gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

ஆசைகளால் தூண்டப்படாத தான் தனக்கு என்ற சுய நோக்கு இல்லா உயிர்களால் மட்டுமே எந்தச் செயலையும் திறம்படச் செய்யமுடியும். அது இந்த பூ உலகிற்கும் அந்த உயிரைச் சுற்றியுள்ள மற்ற உயிர்களும் சிறந்த பயன்களைப் பெற்றுத்தரும்!

குருஸ்ரீ பகோரா

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 15:58

சக்திபீடம்-42-ய/யம்

சக்திபீடம்-42-ய/யம்

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-42 

அட்சரம் ய/யம்(இருபத்தாறாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஸ்ரீசைலம்
அட்சரதேவிகள் யஷஸ்வினிதேவி/ தீபினோதேவி
அங்கம் பித்தம்
பைரவர்/இறைவன் ஸ்ம்பரானந்தர்/ மல்லிகார்ச்சுனர்-2/12
அங்கதேவி/ இறைவி மகாலட்சுமி/ பிரம்பராம்பிகை/ பிரமரம்பாள்
பீடங்கள் மலயாயை நம
51-ல் நம் உடலில் இதயம்
ஊர் ஸ்ரீசைலம்
அருகில் கர்னூல் அருகில்
மாகாணம்/நாடு ஆந்திரா

இது மலயா பீடம் எனும் மகாசக்தி பீடம். மாதவி பீடம் என்றும் அழைப்பர். வைஷ்ணவ மந்திரங்கள் உள்பட எல்லா மந்திரங்களும் சித்தியளிக்கும். சிவன் கோவிலை ஒட்டி மேற்புறம் அம்மன் சன்னதி-மகாலட்சுமி/ ப்ரமராம்பிகை அருள்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

எட்டு கரங்கள்- வலது கரங்களில் அம்பு, பாசம், சூலம் அபய முத்திரை, இடது கரங்களில்- வில், கேடயம், கத்தி, வர முத்திரையுடன் சிம்ம வகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
யாக் யேயம் தீபிநீ தேவீ ஸிம்ஹஸ் தாஷ்டபுஜா ஸிதா
சூல சாபேஷூ பாசாஸி கேடதா நாபயாந் விதா:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 15:53

சக்திபீடம்-41-ம/மம்

சக்திபீடம்-41-ம/மம்

ஓம்நமசிவய!

பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-41 

அட்சரம் ம/மம்(இருபத்தைந்தாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மலயகிரி
அட்சரதேவிகள் மகாமாயாதேவி/ வித்யாஷ்யாமளாதேவி
அங்கம் குருதி
பைரவர்/இறைவன் பத்ராஸேனர்
அங்கதேவி/ இறைவி ஸோனாக்க்ஷி,சண்டிகா
பீடங்கள் ஜலேசாயை நம
51-ல் நம் உடலில் வயிறு
ஊர் அமர்கண்டக்
அருகில் சோன்பத்ராநதிக்கரை
மாகாணம்/நாடு மத்யபிரதேசம்

இது ஜலோசா பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு ஏலக்தாம்ரம் போன்ற பௌத்த மந்திரங்கள் சித்திக்கும்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

வெண்ணிறமேனி- குதிரைமுகம்- இரு கரங்களும் வர அபய முத்திரையுடன் வீணையுடன் தாமரைப் பீடத்தில் காட்சி
தியானஸ்லோகம்:
மோ வித்யா ஷ்யாமலா தேவீ ஹயாஸ்யா ஸ்படிக பிரபா
வீணா வாதந த்த்வஞா வராபய கரா சுபா:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 12:26

சக்திபீடம்-40-ப4/பம்

சக்திபீடம்-40-ப4/பம்

ஓம்நமசிவய!

ஆங்காரம்முளை அறுப்பாய் பாங்கார் இன்பப்
பராபர கற்றவர் விழுங்கும் கனியே ! மற்றவர்
காணாமலையே சொல்லொடு பொருளின் தொடர்பே
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-40 

அட்சரம் ப4/பம்(இருபத்தி நான்காவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மயாபுரம்
அட்சரதேவிகள் பத்ரகாளிதேவி/ ச்யாமளாதேவி
அங்கம் இடதுகுதிக்கால்
பைரவர்/இறைவன் காலபைரவர்
அங்கதேவி/ இறைவி குமாரி
பீடங்கள் மாயாபூர்யை நம
51-ல் நம் உடலில் நாபி
ஊர் ஹரித்துவார்
அருகில் பீம்கோடாகுண்ட் குளத்தின் அருகில்
மாகாணம்/நாடு உத்ராஞ்சல்

இது மயாபுர பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு தேவ, தானவ- அசுர, கந்தர்வ மாயா கலைகள் ஸித்திக்கும். ஹர்கிபௌடியிலிருந்து 3 கி.மீ தொலைவில் 145 மீ. உயரத்தில் மனஸாதேவி. படிகளும் விண்வெளியில் கயிர்ருப் பாதையும் உண்டு.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

உதய சூரியன் போன்ற சிவந்த நிறமேனி—நான்கு கரங்கள்- வலது கரங்களில் அம்பு, அபய முத்திரை, இடது கரங்களில் வர முத்திரை, வில்லுடன் பத்மத்தின்மேல் அமர்ந்து காட்சி.
தியானஸ்லோகம்:
பா ரூபா ச்யாமவா சைக வக்த்ரா பத்ரா ஸநே ஸ்திதா
உத்ய த்ரவி நிபா தத்தே சர சாப வராபயாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 12:22

சக்திபீடம்-39-ப3/பம்

சக்திபீடம்-39-ப3/பம்

ஓம்நமசிவய!

தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-39 

அட்சரம் ப3/பம்(இருபத்தி மூன்றாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மே.வங்காளம்- பர்த்வான் நகர் அருகில் கீர் கிராமம்
அட்சரதேவிகள் பந்தினிதேவி/ சித்ச்யாமளா
அங்கம் வலதுகுதிக்கால்
பைரவர்/இறைவன் ஷீரகண்டர்
அங்கதேவி/ இறைவி யோகாத்யா/ பூததாத்ரி
பீடங்கள் ஷஷ்டிசாயை நம
51-ல் நம் உடலில் முதுகு
ஊர் கீர்கிராமம்
அருகில் பர்த்வான்-கடேவா ரயில் மார்க்கத்தில்--35கி.மீ
மாகாணம்/நாடு மே.வங்காளம்

இது ஷஷ்டீசம்/ ஷட்பீசம் பீடம் எனும் மகாசக்தி பீடம். கரதோயா, யுகாத்யா என்றும் அழைப்பர். தேவியின் பெயர் பூத்தாத்ரி என்றாலும் பக்தர்கள் காளி என அழைக்கின்றனர். கருவறையில் காட்சி அளிப்பது திரிபுர பைரவி.
உபபீடம்:
இதன் தெற்குத் திசையில் தேவியின் பாதுகை விழுந்தது. இது சித்தி அளிக்கும் தலம்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

பழுப்பு வண்ண மேனி—ஐந்து முகங்கள்- பத்துக் கரங்கள்- வலது கரங்களில் அபய முத்திரை, கிளி, கத்தி, அம்பு, சூலம், இடது கரங்களில் வர முத்திரை, மான் கேடயம், பாசம், உடுக்கை ஆகுயவற்றுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
சிச்சயா மலா பப்ரு வர்ணா ஸிம்ஹாருடா பரூபிணீ
தத்தே க்ரமேண தசபி கரை பூர்வ வதாயுதாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 12:19

சக்திபீடம்-38-ப2/பம்

சக்திபீடம்-38-ப2/பம்

ஓம்நமசிவய!

கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-38 

அட்சரம் ப2/பம்(இருபத்திரண்டாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் தீர்த்தராஜ எனப்படும் ப்ரயாகை
அட்சரதேவிகள் பட்காரிணிதேவி/ ஆதபகோமளாதேவி
அங்கம் தேகரசம்
பைரவர்/இறைவன் பவபைரவர்
அங்கதேவி/ இறைவி ஸ்ரீலலிதா
பீடங்கள் ப்ரயாகாயை நம
51-ல் நம் உடலில் இடது விலாப்புறம்
ஊர் திரிவேணிசங்கமம்/அலகாபாத்
அருகில் பிரயாகை,ருத்ரபிரயாகை
மாகாணம்/நாடு உத்ராஞ்சல்

இது தீர்த்தராஜா அல்லது பிராயகை பீடம் எனும் மகாசக்தி பீடம். தேவியின் தேக ரசம் - நீர்சத்து விழுந்ததால் இங்கு காணப்படும் மண் வெண்மை நிறத்துடன் கணப்படுகின்றது. ப்ரயாகையில் இரண்டு சக்தி ஆலயங்கள். தாராகன்ஞ் அடுத்து அலோபிபாஹ் என்ற இடத்தில் உள்ள அலோபிமாதா கோவில்- இங்கு தேவிக்கு விக்ரகம் இல்லை. அடுத்தது மீராப்பூர் பகுதியில் உள்ள கோவில் கருவரையில் லலிதாவுடன் சரஸ்வதியும், லட்சுமியும் இருக்கின்றனர்.
உபபீடங்கள்:
கங்கயின் கிழக்கில் பகலா உபபீடம், வடக்கில் சாமுண்டா உபபீடம், கங்கை யமுனை நதிகளின் மத்தியில் ராஜராஜேஸ்வரம் உபபீடம்,

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

சிவந்த நிறமேனி- ஐந்து முகங்கள்- பத்து கரங்கள்- வலது கரங்களில் அபய முத்திரை, கிளி, கத்தி, அம்பு, உடுக்கை, இடது கரங்களில் வர முத்திரை, மான் கேடயம், பாசம், சூலம் ஆகுயவற்றுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
பஞ்ச வக்த் ரோக்ர ஸிம் ஹஸ்தா பாடலா தப கோமளா
பாக்யா சுகைணா ஸிகேட வராபய தாரா சராந்
பாசம் ச டமரும் தத்தே க்ரமேண தசபி கரை;

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:56

சக்திபீடம்-37-ப1/பம்

சக்திபீடம்-37-ப1/பம்

ஓம்நமசிவய!

பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-37 

அட்சரம் ப1/பம்(இருபத்தோராவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மே.வங்கத்தின் மேதினியூர் மாவட்டத்தின் தாம்லுக்
அட்சரதேவிகள் பார்வதிதேவி /இச்சாஷக்தி
அங்கம் இடது கணுக் கால்பாகம்
பைரவர்/இறைவன் பீமர்/ஸர்வாநந்தர்
அங்கதேவி/ இறைவி கபாலினி
பீடங்கள் உட்டிசாயை நம
51-ல் நம் உடலில் வலது விலாப்புறம்
ஊர் தாம்லுக்-பார்கவி மாதாமந்திர்
அருகில் மேதினிபூர்மாவட்டம்
மாகாணம்/நாடு மே.வங்காளம்

இது விபாச பீடம் எனும் மகாசக்தி பீடம். தாம்ரலிப்தம் பீடம், உட்பீச பீடம் என்றும் அழைக்கப் படுகின்றது. இங்கு மகா மந்திரங்கள் ஸித்திக்கும்.. தேவியை காளிமாதா என்றும் தாராதேவி என்றும் அழைக்கின்றனர். தாம்லுக்லில் பார்கவி மாதா மந்திர் எனப்படுகின்றது.
உபபீடம்;
இந்த தலத்தில் அருகில் டாமரம் என்ற இடத்தில் தேவியின் சூபுரம்-கொலுசு விழ்ந்துள்ளது
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
ஐந்து முகங்கள்- நான்கு கரங்கள்- வலது கரங்கலில் சூலம் அபய முத்திரை, இடது கரங்களில்- சக்தி ஆயுதம் வர முத்திரையுடன் பத்மமலரில் பத்மாசனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
பாக் யேச்சா சக்தி ரூபயேம் சூல சக்தி வராபயாந்
தத்தே கரைர் பஞ்ச வக்த்ரா புக்க பத்மா ஸநா ருணா:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:53

சக்திபீடம்-36-ந/னம்

சக்திபீடம்-36-ந/னம்

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-36 

அட்சரம் ந/னம்(இருபாதாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஹஸ்தினாபுர ஏரி
அட்சரதேவிகள் நார்யாதேவி/ அந்தரஷக்தி
அங்கம் வலது கணுக் கால்பாகம்
பைரவர்/இறைவன் ஸ்தானு
அங்கதேவி/ இறைவி பத்ரகாளிசாவித்ரி/ முக்திநாயகி
பீடங்கள் ஹஸ்தினாபுராயை நம
51-ல் நம் உடலில் இடது கால்விரல் நுனியில்
ஊர் குருஷேத்திரம்
அருகில் ஹஸ்தினாபுரம்
மாகாணம்/நாடு அரியாணா

இது ஹஸ்தினாபுர எனும் மகாசக்தி பீடம். இங்கு பாஸ்கர மந்திரங்கள் சித்திக்கும். ஏரியை ஒட்டியுள்ள இடத்தில் காளி கோவில்.-ஸ்ரீதேவி கூப் பத்ரகாளி என அழைக்கின்றனர். சாவித்திரி என்றும் அழைப்பர். ஜான்ஸா சாலையில் உள்ள கூப் பத்ரகாளி மந்திரில் அன்னையின் அங்கம் அடையாளமாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பத்ரகாளின் காலின் கீழ் படுத்திருக்கும் சிவன். அன்னையின் இருபுறமும் செந்தூர கணபதி, கருமை நிற கால பைரவர். லட்சுமி, சரஸ்வதி, சிவலிங்கம் சன்னதிகள்.
உப சக்திபீடம்:
நுபுராணவம் என்ற இடத்தில் தேவியின் நூபுரம்-சிலம்பு வீழ்ந்த தலம். இங்கும் பாஸ்கர மந்திரங்கள் சித்திக்கும்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

துய்மையான வெண்ணிற மேனி- மேல் இரண்டு கரங்களில் தாமரையையும், கீழ் இரண்டு கரங்களில் வர அபய முத்திரையுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
நோநந்த சக்திர் தேவேசீ மத்த மாதங்க ஸம் ஸ்திதா
ஏக வக்தரா தடித் கௌரீ தத்தே பத்ம வராபயாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:49

சக்திபீடம்-35-த4/தம்

சக்திபீடம்-35-த4/தம்

ஓம்நமசிவய!

ஓங்கார முகத்தொருத்தல் ஏங்கா துயிர்க்கருள்
இயற்கை எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய்
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் அருவே உருவே
அருவுருவே பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-35 

அட்சரம் த4/தம்(பத்தொன்பாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மேகாலயா- க்ஷீரிதா/க்ஷீரகம்
அட்சரதேவிகள் தத்யாதேவி/ அமலாதேவி
அங்கம் இடதுகணுக் கால்பாகம்
பைரவர்/இறைவன் க்ரம்தீஸ்வரர்
அங்கதேவி/ இறைவி ஜெயந்தேஸ்வரி
பீடங்கள் க்ஷீரிகாயை நம
51-ல் நம் உடலில் இடது கால் விரலடியில்
ஊர் நார்டியாங்
அருகில் ஷில்லாங்-63 கி.மீ.ஜோவாய்-24 கி.மீ.
மாகாணம்/நாடு மேகாலயா

இது க்ஷீரிதா அல்லது க்ஷீரகம் என்று அழைக்கப்படும் மாகசக்தி பீடம். இங்கு வைதாலிக, சாபர மந்திரங்கள் ஸித்தியாகும். இதை ஜெயந்தி பீடம் என்றும் கூறுவர். ஜெயந்தேஸ்வரி வனதுர்க்கை ரூபத்தில் அண்டியவர்க்கு அருள் புரிபவள்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

பச்சை நிறமேனி- நான்கு கரங்கள். வலது கரத்தில்- கமல மலர், அபய முத்திரை, இடது கரத்தில் சாரிகா, வரத முத்திரையுடன் இடப வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
சியாமாலா சாமலா தாக்யா ஹயே கவக்த்ரா சதுர் புஜா
வ்ருஷ ஸ்தா சாரி காம ப்ஜம் கரைர் தத்தே வராபயௌ:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:45

சக்திபீடம்-34-த3/தம்

சக்திபீடம்-34-த3/தம்
ஓம்நமசிவய!

புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி! !

#*#*#*#*#

எண் சக்திபீடம்-34 

அட்சரம் த3/தம்(பதினெட்டாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் திரிபுரா மாநிலத்தின் உதயப்பூர்/ராதாகிஷோர் கிராமம்
அட்சரதேவிகள் தாஷாயணிதேவி/ போகதாயினிதேவி
அங்கம் வலது கணுக்கால் பாகம்
பைரவர்/இறைவன் த்ரிபுரேஷ்வர்
அங்கதேவி/ இறைவி திரிபுரசுந்தரி
பீடங்கள் சித்ராயை நம
51-ல் நம் உடலில் இடது கணுக்கால்
ஊர் ராதாகிஷோர் கிராமம்/உதயப்பூர்
அருகில் உதயப்பூர்-3.கி.மீ
மாகாணம்/நாடு திரிபுரா

இது யோகினீ எனும் மகாசக்தி பீடம். கௌல மார்க்க மந்திரங்கள் சித்திக்கும் தலம். அன்னையின் வேறு பெயர்கள்- திரிபுரவாசினி, திரிபுரஸித்தா, திரிபுராஸ்ரீ, திரிபுரேசி, திரிபுராம்பிகா, திரிபுரா, திரிபுரமாலினி எனப்படும். மந்திரம், ரூபம், யந்திரம் ஆகிய மூன்றும் தேவி வழிபாட்டில் முக்கிய அங்கம்- அதனால் திரிபுரா என்பர்.

கி.பி.1501-ல் தான்யா மாணிக்யாவால் கட்டப்பட்டு கி.பி.1681-ல் ராமா மாணிக்யாவால் புதுப்பிக்கப்பட்டது. இரண்டு பகவதிகள். சிறியதை சோட்டிமா என்றும் பெரியதை மகாசக்தி பீடேஸ்வரியாக வணங்குகின்றனர். கோவிலுக்கு கிழக்கில் கல்யாண சாகர் என்ற பெரிய ஏரி உள்ளது. தசமி, திதி தவர மற்ற நாட்கலில் தினமும் ஆட்டுக்கிடா பலி. அமாவாசையன்று ஒரு எருமை ஐந்து ஆடுகள் பலியிடப்படுகின்றன.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

அருணோதய நிறம்- எட்டு கரங்களில்- வலது கரங்களில்- தாமரை, வீணை, உடுக்கை, அபய முத்திரை இடது கரங்களில் தாமரை, மான், மழு வரத முத்திரையுடன் தாமரை மீது அமர்ந்து காட்சி.
தியானஸ்லோகம்:
ஏக வக்த்ரா ருணா தாக்யாஷ்ட புஜா போக தாயிநீ
தத்தே ப்ஜம் சாரி காம் வீணா டமர் வர்ண வராபயாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:40

சக்திபீடம்-33-த2/தம்

சக்திபீடம்-33-த2/தம்

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-33 

அட்சரம் த2/தம்(பதினேழாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் உஜ்ஜயினி/ அவந்திகா/
அட்சரதேவிகள் ஸ்தாண்வீதேவி/ நீலகண்டசரஸ்வதிதேவி
அங்கம் இடதுமுழங்கை
பைரவர்/இறைவன் காலபைரவர்
அங்கதேவி/ இறைவி மங்களசண்டிகா/ மகாகாளி ஹர்சித்தி
பீடங்கள் உஜ்ஜயின்யை நம
51-ல் நம் உடலில் இடது முழங்ககால்
ஊர் உஜ்ஜயினி/ கனக்சிருங்கா, குமுதவதி/ குசஸ்தலி, பத்மாவதி/ ப்ரதிகல்பா, போகவதி/ ஹிரண்யவதி
அருகில் ருத்ரசாகர் ஏரி அருகில்
மாகாணம்/நாடு மத்யபிரதேசம்

இது உஜ்ஜயின் எனும் மகாசக்தி பீடம். இங்கு கவச மந்திரங்கள் சித்தி அடையும். இந்த ஆலயம் ஹரசித்தி ஆலயம் எனப்படும். காளி உருவம் ஹரசித்தி என்ற பெயரில் இங்கு தங்கியவள். நவதுர்க்கைகளில் இவள் சித்திதா எனப்படுபவள். விக்ரமாதித்திய ராஜனின் குலதெய்வம்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

நான்கு கரங்களில் அறுகம்புல்- என்ற தர்பை, உடுக்கை, வர-அபய முத்திரகளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
பஞ்ச வக்த்ரா ஸிதா தாக்யா நீல கண்டா சரஸ்வதீ
சாரி காம் டமரூம் தத்தே வ்ருஷா ரூடா வராபௌ:

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13847925
All
13847925
Your IP: 162.158.78.237
2019-11-22 21:07

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg