gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்வில் சொல்லை விட்டுக் கெட்டவனையும், மண்ணாசையை விடாது கெட்டவனையும், தன்னைத்

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 20 July 2018 18:46

வீர, விவேக, ஞான ஆஞ்சநேயர்!

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

####

சின்னதிருவடி! வீர, விவேக, ஞான ஆஞ்சநேயர்!

மாமனாரால் மரணம் என்று ஈசனிடம் இராவணன் வரம் பெற்றதனால் மண்டோதரியின் தந்தையான விஷ்ணு மானிட அவதாரம் எடுக்க வேண்டிய நிலை உருவானது. மேலும் உமை ஒருமுறை தான் தன் கணவனை பிரிந்து. இருப்பது அறிந்தும் அதற்கு தன் சகோதரன் திருமால் உதவ வில்லை என்ற கோபத்தால் நீயும் ஒருநாள் உன் மனைவியைப் பிரிந்து துயரப்படுவாய் என்று சாபம் கொடுத்துள்ளார். இவைகளே விஷ்ணுவின் இராமவாதரத்திற்கான காரணங்கள்.

11வது ருத்திரர்!

இந்த நிகழ்வுகள் நடைபெற விஷ்ணு இராமா அவதாரம் எடுக்க முடிவானதும், அந்த சாதாரான மனித அவதாரத்தில் அசாதாரண காரியங்கள் எதுவும் இராமரால் செய்ய முடியாது என்பதாலும் சிவபக்தனான இராவணனை சிவாம்சத்தின் உதவியினால்தான் அழிக்க முடியும் என்பதால் அவருக்கு உதவிட 11வது ருத்திர அம்சமாக ஓர் அவதாரம் எடுக்க ருத்திரர் முடிவு செய்தார். ஏனெனில் இராவணன் சிவபெருமானின் அருள் பெற வேண்டி 11 ருத்திரர்களுக்கும் சிர ஆகுதி யாகம் செய்தான். அவனுக்கு பத்து சிரங்கள்தான் இருந்ததால் அவனால் பத்து ருத்திரர்களைத் தான் திருப்திப்படுத்த முடிந்தது. எனவே அந்த 11வது ருத்திர அம்சம் அவன் பக்திக்கு கட்டுப் படாது. அதனால் அந்த 11வது ருத்திர அம்சமாக அவதாரம் எடுக்க சிவன் முடிவு எடுத்தார். அப்போது உமையும் கூட வருவதாகக் கூறினார்.

வானர உருவம்!

வானரவீரன் ஒருவன் ஈசனை நோக்கி தவமிருந்து மகன்வரம் கேட்க இப்பிறவியில் உனக்கு புத்திர பாக்கியம் இல்லை இருப்பினும் என்னை நோக்கி தவமிருந்ததால் உனக்கு ஓர் மகள் தருகின்றேன் அவள் மூலம் நீ வேண்டிய பலசாலியான, புத்திசாலியான மரணமில்லாத மகன் பிறப்பான் என்று அருள். அஞ்சனை என்ற பெண்னைப் பெற்றான். அவள் வானர வானர மன்னன் கேசரியை காதலித்து மணம் புரிந்து குழந்தை இல்லாததால் வருந்த தேவதை வடிவான குறத்தி சொல்லியபடி வேங்கடகிரியில் பிள்ளை வரம் வேண்டி ஈசனை நோக்கி தவமிருந்தாள்.

எந்த உரு கொண்டு அவதாரம் எடுக்கலாம் என்று சிவபெருமான் நினைத்தபோது அவருக்குத் தோன்றிய உருவம் வானரம். வானரம் என்றால் வீடு வாசல் தேவையில்லை. எந்த பந்தத்திற்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் எதுவும் கட்டுப் படுத்தாது. உணவு சமைத்தோ அல்லது சமைக்காததோ அதனால் பிரச்சனையில்லை. சக்தி வானரத்தின் வாலாக வர விருப்பம் தெரிவிக்க வானரம் உருவம் கொள்ள நினைத்து சிவன் தன்னை விதைக் கருவாக மாற்றிக்கொண்டார். ஈசனும் தேவியும் வானரங்களாக மாறியிருந்த போது அவர்களால் ஒர்கனி உதிர அதை வாயுபகவான் அஞ்சனையில் கரத்தில் சேர்க்க, தினமும் தன் கைக்கு வரும் கனி என்று நினனத்து உண்ண அதனால் அவள் கருவுற்றாள். நிலை அறிந்த அஞ்சனை வருந்த 'ஈசனின் கரு என அசரீரி ஒலித்து. தன் கணவரிடம் சொல்லி அக்குழந்தைக்கு அஞ்சனையின் மைந்தன் எனப் பொருள்படும்படி ஆஞ்சநேயன் என்று பெயரிட்டாள். இந்த சம்பவம் நடந்த மலை அஞ்சனா பர்வதம்..ஹம்பிஅருகில்,ஆனேகுந்தி-2. கருவிதையை சிவனின் அம்சம் தனக்கு மகனாக வர வேண்டி தவமிருந்த கேசரி மனைவி அஞ்சனையிடம் கனியாக வாயு சேர்த்ததால் வாயு புத்திரன் என்பர்.

சுந்திரன்! மாருதி! ஆஞ்சநேயர்! அனுமன்!

அஞ்சனை மைந்தன் சுந்திரனாகப் பிறந்தார். குழந்தை தூங்க அஞ்சனை இறை வழிபாட்டிற்கு செல்ல விழித்த சுந்தரன் வானில் சொக்கச் செவேலென்று பிரகாசிக்கும் சூரியனைப் பழம் என நினைத்து அதை பிடிக்கத் தாவினார். இந்தக் குழந்தை எங்கே சூரியனைப் பிடித்து விடுமோ என்று அஞ்சிய இந்திரன் தன் வஞ்ராயுதத்தை வீச அது முழந்தையின் முகத்தில் தாக்க முகவாய் சற்றே நீண்டது அதனால் அனுமன் எனப்பட்டார். மருத் என்றால் காற்று. வாயுவின் புத்திரன் என்பதால் மாருதி என்றும் அஞ்சனையின் மகன் என்பதால் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்பட்டார்.

சூரியனே குரு!

எல்லாவற்றையும் கற்று உலகிற்கு வழிகாட்டியாக இருக்கும் சூரியனைக் குருவாகக் கொண்டு அவர் விருப்பப்படி நகர்ந்து கொண்டிருக்கும் அவரைத் தொடர்ந்து தானும் சென்றே கல்வி கற்றார். சூரியன் ஆஞ்சநேயரை நவவியாகரண பண்டிதர் என்றழைத்தார்.

உச்சநிலை!

மார்கழிமாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். வைணவத்தில் இராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பதால் ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்சநிலை ஆகிய எல்லாம் சேர்ந்த ஒரே ரூபமாய் திகழும் அனுமன். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு புத்தி, பலம், தைரியம் தந்திடும் வரப்பிரசாதி. ராமதூதனாக ராமபக்திக்கு இலக்கணம் வகுத்தவர்.

அனுமனின் சமயோசித அறிவு: ‘கண்டேன் சீதையை’-

இலங்கைக்குச் செல்ல சமுத்திரத்தின்மேல் பாலம் கட்ட கற்களைப் போட அவை நீரில் மூழ்கின. அப்போது என்ன செய்வது என்று அனைவரும் யோசனையில் ஆழ்ந்திருக்க ஆஞ்சநேயர் முனிவரின் சாபம் பெற்ற தன் நண்பர்கள் நளன், நீலன் என்ற இரு வானரங்களையும் அழைத்து அவர்களைக் கற்களைத் தூக்கிவரச் செய்து கடலில் போடவைத்தபோது அந்தக் கற்கள் கடலில் மிதந்தது. அதன் பின்னர் மிக விரைவாக இலங்கைக்குப் பாலம் கட்டும் பணி நடந்தேறியது. நளனும் நீலனும் சிறுவயதில் விளையாட்டாக ஒருமுனிவர் தின பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை எடுத்து பக்கத்தில் இருந்த நதியில் வீச முனிவருக்கு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஆற்றில் மூழ்கி அந்தச் சாளக்கிராமக் கற்களை எடுப்பதே பெரிய வேலையாயிருந்தது. அதனால் கோபங்கொண்ட முனிவர் இனி நீங்கள் எந்தக் கல்லை நீரில் வீசினாலும் அது மூழ்காது என சாபம் கொடுத்தார். இதை பயன்படுத்தியே நளன், நீலன் உதவியுடன் அனுமானும் மற்றவர்களும் பாலம் கட்டி முடித்தனர்.

இதற்கு முன்னமே சீதையை கண்டிராத அனுமன் இலங்கையில் பார்க்கும் பெண்களை எல்லாம் அழகுடன் தெரிய எப்படி அடையாளம் கணப்போகின்றோம் என திகைத்தார். கயவனால் கடத்திச் செல்லப்பட்ட ஸ்ரீராமபிரானின் பத்தினியை அரண்மணையிலோ அந்தப் புரத்திலோ வைத்திருக்க மாட்டார். எங்காவது ஒரு தனி இடத்தில்தான் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்று தேடி அசோக வனத்தில் கண்டார். சீதா பிராட்டியரிடம் பெற்ற ஜடைவில்லையைக் கொண்டு வந்தார். மற்ற திசைகளுக்குத் தேடச் சென்ற அனைவரும் எங்கேயும் அன்னை இல்லை என்ற செய்தியுடன் வந்து விட்டனர். இலங்கை சென்ற அனுமன் என்ன தகவல் கொண்டு வருவாரோ என தவித்திருந்த இராமரைக் கண்டதும் முதலில் சீதையை என்று ஆரம்பித்தால் என்னவோ ஏதோ என்று நினைக்கக் கூடும். ஆதலால் வந்ததும் ராமரை வணங்கி ‘கண்டேன் சீதையை’ என்றார்,

கல்யாணபிரம்ச்சாரி அனுமன்!-

அனுமன் பிரமச்சாரி என்பது அனைவருக்கும் தெரியும் அது என்ன கல்யாண பிரமச்சாரி! சஞ்சீவி மலையை வேகமாகக் கொண்டு வரும்போது அந்த வேகத்தால் உடலில் வெப்பம் அதிகரிக்க அந்த வெப்பத்தை தணிக்க அவரின் தந்தை வாயு தென்றலாக அனுமன் உடலைத் தீண்ட வெம்மையில் குளுமை பரவியதும் வியர்வை துளிர்க்க அப்போது அனுமன் கடல்மீது பறந்து கொண்டிருந்ததால் அந்த வியர்வைத் துளிகள் கடலில் சிந்தியது. சமுத்திரத்தில் மீன் உருவில் விளையாடிக்கொண்டிருந்த தேவகன்னி சுவர்ச்ச்சலை அதை விழுங்க அது அவள் வயிற்றில் ஒரு கருவாக மாறியது.

மச்சமாக இருந்தபோது தோன்றியதால் மச்ச குமரன் என அழைக்கப்பட்டு வீரனாகி தன் தாயின் மீன் வடிவினை தனது கொடியில் (த்வஜம்) கொண்டதால் மகரத்வஜன் என்று பெயர் பெற்றான். இராவணின் உறவினனான மயில் ராவணிடம் கோட்டை தலமைக் காவலானகப் பணிபுரிந்து வந்தான். யுத்தம் நடந்த சமயத்தில் மாருதியின் காவலில் இருந்த ராம், லட்சுமணனை மயில் ராவணன் வீபீடனாக வந்து கவர்ந்து சென்று கோட்டையில் அடைத்தான். அவர்களை மீட்கச் சென்ற அனுமன் மகரத்வஜனுடன் போர் புரிந்தான். போர் தொடர்ந்து நடைபெற சிறிது நிறுத்திவிட்டு அவனைப் பற்றி விசாரித்ததில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதால் மகரத்வஜன் மயில்ராவணன் உயிர் இருக்குமிடமான ஐந்து வண்டுகளைப்பற்றி சொல்ல அந்த ஐந்து வண்டுகளையும் தன் ஐமுகவாயில் போட்டு அனுமன் கடிக்க மயில்ராவணன் இறந்தான். ராம, லசுமணனை அனுமன் மீட்டு வந்தார். இதனால்தான் அனுமன் கல்யாண பிரமச்சாரி எனப்பட்டார்.

சனியின் தொல்லையில்லை!

ராம இராவணான் யுத்தத்தில் வானரப் படைகள் மயங்கிச்சாய, ஜாம்பவானின் ஆலோசனிப்படி சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர அனுமனை அனுப்பினர். அவசரத்தில் சரியான மூலிகையை கண்டு பிடிக்க முடியாத அனுமன் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தான். அவன் முயற்சியை தடுக்க தன் கட்டுப்பாட்டில் உள்ள கிரகம் சனீஸ்வரன் இராவனண் ஏவினான். தன்னைத் தடுத்த சனீஸ்வரனை ஆஞ்சநேயர் காலில் போட்டு மிதிக்க அவரின் பலம் தாங்காமல் சனி அலறி விடுபட வழிதெறியாமல் முழித்து கடையில் இராம நாமம்கூற அதைக்கேட்ட அனுமன் இனி ராமநாமம் சொல்லும் என் பக்தர் எவருக்கும் உன்னால் தீங்கு நேரக்கூடாது என உறுதி மொழி பெற்று சனியை விடுவித்தார். அது முதல் சனிபகவான் அனுமன் பக்தர்களைத் தொந்தரவு செய்வதில்லை.

 அனுமனை சோதித்த ஈசன்!

சிவபக்தன் இராவணனை கொன்ற தோஷம் ராமரைப் பற்ற அங்குவந்த அகத்தியரிடம் இத்துன்பம் நீங்க வழிகேட்க இரண்டரை நாழிகைக்குள் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்றார். லிங்கம் கொண்டுவர அனுமன் கைலாயம் விரைய அவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் சூரியனை அனுப்ப சூரியனின் வெப்பத்தால் தகித்த அனுமன் சூரியனை விழுங்க முயற்சித்தார். இந்த முயற்சியை கைவிட்டு விடு என்று சொன்ன ராகு பகவானுடன் போர் புரிய, போரில் தோற்ற ராகு ‘உன்னை வழிபடுபவர்களை ஒருபோதும் துன்புறுத்தமாட்டேன், என் தோஷம் அவர்களைவிட்டு நீங்கும் என்று வரம் அளித்தார்.

பின் கைலாயம் சென்று லிங்கத்தை எடுத்துக் கொண்டு வரும்போது சனிபகவான் உன்னை நான் பீடிக்கப் போகின்றேன் அந்த லிங்கத்தை என்னிடம் கொடு என்று அனுமனின் வாலைப் பிடித்து இழுத்தார். சினம் கொண்ட அனுமன் தன் வாலால் சனியை சுற்றி கீழெ தள்ள பூமியில் விழுந்த சனி உன் வால் அறுந்து போகட்டும் என சாபம் கொடுதார். சிவபெருமான் என்பக்தனான அனுமனின் செயலுக்கு தேவையில்லாமல் இடையூறு தந்த நீ உன் பதவியை இழப்பாய் என்றார். சாபவிமோசனம் கேட்ட சனிக்கு திருக்குரங்குக்கா சென்று வழிபட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிவாய் என்றார்.

அந்தணர் வேடத்தில் வந்த காலபைரவர் இதைவிட சக்தி வாய்ந்த லிங்கம் சுருட்டப்பள்ளியில் உள்ளது என்றதும் கையிலிருந்த லிங்கத்தை அவரிடம் கொடுத்துவிட்டு சுருட்டப்பள்ளி சென்று லிங்கத்தை பெயர்தெடுக்க முயன்றார். முடியவில்லை. நேரம் கழியவே அந்தணரிடம் கொடுத்த லிங்கத்தையாவது திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சென்றபோது அந்தணர் அங்கு இல்லை. தான் அவரிடம் கொடுத்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தது கண்டு வருத்தப்பட்டார். உடனே காசிக்கு சென்று லிங்கம் எடுத்துவரச் சென்றார்.

சேதுக்கரையில் இறைவனை நினைத்து சீதை மணற் லிங்கம் செய்ய அனுமன் வர காலதாமதம் ஆனதால் ராமர் சீதை செய்த லிங்கத்தை வைத்து வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டார்.

காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வரும் போது காசியின் காவல் தெய்வமான பைரவர் என்னுடைய எல்லைப் பகுதியிலிருந்து நீ லிங்கத்தை என் அனுமதியின்று எடுத்துச் செல்லக்கூடாது என தடுக்க இருவருக்கும் போர் மூண்டது. காலபைரவர் தோற்க லிங்கத்தை எடுத்துக் கொண்டு சேதுக் கரைக்கு விரைந்த அனுமனிடம் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் சீதை செய்த மணல் லிங்கத்தை வைத்து வழிபட்டு ராமரின் தோஷம் நீங்கியது என்றார். மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இத்தனை கஷ்டப்பட்டு கொண்டு வந்த லிங்கம் உபயோகமில்லயே என அனுமன் முகம் வாடியது.

அனுமனிடம் நீ கொண்டுவந்த லிங்கத்தையும் இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடுவோம் என்றார். ராமர். சீதை செய்த மணல் லிங்கத்தை தன் ஊரான சித்திரக்கூடத்திற்கு எடுத்துச் சென்று வழிபட்டால் தன் பாவம் தீரும் என்று நினைத்த அனுமன் மணல் லிங்கத்தை தன் வாலல் கட்டி இழுக்க முயற்சித்தார். எவ்வளவு முயற்சித்தும் முடிய வில்லை. சனியின் சாபப்படி வால் அறுந்தது. நீ செய்த அபச்சாரத்தால் உன் வால் அறுந்தது. அது தீர நீ தல யாத்திரை செல் என்றார் ராமர்.

யாத்திரையின்போது பழவாறு என்ற கணபதி நதிக்கரையோரம் மரத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இங்கேயே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடு மேலும் இத் தலம் உன் பெயரால் விளங்கும் என அசரீரி ஒலித்தது. அப்போது பார்வதி வயதான பெண் உருவெடுத்து அந்த நதியோரம் லிங்கம் வைத்து பூஜை செய்தார். அங்கு வந்த அனுமன் அவரை வணங்கி தன் சாபத்தை சொல்ல பார்வதி பூஜித்த அந்த லிங்கத்தை அனுமனுக்கு கொடுத்துவிட்டு நீ பூஜை செய் என்றார். அனுமனை சோதிக்க எண்ணிய பெருமான் அந்தனர் வேடம் கொண்டு அனுமனிடம் யாசகம் கேட்டார். தன்னிடம் கொடுப்பதற்கு ஏதுமில்லை என்ற அனுமனிடம் உன் இரு காதிலும் உள்ள குண்டலங்களை கொடு என்றார். அதிர்ந்த போன அனுமன் யார் கண்களுக்கும் தெரியாத அந்த குண்டலங்கள் அந்தணருக்கு தெரிகின்றது என்றால் வந்திருப்பது ஈசன் என்றுணர்ந்து வணங்கி தன் இரு குண்டலங்களையும் அறுத்துக் கொடுத்தார்.

மகிழ்வுற்ற ஈசன் சிவசக்தி சமேதராய் காட்சி கொடுத்து அனுமனின் சாபம் தீரவும் வால் பழையபடி வளரவும் இழந்தசக்தி திரும்ப கிடைக்கவும் அருள் புரிந்தார். சிவபெருமான் அனுமனின் காதிலுள்ள குண்டலங்களைப் பெற்றதால் இறைவன்: குந்தளேஸ்வரர்(சு), குண்டலகர்ணேஸ்வரர். இறைவி: குந்தளாம்பிகை. குந்தள நாயகி, ஏலாசௌந்தரி அம்மன் சிவபக்த ஆஞ்சநேய பீடம். சனி, ராகு கிரக தோஷம், பில்லி, சூன்யம் பாதிப்புகள் நீங்கும் தலம். திருகுரக்குக்கா.தி.த-82+அ-39. திருக்குரக்காவல். அனுமன் வழிபட்டது. குரங்கு இனமான ஆஞ்சநேயர் காவல் புரிந்ததால் குரங்குக்கா என்று அழைக்கப்பட்டு திருக்குரக்கா என்று அழைக்கப்படுகின்றது. திருவோண நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயரால் லிங்கம் பிரதிஷ்டை- திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபடுதல் சிறப்பு. அமாவாசையன்று அம்பாளுக்கு ஓமம். அப்பர் -பாடல் பெற்ற தலம்.

அனுமனின் வருத்தம்! எல்லாவற்றிலும் இறைவனின் சந்நித்யம்! ஆன்மீகன் ஆனந்தம்!

ஒரு தீவிர பக்தரின் கனவில் ஆஞ்சநேயர் தரிசனம் தந்தார். பக்தன், அவருடன் தான் தாயம் விளையாட விருப்பம் தெரிவித்தார். நான் விளையாட்டில் விட்டு கொடுக்க மாட்டேன், நீ வருத்தமடையக் கூடாது என்று அனுமான் ஒரு நிபந்தனையைச் சொன்னார். சம்மதத்துடன் இருவரும் விளையாட ஆரம்பித்தனர். ஒவ்வொருமுறையும் ‘ஜெய் அனுமான்’, அல்லது ‘ஜெய் ஆஞ்சநேயா’ எனக்கூறி காய்களை உருட்டினார் பக்தர். ஆஞ்சநேயர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உருட்டினார். பலமுறை விளையாடியும் பக்தனே வெற்றி பெற்றான்.

தோல்வியுற்றால் வருத்தப்படக்கூடது எனக்கூறிய ஆஞ்சநேயர் வருத்தமுற்றார். ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்தும் எனக்குத் தோல்வியா! என ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராமர் அவர்முன் தோன்றி, ஆஞ்சநேயா.. நீ என் பக்தன்.. எனவே என் சக்தி உன்னிடம் இனைந்துள்ளது. அவன் உன் பக்தன்.. உன் சக்தி அவனிடம் இனைந்துள்ளது. ஆனால் நான் உன்னுள் இருப்பதால் உன்சக்தி இனையுமிடத்தில் என்சக்தியும் சேர்ந்துவிடும். நம் இருவரது சக்தி சேர்ந்திருப்பதுவே அவனது தொடர் வெற்றிக்கு காரணம் என்றார். ஆன்மாக்களே எண்ண அதிர்வுகளால் ஒருவரின் மனதை நீங்கள் கவர்ந்து விட்டால் அவரிடமுள்ள அனைத்து சக்திகளும் உங்களுக்கு உதவும்.

பாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படாத உண்மைகள். ஆனால் அவைகள் ஒன்றினுள் இருப்பது நமக்குத் தெரியும். தெரிந்த ஒன்றினுள் தெரியாத ஒன்று இருக்கிறது என்பதை நாம் புரிந்து வைத்துள்ளோம். பாலில் ஒன்றிற்குள் ஒன்று இருப்பதைப்போலவே எல்லாவற்றினுள்ளும் இறைவன் இருக்கின்றான்.

காற்று மூங்கிலில் மோதும்போது இசை தோன்றுவதில்லை. அதே மூங்கிலில் துவாரம் ஏற்படுத்தி புல்லாங்குழல் ஆனபிறகு அதனூடே செல்லும் காற்று இனிமையான ஓசையை தருகின்றது. அதைப்போன்றே ஆகமமுறைப்படி கட்டப்பட்டுள்ள கோவில்களில் இறைவனின் சந்நித்யம் நிறைந்து அருள் அதிர்வலைகள் இயங்கிக் கொண்டிருப்பதால் கோவில்களுக்குச் செல்லும் ஆன்மீகன் ஆனந்தம் அடைகின்றான்.

சனி-இராகு தோஷம்!

எல்லோரையும் கலங்கச் செய்யும் சனியை கலங்கச் செய்தவர் ஆஞ்சநேயர்.. இதனால் சனி தோசத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டு பலன் அடைகின்றனர். ராகு-கேது விற்குப் பிடித்த உளுந்தும் சனிக்குப் பிடித்த எள் எண்ணெய்யாலும் தயாரித்த வடைமாலையை ஸ்ரீஆஞ்சநேயருக்குச் சார்த்தி வழிபட்டால் சனிராகு இடையூரிலிருந்து உயிர்கள் விடுபடுவார்கள்.

வடைமாலை அலங்கார தரிசன பலன் –சனி, ராகு கிரக தோஷங்கள் விலகும் பிணிகள் நீங்கும். வடைமாலை சார்த்தி வழிபடும்போது சொல்லவேண்டிய துதி-

அஞ்சனை மைந்தா போற்றி! அஞ்சினை வென்றாய் போற்றி!
வெஞ்சினக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி!
மஞ்சன மேனிராமன் மலர்ப்பாதம் மறவாய் போற்றி!
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் போற்றி!

வெண்ணெய் காப்பு!

இராம இராவண யுத்தத்தில் அனுமனுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதைக் கண்ட சீதா அவருக்கு வெண்ணெய் தந்து அந்த காயத்தின்மேல் தடவச் சொல்ல அனுமனுக்கு காயங்கள் குளிர்ந்து ஆறுதல் அடைந்தார். அதனால் வெண்ணெய் தடவுவது அவருக்கு குளிச்சியை ஏற்படுத்தும் என்பதால் வெண்ணெய் காப்பு செய்து பக்தர்கள் நீண்ட ஆரோக்கியத்திற்கு பிரார்த்தனை.

வெண்ணெய் காப்பு- அலங்கார தரிசன பலன்- நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். முயற்சிகளில் வெற்ரி கிட்டும். வெண்ணெய் காப்பு- சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருத மஸ்த காஞ்சலிம்
பாஷ்ப வாரிம் பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷா ஸாந்தகம்


வெற்றி இலை!

அசோக வனத்தில் இருந்தபோது சீதையை இராம நாமத்தால் குளிரவைத்தார் அனுமன். மேலும் இராமரது கணையாழியைக் கொடுத்து வணங்கினான் அனுமன் அப்போது மகிழ்வுற்ற சீதை அருகிலிருந்த இலையைப் பறித்து அனுமன் தலையில் போட்டு எப்போதும் உனக்கு வெற்றி கிட்டட்டும் என ஆசீர்வாதித்தாள். அந்த வெற்றி இலையே காலப் போக்கில் வெற்றிலை என்றானது. அதனால் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபடுவது பழக்கமானது.

வெற்றிலை மாலை - அலங்கார தரிசன பலன்- சகல சௌபாக்கியமும் கிடைக்கும். வெற்றிலை மாலை காப்பு- சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

அன்னை கை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து
இன்னெடும் கடலை நீயும் எங்ஙனம் கடந்தாய். என்ன
உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று
மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி!

முத்தங்கி சேவை - அலங்கார தரிசன பலன்- ராஜயோகம் கிடைக்கும். முத்தங்கி சேவை - சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் தவகிம் வத
ராம தூத க்ருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ!

சந்தனக் காப்பு - அலங்கார தரிசன பலன்- செல்வ வளர்ச்சி உண்டாகும். துன்பங்கள் நீங்கும். சந்தனக் காப்பு - சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

ஓம் புத்திர்பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக் படுத்வம் ச
ஹநூமத் ஸ்மரணாத் பலேத்!

மஞ்சள் பட்டு வஸ்திரம் - அலங்கார தரிசன பலன்- சுக்கிர தோஷம் விலகும். பார்வை நலம் கிட்டும். மஞ்சள் பட்டு வஸ்திரம்- சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

அஞ்சனை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமதூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமோ!

எழுமிச்சைமாலை!

ஆண் தெய்வங்களுக்கு எழுமிச்சைமாலை சர்த்துவதில்லை. ஆனால் அனுமன் சக்தியின் அம்சம் ஆதலால் அவருக்கு எழுமிச்சை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி சூன்யம், திருஷ்டி தோஷங்கள் விலகும்

பூ / துளசி மாலை:

ஆரோக்கியம் பெருகும். நியாயமான சகல காரியங்களும் வெற்றி. சர்வ சம்பத்து சேரும். வாழ்க்கை வசந்தமாகும்.

செந்தூர ஆஞ்சநேயர்!

சீதா தேவி தன் நெற்றியிலும் வகிட்டிலும் செந்தூரம் இடுவதைப் பார்த்த அனுமன் அதன் காரணம் கேட்க, நெற்றியில் வைப்பது சுமங்கலி அடையாளம், வகிட்டில் வைப்பது லட்சுமி சீனிவாசன் மார்பில் வாசம் செய்வதுபோல் எப்போது தானும் ராமரின் இதயத்தில் வசம் செய்ய என்பதைக் கேட்ட அனுமனுக்கு தானும் அப்படி செந்தூரம் இட்டால் ராமனை பிரியாமலிக்கலாம் என்ற நினைவில் நெற்றில் வைக்க தனக்கு அது அழகாயில்லை என்று முகம் முழுவதும் பூச, அதுவும் திருப்தி தராததால் உடல் முழுவதும் பூசிக் கொண்டார். இதன் காரணமாகத்தான் அனுமனுக்கு செந்தூரம் சாத்துகின்றோம். செந்தூரம் அணிந்த ஆஞ்சநேயர் சகல நன்மைகளையும் தருவார்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்! 

இராம இராவணப் போரில் இராவணன் அழிந்தனால் கோபம் கொண்ட சதகண்டன் என்ற அசுரன் தன்னுடன் போரிட இராமரை அழைக்க அசுரனுடன் அனுமனின் தோளில் அமர்ந்து போரிட்டார். அப்போது மாயாவியான அசுரனிடம் போர் புரிய தனக்கு அனுமதி கேட்ட அனுமன் தன் பலத்தால் அனுமன், நரசிங்கம், கருடன், பன்றி, குதிரை ஆகிய ஐந்து முகங்களை கொண்ட உடலுடன் சதுகண்டனிடம் போரிட்டு அவனை வீழ்த்தினார். அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுபவர் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

அனுமன் முகம் கிழக்கில்-பகை அழியும், கருடன் முகம் மேற்கில்- எப்போதும் எதிலும் வெற்றி. வராஹர் முகம் வடக்கில்-ஊழ்வினை நோய், விஷ நோய் போக்கும், நரசிம்ம முகம் தெற்கில்-தீராத கடன், பொருள் இழப்பு நீக்கி மனதில் நிம்மதி சாந்தி நிலவும். ஹயக்ரீவர் முகம் மேல்நோக்கி- பில்லி சூன்யம், துஷ்ட தேவதைகள் கெடுதல்கள் நீக்கும், ஆகிய ஐந்து முகங்களுடன் அருள் பாலிக்கின்றார்.

பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோவில்களில் தனி சன்னதியிலும் சிவன் கோவில்களில் தூணிலும் அருள் பாலிப்பது வழக்கம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் இடம் பெறும். இவரது சன்னதியில் துளசி பிரதான பிரசாதம்.

ஆஞ்சநேயரை வழிபட்டால், நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்குச்சாதுர்யம் முதலிய நன்மைகள் கிட்டும். நவகிரக தோஷங்கள் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் நலம் பெறுவர்.

#####

வெள்ளிக்கிழமை, 20 July 2018 18:37

கருடாழ்வார்!

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

####

பெரியதிருவடி! கருடாழ்வார்!

கருடன் எப்படி வாகனமானது!

விநதையும் கத்ருவும் சகோதரிகள். காஸ்யப முனிவரின் மனைவியான விநதை காஸ்யபரிடம் வரம் கேட்க சக்திவாய்ந்த அருணன், கருடனும் பிறந்தனர். கருவில் குறைபாடு ஏற்பட்டதால் ஊனமான அருணன் அதற்கு தன் தாயே காரணம் என நினைத்து பல ஆண்டு காலம் கத்ருவின் அடிமையாக இருக்க தாய்க்குச் சாபமிட்டு இரண்டாவது முழுமையான கருவினால் இந்த சாபம் நீங்கும் என விமோசனம் அளித்தான். அருணன் தவமிருந்து சூரியனின் தேரோட்டியானான் இன்னொரு மனைவி கத்ரு காஸ்யபரிடம் வரம் பெற்று ஆயிரம் பாம்புகளைப் பெற்றாள்.

சகோதரிகள் இருவரும் உலா வரும்போது உச்சைச்வரசுவைப் பார்த்த இரு சகோதரிகள் அதன் வாலின் நிறம் வெண்மையா, கருப்பா என நடந்த போட்டியில் வெற்றிபெற கத்ரு தன் பாம்புக் குழந்தைகளை அழைத்து குதிரையின் வாலில் சுற்றிக்கொள்ள சொல்ல அது சரியில்லை, பாம்புகளின் தர்மம் அதுவல்ல என சில பாம்புகள் மறுக்க அவைகளை பாண்டுவின் வம்சத்தில் ஒருவன் செய்யும் சர்ப்ப யாகத்தில் அழியும்படி சபித்தாள்.

தாயின் சாபத்தினால் கலக்கமுற்ற மற்ற பாம்புகள் பிரம்மாவின் ஆலோசனைப்படி அவர்களது சகோதரியை ஜரத்காரு என்பவருக்கு மணமுடிக்க அவருக்குப் பிறந்த ஆஸ்திக மகரிஷி ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தை பாதியில் நிறுத்தினதால் மீதி பாம்புகள் தப்பின.

விநதைக்கு மகன் அருணனின் சாபம் இருந்ததால் பந்தயத்தில் தோற்று கத்ருவுக்கு அடிமையானாள். விநதைக்கு கருடன் பிறந்ததும் அவனுக்கு பாம்புகள் உணவாகும் என பிரம்மா வரம் அளித்தார். பாம்புகளின் மீது பகைகொண்டு கொன்று புசித்த கருடனிடம் தலைமை பாம்பான வாசுகி நியாயம் கேட்க தொடர்ச்சியாக கொல்லவில்லை, ஆனால் தினமும் ஒரு பாம்பு தனக்கு இறையாக வர ஒப்புக்கொண்டான் கருடன். அதன்படி தினமும் ஒவ்வொன்றாக பாம்புகள் கருடன் குறிப்பிட்ட பாறைமீது சென்று கருடனுக்கு இறையாகின.

அப்பகுதியை ஆண்ட மன்னன் ஜீமூதவாகனன் பதேர்வாவுக்கு வந்து வாசுகியுடன் நண்பரானார். ஜீமூதவாகனன் செல்வம் துறந்து காட்டிற்குச் சென்றபோது நாக கன்னிகையின் அழுகுரல் கேட்டு அவளை விசாரிக்க ஒவ்வொரு நாளும் பட்சி ராஜாவுக்கு ஒரு பாம்பு இறையாக கட்டளை உள்ளது. அதன்படி இன்று என் மகன் சங்க சூடன் முறை என்பதால் துயரம் தாங்க முடியவில்லை என்றதைக் கேட்ட ஜீமூதவாகனன் அந்த பாம்பிற்குப் பதிலாக தானே சென்று பாறை மீது படுக்க, மன்னனின் தியாக உணர்வைப் பாராட்டி கருடன் அன்றிலிருந்து பாம்புகளை கொல்வதை கைவிடுவதாகக்கூறி இதுவரை தனக்கு இறையான பாம்புகளின் எழும்புக் கூட்டிலிருந்து அந்த பாம்புகளை உயிர்ப்பித்துக் கொடுத்தான். எனவே பாம்புகள் தொடர்ந்து அழிக்கப்படுவதை தடுத்த வாசுகி மற்றும் ஜீமூதவாகனன் இருவரும் இங்கு கருவரையில் மூலவர்களாக அருள். மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் வாசுகி கையில் சங்கு சக்கரத்துடன் காட்சி. பனிக்காலத்தில் மூடப்பட்டு பைசாகியன்று (தமிழ் புத்தாண்டு) திறக்கப்படும். பதேர்வா வாசுகிநாக் ஆலயம். காஷ்மீர்மாநிலம்-தோடா மாவட்டம்-தோடாவிலிருந்து33கி.மீ.

நாகபஞ்சமிக்கு அடுத்துவரும் ஆடிமாத வளர்பிறை பஞ்சமியை கருட பஞ்சமியாக கொண்டாப்படுகின்றது. பெரிய திருவடி எனப்படும் கருடன் அவதரித்த சுவாதி நடசத்திரம் பஞ்சமி திதியே கருடபஞ்சமி. ஆடி மாதத்தில் நாகருக்கும் கருடனுக்கும் பூஜை செய்து நல்ல பலன்கள் பலவும், நீண்ட ஆயுளையும் செல்வ செழிப்பையும் பெற்று நல்வாழ்வு வாழ்க!-குருஸ்ரீ பகோரா

கருடன் தன் தாயின் அடிமைத்தளை போக்க இந்திரலோகம் சென்று இந்திரனை வென்று அமிர்தம் கொண்டுவரும்போது அவனின் செயல் சரியில்லை என விஷ்ணுகூற இருவருக்கும் இருபத்தியோறு நாட்கள் போர். இறுதியில் பெருமாள் அவனிடம் நாகங்களுக்கு அமிர்தம் கொடுப்பது தர்மமாகாது. அதற்குப் பதிலாக என்ன வரம் வேண்டும் என்று கேட்க, நீ யார் எனக்கு வரம் தருவது, உங்களுக்கு நான் வரம் தருகிறேன், என் தாய் மீது சத்யம், கேளுங்கள்! என கருடன் அகங்காரத்துடன் சொல்ல, நீ எனக்கு வாகனமாக பணிபுரியும் வரத்தை தா என பெருமாள் கேட்டார். இதனால் கருடனின் கர்வம் அழிந்து விஷ்ணுவை வணங்கி வாகனமானான். விநதையின் மகனானதால் கருடனுக்கு வைநதேயன் என்ற பெயர் ஏற்பட்டது.

தன் வாகனமாகிய கருடனுக்கு அருள்புரிய நினைத்த விஷ்ணு அவனை கலசகுடத்துடன் அனுப்பிவைத்தார். கருடன் கலசத்தை தர்ப்ப புல்லின்மேல் வைக்க, வாயுவிற்கு விஷ்ணு சைகை செய்ய அவர் தன் அசைவால் கலசத்தை தட்டிவிட அமிர்தம் கீழே சிந்தி கற்பூரமாய் கரைந்தது. அப்போது அங்கிருந்த பாம்புகள் அந்த தர்ப்பையை நக்க அவைகளின் நாக்குகள் பிளவு அடைந்தன. பாம்புகளின் நாக்குகள் பிளவுபட்டிருக்க இதுவே காரணம் என்கிறது புராணம். விநதையின் மகனானதால் வைநேயன் என கருடன் அழைக்கப்பட்டார்.

ஸ்ரீவைகுண்டத்தில் பெருமாளுக்கு இடையறாது தொண்டு செய்பவர்கள் நித்திய சூரிகள் எனப்படுவர். அவர்களுள் முக்கியமானவர் கருத்மான் –பெரிய திருவடி- கருடாழ்வார் என அழைக்கப்படும் கருடனே! பறவைகளில் இவர் இராஜாவாக கருதப்படுவதால் பட்சிராஜன் எனப்படுபவர். எந்த ஒரு நற்செயலைச் செய்யத் தொடங்கும்போது கருட சகுனம் கிடைப்பது உயர்வாகச் சொல்லப்பட்டுள்ளது. கருடப் பத்து என்ற செய்யுட்கோவையை ஜபம் செய்தால் விஷ சந்துக்களால் நேரக்கூடிய அபாயம் விலகும்.

பெரியாழ்வார் கருடபகவான் அம்சமாகத் இதே சுவாதி நட்சத்திரத்தில் தோன்றியவர். அவரது மகளே ஆண்டாள். பெரியாழ்வார் மாமனார் ஸ்தானத்தில் அமைந்ததால் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்கமன்னார்- ஆண்டாளுடன் கருடபகவானும் ஒரே ஆசனத்தில் இந்த அமைப்பு சிறப்பு இங்கு மட்டும்தான்.


#####

வெள்ளிக்கிழமை, 20 July 2018 09:19

பிரம்மன்-சரஸ்வதி!

ஓம்நமசிவய!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

####

பிரம்மன்-சரஸ்வதி!

பிரம்மன்!

இறைவனின் உயிர்களின் படைப்புக்குமுன் பிரபஞ்சம் பெயர் உருவமில்லாமல் சுத்த அண்டைவெளியாய், நிர்க்குணமாய், சின் மாத்திரப் பரப்பிரம்மாய் இருந்துள்ளது. அந்த பரப்பிரமத்திலிருந்து பிரமையினால் கானல்நீர் போன்று மூலப்பிரகிருதி என்ற மாயை வெண்மை, சிகப்பு, கருப்பு எனும் மூன்றுவித நிறங்களோடு மூன்று சக்திகளாய் தோன்றியது. ‘பிர’ என்றால் மிகச்சிறந்தது என்றும் ‘கிருதி’ என்றால் மிகச் சிறந்த உற்பத்தி என்றும் பொருள். பிரகிருதி தனிப்பட்டது இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இது பரப்பிரமத்துடன் இணைந்திருப்பது. பிரகிருதியின்றி பரப்பிரம்மம் இல்லை. அந்த மூன்று சக்திகளில் வெண்மை நிறம் மாயா (மாயை) சக்தியாகவும், சிகப்பு நிறம் அவித்யா (அறியாமை அஞ்ஞானம்) சக்தியாகவும் கறுப்பு (கருமை) நிறம் ஆவரண விஷேச சக்தி (முனைப்பு/அகங்காரம்) என்றும் ஆகியது.

மாயா சக்தி எப்போதும் பிரபஞ்சத்தின் மூன்று குணங்களில் (1.ராஜஸம்-எழுச்சி, 2.தாமஸம்-மயல் (மயக்கம்), 3.ஸாத்வீகம்-நன்மை (அமைதி), சத்துவ குணத்தை முதன்மையாகக் கொண்டு விளங்கும். அதில் பரப்பிரம்மம் பிரதிபலிப்பதனால் தோன்றிய பிரதிபிம்பமே ஈசுவரன் ஆகும். ஈசுவரனின் அருட்சக்தியே ஸ்திரி(சக்தி) உருவமாக இயங்குகின்றது. ஈஸ்வரன் அமைதி நிலை (static) சக்தி ஆற்றல் நிலை (dynamic). பிரணவப் பொருளே ஈஸ்வரன் சொரூபம். அது எல்லா விதைகளுக்கும் விதை போன்றது. மிக சூட்சமம் ஆனது. உலகின் எல்லா ரூபங்களிலும் காணப்படுவது. அதுவே பரபிரம்மம் ஆகும். ஏகாட்சரம்- ஆதி மந்திரம் என்றும் சொல்லலாம்.

அப்படித் தோன்றிய ஈஸ்வரன் அந்த மாயையைத் தன்வசப்படுத்திக் கொண்டு பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் வடிவங்களைத் தோற்றுவித்து உலகங்கள் யாவையும் சிருஷ்டி(படைத்தல்), ஸ்திதி(காத்தல்), சம்ஹாரம்(அழித்தல்) என முத்தொழில்களுடன் மறைத்தல், அருளல் என்று இயக்கி உலகை இயக்குகின்றார். இந்த முத்தொழிலுக்கும் உதவி செய்ய அவர்களுக்கு ஈசுவர் தன் சக்தியை மூன்று பெண்வடிவ சக்தியாக்கி சரஸ்வதி, லட்சுமி, உமை என உருவாக்கினார். சிருஷ்டி தொழிலை செய்ய பிரம்மாவிற்கு பிரகிருதி அனைத்தும் ஸ்திரீ உருவமாகி உதவியது.

முதலில் பிரகிருதி சரஸ்வதி ஸ்வரூபம் புருஷனுடன் கூடிட பிரம்மனின் முகத்திலிருந்து காயத்ரீ மந்திரமாகிய இருபத்திநான்கு எழுத்துகள் உண்டாயின. இதன் அடிப்படையிலே மற்ற தெய்வங்களுக்கான மந்திரங்கள் சொல்லப்பட்டு அவைகள் அந்த தெய்வங்களின் காயத்திரி என அழைக்கப்பட்டன.

இந்த உற்பத்தியில் மிகச் சிறப்பானது பெண்கள்தான். மற்ற பெண்கள் எல்லாம் முதலில் உற்பத்தியான பெண்களிலிருந்தேதான் உற்பத்தி செய்யப்பட்டனர். அதனால் மற்றவர்கள் இவர்களின் அம்சத்துடன் கூடியவர்கள். அடிப்படி பிரகிருதியிலிருந்தே தோன்றியதால் பெண்களுக்குத் தீங்கிழைப்பது தாய்மைக்குச் செய்யும் கொடுமைக்குச் நிகரான பாபச் செயல் எனப்படும். பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதை பிரகிருதிக்கு அளிக்கப்படும் மரியாதையாகும்.

உலகில் படைப்புத் தொழிலை ஆரம்பிக்குமுன் பிரம்மன் தன் உடலை இரு கூருகளாக்கி ஆண்- பெண் என்றமைத்தான். ஆண்-ஸ்வாயம்புவ மனு என்றும் பெண் சதரூபா என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர் தன் மனத்தின் மூலம் நாரதர், தட்சன், வசிஷ்டர், பிருகு, கிருது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மாரீசு ஆகிய மகன்களை உருவாக்கி அவர்கள் பிரஜைகளின் உற்பத்திக்கு காரணமாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார். அதனால் அவர்கள் பிரஜாபதிகள் எனப்பட்டனர். சிருஷ்டி வளர்ச்சி பெற்று நவகோடிகள் தோன்றின. உலக விவகாரம் அறிய உதவும் நிலையில் காலப் பிரமாணம் உருவாகியது.

சரஸ்வதி!

முத்தொழிலுக்கும் உதவி செய்ய ஈசுவர் தன் சக்தியை மூன்று பெண்வடிவ சக்தியாக்கி சரஸ்வதி, லட்சுமி, உமை என உருவாக்கினார். சிருஷ்டி தொழிலை செய்ய பிரம்மாவிற்கு பிரகிருதி அனைத்தும் ஸ்திரீ உருவமாகி உதவியது. சரஸ்வதிதான் உலகின் முதல் பெண் தெய்வம். இதனால் வேதங்கள் சரஸ்வதியை ஆதிகாரணி என்கின்றன. புரட்டாசி மாதம் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சரஸ்வதி தோன்றினாள். மூலம்-என்றாள் அடிப்படை- ஆனால் வாழ்க்கைக்கு அடிப்படை கல்வி. கல்விக்கு அதிபதி சரஸ்வதி

சரஸ்வதி தேவியின் முகம்- பிரம்ம வித்யை, கைகள்- நான்கு வேதங்கள், கண்கள்- எண், எழுத்து. மார்பு- இசையும் இலக்கியமும், பாதங்கள்- இதிகாச புராணம், யாழ்- ஓங்காரம் என வேதங்கள் விவரிக்கின்றன. காயத்ரி, சாவித்திரி, தண்டா சிறப்பினள், நாமகள், தூயா, பாமகள். பாமுதவல்லி, பாரதி, பிராமி, பூரவாகினி, வாக்காள்வாணி, வெண்தாமரையாள், கமலவல்லி, கலைவாணி, கலைமகள், கலைக்கொடி, கலைஞானதோகை, கலுங்கன் (பாலித்தீவு), பெண்டன் (ஜப்பான்), யங்சன்ம (திபெத்), ஹம்சவல்லி எனப் பலப் பெயர்களால் ஆராதிக்கப்படுகின்றாள்.

மக்கள் உற்பத்தி செய்யப் பட்டால் அவர்கள் பிழைப்பதற்காக எண்களும், பேசுவதற்கு மொழியும், வழிபடுவதற்கு பூஜை முறைகளும் தேவை என்பதை உணர்ந்த சரஸ்வதி. மக்களின் மன இறுக்கத்தைப் போக்க அறிவாற்றலைப் பெருக்கப் 64 கலைகளைத் தோற்றுவித்தாள்.

வாகீஸ்வரி, சித்தேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினிசரஸ்வதி ஆகிய எட்டு ரூபங்களில் சரஸ்வதி காட்சியளித்துள்ளாள். இந்த ரூபங்களை ஆராதித்தால் கிடைத்த செல்வத்தை பேணிக் காக்க அறிவும் ஞானத்தால் கிடைக்கும் புகழும் மனநிம்மதியும் பெருகும். வாக்கு, புத்தி, வித்தை, ஞானம் (சொல், அறிவுணர்வு, கல்வி, மெய்யாறிவு) ஆகியவற்றின மூலமாக நிலைக்களமாகவும், சகல வித்தைகளின் வடிவமாகவும் விளங்குபவள் சராஸ்வதி.

சிவனைப் போன்றே சரஸ்வதியும் மூன்றாம் பிறையை அணிகின்றாள். சகலகலாவல்லியான அவளே மூன்றாம் பிறை அளவிற்குத்தான் தனக்கு கலைகள் தெரியும் என அடக்கத்துடன் இருப்பதைக் குறிக்கின்றது.

கலை என்றால் வளர்வது என்று அர்த்தம். மாக எனும் மாசிமாத வளர்பிறை பஞ்சமி வசந்த பஞ்சமி- சரஸ்வதி பிறந்த நாள் என்பதால் அன்றும், கலைகளைக் கற்க நன்னாளான விஜயதசமி அன்றும் சரஸ்வதியைத் தொழ வேண்டும். வெள்ளை நிறப் பூக்கள், வெள்ளை ஆடைகள், வெண்சங்கு, சந்தனக் குழம்பு ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். பூஜா என்பதிலிருந்து பிறந்தது பூஜை. பூ என்றால் பூர்த்தி, ஜா என்றால் உண்டாக்குவது. ஞானத்தை உண்டாக்கச் செய்வதே பூஜா என்கிற பூஜை. பொதுவாக தெய்வபூஜைகளில் பூஜை என்ற வார்த்தையைச் சேர்ந்து சொல்வது சரஸ்வதி பூஜை மட்டுமே.

தம்பதியர்கள் ஒற்றுமை!

பிரம்மனும் சரஸ்வதியும் சத்ய லோகத்தில் தன்னால்தான் இந்த சத்ய லோகம் பெருமை படுகிறது என்று ஆரம்பித்து சச்சரவில் முடிந்து இருவரும் ஒருவரை ஒருவர் சபித்தனர். அதன்படி இருவரும் சோழ நாட்டில் புண்னிய கீர்த்தி-சோபனை என்ற அந்தண தம்பதிக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் பிறந்தனர். திருமண வயதில் இருவருக்கும் தாங்கள் யார் என்ற நினைவு வந்தது. சகோதர நிலையில் உள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு தெரிய வந்து அனைவரும் முடிவெடுத்து சிவனைத் துதிக்க, தம்பதியர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் இது போன்ற குழப்பங்கள் வாழ்வில் ஏற்படும் என்பதை உணர்த்தவே இந்த பிறப்பு உங்களுக்கானது. எனினும் நீங்கள் இருவரும் இப்பிறவியில் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே சரஸ்வதியாகிய நீ இங்கேயே இருந்து பக்தர்களுக்கு செல்வத்தை வழங்கு என ஆசி அருள்- கூத்தனூர்.

ஏளனம்- நகைப்பு- சாபம்- சரஸ்வதி பூலோகப் பிறப்பு!

விகார உருவம் கொண்ட மகரிஷி மரீசிக்கைப் பார்த்து அங்கு வந்த சரஸ்வதி சிரிக்க அடுத்தடுத்து பிறவியில் கூன் உருவத்துடன் பிறக்க சாபம். ராமாவதாரத்தின் போது கூனிமந்தரை- இங்கு தவம். குப்ஜாசங்கமம்-மத்தியபிரதேசம் அடுத்து கிருஷ்ணாவதாரத்தின் போது சகுனி கண்ணனின் மகிமையால் விமோசனம்.-

சரஸ்வதி நதி!

லக்ஷ்மி, சரஸ்வதி, கங்கை மூவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓர் நிலையில் லக்ஷ்மி அமைதியுடன் இருப்பதைப் பார்த்த சரஸ்வதி, சச்சரவை தீர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றாய்! நீ துளசி மரமாக ஆவாய் எனச் சாபமிட, கங்கை சரஸ்வதியைப் பார்த்து நீ நதியாக ஆவாய் என்றும் சரஸ்வதி கங்கையைப் பார்த்து நீ நதியாய் ஆவாய் எனவும் சாபம் இட்டனர். அதன்படியே லட்சுமி துளசிச் செடியாகவும், சரஸ்வதி- சரஸ்வதி நதியாகவும், கங்கை- பகீரதி எனும் நதியாகவும் தோற்றமெடுத்தனர். நதி வடிவடைந்து பாபிகளின் பாபங்களை ஏற்றனர்.

ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் சரஸ்வதி தேவியே அதிபதி. அவைகள்
1. ஆடல்,
2. இசைக்கருவி மீட்டல்,
3. ஒப்பனை செய்தல்,
4. சிற்பம் வடித்தல்,
5. பூத்தொடுத்தல்,
6. சூதாடல்.
7. சுரதம் அறிதல்,
8. தேனும் கள்ளும் சேகரித்தல்,
9. நரம்பு மருத்துவம்,
10. சமைத்தல்,
11. கனி உற்பத்தி செய்தல்,
12. கல்லும் பொன்னும் பிளத்தல்,
13. கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்,
14. உலோகங்களில் மூலிகை கலத்தல்,
15. கலவை உலோகம் பிரித்தல்,
16. உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்,
17. உப்பு உண்டாக்குதல்,
18. வாள் எறிதல்,
19. மற்போர் புரிதல்,
20. அம்பு தொடுத்தல்,
21. படை அணி வகுத்தல்,
22. முப்படைகளை முறாஇப்படுத்தல்,
23. தெய்வங்களை மகிழ்வித்தல்,
24. தேரோட்டல்,
25. மட்கலம் செய்தல்,
26. மரக்கலம் செய்தல்,
27. பொற்கலம் செய்தல்,
28. வெள்ளிக்கலம் செய்தல்,
29. ஓவியம் வரைதல்,
30. நிலச் சமன் செய்தல்,
31. காலக் கருவி செய்தல்,
32. ஆடைக்கு நிறமூட்டல்,
33. எந்திரம் இயற்றல்,
34. தோணி கட்டல்,
35. நூல் நூற்றல்,
36. ஆடை நெய்தல்,
37. சாணை பிடித்தல்,
38. பொன்னின் மாற்றி அறிதல்,
39. செயற்கைப் பொன் செய்தல்,
40. பொன்னாபரணம் செய்தல்,
41. பொன் முலாமிடுதல்,
42. தோல பதனிடுதல்,
43. மிருகத் தோல உரித்தல்,
44. பால் கறந்து நெய்யுருக்கல்,
45. தையல்,
46. நீச்சல்,
47. இல்லத் தூய்மையுறுத்தல்,
48. துவைத்தல்,
49. மயிர் களைதல்,
50. எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல்,
51. உழுதல்,
52. மரம் ஏறுதல்,
53. பணிவிடை செய்தல்,
54. மூங்கில் முடைதல்,
55. பாத்திரம் வார்த்தல்,
56. நீர் கொணர்தல், நீர் தெளித்தல்,
57. இரும்பாயுதம் செய்தல்,
58. மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்,
59. குழந்தை வளர்ப்பு,
60. தவறிணைத் தண்டித்தல்,
61. பிற மொழி எழுத்தறிவு பெறுதல்,
62. வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்,
63. மேற்கூரிய கலைகளை உள்வாங்கும் விரைவு,
64. வெளிப்படுத்தும் நிதானம்.

சரஸ்வதி பூஜை செய்வது எப்படி!
மாசிமாத சுக்லபக்ஷ பஞ்சமி திதியிலும் வித்தியா ஆரம்ப நாளிலும் முற்பகலில் அன்றாடக் கடமைகளை முடித்துக் கொண்டு தூய்மையுடன் ஆகம விதிப்படி விக்னேஸ்வரரை முதலில் வணங்கவும். கடத்தை ஸ்தாபித்து சரஸ்வதி தேவியை அதில் ஆவாகனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

நவநீதம், தயிர், பால், பொரி, எள், லட்டு, கரும்பு, கரும்பின் சாறு, வெள்ளைப்பாகு, வெல்லம், மது, ஸ்வஸ்திகம், சக்கரை, பிளவுபடாதவெள்ளத் தான்ய அட்சதை அவற்றால் உண்டாக்கிய அவல், வெண்மோதகம், நெய்யும் உப்பும் கலந்த வெண் பொங்கல், நெய் கலந்த தினை கோதுமை சுவஸ்திகம் (ஆசனம்) ஆகியவற்றில் மாம்பழம், வாழைப்பழம், ஆகியவற்றை தோல் உரித்து சேர்த்து பிசைந்து செய்த பலகாரம், பரமான்னம் நெய்கலந்த தூய அன்னம் தேங்காய் இளநீர், வெட்டிவேர், பக்குவ நிலையிலுள்ள வாழைப்பழம், வில்வ பழம், இலந்தைப் பழம் அந்தந்த பருவ காலத்திலுண்டாகும் வெள்ளைப் பழங்கள், வெள்ளைச் சந்தனம், புத்தம் புதிய வெண்ணிற ஆடை, அழகான சங்கு அணிகள், முத்தார ஆபரணம் ஆகியன சரஸ்வதி பூஜைக்குரியனவாகும்.

பின் வெண்மை நிறமுடையவளாயும், புன்னகை, சந்துஷ்டி, புஷ்டியான திருமேனியுடன் இருப்பவளும், தூய்மையான ஆடைகளுடன், வீணை புத்தகம் தரித்தவளும், இரத்தின ஆபராணகளை அணிந்தவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும், முனிவர்களால் போற்றப்பட்டவளுமான சரஸ்வதி தேவியை உளமாற துதிக்கின்றேன் என்று வணங்கி மூல மந்திரத்தால் தியானிக்கவும்.

சரஸவாணி!

தேவலோகத்தில் துர்வாசர் வேதம் சொல்லியபோது உச்சரிப்பில் சிறிது தடுமாறினார். கோபம் கொண்டால் சபித்து விடுவாரென அஞ்சி அனைவரும் அமைதியாயிருக்க கலைவாணி மட்டும் சிரித்துவிட்டாள். பிரம்மாவும் அமைதியாக இருந்தார். சீற்றமடைந்த துர்வாசர் மானிடராய் பிறந்து இருவரும் சிலகாலம் வாழவேண்டும் எனச்சாபமிட்டார்.

ஒருவரின் அறியாமையை எள்ளி நகையாடியது தவறு என வருந்தினாள் சரஸ்வதி. கனிவுடன் சொல்லி சரி செய்வதற்குப் பதிலாக தவறு செய்துவிட்டோமே என்று நினைத்து துர்வாசரிடம் பணிவுடன் சாப விமோசனம் வேண்டினாள். சிவன் ஆதிசங்கராக அவதரிக்கும்போது அவர் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். துர்வாசரால் சாபம் பெற்ற பிரம்மாவும் சரஸ்வதியும் மண்டனமிச்ரர், சரஸவாணியாக மாகிஷ்மதி நகரில் பிறந்திருந்தனர். மண்டனமிச்ரரைப்பற்றி குமாரிலபட்டர் சொல்லக் கேள்விப்பட்டு அவரது மீமாம்ச தத்துவத்தை வென்று அத்வைதத்தை ஸ்தாபிக்க சங்கரர் அங்கு வந்தார்.

மண்டனமிச்ரர் வீடு பூட்டியிருந்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி உபதேசித்த ஒரு மந்திரத்தை ஜபிக்க நிமிர்ந்து நிற்கும் பொருட்கள் வளையும் என்ற முறையில் மண்டனமிச்ரர் வீட்டின் தென்னை வளைய அதை பிடித்துக் கொள்ள அம்மரங்கள் மீண்டும் உள்ளே வளைய இல்லத்தின் உள்ளே இறங்கினார் சங்கரர். வியப்புடன் சங்கரைப் பார்த்த மண்டனமிச்ரர் அன்னப்பிச்சை வேண்டுமா எனக்கேட்டதற்கு வாத பிட்சை என்றார். வாதபிட்சை ஆரம்பித்தது. சரஸவாணியின் ஆலோசனைப்படி இருவர் கழுத்திலும் மலர்மாலை சூட்டப்பட்டது. மண்டனமிச்ரர் தோற்றால் துறவறம் பூண வேண்டும். மண்டனமிச்ரர் வென்றால் சங்கரர் துறவறம் துறந்து இல்லறத்தில் ஈடுபடவேண்டும். 21 நாட்களுக்குப் பிறகும் போட்டி தொடர தோல்வியடைந்து விடுவோமோ என்ற நினைப்பில் வந்த உஷ்ணமூச்சால் மண்டனமிச்ரர் கழுத்தில் இருந்தமாலை வாடத் துவங்கியது. சரஸ்வாணி திகைப்படைந்தாள். முழுதும் வாடினால் தன் கணவர் தோற்றவராவர். எனவே குறுக்கிட்டு இல்லற தர்மப்படி எங்கள் இருவரையும் வென்றால்தான் நீங்கள் வென்றதாகும் எனக்கூறி கணவரை எழுப்பி அந்த இடத்தில் தான் அமர்ந்தாள். போட்டி தொடர்ந்தது. வேதம், வேதாந்தம், சாஸ்திரம், சம்பிரதாயம், இதிகாசம், புராணம், கணிதம், ஜோதிடம் எனறு ஆய கலைகள 64- கிலும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் இருபக்கமும் சரியாக வந்தன. 15 நாட்கள் முடிவில்லாமல் போட்டி தொடர சங்கரர் ஞானக்கண்ணால் தன் முன்னே அமர்ந்திருப்பது சரஸ்வதி என்பதை அறிந்தார். நெற்றியில் வியர்வை படர்ந்தது. போட்டியில் சங்கரர் வென்றால் தன் கணவர் துறவறம் ஏற்கவேண்டும் என்பதால் துறவியிடம் கேட்ககூடாத இல்லற இன்பம் என்றால் என்ன என்று கேட்டாள்.

திகைத்த சங்கரர் ஞானதிருஷ்டியால் பதில் சொல்லமுடியும். ஆனால் மக்களுக்கு அவரது துறவு நிலையில் சந்தேகம் வரும். பதில் சொல்லவிடில் வாதத்தில் தோற்றதாக ஆகும். ஒரு ஞான வித்திடம் சந்நியாசியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டோமே, இது எத்தனை பெரிய பாவம் என நினைத்த சரஸவாணி ஒரு மாதம் தவணை தருகிறேன் அதற்குள் பதிலைத் தெரிந்து கொண்டு வாருங்கள் என்றாள். சங்கரர் சீடர் பத்மபாதர் மற்ற சீடர்களுடன் கானகம் சென்றனர்.

அமருகன் என்ற மன்னனின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து அரண்மனைக்குச் சென்று தன் ஆத்மாவின் தூய்மைக்கு பாதிப்பு இல்லாமல் அரசாண்டார். மதுவும் மங்கையுமாக இருந்த மன்னனிடம் மாற்றம் கண்டவர்கள் அதை வரவேற்றார்கள். அமைச்சர்களுக்கு தங்கள் மன்னன் முன்னைவிட அதி புத்திசாலித்தனமாக செயல் படுவது கண்டு சந்தேகம் வர ஒற்றர்களை அனுப்பி விவரம் சேகரித்து சங்கரர் உடல் இருந்த இடத்தைக் கண்டு உண்மை புரிந்து நாடு நலமுடன் இருக்க மன்னரின் உடலில் சங்கரர் இருப்பது அவசியம் என்று சங்கரரின் உடலுக்கு தீ வைத்தனர். சீடர்கள் அலறியடித்துக் கொண்டு வர, அதே சமயத்தில் மன்னன் உடலிலிருந்து தன் உடலுக்கு கூடுவிட்டு கூடு பாய்ந்தார் சங்கரர். அதற்குள் ஒரு கை தீயினால் வெந்து கருகியது. பத்மபாதர் விருப்பப்படி லஷ்மிநரம்மர் துதிபாட கருகிய கை மீண்டும் ஒளிபெற்றது. 

ஒரு மாதத்திற்குள் சரஸவாணியின் கேள்விக்கு விடை அறிந்து திரும்பிவந்து கூற மண்டனமிச்ரர் நிபந்தனைபடி துறவியாகி சங்கரர் பின் சென்றார். மண்டனமிச்சர்ருக்கு சுரேச்வராசாரியார் என்று திரு நாமத்தை சூட்டினார் சங்கரர்.

கண்ணீர்மல்க கணவருக்கு விடைகொடுத்த சரஸவாணி தான் பிரம்ம லோகம் செல்வதகாச் சொன்னாள். சங்கரர், தாயே நான் பின்னாளில் சிருங்கேரியில் சாரதா மடம் நிறுவும்போது அங்கு நீ சாரதாதேவியாக அருள்பாலிக்க வேண்டினார். சரஸ்வாணி சந்தோஷத்துடன் பிரம்ம லோகம் சென்றாள். 

#####

வியாழக்கிழமை, 19 July 2018 19:02

குபேரன்சபை- 12 ராசிக்குரியவர்!

ஓம்நமசிவய!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
####

குபேரன்சபை- 12 ராசிக்குரியவர்.

குபேரன்!

பிரம்மாவின் பேரன் விஸ்வராவின் முதல் மனைவி, பரத்வாஜ மகரிஷியின் மகள் இத்விதாவின் மகன் வைஸ்ரவணன்- குபேரன். சிறிய வயதில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்.

முற்பிறவியின் காரணமாக விச்ரவஸ் முனிவர் ஒர் அரக்கியை திருமணம் செய்ய வேண்டிவந்தது. அக்காலத்தில் முனிவர்கள் தவம் செய்யும்போது யாராவது வரமாக கேட்டால் கேட்பதை கொடுக்கவேண்டும் என்பது நியதி. அப்படி அவர் தவமிருக்கும்போது கேசகி என்ற அரக்கி தன்னை மணம் புரிந்துகொள்ள வேண்டும் என வரம் பெற்றதனால் இரண்டாவது மனைவி கேசகி என்ற கைகசியிக்கு இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற மகன்களும் கும்பாஷினி-சூர்ப்பனகை என்ற மகளும் பிறந்தனர்.

முனிவர்கள் வம்சத்தில் தந்தையின் மரபினையும் அசுர இனத்தில் தாயின் மரபை பின்பற்றுவது வழக்கமாக இருந்ததால் வைஸ்ரவணன் ரிஷியின் வம்சம் ராவணனும் அவன் உடன் பிறப்புகளும் அசுர வம்சமாகியது. எப்படியிருப்பினும் இலங்கேஸ்வரன் இராவணின் அண்ணன் வைஸ்ரவணன். முறைப்படி வைஸ்ரவணனுக்கு இலங்காபதியாக மகுடம் சூட்டியது இராவணனுக்கு பிடிக்கவில்லை.

தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதிய இராவணன் தவம் செய்து ஈசனை மகிழ்வித்து கிடைத்த வரத்தின் சக்தியால் வைஸ்ரவணனை தோற்கடித்து இலங்கையையும், தேவேந்திரன் வைஸ்ரவணனுக்கு கொடுத்த புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினான்.

மகாலட்சுமியிடம் சிவன் எல்லா தேவர்களின் நிதிக்குவியல்களையும் அளித்து அதை பரிபாலனம் செய்யுமாறு சொல்ல லட்சுமி எனக்கு நிதி நிர்வாகம் செய்ய ஒருவர் வேண்டும் என வேண்டினாள். நாரதர் ஆலோசனைப்படி வைஸ்ரவணனும் கடுந்தவம் செய்து சிவனை மகிழ்விக்க தேவர்களின் பொக்கிஷத்தை கவனிக்கும் பொக்கிஷதாரனாக்கிய சிவன் வைஸ்ரவணனுக்கு குபேரன் பட்டம் அளித்தார். கு என்றால் குரு, செல்வம், பேரன் என்றால் நிர்வாகம் செய்பவன். குபேரன் செல்வத்தை நிர்வாகம் செய்பவன். சிவன் எதிரில் தோன்றி காட்சியளிக்க வேண்டுவனவும் உண்டோ என ஒன்றும் கேட்காமல் ஆனந்தமான திருமுக மண்டலத்துடன் இருக்க, சிவன் அவரை வடக்கு திசைக்கு அதிபதியாக்கி மலையடிவாரங்களில் வாழும் யட்சர்களின் தலைவனாக்கினார்.

வைஸ்ரவணன் மீண்டும் தவம் செய்து ஈசனே என்னை நெறிப்படுத்த தாங்கள் எப்போதும் என்னோடு இருக்க வேண்டும் என வரம் கேட்டுப் பெற்றதால் குபேரனோடு எப்போதும் சிவசாந்நித்யம் நிறைந்திருக்கின்றது என்பதால் சிவ வழிபாட்டில் குபேரனுக்கும் சேர்த்து ஆரத்தி. எனக்கான பூஜைகளில் ஆரத்தி காட்டும்போது உன்பெயரைச் சொல்லி ஆராதிக்கும் ஆகமத்தை ஏற்படுத்தி, குபேரனை வழிபடுவோருக்கு சந்தான பாக்யமும், தனபாக்யமும் கொடுக்கும் விசேஷ வரத்தை அளித்தார்.

ஓம் ராஜதிராஜாய ப்ரசஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸமே காமான் காம காமாய மஹ்யம்
காமேச்வரோ வைச்ரவணோ ததாது
குபேராய வைச்ரவணாய மஹாராஜாய நம! எனச் சொல்லி ஆரத்தி காட்டுவர்.

அதாவது எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியான வைச்ரவணனே விருப்பங்களை நிறைவேற்றி வைக்கக்கூடியவரே, எனது நியாமான கோரிக்கைகளை இறைவனிடம் சொல்லி ஈடேற அருள் செய்ய உம்மை வேண்டி வணங்குகின்றேன் என்பதாகும்.

திருமகள் எப்போதும் குபேரனினின் இருப்பிடத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் அளாகாபுரியில் அளவற்ற செல்வம் நிறைந்து இருக்கின்றது. குபேரனுடன் லட்சுமிகரம் அதாவது லட்சுகடாட்சம் நிறைந்திருப்பதால் அதனைக் குறிப்பிடவே குபேர லட்சுமி படம். எந்த வீட்டில் தீபங்கள் ஏற்றுகின்றார்களோ அந்த சமயத்தில் குபேரன் லட்சுமியை குப்பிடுவான். அதனால் வீட்டில் தினமும் விளக்கு ஏற்றினாலே அங்கே லட்சுமி கடாட்சத்துடன் சிவபக்தன் குபேரன் சதாகாலமும் சிவனை துதிப்பதால் சிவ அருளும் நிறையும்.

யட்சர்கள் மனிதர்கள் போலவே உருவம் கொண்டவர்கள். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோருக்கும் நன்மை செய்ய விரும்புவர்கள். அன்பும் தெய்வ நம்பிக்கையும் கொண்ட இவர்களின் சக்தி அசாத்தியமானது. இவர்கள் மனித குலத்தின் நண்பர்கள். இந்த யட்சர் கூட்டத்தின் தலைவன் குபேரன். குபேரபண்டாரி- பொக்கிஷக்காரன், சிவமித்திரன், வடதிசை ரட்சகன் என்ற பெயர்களும் உண்டு.

ஒரு சிட்டிகை விபூதி ஏன்!

குபேரன் சிறந்த சிவ பக்தன். குபேரன் சிவத்தலங்களுக்கு சென்று பூஜைசெய்து வழிபட்டு வந்தான். ஒருநாள் சிவன் காட்சி கொடுக்க தான் விரும்பும் போதெல்லாம் தரிசிக்க வரம் கேட்க மகிழ்ந்தார் சிவன். யாருக்கும் கிடைக்காத இந்தப் பேறு தனக்கு கிடைத்திருப்பது பற்றிய பெருமிதத்தினால் நாளடைவில் கர்வம் கொண்டான். நாரதரை சந்தித்த குபேரரை அவர் குழப்பிவிட ஒரு பிரயோஜனமும் இல்லாத இந்த வரத்தை தாம் ஏன் கேட்டோம் என நினைத்தான்.

அடுத்தமுறை இறைவனை சந்தித்தபோது அன்று ஏதாவது வரம் வேண்டுமா என்றீர்கள். இந்த உலகத்தில் உள்ள சொத்துக்கள் எல்லாம் எனக்கு வேணும் எனகேட்க அவ்வாறே என சிவன் அருளினார். எல்லா சொத்துமே எனக்குன்னா உங்க சொத்தான பார்வதியும் எனக்குத்தானே சொந்தம் என்ற குதர்க்கத்தைக் கேட்ட பார்வதி ஈன புத்தியுள்ள உன் உடல் ஷீனம் அடைய என்று சாபம் கொடுத்தாள். உருக்குலைந்த குபேரன் பூவுலக சிவத்தலங்களுக் கெல்லாம் சென்று தன்னை மன்னிக்க வேண்டினான்.

பல காலத்திற்குப்பின் இத்தலத்தில் ஈசன் அவனை மன்னித்து ஒரு சிட்டிகை விபூதி அளிக்க அதை அவன் ஓர் சிமிழில் வைத்து பூஜை செய்து வந்தான். உரிய காலம் வந்ததும் உலகத்து செல்வம் எல்லாவற்றிற்கும் அவனே அதிபதி என்றார் எம்பெருமான். ஒரு சிட்டிகை விபூதி உலகத்து சொல்வம் எல்லாம் தரவல்லது என்பதால்தான் கோவிலில் பூஜை முடிந்ததும் ஒரு சிட்டிகை விபூதி பிரசாதம் தரப்படுகின்றது. அதை உபயோகிக்கும் பக்தர்களைப் பொருத்தது அதன் மகிமை.—விழுப்புரம் கைலாசநாதர்.

குபேரனுடைய மனைவி மனோரமா. குபேரனுடைய சேவகர்கள் குஹ்யகர்கள் எனப்படுவர். குபேரனின் அவைக்கு விழல் என்று பெயர். புஷ்பக விமானம் வைத்திருப்பவன். கையிலையின் நடுவில் உள்ள நிதிபதி என்று பெயரைவுடைய குபேரனின் அனகாபுரி-குபேரபுரிக்கு அவர் நண்பரான சிவபெருமான் அடிக்கடி வருவார். குபேரன் தன்னுடைய ரத்தினசபையில் வெண்ணிற ஆசனத்தில் மனைவியுடன் அமர்ந்திருக்க அவனைச் சுற்றி நவநிதி தேவதைகள் இருக்க சங்கநிதியும் பதும நிதியும் குபேரனை வணங்கியபடி நிற்கின்றன.

மீண்டும் குபேரன் அம்பாளை நோக்கி கர்நாளி என்ற இடத்தில் தவமிருந்து இராவணனிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றான். கர்நாளி குபேரன் கோவிலில் குபேரன் படமில்லை. லிங்கமும் பார்வதியின் விக்ரமும் உள்ளது.குஜராத்-பரோடாவிலிருந்து 60 கி.மீ.

செல்வங்களுக்கு அதிபதி குபேரன். அவன் லட்சுமி கடாட்சம் பெற்றவர். அஷ்ட ஐஸ்வர்யத்தையும், பதினாறு வகை செல்வத்தையும் அளிப்பவர். எனவே செல்வம் ஒருவனை அடைய தீபாவளி திருநாளுக்கு அடுத்தநாளன்று லட்சுமி குபேர பூஜை செய்வது நலம். குபேர பூஜை காலத்தில் நவநிதி சேவை எனும் வழிபாட்டினை செய்வது மேலும் சிறப்பு. லட்சுமி குபேர பூஜையுடன் குபேரருக்கு நாணய வழிபாடும் செய்யலாம். பொதுவாக வியாழக்கிழமை மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரை உள்ள நேரம் குபேரகாலம் எனப்படும். அல்லது வெள்ளிக்கிழமையும் செய்யலாம்.

இந்த பூஜை முறைகளை பிரம்மாவிடமிருந்து அவர் மகன் புலஸ்திய மகரிஷிக்கும் பின்னர் அவர் பேரனுக்கு இரகசிய முறையில் கற்றுத்தரப்பட்ட விதிகளை நாரதர் பூவுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இரகசிய பூஜை முறை ‘மூர்த்தி இரகசியம்’ எனப்படும். சிந்தாமணி சிந்தையில் விரும்பியதைத் தரும் குபேரசிந்தாமணி மந்திரம் ஆகும். ஒரு தெய்வத்தின் மூர்த்தி ரகசிய பூஜையினை தெரிந்து வழிபட்டால் அத்தெய்வத்தின் அருளை விரைவில் பெறலாம்.

குபேரபூஜை
ஒன்பது வாரம் தொடர்ந்து அல்லது ஒன்பது மாதங்கள் குறிப்பிட்ட தினத்தில் செய்ய வேண்டிய பூஜை இது. ஆண், பெண் இருபாலரும் செய்யலாம். யார் செய்தாலும் தொடர்ந்து அவரே செய்வது சிறப்பு. தொடர்ந்து செய்கையில் ஏதாவது காரணத்தினால் செய்ய இயலவில்லையென்றால் குடும்பத்தில் உள்ள வேறு ஒருவர் செய்யலாம். எல்லா பூஜைகளிலும் குடும்ப உருப்பினர்கள் கலந்து கொள்வது நலம் பயக்கும். ஒவ்வொரு பூஜைக்கும் ஒரே மதிப்பிலான காசுகள் ஒன்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் எடுத்த மதிப்புள்ள காசுகளையே அடுத்த பூஜைகளுக்கும் பயன் படுத்த வேண்டும் மொத்தமாக சம் மதிப்புள்ள எண்பத்தொரு காசுகள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நவநிதி சேவை- அதிகாலை எழுந்து குளித்து பூஜை அறையை சுத்தம் செய்து லட்சுமி குபேரர் படத்தை வைத்து அதன் முன் குபேரன் கோலம் போடவேண்டும். பூஜை தடையின்றி நடைபெற மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து கணபதியையும் குல தெய்வத்தையும் வழிபடுங்கள். பிறகு நல்ல நேரத்தில் ஒரே அளவுடைய ஒன்பது கலசங்களில் உள்ளே சிறிது ஏலக்காய் பச்சைக் கற்பூரம் போட்டு பாதியளவு தண்ணீர் ஊற்றி நூல் சுற்றி மாவிலை, தேங்காய், சந்தனம், குங்குமம், பூச்சரம் வைத்து குபேரன் கோலம் போட்ட கட்டத்திற்குள் வைக்கவும். அந்த கட்டத்திற்குள் ஒரு கட்டத்திற்கு ஒன்றாக ஒன்பது காசுகளையும் வைக்கவும். பூஜை அறையில் சுவஸ்திக் கோலம் போட்டு அதன்மீது வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் மேல் நடுவே குபேரனுக்கு தனி கலசம் அலங்கரித்து வைத்து இரு பக்கமும் குத்து விளக்கேற்றி 1.சங்க நிதி, 2.பத்ம நிதி, 3.மகாபத்ம நிதி, 4.சங்காக்ய நிதி, 5.மகராக்ய நிதி, 6.சுகச்சப நிதி, 7. குமுதநிதி-முகுந்த நிதி, 8.குந்தாக்ய நிதி, 9.நீல நிதி ஆகிய ஒன்பது நிதியங்கள் என்ற நவநிதி பெயர்களைச் சொல்லி நவநிதிகளையும் குபேரனையும் அந்த கலசங்களில் எழுந்தருளச் செய்து லட்சுமி குபேர மந்திரங்களை செல்லி வணங்கவும். இதில் ஸ்வர்ணம்-பொன், ரஜதம்-வெள்ளி, வைரம், வைடூரியம் எல்லாம் அடங்கும். குத்துவிளக்கு ஏற்றும்போது மங்களகரமான தீபத்தில் ஜோதியாய் வீற்றிருக்கும் மகாலட்சுமி தாயே உன்னை மனதார வணங்குகின்றோம். எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருகி, மங்காத செல்வங்கள் சேர அருள் புரிவாய் தாயே என வேண்டி ஏற்றவும்.

ஓம் ஸ்ரீம் வசுதே வசுதாரே வசுகரி
நவகரி தான்யகரி ரத்னகரி ஆவாஹயாமி என்ற ஸ்லோகத்தை மும்முறை கூறி

ஓம் நிதி ரூபாய வித்மஹே
நித்ய மங்களாய தீ மஹி
தந்தோ குபேர ப்ரசோயாதயாத்! என்ற காயத்ரியை மூன்று முறை கூறவும்.

பின்னர் கற்பூரதீபம் காட்டி ஆராதனை செய்யவும். நிவேதனமாக அவல் பாயாசம், லட்டு. கேசரி. சர்க்கரை அன்னம் ஆகியவற்றில் ஒன்றும் ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, கொய்யா, திராட்சை ஆகிய பழங்களையும் வைக்கலாம். இறுதியில் மங்கள ஆரத்தி செய்து பூஜை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை முடிந்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை தட்சனைகளூடன் ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. வசதி குறைவின் ஒன்பதாவது வாரமுடிவில் கொடுத்தாலும் போதும்.

எல்லா கலசங்களின் நீரை ஒன்று சேர்த்து சிறிதளவு எல்லோரும் உட்கொள்ளலாம். பின்னர் வீடு முழுவதும் மாவிலையால் அந்த நீரை தெளிக்க வேண்டும். பூஜையில் வைக்க வேண்டிய குபேர கட்டம்.

 

 

 

ஸ்ரீ

 

 

 

27

20

25

 

ஸ்ரீ

22

24

26

ஸ்ரீ

 

23

28

21

 

 

 

ஸ்ரீ

 

 

 

 

இராசிகள்

அதிபதி

நண்பர்கள்

பகைவர்கள்

மேஷம்

செவ்வாய்

தனுசு,கும்பம்,மீனம்

ரிஷபம்,மிதுனம்,கடகம்,கன்னி, விருச்சகம்,மகரம்

ரிஷபம்

சுக்கிரன்

மிதுனம்,விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்

கடகம்,சிம்மம்

மிதுனம்

புதன்

கடகம்,துலாம்,விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்,ரிஷபம்

சிம்மம்

கடகம்

சந்திரன்

கன்னி,தனுசு,மீனம்,மிதுனம்

சிம்மம்,துலாம்,மகரம்,கும்பம்,மேஷம்

சிம்மம்

சூரியன்

தனுசு,கும்பம்,மீனம்

கன்னி,விருச்சகம்,மகரம், ரிஷபம்,மிதுனம்,கடகம்

கன்னி

புதன்

துலாம்,விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்,ரிஷபம்,கடகம்

சிம்மம்

துலாம்

சுக்கிரன்

விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்,மிதுனம்

கடகம்,சிம்மம்

விருச்சகம்

செவ்வாய்

ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலாம்

தனுசு,கும்பம்,மீனம்,சிம்மம்

தனுசு

குரு

கும்பம்,ரிஷபம்,மிதுனம்,சிம்மம், கன்னி,துலாம்

மேஷம்,விருச்சகம்

மகரம்

சனி

மீனம்,ரிஷபம்,மிதுனம்,கன்னி, தனுசு

கடகம்,சிம்மம்,விருச்சகம்

கும்பம்

சனி

மீனம்,ரிஷபம்,மிதுனம்,கன்னி, தனுசு

கடகம்,சிம்மம்,விருச்சகம்

மீனம்

குரு

ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,கன்னி, துலாம்,கும்பம்

மேஷம்,விருச்சகம்

 

பூமி சூரியனைச் சுற்றிவரும் நீள்வட்டப் பாதையை 12 ஆகப் பிரித்து அவற்றை ராசிகள் என்பர். 360 டிகிரியில் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி. முதல் ராசி மேஷம் 0 டிகிரியில் தொடங்கும். இதன்படி சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் மாதம் சித்திரை. இது இளவேனில் காலம். எனவே இதிலிருந்து தமிழ் மாதங்கள் ஆரம்பிக்கும்.


சங்கராந்தி:
சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு நுழையும் வேளையே சங்கராந்தி-இதுவே மாதப் பிறப்பும் ஆகும். 12 ராசிக்கு 12 சங்கராந்திகள்
1.தான்ய சங்கராந்தி-சித்திரை-சூரியன் மேஷ ராசியில் நுழையும் வேளை.
2.தாம்பூல சங்கராந்தி-வைகாசி-சூரியன் ரிஷப ராசியில் நுழையும் வேளை.
3.மனோதர சங்கராந்தி-ஆனி-சூரியன் மிதுன ராசியில் நுழையும் வேளை.
4.அசோக சங்கராந்தி-ஆடி-சூரியன் கடக ராசியில் நுழையும் வேளை.
5.ரூப சங்கராந்தி-ஆவணி-சூரியன் சிம்ம ராசியில் நுழையும் வேளை.
6.தேஜ சங்கராந்தி-புரட்டாசி-சூரியன் கன்னி ராசியில் நுழையும் வேளை.
7.ஆயுள் சங்கராந்தி-ஐப்பசி-சூரியன் துலாம் ராசியில் நுழையும் வேளை.
8.சௌபாக்யசங்கராந்தி-கார்த்திகை-சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் வேளை
9.தனுஷ் சங்கராந்தி-மார்கழி-சூரியன் தனுசு ராசியில் நுழையும் வேளை.
10.மகர சங்கராந்தி-தை-சூரியன் மகர ராசியில் நுழையும் வேளை.
11.லவண சங்கராந்தி-மாசி-சூரியன் கும்ப ராசியில் நுழையும் வேளை.
12.போக சங்கராந்தி-பங்குனி-சூரியன் மீன ராசியில் நுழையும் வேளை.

12 இராசிகளும் இராசி புருஷனின் அவயங்களாக கருதப்படும்.
மேஷம்- சிரம்
ரிஷபம்– முகம்
மிதுனம்- கைகள்
கடகம்- இதயம்
சிம்மம்- வயிறு
கன்னி- அரை/இடுப்பு
துலாம்- வஸ்தி
விருச்சகம்-லிங்கம்
தனுசு- துடைகள்
மகரம்- மூட்டு
கும்பம்- கணுக்கால்
மீனம்- பாதம்

1 முதல் 60 வரை இராசியைப் பிரித்து அதில் இனைந்திருக்கும் கிரங்களை வைத்து தனித்தனி பலனை ஒன்று சேர்த்து சொல்வது இராசி பலனாகும். தனி மரம் தோப்பாகாது என்பது போல் இராசியின் ஒரு சிறு பகுதி மட்டும் ராசி பலனாகாது. தானியத்தின் குவியல் போன்றது ராசி பலன்கள். காடு என்றால் பல மரங்களின் தொகுப்பு என்பதுபோன்றே இராசி என்பதும் சரம், ஸ்திரம், உபயம், பகல்ராசி, இரவுராசி, ஒற்றைப்படைராசி, இரட்டைப்படைராசி, ஜலராசி, மனுஷ்யராசி, விலங்கினராசி, ஊர்வனராசி, பறப்பனராசி என அதன் பிரிவுகள் விரிந்திருக்கின்றது. பலன்கள் சொல்லும்போது ராசியின் திசைகள், ராசியின் மாறுபட்ட இடங்கள், லக்னராசி, சந்திரன் இருக்கும் ராசி, அவர்களின் அதிபதிகள் இருக்கும் ராசி, சந்திர லக்ன அம்சகராசி, லக்னாம்சகராசி ஆகியவற்றை இணைத்துச் சொல்லப்படும். கேந்திரம், த்ரிகோணம், உபசயம், அபசயம் போன்ற நிலைகள், அதில் இணையும் கிரகங்கள் ஆகியவற்றையும் சேர்த்து பலனில் சொல்வதால் ராசியின் விரிவாக்கம் துல்லியமான பலனை தேட உதவும்.

ஒரு ராசியில் பிறந்தவனின் இயல்பு மற்றும் உணவு தென்படும் வகையில் இராசிக்குரிய உயிரினங்கள் சொல்லப்பட்டுள்ளன. பிறந்தவனின் இயல்பையும் செயல்பாட்டையும் முடிவு செய்ய இராசிகள் உதவும். இராசியை வழிபட்டால் அத்தனை கிரகங்களையும் வாணங்கியதாகும். பிறந்த நட்சத்திரத்தை வழிபடும்போது இராசியையும் சேர்த்து வழிபடுதல் சிறப்பு.

குருபகவான் தவமிருந்து பிரம்மாவிடமிருக்கும் புஷ்கரத்தைக் கேட்டார். புஷ்கரம் பிரம்மாவிடமே இருக்க விரும்பியது. அதனால் பிரம்மன் விருப்ப்ப்படி 12ராசிகளில் அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளில் குருபிரவேசிக்கும் காலத்தில் இருக்க ஒப்புக்கொண்டது. இந்தக் காலத்தில் புண்ணிய நதிகளில் நீராடல் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மூன்றரைக் கோடித் தீர்த்தங்களில் நீராடிய பலனைத் தரும். இந்தக் காலம் பூஷ்கரணி தீர்த்த நீராடல் ஆகும்.

மேஷம்-ஆடு- காரமான கொஞ்சம் சூட்டுடன் கூடிய உணவில் விருப்பம். மேஷராசியானால் (மேஷலக்னமாக அல்லது சந்திர லக்னமாக இருந்தாலும்) நான்கு கால் பிராணிகள் போல் நடைப்பயணத்தில் விருப்பம். அவசர அவசரமாக உண்பான். நீரில் பயம் இருக்கும். அளவிற்கு அதிகமான ஆசை இருக்கும். தன்னை தூய்மை படுத்த அக்கறை காட்டமாட்டான்.மேஷம்- ராசிக்குரிய மூலிகை- வைகுண்ட மூலிகை. ராசிக்குரிய புனித நதி. கங்கை

ரிஷபம்–மாடு- புல்லை உணவாக விரும்பும். இது லக்னமானால் பயணத்தில் வேகம் இருக்காது. மெள்ள நடப்பான். பாரத்தை சுமப்பான். துயரங்களைப் பொறுத்துக் கொள்வான். உடல் உழைப்பில் சளைக்க மாட்டான். உட்கொண்ட உணவு ஜீரணிக்கும்படியான அக்னி பலமுண்டு.ரிஷபம்- ராசிக்குரிய மூலிகை- அம்மான் மூலிகை.ராசிக்குரிய புனித நதி.நர்மதை

மிதுனம்-மனிதன்- அரிசி கோதுமை விருப்பம். மிதுனம்- ராசிக்குரிய மூலிகை- அற்ற இலை ஒட்டி.ராசிக்குரிய புனித நதி.சரஸ்வதி

கடகம்-நண்டு- மீனை விரும்பும் கடகம்- ராசிக்குரிய மூலிகை- நத்தை சூரி.ராசிக்குரிய புனித நதி.யமுனை

சிம்மம்-சிங்கம்- மிருகங்களை விரும்பும்  சிம்மம்- ராசிக்குரிய மூலிகை- ஸ்ரீவிஷ்ணு மூலிகை.ராசிக்குரிய புனித நதி.கோதாவரி

கன்னி-ஓடத்தில் அமர்ந்துள்ள கன்யகைப் பெண்- கன்னி- ராசிக்குரிய மூலிகை- துளசி.ராசிக்குரிய புனித நதி.கிருஷ்ணா

துலாம்-தராசு துலாம்- ராசிக்குரிய மூலிகை- செந்நாயுருவி.ராசிக்குரிய புனித நதி.காவிரி

விருச்சகம்-தேள்.விருச்சகம்- ராசிக்குரிய மூலிகை- மஞ்சை கிலுகிலுப்பை.ராசிக்குரிய புனித நதி.தாமிரபரணி

தனுசு-வில் தனுசு- ராசிக்குரிய மூலிகை- சிவனார் மூலி.ராசிக்குரிய புனித நதி.சிந்து

மகரம்-மகரமத்ஸம்.மகரம்- ராசிக்குரிய மூலிகை- யானை வணங்கி.ராசிக்குரிய புனித நதி.துங்கபத்ரா

கும்பம்-குடம்.கும்பம்- ராசிக்குரிய மூலிகை- தகரை மூலிகை.ராசிக்குரிய புனித நதி.பிரமபுத்ரா

மீனம்-இரண்டு மீன்கள். மீனம்- ராசிக்குரிய மூலிகை- குப்பைமேனி.ராசிக்குரிய புனித நதி.பிரணீதா.

 


#####

செவ்வாய்க்கிழமை, 17 July 2018 20:40

ஞான பண்டிதன் சபா!

ஓம்நமசிவய!

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

####

ஞான பண்டிதன் சபா!

முருகன்!

சனத்குமாரர் கண்ட கனவு!

பிரம்மாவின் மானசீக புத்திரரான சனத்குமாரர் ஒரு வித்தியாசமான கனவு கண்டார். அதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடப்பதாகவும் அதில் தேவர்கள் சேனாபதியாகத் தான் நின்று அசுரர்களை அழிதத்தாகவும் கண்டார். இது பற்றி தந்தையிடம் வினவ, பிரம்மா, நீ பூர்வ ஜென்மத்தில் தேவாசுரப் போரில் சேனாதிபதியாக இருந்து தேவர்களைக் கொடுமைப் படுத்தும் அரக்கர்களை அழிக்க வேண்டும் என நினைத்தாய். அந்தப் பிறவியின் எண்ணங்கள் பிரதிபலித்ததே இந்தக் கனவு. இந்த ஜென்மத்தில் நீ பிரம்ம ஞானியாய் இருப்பதால் இன்னொரு ஜென்மத்தில் அந்த எண்ணங்களும் அதனால் உண்டான இந்தக் கனவும் நிறைவேறும் என்றார். சனத்குமாரர் தொடர்ந்து தியானத்திலேயே இருந்ததால் கனவைப் பற்றி நினைக்க வில்லை. ஆனால் காரண கர்த்தாவான சிவன் நினைத்தார்.

ஈசன் கேட்ட புத்திர பாக்கியம்!

சதச்ருங்க மலையில் விஷ்ணு அம்சம் கொண்ட சனத்குமாரர் ஈசனைக் குறித்து தவம் செய்ய அவருக்கு அம்பிகையுடன் காட்சி கொடுத்தும், தியானத்தினால் சகலமும் பிரம்மமாகக் காட்சி அளிக்கும் நிலையில் ஈஸ்வர தரிசனத்தை உணராத நிலையில் சனத்குமாரர் காட்சி கொடுத்தவர்களை பூஜிக்கவில்லை. தியானம் என்றால் அப்படியொரு தியானம். சிவன் தன் கையிலிருந்த ‘டமரு’ என்ற உடுக்கையில் ஒலி எழுப்ப சனத்குமரர் கண் திறந்து பார்த்து வணங்கினார். சிவன் தன்னை பூஜிக்காததால் சபித்துவிடப்போவதாக கோபம் கொண்டவர் போல கூற, சனத்குமாரர் “உம் சாபம் என்னையோ என் ஆன்மாவையோ பாதிக்காது” என்றார். அவரது ஞானத்தை அறிந்த சிவன் இந்தப் பிறவியில் பிரம்ம புத்திரராக பிறந்த அவரை இன்னொரு ஜன்மத்தில் தன் புத்திரானாக பிறக்க கேட்டுக் கொள்ள சனத்குமாரர் சம்மதம் தெரிவித்தார். எத்தனையோ பேருக்கு புத்திர பாக்கியம் அருளும் ஈசன் தனக்கு கேட்ட புத்திர பாக்கியம் இது.

பிரம்மபுத்திரன்-சிவபுத்திரன்!

ஈசனோடு எழுந்தருளியிருக்கும் தன்னைப் பார்த்து சனத்குமாரர் ஏதும் கூறாததால் உமை வருத்தமுற்றதை உணர்ந்த சனத்குமாரர், “கேட்காதவர்களுக்கு எதையும் தரக்கூடாது” என்கிறது சாஸ்திரம். எனக்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும் என்று ஈசன் மட்டும் கேட்டார், தேவி கேட்கவில்லை, அதனால் ஈசன் மட்டும் என்னை உற்பவிக்கச் செய்து கொள்ளட்டும் என்றார் சனத்குமார். என்ன வித்தியாசமான வேண்டுகோள். தாயில்லாமற் பிள்ளையா! உடனே உமை “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனால் நான் கேட்காவிட்டாலும் நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்றாள். சனத்குமரர், ”எனக்கு ஸ்திரீபுருஷ சம்பந்தத்தில் பிறப்பதில் விருப்பமில்லை. உங்கள் பதி மட்டுமே என்னை ஜனிக்கச் செய்யட்டும்” என்றார். இதைக் கேட்ட சிவன் புன்னகைக் கொண்டார். அவருக்குத் தெரியும். இது முன்கூட்டியே நிர்ணயக்கப் பட்டது என்று.

தேவர்கள் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபம்!.

பிரம்மாவிடம் பெற்ற வரத்தின்படி பார்வதி தன் கருமை நிறம்மாறி பொன்னிற மேனியாளாக வர சிவனும் பார்வதியும் ஆனந்தமாக இருக்க உலகம் இருண்டது. பார்வதி பரமேஸ்வரருக்கு குழந்தை பிறந்தால் அது சொர்க்க ராஜ்யத்தைக் கைப்பற்றும் என்பதால் பயமுற்ற இந்திரன் தேவர்களுடன்கூடி ஆலோசனை செய்தான். உமா சங்கரின் ஏகாந்தத்தைக் கெடுக்க அக்னியை அன்னப் பறவை வடிவில் அனுப்பி தேவர்கள் வெளியில் காத்திருக்கும் தகவலைச் சொல்லச் சொன்னான். சிவன் வெளியில் வந்தார். உலகம் இருண்டு வருகிறது. தங்கள் மோகத்தை விடாவிட்டால் எல்லாம் தலைகீழாகும் என்றனர். புரிந்த காமேஸ்வரரான சிவன் என் வீர்யத்தை யார் சுமப்பர் எனக் கேட்க அக்னி அதற்கும் முன்வந்தான். இதனால் கோபமடைந்த பார்வதி தங்களின் தனிமையைக் கெடுத்த தேவர்கள் யாருக்கும் அவரவர் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபித்தாள்.

உமையின் வேண்டுகோள்!

கயிலையில் ஒர்நாள் பார்வதி சிவனை நோக்கி தங்களை நிந்தனை செய்த தட்சனின் மகளாகப் பிறந்து தாட்சாயணி என்ற பெயரை நான் சுமக்க விரும்ப வில்லை. இந்த தேகத்தைக் கரைக்க விரும்புகின்றேன் என்றாள். உன்னை மகளாக அடைய இமவான் தவமிருக்கின்றான். நீ அவனுக்கு மகளாய் பிறப்பாய். தக்க தருணத்தில் நான் உன்னை மணப்பேன் என்றார். இமவான் மகளாகப் பிறந்து பார்வதி என்று அழைத்து இமவான் ஆனந்தித்தனர். பார்வதி வயது வந்தவுடன் சிவனை நோக்கித் தவமிருந்தார்.

சிவன் பஸ்மாசூரனுக்கு வரம் கொடுத்து அவன் அதைச் சோதிக்க வந்தபோது அந்தர் தியானமானார். சிவனைக் கானாத உமை அவர் பிரிவால் வருந்தி உருகி ஓர் நீர் நிலையானாள். அந்த நீர் நிலையே சரவணப் பொய்கையாகும். தேவியின் சரீரமே சரவணப் பொய்கை. பாஸ்மாசுரனை மோகினி உருக்கொண்டு திருமால் அழித்ததும் ஈசன் வெளிப்பட்டார். தியானத்தில் இமயமலைச் சாரலில் ஓர் குடிலில் தவம் செய்ய அமர்ந்திருந்தார்.

சிவனார் இமயமலைச் சாரலில் தவம் புரிவதை அறிந்த பார்வதி அக்குடிலுக்குச் சென்று அவருக்கு இடையூறு செய்யாமல் பணிவிடை செய்ய விரும்பி தன் தந்தை இமவான் அனுமதியுடன் குடிலுக்குச் சென்று அவர் பாதங்களில் மலர்களைச் சமர்பித்து அருகிலேயே அமர்ந்திருந்தாள்..

பிரஜாபதிகள் பிரம்மனின் மானஸ புத்திரர்கள். இவர்களில் ஒருவரான காசியப முனிவர்-திதி என்ற பெண்ணின் வழியாகப் பிறந்தவர்கள் அசுர குலத்தவர்கள். அசுர குரு சுக்கிராச்சாரியாரால் ஏவப்பட்ட மாயை என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்கமுகன், யானைத் தலையுடைய தாரகன், ஆட்டின் தலைகொண்ட அஜமுகி(பெண்) முன் ஜென்மத்தில் சிவபெருமானால் கொல்லப்பட்ட தட்சனே மறு ஜென்மத்தில் சூரபத்மன்

சூரபதுமன், சிங்கமுகாசூரன், தாரகாசுரன் என்ற மூவரும் தேவர்களை எதிரியாகக் கொண்டு அவர்களை அழிக்க ஈசனை நோக்கித் தவமிருந்து சாகாவரம் வேண்டினர். சிவன் பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துதான் ஆகவேண்டும். அதனால் வேறு வரம் கேட்குமாறு கூறினார், உங்களுக்குச் சமமான ஒருவன், பெண் சம்பந்தமில்லாமல் தோன்றியவனால் மட்டுமே எங்கள் அழிவு ஏற்படவேண்டும் என்றனர். அவ்வாறே சிவ வரம் பெற்ற அசுரர்கள் அஷ்ட திக்பாலகர்கள், சூரியன், சந்திரன், தேவர்கள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்திரனும் இந்திராணியும் பூ வடிவெடுத்து மறைந்தனர். இந்திரன் மகன் ஜெயந்திரன் சிறைப்பட்டான். தேவர்கள் பெருமாளிடம் முறையிட்டனர்.

அப்போது ஈசன் தியானத்தில் இருப்பதை உணர்ந்த பெருமாள், ஈசனும் அன்னையும் தனித்தனியே தவமிருந்தால் வரம் பெற்ற சூரபதும சகோதர்களை சம்ஹாரம் செய்ய குமரன் தோன்றுவது எப்படி என ஆலோசித்து நாரதரின் யோசனைப்படி மன்மதனை அழைத்து சிவன்மீது மலர் பாணத்தை எய்யச் சொன்னார். முதலில் மறுத்த மன்மதன் உலக நன்மைக்காக தன்னிடமிருந்த தனது சேனைகளான வசந்தகாலம், இனிய நறுமனம், பூக்களின் மகரந்தப் பொடி, மிகிழ்ச்சிகரமான சூழல் ஆகியவை கொண்டு கயிலை வந்தான். அவன் வந்ததும் மலர்கள் பூத்து இனிமையான சூழல் உருவானது. கரும்பு வில்லை வளைத்து மலர் அம்பை சிவன்மேல் செலுத்தினான்.

யோக நிஷ்டை கலைந்த சிவன் கண்விழிக்க மன்மத பாணமகிமை மகேசனை மதிமயங்கச் செய்தது. கண் திரையில் பார்வதியின் அழகிய ரூபம் சிற்பமென தோன்றியது. பார்வதி இத்தனை அழகா என நினைத்தார் சிவன். மன்மதக்கணை காமத்தை ஊட்டியது. உடலைச் சிலிர்த்து திரும்பினார்.

தவம் கலைந்த சிவன் தன்னை திசை திருப்பிய மன்மதனை கோபத்தால் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தார். அருகிலிருந்த பார்வதி மயக்கமானாள். கணவனின் நிலைக் கண்ட ரதி அழுது புலம்பி வேண்ட ரதியே யாம் பார்வதியை மணக்கும்போது உன் கணவன் மன்மதன் உயிர்பெற்று எழுவான். அனங்கனாக- அங்கமில்லாதவனாக இருப்பான், உன் கண்களுக்கு மட்டும் தெரிவான். மேலும் துவாபரயுகத்தில் மன்மதன் ஸ்ரீகிருஷ்ணன்-ருக்குமணிக்கு பிரத்தியும்னன் என்ற பெயரில் மகனாக தோன்றும் போது அவனுக்கு உருவம் உண்டாகும். பிரத்தியும்னனை சம்பரன் என்ற அசுரன் கவர்ந்து செல்ல பிரதியும்னன் யுத்தத்தில் சம்பாசுரனை அழிக்க சம்பாசுரனின் மகளான மாயாவதியாகிய உனக்கும், பிரத்தியும்னனுக்கும் திருமணம் நடைபெறும் என அருளினார். மன்மதன் சாம்பலானதை அறிந்த தேவர்கள் வருந்தினர். சிவன் அந்தர் தியானமானார். விபரம் அறிந்த இமவான் தன் மகள் பார்வதியை தன் இருப்பிடத்திற்கு அழைத்துப் போனான்.

மகட்கொடை!

சிவனின் தவச்சாலையிலிருந்து வந்த பார்வதி தன் தவத்தை மீண்டும் தொடங்கினாள். ஒர் நன்னாளில் முதிய அந்தணர் வேடம்கொண்டு பார்வதியின் தவச்சாலைக்கு வந்த ஈசன் பார்வதியின் மனதைச் சோதிக்க எண்ணி ‘’சிவனார்க்கு தோலாடை, எருது வாகனம், பாம்பு ஆபரணம், தலை மாலையோ எழும்பு, பன்றிக்கொம்பு இவைகள் மட்டுமல்லாமல் உண்ணும் பாத்திரம் தலைஓடு, உணவோ பிட்சையும் விஷமும், ஆடுகின்ற இடமோ சுடுகாடு, போட்டுக்கொள்வதோ வெள்ளெருக்கு, அறுகு, கொன்றை, நொச்சி, ஊமத்தம்பூ மாலை, தலையில் கங்கை, கழுத்தில் பாம்பு, கையில் மான், மழு, சூலம், உடுக்கு, அக்னி என்று இருப்பவன். பூதங்கள் சூழ இருப்பவன். இன்னும் சொல்லப்போனால் தாயுமில்லை, தந்தையுமில்லை, உற்றார் உறவுமில்லை, குலம், குணம் எதையும் சொல்ல முடியாது. அநாதியானவன். மன்னன் மகளான நீ இவனை மறந்து என்னை மணந்துகொள் என்று தன்னைப்பற்றி தாமே சுயவிமர்சனம் செய்தார். சிவசிவ என காதுகளைப் பொத்திக்கொண்ட அழுத பார்வதிக்கு காட்சிதந்து விரைவில் உன்னை மணமுடிக்க வருவோம் என்று அருளினார்.

சிவன் சப்த ரிஷிகளை நினைக்கத் தோன்றிய அவர்களிடம் இமவானின் வீட்டிற்குப்போய் பெண்கேட்க அனுப்பிவைத்தார். இப்படி மணமகள் வீட்டிற்குப் போய் பெண் கேட்பதை மகட்கொடை என்று இலக்கியங்கள் பகர்கின்றன.

சப்த ரிஷிகளை வரவேற்ற இமவான் தன் சம்மதத்தை சந்தோஷத்துடன் தர மலையரையனிடம் சொன்னார்கள். மலையரையன்-சிவன் தேவர்கள், முனிவர்கள், தபஸ்விகள் எல்லோருக்கும் திருமணத் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்தார். பங்குனி உத்திர நன்னாளில் மணம் முடிக்க இமயமலைக்கு எழுந்தருளினார்.

இந்த திருமணத்தைக் காண அனைத்து புவனங்களிலிருந்தும் அனைவரும் அங்கு குழுமி விட்டதால் வடபாகம் தாழ தென்பாகம் உயர்ந்தது. சிவன் நந்தியிடம் அகத்திய மாமுனியை அழைத்துவரச் சொன்னார். அகத்தியரிடம் தென்நாடு சென்று இந்த தாழ்நிலையைச் சமன்செய்ய பொதிகைமலை மீது இருக்கக் கடவது என ஆணையிட்டார்.

அகத்தியர் அடியேன் இழைத்த குற்றம் என்ன! தங்களின் திருமணக் காட்சியைக் காணாமல் நான் எவ்வாறு இவ்விடம் விட்டு செல்வது என்றார். நீ சற்றும் சிந்தியாமல் பொதியமலைக்குச் எல் யாம் அங்கு எமது திருமணக் காட்சியை உமக்கு காட்சி அருளுவோம் என்றார். சிவனை வணங்கி அகத்தியர் பொதியமலை செல்ல தென்பால் நிலம் வடதிசை இரண்டும் சமன் பட்டு நின்றது. ரதிதேவி மன்மதனை அனங்கனாக உருவத்துடன் பார்த்தாள். மற்றவர்களுக்கு அருவமாக இருந்து தன் தொழிலை தொடர்ந்து செய்தான். அனங்கனாக உயிர்பெற்ற மன்மதன் வணங்கிய தலம் குத்தாலம்- மன்மதீஸ்வரர். சிவ-பார்வதி கயிலையை அடைந்தனர்.

கயிலையில் நந்தியம்பெருமான் அனுமதியுடன் பிரம்மா மற்றும் முனிவர்கள் தேவர்களது நிலையையும் அசுரர்களது அட்டகாசத்தையும் சிவபெருமானிடம் எடுத்துக் கூறினார்கள். முன்பு கூறிய வீரமகனை உருவாக்கும் நேரம் வந்ததை உணர்ந்தார் சிவன்.

உரிய காலத்தில் பரமேஸ்வர தேஜஸாக சனத்குமாரர் ஜனிப்பது என்றானதும் பார்வதிதேவிக்கு புத்திரனாகப் பிறக்காவிட்டாலும் ஈஸ்வர தேஜஸை நீர்நிலையாக மாறிய பார்வதியின் சரீரத்தில் தாங்கி சுப்பிரமண்ய செரூபமாகத் தருவது என முடிவானது.

சிவன் அம்ச ஆறுமுக முருகன்!

சிவனின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் ஞானிகள் பார்க்கும் ஞானமுகம் அதோமுகம் ஆகியவற்றிலிருந்து யாரும் அனுக முடியாத வெம்மையுடன் நெருப்பு பொறி தோன்றி ஞானம், வீரம், செல்வம், சித்தி, கருணை, இரக்கம் ஆகிய ஆறு பொறிகளாக சனத் குமாரர் தேஜஸாக ஜனித்து வெளிப்பட அக்னி பகவான் வாயுபகவான் இருவரும் அந்த தேஜஸை தாங்கும் சக்தியை இறைவனிடம் பெற்று தேஜஸை முதலில் கங்கையிலும் பின்னர் அன்னை நீர்நிலையாக இருந்த சரவணப் பொய்கையிலும் சேர்த்தனர். சிவன் அன்னை பார்வதியின் அம்சமான கார்த்திகைப் பெண்களை அழைத்து ஆறுவரையும் வளர்க்கச் சொன்னார். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன்.

சிவசக்தி ஐக்கிய நாள்! ஆறுமுகன் பிறந்தநாள்! தைப்பூச நன்னாள்!

அம்மையும் அப்பனும் ஆறு உருவங்களாக சரவணப் பொய்கையில் விளையாடிக் கொண்டிருந்த குழைந்தைகளைக் கண்டு மனம் மகிழ்ந்து அவர்கள் அறுவரையும் அணைக்க ஆறுமுகமும் ஓர் உடலுமாக ஆறுமுகப்பெருமானக மாறினார். இது சிவசக்தி ஐக்கிய நாளாகும். ஆறுமுகனின் பிறந்தநாள்- தைப்பூச நன்னாள். ஆறுமுகனின் அவதார நிகழ்வு இது. உமையும் நீர் நிலையிலிருந்து உருமாறி தன் திவ்விய சரீரம் கொண்டாள்-பழநி.

அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞானத்தை வழங்கி!
தாருகா முனிவர்கள் அபிசார வேள்வி செய்து கஜாசூரனை பிட்சாடனர் மேல் ஏவ கஜாசூரன் பிட்சாடனரை விழுங்கி விடுகின்றான். அம்பாள் இடுப்பில் முருகன் இருக்க கண்ணுற்ற பார்வதி வருத்தம் அடைந்தாள். அப்போது யாணையின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்து கஜாசூரனை வதம் செய்கின்றார் பிட்சாடனராகிய சிவபெருமான்.

அழகிய திருமேனியுடன் தாயின் இடுப்பில் இருக்கும் சிவக்குமரன் முருகன் தாயை நோக்கி ‘இதோ தந்தை’ என தன் விரல் நீட்டி காண்பிக்கின்றார். இந்தக் காட்சியே அஞ்ஞானத்தால் அல்லலுறும் பார்வதியின்(உயிர்களின்) துயர் நீங்கும் பொருட்டு கருணை வடிவான முருகப் பெருமான் ஞானாசிரியராக இருந்து ஆணவத்தை அடக்கி அஞ்ஞானத்தை நீக்கி, ஞான வடிவாகிய பரம் பொருளைக் காணச் செய்து, மெய்ஞானத்தை வழங்கி உயிர்களுக்கு பிறவிப் பயனை நல்குவதை விளக்கும் காட்சியாக ஆன்மீகப் பெரியோர்கள் குறிப்படுவது

சிவனின் ஞானவடிவான ஞானபண்டிதன் சிவபாலனுக்கு காவடி ஏன்!
அகத்தியர் தன் சீடன் இடும்பனிடம் தான் வணங்குவதற்காக இமயமலைச் சாரலிலிருக்கும் சிவகிரி, சக்திகிரி என்ற இருமலைகளையும் கொண்டுவரச் சொன்னார். அம்மலைகளை ஒரு நீண்ட கழியில் இருபுறமும் கட்டி காவடியாக தோளில் தூக்கி வரும்போது ஒர் இடத்தில் களைப்பு மேலிட காவடியை கீழே வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்தான். பின் காவடியைத் தூக்க முயற்சிக்கும்போது அம்மலைமேல் இருந்த சிறுவன் அம்மலை தனக்குச் சொந்தம் எனக்கூற இருவரும் போரிட்டனர். முடிவில் சிறுவனாக வந்திருப்பது சிவக்குமரன் என்றறிந்து இடும்பன் வணங்க அருளினார் முருகப்பெருமான். இந்நிகழ்வு நடந்த தினம் ஒர் தைப்பூச நன்னாள். அன்றிலிருந்து முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. காவடிகள்- பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, மயில்காவடி, அக்னிகாவடி, பறவைக்காவடி, மச்சக்காவடி, சர்ப்பக்காவடி என பலவிதமுண்டு.

ஒருவனுக்கு வரும் பிரச்சனைகள், சங்கடங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து சுமந்தால் மனதில் அழுத்தம் அதிகமாகும். மூளையின் செயல் குன்றும். எனவே பிரச்சனைகள் தோன்றியவுடன் அதை ஓரமாக ஒதுக்கி வைக்கப் பழகவேண்டும். இதைத்தான் முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுக்கும் பக்தர்கள், முருகா இத்தனை நாட்கள் விரதம் இருந்து காவடி சுமந்து வந்தேன் உன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தது. காவடி இறக்கி வைத்தது போன்றே என்மனதில் உள்ள சுமைகளை இறக்கி வைத்து அருள்வாய் எனச் சொல்லாமல் சொல்லும் செயலாகும்.

காவடி எடுக்கின்றேன் என மனதாரப் பிரார்த்தனை செய்து அதனைச் செலுத்தும்பொது தன் மனதைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றனர். பக்தியுடன் இறைவன்மேல் பாரத்தைப் போட்டு நம்பிக்கையுடன் சுமந்து செல்கின்றனர், பக்திப் பிரவாகத்தில் தன்னை மறக்கும் நிலை ஏற்படுவதால் அவரது குடும்பம், சுற்றம் சொந்தங்கள் பற்றியும் நடப்பது நடக்கப்போவது எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தெய்வ சிந்தனையால் மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த நிலையில் இருப்பர். அப்போது சத்து சித்து என்ற ஆனந்த நிலை கிட்டும் உண்மையான பக்தர்களுக்கு.

குருநாதர் ஏன்!
சிவனைத் தரிசிக்க தேவர்களுடன் வந்த பிரம்மன் அங்கிருந்த குமரப்பெருமானை அனைவரும் வணங்க தான் மட்டும் இவர் இளைஞன்தானே என்று செருக்கடைந்து வணங்காமல் சிவனை தரிசிக்கச் சென்றார். சிவனைத் தரிசித்து செல்லும் பிரம்மனுக்கும் மணியும் ஒளியும்போல், மலரும் மணமும் போல் தாமும் சிவமும் பிரிக்க முடியாத நிலையாமை என்பதை உலகிற்கும் உணர்த்தவும் பிரம்மனின் செருக்கை அடக்கவும் விரும்பிய முருகன் பிரம்மனை அழைத்து நீவிர் செய்யும் தொழில் யாது என்றார்.

படைக்கும் தொழில் என்பவரிடம் வேதங்கள் தெரியுமா உங்களுக்கு என்று கேட்க, ரிக் வேதம் பற்றி பிரம்மன் ஓம் என்று கூற ஆரம்பித்தார். ஓம் என்பதன் பொருள் என்ன வென்று கேட்க தடுமாறிய பிரமனை இது அறியாமல் படைப்புத் தொழிலை செய்வது சரியாகாது எனக்கூறி பிரமனைச் சிறையெடுத்தார். அவர் செய்துவந்த படைப்புத் தொழிலை தாமே மேற்கொண்டார்.

திருமால் பிரமனை விடுவிக்க எண்ணம் கொண்டு தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட, புன்னகைப் பூத்த சிவபெருமான் பிரம்மனின் செருக்கை அடக்கவே அவனை சிறையிலடைத்துள்ளான் என்றவர் நந்தியெம்பெருமானை அழைத்து முருகனிடம் சென்று பிரமனை விடுவிக்க சொன்னார். நந்தியின் பேச்சை கேளாதாதால் எம்பெருமான் அனைவருடனும் முருகனைக் காணப் புறப்பட்டார்.

ஓம் எனும் ஓங்கார முதல் எழுத்தின் பொருள் தெரியாமல் படைக்கும் செயலை செய்தல் சரியன்று. இருப்பினும் உங்களது திருவுள்ளப்படி அவனை விடுவிக்கின்றேன் என பிரமனை விடுவித்தார். பெருமான் பிரமனை மீண்டும் தனது படைப்புத் தொழிலைச் செய்ய அனுமதித்தார்.

பெருமான் குமரனை நோக்கி ‘பிரணவத்தின் பொருள் உனக்கு வருமாயின் சொல்லுக‘ என்றார். அப்போது அன்னைக்கு பிறர் அறியாவண்ணம் நீவிர் உபதேசித்த பிரணவத்தின் பொருளை யான் யாவரும் கேட்கும்படி சொல்வது முறையில்லை. இருப்பினும் காலம், இடம், அறிந்து முறைப்படி(குரு-சிஷ்ய பாவனையில்) கேட்கின் யான் கூறுவோம் என்றார்.

 

தன் குமரனிடம் திருவிளையாடல் புரிய நடந்த இந்த நிகழ்விற்காக, ஞானத்தின் பிறப்பிடம் ஓங்காரத்தின் சொரூபமான பெருமான் மைந்தா, நன்கு உரைத்தாய் என்று இருக்கையில் இருந்து எழுந்து, சிரந்தாழ்த்தி, வாய் பொத்தி, செவி சாய்த்து நின்றார்.. கல்லால மரத்தின் அடியில் எழுந்தருளி நால்வருக்கும் ஞான உபதேசம் செய்த ஞானகுரு, சீடனாகி குருவிடம் பாடம் கேட்கும் நிலையில் இருந்தார். குமரன்

தன் மழலை மொழியில் பிரணவ மந்திரத்தின் பொருளை மிகத் தெளிவாகக் கூறினார்-.சுவாமிமலை சுவாமிநாதன்.

இந்த நிகழ்வு ஏன் என்றால் எத்தகைய வாழ்வும் ஞானமும் பெற்றவர்கள் ஆனாலும் ஒன்றை கற்கும்போது குருநாதர் வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்த திருவருள் புரிந்தார்.

சரியான குரு!

உயிர்களுக்குத் தெரியாத ஒன்றை தெரிந்துகொள்ள ஒருவரின் துணை அவசியம். அதற்காக உயிர்கள் தேடிக்கொள்ளும் துணை அதைப்போன்றே தெரியாத ஒன்றாக அமைந்து விட்டால் அந்த உயிர்கள் தெரியாத ஒன்றை எப்படி தெரிந்து கொள்ளமுடியும். ஆரம்பத்திலிருந்து தடுமாற்றங்களும் குழப்பங்களும்தான் மிஞ்சும். எனவே சரியான வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். உலகியல் மற்றும் உயிரியல் பாதைகளில் வழிகாட்ட குரு என்பவர் தேவை.

 குரு என்றால் ஒளி, செம்மை, முளைப்பு என்றாகும். நாரையை குருகு என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மை நிறத்தால்தான். இரத்தத்தை குருதி என்று சொல்வது அதன் செம்மையை வைத்துதான். வாழையின் அடியில் வளரும்/ தழைத்துவருவதை குருத்து என்று சொல்வது அதன் முளைப்பை வைத்துதான். எனவே ஒளியுடையதாய், செம்மையுடையதாய், முளைத்து பெருகக்கூடியது எதுவோ அதுவே குரு எனப்படும். ஒளியையும் செம்மையையும் முளைப்பையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கற்றதை இவ்வுலக மக்களுக்கு என தன்னிலிருந்து மற்ற உயிர்களுக்கு கடத்துபவரே குரு ஆவார். அந்த வகையில் குருந்த மரத்தடியில் இருந்து குருவாக மாணிக்கவாசகருக்கு அறிவு தந்தவர் இறைவன். ஒளியும், செம்மையும், முளைப்பும் வேண்டும் உயிர்கள் சரியான குருவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். குருவிடம் உயிர்கள் எதிர்பார்ப்பது அறிவையல்லவா!

மாலின் கண்ணீரில் இரு பெண்கள்!

இந்த நிகழ்வைக் கண்ணுற்ற உமையின் தமையன் திருமாலின் கண்களிலிருந்து ஆனந்த நீர் துளிர்கள் துளிர்க்க அந்த இரு சொட்டு கண்ணீர் துளிகளும் இரு பெண்களாக அமிர்தவல்லி என்றும் சுந்தரவல்லி என்றும் மாறினர். இருவரும் என்றும் இளைமையுடன் இருக்கும் அழகு குமரனை மணந்து கொள்ள விரும்பி சரவணப் பொய்கையில் சடக்கர மந்திரத்தை ஜபித்து தவமிருந்தனர். அவர்கள் முன் தோன்றிய குமரன் மூத்தவள் அமிர்த வல்லியை நோக்கி நீ தேவலோகத்தில் இந்திரனின் மகளாகவும், சுந்தரவல்லியை பூலோகத்தில் சிவமுனியின் மகளாகப் பிறந்து வேடராஜனுக்கு மகளாகவும் வளர்ந்து வாருங்கள் உரிய காலத்தில் யாம் உங்களை திருமணம் புரிவோம் என்றருளினார்.

அமிர்தவல்லி சிறுமி வடிவம் எடுத்து மேருமலையில் இந்திரன்முன் சென்று நான் உன்னுடன் பிறந்த உபேந்திரனுடைய மகள் என்னை உன்னுடைய வளர்ப்பு மகளாக வளர்ப்பாயா என்றாள். இந்திரன் மகிழ்ந்து சஷ்டிதேவி-தேவசேனா எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான். அங்கு ஐராவதம் அவளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியதால் தெய்வயானை எனவும் பெயர் பெற்றாள்

திருமால் சிவமுனிவராக தவம் செய்து கொண்டிருக்கும்போது மகாலட்சுமி மான் உருவில் வர திருமாலான சிவமுனி இச்சை கொண்ட பார்வையை வெளிப்படுத்த அம்மான் கருவுற்று உரிய காலத்தில் வள்ளிக்கிழங்கை அகழ்ந்து எடுக்கும் குழியில் குழந்தையை ஈன்று பின் மறைந்தது. அந்தப் பகுதிக்குச் சொந்தக்காரனாகிய நம்பி பெண் குழந்தை இல்லாததால் அக்குழந்தையைக் கண்டெடுத்து வள்ளி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான்.

நவசக்தி-நவவீரர்கள்! சிவபெருமானின் முகங்களிலிருந்து யாரும் அனுக முடியாத வெப்பத்துடன் தேஜஸ் வெளிப்பட்டபோது அதை தாங்காமல் அருகிலிருந்த பார்வதிதேவியும் பதட்டம் கொண்டபோது பார்வதி காலிலிருந்த சிலம்புகளின் நவரத்தினங்கள் சிதறின. அதை அரனார் நோக்க அம்பிகையின் திருவுருவம் ஒன்பது வடிவங்களாய் ஒன்பது சக்திகளாய் தோன்றின. பரமனாரின் தீட்சப்பார்வையால் ஒன்பதுபேரும் கர்ப்ப முற்றனர், கோபம் கொண்ட சக்தி அவர்களை இக்கர்ப்பத்துடன் பலகாலம் இருக்க சாபமிட்டார்.

நவசக்திகள் இந்த சாபத்தைக் கேட்டு அஞ்சி நடுங்க அவர்கள் வியர்வைத் துளிகளிலிருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர். மைந்தர்களே நீங்கள் அனைவரும் அவுணர்களை அழிக்க முருகனுக்கு உதவியாய் இருங்கள் என்று சிவன் அருள் புரிந்தார். நவசக்திகளும் பலகாலம் கர்ப அவதியுடன் தவம் செய்து வந்தனர். கர்ப்பம் உள்ளேயிருந்த வண்ணம் சிவயோகம் செய்து வளர்ந்தன. கர்ப்பம் வளர வளர தாங்கமுடியாத நவசக்திகள் பார்வதி பரமேஸ்வரனைப் பர்த்து தங்கள் குறைநீக்க வேண்ட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த புதல்வர்களைப் பெற அருள்.

நவசக்திகளான
மாணிக்கவல்லிக்கு-தீரமிக்க வீரவாகுத்தேவர்,
முத்துவல்லி-மௌத்திகவல்லிக்கு வீரகேசரி,
புஷ்பராகவல்லிக்கு வீரமகேந்திரர்,
கோமேதகவல்லிக்கு வீரமகேசுவரர்,
வைடூர்யவல்லிக்கு வீரபுரந்தார்,
வைரவல்லிக்கு வீரராக்கர்,
மரகதவல்லிக்கு வீரமார்த்தாண்டர்
பவளவல்லிக்கு வீராந்தகர்,
இந்திர நீலவல்லிக்கு வீரதீரர் என மகவாக அவதாரம் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே வாள் கொடுத்து லட்சம் வீரர்களுடன் நீங்களும் கூடி ஆறுமுகனுக்கு உதவி புரிவீர் என ஈசன் அருள்.

11 ருத்திரர்கள் ஏன்!
பதினொரு ருத்திரர்களை ஈசன் நினைக்க அவர்கள் தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு என்று 11 படைக்கலன்களாகி முருகனின் கைகளில் அமர்ந்தார்கள். ஆறுமுகனுக்கு 12 கரங்கள். அப்படியிருக்க பெருமான் 11 ருத்திரர்களை மட்டும் உருவாக்கினார். ஏனெனில் 12வது கரத்தில் சக்தியின் வேலை அளிக்க இருப்பதால். மேலும் ஐம்பெரு பூதங்களையும், சகல பிராணிகளையும் அழிக்க வல்லதும், எவ்வளவு வரங்கள் பெற்றிருந்தாலும் அவைகளைக் மறுத்து உயிரை வாங்கக் கூடிய வேலாயுதத்தை சக்தி ஆயுதமாக முருகனிடம் கொடுத்தருளினார். விஷ்ணு, பிரம்மாவின் அலோசனைப்படி ஆகாயத்தில் செல்லும் தேர் மீது தன் இன வாயுக்களுடன் சேர்ந்து முருகப் பெருமானை ஏற்றிக் கொண்டுத் தேரை வாயுபகவான் செலுத்தினான்.

சனத்குமாரர் கண்ட கனவின்படி முருகன் தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி செல்லும் வழியில் நாரதர் தோன்றி, பெருமானே, கிரௌஞ்சமலை என்பது இதுதான்.. அந்தணர், அருந்தவத்தோர் செல்லும் போது வழி காட்டுவதுபோல் மாயை செய்து கொல்லும் கொடுங்குணத்தை உடையது. மகாவிஷ்ணுவை வென்று அவருடைய சக்ராயுதத்தை பதக்கமாக மார்பில் அணிந்துள்ளான் சூரபத்மனுடைய இளயவன் யானை முகத்தோன் தாரகாசூரன் இம்மலையில் வாசம் செய்கின்றான் என்றார்.

கிரௌஞ்சமலை- தாருகன்!

முருகன் படையுடன் வருவதை தூதர்கள் மூலம் அறிந்த தாருகன் தன் படையுடன் எதிர்க்க வீரபாகுத்தேவர் முதலில் போரிட, அவரிடம் தோற்றதுபோல் ஓடிய தாருகனைத் தொடர்ந்து சென்ற வீரபாகுத்தேவரும் அவரைத் தொடர்ந்த வீரர்களும் கிரௌஞ்ச மலையின் மாயையில் சிக்கினார். இதை அறிந்த சிவக்குமரன் தானே நேரில் போரிடச் சென்றார். சிறிது போரிட்ட பின் மனதில் அச்சம் கொண்டு கிரௌஞ்ச மலையில் ஒளிந்தான் தாருகன். முருகன் தன் வேலாயுதத்தைப் பிரயோகித்து கிரௌஞ்சமலையின் மாயைகளை அழித்து வீரபாகுத் தேவர் மற்றும் உள்ள வீரர்களை மீட்டுத் தாருகனை அழித்தார். போரில் தாருகன் செலுத்திய சிவப்படை.-பசுபதி அஸ்திரத்தை கையில் வாங்கிய குமரன் அதை வீரபாகுத்தேவரிடம் அளித்தார். தேவர்கள் விருப்பப்படி கிரௌஞ்ச மலைமீது தானும் தனது தம்பியரும் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார். கிரௌஞ்சமலை-கர்நாடகா-சந்தூர்- 10கி.மீ.(பெல்லாரி மாவட்டம்)

சூரபதுமனுடன் போரிட்டு அவனை இரண்டாகப் பிளப்பதற்குமுன் தன்னை மயில் வாகனமாகவும் சேவல் கொடியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றான். அந்த வேண்டுகோளை முருகப் பெருமான் ஏற்றார். ஆனால் அவர் போருக்குப் போகும் போதே இந்திரன் மயில் வடிவாக தேரிலும் அக்னி சேவல் வடிவாக முருகனின் கொடியிலும் வீற்றிருந்தார்கள் என்கிறார் கச்சியப்ப முனிவர் கந்த புராணத்தில்.

கிரௌஞ்சமலை தேவாசுரப் போரில் தாருகன் இறந்து பட்டதை அவன் மகன் அசுரேந்திரன் வீரமகேந்திரபுரியைத் தலை நகராக கொண்டு ஆண்டு வந்த தன் பெரியப்பா சூரபதுமனிடம் கண்ணீர் மல்க கூறினான். பின்னர் நடந்த போரில் சூரபதுமன் மகன் பானுகோபன் இறக்க, சூரபதுமனின் கடைசி தம்பி சிங்கமுகனும் கொல்லப்பட சூரபதுமன் தானே நேரில் வந்து போர் புரிய குமரனின் வேல்படை. தவம் செய்து 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகங்களுக்கு அரசாள வரம் பெற்ற சூரபதுமனுடன் போரிட்டு தேவர்களையும் ரிஷிகளையும் மீட்டார். போரில் காயமடைந்தவர்களுக்கு சிவபெருமான் வைத்தியராக பார்வதி தேவியுடன் வந்து தேவையான மருந்துகளை மலைபோல் குவித்து அதன்மீதமர்ந்து உதவி செய்தனர்.-பரளி (ஒளரங்காபாத்) –வைத்தியநாதர்-ஜோ.தலம்-5/12

108 யுகங்கள் அரசாண்ட சூரபதுமனை இறுகூறாக்கி பிளக்க சிவனிடம் பெற்ற வரத்தால் உயிர்பெற்று தான் உருவாக்கிய வீரமகேந்திரபுரம் அழிந்து தன் ஆணவம் அழிந்துபட குமரனை வழிபட்டு நிற்க இருகூறான அவனின் ஒரு கூறை சேவல் கொடியாகவும் மற்றதை மயிலாகவும் குமரன் ஏற்றார். சூரபதுமனின் மகன் இரண்யன் தந்தை இறந்ததைக்கண்டு புத்திரர்கள் செய்யும் கடமைதனை செய்யமுடியாமல் சேவலும் மயிலுமாய் ஆனாய் என புலம்பி நின்றான். முருகப்பெருமான் தனது தம்பியருடன் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார்-திருச்செந்தூர். சனத்குமாரர் கண்ட கனவின்படி முருகன் தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி தேவாசுரப் போரில் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.

சூரசம்ஹாரத்தின் தத்துவம்!

ஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. மாயாமலமான தாரகாசூரன் உலகமே உண்மை என நம்பி வாழ்ந்து பின்னர் அது பொய் என்றுணர்ந்து அழிகின்றான். சிங்காமுகாசூரன் கன்ம மலம். ஆணவத்தின் அடையாளமான சூரபத்மன் இறக்கும் தருவாயில் அதை உணர்கின்றான். அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது.

எல்லா அறிவும் சக்தியும் பெற்ற மூன்று அசுரர்களும் இறைவனின் வலிமையை உணராமல் தான் என்ற அகந்தையால் அழிந்தார்கள். சரணடைந்த சூரபத்மனை தன்னோடு வைத்துக்கொள்கின்றார் முருகப் பெருமான். இறைவனிடமிருந்து வந்த நாம் மலங்களை ஒழித்து மீண்டும் இறைவனிடம் சேரவேண்டும் என்பதே சூரசம்ஹாரத்தின் தத்துவம்.

சஷ்டிதேவி-தேவயானையை திருமணம்!

தேவர்களைக் காக்க சூரபதுமனுடன் நடந்த போரில் அவருக்குத் துனையாக இந்திரனின் மகளான சஷ்டி தேவியும் போரிட்டு போர் வெற்றிகரமாக முடிந்ததும் முருகனுக்கு சஷ்டிதேவி-தேவயானையை மணம் முடிக்க இந்திரன் விரும்பி ஏற்பாடுகள் ஆரம்பித்து நிச்சயிக்கப்பட்டது.

ஆசை, அகந்தை, பொறாமை, சினம் இல்லமலிருக்க முசுமுகம்!

திருக்கயிலையில் சிவனும் பார்வதியும் ஏகாந்தமாய் இருக்கையில் அம்மரத்தில் பல முசுக்கள்-குரங்குகள் அமர்ந்திருந்தன. ஓர் ஆண்முசு மரத்திலிருந்த வில்வ இலைகளைப் பறித்து கீழே போட அந்த இலைகள் மரத்தின் கீழே இருந்த சிவ பார்வதிமேல் விழுந்து கொண்டே இருக்க கோபம் கொண்ட பார்வதியிடம் வில்வ இலைகளால் முசு நம்மை அர்ச்சிக்கின்றது, எனவே கோபம் வேண்டாம் என்றார். அப்போது அம்முசுவிற்கு ஞானம் உண்டாகி தன் தவறுக்காக வருந்தி சிவ பார்வதியை வணங்கி நிற்க, சிவன் முசுவிடம் நீ உன்னை அறியாமல் என்னை வில்வத்தால் பூசித்தாய் அதன் பயனாக அடுத்த பிறப்பில் நீ உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் பேறு கிட்டும் என்றார்.

இதைக் கேட்டு மகிழ்ச்சியடையாத முசு, எனக்கு அரச பதவி வேண்டாம் நான் எப்போதும் தங்களையே தொழுது கொண்டிருக்க அருள் புரிய வேண்டியது.. முசுவே நீ மண்ணுலகை ஆண்டபின் இங்கு என்னிடம் வந்துவிடுவாய் என்றார். இதில் விருப்பமில்லாத முசு, பெருமானே மண்ணுலக வாழ்வில் எனக்கு நாட்டமில்லை. இருப்பினும் தங்களின் ஆணைக்கு அடிபணிகின்றேன். உலகில் அரசாட்சி செய்யும் போது எனக்கு மானிட உரு கிடைத்தாலும் என் முகம் முசுவின் முகமாகவே இருக்க வேண்டியது. ஏனெனில் அப்போதுதான் ஆசை, அகந்தை, பொறாமை, சினம், போன்ற குணங்கள் என்னை தீண்டாமல் இருக்கும் என வேண்ட, அதன்படி அரிச்சந்திரன் வம்சத்தில் முசுவின் முகத்துடன் முசுகுந்தன் என்ற பெயருடன் கருவூரை அரசாண்டு வந்தான்.

மன்னுலக மன்னனுக்கு தேவர்கள் வீட்டு திருமண அழைப்பு!

சூரன் மாண்டான் என்பதால் மகிழ்வுற்ற முசுகுந்தன் முருகப் பெருமானின் திருமணத்தைக் காண தன் புடைசூழ வந்திருந்து இந்திரன் முதாலானோர்களைச் சந்தித்து மகிழ்ந்தான்.

திருமணம் பங்குனி உத்திர நாளில் திருப்பரங்குன்றத்தில் இனிது நடந்தது, சஷ்டிதேவி தெய்வானையாக மாறினாள்.

வள்ளி திருமணம்!

சில காலம் கழித்து முருகன் திருத்தணிகை மலைக்கு வந்தார். அங்கு அவரைச் சந்தித்த நாரதர் முன்னைப் பிறவியில் திருமாலின் மகளான சுந்தரவல்லி இங்கு வள்ளியாக இருப்பதும் அவரை தாங்கள் உரிய காலத்தில் மணம் புரிய வேண்டும் என்றார். முருகப்பெருமான் வள்ளிக்கும் நம்பிக்கும் தன் உருவைக்காட்டிட அனைவரும் மகிழ்ந்தனர். விரைவில் திருமணம் இனிது நடந்தது தேவ தச்சனை அழைத்து கோவில் அமைக்கச் சொன்னார்..-திருத்தணி. பின்னர் அங்கு தெய்வானை வர வள்ளியும் அவரும் முற்பிறவியில் திருமாலின் மகள்கள் சகோதரிகள் என்பதை உணர்தினார்.

சிவகுமரனின் பெயர்கள்!

நெற்றிக்கண்களிலிருந்து தீப்பொறிகளை கங்கை சுமந்து சென்றதால் காங்கேயன்.

சரம்-நாணல், வனம்-காடு. பவன் -தோன்றியவன். நாணல்கள் மிகுந்த நீர் காட்டில் சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன்
கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன்
தன்னை நாடும் பக்தர்களை பற்றுக்கொண்டு காப்பவன்.அறுவரையும் ஒன்றாக செய்ததால் கந்தன் அம்மை யப்பருக்கு நடுவில் அமர்ந்ததால் சோமாஸ்கந்தன்.
அழகின் உருவம் முருகன்
முருகனுக்கு ஆறு முகமாதலால் ஆறுமுகன், சண்முகன் (ஷண்-ஆறு)
குரு திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ தவம் செய்து பூஜை குருபரன். கு-அஞ்ஞான இருள், ரு-நீக்குபவன் ஆன்மாக்களின் அஞ்ஞான இருளை நீக்குபவன் குருபரன்.
சிவனுக்கும், அருணகிரியாருக்கும், அகத்தியருக்கும் பிரணவத்தை போதித்ததால் குருநாதன்.
மயிலில் சஞ்சரிப்பதால் விசாகன்.விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் விசாகன். வி- பட்சி, சாகன்- சஞ்சரிப்பவன். பறவையாகிய மயிலை வாகனமாகக் கொண்டு சஞ்சரிப்பவர் எனப் பொருள்.
குன்று இருக்கும் இடமெல்லாம் இருப்பதால் குமரன்..
ஸ்வம்- சொத்து. உலக உயிர்களை சொத்தாக உடையவன் சுவாமிநாதன்.
தேவர்களின் தலைவானக போரிட்டதால்- சுரேசன்.
.குழந்தை முகமாக தோன்றுவதால் சேயோன்.
முத்தைப்போல் இயற்கையாக ஓளிர்பவன் முத்தையன்.
வள்ளிமூலம்-இச்சா சக்தி, தெய்வானைமூலம்-கிரியா சக்தி, வேல்மூலம்- ஞானசக்தி அளிப்பவன் - வள்ளல் பெருமான்.
ஆணவத்தின் வடிவம் மயிலை அடக்கி வாகனமாக்கியதால் மயில்வாகணன்.

பிரணவ ஸ்வரூபியான சிவனே முருகனாக விளங்குகின்றார். முருகனும் சிவனும் ஒன்றேயாதலால் அ கார, உ கார, ம கார மாகிய ஓம் காரத்தின் ஸ்வரூபம் சுப்ரமண்யர். ஒவ்வொரு மந்திரத்திற்கும் உயிராகத் திகழ்வது ஓம். அந்த ஓம் காரத்தினன் ஜீவராசிகளின் இதயக் குகையில் அமர்வதாலே குகன் எனப்பெயர். அனைத்திலும் பரவியிருப்பதாலும், எந்தப் பூஜைக்கும் முதல் அங்கமான ஆத்ம பூஜை செய்தபிறகே என்பதனாலும் அப்போது இதயகுகையில் அமர்ந்திருப்பதாலும் குகபரமன் என்றாகிறது. ஞானத்தின் வடிவாக திகழ்பவன். எங்கும் நிறைந்த அழகுப் பொருளே முருகன் என்று அறிவு கூறினாலும் வடிவத்தை நினைந்து நினைந்து பழகிய நெஞ்சில் அந்த உருவம் மங்குவதில்லை.

முருகனுக்கு உகந்த நாட்கள்- ஐப்பசிமாத சஷ்டி- அவதார நோக்கமாகிய சூர சம்ஹாரம் நிறைவேறிய நாள். கார்த்திகைமாத திருக்கார்த்திகை- ஆறுமுகனை வளர்த்த அன்னையரைச் சிறப்பிக்கும் நாள். தைமாத தைபூசம்- குருபகவான் தன் ஜென்ம நட்சத்திரமான பூசம் சந்திரனோடு சேரும் நாள்-பௌர்ணமி அன்று தவம் செய்து பூஜித்து திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ வழிபாடு செய்தார். அன்று அருள் அலைகள் அதிகம் இருக்கும் நாள். சரணடைந்த பக்தர்கள் விரதம் இருந்து வழிபட சிறந்தது. அசுரனை அழிக்க அன்னையிடம் வேல்வாங்கிய நாள். இடும்பனுக்கு அருள் புரிந்த நாள்.

முருகன் அடைந்த சாபம்! புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து!

 

ஒங்காரத்தின் பொருள் கேட்டு சொல்லாததால் பிரமனை சிறை செய்த முருகனை அதன் பொருள் சொல்லக் கேட்க பொருள் சொல்லிவிட்டு கடைசியில் சுப்ரமணி ஓம்! என்றார். சதாசிவ ஓம்! என்பதற்குப் பதில் சுப்ரமணி ஓம்! என்று முருகன் சொன்னதைக் கேட்டு தேவர்களும் முனிவர்களும் அதிர்ந்தனர். புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து. இது தவறு என தன் குமரினிடம் கூறிய சிவன் சர்ப்பமாக மாறச் சபித்தார். ஸ்ரீபிரம்மாவை சிறையிலிருந்து மீட்டார். சர்ப்பமான முருகன் பல தலங்கள் சென்று வழிபட்டு திட்டை வந்தார். பல வருடங்கள் பூஜை செய்து வழிபட்டு அருள் பெற்று தன் பழைய உருவை அடைந்தார்.. ஸ்ரீசுப்ரமணியராகவும், அருவமாக சர்ப்ப வடிவிலும் முருகன் அருள். தென்குடித்திட்டை.தி.த-132.வசிஷ்டேஸ்வரர்(சு)


தந்தைக்கு உபதேசம் செய்தது சரியா!

சின் முத்திரையுடன் தியான நிலையில் தண்டபாணி. தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி முருகன் வருந்த சிவலிங்கத் திருமேனியை வழிபடச் சொல்லி மாமன் பெருமாள் அறிவுறை. வாய்மூடி மௌனியாய் தன் பேச்சுத்தன்மையைக் குறைத்து பலதலங்கள் சென்று வழிபட்டார் சுப்ரமண்யர். சிவானந்தேஸ்வரை வழிபட்டு தன் பேச்சாற்றலைப் பெற்றார். திக்குவாய்க்காரர்கள் தண்டாயுதபாணிக்கு நாற்பத்தைந்து நாள் தேன் அபிஷேகம் செய்து வழிபாடு.

சிவகாமசுந்தரியின் மகன் குமரகுருபரன். குமரகுருபரன் ஐந்து வயது வரை ஊமை. பேச்சாற்றலில்லை. கவிராயர் குழந்தையுடன் இங்கு வந்து உப்பில்லா விரதம் இருந்து தவறு செய்திருந்தால் தண்டணையைத் தங்களுக்குத் தந்திடவும் குழந்தையை பேசவைக்கவும் வேண்டுதல். சரவணப எனத் தொடங்கும் கந்தர் கலிவெண்பாவை குழந்தை வாய்திறந்து பாடியது. பிச்சாடனர் சிறப்பு. வழக்கத்திற்கு மாறாக சந்திரசேகரர் லிங்கோத்பவர் இடத்தில். முருகனுக்கு அருளி சிவானந்தேஸ்வரர் என்ற நாமத்தில்.-திருப்பேணுபெருந்துறை-நாச்சியார்கோவில் அருகில்

வேத உட்பொருளை கவனியாதலால் சிவன் உமையை சபிக்க கோபம் கொண்ட முருகன் வேதாகமங்களை கடலில் வீச பாவம் சூழ்ந்து உருத்திரசன்மராக -ஊமையாய் பிறந்து சாபம் நீங்கிய தலம்- எருக்கத்தம்புலியூர்.

சோமாஸ்கந்த தத்துவம்!

சிவபெருமான் ஓங்கி உயர்ந்து வளர்ந்த தாணு மரமாக நிற்க, அம்பிகை பார்வதி அந்த மரத்தில் பற்றிப் படர்ந்த கொடியாக- அபர்ணாவாக பிணைந்திருக்க அந்த மரத்தின் கீழ் சிறிய கன்றுச் செடியாக முருகன் தோன்ற அதுவே முதல் முதலாக அமைந்த சோமாஸ்கந்த வடிவம் என்கிறது ‘சோமாஸ்கந்த தத்துவ நூல். வைகாசி விசாக நாளில்தான் தாணு அபர்ணா விசாக அவதாரம் நிகழ்ந்துள்ளது.

ஞானவேல்!

ஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. எனவே அவைகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே முருகனின் ஞானவேலால் ஆணவமலம்- சூரபத்மன், கன்மமலம்-சிங்கமுகன், மாயாமலம்-தாரகன் ஆகியோரை வதம் செய்வதன் மூலம் அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

அம்மன் அம்ச நான்முக முருகன்! தோற்றம்!

விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் வேண்டி தவம் இருக்க ஈசன் தோன்றி பாலதிரிபுரசுந்தரியை நோக்கித் தவம் செய்யச் சொன்னார். குழந்தையாய் வந்த சுந்தரிக்கு திலகமிட அவர் குளத்தில் குணிந்து திலகத்தைப் பார்க்க அதிலிருந்த குங்குமம் குளத்தில் விழ ஒன்றின்பின் ஒன்றாக நான்கு முகங்கள் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க நான்முக முருகா வருக எனக்கூறி அணைத்துக் கொண்டாள். விஸ்வாமித்திரா! ஈசன் அன்று என் அம்சம் இன்றி ஆறுமுக வேலனை படைத்தார். இன்று அவரது அம்சமின்றி நான்முக வேலனை உனக்காக படைத்தேன். இவனே உனக்கு வேண்டியது தருவான் என்றாள். தூரத்தில் கல் மழை பெய்த இடத்திற்கு வரச்சொல்ல அங்கு ஒர் கோவிலில் பாலதிரிபுரசுந்தரியுடன் நான்முக முருகன் சேர்ந்து காட்சி. இறையருள் பெற தவம் செய்யாமல் வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தேனே என வருந்தினார் விஸ்வாமித்திரர். சதுர்முகமுருகன் சிறப்பு.சின்னாளப்பட்டி

சாமுத்திரிகா லட்சணம் யார் உருவாக்கியது!

கார்த்திகேயன் ஆண், பெண் லட்சணங்களை சீரமைத்துக் கொண்டிருக்கும்போது தம்மை மதிக்காமல் செய்கின்றாறே என்பதால் அவர் செயலுக்கு இடையூறு விளைவித்தார் விநாயகர். சினமுற்ற கார்த்திகேயன் கணேசரை வீழ்த்த எண்ணி அவரின் பல் ஒன்றை பிடுங்கி விட்டார். பரமசிவன் அங்கு வந்து பிள்ளைகளின் சச்சரவிற்கு காரணம் கேட்க. கார்த்திகேயன் தான் ஆண், பெண் லட்சணங்களை சீரமைக்கும் பணியில் இருக்க அதைக் கெடுத்துவிட்டார் என்றார், அப்போது ஆண், பெண் லட்சணங்கள் என்று கூறுகின்றாயே என்னிடம் எத்தகைய புருஷ லட்சணம் எனக்கேட்டார். கபாலி எனப் பெயர் பெற்ற தங்களிடம் எப்படி புருஷ லட்சணம் காணமுடியும் என்பதைக் கேட்ட சிவன் கோபமுற்று ஆண்களின் லட்சணங்கள் பற்றிய சுவடிகளைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டு அந்தர் தியானமானார்.

சமுத்திரராஜனை அழைத்து நீ பெண் லட்சணங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து உருவாக்கு. கார்த்திகேயன் சொன்ன புருஷ லட்சணங்கள் அப்படியே இருக்கட்டும் என்றார். அப்போது சமுத்திர ராஜன் இவை என்வசமிருந்து வருவதால் இவற்றிற்கு சாமுத்திரிகா லட்சணம் என்ற பெயரில் விளங்க அணுக்கிரகம் வேண்டினார்.

கார்த்திகேயன் முன் தோன்றி, தேவலோக நியதிப்படி யார் எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதியோடு துவக்கினால் தான் விக்னமின்றி நிறைவேறும். நீ சகோதரின் பல்லை திருப்பிக் கொடுத்துவிடு. உன் விருப்பப்படி லட்சண ஏடுகளை சமுத்ர ராஜனிடமிருந்து பெற்றுக்கொள். ஆனால் அது சமுத்ர ராஜன் விருப்பப்படி சாமுத்ரிகா சாஸ்திரம் என்றே அழைக்கப்படும். என்றார்.

கார்த்திகேயன் தான் அண்ணனின் பல்லைக் கொடுத்து விடுகின்றேன். ஆனால் அவர் அதைக் கையிலேயே வைத்திருக்க வேண்டும் கீழே கண்ட இடத்தில் வைத்தால் அந்த பஸ்பம் அவரை எரித்துவிடும் என்றார். என்வே சாமுத்ரிகா லட்சணம் என்ற சாமுத்ரிகா சாஸ்திரம் முருகனால் எழுதப்பட்டது.


கார்த்திகைப் பெண்கள் யார்!

சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய ரிஷிகள் நால்வரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவன் அஷ்டமா சித்திகளை அடையும் வழிகளைப் போதித்தார். அருகிலிருந்த ரிஷிபத்தினிகளான நிதர்த்தினி, அப்ரகேந்தி, மேகந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய அறுவரும் தங்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசிக்க வேண்டினர். மனதில் பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும் என்பதால் சிவன் தயங்க பார்வதி அவர்களுக்காக வாதாட சிவன் அவர்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசித்தார்.

உபதேசம் பெற்றவர்கள் தாங்கள் உமைக்கு இணையாக இருப்பதால் ஏன் உமைக்கு பணி புரிய வேண்டும் என நினைத்ததால் சிவன் அவர்களை கல்லாக மாற சாபம். உண்மை நிலை உணர்ந்த பெண்கள் வருந்தி அன்னையை மனதால் பூஜிக்க உமை மன்னிக்க சிவனும் மன்னித்தார். மீண்டும் பணிப் பெண்ணான அவர்கள் ஐயனே காரணமின்றி ஏதும் செய்யமாட்டீர்கள் என்ற ஞானம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கல்லாகமாற்றி மீண்டும் பெண்ணாக மாற்றியதின் அர்த்தம் என்ன என்றனர்.

தீயவற்றை அழிக்கவும் தேவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க சிவ அம்சத்தில் பிறக்கப் போகிறவனை வளர்க்கப் போகின்றீர்கள். மற்றவர்கள் செல்வம் வீடு எனக் கேட்க நீங்கள் ஞானத்தை கேட்டுள்ளீர்கள். ஆனால் அந்த ஞானத்தை முறையாக பயன்படுத்தும் பக்குவம் உங்களிடம் (கார்த்திகைப் பெண்கள்) இல்லை. அதை முறைப் படுத்தவே இந்த நிகழ்வு என்றார்.

கார்த்திகைப் பெண்கள்! கிருத்திகை நட்சத்திரம்! கார்த்திகேயன்!

குழந்தையாய் இருந்த முருகனை எடுத்து பாலூட்டி பாசம் காண்பித்த கார்த்திகைப் பெண்கள், முருகா! உன்னை வளர்த்த எங்களை உலகம் மறந்துவிட்டதே! என வருத்தப்பட, அன்னைக்குச் சமமாக என்னை சீராட்டி பாலுட்டிய நீங்கள் அனைவரும் ஒன்றாகி கிருத்திகை நட்சத்திரமாக வானில் சுடர் விடுவீர்கள். இந்த நாளான ஆடிக்கிருத்திகை இனி எனக்கு மிகவும் உகந்த நாள். இந்தநாளில் விரதமிருந்து வணங்கும் பக்தர்கள் துயர் தீர்ப்பேன். உங்கள் பெயரால் நான் கார்த்திகேயன் என்ற பெயரிட்டு அழைக்கப்படுவேன் என அருள் புரிந்தார். மேலும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தின்போது மக்கள் தீபமேற்றி வழிபடுவர் என அருள்.

முருகனின் அறுபடை வீடு!

முருகனுடைய ஆறு படைவீடுகளும் நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும். பிரமச்சரிய, கிருகஸ்த, சந்நியாச கோலங்களில் முருகன் வணங்கப்படுகிறார்

1.மூலாதாரம்- திருப்பரங்குன்றம். தெய்வானையுடன் மணக்கோலத்தில் உள்ள தலம்.

2.சுவாதிஷ்டானம்-திருச்செந்தூர். செந்தில்வேலவனாக பக்தர்களது துயர் நீக்கும் தலம்.

3.மணிபூரகம்-பழநி. ஞான தண்டமேந்தி யோக நிலையில் உள்ள தலம்.

4.அநாகதம்- திருவேரகம்-சுவாமிமலை. தந்தைக்கு உபதேசம் செய்த அறிவுத் தலம்.

5.விசுக்தி-திருத்தணிகை. தேவசேனாவுடன் களிப்புடன் இருக்கும் தலம்.

6.ஆக்ஞை-பழமுதிர்ச் சோலை. ஞானப் பழமாக இருக்கும் தலம்

#####

செவ்வாய்க்கிழமை, 17 July 2018 19:45

பைரவ சபை!

ஓம்நமசிவய!

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!

####

பைரவ சபை!

பைரவர்!

இரண்யாட்சனின் வளர்ப்பு மகன் அந்தகாசுரன். சிவனை நோக்கி கடுந்தவமிருந்து யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றான். தேவர்கள், முனிவர்களை வென்று பெண்டிரை அவமானம் செய்தான். அனைவரும் சிவனிடம் முறையிட சிவன் தன்னுடைய அம்சமாக காலபைரவரைத் தோற்றுவித்து அந்தகாசுரனை அம்ஹாரம் செய்தார். 

ஆதிசங்கரர் அருளிய “காலபைரவ அஷ்டகம்” - போகம், முக்தி இவைகளை அளிப்பவரும், பிரசித்திபெற்ற அழகிய வடிவினரும், அடியார்களிடம் அன்பு கொண்டவரும், காத்தல் கடவுளாக இருப்பவரும், எல்லா உலகையும் தன் வடிவில் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவரே, காசியம்பதியின் தலைவரே உங்களுக்கு நமஸ்காரம். எனக்கு அருள் புரிவாய் ஐயனே!-

பைரவர் என்றால் எதிரிகளுக்கு பயத்தை தருபவர். தன்னை அண்டியவர்களுக்கு பயத்தைப் போக்கி பலத்தை அளிப்பதால் சிவன் இவருக்கு திரிசூலம் அளித்து காவல் உரிமையை அளித்தார். ஈசனைப்போலவே 64 அம்சங்களை உடையவர் பைரவர். சிவாலயங்களில் பைரவரின் ஏதாவது ஓர் அம்சம் பரிவார மூர்த்தமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அஷ்ட-எட்டு திக்குகளிலும் பைரவரே காவல் புரிகின்றார். இந்த சிறப்பான எட்டு வடிவங்களே அஷ்ட பைரவர் என போற்றப்படுகின்றது. கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில் தோன்றியவர் காலபைரவர். இவர் சூரியனுடைய அம்சத்தை பெற்றவர். ஆதலால் ராகு காலத்தில் ஞாயிறு தோறும் வழிபடுவது சிறப்பு.

“பைரவ துதி”
ஓம் ஏம் க்லாம் கிலிம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும்
சகவம் ஆப துத்தாரணாய அஜாமல பக்தாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்ரிய வித்வேஷ்ணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ.

சிவபெருமானின் ஐந்து குமாரர்களில் ஒருவர் (கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயப்பன், பைரவர்). பைரவரை க்ஷேத்ர பாலர் என்பதுண்டு. 

க்ஷேத்ரபாலர்:-“பைரவ அஷ்டகம்” - செந்நிறமான ஜ்வாலைகளையுடைய ஜடாமகுடம் தரித்திருப்பவரும், சிவப்பு நிறமுடையவரும், வெண்ணிலவை முடியில் அணிந்திருப்பவரும், தேஜோமயமானவரும் உடுக்கை, சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றைக் கைகளில் வைத்திருப்பவரும், உலகத்தைக் காவல் காப்பவரும், பாதகர்களுக்கு பயங்கரமானவரும், நிர்வாணமேனியரும், நாயை வாகனமாக உடையவரும், முக்கண்ணரும், எப்போதும் குதூகலமாக இருப்பவரும், பூத கணங்கள் பேய் பிசாசுக்களுக்குத் தலைவரும், க்ஷேத்ர பாலர் என்ற பெயரை உடையவருமான பைரவரை வணங்குகிறேன்.

அஷ்ட பைரவரை பூஜித்து வழிபட்டால் க்ஷேத்திரத்தில் செய்த பாபங்கள் நிவர்த்தி. காசியின் எண் திசைக்கும் காவல் தெய்வங்கள். 1.குருபைரவர்- அனுமத்கட்டம், 2..சண்டபைரவர்- துர்க்காகுண்டம், 3.அஸிதாங்கபைரவர்- விருத்தகாலம், 4.கபாலபைரவர்- லாட்டுபஜார், 5.க்ரோதண பைரவர்- காமாக்ஷாமே, 6.உன்மத்தபைரவர்- பீமசண்டி, 7.சம்ஹாரபைரவர்- திருலோசனா சங்கமம், 8.பீஷணபைரவர்- பூதபைரவம்

தன் ஐந்து தலையால் செருக்குற்ற பிரம்மனின் ஐந்தாவது தலையை பைரவரைக் கொண்டு கிள்ளச் செய்தார். அந்தக் கபாலம் அவர் கையில் ஒட்டிக் கொண்டது. பைரவர் பிரமஹத்தி தோஷத்தால் பல தலங்கள் சுற்றி காசியம்பதியில் அன்னபூரணி அம்மன் அன்னம் அளிக்கும்போது கீழே விழுந்த அன்னத்தை எடுக்க் முயன்ற கபாலத்தைத் தன்காலால் நசுக்கினார். கபாலபைரவராக இருந்து காலபைரவராக மாறி காசியில் அருள்புரிகின்றார். ஒரே பைரவர் எட்டு செயல்களை எண் திசைகளில் செய்யும்போது அஷ்டபைரவராகின்றார்.

அஷ்ட பைரவர்கள்
1.ஸ்ரீ அசிதாங்க பைரவர்-6கரங்கள்.அன்னவாகனம். சக்தி-பிராம்மி,  அஸிதாங்க பைரவ அஷ்டகம்”- முக்கண்ணரும், கோரிய வரங்களைத் தானே முன் வந்து அளிப்பவரும், சாந்த சொரூபியும், கபாலமாலை தரித்தவரும், கதை, கபாலம், பாணபாத்ரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றைத் தாங்கியவரும் திகம்பரனாகவும், இளமையாகவும் இருப்பவரும், நாகத்தைப் பூனூலாக அணிந்தவரும், அலங்கார சொரூபரும், ப்ராஹ்மணி என்ற சக்தியை அருகே வைத்திருப்பவரும், அன்னப் பட்சியை வாகனமாக உடையவரும், அழகுள்ளவரும், சுந்தரரும், கேட்டதைக் கொடுக்க வல்லவருமான அஸிதாங்க பைரவரை வணங்கி தியானிக்கிறேன்..

வழிபட எதிரிகள் தொல்லை விலகும். எடுத்த நல்ல காரியங்கள் இனிதே முடியும்

2.ஸ்ரீ குரு பைரவர்-4கரங்கள், காளைவாகனம், சக்தி-மஹேஸ்வரி, "குரு பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், டங்கம், புள்ளிமான் என்ற கிருஷ்ணம்ருகம் ஆகியவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், பான பாத்திரம், கத்தி இவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், காளை வாகனத்தைக் கொண்டவரும், புன் சிரிப்பான முகமுடையவரும், வெண்மையான சுத்த ஸ்படிகம் போன்ற மேனியைக் கொண்டவருமான குரு பைரவ ஸ்வாமியை வணங்கி தியானம் செய்கிறேன்..

வழிபட அரசுப் பணிகளில் சிறந்த முன்னேற்றம் கிட்டும். 

3.ஸ்ரீ சண்ட பைரவர்-4கரங்கள், மயில்வாகனம், சக்தி-கௌமாரி, "சண்ட பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் வில், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், கௌரி என்ற தேவியை சக்தியாகக் கொண்டிருப்பவரும், மயிலை வாகனமாகக் கொண்டு வெண்மையான நிறத்தை உடையவருமான சண்ட பைரவரை தியானிக்கிறேன்..

பரிகார பூஜைகள் செய்து வழிபட இவரது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நவகிரக தோஷங்களும் நீங்கும் 

4.ஸ்ரீ குரோத பைரவர்-4கரங்கள், கருடவாகனம், சக்தி-வைஷ்ணவி,  "க்ரோத பைரவ அஷ்டகம்” முக்கண்ணரும் கதை, சங்கு, சக்கரம், பாசம், பாத்ரம் இவற்றை கைகளில் ஏந்திக் கொண்டிருப்பவரும், வேண்டிய வரங்களைக் கொடுப்பவரும், இளைஞராகவும் திகம்பரராகவும் இருப்பவரும், அமைதியான சுபாவமுடையவராக இருப்பவரும், இடது பக்கத்தில் திருவான சக்தியை கருடவானத்தில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், நீல நிறமான மேனியைக் கொண்டவருமான க்ரோத பைரவரை வணங்கி தியானிக்கிறேன்...

வழிபட உயிர்களின் மன அழுக்குகளான அழுக்காறு, அவா, வெகுளி ஆகியவற்றை நீக்குபவர்

5.ஸ்ரீ உன்மத்த பைரவர்-4கரங்கள், குதிரைவாகனம், சக்தி-வராஹி,  "உன்மத்த பைரவ அஷ்டகம்” முக்கண்ணரும், சாந்த ஸ்வரூபியும், இளைஞராகவும், திகம்பரராகவும் திகழ்பவரும், பொன் வண்ணரும், அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவரும், கத்தி, கபாலம், உலக்கை, கேடயம் ஆகியவற்றைக் கைகளில் தாங்கி இருப்பவரும், வாராஹி என்ற சக்தியுடன் காட்சியளிப் பவருமான உன்மத்த பைரவரை வணங்குகிறேன்..

மனநிலை பாதிக்கப்பட்டவர்களும், நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களும் தேய்விறை அஷ்டமியில் நெய்தீபமேற்றி வழிப்ட்டால் நலன் பெறுவர்.

6.ஸ்ரீ கபால பைரவர்- 4கரங்கள், யாணைவாகனம், சக்தி-ஐந்த்ரீ, இந்திராணி, "கபால பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், பக்தர்கள் வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் பாசக்கயிறு, வஜ்ராயுதம், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், இந்திராணி என்ற தேவியுடன் காட்சியளிப்பவரும், பத்ராகம் போன்ற ஒளிமயமான மேனியுடையவருமான கபால பைரவரை வணங்கி தியானம் செய்கிறேன்..

பஞ்ச பூதங்களையும் இயக்கும் இவரை வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அகற்றி நல்வாழ்வு அளிப்பார்.

7.ஸ்ரீ பலி பீஷ்ண பைரவர், சிம்மவாகனம், சக்தி-சாமுண்டி, பீஷ்ண "பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் கத்தி, சூலம், கபாலம், உலக்கை ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், சாமுண்டி தேவியுடன் இனைந்து காட்சி தருபவரும், பிரேத வாஹனம் எனப்படும் இறந்த பூத உடல் மீது அமர்ந்திருப்பவரும், சிவந்த நிறத்தையுடையவருமான பீஷணபைரவரை துதித்து வணங்குகிறேன்..

நெய் தீபமேற்றி வழிபட்டால் திருமணத்தடை விலகும். புத்திர பாக்யம் கிட்டும்.

8.ஸ்ரீ கால சம்ஹார (வடுக)பைரவர்-8கரங்கள், நாய்வாகனம், சக்தி-சண்டிகை "சம்ஹார பைரவ அஷ்டகம்” பத்துக் கைகளோடு முக்கண்ணனாக இருப்பவர், சர்ப்பத்தை பூனூலாக அணிந்தவர், கோரைப் பற்களுடன் பயங்கர முகத்தோற்றத்தை உடையவர், பக்தர்களுக்கு எட்டு விதமான ஐஸ்வர்யங்களைக் கொடுப்பவர், இளமையான தோற்றம் கொண்ட இவர், திகம்பரராகவும் இருப்பவர். ஸிம்ஹத்தை வாகனமாகக் கொண்டவர். தம் கைகளில் சூலம், கட்கம், டமருகம், சங்கு, சக்ரம், கதை, பானபத்திரம், கட்வாங்கம், பாசம், அங்குசம் ஆகியவற்றைக் கொண்டவர், அசுரர்களின் மண்டையோடுகளைக் கோத்து பெரிய மாலையாக அணிந்திருப்பவர், பருமனான உடலையும், மத்தமான பயங்கர உருத்தோற்றத்தையும் கொண்டவரான, சம்ஹார பைரவரை ,எப்போதும் எனக்காக வேண்டி தியானிக்கிறேன்..

இவரின் அம்சமே மற்ற ஏழு பைரவர்களும். தேய்பிறை அஷ்டமியில் இவரை பூஜித்தால் அனைத்து பலன்களும் கிட்டும்.  இவர் காலத்தில் நனமை அளிப்பவர். ஆபத் உத்தாரணர். இவரே மகாகாலர், க்ஷேத்ரபாலர், சட்டபாலர் என பூஜிக்கப்படுகின்றார்.

 

#####

செவ்வாய்க்கிழமை, 17 July 2018 16:24

பூமாதேவி!

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

####

பூமாதேவி!

பூமி என்கிற வசுந்தராவிற்கு உர்பி, இஜ்யை, க்ஷிதி, காசியபி, க்ஷௌணி, பவை, அனந்தை, விசுவாம், பிருத்வி என பலப் பெயர்கள் உண்டு.

தேவர்கள் அசுரர்களுக்கு அஞ்சி வாழ்ந்திருந்தாலும் தேவர்களின் கௌரவம் மற்றும் இறையருளும் மேலோங்கி இருப்பதன் காரணம் முனிவர்களும் யோகிகளும் செய்யும் ஹோமத்தில் தரப்படும் ஆகுதி என்ற அவிஸ்ஸே தேவர்களின் பலத்திற்கு காரணம் என்பதை அறிந்த இரண்யாட்சன் தேவர்களுக்கு அவிஸ் கிடைக்காமல் இருக்க என்னவழி என்று யோசித்து பூமியிருந்தால்தான் யாகங்கள் நடைபெற்று தேவர்களுக்கு அவிஸ் கிடைக்கின்றது. எனவே பூமியில்லையென்றால் தேவர்களுக்கு யாகம் நடந்து அவிஸ் கிடைக்காது என்று முடிவுசெய்து பூமியை பாயாகச் சுருட்டி பாதாள உலகத்தில் பதுக்கிவிட்டான். அவிஸ் கிடைக்காமல் துன்பமுற்ற தேவர்கள் பூமியைக் காணாததால் பிரம்மனிடம் முறையிட அவர் திருமாலிடம் சென்று வணங்கி தேவர்களின் துயரத்தை தெரிவித்தார்.

திருமால் வராக அவதாரமெடுத்து பாதாளாலோகம் சென்று இரண்யாட்சனுடன் போர் புரிந்து அவனைத் தன் கோரப்பற்களால் குத்தி கிழித்து பூமியை மீட்டு வந்தார். அசுர சம்ஹாரத்தினால் ஏற்பட்ட கோபம் தீராத வராக மூர்த்தியினால் கடல்வாழ் உயிரினங்கள் துன்பமடைந்தன. முனிவர்கள் கயிலைநாதனிடம் சொல்ல சிவன் தன் கைகளினால் வராகத்தின் கொம்புகளை உடைக்க அதன் ஆவேசம் அடங்கி ஸ்ரீ விஷ்ணுவாக மாறினார். புவிமகள் ஸ்ரீவிஷ்ணுவின் மனைவியானாள்.

வீடு கட்டும் போதும், கிணறு, ஏரி, குளம் வெட்டும் போதும் நிலத்தை பயிரிடும் முன்பும் பூமிதேவியை வணங்க விஷ்ணு அருள் வரம். முத்து, வைரம், மாணிக்கம், துளசி, மலர்கள், சிவலிங்கம், ஜபமாலை, சந்தனம், தீர்த்தம், சாளக்கிரமம், தீபம், யந்திரம், புத்தகம் சங்கு, ஆகியவற்றை நிலத்தின் மீது வைக்காமல் ஆசனத்தின்மீது வைக்க வேண்டும்.

”ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் கிலீம் வசுதாயை ஸ்வாஹா” என்ற மந்திரத்தைச் சொல்லி வெள்ளைத் தாமரை நிறமும், சரத்காலச் சந்திரன் போன்ற முகமும் சந்தனம் பூசப்பட்ட சர்வாங்கமும் உடையவளாக நவமணிகளால் அலங்கரிப்பட்டு நெருப்பிலான தூய்மையான ஆடைகளை அணிந்து புன்னகையுடன் தோன்றும் பூதேவியே உன்னை நமஸ்கரிக்கின்றேன் என்று தியானித்து “ஜலத்தை அளிப்பவளே, நீரின் சொரூபமாக இருப்பவளே, நீருக்கு ஆதாரமாக இருபவளே, நீரைப் பரிசுத்தம் செய்பவளே, வராஹ மூர்த்தியின் பத்தினியே, எனக்கு வெற்றியைத் தருவாய், நலன்களை அளிப்பாய், மங்களத் தலைவியே, மங்கள ரூபியே, சம்சாரத்தில் மங்களமுண்டாகச் செய்வாயாக, எல்லாம் அறிந்தவளே சர்வ சக்தியே, சகல விருப்பங்களை வழங்குபவளே, புண்ணிய வடிவினளே, புண்ணியத்திற்கு பீஜமானவளே, அனாதியானவளே, எல்லா பயிர்களுக்கும் இருப்பிடமானவளே, சகல சக்தி தரும் பூதேவியே, சுகத்தையும் நிலத்தையும் வழங்குபவளே எனக்கும் அருள் புரிவாய் அன்னையே! என துதித்து வழிபட வேண்டும்.

#####

 

செவ்வாய்க்கிழமை, 17 July 2018 09:45

பத்ரகாளி சபை!

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

####

பத்ரகாளி சபை!

பத்ரகாளி!

துர்க்கையின் பிரமஹத்தி!

விப்ரசித்தி அசுரனின் மகள் மகிஷ்மதி உலாவச் சென்றபோது அழகான ஆஸ்ரமத்தைக்கண்டு அதை தன்னுடையதாக்கிக் கொள்ள தீர்மானித்து பெண் எருமை உருவெடுத்து உள்ளே நுழைந்தாள். அங்கிருந்த முனிவர் எருமையாக வந்த அரக்கியின் எண்ணத்தை அறிந்து அவளை நூற்றண்டு காலம் எருமையாக இருக்க சபித்து விட்டார். மன்னிக்க வேண்டிய அரக்கியிடம் அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறக்கும்வரை அவள் அந்நிலையில் இருப்பாள் என விமோசனம் சொன்னார்.

தணு என்ற அரக்கனின் புதல்வர்கள் ரம்பன், கரம்பன். இருவரும் நன் மக்களைப் பெற தவம் செய்தனர். அப்போது இந்திரன் கரம்பனை அருகிலிருந்த நதியில் மூழ்கடித்துக் கொன்றான். தன் தம்பி அநியாயமாக இறந்தது கண்டு ஹோமம் வளர்த்து தன் தலையை அறுத்து அதில் போட்டு தற்கொலை செய்ய துணிய அக்னி காட்சி கொடுத்து அதிபரக்ரமசாலியான ஒர் மகன் பிறக்க வரம் தந்தான். ரம்பன் காட்டிற்குச் சென்றபோது அங்கு பெண் எருமை உருவில் இருந்த அரக்கியைக் கண்டு மோகித்து அதனுடன் புணர்ந்தான். பாதாள உலகத்தில் அந்த எருமையுடன் உல்லாசமாக இருந்து வந்தான். அப்போது வேறு ஒரு எருமை அந்த பெண் எருமையிடம் வர ரம்பன் அதனுடன் சண்டையிட அது ரம்பனை முட்டிக் கொன்றது. நர்மதை நதிக்கரையில் அவனது சிதைக்கு தீ மூட்டியபோது பெண் எருமையும் தீக்குளிக்க உள்ளே பாய்ந்து இறந்தது.

வரமுனி என்ற முனிவர் தனக்கு நிகர் எவருமில்லை என தலைக்கனம் கொண்டிருந்தார். மற்ற முனிவர்களிடம் மகிஷம்போல் அவமரியாதையாக நடந்து கொண்டதால் முனிவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை எருமையாகப் பிறக்க சாபமிட்டனர். சாபம் பெற்றிருந்த வரமுனி ரம்பனின் மகனாக அப்போது அதன் வயிற்றில் இருந்த ரக்த பீஜனாகிய மகிஷன் சிதையிலிருந்து வெளிப்பட்டான். அவனே மகிஷாசுரன். அவன் பிரமனை நோக்கித் தவமிருந்து ஸ்திரி மங்கையால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்படவேண்டும் என வரம் பெற்றான். அசுரர்களை ஒன்று திரட்டி அசுர வேந்தனாக முடி சூட்டிக் கொண்டான்.

வைஷ்ணவதேவி பூ உலகில் மணம் புரியாமல் தவமிருந்தார். நாரதர் மகிஷாசுரனைக் கண்டு தவமிருக்கும் வைஷ்ணவிதேவின் அழகைக் கூற, அவன் தன் தூதுவனை- வித்யுத்பிரமாவை அன்னையிடம் அணுப்பி தன் வீரதீரச் செயல்களைக் கூறி தன்னை மணக்க வேண்டினான். அன்னையின் தவம் கலையாதிருக்க தேவர்கள் அவன் படையுடன் போரிட்டு தோற்றனர். வித்யுத்பிரமா மகிஷனின் எண்ணத்தை வைஷ்ணவி தேவியிடம் கூறினான். தானே தன் தோழியர்களோ மகிஷனை மணக்கும் எண்ணம் இல்லை என்ற பதிலைக் கேட்ட மகிஷன் பெரும் படையை அனுப்ப மீண்டும் போர் நடந்தது.

பிரம்மனிடம் தேவர்களால் மரணமில்லா நிலையும், அமிர்த பலத்தையும், பிரம்ம தண்டத்தையும் பெற்று எல்லோரையும் துன்புறுத்திய மகிஷாசுரனை அழிக்க பராசக்தி தன் உடலிருந்து மஹேஸ்வரி-காமத்தை அழிக்கும் சிவன் அம்சம், வைஷ்ணவி-லோபத்தை அழிக்கும் விஷ்ணு அம்சம், ப்ராஹ்மீ-மதத்தை அழிக்கும் பிரம்ம அம்சம், கௌமாரி-மோகத்தை அழிக்கும் முருகன் அம்சம், இந்த்ராணி-மாச்சர்யத்தை அழிக்கும் இந்திரன் அம்சம், வராஹி-அசூயை குணத்தை அழிக்கும் விஷ்ணு அம்சம் ஆகிய அறுவரைத் தோற்றுவிக்க அறுவரும் விடாமல் அவனுடன் போர் புரிய அவன் உடலிருந்து பீரிட்ட இரத்தத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் தோன்றி தொடர்ந்து போர் புரிந்து பரிகாசம் செய்தனர்.

ஈசன் தன் நெற்றியிலிருந்து பத்ரகாளியைத் தோற்றுவித்தார். பார்வதி அவரை உருமாறக் கேட்க குரோதத்தை அழிக்கும் சிவன் அம்சமாக (சாமுண்டா-) தோன்றி அருள் பெற்று மற்ற அறுவருக்கும் முதல்வியாய் பெறுப்பேற்று போரிட்டாள். துர்க்கமன் என்ற அசுரனை கொன்றதால் துர்க்கை எனப் பெயர் பெற்றாள். அசுரர்கள் பக்கம் பெரும் அழிவு ஏற்பட தானே போரிடவந்தான் மகிஷாசூரன். நீண்ட யுத்தத்திற்குப்பின் அன்னை துர்க்கை மகிஷனை தன் சூலத்தால் குத்திக் கொன்றாள். மகிஷாசூரமர்த்தினி எனப்பெயர்.

துர்க்கை, மகிஷனை வதம் செய்தபின் அன்னையை சிவன் சாந்தமடையச் சொன்னதால்- மகிஷாசூரனை கொன்ற பிரமஹத்தி தோசம் நீங்க திருவிழிமீலலை வர கையிலிருந்த சூலாயுதம் நழுவி அருகில் உள்ள தடாகத்தில் விழுந்தது. அசுரனின் இரத்தம் சூலத்திலிருந்து தடாகத்திற்கு மாற தடாக நீர் சிவப்பாகியது. துர்க்கை தடாகத்தில் குளித்து சூலத்தை கையில் எடுக்க அசரீரை ஒலித்தது. 12 ஆண்டுகள் இங்கு தவமிருக்க அசரீரி. தவத்திற்கு ஊறு ஏற்படாமல் இருக்க தவஸ்விக்ன விநாயகர் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 12 ஆண்டுகளுக்குப்பின் கையிலைநாதர் பார்வதியுடன் தோன்றி துர்க்கைக்கு பாபவிமோஷனம் அளித்தார். சிவன் கட்டளைப்படி இங்கு மகிஷாசுரமர்த்தினியாக குடி கொண்டதால்-அம்மன் குடி.. நினைத்தது நிறைவேற ராகு காலத்தில் வழிபாடு சிறப்பு. அமாவாசை இரவு 7மணிக்கு சிறப்பு பூஜை. குடும்ப ஒற்றுமை ஓங்கும். எதிரிகள் ஒடுங்குவர்.

போர், பூகம்பம் சூறாவெளி, வெள்ளம் இவற்றின் அச்சங்களைப் போக்குபவள். கால்-காற்று, காலரூபினி கரியநிறமுள்ளவள். காலரூபத்தில் நியதிக்கு அடங்கி வெளி உருவை அழிக்கும் பிராணசக்தி. தீயவர்களுக்கு அச்சம்தரும் விதமாக வாளும் துண்டித்த தலையும் கரத்தில் தாங்கி இருகைகள் அபயவரதத்துடன். நோய்களைத் தீர்ப்பவள். 

ஸ்ரீசக்ர அஷ்டகாளிகள்- ஸ்ரீகாளி, ஸ்ரீபத்ரகாளி, ஸ்ரீமகாகாளி, ஸ்ரீகாளாராத்திரி, ஸ்ரீசர்வமயாமுண்டி, ஸ்ரீசாமுண்டி, ஸ்ரீசரசண்டிகை, ஸ்ரீபைரவி. .

ஸ்ரீதக்ஷிணகாளியின் தாத்பர்யம்- பரந்து அடர்த்தியாக விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் அகன்ற நாக்கு கோரைப்பற்கள், கருத்த திருமேனியில் பருத்த தனங்கள், 51 கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட பல கரங்கள் கொண்டு புனையப்பட்ட சிற்றாடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறுகரத்தில் குருதி கொட்டும் அசுரனின் தலையுடன் சடலமாக தரையில் கிடக்கும் சிவன் மார்பில் தன் இரு கால்களைப் பதித்து விசித்திர தரிசனம்.

இத் தோற்றத்திற்கான அற்புத தத்துவங்கள்- உயிர்கள் அவளிடமே தோன்றி அவளிடமே ஒடுங்குகின்றன என்பதை அவள் மாலையிலுள்ள கபாலங்கள் உணர்த்தும். மக்கள் செய்யும் நல்வினை, தீவினை அனைத்திற்கும் சக்தியாக இருப்பவள் அவள் என்பதை உடைந்த கரங்கள் கொண்ட உடை அறிவிக்கும். ஆணவத்துடன் மனிதன் செய்யுமற்ப காரியங்களை காலக்கிரமத்தில் அவள் வெட்டி வீழ்த்துகின்றாள் என்பதை வலது மேற்கரத்திலுள்ள வாள் தெரிவிக்கும். இயற்கை நடை முறைகளுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் மனிதன் இறுதியில் தாயின் வாளுக்கு பலியாகி விடுவான் என்பதை வெட்டுண்ட சிரம் விவரிக்கும். காளியை ஆராதிப்பன் வீரனாக இருக்க வேண்டும். பயம் கொண்டவர்களுக்கு அவள் அருள் கிட்டாது. மரண ஸ்வரூபிணியான் அவள் அனுதினமும் சம்ஹாரத் தொழிலை செய்கின்றாள். என்பதை செந்நிற நாக்கு தெரிவிக்கும். காளின் கோரத்தாண்டவம் ஆடும் இடம் சுடுகாடு. ஆசை, காமம், வெகுளி எல்லாம் பஸ்பமாகும் இடமான சுடுகாடாக நம் மனம் மாற வேண்டும் என்பதை தாண்டவம் குறிக்கும்.

தாருகனை வதம் செய்த பின்னரும் காளின் கோபம் தணியாததால் உலக உயிர்களைக் காப்பாற்ற சிவனார் தரையில் சடலம்போல் படுத்திருக்க அவர் மார்பில் ஏறி ஊழிக்கூத்தாடினாள் காளி. உடன் சிவனார் கைக்குழைந்தையாக மாறி அழுக காளியின் கவனம் குழந்தைமீது திரும்ப தாய்ப்பாசம் பீறிட குழந்தையை வாரி எடுத்து ஸ்தன்ய பானம் கொடுத்தாள். குழந்தையான சிவன் காளியின் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த கோபத்தையும் சேர்த்து பாலாக உறிஞ்சி விடவே காளி சாந்தமடைந்தாள். இதனால் சிவனுக்கு சேத்திரபாலன் என்ற பெயர் உண்டானது. அப்போது அந்த கோபசக்தியினால் சிவனிடமிருந்து அஷ்டசேத்ரபாலர்கள் தோன்றினர்.

உக்கிரம் தனியத் தனிய அழகிய நங்கையானாள். அவளை மேலும் சாந்தப் படுத்த மகேசன் நர்த்தனம் புரிந்தார். அதனால் கவரப்பட்ட காளியும் நடனம் ஆடினாள். அன்று முதல் சந்தியா நேரத்தில் ஈசனும் காளியும் சந்தியா தாண்டவம் ஆடலானார்கள்

ஸ்ரீகாளியின் மூல மந்திரத்தால் யாகம் செய்தால் அதிதீயான தைரியம், வாக்குவன்மை, முன்கூட்டியே அறியும் தன்மை, நிலையான செல்வம், நோயற்ற வாழ்வு கிட்டும்.

கிராமங்களில் இந்த எழுவரையும் கன்னிமாராக 1.பட்டரிகா, 2.தேவகன்னிகா, 3.பத்ம கன்னிகா, 4.சிந்து கன்னிகா, 5.அகஜா கன்னிகா, 6.வன கன்னிகா, 7.சுமதி கன்னிகா எனப் போற்றி வழிபடுகின்றனர்

இரண்யன் வம்சத்தில் பிறந்த சும்பன், நிகம்பன் அசுரர்கள் பிரம்மனிடம் பெண்களைத்தவிர மற்ற எவராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று பெற்ற வரத்தினால் ஆணவம் கொண்டு அனைவரையும் துன்புறுத்த தேவர்கள் தேவியை சரணடைய நீராடிக்கொண்டிருந்த தேவி தன் உடம்பிலிருந்து ஒர் சக்தியை தோற்றுவித்து- கௌசிகி அனுப்பியதால் தேவி நீல நிறமானாள். சும்ப நிகம்பர்கள் தேவியைப் பற்றி உளவு பார்க்க அனுப்பியவர்கள் தேவியின் சேனைப் பற்றிச் சொல்லாமல் அவரின் அழகு பற்றிச் சொல்ல சுக்ரீவன் எனும் தூதுவன் மூலம் மணம் புரிய தூது விடுத்தனர். தேவி போரில் என்னை யார் வெல்லப் போகின்றார்களோ அவர்களையே தான் மணமுடிப்பதாகச் சொன்னார். தூம்ரலோசனன் என்ற சேனாபதி தேவியால் எரித்துக் கொல்லப்பட சண்டன் முண்டன் என்ற இரு சேனாதிபதிகள் வர அவர்களையும் சம்ஹரித்தாள் தேவி. அதனால் அன்னை அவளுக்கு சாமுண்டா எனப்பெயர் சூட்டினாள்.

தன் சேனாபதிகள் இறந்ததனால் சும்பன், நிகம்பன் இருவருமே சேனாபதி ரத்த பிந்துவுடன் போருக்கு வந்தனர். ரத்த பிந்து உடம்பிலிருந்து கீழே விழுந்த ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அசுரர்கள் தோன்றிவே அன்னையிடமிருந்து அஷ்ட மாத்ருகா- அஷ்ட துர்க்கைகள்: 1.வசினி, 2.காமெசி, 3.மோதினி, 4.விமலா, 5.அருணா, 6.ஜயினி, 7.சர்வேஸ்வரி, 8.கௌலினி தோன்றினர்.

அன்னையின் உடம்பின் ஒவ்வொரு பாகத்திலிருந்து 64 பேரைத் தோற்றுவித்தாள். எட்டு பேராக பிரித்து அவர்களுக்கு ஒரு தலைவியாக இந்த எட்டு பேரையும் தோற்றுவித்தாள். அஷ்டமாசித்தி பெற்ற அந்த தெய்வங்கள் ஒவ்வொரு தலைவிக்கும் தங்கள் திவ்ய சக்திகளை வழங்கினார்கள். இந்த 64 பேரும் யோகினிகள் எனப்பட்டனர். ஒவ்வொரு யோகினிக்குள்ளும் ஒரு கோடி யோகினிகள். மொத்தம் 64 கோடி யோகினிகள். இவர்கள் இரத்த பீஜனின் உடலிலிருந்து ரத்தம் கீழே சிந்தி உயிர் பெறுவதற்கு முன்பே இரத்தம் நிலத்தில் வீழாமல் குடிக்க ரத்தபீஜன், சும்பன், நிகம்பன் அசுரர்களை வதம் செய்தாள். இவர்கள் உலக இயக்கங்களுக்கு காரணமாகிறார்கள். சாக்தம் எனப்படும் சக்தி வழிபாட்டின் முக்கிய பரிவாரங்கள் இந்த யோகினிகள்தாம்.

துர்க்கா பூஜை ஆஸ்வின் மாதம்-புரட்டாசி கிருஷ்ணபட்சத்தில் நவமியன்று தொடங்கி பதினைந்து தினங்கள் பூஜை செய்து சுக்லபட்ச தசமியன்று நீரில் சேர்க்க வேண்டும். மிருக பலி யில்லாமல் செய்யும் பூஜை வைஷ்ணவி பூஜை-சாத்வீகபூஜை. விலங்குகளை பலிகொடுத்து செய்யும் பூஜை துர்கா பூஜை. பலிகளை சப்தமி, நவமி திதிகளில் செய்யலாம். அஷ்டமியில் செய்யக்கூடாது.

சிவபெருமானின் மனைவி என்பதால் சிவை. விஷ்ணுவின் அம்சம் வைஷ்ணவி/ விஷ்ணுவின் மாயை, நாராயணின் சக்தியைப் பெற்றிருப்பதால் நாராயணி. மேலும் இஷானி, சத்யை, நித்யை, சனாதனி, பகவதி, சர்வானி, சர்வமங்களா, கௌரி, பார்வதி, அம்பிகை என்று பல பெயர்கள் கொண்டவள்.

நரம்பின் அதிபதியான இவள் சினம் கொண்டாள் ஊரில் கலகம் உண்டாகும். தயிர் அபிஷேகம், அவல், சேமியா நிவேதனங்கள் படைத்து விநியோகம் நலன். பக்தர்களின் துன்பங்களை நீக்குபவள்.

“ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ, சாமுண்டா ப்ரசோதயாத்.

துக்கங்களை போக்குவதால் துர்க்கா என்றழைக்கப்படும் துர்க்காவின் மற்ற திருநாமங்கள்!
வனதுர்க்கா-கொற்றவை. மகாவித்யாவே வனதுர்க்கையாவாள். வனம்-காடு. தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய காட்டிலிருந்து காப்பவள். - கதிராமங்கலம், தருமபுரம் (மயிலாடுதுறை)

சூலினிதுர்க்கா- சரபேஸ்வரின் இறக்கை ஒன்றில் இருப்பவள். சிவனின் உக்ரவடிவானவள். முத்தலை சூலத்தினை கையில் வைத்திருப்பதால் சூலினி துர்க்கா. - அம்பர்மாகாளம்

ஜாதவேதோ துர்க்கா- சிவனின் நெற்றிக் கண்னிலிருந்து உருவான தீப்பொறிகளை கங்கையில் சேர்த்ததால் ஜாதவேதோ எனப்பெயர்.

சாந்தி துர்க்கா- தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவ வழி செய்பவள்.

சபரி துர்க்கா- சிவன் வேடுவ உருவம் எடுத்தபோது வேடுவச்சி உருவம் எடுத்த பார்வதியார் சபரிதுர்க்கா.

ஜ்வால துர்க்கா-ஆதிபராசக்தி பாண்டாசுரன் போரில் எதிரிகள் அருகில் வராமல் இருக்க அக்னி ஜ்வாலையுடன் கூடிய பெரிய நெருப்பு வட்டத்தை அமைத்தவள் இந்த ஜ்வாலாதுர்க்கா.

லவணதுர்க்கா- லவணாசுரனை அழிக்க புறப்பட்ட லட்சுமணன் வெற்றி கிடைக்க வழிபட்ட துர்க்கை லவண துர்க்கா

தீபதுர்க்கா -பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்ற அக இருளை நீக்கி மெய்ஞாசமான ஒளியை வழங்குவது தீபதுர்க்கா.

ஆசுரி துர்க்கா-பக்தர்களிடையே உள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்பவள். ஆசுரி துர்க்கா.


சப்த கன்னியர் -சப்த மங்கையர்-சப்த மாதர்
சப்த மங்கையரும் காளிதேவிக்குத் துணையாகப் போருக்குச் செல்லுமுன் ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்தனர். சக்கரப்பள்ளி- சக்ரமங்கை, ஹரிமங்கை- அரிமங்கை, சூலமங்கலம்- சூலமங்கை, நல்லிச்சேரி- நந்திமங்கை, பசுபதிகோவில்- பசுமங்கை, பசுபதிகோவில் -தாழமங்கை, பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை இந்த எழு தலங்களிலும் மங்கைப் பருவ தேவியர் சிவ பூஜை செய்து சிவதரிசனம் பெற்ற ஏழு தலங்களும் சப்த மங்கைத் தலங்கள் எனப்பட்டன. ஏழு தலங்களும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள தலங்கள்.

அந்த தலங்களில் உள்ள அம்மன் பெண்களின் ஏழு பருவங்களையும் காட்சியாக ஒவ்வொரு தலத்தில் காசி தம்பதியினருக்கு அளித்துள்ளனர். சப்த மங்கைகள் தரிசித்த இந்த ஏழு தலங்களுக்கும் பார்வதி வந்தபோது இறைவன் சிறப்பு காட்சி தந்ததால் இத்தலங்களின் தரிசனம் 1.நெற்றிக்கண் தரிசனம், 2.கங்காதேவி தரிசனம், 3. திரிசூல தரிசனம், 4.பாத தரிசனம், 5.உடுக்கை தரிசனம், 6.மூன்றாம்பிறை தரிசனம், 7.நாக தரிசனம் எனப்படும்.

சப்த கன்னியர், மங்கையர், மாதர் !

1. பிராம்மி- - பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். சக்கரப்பள்ளி-சக்ரமங்கை- தேவாரப் பாடல் பெற்ற தலம். பிராம்மி வழிபட்டதால் சக்கரவாகீஸ்வரர் எனும் திருப்பெயருடன் மங்கை சேர்ந்து சக்கரமங்கை என அழைக்கப் படுகின்றது. இந்த அம்பிகை தேவநாயகி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கு இணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் முதலாவதான பேதைப் பருவ சிறுமியாக காட்சி. பிராம்மி-பிரம்மாவின் படைப்புக்கு துணை, அன்னவாகனம். நான்கு கரங்கள். குண்டம், அட்சயப் பாத்திரம், ஜெபமாலை, ஓமக் கரண்டி ஏந்தியிருப்பாள்.

2. மகேஸ்வரி-- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். ஹரிமங்கை- அரிமங்கை. நெல்லிவனமாக இருந்த இந்த இடத்தில் நெல்லிக்கனியை உண்டு சத்ய கங்கை தீர்த்தத்தில் நீராடி ஹரிமுக்தீசுவரரை வழிபட்டு மகாலட்சுமி, திருமாலை ஒருகாலும் பிரியா வரம் பெற்ற தலம். இந்த அம்பிகை ஞானம்பிகை, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் இரண்டாவதான பெதும்பை (பள்ளி) பருவ சிறுமியாக காட்சி. மகேஸ்வரி- ஈசனின் இடப்பக்கம் இருந்து தீமைகளை ஒழிப்பதில் உறுதுணை,

3. நாராயணி-(வைணவிதேவி) பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். நல்லிச்சேரி- நந்திமங்கை. நந்திகேசுவரர் ஈசனை பூஜித்து நடராஜர் பாத தரிசனம் கண்ட தலம். ஈசன் ஜம்புகேஸ்வரர். இந்த அம்பிகை அலங்காரவல்லி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் நான்காவதான கன்னிகை வடிவில் காட்சி. நாராயணி-அனைத்து உலகங்களையும் பரிபாலனம் செய்ய திருமாலுக்கு உதவி.

4. வாராகி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில்- பசுமங்கை. பசுபதி நாதரின் உடுக்கையிலிருந்து எழும் ஆதி நாதத்தைக் கேட்டு அதிலிருந்து பிரபஞ்சங்கள் உற்பத்தி ஆவதை அறிந்தாள் அம்பிகை. ஈசன்- பசுபதீஸ்வரர். பால்வளைநாயகி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஐந்தாவதான அரிவை எனப்படும் தாய்ப் பருவத்தினளாக காட்சி.

பரந்தாமனின் வராஹ வடிவுடன் இனைந்தவள், மேக நிறம். வராஹ-பன்றி முகம். கலப்பை, உலக்கை, வாள், கேடயம், சங்கு, சக்கரம், அபய வரத முத்திரையுடன் காட்சி தருபவள்.. காட்டுப்பன்றிகள் இழுக்கும் கிரி சக்ர ரதம் இவரது வாகனம். எப்பொழுதும் அம்பிகையை விட்டு நீங்காமல் இருக்கும் இரு சக்திகள் சியாமளா என்கிற மந்த்ரிணி, மற்றும் வாராஹி என்கிற தண்டினி ஆவர். இராஜராஜேஸ்வரியின் சேனாநாயகி. பயம் நீக்கி ஜயம் அருள்பவள். குற்றம் புரிந்தோரை தண்டிப்பதில் திட சித்தமும் தீர்க்கமான அறிவும், தீரமும், வீர்யமும் கொண்டவள். ‘வீர்யவதி” பிரளயத்தின்போது பூமியை வெளிக்கொணர விஷ்ணுவிற்கு துணையாகி பூமித்தாயானவள். நம் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்தியில் உறைபவள். காசி நகரை இரவில் உலாவந்து காப்பவள் வராஹியே!

ஆஷாட நவராத்திரி வராஹிக்கு உரியதாகப் கருதப் படுவதால் ஆனிமாத அமாவாசை முதல் ஒன்பதுநாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

காட்சி தலம்: திருமால்பூர் அருகில் உள்ள பள்ளூர், தஞ்சை பெரிய கோவில் அக்னிதிசையில். காசியில்.

வராஹி உபாசனை உள்ளவர்களிடம் வாதாடக்கூடாது என்பதற்கேற்ப வழக்குகளிலிருந்து விடுபட அருள். எலும்பிற்கு அதிதேவதையான வராஹி கோபமுற்றால் வாதமும் பித்தமும் ஏற்படும். பொதுவாக வெள்ளரிக்காயும், முறுக்கும் நிவேதனம். பஞ்சமி தினத்தன்று கிழங்கு வகைகள் சமைத்து விநியோகம் செய்தால் முன் வினைகள் அகலும். 5 பஞ்சமி / ஞாயிறு தினங்களில் நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டால் நற்பலன்.

“ஓம் சியாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”

5. இந்திராணி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில் –தாழமங்கை. தட்சன் சாபத்தால் தேய்ந்த சந்திரன் வழிபட்டத்தலம். தாழம் புதரில் தோன்றியவர் சந்திரமௌளீச்வரர். இந்த அம்பிகை ராஜராஜேஸ்வரி,, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கு இணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஆறாவதான தெரிவை வடிவில் காட்சி. இந்திராணி -இந்திரனுக்கு உதவி, ஐந்தீரி எனப்படுபவள். நான்கு தந்தங்களுடைய வெள்ளயானையை வாகனமாகக் கொண்டவள். இந்திர நீலக்கல்லின் நிறம். 1000 கண்களுடைய இவள் கரத்தில் வஜ்ராயுதம், பாசம், அங்குசம், தாமரை, அபயவரத முத்திரையுடன் காட்சி தருபவள். தாமரை மலரில் வீற்றிருப்பவள்.

விரும்பும் ஆடவரை மணக்க அருள் புரிவாள். சிவனை நோக்கித் தவமிருந்து இந்திரனை கணவனாய் அடைந்தாள். சதியின் அதிதேவதையான இவள் கோபம் கொண்டாள் அம்மை நோய் பெருகும். வேப்பிலையால் விசிறி சந்தனம் பூசி, பலாச்சுளை நிவேதனம் நலம்.
‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்”

6. கௌமாரி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். சூலமங்கலம்- சூலமங்கை- சூலதேவர் இங்குள்ள கிருத்திவாஸேஸ்வரிடம் எப்போதும் காவல் காக்கும் வரம் பெற்றார். இந்த அம்பிகை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் மூன்றாவதான மங்கை பருவத்தினளாக காட்சி. கௌமாரி-முருகனின் சக்தி, வாகனம் மயில். இரண்டு கைகள் ஒன்றில் ஈட்டி ஏந்தியிருப்பாள்.

7. சாமுண்டி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை. அஷ்ட நாகங்களுடன் வந்து வழிபட்டதால் நாகதோஷம் நீக்கும் தலம். பிரம்மன் தவம்செய்து வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர். இந்த அம்பிகை அல்லியங்கோதை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஏழாவதான பேரிளம் பருவத்தினளாக காட்சி மஹிஷாசுரமர்த்தினி, சிவகாளி, பத்ரகாளி எனப்படுபவள். ரத்த சாமுண்டா, ப்ரம்ம சாமுண்டா எனவும் துதிக்கப்படுபவள். சிவசக்தியின் அம்சம். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் போரில் வெற்றிபெற அருள் புரிபவள். மனித உடல் ஒன்றின் மீது அழுந்திய பாதம். ஈட்டி, மண்டைஓடு, சூலம், வாள்கள் ஏந்தியிருப்பாள்.

இந்த சப்தகன்னியர் -சப்த மங்கையர்-சப்தமாதர் ஏழு பேரும் தனித்தனியாகவோ அல்லது ஒன்று கூடி செல்லியம்மனாக பக்தர்களின் துயர் நீக்கி அருள்புரிய அருள் புரிந்தார் ஈசன்,

காளியின் பிரமஹத்தி!
அம்பன், அம்பாசூரன் அசுரர்களை கொன்றபாவம் தீர காளி வழி பட்டது.-அப்பர் மாகாளம்

#####

திங்கட்கிழமை, 16 July 2018 09:31

ராஜலட்சுமி சபை!

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

#####

ராஜலட்சுமி சபை!

லட்சுமி!

பிரம்மன் ஆலோசனைப்படி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மந்தாரமலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிராக்கி பாற்கடலைக்கடைய அதற்கு மகாவிஷ்ணு கூர்ம வடிவெடுத்து உதவி புரிய மற்றபொருட்கள் தோன்றியபோது லட்சுமியும் தோன்றினாள்.

எல்லா உலகங்களில் உள்ளவர்களாலும் பூஜிக்கப்படுபவள் லட்சுமி. சத்யம் தவறாதவர்கள், சூரிய- சந்திர மண்டலங்கள், பால், தானியம், உடைகள், சந்தனம், நகைகள், தூய இல்லங்கள், புஷ்பங்கள், மங்கலக் கலசங்கள் என மங்களகரமான எல்லா இடங்களிலும் அவள் வசிக்கின்றாள்.

இந்திரன் லக்ஷ்மியை தொடர்ந்து பூஜித்து வந்தான்- ஒருசமயம் துர்வாச மகரிஷி திருமகளிடமிருந்து பெற்ற மாலையை தேவேந்திரனிடம் கொடுத்தார். ஆணவம் சேர்ந்திருந்த நிலையில் அந்த மாலையின் பெருமையை அறியாத இந்திரன் யானையின் தலையில் வைத்தான். செருக்குடன் இருந்த வெள்ளையானையும் அந்த மாலையை பிய்த்துப் போட்டது. லட்சுமி தேவியின் மாலைக்குரிய மரியாதை தராத செயல் பிரமஹத்தி தோஷத்திற்குச் சமம். வெகுண்ட துர்வாசர் உன்னிடமிருக்கும் சகல செல்வங்களும் உன்னைவிட்டு விலகட்டும் எனச் சாபமிட்டார்.

ஒன்றை தவறு என தெரிந்தால் செய்ய மாட்டோம். செய்தபின் தெரிந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திரன் மன்னிப்பு கேட்டாலும் சாபப்படி லட்சுமி இந்திரனுடைய அமராவதி பட்டணத்தை விட்டு அகல சகல செல்வங்களையும் இழந்தான். பிரம்மனிடம் சென்று ஆலோசனை செய்தான். இருவரும் மகாவிஷ்ணுவிடம் செல்ல அவர் அருள் பெற்று லட்சுமி பூஜை செய்து இழந்த லட்சுமி கடாட்சமான செல்வங்களை பெற்றான்.

தன் கணவன் விஷ்ணு பெண் ரூப மெடுத்து சிவனுடன் கூடியதை அறிந்து அதிர்ச்சியும் கோபமும் கொண்டு சிவனிடம் தன் கோபத்தைக் காட்ட சிவனைத் தேடினாள். எங்கும் காணமுடியாததால் பூலோகத்திற்கு வந்தாள். தவமிருக்க ஆரம்பித்தாள். பல யுகங்கள் கடந்தன. வில்வ மர ரூபங்கொண்டு வில்வத்தை ஈசன்மேல் பொழிந்தாள். காலம் கனிய சிவன் காட்சி கொடுத்தார். ஐயப்பன் அவதாரம் நிகழவேண்டியிருந்த காரணத்தையும் அதற்காக நடந்த நிகழ்வுகள் அவை என்பதை விளக்கி லட்சுமியை அமைதிப்படுத்தினார். வில்வம் வர்ஷித்த லட்சுமியை ஐஸ்வர்ய லட்சுமியாய் திகழ வரம் அளித்தார். தன் அருளின் அடையாளமாக ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாக உருவகம் செய்து எப்போதும் விஷ்ணு மார்பில் இருக்கச் செய்தார். மகாலட்சுமியை தன் இதயத்தில் ஏற்று கௌஸ்துப மணியைத் தரித்திருக்கும் மகாவிஷ்ணு ஸ்ரீநிவாஸன் எனப் பெயர் பெற்றார். மகாலட்சுமியால் அவருக்கு மந்திரசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியாசக்தி அனைத்தும் கிடைத்தன. சுக்கிரன் யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இங்கு வழிபட்டுதான். இராவணன் சிவனை வழிபட்டு ஈஸ்வரப் பட்டம் பெற்ற தலம். மன்மதனுக்கு அரூப அழகுடலை அளித்ததால்-திருக்காமேஸ்வரர்- மன்மதபாணம் அம்பிகை மீதுபட்டதால்- சிவகாமசுந்தரி, மன்மதனுக்கு வைத்தியம்- வைத்தியநாதர். போகர், பாம்பாட்டிசித்தர், புலிப்பாணிசித்தர் தவம் மேற்கொண்ட தலம். வெள்ளூர்-முசிறி-6,திருச்சி-31

தஞ்சை மன்னன் கோச்செங்கன் பரிவாரங்களுடன் சிதம்பரம் சென்று தரிசனம் செய்து அடுத்தநாள் காலை திரும்பி வந்து விடுவது வழக்கம். ஒரு நாள் நடராஜரின் அர்த்தஜாம பூஜைக்காக அடர்ந்த காடாக இருந்த ஒருஊரைத் தாண்டிச் செல்லும்போது கொண்டுவந்திருந்த தீவட்டிகள் அனைந்து விடவே கூட வந்தர்கள் அடுத்த நாள் அவருடன் வர பயந்தனர். நடராஜர் தரிசனம் முடிந்து கண்ணயர்ந்த கோச்செங்கன் கனவில் மகாலட்சுமி தோன்றி என்னைக் கவனியாமல் நான் இருக்கும் ஊரை நீ தாண்டி சென்றதால் தீவட்டிகள் அணைந்தன என்றார். தீவெட்டியின் திரிகளை நிறுத்திவிட்டதால் திரி நின்றவூர் என்பது திருநின்றவூர் என்றானது. மகாலட்சுமி தினமும் சிவனை வணங்கியதால் காட்சி- பெருமாள் மார்பில் இருக்கும்படி வரம் பெற்றார்- மகாலட்சுமிபுரீஸ்வரர்.

தன்னை எப்போதும் கேலி செய்து கொண்டிருக்கும் திருமாலின் தலை ஒருநாள் கடலில் போய்விழ எனத் திருமகள் சொன்னது சாபமாக மாறியது. திருமால் ஒருசமயம் களைப்பால் தன்னிடமிருந்த வில்லை தன் மேவாய்க்கு முட்டுக் கொடுத்தபடி உறங்கினார். அப்போது குதிரைமுகம் கொண்ட அரக்கன் ஹயக்கிரீவனுடைய தொல்லைகள் தாளாமல் இந்திரன் பெருமாளிடம் முறையிட வந்தான். வந்தவன் திருமால் அயர்ந்து உறங்குவதைப் பார்த்து எழுப்ப மனமில்லாமல் அங்கேயே காத்திருந்தான். அப்போதும் திருமால் கண் திறக்க வில்லையாதலால் என்ன செய்வது என்று புரியாமல் முக்கண்ணனிடம் சென்று சொன்னான். அவர் ஆலோசனைப்படி கரையான் உருவெடுத்து வில்லின் நானை அறுக்க அறுபட்ட நாண் வேகத்துடன் சென்று திருமாலின் கழுத்தை அறுக்க அவர் தலை திருமகள் கொடுத்த சாபத்தினால் கடலில் போய் விழுந்தது.

திருமால் தலையில்லாமல் இருப்பதைப் பார்த்த இந்திரன் முதலான தேவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிரம்மா மற்றும் தேவர்கள் ஆதி சக்தியை வணங்க அன்னை தோன்றி குதிரை முகம் கொண்ட அரக்கன் தன் இனமான ஹயக்கிரீவனே தன்னைக் கொல்ல வேண்டும் என அரிய வரம் பெற்றுள்ளான். அந்த இனத்தில் அவன் ஒருவனே இப்போது உயிருடன் இருக்கின்றான். அதனால் அவனின் அட்டூழியங்கள் அளவிட முடியததாகிவிட்டது. அவன் அழியும் காலம் கூடிவந்துள்ளது. ஓர் அசுவத்தின் தலையை திருமாலுக்குப் பொருத்துங்கள் எனக் கூறினார். பிரம்மா அப்படியே செய்தார்.

ஹயக்கிரிவர் அசுர ஹயக்கிரிவனை வதம் செய்தார். ஆதி மகாலட்சுமி ஹயக்கிரிவருடன் இனைந்து வழிபடும் மக்களுக்கு அனைத்து செல்வத்தையும் வழங்குகின்றார்.

உலகம் உழிக்காலத்தில் அழிந்து எங்கும் நீர் நிலைகளாக இருக்க இரு உயிர்கள் தோன்றின. உயிர்களே இல்லாமல் தாங்கள் மட்டும் எப்படி உயிருடன் இருக்கின்றோம் என அதிசயப்பட்ட மது, கைடபர்கள் தங்களை உருவாக்கிய சக்தியை நோக்கித் தவம் இருந்தனர். சக்தி காட்சிதர தாங்கள் இருவரும் விரும்பினால் மட்டுக் மரணம் என வரம் பெற்றனர். பெற்ற வரத்தால் தங்களது திறமைகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. தோள்கள் திணவெடுத்தன.

பிரம்மா அந்தப் பக்கம் வர அவரிடம் சண்டையிட்டு அவரிடமிருந்த நான்கு வேதங்களையும் அபகரித்து பாதாள லோகத்தில் பதுக்கி வைத்தனர். பிரம்மா ஹயக்கிரிவரிடம் தஞ்சமடைந்தார். ஹயக்கிரிவர் அரக்கர்களிடம் போர் புரிந்தார். போர் 5000 ஆண்டுகள் ஆகியும் முடிவிற்கு வரவில்லை. ஹயக்கிரிவர் ஞானதிருஷ்டியில் அவர்கள் பெற்ற வரத்தை அறிந்தார். ஆதிசக்தியை நினைத்தார். ஆதிசக்தி அழகிய பெண்ணாக மோகினியாக அங்கு தோன்ற இரு அரக்கர்களின் கவனமும் சிதறியது. சித்தம் குழம்பியது. அழகியைக் கண்ட மயக்கத்தில் இருந்த இருவரையும் நோக்கி நீங்கள் வேண்டும் வரம் என்ன எனக் கோட்டார் திருமால். நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல –தவளை தன் இருப்பிடத்தை தன் குரலால் சொல்வதுபோல- செருக்கு கொண்ட அரக்கர்கள் உன் வரம் எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள் வேண்டுமானால் வரம் தருகின்றோம் நீ வேண்டுவது கேள் என்று தங்கள் அழிவிற்கு தங்கள் வாயாலே வழிதேடினர். திருமால் புன்னகையுடன் உங்களின் இருவரின் உயிர்தான் எனக்கு வரமாக வேண்டும் என்றார். மயக்கத்தில் தாங்கள் செய்த பிழையை உணர்ந்தனர். இருப்பினும் ஹயக்கிரிவருடன் போரிட்ட அரக்கர்கள் இருவரையும் வதம் செய்தார்.

உக்கிரமாக இருந்த ஹயக்ரீவரின் மடியில் லட்சுமி அமர்ந்தால் சாந்தமானார்-லட்சுமி ஹயக்ரீவர் எனப்பட்டார்.

துளசிச் செடி இல்லாத வீடு, சங்கு இல்லாதவீடு, சாளக்கிராமம் பூஜிக்காதவீடு, விஷ்ணு பக்தர்களை பழிக்கும் இல்லம், வேதியர்களுக்கு மரியாதை செய்து உணவளிக்காத இல்லம், விருந்தினரை வரவேற்று உபசரிக்காத இல்லம் ஆகியவற்றிலிருந்து லட்சுமி விலகிவிடுவாள் என்கின்றது வேதம்.

பூஜைக்கு உகந்த நாட்கள்- செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பௌர்ணமி தினங்கள் சிறப்பு, எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்- செந்தாமரை, தாழப்பூ, செண்பகம், முல்லை, மல்லி, பவளமல்லி (பாரிஜாதம்) சிறப்பு. தும்பை, அருகம்புல் தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்.

வரலட்சுமிவிரதம்: வற்றாத செல்வமும், நிலைத்த தாலிபாக்யமும், கீர்த்தியும் பெற அன்னை மகாலட்சுமிக்கு பூஜை- வரலட்சுமிவிரதம் இருந்து பூஜிக்க வேண்டும். ஆடி அல்லது ஆவணி பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை யன்று சுமங்கலிகள் அஷ்ட லட்சுமிகளையும் வணங்கும் பூஜையே வரலட்சுமி விரதம் ஆகும்.

வியாழக்கிழமை மாலையிலிருந்து பூஜைக்கான ஆயத்தங்களைத் துவக்கி வீட்டை நன்றாக சுத்தப்படுத்தி கலசம் தயார் செய்து கொள்ளவும். வெண்கலம் அல்லது வெள்ளிச் செம்பின் உள்ளே பச்சரிசி, காது ஓலை, கருகமணி, காசுகள், எழுமிச்சை பழம் ஆகியவற்றை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயால் வாயை மூடி நான்கு புறமும் மாவிலையை சொருகிவைக்கவும், சந்தனத்தை தேங்காயில் வைத்து அம்மன் முகத்தை பதிக்கலாம். அப்படி உருவம் இல்லாதோர் சந்தனத்தால் அம்மன் உருவம் செய்துகொள்ள வேண்டும். அல்லது சிலையை கலசத்திற்கு பக்கத்தில் வைக்கலாம். தலைவாழை இலையை சுத்தம் செய்து அதில் பச்சரிசி அல்லது நெல்லைப் பரப்பி அதன்மீது கலசத்தையும் சிலையையும் வைக்கவும். அன்னையை சிறப்பாக அலங்கரிக்கவும். அம்மன் கலசத்தின்முன் ஒன்பது (புகழ், அன்பு, கல்வி, செல்வம், வீரம், ஆரோக்கியம், சந்தான பாக்யம், வெற்றி இவைகளுடன் ஒன்பதாவது இழை மகாவிஷ்ணுவை குறிப்பதாகும்) இழைகள் கொண்ட நோன்புச் சரடுகளை வைக்கவும். அப்பம், பாயசம், கொழுக்கட்டை ஆகிய இனிப்பு வகைகளும், சுண்டல், போன்ற உப்பு பண்டங்களும் அன்னைக்கு படையலில் வைக்க தயாரித்து பாதுகாப்பாக வைக்கவும்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை காலை தலைக்கு குளித்து 1030-1200 மணி வரை ராகுகாலத்திற்குமுன் அம்மனை ‘மகாலட்சுமி தாயே! வரங்களைத் தரும் வரலட்சுமி எனப் புகழப்படும் தாயே எங்கள் இல்லத்திற்கு எழுந்தருள்வாய்’ என மெல்லிய குரலில் சொல்லி அழைத்து ஆரத்தி காட்ட வேண்டும். அர்ச்சனைக்குத் தேவையான் பூக்கள், குங்குமம் ஆகியவற்றைத் தயாராக வைக்கவும்.

மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து குங்கும் வைத்து பூஜை நல்லமுறையில் நடக்க வழிபட வேண்டும் வில்வம், துளசி, உதிரிப் பூக்கள் கொண்டு அன்னையை அர்ச்சனை செய்யவும். அம்மனை கிழக்கு நோக்கி வைத்து பூஜை செய்பவர்கள் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்யவும். அம்மனின் நூற்றியெட்டு நாமாவளி- பெயர்களைச் சொல்லி பூக்கள் / குங்குமத்தைப் அன்னையின் பாதத்தில் போடவும் மகாலட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா தோத்திரம் தெரிந்தவர்கள் பாடலாம். இசைத் தட்டுகளை இயக்கியும் கேட்கலாம். நிவேதனங்களை நீர் சுற்றி படைத்து சிறு கண்ணாடியை கொண்டுவந்து அம்மனுக்கு காட்ட வேண்டும். தெரிந்தவர்கள் வரலட்சுமி கதையைப் படிக்கவும். தசாங்கம், ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றி கற்பூரம் காட்டி தீப ஆராதனை செய்து பூஜை முடித்து பெரியவர்களிலிருந்து ஆரம்பித்து சரடு கட்டி விட வேண்டும். பின்னர் பிரசாதம் வழங்க வேண்டும். ரவிக்கை போன்ற வஸ்திரங்கள் தானம் செய்யலாம். மதியம் உறங்காமல் இருந்து மாலையில் பாடல்பாடி தீப ஆராதனை செய்ய வேண்டும்.

புனர் பூஜை: மறுநாள் சனிக்கிழமை காலை குளித்து அன்னைக்கு பூவிட்டு வணங்கி கற்பூரம் ஆராதனை காண்பித்து கலசத்தை இடப்புறமாக நகர்த்திவிட்டு பூக்களையும் மஞ்சள் பிள்ளையாரையும் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். அல்லது கால்படாத இடங்களில் வைக்கவும். கலச அரிசியை பொங்கல் செய்யவும். காசுகள், காதோலை, கருகமணி ஆகியவற்றை சுத்தம் செய்து பாதுகாப்பாக அடுத்த முறை பயன் படுத்த வைக்கவும். தாயே உன் அருளால் விரதத்தை நல்ல படியாக முடித்து விட்டேன். இதே போன்று வருடா வருடம் எந்த தடங்களுமின்றி இப்பூஜை நடைபெற அருள வேண்டும் என வேண்டி அம்மன் சிலை அல்லது முகம், நகைகள் ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து பத்திரமாக வைக்கவும். பிறகு வழக்கம்போல் உணவு உண்ணலாம்.

குறிப்பிட்ட நாளில் பூஜை செய்ய வசதிபடா நிலையில் உள்ள பெண்கள் வீட்டல் உள்ள ஆண்களைக் கொண்டு ஒரு தேங்காயை எடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லிவிட்டு பின் தொடரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் எடுத்து வைக்கப்பட்ட தேங்காயை கலசத்திற்குப் பயன் படுத்தி விரதம் இருந்து பூஜிக்கலாம்.

மகாலட்சுமியை வணங்கும் முறை!
தேவியின் திருப்பாதங்களை மனதில் வைத்து தியானைத்தாள் மோட்சம்,
தேவியை மடிமீது வைத்து குழந்தையாய் தியானித்தால்- தனபாக்கியம்
தேவியை மனதில் வைத்து தியானித்தால்- குழந்தைச் செல்வம்
தேவியை இதயத்தில் வைத்து தியானித்தால்- காரியசித்தி
தேவியை கழுத்தில் வைத்து தியானித்தால்- ரத்ண ஆபரணங்கள்
தேவியை தலையில் வைத்து தியானித்தால்- உதறித் தள்ளுவாள்

ராஜலட்சுமி சபை!
தொழில் முன்னேற்றம், செல்வச் செழிப்பு, தானிய விருத்தி,சந்தான பாக்யம், மனதில் தைரியம், வெற்றிகள் கிட்டும் இல்லத்திலும் மனதிலும் மங்களங்கள் தங்க இந்த அஷ்டலட்சுமிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அந்த இடமே ராஜலட்சுமி சபை.
கஜலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, தான்ய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி, தைரிய லட்சுமி,

#####

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 12:17

கல்கி அவதாரம்!

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

####

கல்கி அவதாரம்!

எல்லா கிரக தோஷங்களையும் நீக்கும். கலியுக அவதார புருஷர்.

விஷ்ணுவின் கல்கி அவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்குபவள் திரிபுர சுந்தரி

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13847653
All
13847653
Your IP: 172.69.63.58
2019-11-22 20:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg