உள்ள ஒன்பது துளைகளிலும் சேயல்படுவன ஆயின. குண்டலினியும் சந்திர கலையும் நிவிருத்தி பிரட்டை வித்தை சாந்தி ஆகிய நான்கு கலைகளும் பாகனான உயிர் அறிந்து செயல் படாவிடில் பன்றியைப் போல் இழிந்த நிலையை அடைபவன் ஆவான்.

2927. காமம் குரோதம் முதலிய அறு பகைகளான பாசி படர்ந்து சித்தம் என்ற நிலையில் பாசத்தில் பற்றுக் கொண்டிருக்கும் சீவனான கொக்கு விடய அனுபமான இசையைத் தேடி உண்ணும். ஒளிமயமான கொடியை உடைய சிவனான போர் வீரனின் துணை கிடைத்தவுடன் இருள் என்ற பாசம் கீழ்படுத்தப்பட்டு நீங்கிவிடும்.

2928. குடத்தைப் போன்ற தலை என்ற மலையின் மீது மேல் மூகமாக விளங்கும் சகசிரதளம் என்ற கொம்பு உள்ளது அந்தச் சகசிரதளத்தின் மீது உணர்வு என்ற பிராணன் போய் மோதும். அங்குச் சிவானந்தமான மலரினுள்ளே சிவமாகிய வண்டு பொருந்தி நாதமான ஓசையை எழுப்பிச் சீவனை உறவு கொள்வான்.

2929. வீணையின் ஓசையும் புல்லாங்குழல் ஓசையும் கலந்து ஒலிக்கச் செய்கின்ற சிவன் பொருந்தி முறையான கேவல கும்பகம் அடையச் செய்தான். அச்சமயத்தில் தன்னைக் கொடுப்பதும் சிவத்தைக் கொள்வதுமான வாணிகம் அமையும். முன்பு நம் உரிமையும் அச்சிவனுக்கு ஆகியது.

2930. சிவானந்தம் தருபவருடன் கொண்டு கொடுத்து வாணிகம் செய்த தன்மையைத் துரிய பூமியுள் போய் அனுபவித்தவர்க்கன்றி ஆராய்ச்சி அறிவால் அறியப்படும் தனமை உடையதன்று. சந்திர மண்டலத்தை அடைந்து இருளே தம் உண்மை வடிவம் என்பதை அறிகிலர். அத்தகைய பூமியில் தஙகி அங்கு இருப்பவரில் சிலர் உண்மையகவே இவ்வுலகத்தை துறந்தவர் ஆவார்.

2931. சகசிரதள மலர் விளக்கம் பெற்றது. அது பொன் நிறம் கொண்டு விளங்கியது. அதனுடே இருக்கும் புன்னைப் பூவின் மகரந்தத்தூள் போன்ற மலமான அணுக்கள் இரண்டு பக்கங்களிலும் ஒதுக்கப்பட்டன. குற்றம் இல்லாத சிவன் செயல்படும் இடம் இதுவாம். இது காதல் உடைய சீவனும் சிவனும் பொருந்துகின்ற சிவபூமியாகும்.

2932. ஆன்மாவோடு பொருந்திய தத்துவங்களும் தம்தம் விருப்பப்படி போய் அகமாகிய உடலில் அக்கினியை மூட்டி நிற்கும் அச்சமயத்துச் சிவன் அழிவற்ற இடத்துக்கு வழிகாட்டி ஆன்மாவில் நின்று அச்சுறுத்தினால் ஐந்து கோசங்களாகிய அன்ன மயகோசம் முதலியவற்றைக் கடக்க இயலும்.

2933. சாதகம் செய்யும்போது நிட்டை கூடாது. கலைந்து விடுமானால் வெளியே போய்க் கிரியை முதலியவற்றைச் செய்வதனால் என்ன பயன் ஏற்படும். முதல்வனை முன்னிலையாகக் கொண்டு நிஷ்டை கூடும் வகையில் ஒருமுகப்படுத்தி உபதேசம் செய்து தந்தவர் பயிற்சியாளர்க்கு மன ஒருமைப்பாடு உண்டாகாத போது என்ன செய்வார்.

2934. ஒளி உண்டாயிற்று என்று சிவ தத்துவமான பறவைகள் ஒலியை எழுப்ப அந்த ஓளியானது தோன்றிய போது சிற்சத்தி தலையிலே பொருந்தி ஒலி எழுப்பிய அச்சிற் சத்தியோடு சீவன் பர லோகத்தில் திளைக்கும் சீவனுக்கு எப்போதும் ஒலியுடன் பொருந்தி விளங்குவதால் பொழுது விடிவது என்பது இல்லை.

2935. அறிவாகாயப் பெருவெளி என்ற துறையில் சிவனைக் கொண்டு சேர்க்கப் பிரணவம் என்ற தோணி ஒன்று உள்ளது. பிரணவத் தோனி தோன்றாத போது நான்முகன் முதலிய ஐவரும் நிலை கொள்ளுதலும் தன்னைத் தந்து சிவத்தைக் கொள்ளும் வாணீகம் செய்யும் சீவன் அறிவாகாயப் பெருவெளிக்குப் போகும் நெறியில் இடைப் பகுதியில் உடல் பற்றான ஆணி கழன்றால் சிவம் பொருந்திச் சீவன் சிவம் ஆகும்.

#####

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

சிவசொரூப தரிசனம்!

2856. சொல்லப் பெறும் மயிர்க்கால் தோறும் இன்பம் தேக்கிய வெளியேயும் உள்ளேயும் தடைப்படாத ஆனந்தமே உருவம், அருவுருவம் அருவம் என்னும் மூன்று சொருபங்களையும் கடந்து அப்பால் வேதத்தில் சொல்லப் பெறும் சிவத்தின் மேலான வடிவம் ஆகும்.

2857. சிவபெருமான் உணர்வாகவும் அவ்வுணர்வு வெளிப்படும் உயிராகவும் விளங்குபவன். அவனே ஓர் உயிர் மற்றோர் உயிரைப் புணருமாறு செய்பவன்.. பிணங்கும் படியும் செய்பவன். இங்ஙனம் ஒழுங்கு செய்யும் அவனை இன்ன தனமையன் என எண்ணத்தினால் வரையரை செய்ய முடியாது. ஆனால அவன் ஆறு ஆதாரங்களில் சுவாதிட்டான மலரில் பொருந்தியுள்ளவனாக உள்ளவன்.

2858. மேல் மந்திரத்தில் சொல்லியபடி பொருந்தி நின்ற சிவனது திருமுன் இருப்பதாக எண்ணுங்கள். அப்போது நினைப்பவரின் விருப்பைத் தானே அறிந்து நிறைவேற்றுவான். அவன் ஐயங்களைப் போக்கும் வேத வடிவுடையவன் ஆவான். பெருந்தனமையுடைய தவத்தால் உணரத்தக்கவன். ஆருயிரின் அறிவு நிலையமான தலையிலிருந்து தெளிவினைச் செய்பவனும் ஆவான்.

2859. திருவருளால் விளக்கம் பொருந்திய உள்ளக் கண்ணைத் திறந்து பார்த்தேன். பார்க்கவும் என்னில் நின்ற சோதியும் தலைவனும் ஒப்பில்லாதவனும் பொன் போன்ற திருமேனியும் சடையும் உடையவனும் ஆகிய சிவன் என்னிடம் பொருந்தினான் நீ அறிவுமயமானவன் என உணர்த்தினான்.

2860. சிவன் சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் தனித்து நிற்பவன் ஆவான். சீவன் முக்குணவயப்பட்ட போது சிவானந்த்தத்தை விளைவிக்கும் பேரொளி அவனிடம் பொருந்தாது. சீவர்கள் நிர்க்குணத்தைப் பெற்றால் தூய்மையை அடைந்து பிரமதுரியத்தில் விளங்குவர். அத்தகைய துரியத்துள் பேரொளியாய் அவன் விளங்குவான்.

2861.சிவபெருமான் பரன் அல்லன். அதுபோல் உயர்ந்த பராபரனும் அல்லன். ஆர்வத்தால் மட்டும் அடையப் படுபவனும் அல்லன். தலையில் மீது விளங்கும் ஒளி மண்டலன் அல்லன். இவற்றில் உடையவன் அல்லன்,. சிவன் அவையாவையும் அவை அல்லவாயும் உள்ளவன். இன்பத்தைத் தரும் அரனும் அல்லன். அவன் ஆனந்தத்துக்கு அப்பாற்பட்டு இருப்பவன்.

2862. முத்தியும் சித்தியும் கைகூடிய ஞானம் உடையவர். பத்தியில் பொருந்திப் பரமம் நன்மை அடைந்து மாட்சிமையுடைய சத்தி பதிவுற்றோர்க்குச் சிவம் பொருந்தலால் கிரியையினின்று நீங்கியவர் அவர் பேரின்ப ஞானியாவர்.

2863. துரியாதீதநிலை சொல்வதற்கு முடியாத பாழ் ஆகும். அருமையான துரியாதீதத்தை அடைந்தால் பிரிதலும் குவிதலும் இல்லாமல் மனம் சிந்திப்பதின்றி விளங்கும் தத்துவச் சார்பான தன் உருவம் கெட்டுவிடும். அதன் நிலையைச் சொல்லாமல் எப்படி சொல்ல முடியும்.

#####

முத்திபேதம் கரும நிருவாணம்!

2864. மறைகளில் சொல்லப்படும் வீடு பேறானது துரிய நிலையில் முறையாய் உயிர் பரம் அவற்றோடு பிரிவின்றியுள்ள சிவன் ஆகியவை பொருந்தி நிற்கும். அவ்வமயத்தே ஆன்ம வடிவமாகிய பரம் சிவ வடிவத்தில் இலயம் அடையும். அடையக் குற்றம் அற்ற நிருவாண நிலை உண்டாகும்.

2865. உலகப் பற்றுகளை விட்டவர் பற்றி நின்ற மேலான பொருளும் கல்வியைக் கற்று அதன் முடிவான சிவஞானத்தை அடைந்தவர் விரும்பும் கண்ணுதலும் கல்வியின் முடிவினை உணர்ந்தோர் பொருந்தி நிற்கும் என் சோதியும் ஆன சிவபெருமானை அடைந்து பொருந்தியவர் பேச்சை விட்டு நிற்பவர் ஆவர்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:24

ஊழ்! சிவதரிசனம்!

Written by

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

#####


ஊழ்!

2847. தம் மனத்தில் சிவத்தை அறிந்த ஞானியர் கூர்மையான வாள் கொண்டு வெட்டித் துன்புறுத்தினால் என்ன. கலவைச் சந்தனம் பூசி மகிழ்ந்தால் என்ன. தலையில் உளியை நாட்டி இறக்கும்படி செய்தால் என்ன. பேராற்றல் உடைய நந்தி அமைத்த விதிப்படியே இவையெல்லாம் நடைபெறுகின்றன என்று எண்ணித் தம் நிலையினின்று தாழ மாட்டார்கள்.

2848. உயிர்தான் முன் செய்த வினையின் வழியே இன்பமும் துன்பமும் அமையும். அவ்வாறின்றி வான் பூதத் தலைவரான சதாசிவன் முன்னம் உயிர்களுக்காக இவற்றை நியமிக்கவில்லை. ஆதலால் அத்தலைவனை நோக்கின் சிரசின் வழியே மேற் சென்று நான் முன்னம் செய்த தவமே மேலான இடத்தைத் தந்தது.

2849. ஆற்றில் இயல்பாய் வந்து அடையும் நுட்பமான மணலை அந்த ஆறே சுமக்கவில்லை. பங்கிட்டுக் கொண்டு ஆறீட்ட மேடு பள்ளங்களைத் தூர்ப்பவர் எவரும் இல்லை. அதைப்போல் நான் செய்த வினைக்குரிய அனுபவம் எனக்கே உண்டு எனச் சொன்ன நான் திருநீற்றொளியில் விளங்கும் பெருமானைப் பெரும் பேறாகக் கொண்டு அவனை விட்டு நீங்காது இருப்பேன்.

2850. வானின்று இடி விழுந்தால் என்ன. பெரிய கடல் பொங்குவதால் அழிவு உண்டானால் என்ன. காட்டுத் தீயினால் சூழப்பட்டு உடல் எரிந்து அழிந்தால் என்ன. ஊழிப்புயல் காற்று அடித்துப் பொருள் அழிவை ஏற்படுத்தினால் என்ன. நான் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. எம் தலைவனையே ஒன்றியிருப்பதினின்று வழுவமாட்டேன்

2851. ஓர் மதயானை கொல்வதற்காக என்னைத் துரத்தினால் என்ன. கூரிய அம்பானது உடலில் பாய்ந்து அறுத்தல் என்ன. காட்டில் உள்ள புலி துரத்தி வளைத்தால் என்ன. ஞானபூமியில் எம் பெருமான் எனக்கு அளித்த ஞானத் தொண்டைச் செய்வதினின்றும் நான் நழுவமாட்டேன்.

2852. எடுத்த உடலுக்கு ஊறு உண்டாகுமாயின் வேறொரு உடலை வழங்குவதற்கு இரைவன் இருக்கின்றான். மிக்க மழை மழையின்மை முதலியவற்றால் நாடு கெடுமாயினும் நம்மவர் நாட்டை விட்டு வேறு நாட்டுக்குப் போய் வாழ்வர். குடியிருந்த வீட்டுக்குப் பழுது ஏற்படுமாயின் வேறு ஓர் வீட்டுக்குப் புகுவதுபோல் வேறு ஓர் உடல் வாழ்வு கிட்டும். சிவஞானம் பெற்றவர்க்கு இவ்வுண்மை நன்கு விளங்கும்.

#####

சிவதரிசனம்!

2853. சிவத்தை எண்ணிக் கொண்டிருப்பவ்ர்க்குச் சிந்தை வேறு சிவன் வேறு என்பது இல்லை. சிந்திப்பவரின் உள்ளத்தில் சிவன் வெளிப்பட்டு அருள்வான். சிவஞானத்தால் தெளிவடைந்த ஞானியர்க்கு அவர்களின் எண்ணத்திலேயே சிவன் சிறந்து விளங்கினான்.

2854. சொல்லையும் மனத்தையும் கடந்தவன் சிவன் என்று வேதங்கள் கூறும். ஆகவே அவனை அருளால் கூர்ந்து நோக்குங்கள். அங்ஙனம் நோக்கப்படும் பொருள் மிகவும் நுட்பமானது. அதற்குப் போக்கும் வரவும் கேடும் இல்லை. இவ்வாறான உண்மையை உண்ர்ந்து சிவனை ஆராய்ந்து தளிபவர்க்கு அதுவே தேடும் பொருளாகும்.

2855. எம் தலைவன் தலைக்கு மேல் விளங்கும் ஆனம் ஒளியாய் அதன் மீது விளங்கும் சிவமய் விளங்குபவன். அவன் பரவியுள்ள தன்மையைக் கடந்து பேராற்றலும் பேரறிவும் உடையவன். எதனாலும் மறைக்கப்படாத தூய்மையுடைய நுண்ணிய சுடர் வடிவானவன். தானே எலாவற்றுக்கும் ஆதாரமானவன். உயிர்கள் மனம் பொறிகளுடன் கூடித் தன் அறிவால் அறியப்படாத அரனாகவும் இருக்கின்றான். உலகத்துக்கு அருள் செய்பவனாகவும் அப்பெருமான் விளங்குகின்றான்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:23

சொரூப உதயம்!

Written by

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

சொரூப உதயம்!

2835. சிறந்த குருவான் சிவன் தத்துவங்களை விட்ட ஆன்மாவில் பொருந்துவான். பொருந்தி அஃது உரம் பெற்று எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்து விளங்குவான். அப்படி ஆன்ம சொருபத்தில் நிலைபெற்ற சிவன் அரிய துரிய நிலையில் பொருந்தி விளங்கினான்.

2836. நிலைகுலையச் செய்கின்ற இயல்புடைய ஐம்பூதகளாகிய நிலம் நீர், அலைத்தலைச் செய்யும் காற்று தீ வான் என்னும் யாவும் அவற்றைக் கடந்தும் மண்முதல் விண்வரை உயர்ந்து நின்றும் விளங்கும் சிவனை ஓர் எல்லைக்கு உள்ளாக்கி வணங்குவதை ஆறியேன்.

2837. அங்ஙனம் விளங்கும் சோதியை நான்முகன் திருமால் முதலிய தேவர்களும் மற்றவரும் இறைவா என்று வணங்கி வழிபடுவர். எம் ஒப்பில்லாத உலகத் தலைவனான எம் இறைவன் அவரவரிடம் உள்ள சோதியில் பொருந்தி இயக்கி இருந்தான். அவரவர்களைக் கடந்தும் சமஷ்டி நிலையில் புவனங்களுக்குத் தலைவனாகவும் விளங்கினான்.

2838. சமயங்கள் வரையறை செய்துள்ள நெறி முறைகளை அறிய முடியாதபடி தடையாக நிற்கும் பொறுமைக் குணத்தை அழிக்கும் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம் மாற்சரியம் மண்ணாசை பொன்னாசை ஆகிய எட்டும் அவற்றால் உண்டாகும் தீமைகளும் உண்ர்ந்து சிவத்துடன் பொருந்தி நின்றவர் தேவர்களுக்குத் தலைவராய் விளங்குவர்.

2839. நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவகை தெய்வத்தில் ஒருவனான உருத்திர மூர்த்தி அவற்றொடு ஒருவராய் அவற்றில் வேறாய் இருந்து இயக்குவன். அதைப்போல் சிவன் சிவ முத்துரியத்தில் சீவர்களைச் செம்மையடையச் செய்யும் நெறியில் சிவனும் ஆவான் என்று வேதாகமங்கள் உரைக்கும்.

2840. சிவமானது அருவமாய் இருந்து சகல வடிவங்களையும் கூடியிருக்கும் தனக்கு ஒரு மூலம் இன்றித் தான் எல்லாவற்றுக்கும் மூலமாகும். அருள் நிலையையும் கடந்து விளங்கும் மாயப்பிரான் அவனே குருவாய் வந்து சீவனில் வெளிப்பட்டு அருள் செய்தாலன்றி யாராலும் கூட முடியாது.

2841. சிவத்தின் திருவருளை இடிவிடாது சிந்தித்திருப்பவர்க்கு அவரது உள்ளம் இருள் கெட்டு ஒளியாய் மாறும். அத்தகையோர் மரணத்தையும் வெல்வர். அன்னார் தேவவுடல் பெற்று விளங்குவர். இங்ஙனமாகவும் உண்மையை உண்ர்ந்து பயனடைவர் உலகில் யார் இருக்கின்றார்கள்.

2842. பரஞ்சோதியான பேரொளிப் பிழம்மைப் பற்றாக கொள்ள அது காரணமாக அப்பரஞ்சோதி என்னுள் பொருந்த இருந்தேன். அதன் பின்பு அதனுள் நான் அடங்கியிருந்தேன். அப்பேரொளியானது தன்னைப் பற்றிய உண்மையை நாதம் மூலமாக வெளிப்படுத்தி அருள்வதைப் பார்த்தேன்.

2843 இயற்கை இயல்பு வடிவம் குணம் தொன்மை என்பவை பொருந்தி அரிய நீலமலர் விளங்குவதுபோல் ஆதி சத்தி இச்ச சத்தி ஞான சத்தி கிரியா சத்தி என்னும் நான்கும் கலந்து நிற்கும். சிவ வடிவான குரு சீவனுக்கு இன்பம் தருபவனாய் விளங்குவான்.

2844. சிவ சொருபத்தைக் கண்டு பேச்சற்று மோன நிலையில் ஆனந்த வடிவமான சீவன் அகண்ட சத்தியைக் கண்டபோது அதன் இச்சை ஞானம் கிரியை ஆகியவை அகண்டமாய் அ கரம் பொருந்த உ கர ம கரமாய்க் க்ண்டத்தில் ஆக அர்த்த மாத்திரைப் பிரணவத்தில் ஒளியாகப் படர்ந்து விளங்கும்.

2845. தலையின் கீழ் உள்ள கழுத்துப் பகுதியில் நினைவை நிறுத்தித் தவம் செய்து இதயப்பகுதியில் செயற்படும் கிரியா சத்தித் தலைவனை நான் ஊன் போதிந்த உடல் இயல்பைக் கடந்து சந்திர மண்டலத்தில் விளங்கும் ஒளியில் கண்டு கொண்டேன்.

2846. மனத்தில் உள்ள சிவன் எப்படி ஒளிர்ந்து உயிர்களை ஆட்கொள்கின்றான் என்பதை அறிந்தேன். நான் அவனை புகலிடமாய்ப் போய் அடையும் போது நெறி இது என்பதையும் அறிந்தேன். வேறு ஒரு பாதுகாவல் தேவையில்லை. இனி நான் போய் அடையும் இடமும் வேறு இல்லை. நாம் அனைவரும் போய் அடையும் முதல்வனும் நான் எனச் சொல்வதில் பிழை இல்லை.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:22

சத்திய ஞானானந்தம்!

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

சத்திய ஞானானந்தம்!

2825. பிரகிருதி மயை தூவாமாயை தூய மாயை ஆன யாவும் சூனியத்தை அடைய ஆன்மா தத்துவங்களின்றும் நீங்கி சமஷ்டி நனவு கனவு உறக்கம் என்னும் நிலைகளையும் கடந்து துரியத்தை அடையவே, இந்த துரிய நிலையும் சூன்யமாக அந்நிலை இன்ன இயல்புடையது என்று விளக்க ஒண்ணாத இன்பத்தில் தற்பரன் என்ற சிவன் ஆன்மாவில் நிலை பெற்ற போது ஆன்மா சிவத்தன்மை எய்தும். ஆனந்தமாய்ப் பொலியும்.

2826. தொம்பதம் தற்பதம் சொன்ன சிவதுரியம் பரதுரியம் போல் நம்பத்தகுந்த சிவதுரியம் பரதுரியம் கடந்து விளங்கும் சிவதுரியத்தில் ஆனந்தம் ஏற்படும். ஆன்மா பிரகிருதியை நோக்கி நினைக்காத அந்த நிலையில் செம்பொருளாக இருந்து சீவர்களைப் பக்குவம் நோக்கி ஆட்கொள்பவன் சிறப்புமிக்க சிவனே ஆகும்.

2827. பொருந்தும் சத்திய ஞான ஆனந்தத்தை மாணிக்க ஒளியின் பிரகாசத்துடன் ஒப்பாய் உரைத்தல் பொருந்தாது. அந்தச் சத்திய ஞானானந்தம் கண்ணுக்கு இனிய நீல மலரும் தூய்மையும் நாதமும் நிறமும் மணமும் பிரகாசமுமாகக் கூறப் பெற்ற ஆறும் போன்று இனிமை உடையதாகும்.

2828. சத்தி சிவம் மேலான ஞானம் ஆகியவற்றைச் சொல்லுமிடத்து எல்லா உயிர்களின் சமஷ்டி இன்ப நிலையே சிவத்தின் உயர்ந்த ஆனந்த நிலை. கூறப்பெற்ற சிறந்த வடிவத்தையுடைய சத்தியை விட்டு அகலாமல் நிற்கும் சிவம் நீல மலரை விட்டு அகலாமல் நிற்கும் அதன் பண்புகளைப் போன்றதாகும்.

2829. அழகான நீலமலரில் நிறமும் மணமும் அழகும் கலந்திருப்பதுபோல் சீவன் சிவனோடு வேறுபாடு இன்றி கலந்து நிற்க சிவம் என்ற தத்துப் பெருவாக்கியப் பொருளானவன் சத்திய ஞானாந்தம் விளங்க நின்றருளினான்,

2830. செல்லும் அளவு உள்ளம் நெகிழும்படியாகச் சிவபெருமானை வணங்கி பாடல்களீனால் துதிப்பின் அவனை உள்ளத்தில் அமைக்க முடியும்.. என்னையும் அப்படி எளிய தலைவனான நந்தி அவனது அருளுடன் சேர்ப்பித்து மறவாமல் நினைக்கின்ற அளவு எனக்கு அவனிடம் பற்று உண்டாகும்படி செய்தான்.

2831. பாலுடன் தேனும் பழச் சாறும் தூய அமுதத்தின் சுவையும் போல் விளங்கும் துரிய நிலையைச் சீவன் கடந்தபோது சிவன் சீவனுள் புகுந்து மயிர்க்கால்களீல் எல்லாம் இன்பம் பெருகும்படி நிறைந்திருப்பான்.

2832. அழியாத இயல்புடைய சீவனையும் அது பொருந்தியிருக்கும் அண்ட கோசத்தையும் கடந்து நாத தத்துவத்தைக் கடந்து தனித்து நிறபவன் சிவன் ஆவான். பவளம் போன்ற உதடுகளும் முத்தைப் போன்ற பற்களூம் தன்மையுடைய பனி போன்ற மொழியும் உடைய பெண்டிரின் கவர்ச்சியில் தளராத சோதியான அப்பெருமான் பலரிடத்தும் திரிந்த செல்வனாக உள்ளான்.

2833. முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு மலத்தால் ஏற்படும் வாதனை நீங்கித் தூய துரியா நிலைக் குற்றங்களைக் கடந்து பெத்தநிலை மாறிச் சிவத்தை நோக்குவதாகி உண்மையான ஞானானந்தத்தைப் பொருந்தியிருப்பவன் ஞானி.

2834. சீவன் சிவத்தை அடைத்து சிவமாகியபோது பிறவியைத் தரும் ஆணவம் முதலிய மூன்று மலங்களும் நீங்க குற்றம் பொருந்திய பிரகிருதி மாயை அசுத்த மாயை சுத்த மயை ஆகிய மூன்றையும் கெடுத்து அவற்றில் பற்றும் நீங்கும்படி நீங்கி நின்றால் தவத்தால் உண்டாகும் உண்மை ஞானானந்தத்தில் சீவனும் சிவனும் பொருந்துவதில் துரியாதீதம் அடைந்து சிவ வடிவம் அமையும்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:20

ஞானோதயம்!

Written by

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

#####

ஞானோதயம்!

2813. மனமானது மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்து பொறிகளுடன் பொருந்தி உலகப் பொருளைத் துய்த்தல் சாக்கிரம். இனிப் பொறிகள் நீங்கிய போது அந்தப் பொருளைக் கனவில் அறிதலில் நனவு போல் ஆனந்தம் ஏற்படும்.. இப்படி நனவு கனவு நிலைகளில் உண்டாகும் ஆனந்தத்தை வினவில் இவற்றுக்கு மேல் சுட்டறிவு நீங்கிய நிலையில் ஓர் ஆனந்தம் உண்டு. இப்படியாய் இனமாக உள்ள நந்தியான இறைவன் சீவர்களுக்கு அருளிய ஆனந்தம் விஷயானந்தம் என்றும் சிவானந்தம் என்றும் இரண்டாம்.

2814. எம் தலைவன் யானையின் தோலை உரித்து அதைப் போர்த்துக் கொண்டவன். நான்முகனின் கபாலத்தை கையில் ஏந்தியவன். விளங்கும் பிறைத்திங்களை அணிந்தவன். இத்தகையவனை அரிய செயலைச் செய்தவன் என்றும் பெருங்கருனையைக் காட்டியவன் என்றும் அவனிடம் அடிமை பூண்டதல்லாமல் அவன் கருமை நிறம் கொண்டவன் என்றோ செந்நிறம் உடையவன் என்றோ நான் ஆராய்ந்து பார்த்ததில்லை.

2815. செருக்கில் மிக்க வானவர் திருபாற்கடலில் வெளிப்பட்ட அமுதத்தை உண்ணும்படி அருளி நஞ்சை உண்ட மேலான சிவனைத் தக்கவர் உரை செய்த தவநெறியில் போய் அடைந்தான். பொன்னான ஞானத்தை அவன் அளித்திடுவான். எனவே சிவத்தின் நாத வழியைத் துணையாகக் கொண்டு நீங்கள் சாதனையைச் செய்க.

2816. ஆன்மா ஒளிமயமானது எனக் குருவால் உணர்த்தப்பெற்று அந்த வழியில் நின்று அறிவைப் பெருக்கி ஆன்ம அறிவுப் பேரொளியில் சிவ ஞானத்தைத் தூண்டிச் சிவத்தின் அகண்ட ஒளியில் சிவஒளி அடங்கக் காணும் ஆற்றல் உடையவர்க்கு ஒளியைத் தந்த சிவபெருமானின் திருவடியைப் பொருந்தி வாழ முடியும்.

2817. அறிவு மயமான ஆன்மா தத்துவங்களோடு கூடியபோது அத்தத்துவங்கள் அறியப்படு பொருளாக இருந்தது. எங்குத் தத்துவம் அறியப்படுவது இல்லையோ அங்கு அந்த தத்துவத்தை அறியும் ஆன்மாவின் நிலையும் இல்லை. தத்துவ ஞானத்தால் உடல் முதலியவை தான் அல்ல, அறிபவன் என்பதைக் காணில் ஆன்மா அப்போது சிவத்தை நாடிக் கூடிச் சிவமாகிய தன்மையைப் பெற்றுவிடும்.

2818. வான் மயமான ஒன்று எல்லாவற்றையும் தாங்கிய வண்ணம் இருக்கின்றது. என்ற உண்மை ஞானம் வந்த போது சேற்று நிலமான சுவாதிட்டான மலரினின்றும் உடலில் பரவிய சத்தியே ஒளி மயமான அமுதம் ஆகும். அது பசும் பொன்னின் ஒளி கொண்டு தலையில் பரவிப் பொருந்தி ஒளிரும் செந்நிறம் உடைய சுவாதிட்டான மலரில் பொருந்திய சிவனே இப்படி விளங்குவான்.

2819. முத்து வயிரம் கடலில் தோன்றிய பவளக் கொத்து பசும் பொன்னின் தூய ஒளி மாணிக்க ஒளி ஆகிய இவை கலந்து விளங்குபவன். தலையில் மேல் உள்ள அண்டத்தில் சோதியாகவும் உடலில் சோதியாகவும் விளங்குபவன். இத்தகைய ஒருவனை எந்த தன்மையை எண்ணி உங்களுக்கு வேறானவன் என்று கூறுவீர்.

2820. நான் வேறு சிவன் வேறு என்று நாடினேன். அவ்வாறு நாடியபோது நான் வேறு தான் வேறு இல்லை என்ற இருபொருள் இல்லை என்பதை என்னை விழுங்கித் தானே ஆய் நின்ற ஞான மூர்த்தியே அருளினான். அப்போது நான் ஒரு பொருள் என்ற எண்ணமும் நீங்கி நான் இருந்தேன்.

2821. இறைவனை அடைவதற்குரிய நல்ல வழி சிவஞானத்தை அடைந்து நாதம் கைவரப் பெற்று நாதாந்தம் என்பதே ஆகும். ஞானத்தின் நல்ல நெறியானது ஆன்மாவானது அறிவுரு என்று அறிவதே ஆகும். ஞானத்தில் நல்ல யோகம் என்பது சீவபோதத்தை விட்டுச் சிவபோதத்தில் அடங்கியிருப்பதாகும். ஞானத்தினால் நல்ல பிரணவப் பொருளை உணர்ந்து நாதாந்தம் அடைவதே ஆகும்.

2822. பிறவியினின்று விடுபட விரும்புகிறவர்க்கு உயிர் போன்று இன்றியமையாமை உடையது சிவஞானம். அவர்கட்கு உயிர் போன்றது சிவமே ஆகும். அவர்களுக்கு ஒடுங்கும் இடம் பிரணவம் ஆகும் அவர்களது அறிவுக்கு அறிவாய் விளங்குவது சிவம் ஆகும்.

2823. அருள்வழி போய் நின்று காணும் பேறு பெற்றவர்க்கு சிவன் கண்மணி போல் உடனாய் இருந்து தன்னைக் காணும்படி காட்டுவான். அத்தகையவர்க்கு அவன் திருப்பாற்கடலில் தோன்றிய அமுதத்தை போன்று வாழ்நாளை அளிப்பவன் தன்னை வழிபடுபவரை நந்தியம் பெருமான் தவறாமல் காப்பான். அன்பு மிக்கவர்க்கே அவன் தக்க துணையாய் நின்று உதவுவான்.

2824. ஓம் என்ற பிரணவத்தை விட்டு நீங்காத நாதம்போல் வானுலகத் தேவர் விரும்புவது செம்பொருளாகும், மனம் வாக்குக்கு எட்டாதுள்ள செம்பொருளான அச்சிவத்தின் திருவடிகளை வணங்கி நிற்கின்ற தேவர்கள் உம் உள்ளத்தில் விளங்குவர்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880140
All
26880140
Your IP: 54.166.234.171
2024-03-19 12:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg