gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

குருடும், குருடற்ற மணமகன்!

      ஒரு ரிஷியின் மகள் மணப்பருவம் அடைந்தாள். வேதநெறியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த ஒருவனை மணமுடிக்க ரிஷி விரும்பினார். ஆனால் அவள் தனக்கு வரும் மாப்பிள்ளை, ‘குருடும், குருடு இல்லாதவருமான’ ஒருவரை மணக்க விருப்பம் தெரிவித்தாள். ஒரே நேரத்தில் குருடாகவும், குருடற்றவனாகவும் எப்படி ஒருவன் இருக்க முடியும், அவனை எப்படி தேடுவது. எப்போது மகளுக்கு திருமணம் என கவலை கொண்டார் ரிஷி. காலம் கடந்தது.
      ஒருநாள் வேறு ரிஷியின் மகன் ஒருவன் முறைப்படி வந்து பெண் கேட்டான். அவனிடம் மகளின் நிபந்தனைகளைக் கூறினார். அவன் அந்தப் பெண்ணிடம் சென்று, எந்தக் கண்ணால் மனம் நினைக்கின்றதோ, புத்தி உண்மையை அறிகிறதோ, உலகம் ஞானம் எனச் சொல்லுகின்ற அந்த ஞானக்கண் எனக்கு இல்லை. அது ஒருவகைக் குருடே!
       தினமும் நான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்கிறேன். காரியமான இயற்கையான பிரபஞ்சத்தையும், காரணகர்த்தாவாகிய பரம்பொருளை நெஞ்சில் நிறுத்தி செயல்படுவதால் என் செயல்களில் கடவுளைக் காண்பதால் நான் குருடு அல்லாதவனாகவும் இருக்கின்றேன், என்றதைக்கேட்ட அந்த பெண் அவனை கணவராக ஏற்க சம்மதித்தாள். இறக்கும் தருவாயில் பீஷ்மர், தருமருக்கு சொல்லிய அறம். அதுபோலவே நம்மில் ஒவ்வொருவரும் குருடாகவும், குருடற்றவருமாக இருத்தல் சிறப்பு.

      அந்த நாடு அப்போதுதான் விடுதலைப் பெற்றிருந்தது. அதன் அதிபராக பொறுப்பேற்றவர் நாட்டில் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி, கல்வியுடன் விளையாட்டுகளையும் பயில்விக்க திட்டம் போட்டார். அதன்படி ஒரு பயிற்சியாளர் அந்த கிரமத்து இளைஞர்களை இரு குழுக்களாகப் பிரித்து அந்த விளையாட்டின் சட்டதிட்டங்களை போதித்தார். எந்த அணி என்னென்ன தவறுகள் செய்தது, எத்தனைப்புள்ளிகள் என்று கணக்கிட ஆரம்பித்தார். முடிவில் இந்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள் அடுத்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள். குறைவாக புள்ளிகள் எடுத்த அணி தோற்ற அணி என்று கூறி நாளை அனைவரும் நன்றாக விளையாடி போட்டி போட்டு புள்ளிகள் எடுக்க வேண்டும் என்றார்.
    அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. நாங்கள் ஒவ்வொருவரும் அங்கும் இங்குமாக நட்புடன் விளையாடி ஆனந்த மகிழ்வு கொண்டோம். வெற்றியும் தோல்வியும் எங்களுக்கு வேண்டாம். விளையாடிய அந்த சந்தோஷம் மட்டும் போதும் என்றனர். இதேபோன்று வாழ்வை ஆனந்தம் தரும் விளையாட்டாக கருதினால் அது இன்பம். போட்டியாக கருதினால் அது சூதாட்டம். இன்பமும், துன்பமும் வரலாம். அதனால்தான் குழந்தைகள் விளையாட்டை விரும்புகின்றன. தெரிந்த மனிதன் அதை ஒரு போட்டியாக புரிந்து கொள்கின்றான். அவதிபடுகின்றான்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

விசாரிக்காமல் நம்பாதே!

      அருகில் படுத்திருக்கும் மனைவி தூக்கத்தில், ‘அவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்’ என்ற உளறிய வார்த்தைகளைக் கேட்டதும், அவள் மேல் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் அகன்றது. மனம் அமைதியிழந்தது. அவளுக்கு ஏதாவது ரகசியத் தொடர்பு இருக்குமா எனப் பலசந்தேகங்கள் தோன்ற நிம்மதியின்றி காலையில் அந்த அரண்மனையை தீயிட்டுக் கொளுத்த ஆணையிட்டார். பின்னர் அந்த ஊருக்கு வந்திருந்த ஞானியைப் பார்க்கச் சென்றார்.
      ஞானி அப்போது பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். கற்பு பற்றி பேசியவர் ராணியைப் போற்றி பாராட்டினார். பிரசங்கம் முடிந்ததும் ஞானியிடம் நடந்ததைச் சொன்னார் மன்னர். ஆடையின்றி குளிரில் தியானம் செய்த துறவியை பார்த்து வணங்கிவிட்டு ராணி சென்றார். ராணி இரவில் உறங்கும்போது போர்வைக்கு வெளியே இருந்த கை குளிரினால் விரைக்கவே, சிறிது நேரத்தில் என் கை விரைத்து விட்டதே, அந்த துறவி என்ன ஆகியிருப்பார் என புலம்பியிருக்கின்றார். இதை நீ தவாறாக எடுத்துக் கொண்டாய் என்றார். மன்னர் விசாரனை செய்யாமல் செயல்பட்டதின் விளைவை உணர்ந்து தான் இட்ட ஆணை என்ன ஆயிற்று எனக்கேட்டு அதை செயல்படுத்துமுன் நிறுத்தினார். எதையும் தீர விசாரணை செய்யாமல் முடிவு எடுக்காதீர்கள். நீங்கள் துன்பப் படுவீர்கள்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

உண்மை சந்தேகம்!

     காவல்பணி செய்து கொண்டிருந்தவனுக்கு தோட்டத்தில் சப்தம் கேட்கவே, அவசரமாக அங்கு வந்தவன் ஒரு மாடு மேய்ந்து கொண்டிருக்க கண்டான். அதை பிடித்து கட்டிப்போட முயன்றான். மாட்டைபிடிக்க முடிவில்லை. கையில் வால்தான் சிக்கியது. அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அந்த மாடு இவனை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்து பின் பறக்க ஆரம்பித்தது. விட்டால் கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அது அவனை கயிலாயம் கொண்டு சென்றது. சிவனைக் கண்டவன் அவரிடம் மாட்டைப்பற்றி முறையிட்டான். தோட்டத்தில் விளைந்த பயிரெல்லாம் நாசம் என்றவனிடம், சிவன் அதற்கு ஈடாக பொற்காசுமுடிச்சு ஒன்றை தந்தார். நந்தியின் உதவியுடன் பூமிக்கு வந்தான். அவனுக்கு ஒருசந்தேகம் தோன்றியது. உண்மையில் அந்த மூட்டை முழுவதும் தங்கம்தானா என்று.
ஒரு காசை எடுத்துக்கொண்டு நண்பனிடன் சென்றான். அதை சோதித்த அவன் அது சொக்கத் தங்கமாக இருக்கக் கண்டான். இருந்தாலும் நண்பனுக்கு எப்படி அது கிடைத்தது என அறியும் ஆவலில், இது பித்தளை உனக்கு இதை யார் கொடுத்தது என்று கேட்டான். நடந்ததைக் கேட்டவன் அன்று இரவு நண்பனின் தோட்டத்தில் பதுங்கியிருந்தான். நந்தி வந்தது. பித்தளை கொடுத்து ஏமாற்றி விட்டீர்களே இது சரியா எனச் சிவனிடம் கேட்க நினைத்து நந்தியின் வாலைப் பிடித்தான். அது விர்ரென்று உயர கிளம்பியது. மறைந்திருந்த நண்பன் இவன் காலை இறுக்கிப் பிடிக்க இருவரையும் மேலே கொண்டு சென்றது நந்தி.
    அப்போது காலைப்பிடிந்திருந்த நண்பன் உனக்கு இப்படி எவ்வளவு காசுகள் கொடுத்தார் என்றான். ஆர்வமிகுதியில் இவ்வளவு என்று இருகைகளையும் விரித்துக் காட்டினான். கைகளை விரித்ததால் வாலைப்பிடித்தபிடி நழுவ இருவரும் பூமியில் விழுந்தார்கள். அடிபட்டார்கள்.
உண்மையைச் சந்தேகப்பட்டவன் வாலைப்பிடிக்க, பேராசை கொண்டவன் காலைப் பிடிக்க இருவருக்கும் உடலில் காயம், துன்பம், துயரம். உண்மையைச் சந்தேகப்படாதீர்கள்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

நரியா! சிங்கமா!

     காட்டில் விறகு பொறுக்கி விறபவன் விறகைச் சேகரித்து வரும்போது வழியில் நரி ஒன்று படுத்திருக்க கண்டான். அதற்கு முன்கால்கள் இரண்டும் நொண்டியாக இருக்கவே, அதைப் பார்த்து பரிதாபப் பட்டான். அதற்கு எப்படி உணவு கிடைக்கும் என புலம்பினான். அதைக் கேட்ட, அந்தப் பக்கமாக வந்த ஒருவர் கடவுள் இருக்கின்றார். அவர் காப்பாற்றுவார் எனக்கூறியது இவனுள் பொறிதட்டியது போன்ற உணர்வு ஏற்பட, அந்த நரிக்கு உணவு எப்படி கிடைத்திடும் எனக்காண ஆவலில் அங்கேயே காத்திருந்தான்.
    அப்போது சிங்கம் ஒரு மானை அடித்து இழுத்துக் கொண்டு வந்து அங்கேபோட்டு தான் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீதியை அப்படியே விட்டுச் சென்றது. நரி தவழ்ந்து சென்று மீதியிருந்த மானை உண்டது. இதனால் ஆச்சரியமுற்றவன் முடியாத நரிக்கு உணவு கொடுக்கும் இறைவன், தினமும் கோவிலுக்கு சென்று வழிபடும் நமக்கு உணவு தரமாட்டாரா என எண்ணத் தொடங்கினான். அதன் விளைவு வேலைக்குச் செல்லாமல் கோவில் வளாகத்தில் தூணில் சாய்ந்து அமர்ந்து கடவுள் நமக்கு ஏதேனும் தருவார் எனக் காத்திருந்தான்.
   இரவு பகல் மாறி மாறி வந்தது. அவன் எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. நாளுக்குநாள் பசியால் வாடி எழும்பும் தோலுமாய் மெலிந்து காணப்பட்டான். ஒருநாள் இரவு கோவிலில் யாருமில்லாத நேரம், ‘கடவுளே உன்னை எப்போதும் நினைக்கும் என் பக்தியில் என்ன குறைகண்டாய், கால் முடமாகிய நரிக்கு சிங்கத்தின் மூலம் உணவு வழங்கினாய், நான் இப்படி பட்டினியால் சாகத்தான் வேண்டுமா!’ என புலம்பினான்.
   கடவுள் இப்போது அவனிடம் பேசினார். ‘நீ பாடம் கற்றது சரியில்லை, நரியைவிட்டு சிங்கத்தை ஏன் முன்னுதாரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதுதான் நீ செய்த தவறு.’ கடவுளை வணங்கும்போது யாரிடமிருந்தாவது உதவி கிடைக்குமா என வேண்டாதீர்கள், உங்களால் யாருக்காவது உதவி செய்ய முடியுமா! என வேண்டுங்கள். உயர்வு பெறுவீர்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

காலத்தை வென்றான் தர்மன்!

     “தருமனிடம் வந்த பிச்சைக்காரனை நாளைவா எனக்கூறி அனுப்பினான். இதைக்கண்ட பீமன் முரசையறைந்து “என் தமையன் தருமன் காலத்தை வென்றுவிட்டான்” என்றான். தருமன் அவன் செயலுக்கு விளக்கம் கேட்க, ‘அண்ணா, நாளை நீ நிச்சயம் இருப்பாயா? பிச்சைக்காரன் நிச்சயம் இருப்பானா? உன்னைச் சந்திப்பானா? நாளை அந்த பிச்சையிடும் மனோபாவம் உன்னிடம் இருக்குமா? நாளைவரை அந்த பிச்சைக்காரன் அப்படியே பிச்சைக்காரனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்? நீ இருப்பதும், பிச்சைக்காரன் அப்படியே இருப்பதும் உன் கூற்றினால் உண்மை என்றால், நீ காலத்தை வென்று விட்டாய் என்றுதானே பொருள்” என்றான். தர்மன் தன் தவறை உணர்ந்து அந்த பிச்சைக்காரனை வரவழைத்து இயன்றதை அப்போதே கொடுத்து அனுப்பினான்.
    நாளை என்பது நம் கையில் இல்லை. எனவே இன்றே இப்போதே செய்ய வேண்டியதை செய்க என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். “உறங்கும் போது விடுகின்ற மூச்சு சுழி மாறிப்போனாலும் போச்சு” என சித்தர்கள் நிலையாமை குறித்து சொன்னது, நிகழ்காலத்தில் ஒவ்வொரு கணமும் முறையான எண்ணங்கள் முறையான செயல்பாடுகளுடன் நம் வாழ்வுபாதையை அமைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கடந்தது கடந்ததுதான்!

      அழகான ஓர் பெண். அவளை பலர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் ஏதாவது ஓர்குறை கண்டு தவிர்த்துவிட்டாள். தான் மிகவும் புத்திசாலி. தான் செய்தது சரி என்றும் நினைத்தாள். காலம் கரைந்தது. அழகு குறைந்தது. உலகில் தனித்து இருப்பதாக உணர்ந்தாள். ஓர்காலத்தில் அழகால் எல்லோரையும் வசீகரப் படுத்தியிருந்த அவளுக்கு, தற்போது தனக்கு மட்டுமே அழகாகத் தோன்றினாள். அவளுக்குத் தெரிந்த அவள் அழகோ, புத்திசாலித்தனமோ எந்த வகையிலும் அவளுக்கு உதவவில்லை. மற்றவர்களிடமிருந்து பிரித்துதான் வைத்துவிட்டது.
       ஓர்நாள் அவள் தோழியை சந்தித்தாள். கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பது கண்டு அதிசயப்பட்டாள். அதுபற்றி அவள் தோழியிடம் கேட்க, ‘உன் வாழ்வில் யாரைச் சந்தித்தாலும் அவர்களின் நிறைவுகளைப் பார். குறைகளைத் தேடாதே! அவர்களிடம் அன்பு கொண்டு நட்புடன் பழகு! மற்றவர்களை வசீகரிப்பாய்! வாழ்வு ஆனந்தமயமாகும்,’ என்றாள்! அதன் பிறகு அவளை அவள் திருத்திக் கொண்டாள்! ஆனால் அவள் இழந்தது இழந்ததுதான்! கரைந்த காலம் இறந்தகாலம், அது நிகழ்காலமாகாது! இனிவராது!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

பிரமாண்டம்!

      பிரமாண்டம் என்றால் அளவிடமுடியாத அளவிற்கு பெரியது. எந்தவித அளவுகோளும் இதற்கு இல்லை. நீங்கள் நினைப்பது போல பலமடங்கு பெரியது. பிரமாண்டம்- பிரம்மம்+ அண்டம். அண்டம்- உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கிய பிரம்மம்- ஆண்டவன்- கடவுள். எதிலிருந்து இந்த உலகம் உண்டானதோ, எதற்குள் இந்த உடலும் உயிரும் சங்கமிக்கின்றதோ அதுவே பிரம்மம்.
      ஓர் விதையுனுள் ஓர்மரம் அடங்கியிருப்பதால் விதையே பெரியது, மரத்தைவிட. ஆனால் ஓர் மரத்தில் இது போன்று எத்தனை விதைகள் உருவாகின்றது. உற்பத்தியாகின்றது. எனவே விதையைவிட மரமே பெரியது. புரியாத ஆனால் உணரும் பெரிய தத்துவம் இது. இந்த வித்தையை புரிந்தவன், அறிந்தவன் கடவுள். அதனால்தான் பிரமாண்டவனாய் இருக்கின்றான்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

ஆன்மீகம்!

       ஒருவர் நாய்க்கு உணவிடும்போது தடியால் அதை அடிப்பது வழக்கம். அந்த நாய் வலியின் மிகுதியால் நாளை உணவருந்தக்கூடாது எனநினைத்தாலும், அடுத்தநாள் அந்த நேரம் வந்தவுடன் வாலையாட்டி அங்குவந்து அடியுடன் உணவருந்தி செல்கின்றது. அடியின்றி உணவில்லையா என நாய் சிந்திப்பதில்லை. அதுபோல வாழ்வும் துக்கத்திற்குப்பின் இன்பம் என மாறிமாறி வரும் தன்மையுடையது. துயரமில்லா ஆனந்தவாழ்விற்கு ஏங்கும் மனம் கடைசியில் தான் ‘ஆன்மீக வாழ்கை’ என்ற உண்மையை உணருகின்றது.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

பாதிப்புகளை விட்டு விடு!

    நம் காலில் முள் குத்தினால் அதன் பாதிப்பு, வலி நம்மை உணரவைக்கின்றது. முள்ளை எடுத்துவிட்டு அப்படியே நடக்கின்றோம். தேவையானால் வீட்டிற்குச் சென்று மருந்திடுகின்றோம். நம் முன்னாள் நடக்கும் நிகழ்வுகள், பிரச்சனைகளை வெளியில் விட்டுவிட வேண்டும் குத்திய முட்களை தூக்கி எறிவது போல்.
    அதைவிடுத்து நிகழ்வுகளின் தாக்கங்களை சுமந்து கொண்டிருந்தோமானால் மனம் அமைதியடையாது. மனம் அமைதிபடும்வரை அடுத்த நிகழ்வுகளில் நம் இயலாமை, கோபம் எல்லாம் வெளிப்படும். அது நம் வளமான வாழ்வின் அடுத்த செயல்களுக்கு எதிரி. எனவே பாதிப்புகளை நிகழ்வுகளை அங்கேயே களைந்து விட்டு விடுங்கள். மிகமிகத்தேவை என்றால் மட்டும் அதற்கு தீர்வு கானும்வரை நினைவில் கொண்டிருங்கள்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27070328
All
27070328
Your IP: 18.226.150.175
2024-04-24 13:16

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg