gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

விலகிவந்தால் புரியும்! ஆபத்து!

     கடலில் வசிக்கும் ஒர் மீனுக்கு ஒரு சந்தேகம். தான் இருப்பது எங்கே! கடல் எங்கே இருக்கின்றது! அந்தக் கடலை நாம் எப்படிப் பார்ப்பது! தான் சந்திக்கும் எல்லா மீன்களையும் இதைப்பற்றிக் கேட்டது. அவைகள் நாங்களும் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் அது எங்கிருக்கின்றது என்றுதான் தெரியவில்லை என்று கூறியது.
    மிகுந்த ஏமாற்றத்துடன் அலைந்து திரிந்தமீன் ஒரு பெரிய மீனைச் சந்தித்தது. அந்த மீனிடம் தன் கேள்வியைக் கேட்டது. அந்த பெரியமீன் நீ எங்கே பிறந்தாயோ, எங்கே வளர்கிறாயோ, எங்கே இறக்கப்போகின்றாயோ அந்த இடம்தான் என்றது. ஒன்றும் புரியவில்லை. பதில் திருப்தியாகவும் இல்லை. எனவே அது எங்கே! என்று மீண்டும் கேட்டது. தெரியாது எனச் சொல்லிவிட்டு பெரியமீன் சென்றது.
    யாரிடம் கேட்கலாம் என்ற யோசனையில் வழிதவறி கரைக்கு அருகில் வந்தது. அலகளின் வேகத்தில் கரையில் வந்து விழுந்தது. உடன் அதன் கண்ணுக்கு கடல் தென்பட்டது. கடலிலிருந்து கொண்டு கடலைத்தேடினல் கடல் எப்படித் தெரியும். கடலைவிட்டுக் கரைக்கு வந்ததால் தெரிந்தது.
கடலிலிருந்து வெளியே வந்தால் தன்னுயிருக்கு ஆபத்து என்ற ஓர் உண்மையும் புலப்பட்டது.  துள்ளியது கடலில் மீண்டும் சேர்ந்தது.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

போலி!

    அந்த மருத்துவ மணையின் கதவுகளைச் சாத்தப்போகும் இரவு நேரம். உள்ளே சென்றுகொண்டிருந்த நோயாளி, அவன் படுக்கைக்கு அடுத்த படுகையில் இருந்த நோயாளி அவசரமாக வெளியில் சென்று கொண்டிருக்கக் கண்டான். என்ன விபரம் எனக் கேட்டான்.
   நாளைக்கு காலையில் எனக்கு அறுவை சிகிச்சை. அதுதான் ஓடுகிறேன் என்றான். அறுவை சிகிச்சையெல்லாம் இந்தக் காலத்தில் சாதாரணம், சிகிச்சைக்கு வந்துவிட்டு இப்படி பயந்து ஓடுகின்றயே என்றான் இவன்.
    நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் டாக்டரின் உதவியாளர் பேசியதைக் கேட்டபின் பயம் வந்திடுச்சு, என்றான்.
    அப்படி என்ன சொன்னார் எனக் கேட்டபோது, ‘இது ஒரு சின்ன ஆபரேஷன்தான், இதற்கெல்லாம் பயப்படக்கூடாது, தைரியமா இருக்கனும் சொன்னாங்க.’
     ‘சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார்கள்’ இதற்கு ஏன் பயப்படுகிறாய் என்றான்.
    ‘ஐயோ. அந்த உதவியாளர், எங்கிட்ட இதைச் சொல்லலே. அறுவை சிகிச்சை செய்யப்போற டாக்டர்கிட்டே சொன்னாங்க! அதைக் கேட்டவுடன்தான் நான் ஓடியாறேன் என்றான். இருவரும் ஓட்ட மெடுத்தனர்.
     பின்னர்தான் தெரிந்தது அந்த டாக்டர் ஒரு போலி என்று. நிச்சயமாக காலத்தின் போக்கில் ஒரு சமயத்தில் போலிகளின் உருவம் வெளிப்படும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

தீயவை கேட்கின் தீமை!

    ஒரு கோவில் யாணை இயல்பாகவே சாதுவான குணமுடையது. யாணைப் பாகனின் சொல்லுக்கு கீழ்படிந்து இருந்தது. கயவர்கள் பலர் யாணக்கூடத்தின் அருகே இரவில் சந்தித்து தங்களின் செயல்கள் பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். இரக்கம் அற்றவர்களாகவும், தயவு தாட்சண்யம் அற்றவர்களாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி அடிக்கடி கேட்ட யாணையின் செயல்களில் மாறுபாடு தெரிந்தது. ஒருநாள் திடிரென்று அது யாணைப்பாகனைத் தாக்கியது. பலத்த காயம் அடந்தான்.
   அதிகாரி மேலதிகாரியின் ஆலோசனையைக் கேட்டார். விசாரனை நடந்தது. முடிவில் நல்ல இயல்பான சாது குணமுடைய யாணை தொடர்ந்து தீவினைச் சொற்களை கேட்டதால் ஏற்பட்ட மாற்றம் என அறிந்து, இரவில் காவல் பலப்படுத்தப்பட்டது. யாணை தொடர்ந்து தீச்சொற்களை கேட்காததாலும், கோவிலில் நடந்த ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் பஜனை போன்றவைகளையே கேட்டதாலும் அதன் போக்கில் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. எனெவே எந்த ஆன்மாவாயிருந்தாலும் தொடர்ந்து துர்போதனைகளையும் கடுஞ்சொற்களையும் கேட்டுக்கொண்டிருந்தால் அந்த ஆத்மாவின் செயல்பாடுகளில் வக்ரம் தென்படும். இன்சொற்களே நல்ல பலன் தரும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

எதிரியின் சக்தி!

    ஒரு தீவிர பக்தரின் கனவில் ஆஞ்சநேயர் தரிசனம் தந்தார். பக்தன், அவருடன் தான் தாயம் விளயாட விருப்பம் தெரிவித்தார். நான் விளையாட்டில் விட்டு கொடுக்க மாட்டேன், நீ வருத்தமடையக் கூடாது என்று அனுமான் ஒரு நிபந்தனையைச் சொன்னார். சம்மதத்துடன் இருவரும் விளையாட ஆரம்பித்தனர். ஒவ்வொருமுறையும் ‘ஜெய் அனுமான்’, அல்லது ‘ஜெய் ஆஞ்சநேயா’ எனக்கூறி காய்களை உருட்டினார் பக்தர். ஆஞ்சநேயர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உருட்டினார். பலமுறை விளையாடியும் பக்தனே வெற்றி பெற்றான்.
   தோல்வியுற்றால் வருத்தப்படக்கூடது எனக்கூறிய ஆஞ்சநேயர் வருத்தமுற்றார். ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்தும் எனக்குத் தோல்வியா! என ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராமர் அவர்முன் தோன்றி, ஆஞ்சநேயா. நீ என் பக்தன். எனவே என் சக்தி உன்னிடம் இனைந்துள்ளது. அவன் உன் பக்தன். உன் சக்தி அவனிடம் இனைந்துள்ளது. ஆனால் நான் உன்னுள் இருப்பதால் உன்சக்தி இனையுமிடத்தில் என்சக்தியும் சேர்ந்துவிடும். நம் இருவரது சக்தி சேர்ந்திருப்பதுவே அவனது தொடர் வெற்றிக்கு காரணம் என்றார். எண்ண அதிர்வுகளால் ஒருவரின் மனதை நீங்கள் கவர்ந்து விட்டால் அவரிடமுள்ள அனைத்து சக்திகளும் உங்களுக்கு உதவும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

பாவம் போக்க இரண்டு தகடு!

    அந்த ஊர் மக்கள் அவசரமாக உரின் எல்லையில் உள்ளத் தோப்பிற்கு விரைந்து கொண்டிருந்தனர். நிறைய கூட்டம். எல்லோரும் 100ரூபாய் கொடுத்து போட்டி போட்டுக் கொண்டு அந்த சாமியாரிடம் மந்திரித்த தகடு வாங்கினர். அந்தச் தகடு வாங்கினால் இதுவரை செய்த பாவங்களெல்லாம் போய்விடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் பரவியிருந்தது. சீட்டு வாங்கியவர்கள் மனதில் சந்தோஷம் நிறம்பியது. ஒருவன் 200ரூபாய் கொடுத்து இரண்டு தகடுகளை வாங்கினான்.  தகடுகள் தீர்ந்தன. பணத்தை மூட்டையாக கட்டிக்கொண்டு சாமியார் அடுத்த ஊரை நோக்கி மகிழ்வுடன் பயணித்தார். சூரியன் மறையத் தொடங்கியது, இருள் நிறையத் தொடங்கிய வேளையில், சாமியாரிடம் கத்தியைக் காண்பித்து ஒருவன் மிரட்டி அந்த பணமூட்டையை அடைந்தான்.
    மனம் கேளாமல் அந்தத் திருடனைப் பார்த்து சாமியார் கேட்டார், ஏனப்பா! நீ இவ்வாறு செய்வது பாவமில்லையா என்று! அவர்தான் தகடு தந்த சாமியார் என்பதை அறியாமல், இருட்டில் அவரைப் பார்த்துச் சிரித்த திருடன், தெரியும்! அதனால்தான் சாமியாரிடம் இரண்டு தகடுகள் வங்கியுள்ளேன். ஒன்று இதுகாறும் நான் செய்த பாவங்களைத் தொலைக்க, இரண்டாவது இந்தக் கொள்ளைப் பாவம் முதல் இனிமேல் நான் செய்யும் பாவங்களைத் தொலைக்க எனக்கூறி, இருளில் முழுமையாக கரைந்தான்.  சாமியார் தன் தகட்டின் மகிமைப்பற்றி திகைத்து நின்றார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

ஒன்று அன்புடன் இரண்டானது!

    ஓர் ஏழை கூலித் தொழிலாளி. நல்லவன். பரோபகாரி. ஓருநாள் கரும்புத் தோட்டத்திற்கு வேளைக்குச் சென்றான். வேலை முடிந்ததும் அவனுக்கு கரும்பு கட்டு ஒன்றையே கூலியாக அளித்தனர். அதைப் பெற்று வரும்போது பள்ளிச் சிறுவர்களைக் கண்டான். அவர்களுக்கு ஒவ்வொரு துண்டாக கொடுத்து ஆனந்தப்பட்டான். கடைசியாக ஒரே துண்டுதான் மீதியானது. அதை எடுத்துக் கொண்டு வீடுதிரும்பினான்.
    அன்றைய சம்பாத்தியத்தில் மீதி அந்த ஒரு துண்டுக் கரும்பே என்றதும், அவன் மனைவி அளவிற்கு அதிகமான கோபமடைந்தாள். கையில் கிடைத்த அந்த துண்டு கரும்பால் அந்த தொழிலாளியை அடித்தாள். கரும்பு இரண்டானது. அடி வாங்கி வேதனையைக் காண்பிக்காமல் அன்பே. ஒரு துண்டுக் கரும்பை இருவர் எப்படிச் சாப்பிடுவது எனக் குழம்பியிருந்தேன். நல்லவேளை நீ அதை இரண்டாக்கினாய். வா! ஆளுக்கு ஒன்றாக கரும்பைத் ருசிக்கலாம் என்ற அவனின் இனிய அன்பு மொழிக்கேட்டு மனம் வருந்தினாள். மனம் திருந்தினாள். அன்பு கொண்டாள். அன்பு மனைவியினால் கரும்பின் சுவை அதிகரித்தது.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

உதவி செய்து தேடிய குழப்பம்!

    உள்ளூர் பேருந்தில் பயனித்துக் கொண்டிருந்தேன். நடத்துனர் அனைவருக்கும் சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன் தன் சட்டையின் மேல் பகுதியிலும், கீழ் ஆடையிலும் தேடினான். ஏதும் கிடைக்காத நிலையில் பதட்டமடைந்தான். அழுது விடும் நிலைக்கு வந்து விட்டான். அவனை தினமும் அதே ஊர்தியில் பார்த்து பழகிய நடத்துனர் அவனிடம் அவன் போகவேண்டிய இடத்திற்கானச் சீட்டைப் பத்திரமாக வைக்கச் சொல்லிக் கொடுத்தார்.
    தினமும் மீதி பணம் பெற்று அதை தனக்கு வேண்டிய திண்பண்டம் வாங்கி பழக்கப்பட்ட அவனுக்கு, சட்டென்று அதே நினைவில் மீதியைக் கேட்டான் நடத்துனரிடம்.  சீட்டு வாங்கப் பணமில்லாததால், இறக்கிவிடுவதற்குப் பதிலாக, தினமும் வருபவன் எனக் கருணைக் கொண்டதற்கு, பலன் இதுதானா! என்ற குழப்பத்தில் இருந்தான். இனி இது போன்ற உதவி செய்ய மனம் வருமா நடத்துனருக்கு! உதவி செய்தவர் மனம் வருந்தும்படி நம் சொல்லும் செயலும் இருக்கக்கூடாது.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

இறக்கும்போதும் இறை சிந்தனை!

    வேதசாஸ்திரங்களில் தேர்ந்தவரும், தவசீலருமான அந்த குரு தன் சீடர்களிடம், காசியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி, தான் காசியில் இறக்க விரும்புவதாகவும் தன் அந்திமக் காலம் நெருங்கிவிட்டது எனவும் கூறினார். உடனே சீடர்கள் அவரை ஒரு பல்லக்கில் தூக்கிக் கொண்டு காசி செல்லும் வழியில், ஓர் ஊரின் பெயரைக் கேட்டவுடன் அவரின் உயிர் பிரிந்தது.
   அதன் பலனாக மறுபிறவியில் அந்த ஊரில் பறையறைபவனின் மகனாகப் பிறந்தார். முன்ஜன்ம பலன்களால் நல்லறிவுடன் குழந்தை வளர்ந்தது வயது 10ஐ அடைந்தது. அந்த ஊர் வழக்கப்படி வீட்டிற்கு ஓருவர் அரண்மனைக்கு பறையறைந்து ஓர் இரவு காவல் காக்கச் செல்ல வேண்டும். அன்று அவர்கள் முறை. அவனின் தந்தை வெளியில் சென்றபோது மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருகவே வீட்டிற்கு வரமுடியவில்லை.
    தந்தை பணிக்குச் செல்ல வில்லை என்றால் அது, அரண்மணைக் குற்றம் ஆகும் என்பதால் சிறுவன் பணிக்குச் சென்று பறையுடன் சுலோகங்களையும் பாடினான். நடுநிசியில் அதைக்கேட்ட மன்னரின் மனம் மகிழ்வுற்று, அவனுக்கு அரசாங்கவேலை தர ஆனையிட்டார். அச்சிறுவனோ மரணதண்டனை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டு, தண்டனை பெறும் கைதிகளை இறை படங்களுக்குமுன் நிறுத்தி தெய்வச் சிந்தனைப் பாடல்களைப் பாடும்போது, அவர்கள் மெய்மறந்திருக்கும் வேளையில் தண்டணையை நிறவேற்றி விடுவான்.
   தெய்வச் சிந்தனையில் இருக்கும்போது உயிர் நீத்தவரெல்லாம் சொர்க்கம் சென்றனர். இதனால் நரகத்தின் வேலைப்பளு குறைந்தது. எமன் மும்மூர்த்திகளிடம் முறையிட, அவர்கள் சிறுவனிடம் அவன் செயலுக்குக் காரணம் கேட்க அவன், தன் முற்பிறவியில் இறக்கும்போது இறை சிந்தனையின்றி ஓர் ஊரின் பெயரைக்கேட்டபடி இறந்ததால் அந்த ஊரில் பிறக்க நேர்ந்தது. அதுபோன்ற நிலை இவர்களுக்கு வேண்டாம், இறக்கும் தருவாயில் இறை நாமங்களைக்கேட்டு நற்கதியடையட்டுமே என்பதால்தான் இப்படிச்செய்தேன் என்றான். மும்மூர்த்திகள் அவனுக்கு மேட்சம் அளித்தனர்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

யார் நீ! விழிப்பே விடியல்!

    அடுக்கு மாடி வீட்டின் கீழ்த் தளத்தில் நீச்சல் குளம். மொட்டை மாடியிலிருந்து அந்த பகுதியின் வனப்பை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, கீழே இருந்து ஒருவர், அப்புசாமி உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்து விட்டான் என்ற அலறும் சப்தம் கேட்ட உடன் ஏதும் சிந்தியாமல் கீழே குளத்தை நோக்கி குதித்தான்.
    சில மாடிகள் கடந்தபின் கீழே விழுபவன், திடிரென்று சிந்தனை வயப்பட்டான். நமக்குத்தான் மகனே கிடையாதே, நாம் ஏன் கீழே குதித்தோம் என நினைத்தவனுக்கு, உதயமானது திருமணமே தனக்கு ஆகவில்லை என்ற நினைவு. அதன்பின் சப்தம் போட்டவன் அப்புசாமி என்றுதானே சப்தம் போட்டான். நம் பெயர் அப்புசாமி இல்லையே, பின் ஏன் நான் குதித்தேன் என நினைக்கும்போது திடிரென்று கண்விழித்துப் பார்த்தான்.
    அது கனவானதால் அவன் நீச்சல் குளத்தில் இல்லை. தன் படுக்கையில் இருப்பதை உணர்ந்தான். இன்னும் சிறிது நேரம் கழித்து விழித்திருந்தால் குளத்தில் விழுந்திருப்பான். அதற்கு முன் அவனுக்கு விழிப்பு ஏற்பட்டது. தான் அப்புசாமி இல்லை என்பதும் தான் யார் என்பதும் புரிந்தது.
     இது போன்றே நமது வாழ்வுப் பயணத்தில் நீங்கள் யார் என்பதை புரியாமலே, உச்சியிலிருந்து கீழே விழுவதைப்போல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பயத்தில் தேவையற்ற பதற்றங்களும் நிம்மதி இன்மையும் நிறைந்து வாழ்வு துன்பமுடையதாகின்றது. கடைசி நேரத்தில் விழிப்பு வருவதற்குப் பதிலாக நீங்கள் யார் என ஆரம்பதில் உணர்ந்தால் அது ஆனந்தமான பயணமாக இருக்கும். வாழ்வில் நீங்கள் விழிப்பு கொண்ட நேரமே உங்களுக்கு விடியலாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

விதி வலியது!

    வலிமையானது விதி என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு. அபிமன்யுவின் மகனான பரீஷித் பாண்டவர்களுக்குப்பின் அரியணையில் ஏறியவன். நல்லவன். மனிதநேயம் மிக்கவன். காட்டில் வேட்டையாடும் போது ஓர் மானைத் துரத்திச் சென்றான். அங்கே முனி ஒருவர் தவமிருந்தார். அவரைப் பார்த்து தான் துரத்திய மான் இப்பக்கம் வந்ததா என் வினவினான். அவர் மௌனமாக இருக்கவே எரிச்சலடைந்தவன் அருகில் இறந்து கிடந்த பாம்பை தூக்கி அவர்மேல் வீசிவிட்டு சென்றான். அது அவன் கர்மபலன்.
    அந்த ரிஷியின் மகன் தன் தந்தையை அவமதித்தவன் பாம்பரசனால் தீண்டப்பட்டு 7இரவுக்குள் இறப்பான் எனச் சாபம் தந்தான். இதையறிந்த பரீஷித் ஒற்றைத் தூணின்மேல் மாளிகை எழுப்பி 7நாட்கள் தங்க முடிவு செய்தான். மூலிகை வைத்தியர்கள், காவலர்கள் சூழ 6நாள் கழிந்தது. மன்னன் பசியாற பழங்கள் வந்தன. அவைகளை மந்திரிகளுக்கும் கூட இருந்தோருக்கும் பகிர்ந்து அளித்து ஒரு பழத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தான். புழு வடிவில் உள்ளே இருந்த பாம்பரசன் தீண்ட பரீஷித் இறந்தான். எப்படி பாதுகாப்பாக இருந்தாலும் விதி எந்த வடிவத்திலும் தொடரும் என்பதே இதன் பொருள்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27017829
All
27017829
Your IP: 52.14.221.113
2024-04-16 15:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg