gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

செல்வச்சீரழிவு!

    ஓர் அந்தணன் ‘வேதபம்’ எனும் வித்தையை அறிந்திருந்தான். வானத்தில் கிரகங்கள் ஓர்நிலையில் இருக்கும்போது அந்த மந்திரச் சொற்களை உச்சரித்தால், நவ ரத்தினங்களும் வானிலிருந்து பெய்யும் என்பதே ‘வேதபம்’ ஆகும். அந்த அந்தணனும் அவனது சீடனும் காட்டு வழி பயணித்தபோது திருடர்கள் கூட்டம் ஒன்று சுற்றி வளைத்தது. அவர்களிடம் பணம் ஏதுமில்லையாததால், அந்தணனை பிணையாக வைத்து பணம் கொண்டு வரச்சொல்லி சீடனை மிரட்டியது. உண்மை நிலை புரிந்த சீடன் அகன்றான்.
    அந்தணன், சீடன் சென்றவுடன் வானம் பார்த்தான். கிரக நிலை ஒன்றுகூடி யிருந்தது. அவர்களிடம், உங்களுக்கு பணம்தானே வேண்டும், நவரத்தின மழையே பெய்ய வைக்கின்றேன் என்றான். அவ்வாறே செய்தான். திருடர்களும் அவற்றையெல்லாம் மூட்டைக்கட்டி கிளம்பத் தயாராகும்போது வேறு ஒரு கொள்ளைக் கூட்டம் வந்து அந்த மூட்டைகளை கொடுக்கக் கூறியது. அவர்கள் அந்த அந்தணன் எவ்வளவு கேட்டாளும் நவரத்தினங்களை வரவழைத்துக் கொடுப்பவன், அவனை உங்களுக்கு கொடுத்து விடுகிறோம் எனக்கூறினர்.
    அந்தணன் வானம் பார்த்தான் கிரக நிலைகள் மாறி இருந்தன, அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்பதை புதிய திருடர்களிடம் கூறினான். அவர்கள் நம்பவில்லை. இவன் நம்மை ஏமாற்றுகிறான் என கோபத்தில் அவனைக் கொன்றனர். யாருக்குச் செல்வமான நவரத்தினங்களைத் தர வேண்டும் என்ற கணிப்பு இல்லாத அந்தணனும் இறந்தான்.
   பின்னர் இரு கூட்டத்திற்கும் நவரத்தினங்கள் யாருக்குச் சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்றனர். இருவர் மட்டுமே மிஞ்சிய நிலையில் அவர்களும் ஒருவரை ஒருவர் கொல்ல சதி செய்தனர். இருவருக்கும் பசி எடுத்தது. நவரத்தினங்களையா சாப்பிடமுடியும். ஒருவன் அதை பாதுகாப்பது என்றும் மற்றவன் உணவு கொண்டு வருவதும் என முடிவாயிற்று. உணவு கொண்டு வந்தவன் அதில் விஷத்தைக் கலந்தான். உணவு கொண்டு வந்தவனை மற்றவன் வாளால் வெட்டிக் கொன்றான். அது விஷம் கலந்த உணவு என்பதை அறியாமால் உண்டு அவனும் மாய்ந்தான். பொதுவாக இரத்தினங்கள் ராசிகளுடையவை. அந்த ராசி ஒத்துப் போகாதவர்களிடையே அது தங்காது. தங்கினால் நாசம் விளைவிக்கும். பொதுவாக சீரில்லா செல்வம் சீரழிவைத்தரும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

அமைதி, ஆனந்தம்!

    ஓர் ஞானியிடம் மூன்று வரங்கள் பெற்றான் ஒருவன். அவைகளை ஒருமுறைதான் உபயோகிக்க வேண்டும் என்பது நிபந்தனை. அவன் எதை விரும்பினாலும் உடனே நடக்கும் என்பது வரம். வீட்டிற்குச் சென்றான். அன்று அவனுக்கும் அவன் மனைவிக்கும் கருத்து மோதல் அதிகமாயின. மனம் வெறுத்து இனி இவளுடன் வாழ்வது சரியில்லை என நினைத்தான். அவள் இறப்பதேமேல் என நினைத்தான். அந்த வரத்தின் படி அவள் இறந்துவிட்டாள்.
    ஊரார் கூடி அவளின் பெருமைகளைப் பற்றி பேச தான் அவசரப்பட்டு விட்டோமோ எனநினைத்து வருந்தினான். அவள் மீண்டும் உயிருடன் வந்தால் போதும் என நினைத்தான். அப்படியே வரத்தின்படி அவள் உயிர் பிழைத்தாள்.
அப்போது இன்னும் ஒருமுறைதான் வரம் கேட்க வேணும் என்ற நினைவு வந்தது எதைக் கேட்பது, ஒன்னும் புரியவில்லை. ஆனாலும் அவன் மனம் இறைவா, வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் கிடைக்க, வரம் தா என்றான். இறைவன் சொன்னான் இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழக் கற்றுக்கொள் என்றார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

வாழ்வே சொர்க்கம், அதுவே நரகம்!

      போகங்களின்மேல் மிகுந்த ஆசை கொண்ட ஒருவன் தான் இறக்கும்போது இறைவா, எனக்கு இந்த மது, மாமிசம், லாகிரி வஸ்துகள் எல்லாம் நான் இறந்தபின்னும் எனக்கு தொடர்ந்து கிடைக்க செய்யவேண்டும் ஏனெனில் அவைகளின் மீது நான் அளவற்ற ஆசை வைத்திருக்கினேன் என்று வேண்டினான். அவன் விரும்பியபடியே அவன் இறந்த பின்னும் அவனுக்கு எல்ல போகங்களும் கிடைத்தது.
      போகத்தில் ஆழ்ந்திருப்பதைத் தவிர வேறு வேலை ஏதும் கிடையாததால் அது அவனுக்கு மிகவும் போரடித்து சலிப்பைத் தந்தது. சொர்க்கம், நரகம் என்பது என்ன என முழுமையாகத் தெரியாதபோது, சலிப்பில் இப்படி வரம்கேட்டு, தான் கேட்டவைகளை அடைந்து வாழ்வதை சொர்க்கம் என நினைத்தவன், அதற்குப்பதில் நரகத்தில் வாழ்ந்திருக்கலாம் என நினைத்தான். அருகில் இருந்தவனிடம் கேட்டபோது அவன், நீ இருப்பது நரகம்தான் என்றான். அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது தான் உயிருடன் இருந்தபோது வாழ்ந்த நரக வாழ்வையே சொர்க்கம் என நினைத்து, அதையே இறந்தபின்னும் கேட்டு பெற்று, தான் அனுபவிப்பது நரகம்தான் என்று. இப்போது புரிந்து என்ன பயன்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கல்லான பணம்!

     ஓர் ஞானி அந்த ஊருக்கு வந்தபோது பணிவிடைகள் செய்து அவரின் நன் மதிப்பைப் பெற்றான். சில நாட்கள் கழித்து அவன் வறுமையை நினைத்து அந்த ஞானி இனி தினமும் உனக்கு ஒரு பொன்காசு வீதம் 100 நாட்களுக்கு கிடைக்கும் என்றார். மகிழ்வுற்றவன் காசு கிடைக்கக் கிடைக்க அதைப் பத்திரப்படுத்தி 100 காசுகள் சேர்ந்ததும் ஒரு கோணிப்பையில் கட்டி வீட்டு தோட்டத்தில் புதைத்தான். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அதை எடுத்துப் பார்த்து 100 காசுகளையும் எண்ணி மகிழ்ந்து திரும்பவும் புதைத்துவிடுவான்.
     மாதங்கள் சென்றன. ஒருநாள் அப்படி அவன் தோண்டியபோது அந்த 100 காசுகள் கொண்ட பையைக் காணவில்லை. நிம்மதியிழந்தான். புலம்பினான். சிலநாட்களில் ஞானி அந்த ஊருக்கு திரும்பவும் வந்தார். அவரிடம் சென்று புலம்பினான். நடந்தவைகளைக் கேட்டவர் அவனுக்கு ஒரு பை வரவழைத்துக் கொடுத்தார். அது இவனின் காணாமற்போன் பையாகவே இருக்க ஆர்வமுடன் கையை உள்ளேவிட்டு துளாவினான். கையில் கூழாங்கற்கள்தான் கிடைத்தது. காசைக் காணோம். எரிச்சலடைந்தவன் ஞானியை கோபத்துடன் பார்த்து சப்தமிட்டான்.
     அப்போது ஞானி சொன்னார், பணம் கிடைத்தால் செலவழித்து அதனால் ஆனந்தம் அடையவேண்டும், பொருள்களை ஈட்ட வேண்டும், நீயோ புதைத்து வைத்திருக்கின்றாய், அதனால் யாருக்கு என்ன லாபம். புதைத்து வைத்து எண்ணிப் பார்ப்பதற்கு இந்த கற்களே போதும் என்றார். தன் தவறை உணர்ந்தவன் வருந்தி ஞானியிடம் மன்னிப்புக் கோரினான். ஞானி இனியாவது பணத்தினால் பயன்களைப் பெற முயற்சி செய் எனக்கூறி மீண்டும் 100 காசுகளை அருளினார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கற்பின் மகிமை!

    சைப்யை கௌசிக முனிவரின் மனைவி. பதிவிரதை. முன்வினைப் பயனால் கௌசிகமுனிக்கு குஷ்டம் பீடித்தது. ஆனாலும் அவரின் மனைவி எந்தவித அருவருப்புமின்றி பணிவிடைகளைச் செய்து வந்தாள். இந்நிலையில் தன் மனைவியை சோதிக்க கௌசிகர் விரும்பினார். தாசி ஒருத்தியிடம் சயன சுகம் அனுபவிக்க ஆசையா இருக்கின்றது எனத் தன் ஆசையை மனிவியிடம் கூறினார். சைப்யை தனது கணவனின் ஆசையை நிறைவேற்ற முடிவு கொண்டாள்.
   பல தாசிகளை அனுகி தன் கணவனின் விருப்பம் பற்றி கூறினாள். தாசியாயிருந்தாலும் அருவருக்கத்தக்க நோயாளியாக இருப்பதால் யாரும் அவனுடன் உறவு கொள்ள தயாரில்லை. இந்நிலையில் வேறு ஒரு தாசியிடம் மன்றாடிக் கெஞ்சி அவளை சம்மதிக்க வைத்தாள். ஆனால் ஊர் அடங்கிய நடு நிசியில்தான் வரவேண்டும் என நிபந்தனை விதித்தாள்.
     அவ்வாறே அன்றையதினம் கணவரை மூலிகை நீரில் குளிப்பாட்டி, வாசனை திரவியங்கள் பூசி புதிய ஆடை அணிவித்து, ஓர் கூடையில் கௌசிகரை அமரவைத்து தன் தலைமேல் சுமந்து சென்றாள். இரவு ஆனதால், வழியில் செய்யாத குற்றத்திற்காக கழுமரத்தில் ஏற்றி அவதிபட்டுக் கொண்டிருந்த மாண்டவ்யர் என்ற முனிமீது கௌசிகரின் கால் படவே வேதனையில் துன்பம் மிகக்கொண்ட மாண்டவ்யர், கௌசிகரை சுமப்பது அவரின் மனைவி என அறிந்து, அவள் மேல் கோபங்கொண்டு ‘சூரிய உதயத்தின் போது நீ மாங்கல்யம் இழப்பாய்’ என சாபமிட்டார்.
    கேட்ட சைப்யை நான் பதிவிரதை என்பதானால் அந்த சூரியன் உதிக்காமலேயே போகட்டும் என்றாள். கற்பு எனும் நெருப்பு சூரியனையே சுட சூரியன் உதிக்காமல் இருந்தான். இருளிலேயே உலகம் இருக்க நித்ய கர்மாக்கள் நிறைவேறாமல் மக்கள் தவிக்க. யாகங்கள் நின்றன. அவிர்பாகம் தேவர்களுக்கு கிடைக்கவில்லை. உலகில் துன்பம் பரவத் தொடங்கியது.
   அனைவரும் ஒன்றுகூடி ஆலோசித்தனர். ஒரு பதிவிரதையின் சாபத்தை இன்னொரு பதிவிரதையால்தான் முறியடிக்க முடியும் என அத்திரி முனியின் மனைவியான அனுசூயாவைச் சரணடைந்து விபரம் கூறினர். அனுசூயா சைப்யை சந்தித்து அவளின் சாபத்தால் உலகில் ஏற்படும் மாற்றங்களை கூறி தீமைகள் அதிகமாகாமலிருக்க உடன் சாபத்தை திரும்ப பெற வலியுறுத்தினாள். சைப்யை, அப்படி சாபத்தை தான் திரும்பப் பெற்றால் என் கணவரது உயிர் போய்விடும் என்றார். அனுசூயா அதற்கு தான் பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக கூறியதும் சைப்யை தன் சாபத்தை விலக்கிக் கொள்ள உடனே மாண்டவ்யர் சாபத்தால் கௌசிக் முனியின் உயிர் பிரிந்தது. அப்போது அனுசூயா தன் கணவர் அத்திரிமுனியை நினைத்து தன்பதிவிரதா தர்மத்தை முன்னிருத்தி சைப்யையின் கணவர் நோய் நீங்கி உயிர்பெற வேண்டினாள். அவ்வாறே நடந்தது. கற்பின் மகிமைப் பற்றி புராணங்களில் கூறப்பட்டுள்ள சிறப்பு இது.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

மகான்களை மகான்களே புரிவர்!

    ஓர் நாள் மாலைப்பொழுதில் மன்னர் வீரசிவாஜி கோதாவரி நதிக்கரையில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது இலைகள் வரிசையாக நீரில் மிதந்து வருவதைப் பார்த்தார். அந்த இலைகளில் ஸ்ரீராமரைப் பற்றிய பாடல்கள் இருக்க அதைப் படித்து ஆனந்தமடைந்தார். அவைகளை எழுதியவரை அறிய, நதி ஓரமாக நடந்து, அங்கே ஓர் துறவி இருக்கக் கண்டு வணங்கினார்.
     சிவாஜியை பெயர் சொல்லி அழைத்த துறவி, மன்னரை உணவு அருந்தி செல்ல அழைத்தார். சிவாஜி, சுவாமி என்னோடு என்னுடைய சேவகர்கள் நிறையபேர் வந்துள்ளனர், அனைவரும் உணவு உட்கொள்ள வசதி இருக்காது, எனவே வேறு இடத்தில் உணவு உண்கிறோம் என்றார். அதற்கு துறவி, மன்னர் என்றால், கூட நிறைய பேர் இருப்பார்கள் என்பதை அறியாதவனா இந்த துறவி எனக்கூறி, உங்கள் அனைவருக்கும் உனவு தயார் எனச்சொன்னார். அனைவருக்கும் உணவு எப்படி ஒரு துறவியால் குறுகிய காலத்தில் தயார் செய்ய முடியும் என்ற ஆச்சரியத்தில் கேட்க, நீ செல்லும் வழியில் இன்னொறு துறவியை சந்திப்பாய், உனது சந்தேகத்தை அவர் தீர்த்து வைப்பார் என்றார்.
     திரும்பும் வழியில் சில நாட்கள் கழிந்தன. ஒருநாள் வழியில் ஒரு துறவி குடில் அமைத்து தங்கியிருப்பதைப் பார்த்தார். அவரை தரிசித்துச் செல்லலாம் என சிவாஜி அந்தகுடிலுக்குள் சென்றார். அந்த துறவி வாருங்கள் சிவாஜி என பெயரைச் சொல்லி அழைக்க மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். அந்த துறவியும் வெகுதூரம் வந்த களைப்பில் இருக்கின்றீர்கள், நீங்களும் உங்களது பரிவாரங்களும் உனவு அருந்திச் செல்ல வேண்டும் எனச்சொன்னார். அருகில் இருந்த பாத்திரத்தை எடுத்து அதிலிருந்த கோதுமை மாவை பிரசாதம் போல் அனைவருக்கும் அளித்தார். அனைவருக்கும் விருந்து உண்ட நிறைவு ஏற்பட்டது. வியந்த சிவாஜி இதுபற்றி கேட்டபோது கோதாவரிக் கரையில் நீ பார்த்த துறவியிடமே கேள் என்றார்.
மகான்களின் செயல்களை மகான்களாலேயே புரிந்து கொள்ளமுடியும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

யாரை எப்படி நம்புவது!

    அந்த மாளிகையில் திருடன் ஒருவன் உள்புகுந்தான். அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த படுக்கை அறை அருகிலேயே இருந்த அறையின் கதவு திறந்தே இருந்தது. சப்தமில்லாமல் அங்கு சென்றவன், அங்கு பணப்பீரோ இருப்பதைக் கண்டான். நல்லவேளை எல்லோரும் நன்றாக தூங்குகின்றார்கள். எந்த பிரச்சனையும் இன்றி சுலபமாக திருடிக் கொண்டு போய்விடலாம் என நினைத்தான்.
    அப்போது அந்த பணப் பெட்டியின் கைப்பிடியில் ‘பீரோவை திறக்க கஷ்டப்படவேண்டாம். பூட்டப்படவில்லை, கைபிடியை திருகினால் பீரோவைத் திறந்து விடலாம்’ என்று எழுதியிருக்கக்கண்டு அதி ஆனந்தம் கொண்டான். இப்படி யாராவது எழுதி வைப்பார்களா என்று நினைக்காமல், உற்சாகத்துடன் மெதுவாக கைப்பிடியைத் திருகி பீரோவின் கதவை திறக்க முற்பட்டான்.
     கைப்பிடித் திருகியதும் அதன்மூலம் இனைக்கப்பட்டிருந்த நெம்புகோல்பிடி வேலைசெய்து ஒரு மண் மூட்டை மேலிருந்து தள்ள, அது கீழே இவன் தலைமேல் விழுந்தது. ஆ என்று ஓலமிட்டான். அனைவரும் உறக்கத்திலிருந்து விழித்தனர். விளக்குகள் எரிந்தன. பிடிபட்ட திருடன், இப்படி மனிதர்கள் செய்தால், எப்படி இவர்களை நம்பி தொழில் செய்வது என வருந்தினான். எல்லோரும் எத்தனை காலத்திற்கு ஏமாந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றவில்லை. ஏமாந்தவர்கள் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

ஆணவம்!

     எல்லோரையும் விட தானே உயர்ந்தவன் என எப்போதும் நினைவுகளை கொண்டிருந்த மாணவன் ஒரு நாள் தன் ஆசிரியரைப் பார்க்க சென்றான். அவன் வந்தது அறிந்தும் கவனியாததுபோல் மேஜைமேல் சில மனித மண்டை ஒடுகளை வைத்து அவைகளை தீவிரமாக ஆரய்ந்து கொண்டிருந்தார்.
     நீண்ட நேரம் ஆனதால் எரிச்சலுற்ற மாணவன் ஐயா நான் வந்துள்ளேன் . பார்த்தும் பார்க்காதுபோல் இருக்கின்றீர்களே என வருந்தினான். அதற்கு ஆசிரியர், அன்பனே இங்கிருக்கும் மண்டை ஓடுகள் எல்லாம் அவர்கள் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களுடையது.
     இதில் உனது தந்தையுடையது எது என்று தேடிக் கொண்டிருக்கின்றேன் என்றார். மாணவனுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. தான் இன்று எப்படியிருந்தாலும் ஒருநாள் இதைப் போன்றே யார் என அறியா நிலை ஏற்படும் எனத் தெளிந்தான். அவனின் தான் என்ற செருக்கு, ஆணவம் ஒழிந்தது.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கடமையானாலும் பாவங்களில் பங்கு!

    வழிப்போக்கர்களை கொள்ளையடித்து வாழ்ந்து கொண்டிருந்தான் ஒருவன். அவன் ஒரு நாள் ஞானி ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவர் அவனிடம் பிறரை கொள்ளையடித்தல் கொடூரமான செயல் என்றார். குடுப்பத்தை பராமரிக்க வேறு வழியில்லாததால், எனது கடமை என் குடுப்பத்தைக் காப்பாற்றுவது என வாதிட்டான். களவாடுவது பாவம், நீ களவாடிய செல்வத்தை அனுபவித்த உன் குடும்பத்தாரைவிட அந்த பாவம் உனக்குத்தான் அதிகம். அவர்களுக்காக அந்த பாவத்தையும் சேர்ந்து நீ சுமக்க வேண்டும் என்றார்.
    அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டிற்கு சென்று தன் குடும்பத்தாரிடம் தன் கொள்ளையில் அவர்கள் வாழ்வதால் அந்த பாவங்களிலும் அவர்களுக்கும் பங்கு உண்டு எனக் கூறினான். குடும்பத்தினர் அனைவரும் எங்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதற்காக நீ திருடுவதால் ஏற்படும் பாவங்களை நாங்கள் பங்கு போட்டு ஏற்கமாட்டோம் என்றனர். கடமையானாலும் தான் செய்யும் செயல்களின் பாவங்கள் தனக்கு என அறிந்தவன் மனம் திருந்தினான். அப்படி மாறியவரே இராமகாவியம் எழுதிய வால்மீகி முனிவர்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

தெளிவு!

      அந்த ஊர் மக்களின் குறைகளை எல்லாம் தீர்த்து வைக்கப் போவதாக கூறிய ஞானியை சந்தித்தார் யோகி, ஞானியிடம் சுவாமி நீங்கள் நிறைய தவம் செய்து சித்திகள் அடைந்ததாகக் கேள்விப்பட்டேன். அதனால் உங்களைப் பார்த்துப் போக வந்தேன் என்றார். ஞானி உற்சாகத்துடன் என்னைப் பற்றி இந்த ஊருக்கே தெரியும் என தற்புகழ்ச்சி கொண்டார்.
     சுவாமி, எதிரே வரும் அந்த மாட்டை கொல்ல முடியுமா! என்றதைக் கேட்ட ஞானி தன் கமண்டலத்திலிருந்து சிறிது ஜலத்தை எடுத்து மந்திரம் உச்சாடனம் செய்து அந்த மாட்டின் மீது தெளிக்க அது அப்படியே சுருண்டு வீழ்ந்தது. யோகி, உங்களுக்கு நிறைய சக்தி உள்ளது, இப்போது அந்த இறந்த மாட்டை உயிர்ப்பிக்க முடியுமா! என்றவுடன் மீண்டும் மந்திரம் உச்சரித்து நீர் தெளித்து அந்த மாட்டை உயிர்ப்பித்தார்.
     அப்போது யோகி ஞானியைப் பார்த்து கேட்டார், சுவாமி, நீங்கள் ஒரு மாட்டை இறக்க வைத்தீர், பின்னர் அதையே உயிர் பிழைக்க வைத்தீர், அபரிதமான சக்தியைக் கொண்டுள்ள நீங்கள் அடைந்த பலன் என்ன! மாடு, இந்த மக்கள் அடைந்தது என்ன! என்றதை கேட்டவுடன் ஞானிக்கு சாட்டையால் யாரோ அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. தற்புகழ்வுக்காக தன் சக்திகளை விரயமாக்கியது விளங்கியது. ஞானி என்பவர் கூட்டம் சேர்ப்பவராக இருத்தல் கூடாது. வழிகாட்டுபவராக இருத்தல் வேண்டும் என மீண்டும் தெளிவு கொண்டார்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27077207
All
27077207
Your IP: 3.148.102.90
2024-04-25 15:13

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg