குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
குருஸ்ரீ பகோரா
கள்ளுண்ணாமை!
ஓம்நமசிவய!
மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!
#####
கள்ளுண்ணாமை!
224. கழுநீர் பெற்று அருந்திய பின் பசுக்கள் மற்ற குளங்கள் தேடி நீர் குடிக்கப் போகா. கழுநீரை விரும்பி அதற்காக தாகத்தால் களைத்து உடலை வருந்தி நிற்கும். வாழ்விற்கு வளமையை அளிக்கும் நீர் என்பது சிவானந்தமானது. இதனை அருந்தாமல் முழுநீர் மாயமான மதுவை உண்பவர் நல்ல ஒழுக்கத்தினின்று விலகியவர் ஆவார்,
326. உள்ளத்தைச் சிவனிடம் செலுத்தி உருகச் செய்து சிவ சமாதியில் பொருந்திச் சிவானந்தம் நீங்காது அனுபவிக்காமல் அதை விட்டுச் சிவபெருமானின் நினைவு இல்லாது நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் கீழானதாகும்.
327 தேவி வழிபாடு செய்வோர் அம்மனுக்கு பிடிக்கும் எனக்கூறி மதுவை உண்டு அழிவர். காம்த்தில் ஈடுபாடு கொண்டோர் அதன் போதையிலே கலக்கமடைந்து நிற்பர். இறைவன் பேரைச் சொல்லி ஒளியுடன் விளங்குபவர் அதன் உள்ளே உணர்வை நிறுத்தி மகிழ்வர். சிவ நாம மகிமையை உணர்ந்து அனுபவிப்பர் அன்றே சிவனை அணுகும் இன்பம் எய்துவர்.
328. மறை உணர்த்தும் உண்மையை புரியாதவர் பசு, பதி, பாசம் ஆகியவற்றை அறியார். அவர் விரும்பியதை அளிக்கும் பெருமானின் அருளை துணைக் கொண்டு வாழ மாட்டார். உண்மையான சிவயோகத்தில் நிலைபெறமாட்டார் .உலகில் உள்ள நீர் கள்ளை எடுத்து அருந்தி உண்மையை உணராமல் இருப்பர்..
329. மயக்கம் தரும் சமய குற்றங்களைக் கொண்ட மூடர்கள் சமயத்தின் பேரைச் சொல்லி மயக்கம் தரும் மதுவை குடிப்பர். அவர்கள் நல்ல வழியை ஆராய்ந்து அறிய மாட்டார்கள். மயக்கம் தரும் மகாமாயையின் இருப்பிடம் மாயை ஆகும்., மயக்கத்தின்று தெளிந்த பின் செய்யும் வழிபாடும் நயக்கத்தையே தரும். அது சிவானந்தத்தை தராது.
330. உண்டவர மயங்கச் செய்வதும் இறந்தவரை எண்ணிக் கவலை அடையச் செய்வதும் கள்ளின் தன்மை. இயங்கிக் கொண்டிருக்கும் பெண் இன்பத்தை நாடும்படியும் தூண்டும். அவர்கள் நல்ல ஞானத்தில் ஈடுபடார். அவருக்கு என்றும் திகழும் இடையறா சிவானந்த ஆனந்தம் கிட்டாது.
331. இரவு பகல் என்ற நிலை அற்று தனனை மறந்த நிலையில் இருந்து பிற எண்ணங்களை அகற்றி சிவானந்த தேனை உலக உயிர்கள் விரும்ப மாட்டார். இரவும் பகலும் இல்லாத் திருவடி இன்பத்தில் மூழ்கி இரண்டும் உள்ள அசுத்த மாயை சுத்த மாயை என்ற இரண்டையும் நீங்கி நின்றேன்.
332. சக்தியை வழிபடுவோர் ச்க்தியின் அருளை வேண்டி கள்ளை உண்பர். மதுவுண்டு மறந்திருத்தலால் அறிவின் சக்தி கெட்டுவிடும். சக்தி என்பது சிவஞானத்தில் மூழ்கி நிலைபெற்று ஞானத்தை அடைவதாகும்.
333. சக்தியை உடைய இறைவன் அருள் செய்தால் அக்தியின் அருள் கிட்டும். சக்தி அருள் செய்யின் சிவன் அருள் கிட்டும். சக்தி சிவன் இரண்டும் பொருந்தியுள்ள விந்து நாதங்களை உணர்ந்து இருப்பவர்களுக்கு சக்தி வடிவம் தோன்றி எட்டு பெருஞ் சித்திகளும் கிட்டும்.
334. சிவானந்ததேன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து தத்துவங்களால் மயங்கிய அறிவை நீக்கி சிவத்தை உபாயத்தினால் அடையலாம் என்று செய்யப்படும் பொய்யான தவங்களை நீங்கி உண்மையான சிவபோகத்துள் செலுத்தி மேலன சிவானந்தம் கிட்டச் செய்யும்.
335. யோகிகள் சந்திர மண்டத்தில் பிராணனை வசப்படுத்தி சிவனந்தம் அளிக்கக்கூடிய அமிதத்தை அருந்துபவர். எட்டு சித்திகளைப் பெற விரும்புவோர் கள்ளைக் குடித்து மூடராய் மோகங்கொண்டு ஏற்படும் பற்றால் இருக்கும் அறிவையும் இழந்து விடுவர்.
336. இறப்பு என்பதை மாற்றக்கூடிய ஒளியினை அறிய மாட்டீர்கள். சிவபெருமானின் திருவடிகளை பற்றியிருக்க மாட்டீர்கள். தியானத்தில் சிவப் பேரொளியை விரும்பி பொருந்தமாட்டீர். அருள் என்ற நீர் பெருக்கால் நன்மை அளிக்கும் தூய ஒளியைப் பற்றி சென்று பிராணன் போகும் வழியை காணுங்கள்.
#####
நடுவு நிலைமை!
ஓம்நமசிவய!
பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!
#####
நடுவு நிலைமை!
320. உச்சியின் நடுவில் உள்ள சகஸ்ரதளத்தில் விளங்கும் ஒளியை அடையாதவர்க்கு ஞானம் கிட்டாது. அங்கு நிற்பவர்க்கு நரகம் கிட்டாது. அவ்வாறு நின்றவர் நல்ல தேவரும் ஆவார். நடுவு நின்ற அடியார் வழி நானும் சென்றேன்.
321 காக்கின்ற இயல்புடைய கரிய நிறமுடைய திருமாலும் நடுவில் நின்றான். படைக்கும் தன்மையுடன் மறைகளை ஓதும் நான்முகனும் நடுவில் நின்றான். சிவ ஞானியர்களும் நடுவில் நின்றனர். இம்முறையால் நடுவு நின்றோர் நல்ல நம்பனாகி சிவபெருமானாய் திகழ்வார்.
322. நடுவு நிற்பவர் சிவ நினைவு உடையவர் ஆவார். நடுவு நின்றபின் தேவருமாவார். சிவ உலகம் தூய மாயையிடத்தில் உள்ளது, சிவனாகிய பெரு வாழ்வும் அடைவாருடன் கூடி நாணும் நின்றேன்..
####
கல்லாமை!
ஓம்நமசிவய!
ஆங்காரம்முளை அறுப்பாய் பாங்கார் இன்பப்
பராபர கற்றவர் விழுங்கும் கனியே ! மற்றவர்
காணாமலையே சொல்லொடு பொருளின் தொடர்பே
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!
#####
கல்லாமை!
310. பண்டைய காலத்தில் குரு முறைப்படி கல்வி கற்காமல் கருத்தில் தெய்வக் காட்சியை உணர்ந்தவர் இறைவன் அருளால் அனுக்கிரகம் பெற்றவர் ஆவார். அவர்கள் உலகைப் பற்றாமல் சிவத்தைப் பற்றி நிற்பர். முறையாகக் கல்வி கற்றவராயினும் கல்லாதவர் பெற்ற சிவ அனுபத்தை அடைவதில்லை.
311. சிவ அருளைப் பெற்ற வல்லவர்கள் உண்மை வழியில் எப்போதும் இயந்து நடப்பர். சிவத்தின் அருளைப் பெறாத்வர்கள் உலக வழக்கில் பல நெறிகள் உண்டு என்பர். எம்பெருமானே எல்லா நெறியாய் விளங்குகின்றார் என்பதை கல்லாதவர் இந்த தன்மையை அறியாதவர் ஆவர்.
312. நிலையில்லாப் பொருட்களையெல்லாம் நிலையுடையதாயும் நிலையில்லா உடலை நிலையுடையதாயும் நினைக்கும் உயிர்களே! எல்லா உயிர்களுக்கும் இறைவனே தாரகம் என்ற உண்மையை உணராத நெஞ்சில் அவன் உணரப்படாதவன் ஆக இருப்பான்.
313. இறை அருள் பெறாமல் இருந்ததால் வினைத் துயரங்களுக்கு ஆளானேன். அறநெறி தத்துவத்தை கறகவில்லை மயக்கம் தருவனவற்றைக் கற்கின்றேன். அருளை அளிக்கும் சிவபெருமானை உள்ளத்தில் தியானிக்க வில்லை. வெளி உலக அனுபத்தில் மூழ்கி உள்ளேன்.
314. உயிர் உடலில் நிலைத்து நிற்காது என்ற உண்மையை உணர்ந்து சிவத்தின் அருளைப் பெற்றவர் தருமம் செய்து துறவறத்தில் திளைப்பர். அருளைப் பெறாதவர்கள் கீழானோர் கொடிய வினைகளால் ஏற்படும் துன்பங்களை அனுபவிப்பர்.
315. ஆகாயப் பெருவெளியில் விளைந்த சிவம் என்ற விளங்கனி கண்ணின் உள்ளே கலந்து அங்கு இருந்தது. உலக இயலைப் பெரிதாய் நினைத்து அங்கு வாழ்ந்து கொண்டு அறிவுதிறத்தால் இறைநிலையை பல படியாய் எழுதி வீணாக்கினர்.
316. ஞானத்தை அடைந்திருந்தால் மட்டுமே சிவன் எனும் விளங்கனியைப் பெற இயலும்.. அதை அறிந்தவர்க்கே காட்சி கைகூடும். ஞான சாதனையை அறிந்து உண்மைப் பொருளை உணர்ந்து பொருந்தி நிற்ப்பவரே உண்மையான கல்வியை கற்றவர் ஆவார்.
317. கல்வி கற்காத மூடரை காணவும் கூடாது. அவர் சொற்களைக் கேட்க வேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை. அனுபவம் இல்லா மூடரைவிட எழுதப் படிக்காதவர்கள் நல்லவர்கள். அனுபவம் இல்லாதவர் தம் உள்ளத்தில் சிவ அனுபவம் உணாரமாட்டார்.
318. கல்வி கற்றும் அனுபவ ஞானம் இல்லாத தீயவர் தீமையை உடைய மலங்களின் உறவை விடமாட்டார்கள். குற்றங்களை அறிந்து போக்கிக் கொல்லாத மூடர்கள். எல்லா திக்குகளிலும் உள்ள அறிஞர்களிடன் கூடி உண்மையை உணராதவர்கள். சிவஞானத்தால் சிவபெருமானிடம் அன்பு கொண்டு நிற்பவரே உண்மையான கணக்கு அறிந்தவர் ஆவார்.
319. அனைவர்க்கும் தலைவன் எம்பெருமான் தேவர்க்கும் மங்காத பெருஞ்சுடர் ஒளியாய் திகழ்பவன். சிவஞானம் பெற்ற ஒளியுடைய அடிகளார் போற்றும் பெருந்தெய்வம், அப்பெருமானை கற்றறிந்து விடுவோம் என்று சொன்னவர்கள் உள்ளே இருக்கும் சோதி எப்படி ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது அன்பதை அறியாதவர் ஆவார்.
#####
வேள்வி கேட்டு அமைதல்!
ஓம்நமசிவய!
தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!
#####
வேள்வி கேட்டு அமைதல்!
300. அறங்களைக் கேட்டும், அந்தணிரின் அறிவுரைகளைக் கேட்டும், பாவங்கள் இவை என்று சொல்லும் நீதி நூல்களைப் படித்தும், தேவர்களின் வழிபாட்டு மந்திரங்களைக் கேட்டும் மற்ற சமய் நூல்களைக் கேட்டும், பொன்னார் மேனியன் எம்பெருமானின் திறம் கேட்டும் பெற்றது சிவசக்தி மட்டுமே!.
301. எல்லாத் தேவர்களுக்கும் தலைவன் சிவபெருமான். அந்த திவ்விய ஒளியை வுடைய திருமூர்த்தியை அறியாதவர் யார்!. அவ்வாறு அறிந்தபின் சிவ நூல்களைக் கற்று உணருங்கள் கற்றவரிடம் உண்மையை கேட்டறியுங்கள். கற்றவற்றையும் கேட்டவற்றையும் அனுபவ்த்தில் உணருங்கள் அனுபவத்தில் உண்மையை உணர்ந்தவர் துதித்து சிவத்துடன் கூடி நிற்ப்பார்.
302. நந்தியாகிய சிவ்ன் வேண்டினால் திருமால் பணி செய்வார். நான்முகனும் ஆணைவழி நடந்து சிவனுக்கு பணி செய்வார். சிவனது ஆணைவழி நிற்பவர் தேவர்கள். சிவன் ஆணையை உணர்ந்து பணியாற்றுதலின் பயன் திருவடியில் நீங்காத பற்றினை அடைவர்,
303. பெருமான் இவர் எனப் பேசும் உண்மை ஞானம் பெற்ற உயிர்கள் பின்பு தேவரும் ஆவர். அரிய மேல் நிலையை அடைந்து மாதவத்தினை உடையவர்க்கு மகிழ்வுடன் அருள் செய்பவன் எங்கள் சிவபெருமான்
304.இறப்பும் பிறப்பும் வினையின் வழியே சிவன் அருல் செய்வான். இத்தன்மையை உணர்ந்துபிறர்க்குச் சொல்லியும் தானே பேசியும் மகிழ்வை அடைந்து அன்புடன் இருங்கள். சிவன் சிவசோதியாய் விளங்கி வாச மலரில் பொருந்தி அருள் செய்து கொண்டிருக்கின்றான்.
305. சிவனின் பெருமையும் அது சம்பந்தப்பட்ட கேள்வியும் கேள்வியால் ஏற்பட்ட ஞானமும் மனத்தில் சிந்திக்கும்போது நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கியிருந்தால் தேவர்களின் தலைவனான் எம்பெருமான் குறைவில்லாமல் அளவில்லாத காலம் அருள் புரிவான்.
306. உலகத்து தொடர்பினால் இறையணுபவம் உண்டாகும் எனச் சொல்வது மண்ணால் சோற்றைச் சமைத்து சிறுவர் உண்டு மகிழ்வது போல ஆகும். குறிப்பிட்டு சொல்லி அறிய முடியாத ஒன்றான சிவனின் பரந்த தன்மையை உணராதார் தன் ஆன்ம சொரூபத்தை அறியாதவர் ஆவர்.
307. உடம்பிற்கு சிறந்த துணையாவது உயிராகும். அந்த உயிருக்குத் துணையாய் இருப்பதோ உலகத்தில் உள்ள ஞானியரிடம் பெறும் கேள்வி அறிவாகும். அந்த அறிவால் பெருமானின் திருவடிகளை நினைந்து இருத்தலே சிறந்த துணையாகும். பெறுவதற்கரிய துணையைப் பற்றி கேட்பதே பிறவி நீங்க வாய்ப்பாகும்.
308. நான்முகன், ருத்திரன், திருமால் ஆகிய மூவர்க்கும் பழைமையானவர் சிவன். தன்னை இகழந்து கூறுபவரின் இடறுக்கு இடமாய் இருப்பவன். மகிழ்வுடன் அந்த ஆதி சிவனின் பெருமையை துதித்து உணராமல் விலகி நின்றவர்க்கு அவன் கல்லில் செதுக்கிய கறபசு ஆவான்.
309. ஆன்மக்களிடம் தன்னை பெருத்தியுள்ள இறைவன் மனத்துடன் வாக்கையும் பொருத்தி உணர்ந்திருப்பவன். அப்பெருமானின் வடிவம் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டது. உடம்பின் அச்சிலிருந்து ஆணி கழன்றபோதும் ஆதியான சிவபெருமானை விரும்பி நின்றவரே பொருந்தி நிற்க முடியும்.
#####
கல்வி!
ஓம்நமசிவய!
கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!
#####
கல்வி!
290. உடல் தோன்றிய குறிப்பை அறிந்தேன். உயிர் அந்த உடலுடன் பொருந்திய காரணத்தை அறிந்தேன். அதனால் தேவர்களின் தலைவன் தடையின்றி என் உள்ளத்து நிறைந்தனன். உவர்ப்பு சுவை ஏற்படுத்தா கல்வி கற்றேன் நான்.
291. கல்வியைக் கற்றவர் எண்ணிப் பார்க்கும் காலத்து அவர்களது கருத்தில் ஞானக்கண் புலனாகி உண்மையைச் சிந்தித்து தான் கண்டவற்றை மற்றவற்கு சொல்லும்போது ஒரு கல்தூண் போன்று சலனமின்றி இருந்து உணர்த்தி அவருக்கும் ஞானக்கண் உண்டாகுமாறு செய்வர்.
292. உடலில் உயிர் உள்ளபோதே உடல் தன்மை நிலையானது இல்லை என்பதை அறிந்து உயிருக்கு உறுதி தரும் இறை ஞானத்தை பெற முயற்சி செய்யுங்கள். அவ் உடலின் பாவங்கள் எல்லாம் விலகும். குற்றம் இல்லா சொற்களைச் சொல்லி இறைவனை துதியுங்கள். எதையும் ஒப்பிட்டுச் சொல்ல இயலாத பேரொளியாக சிவன் தோன்றுவான்.
293. உலகியல் கல்வியைக் கற்றவர் உண்மையான கல்வி அறிவின்று பிரணவத்தினின்று மாறுபட்ட வழியில் செல்வர். உலகியல் பற்றினால் குண்டலியின் ஆற்றலை பெருக்காமல் வீணாக்குவர். இரவு பகல் என்று நினையாமல் இறைவனை வ்ழிபடுங்கள். இரசவாதத்தால் செய்த பொன்போன்று குண்டலினி ஆற்றலால் அழியாத உடல் அமையும்.
294 .இறைவனை வழிபடுபவர்க்கு தூய சோதி துணையாகும். நல்ல சொற்கள் துணையாக அமையும். சுக்கிலம் கெடாமல் தூய்மையுடன் உடலுக்கு துணையாகி ஒளியாகி நிற்கும். பிரணவக் கல்வியே பிறவியில் துணையாய் வீடுபேற்றை அளிக்க வல்லது.
295. சுழுமுனை நாடியில் சென்று சிரசின் உச்சியில் பிரமரந்திரம் சொல்ல முடியாதவர்கள் காமத்தின் வயப்பட்டு சிவயோகப் பயன் கிட்டாமல் போய்விடும். முதுகுத்தண்டில் பயணித்து உச்சிக்கு சென்றவரிடம் ஐம்பொறிகள் ஒன்றும் செய்ய முடியாதவை ஆகிவிடும். உண்மைதனை அறியாமல் கீழ் தத்துவங்களை பற்றி மயங்கி அழிகின்றனர்.
296. சுழுமுனை நாடியில் செல்வார்க்கு இறைவன் நாத தத்துவத்தில் வெளிப்பட்டு தூய ஒளியை சிவன் வீசிக்கொண்டிருப்பான். அப்படி சந்திர மண்டலம் சென்றவர்க்கு மனம் பொருந்துகின்ற சுழுமுனை நூல் ஏணியைப் போன்றதாகும்
297. பிறவி நோய்க்கு மருந்தாய் இருந்த நூலேணியைப் பற்றியவர் ஞானத்தைப் பெற்றவர் அப்படி பற்றாதவர் முன்னமே கழிக்கப்பட துணையாகும். பெருமை மிக்க இறைவன் சிந்தையின் பழைய நிலையை அழிக்கக்கூடிய துணை ஆவான். தேவ வடிவத்துடன் ஏழு உலகங்களுக்கும் செல்ல வழித்துணயாவான்.
298. கடவுளை வழிபட பற்றுக் கோடாய் பற்ற சிவபெருமானை வழிபடுங்கள். அப்பெருமானின் அருள் எல்லாவற்றையும் இனிதாக முடிக்கும். உபாயத்தில் வல்லவர்கள் ஒளியுடைய தேவர்கள் அனுபவக் கல்வியுடையோரைவிட பேரின்பம் அடைபவர் இல்லை.
299 பரந்த கடலை உரிமையாக உடையவன். உயர்ந்த மலையை உடையவன். ஐம்பெரும் பூதங்களையும் தன் திருமேனியாகக் கொண்டவன். பூதங்கள் அழிந்து மாறுபடும் ஊழி தோறும் ஒளிவடிவான காளையின் மீது விளங்கும் தேவர்களின் தலைவன் தன்னை நினைந்து தமக்குரிய இடத்தை அமைத்துக் கொண்டவர் உள்ளத்தில் ஒளியாய் விளங்குபவன் ஆவான்.
#####
அன்பு செய்வாரை அறிவன் சிவன்!
ஓம்நமசிவய!
பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!
#####
அன்பு செய்வாரை அறிவன் சிவன்!
280. உயிர்கள் தன்னிடத்தே அன்பு செய்தலை இகழ்தலை மெய்அன்பு கொண்டிருத்தலை சிவன் அறிவான். மேலான தன்மைக்கேறற அருள் செய்யும் உத்தமன் அவன். தன்னிடம் தளிர்த்து வரும் அன்பு செய்ய வல்லார்க்கு மகிழ்ந்து அன்பு செய்யும் அளவிற்கு அருள்பவன்.
281. உயிர்கள் பேரின்பம் அடைவதற்கு வேண்டியதை வகுத்து அருளியவன் இறைவன். பிறவியில் வரும் துன்பங்கள் பல அவற்றைப் போக்குதற்குச் செய்யும் தொழிலும் பலவாகும். சிவபெருமான் திருவடியில் அன்பு செலுத்தினால் அவரின் திருவருள் வலிமையால் இப்பிறவி இன்பமாய் அமையும்.
282. அன்பு மனத்தின்மீது விளங்கும் சிவமான ஒளி இன்பம் வழங்கும் கண்ணையுடைய சக்தியுடன் அருள் புரிய திருவுளம் கொண்டதால் வலை போன்ற ஐம்பொறிகளின் தொடர்பு அகலும். அப்போது நன்மையுடைய சிந்தையுடன் சிவனை தொடர்பு கொண்டு துன்பப்படும் கண்ணியை அகற்றி விடலாம்.
283. புணர்சியால் சிற்றின்பம் கொள்ள மங்கையர் மீது வைக்கும் அன்பைப்போல் சிரசில் பொருந்தியிருக்கும் சிவத்தோடு ஒடுங்க வல்லவர்க்கு உணர்ச்சிகள் இல்லாது நாதத்துடன் பொருந்தி வெளிசென்று குலாவி உலாவுவதால் பெரும் பேரின்பம் இங்கு பெற்ற சிற்றின்பம் போல் அது இதுவாக இருக்கும்.
284. பேரின்பத்தில் திளைத்தவரோடு விளங்கும் சோதியானச் சிவனை சித்தர்கள் தம் ஆராய்ச்சியினால் அறிந்து கொள்ளமுடியாது. ஆனால் அடியார் பத்தியினால் வணங்க அவர்கட்கு வீடுபேற்றை அளிக்க அவர்முன் தோன்றுவான்.
285. நறுமணம் தரும் கொன்றை மலர் போன்ற மஞ்சள் நிற ஒளியையுடைய சிவனைப் பார்த்தேன்.கரிய நிறம் கொண்ட யானையையின் தோலைக் கிழித்தவன் திருவடியைக் கண்டேன். மூலாதாரத்தில் விளங்குபவனைக் கண்டேன். என் அன்பினால் அவனது காலில் இருக்கும் கழல் அணியைக் கண்டேன்.
286. நம்புதலுக்கு உகந்தவன். எல்லாப் பொருளாகவும் இருப்பவன் என்று தேவர்கள் போற்றும் தலைவன். இன்ப உருக்கொண்டவன், உயிர்களின் இன்பத்தில் பொருந்தி மகிழும் அன்பு வடிவானவன். அவனை யாரும் அறிய வில்லையே!
287. முன்பு அவனை வணங்கி பிறப்பு இறப்பு அறியாத ஞானியர் அன்பால் வழிபட்டு இறைவனை அறிந்துள்ளோம் என்பர். இன்பத்தால் வந்த பிறப்பும் இறப்பும் இல்லாதவர் நந்தியெம்பெருமான். இப்படி இருந்தும் மற்றவர் இறைவனை உணர்ந்து பிறப்பும் இறப்பும் போக்கிக்கொள்ள அறிந்து கொள்ளவில்லையே!
288. இரவும் பகலும் தன்னை பாசத்துள் வைத்து போற்றும் உயிர்களை இறைவன் அறிவான். உயிர்கள் ஒளிபெற்று அவ்வெளியிலே நின்று தனக்கு என ஒரு செயல் செய்யாமல் நின்றால் இறைவன் எழுந்தருளி பிரியாமல் உடன் தங்குவான்.
289. மென்மை மிகுந்த சோதியை விடுவதும் மீண்டும் பிடிப்பதும் ஏன்! உறுதியக்ப் பிடித்துக் கொண்டால் அவன் வழியே போகலாம். அதனால் எல்லையில்லாப் பெருமைதனைப் பெறுவேன். என் உயிரில் கலந்து நின்?ற ஈசனை இனிதாய் கலப்பதே மஞ்சள் நீராட்டு ஆகும்.
#####
அன்புடமை!
ஓம்நமசிவய!
அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!
#####
அன்புடமை!
270 அன்பாகிய சக்தியும் அறிவான சிவமும் ஒன்றல்ல இரண்டு என்பர் அறியாதவர். அன்பின் முதிர்ச்சியால் சிவமாகிய அறிவு விளங்கும் என்பதை உயர்ந்தவர் தாழ்ந்தவர் ஆகிய எவரும் உணர்வதில்லை. அன்புதான் சிவத்தை விளங்கச் செய்வது. என்பதை அறிந்த பின்பும் அன்பே வடிவாய் சிவமாம் தன்மையை அடைந்திருந்தார்.
271. பொன்னின் ஒளியைக் கடந்த புலித்தோலை உடுத்தியவன். மின்னைல் போன்று ஒளிக்கும் பிறைசந்திரனை பொருந்தியிருந்து வெண்மையான திருநீற்றை அணிந்து விளங்கும் அப்பெருமானிடம் பின்னிக் கிடந்தது என் பேரன்பு.
272 எழுமை விறகாகக் கொண்டு உடலின் தசையை அறுத்து பொன்போன்ற அக்னியிலிட்டு தீய்த்தாலும் அன்புடன் உருகி மனம் நெகிழ்பவரன்றி என்னைப்போல் இறைவனை அடைய முடியாது.
273. ஆர்வமுடன் அன்பு கொண்டவர் இறைவனைக் காண்பர். அன்பால் மன நெகிழ்வு ஏற்பட்டு ஈசன் திருவடிகளை தலையில் சூடுவர், அப்படியின்றி சம்சாரத்தின் சுமையைத் தாங்கி வருந்துவர் பிறவிக் கடலில் விழுந்து துன்புறுவர். அன்பில்லாத உயிர்கள் துன்பமான காட்டில் செல்லும் வழியறியாது வருந்துவர்.
274. அன்பு கொண்டு மனதை உருக்கி இறைவனை வழிபடுவீர். முதன்மையான அன்பினால் உள்ளம் உருக இறைவனை நாடுங்கள். அவ்வாறு நாடிய எனக்கு நந்தியம் பெருமான் என்னிடமுள்ள பாசத்தை போக்கி கருணைக் காட்டியதுவே அவன் அருள் காட்டும் விதமாகும்.
275. தானே தனியாய் நின்ற காலத்து சுயம்பு என்று நினைத்து வழிபட்டால் வானத்தில் ஒருகாலம் தக்க துணையாய் வழிபடுவோருக்கு இருப்பான். தேன்போல் இன்பம் தரும் மொழியை உடைய சக்தியை ஒரு பக்கத்தில் கொண்ட பொன் ஒளியில் விளங்கும் சிவன் தானே ஒரு நிற ஒளியைப் பெற்று என் அகத்தில் நின்றானே!.
276. உலகைப் படைத்து இன்பங்களை எல்லாம் அமைத்த உயிர்களுக்கு தலைவனான இறைவனிடம் அன்பு செலுத்துவதை எல்லா உயிர்களும் அறியாமல் இருக்கின்றன. உறுதியைத் தந்து இந்த அகண்ட உலகின் வாழ்வில் அன்பு கொண்டிருப்பதைத் தந்தபெருமான் அகண்ட உலகமாயும் விளங்குபவன்.
277. மனதில் பொருந்தி யிருக்கும்போது ஒளிரும் செம்பொன் போன்ற சோதியின் வடிவானவன் இறைவன். அவனை நினைத்தும் மனதில் வைத்தும் தலைவன் என்று போற்றியும் வணங்குங்கள். அன்புடன் யார் வேண்டினாலும் தேவர்களுக்குத் தலைவனான பெருமான் அன்பு ஒளியில் சிவ ஒளியைப் பெருகும்படி செய்வான்.
278. உயிர்கள் செய்த வினைக்கு ஈடாக பிறத்தலையும் இறத்தலையும் அமைத்தவன் இறைவன். அந்த முறையை அறிந்தும் உயிர்கள் உலக போகத்தில் விருப்பங் கொண்டுள்ளனர். என் தந்தையே எம்பிரானே என்று விரும்பி பெருமையுடைய சிவபெருமானை வணங்க வில்லையே!.
279. அறிவு கொண்டவர் அன்பில் இருப்பான். தன்னில் நிற்பது போன்றே மற்றவரிடம் நிற்பவன். அன்பே உடலாய் உள்ளவன், உலகத் தோற்றத்திற்கு முன்னும் பின்னும் அழியாது நிற்பவன். முனிவர்களுக்கு தலைவன். அன்பு கொண்டு எவர் ஒருவர் நிலையாய் பொருந்தினாலும் அவன் துணையாகி அவர் உய்யும்படி செய்வான்.
#####
அறன் செய்யாதவன் இயல்பு!
ஓம்நமசிவய!
ஓங்கார முகத்தொருத்தல் ஏங்கா துயிர்க்கருள்
இயற்கை எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய்
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் அருவே உருவே
அருவுருவே பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி!
#####
அறன் செய்யாதவன் இயல்பு!
260. பொருத்தமான நல்ல அறங்களைச் செய்யாதவர் செல்வம் எட்டி மரத்தில் பழுத்த பெரிய பழம் கீழே விழுந்து வீனாய் போவது போன்று போய்விடும். வட்டி வாங்கி சமபாதித்த பொருட்களைக் கவர்ந்து கொள்ளும் வஞ்சக எண்ணம் உடையவர் செல்வத்தின் பயனை அறியாதவர்.
261. காலங்கள் கழிந்து ஊழிகள் கடந்து, உள்ளத்துக் கற்பனைகள் கழிந்து வழ்நாளும் குறைந்து சத்து நீங்கி சக்கைபோல் ஆகி துன்பத்தை அடைந்த உடல்கள் பயனின்றி அழிந்து போயின. இதைப் பார்த்த உயிர்களும் அறத்தை அறியாமல் இருக்கின்ரனர்.
262. அறத்தினை அறியாமல் உயிர்கள் இருக்கின்றன, மேலான சிவன் பாதத்தை நினைத்து துதிக்கும் முறையையும் அறியார். சிவலோகத்தின் அருகிலிருக்கும் சுவர்கத்தினை அறியமாட்டர். உலக உயிர்கள் சொல்லும் பொய்யானவற்றைக் கேட்டு உலகப் பொருட்களையே விரும்பி பாவச் செயல்களைச் செய்வர். இதனால் பிறப்பு இறப்பு என்ற நிலையைப் பற்றியே இருப்பர்.
263. இருமலும், சோகையும், கோழையும், சுரமும் அறம் செய்யாதவர் அடைவர். மின்னலும் ,இடியும், பாம்பும், தொண்டை நோயும், வயிற்றுக் கட்டியும் அறம் செய்வார் அருகில் வராது.
264. உயிர்களின் போதனையால் தன் புகழை பெரிதாக எண்ணி இறைவனை வணங்க மாட்டார். தம்மிடம் வந்து இரந்தவர்க்கு ஒரு சிறிதேனும் கொடுகக மாட்டார். வழிப்போக்கர்களுக்கு நீர்பந்தல் அமைத்து உதவ மாட்டார். இத்தகைய நல்ல எண்ணம் கொண்டவர் நரகத்தில் நிலையாய் இருக்க விருப்பங் கொண்டுள்ளாரோ!
265. அருள் வழியில் நடக்காமல் தேவர் உலக இன்பங்கள் நீங்கும் வண்ணம் தீய நெறியில் நட்ப்பவர் இருளடைந்த நரகத்தில் நடப்பவர் ஆவர், .வினைகளால் உண்டாகும் குற்றங்களிருந்து நீங்கி நல்ல நெறியில் நிற்பவர் வினைக் கடலை கடந்தவர் ஆவார்.
266. உயிர்களிடத்து கருணைக் காட்டுவோர் இறைவனின் திருவடியைத் தரிசிப்பர். உலகப் பற்றை விட்டு துணிவுடன் தவம் செய்பவர் சாயுச்ச நிலையை அடைவர். உலக நிலையில் இருந்து அறம் அல்லாதவற்றைச் செய்பவருக்கு இறைவன் அருள் கிட்டாது மடிவர். காலனின் சினத்திற்கு ஆளாகி அச்சம் தரும் நரகில் வீழ்வர்.
267. இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் இப்பிறவியில் இருப்பதற்குகு காரணம் முன்பிறவியில் அவரவர் செய்த் அறச் செயலும் மறச் செயலும் ஆகும். அறம் செய்வதால் இன்பம் அடைவதைக் கண்டும் பிறர்க்கு கொடுப்பதை அறியாப் பேதைகள் சிந்தையில் அன்பு இல்லாதவராய் அறத்தை அறியமாட்டாதவர்கள்.
268. கேடு அடைவதும், ஆக்கம் அடைவதும் ஆகியவற்றை அளிப்பவன் இறைவன். அவன் நேர்மையற்ற செயல்களைச் செய்து இன்பங்களை அடைய அனுமதிக்க மாட்டான். தகுதியுடைய உயிர்கள் வறியவர்க்கு ஈதல் செய்தல் நன்று. பிறர் இன்பம் கெடுமாறு நடந்து கொள்வது விலங்கின் தன்மையாகும்.
269. சிலருக்கும் பலருக்கும் செல்வம் தருகின்றேன் என்று கூறும்ம் புல்லறிவாளரை அவருடைய் செல்வம் கருதி போற்றீப் புகழாமல் அழிவற்ற இன்பமான வீடுபேற்றை அளிக்கும் இறைவனை நினைந்து வாழ்த்துங்கள். வில்லிலிருந்து செல்லும் அம்பு இலக்கை தவறாது தாக்குவதுபோல் இறைவன் வறுமையை நீக்கி இன்பம் அளிப்பான்.
#####
அறம் செய்வான் திறம்!
ஓம்நமசிவய!
புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி!
#####
அறம் செய்வான் திறம்!
251. தம்மை அறிபவர் சிவபெருமானது திருவடியை வணங்குபவர் ஆவர். தம்மை அறிபவர் அறத்தை மெற்கொள்பவர். தம்மை அறிபவரே சில உண்மை தத்துவங்களை அறிபவர். தம்மை அறிபவர்க்கு இறைவனே உறவினன் ஆவான்.
252. எல்லோருக்கும் முடியக்கூடியது என்று சொன்னால் அது உணவை உண்பதற்கு முன்னால் இறைவனுக்கு ஒர் பச்சிலை வைத்து வணங்குதலும், பசுவுக்கு ஒருவாய் புல் அளித்தலும், உண்பதற்கு முன்பு சிறிது உணவை பிறர்க்கு கொடுத்து உண்பதும் பிறரிடம் இனிய சொற்களைப் பேசுதலும் ஆகும்
253. அகப்பற்று புறப்பற்று நீக்கிய ஞானியருக்கு அளிக்கும் உணவே அறமாகும் என்று அற நூல்கள் கூறுகின்றன. அவ்வாறிருந்தும் கல்வியால் சிறந்து விளங்கும் மனிதர் எதிர்பர்த்து ஒரு கிணற்றங்கரையிலோ அல்லது ஆற்றங்கரையிலோ உள்ள சிவஞானியரை அழைத்து உண்ணச் செய்வதன் பயனை அறியவில்லையே!
254. காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்களை நீக்கி அறிவைப் பெருக்கி அறம் செய்யாமல் இருப்பவரே! செல்வம் வந்த நாளிலும் அறம் செய்ய வில்லை, உலக நோக்கில் விழிப்புடன் இருந்து என்ன செய்யப் போகின்றீர். உடல் எரிந்து அழியும் வரை அறம் செய்யாமல் காத்திருந்து என்ன பயன்.
255. உயிரின் நிலையை அறியாமல், நல்லவர் என்று எண்ணாமல், இங்கு வறுமை உள்ளது என்பது அறியாமல், இளையவர் என்று கருதாமல் வலிமை உடைய உயிரை இயமன் கொண்டு செல்வான். .எனவே காலதேவன் வருமுன் உடலை நிலைக்கச் செய்ய நல்ல தவத்தை செய்வீர்!
256. அகப்பற்றும் புறப்பற்றும் துறந்தவர்க்கு உலகில் எந்த வகையிலும் உறவு இல்லை. இறந்து பட்டவருக்கு உலக இனபமும் இல்லை. இப்பிறவியில் அறம் செய்யாதவர்களுக்கு இறைவன் வழித் துணையும் இல்லை. இவர்கள் அறம் செய்யும் வகையை அறியாதவர்கள்.
257. அறிவை தெய்வமாக மதிக்கும் உயிர்கள் முற்பிறவிப்பில் செய்த தவத்தின் காரணமாக அறம் செய்து மேன்மை அடைவர். உடலே தெய்வம் என்று நினைக்கும் உயிர்கள் தானே தெய்வம் என்று எண்ணி அறம் செய்யாது இயமன் வருவதை அறியாது அழிந்து போவர்.
258. உயிர்களைப் பீடித்திருக்கும் வினையான கடலின்று கரையேறுவதற்கான் தோனியாய் உயிர்க்கும் உயிரின் உறவிற்கும் களைப்பை நீக்கி காகக இரண்டு வழிகள் உள. அழியாப் புகழை உடைய இறைவன் திருஅடியைப் பற்றி அறத்தை செய்வது ஒன்று. மற்றொன்று இல்வாழ்வை நிகழ்தக்கூடிய அறிவு. இவ்விரண்டுமே மறுமைக்கு துணையாகும்.
259. பற்றாய் நின்ற உண்மைப் பொருளை உலகில் குறைகள் ஏதும் சொல்லாதவனாய் அறநெறி தவிர பிற நெறியில் செல்லாமல் இருந்து உய்ர்கள் மற்றவர்க்கு கொடுத்த ஒன்றே துணையாகும். அது சிவம் வழிகாட்டிய முத்தி அடைவதற்கான வழியாகும்.
#####
வான் சிறப்பு! தானச் சிறப்பு!
ஓம்நமசிவய!
வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு
#####
வான் சிறப்பு!
248. அமுதத்தைபோன்ற வளமை தரும் மழை பெருகினால் இனிமையான அமுதூறும் பல மரங்கள் உலகத்தில் உருவாகும். பாக்கு, தென்னை, கரும்பு, வாழை மற்றும் சமாதி நிலைக்கான காஞ்சிரை முதலியவை தோன்றும்
249. சிரசுபோன்ற இமயமலையிலிருந்து பெருகிவரும் ஒளிமயமான வான் கங்கையைப் பற்றி உரைக்கச் சொல் இல்லை. உள்ளத்தில் உள்ள மனத்திலிருந்து உறும் நீரைப்போல் அதற்கு பிருத்வி கலப்பின்மையால் நுரை இல்லை. அழுக்கு இல்லை, தெளிவான தூய நீர், எல்லாப் பாவங்களையும் போக்கும் ஆறு என்பதால் அதற்கு கரையும் இல்லை.
#####
தானச் சிறப்பு!
250. அவர் உயர்ந்தோர் இவர் தழ்ந்தோர் என்று எண்ணாமல் எவரோயாயினும் அவர்க்குக் கொடுங்கள். வரும் விருந்தை எதிர்பார்த்து அவருடன் கூடி உண்ணுங்கள். பழம் பொருளை போற்றி காவல் காவாதீர். இம்மை மறுமையில் வேட்கை உடையவரே விரைவாக உண்ண வேண்டாம். காக்கைகள் மற்ற காக்கைகளை கரைந்து அழைத்து உண்பதை அறிந்து கொள்ளுங்கள்!
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.