gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பூனைக்கு பால் பிடித்தமான உணவு. அதை வளர்க்கும் நீங்கள் கடமையுடன் பசியடங்க பால் கொடுத்தால் சரி. இல்லையெனில் பூனை பால் இருக்குமிடம் தேடத்தான் செய்யும்.அப்படி அது பசியைப் போக்கிக்கொண்டால் அது திருட்டு பூனை என பட்டம் பெற்றுவிடுகின்றது. பூனைக்கு பசி எடுப்பது தவறா. இது யார் தவறு.!

குருஸ்ரீ பகோரா

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 06:06

சக்திபீடம்-22-ச1/சம்

சக்திபீடம்-22-ச1/சம்

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-22
அட்சரம் ச1/சம்(ஆறாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் மேற்குவங்கம்-கேது கிராமம்
அட்சரதேவிகள் சாமுண்டாதேவி/ சூஷ்மா
அங்கம் இடதுஅக்குள்
பைரவர்/இறைவன் பூருகா
அங்கதேவி/இறைவி பஹிளா
பீடங்கள் தேவிகோடாயை நம
51-ல் நம் உடலில் இடது தோள்
ஊர் கேதுகிராமம்
அருகில் ஹௌராவிலிருந்து144 கி.மீ. கட்டோவா ர.நி. அருகில்
மாகாணம்/நாடு மே.வங்காளம்

இது தேவகோட்ட பீடம் எனும் மகாசக்தி பீடம். தேவகோட்டம் எனப் பெயர் பெற்ற இந்த பீட சக்தி பஹிளா / சண்டா / சண்டிகா என அழைக்கப்படுகின்றாள். பிண்டி எனப்படும் உருண்டை கருங்கல்லே தேவி ரூபமாய் சண்டிகா தேவியாய் வழிபடப் படுகின்றது.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

ஒருமுகம்- நான்கு கரங்கள்- வலது கரங்களில் கட்கம், அபயமுத்திரை, இடது கரங்களில்- கேடயம், வர முத்திரையுடன் குதிரை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ஸூஷூமா சைக வக் த்ரைஷா ஹயா ரூடா சதுர் புஜா
கட்க கேட தரா சாக்யா வரா பயகரா சுபா:

#####

செவ்வாய்க்கிழமை, 08 January 2019 06:00

சக்திபீடம்-21-ங்/நம்

சக்திபீடம்-21-ங்/நம்

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-21 

அட்சரம் ங்/நம்(ஐந்தாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் குடட்சாத்ரி குன்றின் அடிவாரம்
அட்சரதேவிகள் டர்ணாதேவி/ அருந்ததிஷக்தி
அங்கம் வலதுஅக்குள்
பைரவர்/இறைவன் காலபைரவர்
அங்கதேவி/இறைவி மூகாம்பிகை
பீடங்கள் குலாந்தகாயை நம
51-ல் நம் உடலில் வலது கைவிரல் நுனியில்
ஊர் கொல்லூர்
அருகில் சௌபர்ணிகாநதிக்கரை
மாகாணம்/நாடு கர்நாடகம்

இது குலாந்தக பீடம் எனும் மகாசக்தி பீடம். சத்ருக்களை அழிப்பதற்கு பிரயோகிக்கும் மந்திரங்களுக்கு ஸித்தி அளிக்க வல்லது. மங்களூரிலிருந்து140 கி.மீ. குலாந்தகம் எனும் சக்திபீடம். பத்திரகளி அம்மன் கோவில் பீடசக்தி முகாம்பிகை. அருகில் வானமே கூரையாக் உள்ள ஒரு கற்பாறை- அம்மனின் அக்குள் விழுந்து பாறையானது.

பிரஹாரத்தில் பஞ்சமுக விநாயகர், சங்கர பீடம், நாக உருவில் சுப்ரமண்யர், ஆஞ்சநேயர், சந்திரமௌலீஸ்வரர், லிங்கேஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், பார்த்தேஸ்வரர், பிராணாலிங்கேவரர் சன்னதிகள். வெளிப்புறத்தில் சௌடேஸ்வரி அம்மன். ஆனியில் ஜெயந்தி, ஆடியில் லட்சுமி ஆராதனை, புரட்டாசி நவராத்திரி, மாசி தேர்த் திருவிழா சிறப்பு.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

ரக்த வண்ண நிற மேனி-ஆறு முகங்கள்-ஆறு கரங்கள்- வலது கரங்களில் அம்பு, கத்தி, அபய முத்திரை, இடது கரங்களில்- வில், கேடயம், வரத முத்திரையுடன் மயில் வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
அ நந்த சக்திர் தேவேசீ ரக்தா பர்ஹிண வாஹ நா
ஷடா ந நேஷூ சாபாஸி கேட தாநா பயாந் விதா:

#####

திங்கட்கிழமை, 07 January 2019 20:23

சக்திபீடம்-20-க4/கம்

சக்திபீடம்-20-க4/கம்

ஓம்நமசிவய!

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-20 

அட்சரம் க4/கம்(நான்காவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் விநோத நாட்டின் மிதிலாபுரி/மாளவம்
அட்சரதேவிகள் கண்டாகர்ஷிணி/ வராஹமுகி
அங்கம் இடதுதோள்
பைரவர்/இறைவன் மஹோதர்
அங்கதேவி/இறைவி உமா
பீடங்கள் மால்வாய் நம
51-ல் நம் உடலில் வலது கை விரலடியில்
ஊர் ஜனக்புரி,மிதிலாபுரி
அருகில் சீதாமாடி/தர்பங்கா விலிருந்து ஜனக்பூர் ர.பயணம்+38 கி.மி
மாகாணம்/நாடு நேபாளம்

இது மாளவ பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு கந்தர்வர்கள் தேவியை உபாசித்து ஞான, ராக, சங்கீத வித்தைகளை கைவரப் பெற்றார்கள்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

கருநீல வர்ண மேனி-வராக முகம்- மெலிந்த வயிறு- ஆறு கரங்கள்-வலக் கரங்களில்-சூலம், கட்வாங்கம் வரமுத்திரை, இடது கரங்களில்- கட்கம், கேடயம், அபய முத்திரையுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
க்ருஷ்ண வர்ணா கருபாச ஸூ காராஸ்யா க்ரு சோதரீ
ஷட் புஜா சூல கட் வாங்க வராந் தக்ஷ புஜை க்ரமாத்
வாமே கட்கம் ததா கேடம் அபயம் சத்ரு பஞ்ஜி நீ:

#####

திங்கட்கிழமை, 07 January 2019 20:19

சக்திபீடம்-19-க3/கம்

சக்திபீடம்-19-க3/கம்

ஓம்நமசிவய!

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-19 

அட்சரம் க3/கம்(மூன்றாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் ஜார்கண்ட் மாநிலம் -தேவ்கர் மாவட்டம் தேவ்ஹர்ஹ்
அட்சரதேவிகள் காயத்ரிதேவி/ தூம்ராதேவி
அங்கம் மார்பு
பைரவர்/இறைவன் வைத்யநாதர்
அங்கதேவி/இறைவி ஜெயதுர்க்கா
பீடங்கள் ஜாலந்தராயை நம
51-ல் நம் உடலில் வலது மணிக்கட்டு
ஊர் தேவ்ஹர்ஹ்/ராவணன்கண்ட்/வன்கண்ட்/ராம்மேஷ்வர்/கானன்/ வில்வகண்/ஹர்தபீட்/சிதாபூமி/வைத்யநாத் தேவ்கர்
அருகில் ஜஸீடீஹ் ர. நிலையத்திலிருந்து 6 கி.மீ.
மாகாணம்/நாடு ஜார்கண்ட்


இது கேதாரபீடம் அல்லது சட்டல பீடம் எனும் மகாசக்தி பீடம். தேவியை தரிசிப்பதால் எல்ல ஸித்திகளையும் அடையலாம். அக்னி பகவான் ஜூவாலையுடன் தவமிருந்து தேவமுகன் என்ற பெயரைப் பெற்றான். ஹர்த பீடம் என்றிருந்து பின்பு வைத்தியநாத் க்ஷேத்திரமானது. சிவன் அன்னையின் சிதைந்த உடலுக்கு திருமால் உதவியுடன் சிதை அடுக்கி தகனம் செய்த இடம் ஹர்த பீடம். கோவிலின் பிரஹாரத்தில் உள்ளது. இதை வைத்தியநாதம் சிதாபூரமௌ என சிவபுராணம் சொல்லும். அம்மன் சன்னதி சிவன் கோவிலுக்கு நேர் கிழக்கில் உள்ளது.

உபபீடம்:
அருகில் இருக்கும் பீடசக்தியை ஜூவாலமுகி என்பர். சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி திரவியங்கள் கொண்டு புரசரண ஹோமம் செய்தால் யாராகினும் மந்திர ஸித்தி அடைவர். கோரக்ஷகர் என்ற சித்தர் எட்டு சித்திகளை அடைந்த இடம்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

தாமிர நிறமேனி -நான்கு முகங்கள்-- எட்டு கரங்கள்- வலக்கரங்களில்- சூலம், அக்ஷமாலை, சூகம், வரமுத்திரை, இடது கரங்களில்- புஸ்தகம், கிண்டி, கபாலம், அபய முத்திரையுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
காக் யா தூம் ரா சதுர் வக் த்ரா ஸிம் ஹஸ் தாஷ்ட புஜா மதா
தூம் ராபா தக்ஷிணே தத்தே சூலம் பாசம் சுகம் வரம்
வாமே து புஸ்தகம் குண்டீம் கபாலம் பயம் க்ர மாத்:

#####

திங்கட்கிழமை, 07 January 2019 20:12

சக்திபீடம்-18-க2/கம்

சக்திபீடம்-18-க2/கம்

ஓம்நமசிவய!

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-18 

அட்சரம் க2/கம்(இரண்டாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் நர்மதாநதிக்கரை-அதிஷ்டானம்-ஓம்காரம்
அட்சரதேவிகள் கண்டிதாதேவி/ கத்யோதிநீதெவி
அங்கம் முதுகு
பைரவர்/இறைவன் நிமிஷர்
அங்கதேவி/இறைவி ஜ்யோதிஷ்மதி
பீடங்கள் ஒங்காராயை நம
51-ல் நம் உடலில் வலது முழங்கை
ஊர் ஓம்காரோச்வர்
அருகில் கண்ட்வா, இந்தூர்
மாகாணம்/நாடு மத்யபிரதேசம்

இது ஓம்கரம் பீடம் எனும் மகாசக்தி பீடம். சிவாலயத்தைஒட்டி மலைச் சரிவில் உள்ள குகையே மாகாளி கோவில்.

உபபீடம்:
இந்த தலத்தின் வடபகுதியில் தேவியின் ஆடை விழுந்த பகுதி- பீடசக்தியாக ஜ்யோதிஷ்மதி தேவி. இந்த ஜுவாலையில் அக்னிதேவன் தவம் புரிந்துள்ளார். சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி திரவியங்கள் கொண்டுபுரசரண ஹோமம் செய்தால் யாராகினும் மந்திர ஸித்தி அடைவர்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

மஞ்சள் நிறமேனி-மூன்று சிரங்கள்-நான்கு கரங்கள், வலதுகரங்களில்- திரிசூலம், அபயமுத்திரை, இடது கரங்களீல்- கட்கம், வரத முத்திரையுடன் கஞ்ஜரீடம் எனும் வாலட்டிக் குருவி வாகனம்.
தியானஸ்லோகம்:
கஞ்ஜ ரீடஸ்திதா பீதா த்ரிசிரா ச த்ரிசூலி நீ
காக்யா கத்யோதி நீ கட்க வரா பயாகரா மதா:

#####

சக்திபீடம்-18அ-க2

எண் சக்திபீடம்-18அ
அட்சரம் க2
அட்சரதேவிகள் கண்டிதாதேவி
அங்கம் முதுகு
பைரவர்/இறைவன் நிமிஷர்
அங்கதேவி/இறைவி பத்ரகாளி/ பகவதி
பீடங்கள்
51-ல் நம் உடலில்
ஊர் கன்யாகுமரி
அருகில் நாகர்கோவில்-4.கி.மீ
மாகாணம்/நாடு தமிழ்நாடு

பகவதி கன்யாகுமரியில் தவமேற்கும் பல யுகங்களுக்கு முன்பே அங்கம் வீழ்ந்துள்ளது. அந்த இடமே தற்போது பத்ரகாளி கோவில். சாந்தஸ்வரூபியாக காட்சி. பகவதி கன்யாகுமரிக்கு நடக்கும் எந்த திருவிழாவாக இருந்தாலும் முதன் முதலில் பத்ரகாளிக்கு பலி, பூஜை நடந்த பின்புதான் விழா துவங்கும். கம்பர் குலத்தோர் அர்ச்சகராக இருக்கின்றனர். ஆடி மாதம் நான்கு செவ்வாய், மற்றும் மார்கழி இரண்டாவது செவ்வாயில் பெரும் படையல் விழா.ஊரின் காவல் தெய்வம்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

#####

திங்கட்கிழமை, 07 January 2019 20:04

சக்திபீடம்-17-க1/கம்

சக்திபீடம்-17-க1/கம்

ஓம்நமசிவய!

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-17

அட்சரம் க1/கம்(முதலாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் பங்களாதேஷ்- சில்லாட்நகர் அருகில் பாஹிக்
அட்சரதேவிகள் காளராத்ரிதேவி/ புதவின்யாஸினிதேவி
அங்கம் உச்சந்தலை
பைரவர்/இறைவன் சிவபாரி
அங்கதேவி/இறைவி மகாலட்சுமி
பீடங்கள் ஸ்ரீபுராயை நம
51-ல் நம் உடலில் வலது தோள்
ஊர் சில்லாட்
அருகில் அஸ்ஸாம்-ஸில்சார்/மேகாலய-ஷில்லாங் நெடுஞ்சாலையில் பங்களாதேஷ்-டாக்கா விலிருந்து ரயில் பயணம்.
மாகாணம்/நாடு பங்களாதேஷ்

இது ஸ்ரீபுரா பீடம் எனும் மகாசக்தி பீடம். பாவிகள் இப்பீடத்தை அனுகுவது துர்பலம். இரவில் எல்லா சக்திகளும் சுதந்திரமாக விளையாடிக் கொண்டிருக்கும்.

உபபீடங்கள்-
இந்திர திசையில்-கர்ணாபரணம்-பீடசக்தி-ப்ராம்மீ
தென்கிழக்கு- அக்னிமூலை- அடுத்த கர்ணாபரணம்-பீடசக்தி-மாகேஸ்வரீ
தெற்கு யமன் திசையில்-பத்ரவல்லி (ஸ்திரிகளின் மார்பில்கஸ்தூரியால் எழுதப்பட்ட சித்திரம்)-பீடசக்தி-கௌமாரீ
தென்மேற்கு நிருதி மூலை-கண்டாபரணம்-அட்டிகை-பீடசக்தி வைஷ்ணவி
மேற்கு வருண திசையில்-நாஸாபரணமான புல்லாக்கு-பீடசக்தி-வராஹி
வடமேற்கு வாயுதிசை-தலைவகிடின் சுட்டிஆபரணம்-பீடசக்தி-சாமுண்டாதேவி
வடகிழக்கு ஈசான்ய மூலை-ஜடைபில்லை-பீடசக்தி-மகாலட்சுமி. சில்லாட் நகரை அடுத்துள்ள ஒரு தோட்டப் பகுதியில்-பாஹிக்–ல் ஸ்ரீபீடம் உள்ளது.
சிரம் வீழ்ந்ததாகக் கருதப்படும் சக்திபீடத்தை-ஸ்ரீபீடம் என்பர். இப்பீடமே மேற்சொன்ன ஏழு உபபீடங்களைக் கொண்டது. ஸ்ரீமகாலட்சுமி பீடம் என்பர்

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

வெண்ணிற மேனி- நான்கு கரங்கள்- வலதுகரங்களில் திரிசூலம், வரமுத்திரை, இடது கரங்களில்- அங்குசம், அபய முத்திரையுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
பூத விந்யாஸி நீ சுப்ரா கஜா ரூடா சதுர்புஜா
த்ரிசூலம் ச வரம் தக்ஷே வாமேங்குச மதா பயம்:

#####
சக்திபீடம்-17அ-க1

எண் சக்திபீடம்-17அ
அட்சரம் க1
அட்சரதேவிகள் காளராத்ரிதேவி
அங்கம் உச்சந்தலை
பைரவர்/இறைவன் பீமலோசனர்
அங்கதேவி/இறைவி கோட்டரீ
பீடங்கள்
51-ல் நம் உடலில்
ஊர் ஹிங்லாஜ், ஹிங்குலா
அருகில் ஹிங்கோஸ்நதிக்கரை
மாகாணம்/நாடு பலூசிஸ்தான்

ஹிங்கேஜ் குகை, ஹிங்கோஸ் நதி, ஹிங்லாஜ் பீடம். இந்துக்களின் அழகிய புண்ணியத் தலம். ஹிங்குலி- முன்வகிட்டு குங்குமப் பொட்டு / செந்தூரம் என சிந்தி மொழியில் பொருள்.- எனவே புனித இடம் ஹிங்லாஜ் எனப்பட்டது. கராச்சியிலிருந்து 140 கி.மீ. மலைக் குகையில் உயரம் குறைவான குகை வாயில் மூலம் ஊர்ந்து செல்ல வேண்டும். அங்கு வருட முழுவதும் இடைவிடாமல் எரியும் தீ ஜூவாலையில் அன்னையின் திருவுருவத்தை பாக்யசாலிகளே பார்க்க முடியும்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

#####

திங்கட்கிழமை, 07 January 2019 19:59

சக்திபீடம்-16-அஹ

சக்திபீடம்-16-அஹ

ஓம்நமசிவய!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-16

அட்சரம் அஹ(பதினாறாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் சந்திரபுரம்/ கரதோயாயுகாத்யா
அட்சரதேவிகள் அஷராதேவி/ அஜாதேவி
அங்கம் கன்னம்
பைரவர்/இறைவன் வாமனர்/க்ஷீராகண்டர்
அங்கதேவி/இறைவி அபர்ணா
பீடங்கள் சந்த்ரபுஷ்கரிண்யை நம
51-ல் நம் உடலில் கழுத்து
ஊர் யுகாத்யா
அருகில் போக்ரா-32.கி.மீ-பவானிபூர்
மாகாணம்/நாடு பங்களாதேஷ்

இது சந்திரபுரம் பீடம் அல்லது கரதோயாயுகாத்யா பீடம் எனும் மகாசக்தி பீடம். பர்ணா என்றால் இலை. இலையைக்கூட உண்ணாமல் பட்டினியாக இருந்து ஈஸ்வரனை அடைய தவம் –அபர்ணா. அம்மனுக்கு உருவமில்லை. அருவுருமாக கருங்கல் - லிங்கத்திருமேனியில் இருந்து அருள்.கரதோயா நதிக்கரையில் பூதாத்திரி கோவில்-யுகாத்யா

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

சிவந்த நிறமேனி. மஞ்சள் பட்டாடை. மூன்று சிகரங்கள், மூன்று கண்கள், ஆறு கரங்களுடன், இடது கரங்களில் அங்குசம், கேடயம், அபயமுத்திரை, வல்ப்பக்கம்- சூலம், பட்டாக்கத்தி, வரமுத்திரையுடன் புலிவாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
அ: காராக்யா த்வஜா தேவீ த்ரிசிரா ச த்ரிலோச நா
ரக்த பீதாம்பர க்ரூர தரக்ஷூ வரவாஹ நா
ஷட் புஜா சூல பட்டாஸி வரதா ந கராந் விதா
வாமேங்குச மஹா கேடா பயாத் தத்தே கரை க்ரமாத்:

#####

திங்கட்கிழமை, 07 January 2019 19:24

சக்திபீடம்-15-அம்

சக்திபீடம்-15-அம்

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-15 

அட்சரம் அம்(பதினைந்தாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் பங்களாதேஷ்-சீதகுண்ட்மலை
அட்சரதேவிகள் அம்பிகாதேவி/ அஞ்சனாதேவி
அங்கம் வலதுகரம்
பைரவர்/இறைவன் சந்திரசேகரர்
அங்கதேவி/இறைவி பவானி
பீடங்கள் கேதாராயை நம
51-ல் நம் உடலில் நாக்குநுனி
ஊர் சீதாகுண்ட்,சிட்டகாங்
அருகில் சந்திரசேகரபர்வதம்
மாகாணம்/நாடு பங்களாதேஷ்

இது கேதாரபீடம் அல்லது சட்டல பீடம் எனும் மகாசக்தி பீடம். சர்வஸித்தி அளிக்கும் தலம். பங்களாதேஷின் சிட்டகாங்-சாந்த்பூர் ரயில் பாதையில் 37 கி.மீ தூரத்திலிருக்கும் சீதாகுண்ட் என்ற நிலையத்தில் இறங்கி சீதாகுண்ட் மலை ஏறி கோவிலை அடையலாம். இவ்வுருவம் காளியாகத் தென்படும். படர்ந்து அடர்ந்த விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் நாக்கு, கோரப்பற்கள், கறுத்த திருமேனியில் பருத்த தனங்கள், கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட கரங்கள் கொண்டு புனையப்பட்ட ஆடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறு கரத்தில் ரத்தம் சொட்டும் அசுரனின் தலை என பயங்கரத் தோற்றத்துடன் தரையில் கிடக்கும் சிவன் மீது கால்வைத்து தரிசனம். மரண ஸ்வரூபினி. அனுதினமும் சம்ஹாரத் தொழிலை மேற்கொண்டிருப்பவள்.
உபசக்தி பீடங்கள்:
வலப்புறத்தில் சதிதேவியின் கங்கணம் விழுந்த இடம் அகத்தியர் ஆசிரமம்.
அகத்தியர் ஆசிரமம் பின்பக்கம் தேவியின் மோதிரங்கள் விழுந்தன- பீடசக்தி-இந்திராக்ஷி
பீடசக்தி-இந்திராக்ஷியின் பின்பக்கம் ரேவதி நதிக்கரையில் அம்மனின் வளையல்கள் விழுந்த இடம்-பீடசக்தி- ராஜராஜேஸ்வரி.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

கரிய நிறமேனி- ஐந்து சிரங்கள்- முதிர்ந்த, மெலிந்த தோற்றம், பருத்த வயிறு, நான்கு கரங்களுடன் புலிவாகனம், வலது கரத்தில் சூலம், அபய முத்திரை, இடது கரத்தில் பாசம், வரமுத்திரையுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
அஞ்ஜனா பாஞ்ஜநா தேவீ பஞ்சாஸ்யா ஜரடா க்ருஷா
மகோதரீ மஹா வ்யாக்ர வர வாஹ நமாஸ் திதா
சதுர்புஜா சூலபாச வரா பய கரா மதா:

#####

திங்கட்கிழமை, 07 January 2019 19:20

சக்திபீடம்-14-ஒள/ஒளம

சக்திபீடம்-14-ஒள/ஒளம

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-14 

அட்சரம் ஒள/ஒளம(பதினான்காவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் கன்யாகுமரி மாவட்டம்-சுசீந்திரம்/சிவீந்திரம்/சீவந்திரம்
அட்சரதேவிகள் ஒளஷதாதேவி/ ஒளஷதா
அங்கம் பற்கள்
பைரவர்/இறைவன் ஸம்ஹாரர்
அங்கதேவி/இறைவி நாராயணி/ முன் உதித்த நங்கை
பீடங்கள் ப்ருகுநகராயை நம
51-ல் நம் உடலில் கீழ் பற்கள்
ஊர் சுசீந்திரம்
அருகில் நாகர்கோவில் அருகில்
மாகாணம்/நாடு தமிழ்நாடு

இது ப்ருகு பீடம் எனும் மகாசக்தி பீடம். ப்ருகு பீடம் எனும் இதை சுசீ பீடம் என்றும் சொல்வர். தாணுமாலயன் ஆலயத் தெப்பக் குளதின் அருகில் உள்ளது. பிரக்ஞா தீர்த்த பூமி என கந்த புராணம் கூறுகின்றது. சாஸ்திர விதிப்படி செய்யும் வைதீக மந்திரங்கள், ஆராதனைகள் ஸித்தி அளிக்கும். மாமுனிவர்கள் ஆசிரமம் அமைத்து தியானம், யாகம், தவம் என ஆன்மீகப் பணியில் ஈடுபட்டதால் ஞானாராண்யம் எனப் பெயர். சுற்றுப் பிரகாரத்தில் சாஸ்தா, பஞ்ச கன்னியர், சிவன், பராசக்தி, பூதநாதர், நாகராஜர், காலபைரவர் திரு உருவங்கள் உள்ளன. அம்பாள் அஷ்ட புஜங்களுடன் சூலத்தை ஏந்தி காலசூலியாக காட்சி. சுடுசர்க்கரை எனும் மருந்தால் செய்யப்பட்ட சிலை (காவிமண், குந்தரிக்கம், குலுகுலு சர்க்கரை, கொம்பரக்கு, செஞ்சயம், பசுநெய், எள் எண்ணெய், மூலிகைச் சாறு ஆகிய எட்டுப் பொருட்களால் செய்தது) ஆடிப்பூரம்- அன்னை அவதரித்த நாள், பௌர்ணமி மற்றும் நவராத்திரி ஒன்பது நாட்கள் சிறப்பு.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

நீலமேக நிறமேனி- பிளந்த வாய், நீண்டு தொங்கும் தடித்த நாக்கு, கடுமையான பார்வை, நெரித்த புருவங்கள், கடுங்கோபத்துடன் பயங்கரத் தோற்றத்துடன் ஆறு கரங்களை உடையவள். வலது கரங்களில் சூலம், கட்கம், வரமுத்திரை, இடது கரங்களில்- கதை, கேடயம், அபயமுத்திரையுடன் காட்சி. பெருத்த வயிறுடன் பேரண்ட வாகனத்தில் இருப்பவள்.
தியானஸ்லோகம்:
ஒள காராக்யா ஹ்யகோ ரேயம் கராலீ தீர்க ஜிஹ்விகா
ஏக வக்த்ரா வக்ர நேத்ரா ப்ரு குடீ குடி லேக்ஷணா
நீலமேக நிபா ரௌத்ரீ பேரண்ட் வர வாஹனா
ஷட் புஜார்த கரை தத்தே சூலம் கட்கம் வரம் ததா
கதாம் கேடா பயாத் வாமே ததா நா ச மஹோதரீ:

#####

திங்கட்கிழமை, 07 January 2019 19:16

சக்திபீடம்-13-ஓ/ஓம்

சக்திபீடம்-13-ஓ/ஓம்

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-13 

அட்சரம் ஓ/ஓம்(பதின்மூன்றாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் கைலாச பர்வதம் அருகில்
அட்சரதேவிகள் ஓம்காரதேவி/ அஷ்வனிதேவி
அங்கம் முன்கரம்/ உள்ளங்கை
பைரவர்/இறைவன் அமரேஷ்வர்/அமரர்
அங்கதேவி/இறைவி தாஷாயணி
பீடங்கள் கைலாஸாயை நம
51-ல் நம் உடலில் மேற் பற்கள்
ஊர் மானசரோவர்
அருகில் கைலாச பர்வதத்தின் அருகில்
மாகாணம்/நாடு திபெத்

இது கைலாச எனும் மகாசக்தி பீடம். இங்கு ஜபிக்கப்படும் மந்திரங்களினால் தேவி திருப்தி அடைவாள். அங்கம் விழுந்து பள்ளமான இப்பகுதி பிரம்மனின் காருண்ய மனமே காரணமாகி நீர் நிரம்பி மான சரோவர் எனப்பட்டது. சரோவர்- நீர்நிலை. இரு பெரும் மலைகளுக்கிடையில் அமைந்துள்ளது. இது புனித நீர். மனசரோவர் ஏரிக்கரையில் கிடைக்கும் கற்களை எடுத்து வந்து பக்தர்கள் பூஜிக்கின்றனர்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

சிவப்பு நிறமேனி- ஆறு முகங்கள், பன்னிரண்டு கரங்களுடன். வலது கரங்களில்-அங்குசம், அம்பு, கத்தி, பாச்க்கயிறு, சங்கு, சின்முத்திரை, இது கரங்களில்- சூலம், வில், கேடயம், முஸலம்,(குருந்தடி) புஸ்தகம், அபயமுத்திரையுடன் காட்சி. மயில் வாகனம்.
தியானஸ்லோகம்:
ஓம் காரத் வச்வி நீ தேவி ரக்த வர்ணா ஷடா நநா
மயூ கார்க பாஹூ ஸ்யாத் தத்தே தக்ஷேங் குச ஷரம்
கட்கம் பாசம் ச சிந் முத்ராம் தரம் ச கேக ரேக்ஷணா
புஸ்தகம் சா பயம் சைவ ஸர்வ சத்ரு பயங்கரீ:

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13847964
All
13847964
Your IP: 172.68.65.119
2019-11-22 21:11

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg