gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

அனுபவ அறிவு!

         பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு மணமுடிக்க வரன் பார்த்தனர். ஒரு இளைஞனை தேர்வு செய்தனர். அந்தபெண் எல்லோரிலும் சிறந்தவன், உயர்ந்தவனைத்தான் மணந்து கொள்வேன் என கூறிவிட்டாள். அப்படி ஒருவனைத் தேடமுற்பட்டாள். அரசன் பல்லக்கில் வர அவனே உயர்ந்தவன் என நினைத்தபோது, அரசன் பல்லக்கிலிருந்து இறங்கி அவ்வழிவந்த துறவியை வணங்க, துறவியே சிறந்தவன் என நினைத்து அவரைத் தொடர்ந்தாள். வழியில் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையாரை துறவி வணங்க, பிள்ளையாரே உயர்ந்தவர் என நினைத்தாள்.
         அப்போது அவ்வழி வந்த ஓர் நாய் சிலைமீது காலத்தூக்கி சிறுநீர் கழிக்க, பிள்ளையாரை விட தெருநாய் உயர்வா என சிந்திக்க, அந்த நாயை ஒரு சிறுவன் கல்லெடுத்து அடிக்க, அச்சிறுவன் சிறந்தவனா என யோசிக்கும் போது, ‘நாயை ஏன் அடித்தாய்’ என ஓர் இளைஞன் அச்சிறுவனை மிரட்ட, சிறுவன், ‘இனிமேல் இது போன்று செய்ய மாட்டேன்’ எனக்கூறி ஓட, அந்த இளைஞனே சிறந்தவன் என முடிவு கொண்டாள்.
         அரசன்- துறவி- பிள்ளையார்- நாய்- சிறுவன்- இளஞன் என முடிவு கொள்ள ஓர் ஆரய்ச்சி அனுபம் அவளுக்கு கிடைத்தது. அவளின் பெற்றோரிடம் அந்த இளைஞனை மணந்து கொள்வதாகக் கூறினாள். பெற்றோர்கள் தங்கள் அனுபவதால் அந்த இளஞனைத்தான் அவளுக்கு மணமகனாக முன்பே தெரிவு செய்திருந்தினர். ஆக அனுபவத்தின் முடிவு ஒன்றாகவே இருக்க வாய்புண்டு. அனுபவ அறிவின் கூற்றுகளை செவி கொடுத்து கேட்டு செயல் படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

விலங்குபோல!

       குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. அதனால்தான் குரங்கின் செயல்கள் நம் மனத்தின் எண்ணங்களோடு ஒப்பிடப்படுகின்றன. ஒரு குரங்கு தான் அமர்ந்திருக்கும் மரத்தின் கீழே ஓர் பழம் இருக்க கண்டது. அருகில் வந்து பார்த்த போது ஓர் கண்ணாடி குடுவையில் அது தேடிய பழம் இருக்கவே அதை எடுக்க முயற்சி செய்து கையை உள்ளே விட்டு பழத்தை எடுத்தது. ஆனால் பழத்துடன் கை வெளியே எடுக்க முடியவில்லை. கையில் கிடைத்த ஓரு பழத்தையே அனுபவிக்கா இயலா, இந்நிலையில் அருகில் அது போன்றே இன்னொரு பழம் குடுவையில் இருக்க அதன் மேலும் ஆசை கொண்டு அதனுள் கையைவிட்டு பழத்தை பிடித் துவிட்டது.
     ஆனால் இரண்டு கைகளையும் பழத்துடன் வெளியே எடுக்க முடியவில்லை. பழத்தை விட்டு கையை எடுத்தால் கை வந்துவிடும். பழத்தை விட மனமில்லை. அது புரியவும் இல்லை. குரங்கை பிடிக்க வேடன் செய்த தந்திரத்தில் மாட்டிய குரங்கு, கைகளில் குடுவை இருந்ததால் ஓடவும், தாவவும் முடியாததால் வேடனிடம் பிடிபட்டது. சிறைபிடித்த வேடன் குரங்கின் தலையில் ஓர் தட்டு தட்டியவுடன் சிலிர்த்து கையை விட்டது. கையில் இருந்த பழம் நழுவியதால் கைகளை வெளியே எடுக்க முடிந்தது. ஆனால் சிறைபட்டுவிட்டதே! வேண்டாத ஆசைகளில் சிக்கல்களிருப்பது தெரிந்தே விலங்குபோல மாட்டிக் கொள்கிறான் மனிதன்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

நினைத்தாலே போதும்!

     தன் எதிர்கால பலன் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்தவன் ஓர் ஜோசியரிடம் சென்று தன் ஜாதகத்தினை கொடுத்தான். அதைப் பார்த்த ஜோதிடன் திகைத்து, நான் உன் ஜாதகத்தைக் கணித்து வைக்கிறேன். நீ இரண்டு நாள் கழித்து வா.. எனக்கூறி அனுப்பினான்.
     வேலைத் தேடி சென்றவன் வேலை ஏதும் கிடைக்காததால் சலிப்புடன் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான். புழுதிக்காற்று வீசவே அருகிலிருந்த பாழடைந்த மண்டபத்திற்குள் சென்று ஒளிந்தான். அங்கு ஓர் சிவலிங்கம் இருக்கக் கண்டவன், அடடே, ஒரு கோவில் இப்படி பாழடைந்து விட்டதே. என்னிடம் பணம் வசதியிருந்தால் இந்தக் கோவிலை சீர்படுத்துவேன் என எண்ணினான். மனதில் கோவிலை சீரமைக்க திட்டம் போட்டான்.
    அப்போது மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. மின்னலடித்தது. அப்போது மண்டபத்தின் மேல் பகுதியில் பாம்பைப் பர்த்து பயந்தவன் நிலை தடுமாறி வெளியே விழுந்தான். எதிர்பாரா விதமாக மண்டபமும் சரிந்தது. இவன் ஒதுங்கியிருந்த இடத்திலிருந்து ஓர் கொடிய நாகம் ஊர்ந்து சென்றது. ஒருகணம் நிலைகுலைந்து போனான். இன்னும் சிறிது நேரம் இருந்தால் பாம்பு கடித்தோ, அல்லது மண்டபத்தின் இடிபாடுகளில் சிக்கியோ மரணம் அடைந்திருக்க வேண்டும் என நினைத்து அங்கிருந்து அகன்றான்.
    மறுநாள் இவனைக்கண்ட ஜோதிடருக்கு பேயைக்கண்டது போலாயிற்று. இவனிடம் நேற்று நடந்தது என்ன எனக் கேட்டார். விளக்கமாக கேட்டவர், உனக்கு நேற்றுடன் ஆயுள் முடிந்து விட்டது. அதை எப்படி உனக்குச் சொல்வது என்பதால்தான் உன்னை இன்று வரச்சொன்னேன். நீ ஒளிந்திருந்தபோது உண்மையாகவே கோவிலை கட்ட நினைத்த நல்ல எண்ணங்களே உன்னை காப்பாற்றியிருக்கின்றது என்றார். நல்லது நினைத்தாலே போதும் நன்மை பெறுவீர்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

உழைப்பின் அருமை!

      தன் ஆசிரமத்தில் காந்திஜி நடந்து சென்றுகொண்டிருந்தபோது பஞ்சு சுருள் ஒன்று இருக்கக் கண்டார். அன்று அவர் மௌனவிரதம். தன் கூட வருபவர்களிடம் அதைச் சுட்டிக் காண்பித்தார். சுற்றுப்புறத் தூய்மை குறித்து குறிப்பிடுகிறார் என நினைத்து உடன் வந்தோர் அந்த பஞ்சை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டனர்.
     மௌன விரதம் முடிவுற்றபின் காந்திஜி அந்த பஞ்சு பற்றி கேட்டார். குப்பையில் போட்டவர் பதறிவிட்டார். இதுவே காசாக இருந்தால் இப்படி செய்திருப்பாயா எனக்கேட்டார். பருத்தி பயிரிடுவதிலும் பஞ்சாக்குவதிலும் எவ்வளவு உழைப்பு செலவாகி இருக்கின்றது தெரியுமா! முதலில் அந்த பஞ்சை தேடி எடுத்துவா என்றார்.
      பஞ்சை திரும்ப பெற்றதும், பஞ்சு அழுக்கானால் நூல்நூற்று அழுக்கை அகற்றலாம் எனக்கூறியவரின் எளிமை மற்றும் சிக்கனத்தை ஆசிரமத்தில் உள்ளோர் தெளிவாக புரிந்தனர்.  உழைப்பின் அருமையை உழைத்தவர்தான் உணர்வர். அவருக்குத்தான் எளிமையும் சிக்கனமும் கைவரும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

விழிப்புணர்வு!

      ஒரு ஞானியிடம் பயிற்சி பெற வந்தான் இளைஞன். நீ விழிப்புணர்வு பெற திடீர் திடீரென்று தடியால் தாக்குவேன், அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றார். அதன்படி அவர் தாக்குதலில் பலமுறை அடிபட்டான். நாளடைவில் அறிவு கூர்மையாகி அவரது காலடி ஓசையை துல்லியமாகக் கணித்து அவரின் அடியிலிருந்து தப்பினான். ஞானி முதல் பயிற்சி முடிந்தது.
   அடுத்த பயிற்சி உறங்கும்போது எனக்கூறி தாக்கினார். பலமுறை அடிவாங்கி, எப்போது தாக்குவார் என்ற நினைவில் தூக்கத்தை இழந்தான். நாட்கள் செல்லச் செல்ல தூக்கத்தில் விழிப்புணர்வு அடைந்து, ஞானி தாக்கவருவதை அறிந்து தடுத்தான்.
     ஞானி இனி உனக்கு அடுத்த பயிற்சி வாளில், கொஞ்சம் அசந்தால் உயிர் போய்விடும் என்றார். விழிப்புணர்வுக்காக தாக்கும் குருவை நாம் ஏன் அவர் உறங்கும் போது தாக்கக்கூடது என எண்ணினான். ஞானத்தால் மனதில் நினைப்பதை அறிந்த ஞானி, அவனைக் கண்டித்தார். ஞானியிடம் மன்னிப்பு கோரினான்,
      மனதில் நினைப்பதை அறியும் அளவிற்கு விழிப்புணர்வு அடைய உறுதி கொண்டு பயிற்சிகளை செய்தான். விரைவில் தேர்ச்சியடைந்து முழு விழிப்புணர்வுநிலை அடைந்தான். வாழ்வில் நாம் அனைவரும், விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும் விழிப்புணர்வுடன் இருப்பது வாழ்வு பயணத்தில் சிறந்த பலன்களைத்தரும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

சிறந்த சீடன்!

       தன்னிடம் பயின்ற மாணவர்களிடம் சிறந்தவனை தேர்ந்தெடுத்த குரு, அவன் மற்றவர்களைவிட எப்படி சிறந்தவன் என தெரிந்து கொள்ள அவனிடம் சில கேள்விகளை எல்லோர் முன்னிலையில் கேட்டார்.
      ‘நீ மலைப்பகுதியில் சென்று ஆன்மீகத்தை பரப்ப போகிறாய். அவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள். உன்னிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால் நீ என்ன செய்வாய்’ என்றார். அதற்கு அந்த மாணவன் அவர்கள் என்னை அடித்தாலும், என்மீது கல் எறிந்தாலும், எப்படி நடந்து கொண்டாலும், நிதானத்துடன் நட்பு பாராட்டி, அன்பு கொண்டு நடப்பேன் என்றான்.
குரு, ‘உன்மீது கல்லால் அடித்தால்’ என்றார். ‘என்னை ஆயுதங்களால் தாக்க வில்லை’ என எண்ணிக்கொண்டு நட்பு பாராட்டுவேன் என்றான்.
     குரு. ‘ஆயுதங்களால் தாக்கினால்’ என்றதற்கு, அவர்கள் ‘என்னை கொல்ல வில்லையே’ என நினைத்து அப்போதும் நட்பு பாராட்டுவேன் என்றான்.
   குரு, அந்த மாணவனை உற்றுப்பார்த்து, சரி, ‘அவர்கள் உன்னை கொல்ல வந்தால்’ என்றார், ‘குருவே, அவர்களை அப்போதும், எப்போதும் அன்புடன் நட்பு பாராட்டி மகிழ்வேன், ஏனெனில் அவர்கள், எனக்கு உடல் பந்தங்களிருந்து விடுதலை அளிக்கப் போகின்றார்கள் என்பதற்காக, என்றான்.
    தீங்கு செய்பவர்களிடமும் காட்டும் அன்பின் நட்பு சிறந்த மேன்மையைத் தரும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

பிறர் மகிழ்வு தன் மகிழ்ச்சி!

       நீதி நேர்மை தவறாத அரசன் ஒருவன், மிகுந்த இரக்க குணம் கொண்டவன். மக்களின் நன்மைக்காக வாரி வழங்கினான். பிறர் மகிழ்ச்சியைக் கண்டு தான் மகிழ்ந்தான். அவன் ஆயுட்காலம் முடிந்ததும் எமதூதர்கள் வந்து அழைத்துப் போயினர். அந்த அரசன் தன்னை அறியாமல் ஒரு தவறு செய்திருந்ததால் அந்த ஜீவனை நரகத்தின் செயல்பாடுகளை கண்டு பின் சொர்க்கம் அழைத்துச் செல்ல ஆணையிட்டான் எமதர்மன். அவ்வாறே அவன் செர்க்கம் செல்லும் வழியில் நரகத்தின் செயல்பாடுகளை பார்க்க அனுமதித்தனர். நரகத்தில் ஜீவன்கள் படும் துயரத்தைக் கண்டு மிகவும் வருந்தினான். அரசன் செய்த தவறுக்கு அதுவே தண்டனை என்பதால் அவனை அங்கிருந்து சொர்க்கம் கொண்டு செல்ல முனைப்பட்டனர்.
       அப்போது அங்கிருந்த ஜீவன்கள் மன்னா, உங்கள் மேனியை தழுவிய காற்று, துன்பத்தில் இருக்கும் எங்களை அடையும்போது இதமாக இருக்கின்றது, எனவே இன்னும் சிறிது நேரம் இங்கிருங்கள் என வேண்டினர். மன்னர் அப்படி இதமான காற்று என்னால் உங்களுக்கு கிடைகிறது என்றால் நான் இங்கேயே தங்கி விடுகிறேன் என்றார். தூதர்களின் நிலை தர்ம சங்கடமானது.        எமதர்மனுக்கும், இந்திரனுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து மன்னா அவர்கள் செய்த பாவம் அவர்கள் அனுபவிக்க வேண்டியது என்றனர். நான் இங்கு தங்கினால் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் அதைவிட எனக்கு மகிழ்வு வேறில்லை. அப்படியில்லையெனில் நான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு தந்து விடுகிறேன் என்றான் மன்னன்.
       அந்த புண்ணியத்தால் அனைவரும் சொர்க்கம் சென்றுவிடவே அங்கு இருந்த மன்னனிடம், அரசனே, கொடை அளிப்பதால் புண்ணியம் பெருகுமே அன்றி குறையாது. நீங்கள் உங்கள் புண்ணியங்களை தானம் செய்ததால் வந்த புண்ணியம் உங்கள் கணக்கில் இருப்பதால் நீங்களும் சொர்க்கம் சொல்லாம் என அழைத்துச் சென்றனர்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

சூரிய சந்திரன்!

    சூரியன் பிரகாசித்தால் அது பகல். சந்திரன் குளிர்ந்தால் அது இரவு. சூரியன் கோலோச்சும் பகல் காலத்தில் சந்திரன் அமைதியாய் இருந்தும், சந்திரன் கோலோச்சும் காலத்தில் சூரியன் அமைதி காத்தும், ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்தும், உலகின் இயக்கத்திற்கு இரண்டும் தமது கடமைகளைச் சரிவர செய்கின்றது.
     வாழ்க்கைப் பயணம் இதைப்போன்றதே. ஆண்கள் சூரியனாக ஒளிர்ந்து, பெண்கள் சந்திரன் போல குளிர்ந்து மனம் ஒன்றி பயணித்தால் இரவு, பகல் கழிவது போன்று வாழ்க்கையின் நாட்கள் இனிதாக கழியும். ஒரு கண் பார்வைவிட இருகண்களால் நோக்கின் அகன்ற பார்வை படலம் தோன்றும். அது இயற்கையின் நிறைந்த பார்வை. எல்லாம் அங்கு தெரியும், புரியும். அங்கு ஆணும், பெண்ணும் இரு கண்களாக செயல்பட்டு ஒருவர்மீது ஒருவர் அன்பின் மேலீட்டால் ஆத்ம நண்பர்களாய் செயல் பட்டு வாழ்வில் வெற்றியுடன் முன்மாதிரியாய் திகழமுடியும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

ஏமாறாதே! ஏமாளியாகாதே!

      ஒரு அரசன் தன் உபயோகத்திற்கு வெளிநாட்டு குதிரைகளை வாங்க விரும்பினான். ஒருநாள் அதுபோன்ற வியாபாரி ஒருவனிடம் சில குதிரைகளை வாங்கிவிட்டு இன்னும் குதிரைகள் கிடைத்தால் கொண்டு வாருங்கள் என்றான். அவன் வெளிநாட்டு குதிரைகளை கொண்டுவர கால அவகாசம் வேண்டும், மேலும் அதற்கு முன் பணம் வேண்டும் என்றான்.  அரசனும் 10 ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான். வியாபாரி சென்று பல நாட்கள், மாதங்கள் கடந்தும் ஒரு தகவலும் இல்லை.
      இந்நிலையில் ஏமாந்தவர்கள் பற்றி ஒருவழக்கு வந்தது. அதை விசாரித்தபின் அரசன் இது போன்று ஏமாந்தவர்களுக்கு அரசின் உதவி கிடைக்க, ஏமாந்தவர்கள் யார் யார் என பட்டியல் தயார் செய்யச் சொன்னார். அமைச்சர் தயாரித்து வந்த பட்டியலில் தன் பெயர் முதலில் இடம் பெற்றிருக்க கண்ட அரசன் கோபங்கொண்டான். அப்போது அமைச்சர், மன்னிக்க வேண்டும் ‘முன்பின் அறிமுகம் இல்லா வியாபாரியிடம் ஒன்றும் விசாரிக்காமல் 10000 பொற்காசுகளை கொடுத்துள்ளீர்கள். அவன் வருவான் என்ற நம்பிக்கை எனக்கில்லை’ என்றார்.
     மன்னர், ‘சரி, குதிரை வியாபாரி வந்து விட்டால் இந்த பட்டியல் என்னவாகும்’ எனக்கேட்க, அமைச்சர், ‘பட்டியலில் உங்கள் பெயருக்குப்பதில் அவன் பெயரை பதிவு செய்து விடுவேன்’ என்றார். நீங்கள் ஏமாந்து விட்டீர்கள். உங்களை ஏமாற்ற சரியான சந்தர்ப்பம் கிடைத்தும் அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவனும் ஒருவகையில் ஏமாளிதான், என்றார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

நித்ய பிரம்மச்சாரி, நித்ய உபவாசி!

      மறுகரையில் இருக்கும் துர்வாசமுனிவரிடம் நிவேதனப் பொருளை கொடுத்துவரச் சொன்னார் கிருஷ்ணர். வெள்ளம் அதிகமாக இருக்க திகைத்த ருக்மணியிடம் ‘கண்ணன் நித்யபிரம்மச்சாரி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக் கண்ணன் கூறிவாறு சொல்லி ஆற்றைக் கடந்தாள். துர்வாசரிடம் நிவேதனப் பொருளைக் கொடுத்து திரும்பும்போது நதியைக் கடக்க துர்வாசர் கூறியபடி, ‘துர்வாசர் நித்ய உபவாசி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக்கூறி நதியைக் கடந்தாள்.
      கண்ணனைப் பார்த்து, என்னுடன் குடும்பம் நடத்தும் நீங்கள் நித்ய பிரம்மச்சாரி என்கிறீர்கள், நான் கொடுத்ததை உண்டுவிட்டு துர்வாசர் நித்ய உபவாசி என்கிறார் இது எப்படி சரி என்று கேட்க, கண்ணன், ‘எங்கள் இருவருக்கும் எதன் மீதும் பற்று இல்லை. அதனால் இல்லறத்தில் இருந்தாலும் நான் பிரம்மச்சாரி, நீ அளித்ததை உண்டாலும் துர்வாசர் உபவாசி என்றார். பற்று இன்றி, அனைத்தும் இறைவனது என எண்ணி வாழ்ந்தால், வாழ்க்கை பயணம் ஆனந்தமும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும்,

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27077213
All
27077213
Your IP: 3.15.219.217
2024-04-25 15:14

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg