gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

கவலையில்லா மனிதன் காசினியில் இல்லை! பாவம் செய்யா மனிதன் பாரினில் பிறப்பதில்லை! பாவங்களே அனைத்து துன்பங்களுக்கும் காரணம்! பாவங்கள் தீர்ந்தால் கவலைகள் தீரும்!

குருஸ்ரீ பகோரா

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:34

சக்திபீடம்-32-த1/தம்

சக்திபீடம்-32-த1/தம்

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-32 

அட்சரம் த1/தம்(பதினாறாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மகத நாட்டின் படலிபுத்திரம்/ புஷ்ப்புரா/ குஸாமாபுரம்
அட்சரதேவிகள் தமஸ்யாதேவி/ சரஸ்வதிதேவி
அங்கம் வலதுமுழங்கால்
பைரவர்/இறைவன் வ்யோமதேவர்/ வத்ரசன்/வ்யோமகேசர்
அங்கதேவி/ இறைவி சர்வானந்தகரி/ நர்மதா
பீடங்கள் ஜயந்திகாயை நம
51-ல் நம் உடலில் இடது தொடை மேற்பகுதி
ஊர் பாட்னா/ பாடலிபுத்திரம்/
அருகில் பாட்னா ர.நி-10 கி.மீ படிபடன்தேவி மந்திர், ஹரிமந்திரின் தென்கிழக்கில் சோட்டிபடன்தேவி மந்திர்
மாகாணம்/நாடு பீகார்

இது ஜயந்திபுரம் எனும் மகாசக்தி பீடம். இங்கு தனுர் வேதத்தை லட்சம் முறை ஜபித்தால் ஸித்தி கிட்டும். இரு சக்திபீடங்கள்- அன்னையின் வலது முழங்கால் விழுந்த இடத்தில் தோன்றிய கோவிலை படிபடன்தேவி, மந்திர் என்றும், துணி வீழ்ந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை சோட்டிபடன்தேவி மந்திர் என்று அழைக்கின்றனர். படிபடன்தேவி மற்றும் சேட்டிபடன்தேவி கோவில்களின் கருவரையில் மூன்று உருவங்கள் (மகாகாளி, மகாசரஸ்வதி, மகாலட்சுமி).

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

வெண் நிற ஆடையில் வெண்தாமரை போன்ற முகத்துடன் நான்கு கரங்களில் வீணை, தந்திரி, வர அபய முத்திரையுடன் வெண்தாமரை மலரில் அமர்ந்து காட்சி.
தியானஸ்லோகம்:
தாக்யா ஸரஸ்வதீ சுப்ரா ஸித பத்மாந நாம்சுகா
ஏக வக்த்ரா கரைர் தத்தே வீணா தந்த்ரீ வராபயாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:30

சக்திபீடம்-31-ண/ணம்

சக்திபீடம்-31-ண/ணம்

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-31 

அட்சரம் ண/ணம்(பதினைந்தாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் கல்கத்தா காளிகாட்
அட்சரதேவிகள் ணார்ணீதேவி/அனந்தசக்திதேவி
அங்கம் வலது கால்விரல்
பைரவர்/இறைவன் நகுலேஷ்வர்/நகலீசர்
அங்கதேவி/ இறைவி காளி/ சின்ன மஸ்தான்தேவி
பீடங்கள் காலேச்வராயை நம
51-ல் நம் உடலில் வலது கால்விரல் நுனியில்
ஊர் கொல்கத்தா
அருகில் நல்ஹாத்தி
மாகாணம்/நாடு மே.வங்காளம்

இது காலேஸ்வரம் எனும் மகா சக்திபீடம். இங்கு மிருத்யுஞ்ஜய ஆயுஷ்கரண மந்திரங்கள் ஸித்தி ஆகும்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

சிவந்த நிறமேனி- நான்கு கரங்களில் சூலம், சக்திஆயுதம், வர- அபய முத்திரைகளுடன் மயில் வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ணோ ந்ந்த சக்தி தேர் வேசீ ரக்தா பர்ஹிண வாஹனா
ஏக வக்த்ரா சூல சக்தி வராபய கரா சுபா:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:25

சக்திபீடம்-30-ட4/டம்

சக்திபீடம்-30-ட4/டம்

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-30 

அட்சரம் ட4/டம்(பதினான்காவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மகாராஷ்டிர மாநிலம்-ஏலாபுரம்/ வெருள்
அட்சரதேவிகள் டங்காரிணீதேவி/ ஸ்ரீகணா /ஸ்ரீதநாதேவி
அங்கம் வலதுதொடை
பைரவர்/இறைவன் அர்த்தநாரீஸ்வரர்
அங்கதேவி/ இறைவி டங்கரீணிதேவி
பீடங்கள் ஏலாபுராயை நம
51-ல் நம் உடலில் வலது கால் விரலடியில்
ஊர் வெரூல்
அருகில் எல்லோரா அருகில். அவுரங்காபத்-25 கி.மீ
மாகாணம்/நாடு மகாராஷ்டிரா

இது ஏலாபுரபீடம் என்கிற  மகாசக்தி பீடம். அம்மனுக்கு உருவமில்லை. சிவன் அர்த்தநாரீஸ்வராக இருப்பதால் அப்பனுக்குள்ளே அம்மை இருப்பதாக பாவித்து வழிபாடு

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

மின்னலைப் போன்ற ஒளியுடையவள். ஐந்து முகங்கள்- சதுர் புஜங்கள். வலது கரங்களில் டங்கா, அபுய முத்திர, இடது கரங்களில் சூலம், வர முத்திரையுடன் மயில் வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
டரூபினி ஸ்ரீ த நாக்யா பஞ்ச வக்த்ரா மயூரகா
தடித் கௌரீ கரைர் தத்தே சூல டங்க வராபயாந்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:19

சக்திபீடம்-29-ட3/டம்

சக்திபீடம்-29-ட3/டம்

ஓம்நமசிவய!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-29 

அட்சரம் ட3/டம்(பதின்மூன்றாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் பிரம்மகிரி அடிவாரம்-கோலகிரி
அட்சரதேவிகள் டாமரிதேவி/ டஹாரிணி
அங்கம் ஜகனம்-இடுப்பு
பைரவர்/இறைவன் திரியம்பகேஸ்வர்
அங்கதேவி/ இறைவி கௌலாம்பிகை/ திரியம்பகாதேவி/ கோல்ஹாம்பிகை
பீடங்கள் கோலாபுராயை நம
51-ல் நம் உடலில் வலது கணுக்கால்
ஊர் திரியம்பகம்
அருகில் நாஸிக் அருகில்
மாகாணம்/நாடு மகாராஷ்டிரா

இது கோலகிரி பீடம் என்ற மகாசக்தி பீடம்.. இங்கு எல்லா வனதேவதைகளும் ஸித்தி பெற்று விளங்குகின்றன.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

வெண்ணிற மேனி- ஐந்து முகங்கள்- நான்கு கரங்களில் டங்கா, கதை, வர, அபய முத்திரைகளுடன் சேவல் வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
டகாரிணீ பஞ்ச வக்த்ரா ஸிதா டங்க கதா தாரா
சதுர் பாஹூ குக் குடஸ்தா வராபய காரா ச ஸா:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:09

சக்திபீடம்-28-ட2/டம்

சக்திபீடம்-28-ட2/டம்

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-28 

அட்சரம் ட2/டம்(பன்னிரண்டாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஒரிஸ்ஸா மநிலத்தின் ஜாஜ்பூர்
அட்சரதேவிகள் டங்காரிணிதேவி/ க்ரியாசரஸ்வதிதேவி
அங்கம் நிதம்பம்-இடுப்பு
பைரவர்/இறைவன் அஸிதாங்கர்
அங்கதேவி/ இறைவி காளி-விராஜா
பீடங்கள் மகாபதாயை நம
51-ல் நம் உடலில் வலது முழங்ககால்
ஊர் ஜாஜ்பூர்
அருகில் க்யூன்ஞர் ர.நி. -27.கி.மீ
மாகாணம்/நாடு ஒரிஸ்ஸா

இது மகாபதம் / மகாயதம் பீடம் எனப்படும் மகாசக்திபிடம். . சிவனை வழிபடுபவர்கள் மார்க்கத்தில் வழிபட்டு ஆரோக்கியம் பெறும் இடம். விராஜா என்றால் பாவமற்றவள், ராஜோ குணம் இல்லாதவாள் என்று பொருள். இவள் மகிஷாசுரமர்த்தினியாக தோற்றமளிக்கின்றாள். போகமண்டப் என்ற பிரார்த்தனை மண்டபம், கர்ப்பக்கிரகம் என்று இரண்டு பாகங்கள். கர்ப்பக் கிரகத்தின்மீது உயர்ந்த கோபுரம். இரு கரங்களுடன் காட்சியளிப்பதால் காளி என்றும் காத்யாயினி என்றும் அழைக்கப் படுகின்றாள்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

சிவந்த நிறமேனி- சதுர் புஜங்கள்- வலது கரங்களில் டங்கா (கோடாரி), அபய முத்திரை, இடது கரங்களில் அங்குசம், வர முத்திரையுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
க்ரியா ஸரஸ்வதி டாக்யா டங் காங்குச வராபயாந்
தத்தே ஸிம்ஹ வரா ரூடா சை கவக் த்ரா ருணா மதா

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 06:34

சக்திபீடம்-27-ட1/டம்

சக்திபீடம்-27-ட1/டம்

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-27 

அட்சரம் ட1/டம்(பதினோராவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் சித்திரகூடமலையின் ராமகிரி
அட்சரதேவிகள் டங்கஹஸ்தாதேவி/தாரணீதேவி
அங்கம் நாபிகீழ்பகுதி
பைரவர்/இறைவன்சண்டர் 
அங்கதேவி/ இறைவி ஷிவாணி
பீடங்கள் ராஜகோஹாயை நம
51-ல் நம் உடலில் வலது தொடை மேற்பகுதி
ஊர் மைகர்
அருகில் சித்திரகூடமலைப் பிரதேசம்-ராமகிரி
மாகாணம்/நாடு மத்யபிரதேசம்

இது ராஜகிரஹம் பீடம் எனும் மகா சக்தி பீடமாகும். சித்ர கூடத்தில் தேவியின் கோவில் இல்லை.
உபபீடங்கள்:
தட்சாயினின் ஒட்டியாணத்திலிருந்து சிறு சலங்கை வீழ்ந்த இடம் கண்டிகை-இங்கு இந்திர ஜாலம் ஸித்திக்கும்.. உப வேதாந்தத்தின் பொருள் விளங்கிய இடம்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

இளஞ்சிவப்பு நிறமேனி- சதுர்புஜங்களில் சூலம், டங்கா என்ற கோடாரி, வர – அபய முத்திரைகளுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
டாக்யா ச தாரிணீ தேவீ சூல டங்க வராபயாந்
தத்தே மத்த மதங் கஸ்தா பாட லாபா ஸிதாம் சுகா:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 06:28

சக்திபீடம்-26-ஞ/ஞம்

சக்திபீடம்-26-ஞ/ஞம்

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-26 

அட்சரம் ஞ/ஞம்(பத்தாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் உத்கல்/ கலிங்க தேசத்தின்-பூரி
அட்சரதேவிகள் ஞாமரூபாதேவி/ ப்ரபோதினிதேவி
அங்கம் வயிறு,3வதுமடிப்பு
பைரவர்/இறைவன் ஜகன்நாதர்
அங்கதேவி/ இறைவி பைரவி/ விமலாதேவி
பீடங்கள் விரஜாயை நம
51-ல் நம் உடலில் இடது கைவிரல் நுனியில்
ஊர் பூரி
அருகில் குர்தாரோடு ர.நி.-56 கி.மீ
மாகாணம்/நாடு ஒரிஸ்ஸா

இது விராஜா பீடம் எனப்படும் மகாசக்திபீடம். விஷ்ணு மந்திரங்கள் சித்தி அளிக்கும் தலம்,, அம்பிகையின் திருநாமம் பகவதிவிமலா. பூரி ஜகநாதர் ஆலயத்தின் இரண்டாவது பிரஹாரத்தில் கருவறைக்கு மேலே தனி சன்னதி. பத்மாஸனத்தில் சதுர் புஜங்களுடன் பத்மம், சாமரம், அபயம், வர முத்திரைகளுடன் சந்த ரூபினியாக காட்சி.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

வெண்ணிற மேனி- சதுர் புஜங்களில் திரிசூலம், அம்புஜம், சின் முத்திரை, அபய முத்திரையுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ஞாக்யா ப்ரபோதிநீ சுப்ரா ஸிம் ஹஸ்த சித் ஸ்வரூபிணீ
த்ரி சூலாம் புஜ சிந் முத்ரா பயாந் வித கரா சுபா:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 06:18

சக்திபீடம்-25-ஜ2/சம்

சக்திபீடம்-25-ஜ2/சம்

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#*#*#*#*#எண் சக்திபீடம்-25 

அட்சரம் ஜ2/சம்(ஒன்பதாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் லாப்பூர் அருகில் புல்லாரா
அட்சரதேவிகள் ஜங்கரிணிதேவி/ நிர்ஜரனதீதேவி
அங்கம் வயிறு,2வதுமடிப்பு
பைரவர்/இறைவன் விச்வேசர்
அங்கதேவி/இறைவி புல்லாரா/ ஆமைஉருவம்
பீடங்கள் அட்டஹாஸாயை நம
51-ல் நம் உடலில் இடது கைவிரல்கள்
ஊர் லாப்பூர்
அருகில் புல்லாராஅட்டஹாஸ்-போல்பூர்-50
மாகாணம்/நாடு மே.வங்காளம்

இது அட்டகாசம் என்ற சக்தி பீடமாகும். இங்கு உச்சரிக்கப்படும் கணேசர் மந்திரங்கள் சித்தி அளிக்கும். 1895-ம் ஆண்டு கட்டப் பட்டது. தேவி உருவத்திற்குப் பதிலாக கருங்கல்லால் ஆன ஆமை உருவத்தை புல்லார தேவியாக பாவித்து வழிபாடு. தற்போது அம்மனை குஹயேஸ்வரி என அழைக்கின்றார்கள்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

மழைக்கால மேக வர்ண நிறமேனி- நான்கு கரங்களில் தாமரை, பாசம், வர –அபய முத்திரைகளுடன் முதலை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ஜோ நிர்ஜர நதீ தேவீ சரந்மேக நிபாம் புஜா
பாசம் வராபயௌ தத்தே நக் ரஸ்தா சுபதா ந்ருணாம்:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 06:14

சக்திபீடம்-24-ஜ1/சம்

சக்திபீடம்-24-ஜ1/சம்

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-24 

அட்சரம் ஜ1/சம்(எட்டாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் பிரபாஸ்பட்டணம்/சோமநாத்/சோம்பூர்/ஹர்நகர்/சிவநகர்
அட்சரதேவிகள் ஜயாதேவி/ போகதாதேவி
அங்கம் வயிறு,முதல்மடிப்பு
பைரவர்/இறைவன் வக்ரதுண்டர்/ சோமநாதர்-1/12
அங்கதேவி/இறைவி சந்திரபாகா/ சந்திரபாஹா
பீடங்கள் மருதேச்வராயை நம
51-ல் நம் உடலில் வலது மணிக்கட்டு
ஊர் சோமநாதம்/வில்வில்பூர் பட்டணம்/சூர்பட்டணம்
அருகில் பிரபாஸ்-அகமதாபத்-5
மாகாணம்/நாடு குஜராத்

இது மதுரேச்வர பீடம் எனப்படும். சிவ மந்திரங்கள் போற்றப்படும் தலம். காலபைரவரை பத்ர சேனன் என்றும் அழைப்பர்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

ரக்த வர்ண நிற மேனி- மூன்று கண்கள், நான்கு கரங்கள்- வலதுகரங்களில்- கட்கம், அபயமுத்திரை, இடது கரங்களில்- கேடயம் வர முத்திரையுடன் சிம்ம வாகனத்தில் காட்சி
தியானஸ்லோகம்:
ஜோ போகதா ஹி ரக்தா ஸ்யாத் திரிணேத்ரா ஸிம்ஹ வாஹநா
சதுர் புஜா கட்க கேட வரா பய கராந் வித:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 06:10

சக்திபீடம்-23-ச2/சம்

சக்திபீடம்-23-ச2/சம்

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-23 

அட்சரம் ச2/சம்(ஏழாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் கர்நாடகா உத்ரபகுதியின் கார்வார் மாவட்டம்-கோகர்ணம்
அட்சரதேவிகள் சயார்தாதேவி/ நிர்ஜலருந்தி/ நிர்ஜராதேவி
அங்கம் வயிறு
பைரவர்/இறைவன் அபீரு/மகாபலநாதர்
அங்கதேவி/இறைவி ஜலதுர்க்கா,பத்ரகர்ணி
பீடங்கள் கோகர்ணாயை நம
51-ல் நம் உடலில் இடது முழங்கை
ஊர் கோகர்ணம்
அருகில் கார்வார் மாவட்டம்
மாகாணம்/நாடு கர்நாடகம்

இது கோகர்ண பீடம் எனும் மகாசக்தி பீடம். நிர்ஜரா என்ற இந்த தேவி அருந்ததி என்றும் அழைக்கப்படுகின்றாள். மகாபலேஸ்வரர் கோவிலின் தெற்கு வாயில் அருகில் சக்திபீடநாயகி பத்ரகாளி தரிசனம். கோவில் கருவறைமேல் ஸ்ரீசக்ர மேரு ரூபத்தில் கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது. வைகாசி மாதம்- பண்டிஹப்பேவில் விழா. வைதீக முறைப்படி வழிபாடு இல்லாததால் ஆடு கோழிகள் பலியிடப்படுகின்றன.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

மஞ்சள் நிற மேனி-நான்கு கரங்கள், வலது கரங்களில் த்ரிசூலம், கொடுவாள், இடது கரங்களில்- பாசம் கேடயத்துடன் மர்கடம் எனும் குரங்கு வாகனத்துடன் காட்சி.
தியானஸ்லோகம்:
ச நிர்ஜ ராருந்த தீயம் பீதா மர்கட வாஹனா
த்ரிசூலம் ச்ருரி காம் பாசம் கேடம் ச த்த்தீ சுபா:

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13847637
All
13847637
Your IP: 172.69.63.108
2019-11-22 20:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg