gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

கவலையில்லா மனிதன் காசினியில் இல்லை! பாவம் செய்யா மனிதன் பாரினில் பிறப்பதில்லை! பாவங்களே அனைத்து துன்பங்களுக்கும் காரணம்! பாவங்கள் தீர்ந்தால் கவலைகள் தீரும்!

குருஸ்ரீ பகோரா

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:46

மூவகைச் சீவ வர்க்கம்!

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக் களிப்பாம்.

#####

மூவகைச் சீவ வர்க்கம்!

492. சக்தியும் சிவனும் சேர்ந்து விளையாட்டாக உயிர்களை உடலில் புகுத்தி சுத்தமும் அசுத்தமும் ஆன மாயையுடன் சேர்த்து சுத்தமான மேல் பகுதியை அடையச் செய்து உயிகளின் உள்ளைத்தில் விளங்கி துரிய நிலையில் சிவரூபம் காட்டி அருள் செய்வர்.

493. தெளிந்த ஞானம் உடைய விஞ்ஞான கலர் நால்வகையினரும், பேருழிக் காலத்தில் ஞானத்தைப் பெறும் பிரளயகாலத்தவர் மூவரும் உலக வாழ்வில் பொருந்தி அறியாமையை உடைய சகலர் மூவகையினருமாக விஞ்ஞான கலர் முதலிய மூவகைப் பட்டவரும் மொத்தம் பத்து பிரிவாக உள்ளார்கள்.

494. விஞ்ஞான கலர் ஆணவத்தை மட்டும் உடைய தன்மை நீங்கிய வரும், ஆன்ம ஞானம் உடைய அட்டவித்தியே சரபதம் சார்ந்தவரும், உயர்ந்த ஞானம் உடைய ஏழுகோடி மந்திரேசுவரரும், உண்மையான ஞானம் பெற்றுள்ள ஆணவ மல வாசனையை விட்டவரும் என நால்வகையினர் ஆவர்.

455. விஞ்ஞான கலரில் பக்குவம் குறைவு பொருந்தியவர் உடம்புடன் கூடியிருக்கின்றபோது ஜீவன் முக்தியடையாமல் அடுத்த பிறவியில் சிவனை அடைவர். இரண்டாம் நிலையினரான பிரளயகலர் இரு பிறப்புகளில் நூற்றெட்டூ ருத்திரப் பதம் அடைவர். மாயையினது வலிமையால் பினைக்கப்பட்ட சகலர் மும்மலம் கெடாது இருப்பர்.

496. ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களை உடைய சகலரில் சிலர் சித்துசிவனைப் பேணி ஞான வடிவமாயினர். ஞானம் கிரியை என்பவை ஒத்து சதாசிவ நிலையைப் பற்றி நிற்பவர் ஆணவம் கன்மம் மயைகளைக் கடந்து மேலே நிற்பவர் ஆவார். ஞானம் கிரியை என்பவை ஒத்து நிறக ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்களை நீக்கமாட்டாதவர் சகலர் ஆவர்.

497. சிவமாகி ஐந்து (ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி) மலங்களை வென்றவர் சித்தராய் வீடுபேற்றை அடைந்து அழிவில்லாத நிலையில் இருப்பர். பசு பாசத்தன்மை நீங்கியவரான அவர் பிறவி நீங்கினவர் ஆவார். சிவனது தத்துவங்களை (சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், ம்கேசுவரம், உருத்திரம், திருமால், நான்முகன்,) விரும்பி அறிந்தவர் ஆவார்.

498. விஞ்ஞான கலர் ஆணவம் என்ற மலத்தை மட்டுமே கொண்டுள்ளது. விஞ்ஞான கலரைப் போன்று சுத்த மாயையில் உள்ள பிரளயகலர் இரண்டு மலம் உடையது. கருவி கொண்டு உணரும் சகலரும் அஞ்ஞானத்தால் அறிவற்றவர் ஆவார். இந்த மூவகை உயிர் இனங்கள் உத்தமம், மத்திமம், அதமம் என்றுள்ளதால் ஒவ்வொரு பிரிவும் சேர்ந்து ஒன்பதாய் இருக்கின்றன.

499. விஞ்ஞான கலர் ஞான கன்மத்தால் உயிரின் உள்ளே நின்று உணர்த்தப் பெற்றும் பிரளகாலர் உள்நின்று உணர்த்தப்படாமையினால் வித்தியா மண்டலங்களை அடைந்தும், சகலர் ஞானத்தை படிப்படியாய் பெற மாயா உடலைக் கொண்டு திரும்ப திரும்ப பிறந்து உண்மையான ஞானத்தை அடைந்து சிவசாயுச்சிய பதம் அடைவர்.

500. ஆணவம் கொண்டுள்ள அஞ்ஞானத்தை கனவிலும் நீங்கியவர் விந்து நாதம் ஆகியவற்றை சகல நிலையில் உடம்புடன் காண முடியும்.. ஆணவம் ஆகிய மலங்களைப் பொருந்திய சகலரோ சிவதத்துவ மண்டலங்களை மலங்கள் நீங்கிய பின்பே அடைவர்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:44

கர்ப்பக் கிரியை!

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

கர்ப்பக் கிரியை!

451. இறப்பின் போது பிரிந்த இருபத்தைந்து தத்துவங்களை தோற்றுவித்து உயிர் தத்துவங்களுடன் சேர்க்கின்றான். அன்னையின் கருப்பையில் பொருந்தி உயிருக்கு உதவி செய்கின்றான். உடல் வளர்ச்சிக்குத் தேவையனவற்றை அறிந்தே யாவற்றையும் செய்தருள்கின்றான்.

452. ஞானிகள் உணரும் மூலாதாரத்தில் மேல் நீரும் நெருப்பும் பொறிந்துள்ளன. ஞான பூமியில் திருவடி பதித்து பொறுமையுடன் இனிய உயிரை கருவில் புகும்படி செய்து கருவிலிருந்து வெளிவர பத்துமாத எல்லையை இறைவன் வகுத்து அருளினான்..

453. ஆணும் பெண்ணும் இன்புற்றபோது ஜீவன் விட்டுச் சென்ற வினைதனை அனுபவிக்க துயரம் பொருந்திய உடலில் பக்குவம் அடைய வேண்டிய காலத்தையும் உலகத்தில் தங்க வேண்டிய காலத்தையும் இருவரும் கூடிய அந்த தருணத்திலே நியமித்தான்.

454. ஞானியர் அறிந்த இருபத்தைந்து தத்துவங்களும் ஆண் உடலில் தங்கி உருப்பெற்றதை மற்றவர் அறியமாட்டார். அக்கரு பின்பு பெண்ணின் கருவை நாடி அடைந்த ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவமாய் ஓடி கருவில் விழும்.

455. யோனி விரிந்து லிங்கத்திலிருந்து சுக்கிலம் விழும். புருடன் என்ற தத்துவத்தில் ஞானேந்திரம், கன்மேந்திரியம் பூதங்கள் ஆக பதினைந்து தத்துவங்களுடன் பொழிந்த சுக்கிலத்துடன் மற்ற தன்மாத்திரைகள் அந்தக் காரணங்க்கள் ஒன்பதும் புருவ நடுவிலும் உச்சியிலும் பொருந்தும்.

456. மலரின் நறுமணாத்தை கொண்டிருக்கும் காற்று எங்கும் பரவியிருப்பதுபோல் கருப்பையில் உள்ள தனஞ்சயன் என்ற வாயு குறிபிட்ட காலத்திற்குள் ஜீவனின் விந்துவுடன் பெண் கருவில் நுழையும்.

457 .உருவம் அற்ற புரியட்ட உடலுலின் உள்ளே புகும் பத்து வாயுக்கள், காமம் முதலிய எட்டு விகாரங்கள், ஆகியவற்றில் மூழ்கும் புருடன் உடலின் ஒன்பது துளைகள், குண்டலியாகிய நாதம், பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணன் என்ற பிறவியும் இறைவன் என்ற பாகன் செலுத்தாவிட்டால் பன்றியைப் போன்ற இழிவான பிறப்பாகி விடும்.

458. ஆண் பெண் இனைப்பில் வெளிப்படும் சுரோணிதக் கலப்பில் ஆணின் சுக்கிலமானது எதிர்த்துச் சென்றால் குழந்தை உருத்திரைப் போல் இருக்கும். பெண்ணின் சுரோணிதம் எதிர்த்துச் சென்றால் திருமால் போலிருக்கும். சுக்கிலம் சுரோணிதம் இரண்டும் சம்மாகப் பொருந்தினால் அது பிரம்மனைப் போல் இருக்கும். மூவரின் தன்மை ஒத்த குழந்தை பேரரசனாய் வாழ்வன்.

459. பல உலகங்களில் பிறப்பெடுத்து வருந்திய ஆண் பெண் இருவரது வண்ணத்தில் கரு உருவாகும். பல பிறவிகளில் பல உடலில் பொருந்திய அக்கரு நன்றாகப் பதிந்த பின்பு மயக்கம் பொருந்திய இருவர் மனமும் ஒன்றாயின.

460. அறியாத நிலையில் உள்ள சிசுவிற்கு மாயை தத்துவங்களைச் சேர்ப்பாள். அத்னால் அக்குழந்தை பேருறக்கத்திலிருந்து விழித்து நினைவு அடையும். வலிமை மிக்க மாயையின் எட்டு குணங்களும் சுத்த மாயையின்று தோன்றி நான்கு வகை வாக்கிலிருந்து சொல்லும் உண்டாகும்.

461. எலும்புகளால் கூடுகட்டி நரம்புகளால் வரிந்து கட்டீ இரத்துடதுடன் கூடிய இறைச்சியால் திருத்தமாக உடல் என்ற வீட்டை அமைத்து இன்பம் பெற அருளினான் இறைவன். அவன் மேல் உள்ள நட்பால் அவனை நாடி நிற்கின்றேன்.

462. பால் போன்ற நிறம்கொண்ட சூரியன் உடல்களைப் பக்குவம் செய்ய ஒளியின் மேனியனான சிவன் உடலில் நீக்கம் இல்லாது நிறைந்து நின்று நன்மை செய்வான். குதத்திலிருந்து செல்லும் அக்னியின் வேகத்தை தணிப்பதற்காக இன்பம் பெறும் முறைகளை வைத்தான்.

463. பழி பொருந்திய பல வினைகளைச் செய்யும் பாசத்திற்கு கட்டுப்பட்ட கருவைப் பல வினைகளிலிருந்தும் அழியாமல் காப்பான். சிசுவைத் தூய்மை செய்து வினைகளை நீங்குமாறு செய்து துன்பம் அடையாமல் காப்பான்.

464. சுக்கில நாடியில் தோன்றிய வெண்மையுடைய சுக்கிலமும் யோனியிலிருந்து தோன்றும் சிகப்பு நிற சுரோணிதமும் எட்டு விரல் அளவிற்கு நகர்ந்து நான்கு விரல் அளவிற்கு உள்ளே செல்லும். அப்போது பஞ்ச பூதங்களும் நாதமும் மாயையும் சேர்ந்து எட்டுசான் அளவு உடல் சிசுவுக்கு உண்டாகும்.

465. ஆண் பெண் இன்பத்தில் பொருந்திய இறைவன் கருவில் உடலைத் தந்து அதனுடன் முப்பத்தொரு தத்துவங்களைச் சேர்த்து இருவரின் மய்க்க நிலையில் ஒரு கருவான முட்டையைத் தருவான்.

466. பிண்டமான உடலில் அறியாமையான புலன்கள் ஐந்தும் தோன்றி உடல் அழிந்த போது அவை செயலற்றுப் போகும். அண்டத்தில் உடலைச் சுற்றியுள்ள அண்டகோசத்தின் உள்ளே இருக்கும் உயிரும் பக்குவம் பெற்றபோது செயலற்று நாத தத்துவத்தில் அடங்கும்.

467. மாயையால் உண்டாக்கிய உடலை செலுத்தும் சிவ தத்துவமான அகர உகர மகர, விந்து, நாதம் ஆகிய பிராணவத்தால் கருவை இயக்குவான். உயிரை நிலைக்க வைக்கும் ஆன்ம தத்துவம் இருபத்திநான்கும் புருட தத்துவம் அல்லாத வித்யா தத்துவம் ஆறும் உயிரின் இயல்பிற்கு ஏற்றவாறு கூட்டி உடல் பொறியில் ஒன்பது துவாரங்களை வைப்பான்.

468. இன்பத்தில் திளைத்திருந்த ஆணும் பெண்ணும் மனம் ஒன்றி வைத்த மண்ணால் ஆன குடத்துள் சேர்பவன் ஆன்மா ஒருவனே. அதனுடன் ஒன்பது வாயிலாகிய நீர்ச்சால் கலசங்களும் சூக்ம உடல் எட்டும் கன்மேந்திரியங்கள் ஞானேந்திரியம் ஆக பதினெட்டு குடங்களும் கருப்பையான சூளையிலே விளைந்து பக்குவம் ஆயின.

469. உடம்பில் தோன்றும் ஆறு துன்பங்களை அறியாது இருக்கின்ற உயிர்கள். மனதில் பெருகிக் கொண்டிருக்கும் தாமச சாத்வீக ராசத குணங்களின்று பிரியாமல் இருக்கின்றது. சித்திகள் அமைவதை பொருந்தாவிட்டால் பத்து மாதங்களில் உருவாகிய இது பிண்டம் ஆகும்.

470. மாயையினின்று உடலைத் தோன்றுவித்த விதமும் உடலில் உயிரை அமைத்த விதமும் உணர்ந்து தாழ்ப்பால்களுடன் கூடிய ஒன்பது வாயிலை அமைத்து ஆயிரம் இதழ்களை உடைய சிரசின் அக்னியில் இறுதி நிலை வைத்த இறைவனைச் சுழுமுனையில் சேர்ந்தேன்.

471. நுட்பமான அறிவுடையாரை ஓதும் முறைபற்றி கேட்டு அறிந்தேன். பேரொளியாய் எங்கும் நிலைத்து நிற்கும் இறைவன் கேடில்லாத உயிர்களை வினைக்கீடாக உடல்களில் பொருந்தி வினைக்கு முதற் காரணமாகின்றான். குழம்பை போன்ற கருவைக் கூட்டி வைக்கின்றான். அதை உருவாக்கி வளர்க்கின்றான். அதனுடன் கலந்து நிற்கின்றான். இவ்வாறு சேர்ந்திருக்கும் தன்மைக்கு நேர்படல் என்றாகும்.

472. மலரைப் போன்ற யோனியும் மொட்டைப் போன்ற இலிங்கமும் பொருந்தி மலரும், மலர்ந்தபின் சுக்கில சுரோணிதங்கள் கலக்கும். அதில் ஒளிமயமான ஜீவ அனுக்கள் உண்டாகும். நீரில் எங்கும் பறவி நின்ற குழிழியின் உடலில் உள்ள ஜீவ அனு உடலில் கலந்துவிடும்.

473. நுண்ணுடலில் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்பொறிகளும் அவற்றுடன் தொடர்புடைய மனம், புத்தி, அகங்காரம் என்?ற மூன்று அந்தகாரணங்களும் உண்டாகி அவற்றுடன் விருப்பு வெறுப்பிற்கு எற்றவாறு உண்டாகும் உடலை முதலில் நெற்றிக்கண்ணுடைய சிவனே சேர்த்து பின் பிரித்து அவிழ்த்து விடுவான்.

474. சிவனின் திருப்பெயரான பிரணவத்தை கலந்து உடலில் நாதம் விளங்கும்படி செய்து பசுத்தன்மை பாசத்தனமை இரண்டும் நீங்கிடச் செய்வான். நான்கு இதழ் மூலாதாரச் சக்கரத்தின் பரப்பு முழுமையும் மண் முதலான தத்துவங்களிலிருந்து தொடங்கும் நியதியை வைத்திருக்கின்றான்.

475. சக்தி இலாமல் சிவம் இல்லை. சிவம் இல்லாமல் சக்தி இல்லை. சிறப்பான உயிருக்கு உடலைத் தரும்போது இரு செவிலித் தாயார் தன்மேல் வைக்கும் அன்பை தந்தருளினான்.

476. அவரவர் வினைக்கு ஏற்ப அமைத்து செய்யப்பட்ட உடலின் பிறவியில் நல்ல சக்தியும் சக்திக்கேற்ற முறையில் இருளைப் போக்கும் பேரொளியாய் இறைவனும் எல்லா வகையான உணர்வுமயமான பல உயிர்களுக்கும் வகை செய்யும் விதமாக அவைகளின் உயிர்க்கு உயிராய் நிற்கும் சிறந்த பொருளே சிவன்.

477. பெருமைகண்டு வளர்கின்ற ஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ நினைப்பது கற்பனையாகும். அது தாய் தந்தையின் தன்மை கொண்டு விளங்கும். அந்த உய்ருக்கு ஏற்ற உடலைப் படைப்பது சிவனின் வல்லமை.

478. ஆண் பண்பு மிகுந்திருந்தால் ஆண் ஆகும் பெண் பண்பு மிகுந்திருந்தால் பெண் ஆகும். ஆண் பெண் பன்பு இரண்டும் சமமானால் அவ்வுயிர் அலியாகும். முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பானதாய் இருக்கும். தரணியை ஆளும். தாழ்ச்சி மனப்பான்மை கொண்டால் சுக்கிலம் பாய்வது நின்று விடும்.

.479. ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டுகள் ஆகும். அது நான்கு விரற்கடை ஓடி விழுந்தால் அந்த உயிரின் வாழ்வு எண்பது ஆண்டுகள் ஆகும். சுக்கிலத்த்ச் செலுத்தும் வாயுவை நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு.

480. சுக்கிலத்தைச் செலுத்திய வாயு குறைந்தால் குழந்தை குட்டையாய் பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின் குழந்தை முடமாகும். வாயு தடைப்பட்டால் கூனுடன் பிறக்கும். ஆராய்ந்தால் பாய்கின்ற வாயு பெண்களுக்கு இல்லை.

481. மாதர் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு தாயின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் அக்குழந்தை மந்த புத்தியுடைதாய் விளங்கும். வயிற்றில் நீர் மிகுந்தால் அக்குழந்தை ஊமையாய்விடும்.. மலமும் நீரும் மிகுமானால் குழந்தை குருடாகிவிடும்.

482 இன்ப நுகர்ச்சியில் ஆண்மகனிடம் உயிர்ப்பு வலது நாசியில் (சூரிய கலை) இருந்தால் ஆண் குழந்தையாகும். சந்திரக்கலை (இடதுநாசியில் உயிர்ப்பு விளங்கினால் அது பெண் குழந்தையாகும். பிராண வாயுவுடன் அபானன் என்ற மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும். சூரியகலை சந்திரக்கலை இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.

483. ஆண் பெண் இருக்கும் உயிர்ப்பு ஒத்து இருந்தால் குழந்தை அழகாக இருக்கும். இருவருக்கும் உயிர்ப்பு தடுமாறினால் கரு உண்டாக வாய்ப்பே இல்லை.

484. பெண் வயிற்றில் உருவான் குழந்தை அண்ணாக்கிலே விளங்கும் பேரொளி போன்றது. குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழு வடிவைப் பெறும்.

485 கருவானது பத்து மாதம் கருப்பையில் வளரும். தக்க பருவத்தில் அக்குழந்தை உலகில் பிறந்து வளரும்.. மாயையான வளர்ப்புத் தாயிடம் பொருந்தி வளரும். அந்த உடலில் பொருந்திய உயிர் வடிவம் அற்றது என்பதை எவரும் அறியார்.

486. கருவிற்கு காரணமான தந்தை அக்குழந்தை என்ன குழந்தை என்பதை அறிய மாட்டான். அக்கருவை ஏற்றுக் கொண்ட தாயும் அறியமாட்டாள். நான்முகன் என்ற தட்டானும் அறிந்தாலும் யாருக்கும் சொல்லமாட்டான். அதை அமைத்துக் கொடுக்கும் சிவனும் அங்கே உள்ளான். மயையின் தன்மைதான் இது.

457 .இன்பத்தை அணுபவிக்கும் ஆண் பெண்ணின் புனர்ச்சியில் துன்பம் பொருந்தும் பாசத்தில் தோன்றும் உயிர் துன்பத்தில் வளர்ந்து மேன்மை பெற விருப்பி எல்லாவற்றிற்கும் முன்பு தோன்றிய பழமைக்கும் பழமையான இறைவனை பொருந்த துதிக்க வேண்டும்.

488. குயில் முட்டையை காக்கைக் கூண்டிலே வைத்தால் காக்கை ஐயம் இன்றி அதை வளர்க்கும். அது போன்று இயக்கமில்லாமலும் போக்கில்லாமலும் ஏன் என்ற கேள்வி கேட்காமலும் ஒரு மயக்கத்தால் தாய் உடலை வளர்க்கும் முறை இதுவேயாகும்.

489. தாவரம் முதலில் கிழங்காயிருந்து முளைவிட்டு வளர்ந்து புதராய் மாறிபின் பழமாய் பயன் அளிக்கும். அது தாவரத்தின் இன்பமாய் அமைவது போல் எல்லாவற்றையும் படைத்துக் காத்து பயன் அளிப்பதே ஆதி இறைவனுக்கு இன்பம் தரும்.

490 மற்றத் தேவர்களைவிட பெருமை உடையவனாக இருப்பினும் என் இறைவன் ஊன் உடலில் உள்ள குற்றங்களிலும் கலந்து நிற்கின்றான் அந்த இறைவனைத் தேவராலும் உணர முடியவில்லை. உயிர்கள் தங்கள் தவத்தினால்தான் உணரமுடியும்.

491. மேன்மை பொருந்திய இறைவனிடம் ஒடுங்கிய உடல் மீண்டும் பருவத்திற்கு ஏற்ப பயனை அடைய வேண்டி கடலில் உப்பு திரண்டு உருக்கொள்வதைப் போல் இறைவன் அருளால் மீண்டும் தூல உடம்பு கருவில் உருவாகும்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:41

அருளல்!

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

அருளல்!

441. எண் திசைகளிலும் வீசும் காற்றுடன் வட்டமாய்ப் பொருந்தியிருக்கின்ற கடல், தீ, பூமி, ஆகாயம், என்ற பூதங்களை ஒன்றாய்ச் சேர்த்து உயிர்கள் இருக்கும் இடமான உடம்புடன் உயிரையும் சேர்த்தும் பிரித்தும் வைப்பான்.

442. சிரசில் பிரம்ரந்திரத்தில் நீங்கி விளங்கும் நாதத்தை விரும்பி இன்பத்தை அனுபவிக்கும் உயிர்களுக்கு இறப்பு இல்லை. விரிந்த சுடர் அக்னி, சூரியன் சந்திரன் ஆகிய மூன்றையும் உயிர்கள் உய்வதற்கு தந்து அருள்பவன் சிவனே.

443. குயவன் தன்னுடைய் தண்ட சக்கரத்தில் ஏற்றிய மண்ணை தன் விருப்பிற்கு கலயமாக செய்வான். சிவன் எண்ணினால் அசையாத தனமை கொண்ட உலகம் அசையாத தன்மையை விட்ட ஆன்மாவாய் மாறும்.

444. சிவன் ஒளியை ஊர்தியாய் உடையவன். மாறுபட்ட செயலை உடையவன். பூதப்படையை உடையவன். அவன் தன் விருப்பப்படி உயிர்களை படைத்து அருள்வான். வேண்டியவர் வேண்டியதைக் கொடுக்கும் கொடையாளான். அவன் குணங்கள் எட்டு .சடாமுடியை உடைய அவன் அடியவரின் சிந்தையில் நின்றிருப்பான்.

445.. உயிர்கள் வாழ் வேண்டும் என்று ஏழு உலகங்களையும் படைத்தருளினான் இறைவன். அதற்காக பல் உயிர்களை படைத்தருளினான். ஐந்து பூதங்களையும் படைத்தனன், விருப்பத்துடன் உயிரிலும் உடலிலும் பொருந்தி நின்று அருளினான்.

446. ஏழு உலகங்களையும் படைத்து அவற்றை உடமையாக கொண்டவன் சிவன். பல தேவர்களையும் படைத்து ஆட்கொண்டான். பல உயிர்களைப் பாடைத்து தேவர்களுடன் தொடர்பு படுத்தி ஆட்கொண்டான். அவனே தலைவனாக விளங்கின்றான்.

447. ஆதி சக்தியுடன் கூடி ஐம்பெரும் பூதங்களைப் படைத்தனன். குற்றம் இல்லாத ஊழிகளைப் படைத்தனன். கணக்கில்லத தேவர்களைப் படைத்தனன். இவ்வாறு படைத்தாலும் அவர்களின் ஆதாரமாகவும் இருக்கின்?றான்.

448. அகன்ற இடங்களை உடைய ஏழு உலகங்களுடனும் பொருந்தியும் அவற்றை கடந்தும் உள்ளான். இப்படியிருந்தும் சிவன் எளிமையாய் இருப்பான். பலவகையான உயிர்களிடமும் பரவிக் கலந்து அவ்வுயிர்களிடம் பொருந்தி உபதேசம் செய்தருள்வான்.

449. உடலின் உள்ளே நிற்கும் சோதியானது உயிர் பொருந்திய உடலாகவும் வான் தேவர்கள் விரும்பும் சிறப்பான பொருளாகவும் பூவுலகில் பக்குவம் பெற்றவர் புகழும் திருமேனியாகவும் கண்ணின் மணியாகவும் ஞானமாகவும் விளங்கும்.

450. யாராலும் அறிய முடியாத அண்டத்து திருவடியைப் பூமி முதலாகப் பொருந்திய உடலில், நீரில் பால் கலந்து நின்ற நேர்மையைக் கண்டு, சோர்வு அடையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இன்பத்தை அடைந்தேன்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:38

திரோபவம்—மறைப்பு!

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#####

திரோபவம்—மறைப்பு!

431. உயிருக்கு உயிராக இருப்பவனை உடலில் சோதியாக கலந்தவனை உள்ளத்திலிருந்து ஓரடிகூட நீங்கா ஒருவனை ம்னத்தின் உள்ளே இருப்பினும் மலங்களின் மறைப்பால் எத்தகைய தன்மையன் இறைவன் என ஆரியாது. இருப்பர்.

432. துன்பந் தரும் பாசத் தொடர்பை உயிர்களுக்கு அளித்தாலும் இறைவன் இன்பம் அடைய பிறயவியைத் தந்துள்ளான். உயிர்க்கு எலும்பும் தோலும் தசையும் தந்த இறைவன் முத்தி அடையவும் செய்துள்ளான்.

433. உருத்திரன் திருமால் பிரமன் அகிய மூவரும் இறைவன் அமைத்துக் கொடுத்த இயந்திரமான உடலில் இறைவன் மறைவாக அமைத்த தன்மைகளை அறிய மாட்டார்கள்.

434. .கண்ணால் பர்க்கும் ஒளியாய் இருந்து அருள் செய்பவன் இறைவன். ஆணாய் பெண்ணாய் அலியாய் விளாங்கும் சிவனை உண்பதற்கு பயன் படும் நாவின் வழி மனத்தைச் செலுத்தி வான் மண்டலத்தில் இயற்கையாக உண்டாகும் தடாகத்தில் உடன் உறைந்து பொருந்தாமலிருப்பர்.

435. தெளிவு பொருந்திய உயிர்களுக்கும் தேவர்களுக்கும் இன்பத்தை அளிக்கும் இயல்புடைய சிவனும் சிறிய ஒளியை உடைய வான்மதியும் இருள் கெடும்படியான நிறைந்த இருளில் இருக்கும் ஜீவன்களில் மறைப்பை செய்து கொண்டிருப்பான்.

436. மறைப்புச் சக்தியைத் தரும் தத்துவங்கள் ஓசை முதலிய தன்மாத்திரைகள் கூறப்படும் ஆசைகள் ஒன்றிற்கு ஒன்று மாறுபட்டு இருக்கும் பலவகை வடிவங்கள் ஆகிய எல்லாவற்றிற்கும் தானாய் மறைக்கின்ற இறைவனே மறையும் சக்தியை ஆருள் செய்கின்ரான்.

437. அடியேன் பெருமானை உள்ளத்தில் உணர்ந்து வழிபட்டேன். அப்போதே அவன் காட்சி தந்து அருளை அளிப்பான். அதனால் மகிழ்வுடன் அன்பு வெளிப்பட அப்பெருமானை வெளியில் வழிபட்டாலும் அது அவனுக்கு விருப்பைத் தரும்.

438. எல்லாவற்றையும் தானாக மறைத்து நிற்பவன் மகேசுவரன். கீழ்முகமாக செய்லபடும் அவன் உருத்திரன் திருமால் மற்றும் நன்மையைச் செய்யும் சுவாதிட்டான கமல மலரில் உள்ள பிரமன் ஆகிய மூவருடன் சேர்ந்து விளங்குவான்.

439. ஒடுங்கிய பாச நிலையில் உத்தம சிவன் எனும் பெருங்கரையில் ஜீவன்கள் இருந்து ஆன்ம அனுபவத்தை விரும்பி பிறவியை நாடாத நிலையில் வான் கங்கையைப் பொருந்தினால் அவரின் மாசு நீங்கப் பெறும்.

440. ஒர் மண்ணில் பல் கலங்கள் உருவாகும். அதே போல் உடலின் பேதங்களெல்லாம் உடலில் உள்ளே உள்ளவனே காரணமாகும். கண் என்ற பொறி பார்வையில் பல பொருள்களைக் கண்டாலும் தன்னை அறியாமல் செயல் படுவதைப்போல் இறைவன் எல்லா உயிர்களின் வேறுபாட்டிற்கும் காரணமாக இருந்தாலும் உயிர்களின் காட்சிக்கு புலப்பட மாட்டான்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:36

சங்காரம்!

ஓம்நமசிவய!

மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய்
கண்ணுள் மணியாய்க் கலந்தாய்
நீர்தீக் காற்றாய் நின்றாய்
கார் குளிராகக் கணிந்தாய்
பகலவன் நிலவாய்ப் பரந்தாய்
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி!

#*#*#*#*#

சங்காரம்!

421. சிவன் தீயைப் பெருகச் செய்து விரிந்த உலகத்தை அளித்தான். அக்னியால் கடலை வற்றிப் போகும்படி செய்தான். அக்னியால் அசுரரை அளித்தான். அந்த அக்னியே பெருமானின் கையில் விளங்கும் அம்புபோன்றதாகும்.

422. தினபிரளயம், நடுப்பிரளயம், பெரும்பிரளயம் ஆகிய மூன்றில் கற்பத்தின் முடிவில் வரும் பிரளயம் ஒன்றே. அன்று அழிந்த இந்த உலகத்தின் நிலையை ஞானக்கண்ணால் பார்க்கின்றேன். உலையில் போட்ட அரிசி மேலும் கீழும் சுறுவதைப்போல் உலகம் பிரளயத்தில் சுழலும். மலைபோன்ற பெரிய நிலம் எரிந்து அழியும்.

423. ஜீவன்களுக்கு பக்குவம் செய்யும் நிலம் பனிமிக்க மலை மகிழ்ச்சியை உண்டாக்கும். ஏழு கடல்களின் பெருக்கம் எல்லாம் கொதிக்கும்படி தீயை மூட்டி வெட்ட வெளியாய் ஆக்குபவரது மனதில் வியப்புக்குரியது ஒன்றும் இல்லை.

424. சிரசின் மெல் உள்ள ஒளி மண்டலத்திலிருந்து கீழே இறங்கிய சிவன் ஆதிசக்தி உடலைச் சுற்றியுள்ள அண்டகோசத்தில் பொருந்தி சக்தியோடு கூடி ஜீவன்களை பக்குவம் செய்து மூலாதாரத்தில் உள்ள குண்டலி ச்க்திமீது எழும் தீயை மீண்டும் தன்னுடன் ஒடுக்கி விளங்குவான்.

425. ஒன்றையும் அறிந்து கொள்ள முடியாத உறக்கம் தினச்சங்காரம். கருவி சுழன்ற நிலைமை அமைந்த சங்காரம் என்பதாம். செயலின்றி ஒன்றும் புரியாமல் இருப்பது சுத்த சங்காரம். சிவன் அருளில் பொருந்தச் செய்வது உண்மை சங்காரமாம்.

426 .ஸ்தூல சூக்கும இராண்டு உடல்களையும் சிவன் தொட்டுக் கொண்டிருப்பது நாள் ஒடுக்கம் என்ற நித்த சங்காரம். இது மாயைப் பொருந்திய சங்காரம் ஆகும். சுத்த சங்காரம் மனம் அதீதத்தில் போய்ச் செயல் இன்றி இருத்தலாகும். சிவன் ஸ்தூல உடலின்று சூக்ம உடலைப் பற்றி ஸ்தூல உடலை தழுவுமாறு விடுதலே சங்காரம்.

427. நாள் ஒடுக்கம் என்பது பிறவித் துன்பத்தை போக்கிவிடும். அப்படி என்றால் மனம் கருவிகளின் ஒடுக்கத்தில் உடலும் உயிரும் பிரிந்திருக்கும் நிலை உண்டாகும். இது ஆன்மாவிற்கு கெடுதல் செய்யும் நிலையாகும். சிவத்தன்மை அளித்த ஒடுக்கமே உண்மையானது..

428. நாள் ஒடுக்கம் என்ற நித்த சங்காரம் நீண்ட உறக்கத்தில் இறுத்துவதாகும். அமைத்து வைத்த ஒடுக்கம் மனம் முதாலானவைகள் அடங்கி இருத்தலாகும். சுத்த ஒடுக்கம் கருவிகளின்று நீங்கி பரன் அருளால் கூடாமல் இருக்கும். கருவிகளின்று நீங்கி சிவன் அருளில் தோய்ந்து விளங்குவது நான்காம் ஒடுக்கமான சங்காரம்.

429. குணம் பழாகி சிவத்தை முதலாகத் தோன்றும் ஆன்மப் பயிர் தனு காரணம் முதலியவற்றுடன் சேர்ந்து பின் அடங்கினும் முந்தைய நிலையை அடையாது.. இது முடிவில்லா சங்காரம். ஜீவன்கள் திருமால், பிரம்மன் செயலுக்குட்பட்டு பிறப்பிலும் இறப்பிலும் உழல்வர். ஆனவ மலம் நிலைகெட்டு வறுத்த விதையைப்போல் பயிரானது அந்தச் சிவன் பரப்பில் இருக்கும்.

430. சேரும் வினைகளைச் சுட்டுவிடுவது போல் சிவனிடம் ஆர்வத்தை பெருக்கி உயிர்களே நில்லுங்கள். அவை அழியும்படி செய்யும் சிவன் இருக்குமிடம் சகஸ்ரதளமாகும். அதை உடலில் வைத்தான் அவன். கலந்து எங்கும் நினைந்திருக்க உடலில் ஒளிக்கற்றைகளை அமைத்துள்ள அவனது கருணையை உணருங்கள்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:34

திதி!

ஓம்நமசிவய!

மழைபொழி இமயவல்லி சேய் தழைசெவி எண்தோள்
தலைவ திங்கட் சடையோன் செல்வ எங்கட்கு அருளும்
இறைவா ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

#####

திதி!

411. உலக உயிர்களுக்கு அருளைச் செய்யும் சிவனே வெளியாகவும் இருளாகவும் இருக்கின்றான். அவனே ஞானியர்களால் புகழப்படுபவனாகவும் அஞ்ஞானியர்களால் இகழப்படும் பொருளாகவும் உள்ளான். அவனே உடலாகவும் உயிராகவும் இருப்பான். கலந்து நின்று உயிர்களின் அறிவுக்கு அறிவாய் அறிவு விளங்க நிலை பெற்று நிற்பான்.

412 .சிவனே எல்லாத் திசைகளிலும் பரவி தேவர்களாக இருப்பான். அவனே உடல், உயிர், வான் தத்துவக் கூற்றில் பொருந்தியும் கடலாகவும், மலையாகவும அசையாத பொருள்களாகவும் உள்ளான். அவனே தலைவனும் ஆவான்.

413. சிரசின் மீது பொருந்திய ஒளிமயமான வான்பகுதியில் விளங்கும் அருளை வழங்கும் மூர்த்தி உடலாகவும் உயிராய் உலகமாய் கடலாய் இருண்ட மேகமாய் மழை நீரைப் பொய்பவனாகவும் இருக்கின்றான். இவைகளுக்கு நடுவில் இருந்து அழியாதவனாய் நிலைத்திருந்து விளங்குவான்.

414. சிவபெருமான் எட்டு திசைகளிலும் தேடித்திரியும் உடலுடன் உயிர் கூடிப் பிறக்கும்படி செய்தவன். மங்கையரும், ஆடவருமாய் கூடுகின்றவரின் உள்ளத்தில் எழுந்து நின்று ஒன்றை ஒன்று விரும்பும் விருப்பை உண்டாக்கும் அருள் தன்மையை நான் அறிவேன்..

415 சிவனே உலகம் அழிய வேண்டிய காலத்து மழையைத் தவிர்த்து சூரியனாய் அழிப்பான். அவனே சூறாவளிக் காற்றாகி அழிப்பான். பெருமழையைப் பெய்யச் செய்து வெள்ளம் தோன்றி அழிவை செய்வான். அவனே திருமாலாய் விளங்கி உலகத்தையும் காப்பான்.

416. பெருமானே அன்பு, அறிவு, அடக்கம் ஆகிய பண்புகளாக இருப்பான். அவனே இன்பத்திற்கும் இன்பக் காரணம் மற்றும் கூட்டுறவிற்கும் காரணமாய் இருப்பான். அவனே கால எல்லையை வகுத்து அதை முடிப்பவனாகவும் இருப்பான். மாயையைப் புரியும் நாதம் விந்து சதாக்கியம் மகேசுவரம் சுத்த வித்தை என்ற ஐந்தில் பொருந்தி தொழில்களைச் செய்வான்.

417. பெருமானே மாயையினின்று உலகைப் படைப்பவன் ஆவான். உயிர்களுக்கு பிறவி தருபவன் அவனே. பெரிய குடமாகிய பேரண்டமும் சிறிய குடமாகிய சிற்றண்டமும் ஆலயம் என்ற உடம்பும் மற்றவைகளையும் குயவனைப் போல் மண்ணால் மாயையினால் செய்ய வல்லவன் ஆவான்.

418. எம்பெருமான் நந்தி உடலின் உள்ளே உயிர்ப்பிற்காக மூச்சுக் காற்றாய் இருப்பான். அந்த தத்துவங்களுடன் கூடாத உயிர்கள் வானத்தை இடமாகக் கொண்டு ஒளியாய் விளங்கினாலும் பெருமானே அசைவை உண்டாக்கும் உணர்வுடன் உடலுள் பரவி உயிர் வெளியேற விடாமல் கால எல்லையை தொழிலாக செய்கின்றான்.

419. உயிர்கள் உடலை விட்டு நீங்காவண்ணம் தாங்கி கால எல்லையில் உடம்பினின்று பிரித்து உயிரை காத்தல் அவனையன்றி வேறு ஒருவரும் இல்லை. பின்வரும் ஏழு பிறவிகளுக்கும் யோகாநந்த நிலையில் வான் தலைவனான அச்சிவனே தாங்கிக் கொண்டுள்ளான்.

419. உயிர்களுடன் கூடி கலந்த நிலையில் சிவனைப் புறத்தே போய்த் தேடினால் அவன் அவர்க்கு தொலைவில் இருப்பான். அக்னிக் கலையைத் தூண்டி பிரமரந்திரம் போய் நெருங்கினால் அருளை வழங்குவான். எத்தனை பிறவி எடுத்து அவனை வணங்கினாலும் அந்தந்த பிறவியில் பணி செய்தாலும் இறைவன் அதற்கு உடம்பை தந்தருள்வான்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:31

சர்வ சிருஷ்டி!

ஓம்நமசிவய!

செம்பொன் மேனிச் செம்மால் உம்பர் போற்றும் உம்பல்
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ எண்ணிய எண்ணியாங்
கிசைப்பாய் அப்பமும் அவலும் கப்புவாய்
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி!

#####

சர்வ சிருஷ்டி!

381. ஆதியும் அந்தமும் இல்லாத சிறப்பான பரம்பொருள் அறிவுமயமாய் தன்னுடன் பிரியாத நிலையில் விளங்கும் பராசக்தியான பேரொளியில் பரம்-சிவன் தோன்ற தீமையற்ற பரை*பராசக்தியும் தோன்றும். அந்த பராசக்தியிடம் நாதம் விளங்கும்.

382 .நாதத்திலிருந்து விந்து தோன்றும்.. குற்றமற்ற மாயையில் தோன்றிய விந்து சிவன் சக்தி எனப்பிரிந்து ஞானம் என்றும் செயல் என்றும் ஆகும். உலகம் உருவாக வேண்டும் என்ற இச்சையினால் அனைத்தும் சுத்த மாயையில் தோன்றும்.

383. தத்துவங்கள் தோன்றும் இடமான சக்தி பராசக்தியிடம் தோன்றி நவமணியின் ஒளியுடன் உள்ளே கலந்து பரவி இருக்கும். சிறப்பாகத் தொழில் செய்கின்ற அந்த சக்தியின் ஆற்றல், பெருமைகளைச் சொல்லாமல் சொன்னால் அளவிட முடியாதது ஆகும்.

384. எண்ணங்களுக்கு வெகு தூரத்தில் சிவப் பேரொளியானவன் எண்ணங்களுக்கு உட்பட்ட சக்தியாய் இச்சை காரணமாக தோன்றிய நாதத்தைப் பொருந்தி விந்துவாய் ஐந்தொழில் பாரத்தை ஏற்றும் நடத்தும் சக்தி ஒப்பில்லாத சக்தி உடையவளாகவும் விளங்குவாள்.

385. அசுத்த மாயை வானமாகி காற்றாக வளரும். நெருப்பிலும் நீர் பொருந்தி கடினமான நிலமாகும். ஒன்றில் மற்ற நான்கு பூதங்களும் கலந்து ஐம்பூதமாய் பொருந்தி நின்றலே புவனம் ஆகும்.

386 .புவனத்தை படைப்பது சிவன் சிவசக்தியாம். நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரும் அவர் மக்களாவர். புவனம் படைக்கும் சிவசக்தியின் சொரூபமே நான்முகனாகவும் பிரபஞ்சத்தை படைத்து செம்மையாக்கும் மூர்த்தியாகும்.

387. புண்ணியனான நந்தியெம்பெருமான் அறிவின் மயமாய் எல்லாப் பொருளிலும் பொருந்தியுள்ளான். குளிர்ச்சி பொருந்திய மாயா பொருளை காத்து அருளுகின்றான். சத்தியும் கண்ணோட்டமாக எல்லாவற்றிலும் கலந்து தாங்கும் தன்மையுடன் எல்லா உலகங்களிலும் எழுந்தருளுவாள்.

388 நீர்த்தன்மையான மணிப்பூரகத்தில் ஆணுக்கு இன்பம். ஏற்படும்.. அக்னி இருக்கும் அநாகத்தில் சோதி உண்டாகும். வாயு இருக்கும் விசுக்தியில் உயிர்ப்பு நிலை கொண்டிருக்கும். நாதம் சக்தியைத் தரந்து கொண்டிருக்க நீர் மண் இடையே உள்ள சுவாதிட்டானமே உற்பத்திக்கு உகந்த இடம்.

389. ஏழு உலகையும் உண்டு உமிழ்ந்த திருமாலுடன் எல்லா அண்டங்களிலும் வாழும் தேவர்களுக்கும் தலைவனும் முதல்வனும் ஆன சிவபெருமான் உலகைப் படைக்கும் பிரமனுக்கும் பழமையாக உலகம் படைக்கும் உண்மைப் பொருளாகும்.

390. பெருகும் நீர்ப்பகுதியான மணிப்பிஊரகத்திலுள்ள திருமாலுடன் சிரசில் வெண்ணிற ஒளியுடன் விளங்கும் சிவபெருமான் சுவாதிட்டானத்தில் உள்ள பிரமனுடன் உயிரை பொருத்தும் தன்மையை உணர்ந்திருந்தான்

391. அன்புடன் அனைத்துப் பொருளகளிலும் கலந்துள்ளவன் படைப்பிற்கு காரணமான சிவபெருமான். அவன் திருமாலாக கொப்பூழ் மணிப்பூரகத்தில் வீற்றிருக்கின்றான் .அவனே புவனங்களை படைக்கின்ற நனமுகனாக இருக்கின்றான். அவனே ஆர்ணமாகவும் உலகாகவும் இருக்கின்றான்.

392. பயன்கள் தரும் பெரிய மாணிக்கத்தை விளங்கச் செய்யும் தன்மையை அளிக்க சிவபெருமான் இருக்கின்றான். அவனே நான்முகனுக்கு ஒளியை அளித்து படைப்புத் தொழிலுக்கு மூலாதாரத்திலிருந்து உதவுகின்றான். அவன் துணைகொண்டு பய்னகளை அடையும் காரணத்தை நான் அறிந்து கொண்டேன்.

393. அழித்தல், படைத்தல் காத்தலாகிய மூன்றையும் நினைக்கையில் சிரசைச் சுற்றுயுள்ள எட்டுத் திசைகளிலும் மூலாதாரத்திலிருந்து எழும் சோதி பரவியிருக்கும் அதில் அவனைக் காணலாம்.

394. குற்றமில்லா சிவன் உயிர்களிடம் பொருந்திய பக்குவம் உடையவன். என் உயிருக்கு வளம் தது உடலில் பொருந்தி முன்பு துன்பத்தைக் கொடுத்த உடலுக்குத் துணையாயிருந்து துன்பத்தைப் போக்கி உயிர்ப்பாக இன்பத்தை தந்து கொண்டிருக்கின்றான்.

395. படைப்பிற்குண்டான தன்மையையுடைய சிவன் ருத்திரம் மற்றும் கொன்றை மலர் அணிந்து சிவந்த பொன் போன்ற மேனியை உடையவனாயிருந்தும் பிறவிக்கு உயிர்வாழும் உடம்பாயும் இருக்கின்றான். அவனே உயிரை சிவமாக்கி அருள்பவன்.

396 ஒருவன் ஒருத்தியாக சிவனும் சக்தியும் விளயாடிய விளையாட்டு எல்லாம் செய்ய வல்லது, சூரியனின் பயணம் மாறுபாட்டிற்கு ஏற்றவாறு பருவங்கள் மாறி விளைவுகளைத் தருவது போல் இறைவன் அருள் பதிவின் மாறுபாட்டால் உருவாகும் நிலைக்கு ஏற்ப பயன்களும் மாறி மாறி விளங்கும்.

397. உருத்திரனிடம் புகுந்து அழிக்கும் செயலை அறிவான் சிவபெருமான். சக்கரப்படையை உடைய திருமாலிடம் பொருந்தி உலகைக் காக்கும் செயலை அறிவான் சுவதிட்டானத்தில் இருக்கும் பிரமனிடம் பொருந்தி படைப்புத் தொழிலை அறிவான். அவ்வாறு அறியும் சிவபெருமானின் ஆட்சிக்கு உட்பட்டே மூவரும் தொழிலைச் செய்கின்றனர்.

398. ஆணவ மலமுடைய நான்முகன், திருமால். உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரில் மேல் உள்ளவர் காரண ஈசர் என்றும் கீழ் உள்ளவர் காரிய ஈசர் என்றும் கூறப்படுவர். இறைவன் விருப்பப்படி ஐத்தொழிலை நடத்தி சுத்த மாயையில் தோன்றி ஆனவ மலம் நீங்காதவர் என்றே சொல்லப்படுவார்.

399. மாயை என்ற சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை என மூன்றாகும் சதாக்கியம், ம்கேசுவரம், சுத்தவித்தை மூன்றும் மாயையின் காரியம். விந்தைப் பெற்ற நாதம் பரையினிறு தோன்றும். பரையுடன் சிவனது பழமையான விளையாட்டே படைப்பு தொழிலாகும்.

400. வான முதல் ஐந்து பூதங்களை இயக்கும் சதாசிவர் முதலிய ஐவரும் மாயா சக்தியுள் பொருந்தி உடம்பிலும் உயிரிலும் தொழில் செய்கின்றனர். சதாசிவர் உருத்திரன் திருமால் நன்முகன் ஆகியோராய் வான் மண் எனும் உலகங்களை கண்பதற்குரியதாய் செய்கின்றனர்.

402. கச்சினை அணிந்த கொங்கைகளையுடைய மணோன்மணி மங்களப் பொருளாய் எல்லாவற்றிற்கும் காரணமாகவும், படைத்தல் தொழிலில் கலந்தவளாக இருக்கின்றாள். அவள் பிராண வடிவமுடையவள்., வேதத்தின் பொருளாவாள். தேவர்களை மயக்கும் ச்க்தி, முழுமையான சந்திர ஞானசக்தியும் அனுபம ஞானமும் உடையவள்.

403. மகேசுவரன் சதாசிவத்துடன் கலந்து நின்று கீழே உள்ள தொழில் செய்யும் ருத்திரனாகவும், திருமாலாகவும், ஆண்பெண் சேர்க்கைக்கு உதவும் சுவதிட்டானத்தில் உள்ள பிரமனாகவும் பொருந்தியுள்ளான்.

404 சிவனே சதாசிவன் என்றாகி ஏழு உலகங்களையும் படைக்கின்றான். படைத்து ஏழு உலகங்களையும் காக்கின்றான். அவனே எழு உலகங்களையும் ஒடுக்குபவன். அவனே உலகம், அவனே உயிர் என விளங்குகின்றான்.

405. செந்தாமரை மலர்போன்ற தீயின் நிறத்தையுடைய ருத்திரன், மேகம் போன்ற கரிய நிறமுடைய் திருமாலாய் செய்யும் மாய பந்தத்தால் பூங்கொத்துக்களை அணிந்த பூவையர் கூட்டத்தை மயக்கி வலிய உலக உற்பத்தியை உருவாக்குகின்றான்.

406. சிவன் எட்டு திசைகளிலும் தேடித்திரியும் உடலுடன் உயிர் கூடிப் பிறக்கும்படி செய்தவன். மங்கையரும், ஆடவருமாய் கூடுகின்றவரின் உள்ளத்தில் எழுந்து நின்று விருப்பை உண்டாக்கும் அருள் தன்மையை நான் அறிவேன்.

407. சிவசக்தியே ஏழு உலகங்களைப் படைத்தவர். அவரே எழு உலகங்களையும் காப்பவர் ஆகும். அவரே அவற்றை அழிப்பதும் ஆகும். அவரே உலகத்துடன் உயிரை இணைத்து வைப்பவர்

408. தலைவன் சிவபெருமானும் ஜீவர்களுக்கு நன்மையைச் செய்யும் மகேசுவரர், சதாசிவரும், சுத்தமாயை, அசுத்தமாயை என்ற இரண்டிலும் ஒளி மண்டலத்திலிருந்து காரண நிலையை உண்டாக்குவர். அந்த வழியிலே என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு நிற்கும் திருமாலுக்கும் பிரமனுக்கும் சிவனே ஆற்றலை அருள்கின்றார்.

409 .அப்பன் சிவன் அருளிய ஆணையினால் நான்கு வகையான தோற்றத்தில் ஏழுவகைப் பிறப்பில் என்பத்து நான்கு நூறாயிர வேறுபாட்டுடன் கூடிய் உடல்களைப் படைதனன். இது பொய் என்று சொல்லும் மக்களை இத்தன்மையிலெ ஆணவ இருளில் ஆழ்த்துவான்.

410. சூரியன், சந்திரன், இந்திரன், அக்கினி, இய்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், நாதம் நிரம்பிய வானம், வாதனை செய்யும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற மாத்திரைகள் மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்ற அந்தகாராணங்கள் ,அனைத்தும் சொல்லப்பட்ட மகேசுவரர் விளங்கும் விந்து ம?ண்டலத்துள் மாயையாய் வைக்கப்பட்டுள்ளன.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:26

எலும்பும் கபாலமும்! அடி முடிதேடல்!

ஓம்நமசிவய!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் தள்ளுறு
தெவிட்டாத் தேனே மூவர் மொழியிடம்
மொழிந்தாய் தேவர்க்கு அரிய தேவா மாலுக்கு
அருளிய மதகரி பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி!

#####

எலும்பும் கபாலமும்!

371. எலும்பையும் மண்டையோட்டையும் ஏந்திய சிவபெருமான் மணிமுடி தரித்த திருமால் மற்றய தேவரின் வடிவான எலும்பையும் அறிவு என்ற மண்டை ஓட்டையும் சூக்குமமாகத் தாங்கவில்லை என்றால் பிரளயத்திற்குப்பின் பிறவிக்கு மக்களது வடிவமும் அறிவும் தொடர்பில்லாமல் இருக்கும்.

#####

அடி முடிதேடல்!

372. பிரமனும் திருமாலும் தங்கள் அறியாமையால் தாங்களே தலைவன் என்று அகங்காரம் கொண்டனர். சிவபெருமான் பேரொளிப் பிளம்பாக காட்சி கொடுக்க அவர்கள் அப்பெருமானின் அடிமுடி காணாது தேடத்தொடங்கினர்.

373. ஏழு உலகங்களுக்கும் பொருந்தும்படி உயர்ந்த சிவபெருமான் ஏழு உலகிலும் அக்னி வடிவாய் பரவி விளங்குபவன். வானத்து ஏழ் உலகிலும் விளங்கும் அந்த நீலகண்டனை அவனது அருளால் ஒன்றுபட்டு பிரம்ன் திருமால்களால் காண முடியாத அவனை நான் கண்டேன்.

374. உடலாக, உயிராக, உணர்வாக, அக்னியாக, பிரமனும், திருமாலும் அறியாத காலத்துப் பொருளாக, வான் அளவு ஓங்கி நின்ற பேரொளியாய், அண்டங்களுக்கு ஆதாரமான தம்பமாகவும் அதைச் சுற்றி வருகின்ற சந்திரன் மற்றும் அண்டங்களாகவும் நிற்பவன் சிவபெருமானே.

375. நிறைந்து நிற்கும் சிவன் எல்லா அண்டங்களையும் தனக்குள் அடக்கி உயர்ந்து நிற்பவன். அவன் பேரொளியாய் நீண்டு நிறபோது அத்திருமேனி கண்டு அச்சம் கொண்டு அதை ஆராய சென்றனர் திருமாலு,ம் பிரமனும்.. ஆராய உணர்வு கொண்டு மேலேயும் கீழேயும் சென்றவர்கள் நன்மை அளிக்கும் அடிமுடியை அறியாது நாணம் கொண்டு திரும்பினர்.

376. செம்மையான திருவடியைப் புகழும் தேவர் கூட்டமும், மூன்றடி நிலம் கேட்ட திருமாலும், முனிவரும், இசைவடிவான மந்திரங்களைக் கொண்டு விரும்பியதைச் செய்யலாம் என்ற பிரமனும் எப்படி செய்தாலும் அப்பெருமானை பொருந்த இயலாது!

377 .சுவாதிட்டான சக்கரத்தில் உள்ள பிரமனும் மணிப்பூர சக்கரத்தில் உள்ள கரிய கடலில் வாழும் திருமாலும் ஊன் பொதிந்த உயிர்போல் உணர்கின்ற பின்மூளை முன்மூளை எனற இடங்களில் விளங்கும் சதாசிவமூர்த்தியின் தன்மையை பெறுவாரோ. பெறமாட்டார்.

378. எல்லாவற்றிலும் கலந்து எழும் மேலானச் சுடர்பொருளை ஆன்மாக்களின் உய்வின் பெருட்டு வைக்கப்பட்டுள்ள உண்மையை அறிந்து எல்லாத் தத்துவங்களிலும் கலந்தும் கடந்தும் விளங்கும் பஞ்ச சதாக்கியத்தின் அருளைப் பெறலாம்.

379. ஒளியைத் தந்த பெருமானை வணக்கிய தேவர்கள் தங்களை இறைவனுக்கு அடிமையாய் தந்து என்னைப் போல் இறைவனை அறியவில்லை. இறைவன் தன்னையே ஆளாகக் கொடுத்து சிவபோகத்தை அருளி தாங்கள் உய்யும் வண்ணம் திருவடி தந்தருளிய இறைவனை பொருந்தாதவர் ஆயினர்.

380. ஊழியைச் செய்யும் உருத்திரனை ஆராய்ந்திருப்பவன் சிவன். பிரம பட்டத்துடன் வாழ்கின்ற பிரமன் வெளிப்பட்டு விருப்பப்படும் என் தலையில் தாங்கள் விதிக்கும் ஆணையை அளித்தருள்க என வேண்டினன். ஊழியைச் செய்யும் சிவன் பேரொளிப் பிழம்பாய் படைப்புத் தொழிலைச் செய்ய பிரமனுக்கு அருளினான்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:25

பிரளயம்! சக்கரப்பேறு!

ஓம்நமசிவய!

பாரதம் எழுதிய பரூஉக்கர மாரதம் அச்சொடி
மதவலி மாங்கனி அரன்பால் வாங்கினோய்
ஈங்கினி எம்பால் எழுந்தருள் கரும்பாயிரங்கொள்
கள்வா அரும்பொருளே எம் ஐயா போற்றி!

#####

பிரளயம்!

362. கருவரையைத் தாண்டி எழும் மணிப்பூரகத்தில் உள்ள நீர்மண்டலத்தில் பிரமனும் திருமாலும் வேறுபட்டு நிற்க மணிப்பூரகத்தில் உள்ள அறிவுமயமான ஒளிமேலே எழுந்து சிவசூரியனாக உச்சிமீது அருள் செய்வான்.

363. அலைகடல் பகுதியான மணிப்பூரகத்தினினை பிளந்து கொண்டு எழுந்து அண்டத்தின் எல்லையை அடைந்து தலவர்களுக்கெல்லாம் தலைவனாய் உல்கத்து உயிர்கள் காமத் தீயில் விழாது துன்பத்தால் அலைமோதும் உலக்த்தில் அழுந்தாமல் காத்து அருள்வான் சிவபெருமான்.

364. குளிர்ந்த தன்மையுடைய மணிப்பூரகக் கடலைக் கடந்த அறிமய்மான ஒளிச்சுடரை அமரத்தன்மை பெற்றவரும், தேவர்களும் எட்டு திக்கும் கடல்போல் பரவி நிற்கும் சிவன் என வணங்குவர். வானத்தையே கடல்போன்று செய்த அப்பெருமான் சிரசின் மேல் சென்று அகக் கண்ணுக்கு பரவெளியாய் காட்சியளிப்பதை அறியமாட்டார்.

365. தத்துவங்களை எல்லாம் படைக்க வல்லானை படைப்பு இல்லாதவன் என்று துதித்து தம்மிடம் பரவும் முறையில் அமைத்துக் கொள்பவர் உலக உயிர்களே! பொங்கும் நீரில் கடல் ஒலி போன்ற நாதம் ஓங்கி எங்கும் பரவி காமத்தீயை மிகாதபடி சிவன் அமைத்து அருளினான்.

366. பண்பை அழிக்கும் காமச் செயல் என்று வழிபாடு செய்து சுவாதிட்டானத்தில் உள்ள நடபை அளிக்கும் பிரமனை தேடிச் சேர்ந்து நான்முகனின் சேட்டையைக் கெடுத்து வீண்பழி ஏற்படாமல் பக்குவப்படுத்தி அருளினான்.

#####

சக்கரப்பேறு!

367. மயக்கத்தை அளிக்கும் உணர்வு தத்துவத்திற்குரிய திருமால் உலக அனுபவம் நீங்கி சூழுமுனை வழியாக மணிப்பூரக வட்டத்தில் உள்ள உணர்வு தளத்தை அடைந்து வெண்மையான ஒளியில் தேவதேவனாக விளங்கி பூமி முதலிய ஏழு உலக இன்பங்களையும் படைத்து அளிப்பவனாக உள்ளான்.

368. சக்கரத்தைப் பெற்ற திருமாலான நல் தாமோதரன் தான் பெற்ற சக்கரத்தை தாங்க முடியாமல் விருப்பமுடன் சிவனை வழிபாடு செய்து சிவனனின் ஆற்றலில் ஒரு பகுதியை பெற்றனன்.

369.பகுத்துக் கொடுப்பதாக சிவபெருமான் நல்ல சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தருளினான். தன் சக்தியையும் பகிர்ந்தளித்தான். இவ்வாறு பகுத்து சக்திக்கும் திருமாலுக்கும் தன் திருமேனியை அளித்தருளினான் பெருமான்.

370. தக்கனின் வேள்வியை வீரபத்திரர் அழித்தார். அவர் சிரசுமேல் ஆணை என்ற சக்கரத்தை திருமால் செலுத்தி உணர்வைத்தூண்ட காமவாயு வேகத்தால் அக்னி சக்தியால் பயன் கிட்டாமல் ஆனது.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:21

தக்கன் வேள்வி!

ஓம்நமசிவய!

திணைபால் கடந்த தேவே புனையாய் இடர்க்கடல்
போக்குவோய் பேழை வயிற்றுப் பெம்மன்
ஏழைக்கிரங்கும் எம்மிறை அடியவர் உள்ளம்
அமர்ந்தாய் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி!

@@@@@

தக்கன் வேள்வி!

353. சிவபெருமானை நினையாமல் தக்கன் ஆண் பெண் கூட்டுறவான வேள்வி செய்ததால் சினம் கொண்டு காமாக்னியால் தக்கப்பட்டு விந்து நீக்கம் உண்டானது. அதனால் நினைத்தவண்ணம் விந்து ஜெயம் என்ற பூஜையின் பய்னைப் பெறவில்லை. சிவன் சினந்ததால் தேகாரியச் சிதைவு ஏற்பட்டு வெளியேறினர்.

354. ஆண் பெண் கூட்டுறவைச் செய்ய செருக்குடன் எழும் திருமால் உலகத்தில் படைப்பவன் சிவன் அல்லன் யாமே என்றான். அதனால் பந்தம் உண்டாக்கும் பாசக்கடல் சூழ்ந்து வருந்தியபின் சிவனை நோக்கித் தவம் செய்ய முடிவில்லாத சிவபெருமானும் வீட்டுணு தத்துவம் விளங்கும்படி செய்தனன்.

355. பிரமனும் தக்கன் வேள்விக்கு தானே தலைவன் எனச் செருக்கு கொண்டான். காமாக்கனி மூண்டெழுந்தபோது அதன் தன்மையில் பொருந்தி சிவபெருமான் முறையாய் ஆரவாரத்துடன் விளங்கி பிரமன் குற்றம் பொருத்து அவனுக்கு அருளினான்.

356. பிரம்மன், திருமால் முதலிய தேவர்கள் அத் தன்மையைப் பெற்றதற்கு காரணம் சிவபெருமானே. அந்த அக்னி கலையை உள்ளே விளங்கும் வண்ணம் அந்த அக்னி கலை நீங்காவண்ணம் சிவன் நிறைந்து விளங்கியுள்ளான்.

357. எல்லா இடத்தும் நீக்க்ம் அற நிறைந்துள்ளவன் சிவபெருமானே என்பதை உணர்ந்த தேவர்கள் துதிக்க ஆதாரங்களில் கீழ் உள்ள மூலாதாரத்தின் அக்னிக் கனல் சுழுமுனை வழியாக மேலே எழுந்து சிவந்த ஒளியானது சகஸ்ர தளத்தில் போய்ப் பற்ற, வழிபடும் முறை இதுவே என சிவபெருமான் அருள் செய்தான்.

358. திருமால், பிரமன், தக்கன், சூரியன், ஆகியவருடன் சந்திரன், நாமகள், அக்கினி, இந்திரன் என்பவர் தலை, முகம், மூக்கு, கை தோள் என்பனவற்றை சிவனருள் பொருந்தாமையால் இழந்து பின்பு நல்லவர்கள் ஆனார்

359. காதில் கேட்கக்கூடிய உச்சரிக்கக்கூடிய மந்திரம் செல்லி சிவ அருள் பெற்ற தேவர்கள் செபிக்கத் தகாத மந்திரத்தால் பிராணவத்தை மூலதாரத்தில் உள்ள அக்னியைத் தூண்டி நாதம் ஏற்படச் செய்து பொருந்த நோக்கும் மனதை ஒருமைப் படுத்தும் செவிமந்திரம் கொடியது ஆகாது.

360 .தேவர்கள் உடலில் உள்ள ஒன்பது துவார குண்டங்களும் சிறப்பான இன்பும்பெற எங்களுக்கு அருளல் வேண்டும் என வேண்ட கொடிய அசுரர் அழிந்து போகும்படி பிரணவம் என்ற வில்லால் ஆணவம் முதலிய மும்மலங்களை எரித்து சிவன் அருளினான்.

361. சொல்பவர் கலங்கினும் நீ கலங்காதே! முன்பு சினந்து பின்பு அருள்செய்த நாதவடிவினன் சிவபெருமானே தன்னை அழைக்காது அலட்சியப்படுத்திய காமவேள்வியை அழித்தான். இன்ப வடிவான அவனை அன்பு செய்து அடைய வேண்டும். சொல்பவர் கூறும் மயக்க நெறிபற்றி கவலை கொள்ளாதே!

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17065947
All
17065947
Your IP: 172.69.63.217
2020-05-28 02:24

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg