gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்தது இல்லை!.வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றி கொண்டதே அவர்களை பெரிய மனிதனாக்கியதாகும்!

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கள்வனின் மகன், கள்வன்!

   ஆற்றங்கரையில் ஓர் பெண் மணல்வீடு கட்டித் தன்தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஓரு பையன் அவ்வழி சென்றான். அவளைப் பார்த்தான். மீண்டும் அவ்வழி சென்றான். அவளிடம் குறும்பு செய்ய நினைத்தான். மீண்டும் அவ்வழி செல்ல விருப்பங்கொண்டு வந்தவன் அந்த மணல் வீட்டின் ஓர் பகுதியில் தன் காலைப் பதித்து சென்றான். மனம் பதைபதைத்தது. ஆனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மனம் குழப்பத்திலும் தன் மணல் வீடு இடிந்ததில் கோபத்திலுமிருந்தாள். வீட்டிற்குச் சென்றாள்.
    அந்த பையன் வீட்டிற்கு வந்திருந்தான். அவனுக்கு தண்ணீர் கொடுக்கச் சொன்னாள் தாய். நீர் கொடுத்தவளின் இடையை வெடுக்கென்று கிள்ளினான். ஐய்யோ! என அலறல் கேட்டு வந்த அம்மாவிடம், தட்டுத்தடுமாறி அவனுக்கு விக்கியது எனப் பொய் பகர்ந்தாள். அந்த பையனை அன்புடன் இழுத்து தலையை தடவி முதுகைத்தடவி ஆசுவாசப்படுத்தினாள் தாய். அந்தப் பொய்யைக் கேட்டு கண்சிமிட்டி மெல்லச் சிரித்தான் அவன்! இதில் யார் கள்வன்! நேசிக்கின்ற பெண்ணைத்தான் கிள்ளமுடியும். அந்த ஈர்ப்பு இருந்தால்தான் நாவில் பொய் மலரும். நல்லவர்கள் பொய்யர்களாவதும், கள்வராவதும் இதனால்தான்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

வரட்டு கவுரவம்!

   அந்த நாட்டின்மீது அந்நியரின் படையெடுப்பு நடைபெற இருப்பதை அறிந்தவர்கள் தங்களால் தூக்கமுடிந்த அளவிற்கு செல்வங்களுடன் அந்த ஊரை விட்டு செல்ல முயல்கின்றனர். ஒரு மூடு வண்டியில் ஒருபணக்காரரும் அவரது மனைவியும் இடம் பெறுகின்றனர். அந்த வண்டியில் உள்ள ஒவ்வெருவரையும் பார்த்துக் கொண்டு வரும்போது அங்கிருந்த ஓர் இளம்பெண்ணைப் பார்த்து முகஞ்சுளிக்கின்றாள். ஏனெனில் அவள் ஓர் வேசி. இதை அறிந்த மற்றப் பெண்கள் அவளை கேலி செய்து ஏளனப்படுத்துகின்றனர். தங்களது போரதாகாலம் இவளுடன் பயனம் செய்ய வேண்டியிருக்கின்றதே என புலம்புகின்றனர்.
    அந்த இழிச்சொற்களை தாங்கி புன்னகையுடன் அமைதியாக இருக்கின்றாள் வேசி எனக்குறிப்பிடப்பட்ட பெண். பயணத்தில் திடீரென்று எதிரி படை அந்த வண்டியைச் சூழ்ந்தது. அனைவரும் கீழிரக்கப்பட்டார்கள். அடுத்தது என்ன நடைபெறுமோ என்றிருந்த வேளையில் வேசி எனக் குறிப்பிடப்பட்ட பெண் அந்த கூட்டத் தலைவனை தன் வயப்படுத்தினாள். அவன் அவளைத்தவிர மற்றவர்கள் செல்ல அனுமதி அளித்துவிட்டான். வண்டியில் ஏறிய அனைவரும் ஒருவார்த்தைகூட போசமுடியா நிலையில் இருந்தனர். அந்த பெண் இல்லை என்றால் அவர்கள் உயிருடன் திரும்பியிருக்கமுடியாது. ஆனால் அவர்களுடைய கவுரவம், பலஉயிர் காத்த ஓர்உயிருக்கு வேசிஎன்பதால் நன்றி சொல்ல தயங்குகின்றது ஏனோ.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

திரும்பதிரும்ப சொல்லும் அன்பு!

    ஓர் ஞானியிடம் ஒருவர் தனது குறைகளைச் சொல்லி அதிலிருந்து விடுபட வழிவகைகளைக் கேட்டுத் தெரிந்தார். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து சில சந்தேகங்களைக் கேட்டுணர்ந்தார். இன்னும் சில நாட்கள் கழித்து வந்து ஐயனே! எனக்கு எல்லாம் மறந்துவிட்டது. மீண்டும் ஒருமுறை எனது குறைகளிலிருந்து விடுபட வழி சொல்லுங்கள் என்றார்.
    ஞானி விளக்கமாக வழிமுறைகளைச் சொன்னார். நான் இப்படி திரும்ப திரும்ப உங்களக் கேட்பது உங்களுக்கு உபத்திரமாக இல்லையா என்றான். ஞானி அவனிடம், அங்கிருந்த எரியும் விளக்கை எடுத்து எரியாத விளக்கை ஏற்றச் சொன்னார். அவனும் அப்படியே செய்தான்.
    அப்போது ஞானிசொன்னார், ‘இந்த முதல் விளக்கிலிருந்து மற்ற விளக்குகளை ஏற்றியதால் இந்த விளக்குக்கு ஏதும் நஷ்டமில்லை’ அதைப்போன்றே எத்தனை முறை என்னை நாடினாலும் எனக்கு எந்த துயரமும் கிடையாது என்றார். என்னே அன்பு மனம்!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

நம்மை கவனிப்பதே பெரிய வேலை!

    துறவிகள் எல்லாம் சோம்பேறிகள் என நினைக்கும் ஒருவர் துறவிகள் என்ன செய்கின்றார்கள் என்பதை கண்டறிய அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கே ஒருவர் நிற்பதைப் பார்த்து, சும்மா இப்படி நின்றுகொண்டிருக்கின்றீர்களே! ஏன் எனக் கேட்டார். ‘2-கழுகுகள், 2-குரங்குகள், 2-முயல்கள், ஒரு நச்சுப்பாம்பு இவைகளை கண்காணித்துக் கொண்டிருக்கின்றேன்’ என்றார். வந்தவருக்கு ஒன்றும் தெரியவும் இல்லை, புரியவும் இல்லை.
    துறவி புன்னகையுடன், என் 2கண்களும் 2கழுகுகள், துறு துறுவென்று சுழன்று தேடும். என் 2கரங்களும் 2குரங்குகள், எதை பிடிக்கலாம் என அலையும். என் 2கால்களும் 2 முயல்கள், துள்ளிக்குதித்து ஓட நினைக்கும். என் நாக்கு ஓர் நச்சுப்பாம்பு, யாரை சொற்களால் தீண்டலாம் எனக் குறியாக இருக்கும். இவற்றை அதனதன் விருப்புக்கு செயலபட விடாமல் எச்சரிக்கையுடன் கண்காணிப்பதுவே என்வேலை. அது உங்கள் கண்களுக்கு நான் சும்மா இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
    வந்தவர் தம்மை தாமே கவனித்துக் கொள்வது என்பதே பெரிய வேலை என்பதை உணர்ந்தார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

எண்ணங்களில் உயர்வு!

    இருள் சூழ்ந்த மேகத்தில் அடர்த்தியாக ஈரப்பதம் நிறைந்த நீர் திவலைகள். இடி இடித்தது. மின்னலடித்தது. நீர்திவலைகள் மேகக் கூண்டிலிருந்து விடுபட்டுச் சிதறியது. ஒவ்வொன்றாக பூமியை நோக்கி பாய்ந்தது. முன்னாள் சென்றுகொண்டிருந்த நீர்த்துளியைப் பார்த்து பின்னால் வந்து கொண்டிருந்த துளி சொல்லியது, இவ்வளவு வேகம் ஏன்!  அவசரமாகச் சென்று கடலில் விழுந்து உப்பு நீராகி யாருக்கும் பயனின்று போகாதே. பார்த்து பச்சைக் கம்பளம் போன்ற புல் வெளியில் விழுந்து சுகமாக இருக்கலாம் என்றது.
    எங்கே விழவேண்டும் என்று நான் மேகக்கூட்டத்திலிருந்து விடுவிக்கும்போதே தீர்மானிக்கப் பட்டுவிட்டது. எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இடத்தை நான் சென்றடைகிறேன். எனது ஆசை எல்லாம், ஆற்றிலே, குளத்திலே விழுந்தால் மக்களுக்குப் பயன்படுவேன். கடலில் விழுந்தால் மீண்டும் ஆவியாகி எனது பணியைச் மீண்டும் செய்வேன். பசும் புல்லில் படுத்து என்ன பயன் எனக்கூறி புவியை நோக்கி வேகமாகச் சென்றது.

    பின்னால் வந்து கொண்டிருந்த துளி முதல் துளி எங்கே விழுகின்றது எனக் கவனித்தது. கடலை நோக்கிச் சென்ற அது அங்கிருந்த சிப்பியின் வாயினுள் விழுந்தது. பின்னாலில் அது ஓர் முத்தாக சுடர் விட்டது.
    பின்னால் வந்த துளி மிகவும் பசுமையான புல்வெளியில் ஓர் புல்லின் மேல் அமர்ந்து ஆசுவாசப்படுத்தி தான் நினைத்தமாதிரியே புல்வெளிக்கு வந்தது கண்டு ஆனந்தப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மழைவிட அந்தபுல்வெளிக்கு வந்த மனிதர்களின் செருப்பு காலடியில் மிதிபட்டு சிதறி கரைந்து மறைந்தது.
வாழ்வு பயணத்தில் உயர எண்ணங்களில் உயர்வு வேண்டும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

ஒரே கண்ணோட்டம்!

    ஜெய்ப்பூர் மகாராஜா அழைப்பை ஏற்று சுவாமி விவேகானந்தர் ஜெய்ப்பூர் சென்றிருந்தார். அவரை கௌரவிக்க ராஜா ஓர் நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டவர் ஓர் பெண்மணி. அவர் ஆடிக்கொண்டே நடனமும் ஆடுவதில் தேர்ந்தவர். அப்பெண்மணியும் சுவாமியை தரிசிக்க ஆவலுடன் இருந்தாள்.
    தனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஓர் பெண் நடனமாடப் போகிறாள் என்பதை கேள்விப்பட்ட விவேகானந்தர், துறவியாக இருக்கும் தான் ஓர் பெண்ணின் நடன அசைவுகளை கண்டு களிக்க செல்லக்கூடாது என தீர்மானித்து நிகழ்ச்சி நடைபெறும் அரண்மணை அருகில் தங்கி பின் செல்லாம் என நினைத்தார்.
    நிகழ்ச்சி ஆரம்பித்ததும் சுவாமி வரவில்லை என்பதை அறிந்த நடனப் பெண் சேகமுற்று அந்த சேகத்தை தன் குரலில் பாடல் மூலம் வெளிப்படுத்தினாள். அந்த பாடலின் வரிகளின் ஓசையைக் கேட்ட விவேகானந்தர் உள்ளம் கசிந்தார். தன் இருந்த இடத்தைவிட்டு நடன நிகழ்வு நடைபெறூம் அரண்மணைக்கு சென்றார்.
    அவரைக் கண்ட பெண் உவகையுற்றாள். சந்தோஷத்துடன் அவள் பாடியது, ஆடியது  விவேகானந்தரின் கண்களுக்கு அவள் பராசக்தியாக தோன்றினாள். எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்ற விதியை தான் மீறியது, அவரை மிக்க வருத்தமடையச் செய்தது.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

ஆணவத்தின் பணிவு!

    ஓர் ஞானியிடம் நிறைய சீடர்கள். இது இன்னொரு துறவிக்கு பிடிக்கவில்லை. அந்த ஞானியிடம் வெறுப்படைந்தார். அவரை அவமானப்படுத்த திட்டமிட்டார். அவர் இருந்த இடத்திற்கு சென்று, ஞானியே ‘உங்களுக்கு மரியாதை செய்தால் நீங்கள் பணிவீர்கள், ஆனால் நான் உங்களுக்கு மரியாதை தருபவனில்லை. என் மரியாதைக்கு உகந்தவாறு உங்களால் நடந்து கொள்ளமுடியுமா! என்னை பணிய வைக்க முடியுமா!’ என்றார்.
    இதைக் கேட்ட ஞானி புன்முறுவலுடன் ஏன் முடியாது. உங்கள் மரியாதைக்கு ஏற்றவாறு என்னால் நடந்து கொள்ளமுடியும். அன்புடன் என் அருகில் வாருங்கள் என்றார். துறவி எல்லோரையும் பின்னாலிட்டு முன்னால் ஆணவத்துடன் சென்றார்.
    ஆவரை நோக்கிய ஞானி என் இடது பக்கம் வாருங்கள் என்றார். துறவி அப்படியே சென்றார். மிகவும் பின்னால் சென்றுவிட்டீர்கள் இரண்டடி முன்னால் வாருங்கள் என்றார். துறவியும் அவ்வாறே செய்தார்.
    அப்போது ஞானி சொன்னார், என் சொல்லுக்கு பணிந்து நீங்கள் இப்படி நடந்து அருகில் வந்துள்ளீர்கள். நீங்கள் ஒரு பணிவான நல்ல துறவி. என் அருகில் அமர்ந்து பாடங்களை கவனியுங்கள் என்றார். துறவியின் ஆரவர ஆணவம் அடங்கியது. பண்பு பற்றி புரிந்து தெளிந்தார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

வாழ்வு முறை!

    ஒர் ஞானி அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார். அவர் உரைக்குப்பின் ஒவ்வொருவராக அனுகி தம் குறைகளைச் சொல்லி ஆறுதலும் ஆசியையும் பெற்று சென்று கொண்டிருந்தனர்.
    ஒருவர் ஞானியிடம், ‘எங்கள் தலைமுறையினர் தொடர்ந்து எப்போதும் செழிப்புடன் வாழ ஏதாவது வழிமுறைகளுடன் வாழ்த்துக்கள் எழுதிக் கொடுக்கச் சொன்னார்’. ஞானி ஒரு காகிதத்தில் ‘தந்தை இறக்க, மகன் இறக்க, பேரன் இரக்க’ என்று எழுதிக் கொடுத்ததை வாங்கிப் படித்ததும் அதிர்ச்சியுற்றார்.
    எங்கள் குடும்பம் மகிழ்வுடன் இருக்க வாழ்த்து கேட்டதற்கு இப்படி எழுதிக் கொடுத்துள்ளீர்களே! என்று கவலையுடன் சொன்னார். பின் அதை அருகில் இருந்த ஞானியிடம் காட்ட அவர், ‘இதில் ஒன்றும் குற்றம் இல்லை, உனக்குமுன் உன் மகன் இறந்தால் அது உனக்கு துன்பத்தை தரும், உன் பேரன் இறந்தால் உனக்கும் உன் மகனுக்கும் பெரும் துன்பத்தைத் தரும். உனது வம்சம் தலைமுறை தலைமுறையாக இதில் குறிப்பிட்டதுபோல் நடந்தால் அது ஓர் இயற்கையான வாழ்வு முறை. அதைத்தான் எழுதியிருக்கின்றார் என்றார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கடவுளால் முடியாதது !

     ஒர் ஞானி தன்னைச் சந்திக்க வந்த அன்பர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒருவர் தனக்கு நீண்ட நாட்களாக மனதில் இருந்த வந்த சந்தேக கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் யோகியைப்பார்த்து, ஐயனே! கடவுள் எல்லோருக்கும் எல்லாமும் தருவார் என்று சொல்கின்றீகளே! அது உண்மையா! கடவுளால் கொடுக்க முடியாதது என்று ஏதேனும் உண்டா! என்றார்.
    ஞானி அந்த அன்பரைப் கனிவுடன் பார்த்து சொன்னார், அன்பரே! இறைவன் எல்லையில்லா கருணையுடையவன். ஒவ்வொன்றிற்கும் முதலும் முடிவும் வைத்துள்ளான். உயிர்களின் வாழ்விற்கு, எல்லாம் வழங்கியுள்ளான். அவனால் வழங்கமுடியாதது ஒன்று உள்ளது. அது உன்னிடமுள்ள மனதிற்கு போதும் என்ற எண்ணம், நிலை. அதை நீங்களேதான் முயன்று பெறவேண்டும். அதில்தான் உங்கள் பாவ புண்ணியங்களின் கணக்கு அடங்கியுள்ளது. அதை கூட்டவோ குறைக்கவோ நீங்கள்தான் முயற்சிக்க வேண்டும் என்பதால் அதைமட்டும் அந்தந்த ஆத்மாவிடம் விட்டு விட்டார் என்றார்.

    ஓர் ஞானி ஓர் இடத்தில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த ஒருவர் சாமி நான் வேண்டுவது எனக்கு கிடைக்க அருளவேண்டும் என்றார். உன் மனம் விரும்பும் எல்லாம் கிடைக்கும், உனக்கு என்ன வேண்டும் என அன்புடன் கேட்டார்.
    மனிதர்கள் விருபத்தில் மிகச்சிறந்த ஒன்றான சந்தோஷம் வேண்டும், மன அமைதி வேண்டும், யமபயம் நீங்கவேண்டும், ஞானம் கிடைக்க வேண்டும் என்றார்.
    அந்த ஞானி சொன்னார், அன்பனே! இங்கும் சரி, வேறு எங்கும் சரி எல்லோரும் ஞானிகளையும், யோகிகளையும் தவறாக புரிந்து கொள்கின்றனர். எங்களிடம் பழங்கள் கிடையாது. நாங்கள் விதைகள்தான் விதைக்க முயற்சிக்கின்றோம். அதிலிருந்து நீங்கள்தான் உங்கள் உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17938010
All
17938010
Your IP: 172.69.62.46
2020-07-16 06:11

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg