gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

மன அமைதி!

       மனம் அமைதியாக இருக்கும்போது அது உள்வாங்கும் நிகழ்வுகள் அபரிதமானவை. அதன் செயல் பாடுகள் அளவிட முடியாதவை. சிவபிரான் தட்சினாமூர்த்தியாக சனகர், சனந்தர், சனத்குமாரர், சனத்சுஜாதர் ஆகிய நான்கு சனாகதி முனிவர்களின் சந்தேகங்களை நான் எப்படி சொல்கிறேன் என்று பாராமல், எப்படி என்ன சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என ‘சின்முத்திரை’ காட்டி அமர அவர்கீழே அந்த நால்வரும் மௌனமாக அமர்ந்தனர்.
     சிவன் மனதால் நினைத்தார் அம்முனிவர்களுக்கு அது வேண்டுமென்று. அந்த முனிவர்களும் அதை எதிர்பார்த்து இருந்தனர். அது அந்த அலைகள், காந்தசக்தி அலைகள், அலை அலையாக முனிவர்களின் மனதே சென்றடைந்தது. இதுவே தத்துவமாகும். இதை புரிந்து கொண்டு செயல்படவே தட்சிணாமூர்த்தி- ஞானகுரு சிலைகள் கோவில் வளாகத்தில்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

மனம் நிறைந்த அன்பு!

     புராணகாலத்தில் காடவர்கோன் என்ற மன்னன் சிவ ஆலயம் அமைக்க ஆசைப்பட்டு ஏற்பாடுகள் செய்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய நாள் குறிக்கப்பட்டது.  அதே ஊரில் வசதியில்லா பூசலர் என்ற ஏழை, தனக்கு வசதியில்லையே கோவில் கட்ட என நினைத்து, நிதியிருந்தால் எப்படி கட்டலாம் என மனதிலேயே கோவிலை படிப்படியாக் கட்டிமுடித்து அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யவும் நினைத்தான். அரசன் கனவில் வந்த ஈசன், பூசலர் கட்டிய கோவிலுக்கு தான் செல்வதாகவும், அரசன் கட்டிய கோவிலுக்கு வெறொருநாள் கும்பாபிஷேகம் வைத்துக் கொள்ளவும் கூறினார். திடுக்கிட்ட அரசன் காலை ஊர் முழுவதும் தேடியும் கோவில் கானாமல், கடைசியில் பூசலரைக்கண்டு அவர் கட்டிய கோவில் எங்குள்ளது என வியப்புடன் வினவ, பூசலர் தான் கோவில் கட்டியதும் அதற்கு குடமுழுக்கு செய்ய நினைத்ததும் தன் மனதில் என்றரைத்தார். அரசன் பூசலரின் அருள் நிறைந்த அன்பைக் கண்டுகொண்டான்.
   ஜெகத்தில் தெரியும் கோவில்தான் சிறந்தது, எல்லோரும் அதைக் கட்ட முடியாது. ஆனால் அகத்திலே கோவில் கட்டி கும்பாவிஷேகம் நடத்தி பூஜை செய்த கோவிலுக்குத்தான் முதல் மரியாதை- அருள் கிடைத்துள்ளது. மனம் அமைதியாக இருந்து அருள் நிறைந்ததால்தான் நிகழ்வுகள் சிறப்படையும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

குழப்பம்!

      காற்றில்லா ஒன்றை பலூன் என நாம் சொல்வதில்லை. ஆனால் உலகில் பரவியுள்ள காற்றை அதனுள் நாம்தான் செலுத்துகிறோம். அதன்பின் அதை பலூன் என்கின்றோம். நம்மைச்சுற்றியுள்ள பிரச்சனைகளையும், நாம்தான் காற்றை பலுனில் செலுத்துவது போல் நம்முள் செலுத்திவிட்டு, நம்மை குழப்பிக் கொள்கின்றோம். அந்தப் பிரச்சனைகளை வெளியே விட்டுவிட்டு சம்பந்தம் இல்லாதவர்களாய் இருந்து பாருங்கள், அந்த பிரச்சனையால் உங்களுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது. அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு நீங்கள் தீர்வு எளிமையாக கண்டு கொள்வீர்.
   நிற்கும் ரயிலில் இருப்பவர்களுக்கு அடுத்த தண்டவாளத்தில் இருக்கும் ரயில் நகரும் போது அவர்கள் அமர்ந்திருக்கும் ரயில் நகருவதுபோல் தோன்றும். அதேபோன்றுதான் பிரச்சனைகளுடன் உள்ளத்தை நிறைத்தவர்களுக்கு உலகில் எல்லாம் பிரச்சனையாகத் தோன்றும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

மனிதநேயம்-அன்பு!

       கிருஷ்ணர் பாண்டவதூதராக துரியோதனை சந்திக்க வந்தபோது அவரை துரோணர், திருதராஷ்டிரன், திரியோதணன் முதலானோர் தங்களின் மாளிகையில் வைத்து உபசரிக்க விரும்பினர். ஆனால் தர்மவானும், அன்பு மிகக்கொண்டவனுமாகிய திருதரஷ்டிரனின் தம்பி விதுரனின் குடில் இல்லத்திற்குத்தான் கிருஷ்ணர் சென்று தங்கி தான் தூது வந்த செயலை செய்ததாக வரலாறு பகர்கின்றது. அன்பு கொண்ட இடத்தில் தான் மனித நேயம் இருக்கும். அது எல்லோராலும் பாராட்டி போற்றப்படும். மதிக்கப்படும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

பிரிவு-அதிக அன்பு!

      இராமாயண காவியத்தில், கானகத்தில் ராமரின் நண்பனான குகன், ராமணைவிட்டுப் பிரியமனமில்லாமல், ராமா! நீ எங்களுடனே தங்கிவிடு, அல்லது என்னையும் உன்னுடன் அழைத்துபோ, என மன்றாட ராமர், “பிரிவுதான் அன்பை அதிகமாக்கும். நாம் மீண்டும் சந்திக்கும் நேரம் வரும், அப்போது இதை நீ உணர்வாய்” என்றார்.
கோபியர்களுடன் குரவைக்கூத்து ஆடும் கன்னன் விளையாட்டாக திடீரென்று மறைந்து விடுவாராம். அப்போது அந்த கோபியர்களுக்கு கன்னன்மேல் இதுகாறும் இருந்த அன்பு பலமடங்கு அதிகமாகி விட்டதாக ஸ்ரீமத்பகவதம் கூறுகிறது.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

அன்பின் அனுபவம்!

      ஓர் பஞ்சதந்திரக் கதையில் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்பிற்கு இலைகளைப் பறித்து போட்ட பறவைதனை வேடன் தன் அம்பால் குறிவைக்கும்போது, கரைக்கு வந்த அந்த எறும்பு வேடன் காலைக் கடித்ததால் குறிதப்ப பறவை பறந்ததாக் கூறப்பட்டுள்ளது. எறும்பு எதேச்சையாகக் கடித்தது என்றாலும், எறும்பு பெற்ற இலை என்ற அன்பிற்கு உதவி என்ற இந்தக்கதை, அந்த பறவையின் எந்த பிறவி அன்பின் கர்மபலனோ! அது வேடனின் கணையிலிருந்து தப்ப உதவியது.
      இந்தக் கதையினால் நமது உள்ளத்திற்குள் ஓர் எண்ணம் உறுவாகி பதிவாகவேண்டும். நாம் துயரப்படும்போது நம்மை, நம்மிடம் அன்பு காட்ட ஆளில்லை, நாம் தனி மனிதன், ஆதரவற்ற ஓர் அநாதை என்று வருத்த முறும் நிலையில், என்றோ, எங்கோ, எப்படியோ, யாருக்கோ, எந்தவடிவிலோ காட்டிய அன்பின் அடையாளம், உதவிக்கு வருமானால், மனம் எவ்வளவு ஆறுதல் அடையும் என்பதை அனுபவம்தான் கூறும்

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

ஆனந்தம்-அன்பு-கருணை!

       அழகிய உடல் கொண்ட ஆன்மாவைப் பார்த்தாலும், அழகு நிறம்பிய எதைப் பார்த்தாலும், இளம்பெண்ணைப் பார்த்தாலும், குழந்தைகளைப் பார்த்தாலும், மழலை அல்லது பருவத்து குறும்புகளைப் பார்த்தாலும் கேட்டாலும், ஒருவருக்கு உதவி செய்வதாலும், உதவி ஒருவருக்கு நன்மை பயத்து அதை அவர் நம்மிடம் சொல்லும் போதும், இயற்கையின் ஏற்ற தாழ்வுகளை பார்த்து ரசிக்கும் போதும், நீரின், உயிர்களின் பலப்பல ஓசைகளை கேட்கும்போதும், இயற்கையின் அசைவுகளை கானும் போதும், நீராக ஒடி நீர்வீழ்ச்சியாகும் அழகை கானும் போதும், மரம் செடி கொடிகள் முளைக்கும்போதும், வளர்ந்து பூ பூக்கும்போதும், காயாகி, கனியாகும்போதும், கல்லிலே கலைவண்ணம் கானும்போதும், சிந்தனை கவரும் செயல்களையும், சிற்பங்களை பார்க்கும்போதும், சுவைமிக்க வார்த்தைகளை கேட்கும்போதும், ஒருவரை ஏமாற்றி விட்டேன் என்று அவரை ஏமாற்றியவிதம் பற்றி அவரிடமே கூறி ஒருவர் வர்ணிக்கும்போது அவரின் வெகுளிதன்மை கண்டபோதும், நண்பர்களுடன் உரையாடும் போதும், நேரங்களை அவர்களுடன் கழிக்கும்போதும், பழய பசுமை எண்ணங்களை நினைக்கையிலும், சுத்தமான ஜில்லென்ற காற்றை நுகரும் போதும், மழைச்சாரல் பொழியும்போதும், நம் செயல் நம் சொந்தங்களுக்கு, நண்பர்களுக்கு, மற்றவர்களுக்கு ஆனந்தம் தரும் என்ற நினைவிலும், நம் செயலால் அவர்கள் ஆனந்தம் அடைந்ததைப் பார்த்தபோதும், இனிப்பு, விரும்பிய உணவு வகைளை உண்ணும்போதும், இனிய மனதை மயக்கும் பாடல், இசை, ஒலி கேட்கும்போதும், மனதை கவரும் நடன, நாட்டிய நிகழ்வுகளை காணும்போதும், நல்ல பண்புள்ள செயல்களைச் கானும்போதும், செய்யும் போதும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும்போதும் என்று வரிசைப்படுதிக் கொண்டே போனால்..
இவ்வுலகில் அளவிடமுடியா எண்ணற்ற நிகழ்வுகள் ஆனந்தத்தை தருபவையாக அமைந்துள்ளது. ஆனந்தத்தின் எல்லை சந்தோஷம்! சந்தோஷம்! ஆனந்தம் நிரம்பிருக்கும் இடத்தில்தான் அன்பும் கருணையும் இருக்கும். பூவுலகில் எதையும் மென்மையாக கையாளமுடியும். அந்த மிருதுவான உணர்ச்சி ஆன்மாவிற்கு ஓர் புதிய உற்சாகத்தை அளிப்பதாக இருக்கக்கூடும். வளமுடன் வாழ்வது என்றால், ஆனந்தமாக வாழ்வது எனப்பொருள். வளமுடன் என்பது உங்களிடம் என்னென்ன உள்ளது என்பதில் இல்லை! எப்படி இருக்கின்றீர்கள் என்பதில்தான் இருக்கின்றது.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கடுஞ்சொற்கள்!

    ஒருவரை வார்த்தைகளால் சுட்டால், அது அந்த மனதில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி பகைமை வளர்த்துக் கொண்டே இருக்கும். பின்னாலில் அது பழிவாங்க தயாராக இருக்கும். பாஞ்சாலியின் சுயம்வரத்தில் கர்ணன் கலந்துகொள்ள, ஓரு தேரோட்டியின் மகனை ஒருநாளும் மணக்கமாட்டேன், என கூறிய சொற்கள் கர்ணன் மனதில் பதிந்துவிட்டன. தர்மவாணாகிய கர்ணன், பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்தபோது, அமைதியாக இருந்ததற்கு இதுவே காரணம்.
    துரோனரும், துருபதனும் நண்பர்கள். நட்பில் நான் அரசனனால் அரசில் பாதி தருகிறேன் என்றான். பின்னாலில் மிகுந்தகஷ்டங்கள் ஏற்பட்டபோது நண்பன் கூறிய வார்த்தைகளை நம்பி துரோணர், துருபதனிடம் செல்ல அவரை கடுஞ்சொற்களால் மிகுந்த அவமானத்திற்கு உள்ளாக்கினான். அர்ஜுனனின் ஆசிரியரானபோது குருதட்சனையாக துருபதனை கைதுசெய்து, துரோனர் முன் நிறுத்தினான். அப்போது துரோனர் துருபதனிடம், நீ இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டாய். உன் நாடு என்னிடம். அதில் பாதியை உனக்கு தானமாகத் தருகிறேன். நாம் இருவரும் சமம் என துரோனரைக் கூறவைத்தது, அன்று துருபதன் விதைத்த கடுஞ்சொற்களின் விளைவே.
   அதைப்போன்றே சிசுபாலன் தகாத கடுஞ்சொற்கள் கூறவே, அவைகளைப் பொறுமையுடன் கேட்ட கிருஷ்னன், அந்த வார்த்தைகள் 1000க்கு அதிகமாகவே இனியும் பொறுமை காட்டலாகாது என அவனை சக்ராயுதத்தால் கொன்றதாக செல்லப்பட்டுள்ளது. வாழ்வு பயணத்தில் கடுஞ்சொற்களைவிட இன்சொற்கள் மிகவும் பயனளிப்பவை என்பதை புரிந்து கடுஞ்சொற்களை தவிர்த்து, இன்சொற்களை உபயோகிக்கப் பழகுங்கள். அவைகள் உங்கள் நிலையை உயர்த்தும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

புண்படுத்தாத பண்பு!

      அரக்கி அயோமுகியின் மூக்கை லட்சுமணன் அறுக்க, அவள் அலற, அந்த அலறலைக்கேட்ட ராமர், அவளைக் கொன்றுவிட்டாயா? என கேட்கிறார். ‘பெண்ணைக் கொல்வேனா?’ எனக் கூற நினைத்த லட்சுமணன், ராமன் தாடகையை கொன்ற நினைப்புவர, அப்படிச்சொன்னால் அண்ணன் வருத்தமடையக்கூடும் என நினைத்து, ‘இல்லை, அண்ணா! அவள் அலறினாள், விட்டுவிட்டேன்’ எனக்கூறியதாக சொல்லப்பட்டுள்ளது. அண்ணனிடம் லட்சுமணன் கொண்டிருந்த அன்பின் காரணமாக, ராமர் செய்ததைக்கூட சொன்னால் அவர்மனம் வருந்தும் என நினைத்த தம்பியின் பக்குவமான மனம், பண்பு நமக்கு வேண்டும்.
  நாவினால் பேசமுடியும் என்பதால் எதை வேண்டுமாலும் எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடாது. நாவினால் பேச முடியுமோ தவிர அதன் பாதிப்புகளை களைய முடியவே முடியாது. பொய் பேசுவதை தவிர்த்து, உண்மை பேசவேண்டும், இனிமையாக பிறர் மனம் புண்படுத்தாதவாறு பேசவேண்டும்.    உண்மை சுடும் என்பதற்காக கேட்பவர்கள் நெஞ்சம் பாதிக்கும் வண்ணம் கடுஞ்சொற்களை உபயோகிக்ககூடாது. யாருடன் பேசினாலும் அவரை மீண்டும் நீங்கள் பார்க்கப் போகிறீர்களா என்பதற்கு உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எந்த உத்திரவாதமும் கிடையாது. எனவே எந்த எதிர்பார்ப்பில்லாமல் நட்புரிமையுடன் பேசுங்கள். அவரின் மனதை காயப்படுத்தாமல் உரையாடுங்கள்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

இகழ்தல்! தன்புகழ்! தற்கொலை!

        உங்களைவிடப் பெரியவர் ஒருவரை மரியாதையுடன் நீங்கள் எனச்சொல்வதற்குப் பதிலாக நீ என்று அழைத்தால் அவரை கொல்லாமல் கொன்றதற்குச் சமம் என்கின்றது சாஸ்திரங்கள். மகாபாரதபோரில் கர்ணனால் மயக்கநிலையடைந்த தர்மர், அர்ஜுனன் கர்ணனை கொல்லாமல் வந்ததைப்பார்த்த கோபத்தில், அர்ஜுனனையும் அவன் காண்டீபத்தையும் இகழ்வாகப்பேச, காண்டீபத்தை இகழ்ந்தவரை கொல்வேன் எனசபதம் செய்திருந்த அர்ஜுனன், தர்மரை கொல்ல வாளை உருவினான்.
        அண்ணனை கொல்வது அதர்மம் எனத்தடுத்த கிருஷ்ணன் அர்ஜுனனின் சபதம் நிறைவேற, ‘அர்ஜுனா. மிகவும் உயர்வாகப் போற்றும் ஒருவரை இகழ்ந்து பேசினாலும் ஒருமையில் திட்டினாலும் அவரை கொலை செய்ததற்கு சமம்’ எனக்கூறினார். அர்ஜுனன் அப்போதைக்கு அதுபோன்று நடந்து தமையனை திட்டித்தீர்த்தான்.
        அண்ணனை இகழ்ந்தவனை கொல்ல சபதம் செய்திருந்த அர்ஜுனன் தன்வாளால் தன் தலையை வெட்ட முயலும்போது கண்ணன் தடுத்து, தற்கொலைசெய்வது பாவம் எனக்கூறி, தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம், எனவே நீ உன்னையே புகழ்ந்துபேசி உனது சபதத்தை நிறைவெற்றிக்கொள் என அறிவுரைகூறினார். எனவே வாழ்வில் உயர்வான ஒருவரை ஒருமையில் பேசுவதும், இகழ்ந்து பேசுவதும், அவரை கொல்லாமல் கொல்வதற்கு சமம். மேலும் தன்னைபற்றி தாமே சொல்லும் தற்பெருமை தற்கொலைக்கு சமமானதாகும்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27077041
All
27077041
Your IP: 3.128.199.210
2024-04-25 14:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg